கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நைகிற 1
நைகின்றேனே 17
நைஞ்சுநைஞ்சு 1
நைந்து 6
நைபவர் 1
நைபவர்க்கு 5
நைய 2
நையவே 2
நையாதே 1
நையும் 2
நையுமே 3
நையே 1
நைவன் 1
நைவார் 1
நைவார்-தம் 1
நைவான் 1
நைவியா 1
நைவு 1
நைகிற (1)
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்
நைகின்றேனே (17)
ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2455/4
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/4
அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/4
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2460/4
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மேல்
நைஞ்சுநைஞ்சு (1)
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
மேல்
நைந்து (6)
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார் – தேவா-சம்:2161/2
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/2
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
மேல்
நைபவர் (1)
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
மேல்
நைபவர்க்கு (5)
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/2
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2446/2
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2447/2
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே – தேவா-அப்:1377/3
மேல்
நைய (2)
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
மேல்
நையவே (2)
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4
மேல்
நையாதே (1)
ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே
கோளிலி அரன் பாதமே கூறுமே – தேவா-அப்:1644/3,4
மேல்
நையும் (2)
கையினால் தொழ நையும் வினைதானே – தேவா-சம்:984/2
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும்
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/1,2
மேல்
நையுமே (3)
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
மேல்
நையே (1)
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4
மேல்
நைவன் (1)
நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/3
மேல்
நைவார் (1)
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
மேல்
நைவார்-தம் (1)
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மேல்
நைவான் (1)
நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4
மேல்
நைவியா (1)
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
மேல்
நைவு (1)
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/4