1. கோயில் : பண் – காந்தாரபஞ்சமம்
#2801
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே
மேல்
#2802
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ
மேல்
#2803
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று
சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார்
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ
கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே
மேல்
#2804
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான்
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே
மேல்
#2805
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர்
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே
மேல்
#2806
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல்
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே
மேல்
#2807
சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும்
வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள்
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே
மேல்
#2808
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது
ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே
மேல்
#2809
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே
மேல்
#2810
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின்
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே
மேல்
#2811
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள்
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே
மேல்
2. திருப்பூந்தராய் : பண் – காந்தாரபஞ்சமம்
#2812
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர்
புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே
மேல்
#2813
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள்
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி
பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2814
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2815
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில்
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2816
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார்
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2817
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும்
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ்
போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2818
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை
வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய்
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2819
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை
தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2820
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய்
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2821
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல்
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே
மேல்
#2822
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர்
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே
மேல்
3. திருப்புகலி : நாலடிமேல்வைப்பு – பண் – காந்தாரபஞ்சமம்
#2823
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடை புண்ணியனே
கயல் அன வரி நெடும் கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே
கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள்
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே
மேல்
#2824
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்
மலையினில் அரிவையை வெருவ வன் தோல்
அலைவரு மத கரி உரித்தவனே
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே
மேல்
#2825
பாடினை அரு மறை வரல்முறையால்
ஆடினை காண முன் அரு வனத்தில்
சாடினை காலனை தயங்கு ஒளி சேர்
நீடு வெண் பிறை முடி நின்மலனே
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-
தனையே இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே
மேல்
#2826
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல
முழவொடும் அரு நடம் முயற்றினனே
முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
மேல்
#2827
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பு அரிது ஆயவனே
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி
பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே
மேல்
#2828
அடை அரிமாவொடு வேங்கையின் தோல்
புடை பட அரை மிசை புனைந்தவனே
படை உடை நெடு மதில் பரிசு அழித்த
விடை உடை கொடி மல்கு வேதியனே
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி
தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே
மேல்
#2829
அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த
செடிய வல்வினை பல தீர்ப்பவனே
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை
பொடி அணி மார்புற புல்கினனே
புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர்
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே
மேல்
#2830
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை
பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன்
குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த
அர விரி சடைமுடி ஆண்டகையே
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே
மேல்
#2831
உருகிட உவகை தந்து உடலினுள்ளால்
பருகிடும் அமுது அன பண்பினனே
பொரு கடல்_வண்ணனும் பூஉளானும்
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய்
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே
மேல்
#2832
கையினில் உண்பவர் கணிக நோன்பர்
செய்வன தவம் அலா செது மதியார்
பொய்யவர் உரைகளை பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே
வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
மேல்
#2833
புண்ணியர் தொழுது எழு புகலி நகர்
விண்ணவர் அடி தொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார்
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம்
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே
மேல்
4. திருவாவடுதுறை : நாலடிமேல் வைப்பு – பண் – காந்தாரபஞ்சமம்
#2834
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2835
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன கழல் விடுவேனல்லேன்
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி
போழ் இள மதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2836
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து
கனல் எரி அனல் புல்கு கையவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2837
தும்மலொடு அரும் துயர் தோன்றிடினும்
அம் மலரடியலால் அரற்றாது என் நா
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2838
கையது வீழினும் கழிவுறினும்
செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய் அணி நறு மலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2839
வெம் துயர் தோன்றி ஓர் வெருவுறினும்
எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2840
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2841
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன்
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2842
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2843
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்க
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
மேல்
#2844
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல் படை எம் இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம்
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே
மேல்
5. திருப்பூந்தராய் : ஈரடிமேல் வைப்பு – பண் – காந்தாரபஞ்சமம்
#2845
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே
மேல்
#2846
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி
மூலம் ஆய முதலவன்தானே
மேல்
#2847
வேந்தராய் உலகு ஆள விருப்புறின்
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட
சாதியா வினை ஆனதானே
மேல்
#2848
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார் சடை எம் இறையே
மேல்
#2849
பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய்
எந்தை ஆய எம் ஈசன்தானே
மேல்
#2850
பூதம் சூழ பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல்
பில்கு வார் சடை பிஞ்ஞகனே
மேல்
#2851
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனை பாடிட
பாவம் ஆயின தீர பணித்திடும்
சே அது ஏறிய செல்வன்தானே
மேல்
#2852
போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய்
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே
மேல்
#2853
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை
மாளும் ஆறு அருள்செய்யும் தானே
மேல்
#2854
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து
இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ
பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை
ஏந்தும் மான் மறி எம் இறையே
மேல்
#2855
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண்டு ஏத்தி வாழும் நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே
மேல்
6. திருக்கொள்ளம்பூதூர் : ஈரடிமேல் வைப்பு – பண் – காந்தாரபஞ்சமம்
#2856
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2857
கோட்டக கழனி கொள்ளம்பூதூர்
நாட்டகத்து உறை நம்பனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2858
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2859
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்
தவள நீறு அணி தலைவனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2860
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன் சடை நிமலனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2861
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2862
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2863
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனை செற்ற ஆதியை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2864
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பு அரியான் கழல் உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2865
நீர் அக கழனி கொள்ளம்பூதூர்
தேர் அமண் செற்ற செல்வனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே
மேல்
#2866
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய்
என்றும் வானவரோடு இருப்பாரே
மேல்
7. திருப்புகலி : பண் – காந்தாரபஞ்சமம்
#2867
கண்நுதலானும் வெண்நீற்றினானும் கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும்
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர்
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே
மேல்
#2868
சாம்பலோடும் தழல் ஆடினானும் சடையின் மிசை
பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும்
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர்
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே
மேல்
#2869
கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும்
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர்
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே
மேல்
#2870
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே
மேல்
#2871
சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும்
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர்
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே
மேல்
#2872
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ
செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே
மேல்
#2873
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல்
வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை
போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர்
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே
மேல்
#2874
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும்
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர்
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே
மேல்
#2875
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி
தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும்
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர்
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே
மேல்
#2876
பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர்
தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான்
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர்
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே
மேல்
#2877
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர்
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர்
ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே
மேல்
8. திருக்கடவூற்வீரட்டம் : பண் – காந்தாரபஞ்சமம்
#2878
சடை உடையானும் நெய் ஆடலானும் சரி கோவண
உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும்
கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2879
எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும்
புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே
கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள்
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2880
நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண்
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும்
காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2881
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன்
முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள்
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2882
சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர்
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்
கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள்
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2883
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய்
உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய
கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள்
வெண்பொடி பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2884
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும்
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும்
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள்
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2885
அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள்
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2886
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண்
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள்
விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2887
தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர்
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள்
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே
மேல்
#2888
வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை
அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான்
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே
மேல்
9. திருவீழிமிழலை : பண் – காந்தாரபஞ்சமம்
#2889
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம்
ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே
மேல்
#2890
கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின்
பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே
மேல்
#2891
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார்
அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே
மேல்
#2892
கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம்
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே
மேல்
#2893
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள்
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே
மேல்
#2894
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய்
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்
இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே
மேல்
#2895
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர்
வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார்
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே
மேல்
#2896
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர
விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார்
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே
மேல்
#2897
திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே
மேல்
#2898
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார்
சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான்
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே
மேல்
#2899
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே
மேல்
10. திருஇராமேச்சுரம் : பண் – காந்தாரபஞ்சமம்
#2900
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே
மேல்
#2901
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே
மேல்
#2902
மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால்
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே
மேல்
#2903
உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான்
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே
மேல்
#2904
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும்
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர்
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே
மேல்
#2905
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே
மேல்
#2906
சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன
முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே
மேல்
#2907
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும்
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே
மேல்
#2908
சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார்
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால்
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே
மேல்
#2909
பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால்
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே
மேல்
11. திருப்புனவாயில் : பண் – காந்தாரபஞ்சமம்
#2910
மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய்
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே
மேல்
#2911
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய்
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய்
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே
மேல்
#2912
விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே
மேல்
#2913
சங்க வெண் தோடு அணி காதினானும் சடை தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில்
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே
மேல்
#2914
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும்
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில்
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும்
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே
மேல்
#2915
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய்
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர்
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில்
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே
மேல்
#2916
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய்
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில்
இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே
மேல்
#2917
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே
மேல்
#2918
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல்
கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம்
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே
மேல்
#2919
போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண்
சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின்
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே
மேல்
#2920
பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால்
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே
மேல்
12. திருக்கோட்டாறு : பண் – காந்தாரபஞ்சமம்
#2921
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே
மேல்
#2922
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள்
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே
மேல்
#2923
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும்
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள்
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே
மேல்
#2924
ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே
மேல்
#2925
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள்
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே
மேல்
#2926
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா
வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும்
கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள்
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே
மேல்
#2927
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும்
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள்
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே
மேல்
#2928
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன்
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான் அடியார்க்கு அருள்செய்யுமே
மேல்
#2929
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே
மேல்
#2930
கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள்
கொடுக்ககிலா குழகன் அமரும் திரு கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே
மேல்
#2931
கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே
மேல்
13. திருப்பூந்தராய் : பண் – காந்தாரபஞ்சமம்
#2932
மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம்
துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர்
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர்
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே
மேல்
#2933
மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை
வேது அணி சரத்தினால் வீட்டினாரவர்
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே
மேல்
#2934
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக
பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர்
பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர்
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே
மேல்
#2935
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர்
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே
மேல்
#2936
வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர்
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர்
புள் அணி புறவினில் பூந்தராய் நகர்
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே
மேல்
#2937
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே
மேல்
#2938
அண்டர்கள் உய்ந்திட அவுணர் மாய்தர
கண்டவர் கடல் விடம் உண்ட கண்டனார்
புண்டரீக வயல் பூந்தராய் நகர்
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே
மேல்
#2939
மா சின அரக்கனை வரையின் வாட்டிய
காய் சின எயில்களை கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர்
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே
மேல்
#2940
தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே
மேல்
#2941
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அ தகும் அழலிடை வீட்டினார் அமண்
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர்
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே
மேல்
#2942
புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர்
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர்
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே
மேல்
14. திருப்பைஞ்ஞீலி : பண் – காந்தாரபஞ்சமம்
#2943
ஆரிடம் பாடலர் அடிகள் காடுஅலால்
ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம்
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும்
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே
மேல்
#2944
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை
பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான்
உருஇலான் பெருமையை உளம் கொளாத அ
திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே
மேல்
#2945
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர்
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே
மேல்
#2946
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே
மேல்
#2947
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே
மேல்
#2948
விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான்
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா
சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே
மேல்
#2949
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல்
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன் வேய் புரை தோளி பாகமா
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ
மேல்
#2950
தொத்தின தோள் முடி உடையவன் தலை
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய்தாள் ஒர்பாகமா
பொத்தினன் திருந்து அடி பொருந்தி வாழ்-மினே
மேல்
#2951
நீர் உடை போது உறைவானும் மாலுமாய்
சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர்
பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய
தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே
மேல்
#2952
பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியாதவர்களை சாதியாதது ஓர்
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்
ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்-மினே
மேல்
#2953
கண் புனல் விளை வயல் காழி கற்பகம்
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே
மேல்
15. திருவெண்காடு : பண் – காந்தாரபஞ்சமம்
#2954
மந்திர மறையவர் வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம் இறை
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே
மேல்
#2955
படை உடை மழுவினர் பாய் புலி தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்
விடை உடை கொடியர் வெண்காடு மேவிய
சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே
மேல்
#2956
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே
மேல்
#2957
ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும்
தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில்
வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய
யாழினது இசை உடை இறைவர் அல்லரே
மேல்
#2958
பூதங்கள் பல உடை புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே
மேல்
#2959
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே
மேல்
#2960
நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே
மேல்
#2961
மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி
தலையுடன் நெரித்து அருள்செய்த சங்கரர்
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே
மேல்
#2962
ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய்
தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே
மேல்
#2963
போதியர் பிண்டியர் பொருத்தமில்லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே
மேல்
#2964
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே
மேல்
16. திருக்கொள்ளிக்காடு : பண் – காந்தாரபஞ்சமம்
#2965
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று
இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம்
உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும்
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே
மேல்
#2966
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே
மேல்
#2967
அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம்
வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல்
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே
மேல்
#2968
பா வணம் மேவு சொல் மாலையின் பல
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும்
கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே
மேல்
#2969
வார் அணி வன முலை மங்கையாளொடும்
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர்
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில்
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே
மேல்
#2970
பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும்
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும்
வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே
மேல்
#2971
இறையுறு வரி வளை இசைகள் பாடிட
அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை
குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே
மேல்
#2972
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திரு விரலால் அலறிட
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக்காடரே
மேல்
#2973
தேடினார் அயன் முடி மாலும் சேவடி
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே
மேல்
#2974
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர்
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திரு உரு கொள்ளிக்காடரே
மேல்
#2975
நல் தவர் காழியுள் ஞானசம்பந்தன்
குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி
கற்றவர் கழல் அடி காண வல்லரே
மேல்
17. திருவிசயமங்கை : பண் – காந்தாரபஞ்சமம்
#2976
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை
அரவு அமர் கொள்கை எம் அடிகள் கோயில் ஆம்
குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே
மேல்
#2977
கீதம் முன் இசைதர கிளரும் வீணையர்
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர்
கோதனம் வழிபட குலவு நான்மறை
வேதியர் தொழுது எழு விசயமங்கையே
மேல்
#2978
அக்கு அரவு அரையினர் அரிவை பாகமா
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர்
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும்
மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே
மேல்
#2979
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர்
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள்
விடை மலி கொடி அணல் விசயமங்கையே
மேல்
#2980
தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம்
காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர்
வேடம் அது உடை அணல் விசயமங்கையே
மேல்
#2981
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல்
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர்
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே
மேல்
#2982
இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால்
வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர்
சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடை அணல் விசயமங்கையே
மேல்
#2983
உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை
தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே
மேல்
#2984
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே
மேல்
#2985
கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை
நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார்
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர்
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே
மேல்
#2986
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே
மேல்
18. திருவைகல்மாடக்கோயில் : பண் – காந்தாரபஞ்சமம்
#2987
துள மதி உடை மறி தோன்று கையினர்
இள மதி அணி சடை எந்தையார் இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய
வள மதி தடவிய மாடக்கோயிலே
மேல்
#2988
மெய் அகம் மிளிரும் வெண்நூலர் வேதியர்
மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே
மேல்
#2989
கணி அணி மலர் கொடு காலை மாலையும்
பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர்
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே
மேல்
#2990
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச குஞ்சர
தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம்
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே
மேல்
#2991
விடம் அடை மிடற்றினர் வேத நாவினர்
மட மொழி மலைமகளோடும் வைகு இடம்
மட அனம் நடை பயில் வைகல் மா நகர்
குட திசை நிலவிய மாடக்கோயிலே
மேல்
#2992
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே
மேல்
#2993
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை
வரு முகில் அணவிய மாடக்கோயிலே
மேல்
#2994
மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலை அன மாடக்கோயிலே
மேல்
#2995
மாலவன் மலரவன் நேடி மால் கொள
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலை கொடு அணி மறைவாணர் வைகலில்
மால் அன மணி அணி மாடக்கோயிலே
மேல்
#2996
கடு உடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே
மேல்
#2997
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே
மேல்
19. திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் : பண் – காந்தாரபஞ்சமம்
#2998
எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில்
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே
மேல்
#2999
மைய கண் மலைமகள் பாகமாய் இருள்
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர்
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே
மேல்
#3000
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர்
பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே
மேல்
#3001
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர்
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே
மேல்
#3002
சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர்
வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே
மேல்
#3003
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர்
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில்
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே
மேல்
#3004
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ்
புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே
மேல்
#3005
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன
கரி அன தட கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே
மேல்
#3006
வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில்
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர் செம்பியர்
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே
மேல்
#3007
வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய
மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே
மேல்
#3008
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின்
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே
மேல்
20. திருப்பூவணம் : பண் – காந்தாரபஞ்சமம்
#3009
மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே
மேல்
#3010
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை
ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய
ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே
மேல்
#3011
வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர்
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை
அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே
மேல்
#3012
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி
பூசனை பொழில் திகழ் பூவணத்து உறை
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை
நாசனை அடி தொழ நன்மை ஆகுமே
மேல்
#3013
குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே
மேல்
#3014
வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை
கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன்
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே
மேல்
#3015
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன்
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே
மேல்
#3016
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி
விரல்-தனில் அடர்த்தவன் வெள்ளைநீற்றினன்
பொரு புனல் புடை அணி பூவணம்-தனை
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே
மேல்
#3017
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய்
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே
மேல்
#3018
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்
குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர்
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே
மேல்
#3019
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள்
நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே
மேல்
21. திருக்கருக்குடி : பண் – காந்தாரபஞ்சமம்
#3020
நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்
கனை கடல் வையகம் தொழு கருக்குடி
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே
மேல்
#3021
வேதியன் விடை உடை விமலன் ஒன்னலர்
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன்
காது இயல் குழையினன் கருக்குடி அமர்
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே
மேல்
#3022
மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி
நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே
வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ
மேல்
#3023
ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை ஆடலான் பயில் கருக்குடி
கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே
மேல்
#3024
சூடுவர் சடையிடை கங்கை நங்கையை
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி
பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே
மேல்
#3025
இன்புடையார் இசை வீணை பூண் அரா
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி
முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே
மேல்
#3026
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திரு கருக்குடி
சாலவும் இனிது அவர் உடைய தன்மையே
மேல்
#3027
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை
முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே
மேல்
#3028
பூமனும் திசைமுகன்தானும் பொற்பு அமர்
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி
நா மனனினில் வர நினைதல் நன்மையே
மேல்
#3029
சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி
பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே
மேல்
#3030
கானலில் விரை மலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி
ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே
மேல்
22. பொது : பண் – காந்தாரபஞ்சமம் – பஞ்சாக்கரத் திருப்பதிகம்
#3031
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்சுஎழுத்துமே
மேல்
#3032
மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சுஎழுத்துமே
மேல்
#3033
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து
ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சுஎழுத்துமே
மேல்
#3034
நல்லவர் தீயவர் எனாது நச்சினர்
செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சுஎழுத்துமே
மேல்
#3035
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை
அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே
மேல்
#3036
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சுஎழுத்துமே
மேல்
#3037
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும்
மாடு கொடுப்பன மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சுஎழுத்துமே
மேல்
#3038
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சுஎழுத்துமே
மேல்
#3039
கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும்
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே
மேல்
#3040
புத்தர் சமண் கழு கையர் பொய் கொளா
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சுஎழுத்துமே
மேல்
#3041
நல் தமிழ் ஞானசம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே
மேல்
23. திருவிற்கோலம் : பண் – காந்தாரபஞ்சமம்
#3042
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான்
வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3043
சிற்றிடை உமை_ஒருபங்கன் அங்கையில்
உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால்
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அற
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3044
ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான்
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3045
விதைத்தவன் முனிவருக்கு அறம் முன் காலனை
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3046
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான்
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை
சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3047
தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3048
விரித்தவன் அரு மறை விரி சடை வெள்ளம்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட
சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3049
திரிதரு புரம் எரிசெய்த சேவகன்
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனது ஆற்றலால் உரு
தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே
மேல்
#3050
சீர்மை இல் சமணொடு சீவர கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே
மேல்
#3051
கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே
மேல்
24. திருக்கழுமலம் : பண் – காந்தாரபஞ்சமம்
#3052
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
மேல்
#3053
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என
தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன்
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே
மேல்
#3054
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே
மேல்
#3055
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும்
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே
மேல்
#3056
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும்
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
மேல்
#3057
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும்
பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே
மேல்
#3058
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும்
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர்
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே
மேல்
#3059
அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே
மேல்
#3060
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
மேல்
#3061
தாருறு தட்டு உடை சமணர் சாக்கியர்கள்-தம்
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின்
காருறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே
மேல்
#3062
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர்
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே
மேல்
25. திருந்துதேவன்குடி : பண் – கொல்லி
#3063
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய
அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே
மேல்
#3064
வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன
ஓதி ஓர்க்கப்படா பொருளை ஓர்விப்பன
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே
மேல்
#3065
மானம் ஆக்குவன மாசு நீக்குவன
வானை உள்க செலும் வழிகள் காட்டுவன
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே
மேல்
#3066
செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன
கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன
புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே
மேல்
#3067
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி
அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே
மேல்
#3068
பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா
புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
மேல்
#3069
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே
மேல்
#3070
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே
மேல்
#3071
துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன
விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடி திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே
மேல்
#3072
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள்
உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல்
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி
அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே
மேல்
#3073
சேடர் தேவன்குடி தேவர்தேவன்-தனை
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே
மேல்
26. திருக்கானப்பேர் : பண் – கொல்லி
#3074
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின்
அடியலால் அடை சரண் உடையரோ அடியரே
மேல்
#3075
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி
பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான்
கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே
மேல்
#3076
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம்
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை
நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர்
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே
மேல்
#3077
நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே
மேல்
#3078
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே
மேல்
#3079
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர்
வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே
மேல்
#3080
மான மா மட பிடி வன் கையால் அலகு இட
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர்
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே
மேல்
#3081
வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண்
தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே
மேல்
#3082
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன்
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்
கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே
மேல்
#3083
உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள்
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி
கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே
மேல்
#3084
காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்
நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே
மேல்
27. திருச்சக்கரப்பள்ளி : பண் – கொல்லி
#3085
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை
உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர்
விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல்
சடையினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே
மேல்
#3086
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை
சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே
மேல்
#3087
மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும்
பொன்னின் ஆர் கொன்றையும் பொறி கிளர் அரவமும்
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை
தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே
மேல்
#3088
நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே
மேல்
#3089
வெந்த வெண்பொடி அணி வேதியர் விரி புனல்
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர்
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி
சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே
மேல்
#3090
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல்
தாங்கினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே
மேல்
#3091
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம்
தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே
மேல்
#3092
முதிர் இலா வெண் பிறைசூடினார் முன்னநாள்
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால்
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய
சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே
மேல்
#3093
துணி படு கோவணம் சுண்ண வெண்பொடியினர்
பணி படு மார்பினர் பனி மதி சடையினர்
மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும்
தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே
மேல்
#3094
உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள்
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல்
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும்
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே
மேல்
#3095
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண்நுதலவன் அடி கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே
மேல்
28. திருமழபாடி : பண் – கொல்லி
#3096
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும்
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே
மேல்
#3097
கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே
மறை அணி நாவினான் மா மழபாடியே
மேல்
#3098
அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும்
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே
மேல்
#3099
அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன்
முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே
மேல்
#3100
கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன்
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா
செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே
மேல்
#3101
பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செக காலினால் சாடினான்
சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மா மழபாடியே
மேல்
#3102
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம்
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே
மேல்
#3103
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன
சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே
மேல்
#3104
ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய்
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவிடம்
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில்
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே
மேல்
#3105
உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின்
பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான்
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே
மேல்
#3106
ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும்
சீலத்தான் மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே
மேல்
29. மேலைத்திருக்காட்டுப்பள்ளி : பண் – கொல்லி
#3107
வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன்
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே
மேல்
#3108
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி
கருத்தனார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா
பொருத்தனார் கழல் இணை போற்றுதல் பொருளதே
மேல்
#3109
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர்
கண்ணினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே
மேல்
#3110
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி
உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே
மேல்
#3111
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
மேல்
#3112
வேதனார் வெண் மழு ஏந்தினார் அங்கம் முன்
ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே
மேல்
#3113
மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய
கையினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே
மேல்
#3114
சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர்
மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான்
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே
மேல்
#3115
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன்
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான்
கங்கை ஆர் சடையினான் கருது காட்டுப்பள்ளி
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே
மேல்
#3116
போதியார் பிண்டியார் என்ற அ பொய்யர்கள்
வாதினால் உரை அவை மெய் அல வைகலும்
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே
மேல்
#3117
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல்
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே
மேல்
30. திருஅரதைப்பெரும்பாழி : பண் – கொல்லி
#3118
பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி
பித்தர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3119
கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும்
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும்
பெயரர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3120
கோடல் சால உடையார் கொலை யானையின்
மூடல் சால உடையார் முளி கானிடை
ஆடல் சால உடையார் அழகு ஆகிய
பீடர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3121
மண்ணர் நீரார் அழலார் மலி காலினார்
விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள்
பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும்
பெண்ணர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3122
மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு
கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும்
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல்
பிறையர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3123
புற்று அரவம் புலி தோல் அரை கோவணம்
தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு
சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை
பெற்றர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3124
துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3125
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை
நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல்
அரிவை பாகம் அமர்ந்தார் அடியாரொடும்
பிரிவு இல் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3126
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும்
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர்
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர் கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3127
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும்
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர்
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர்
பேணு கோயில் அரதைப்பெரும்பாழியே
மேல்
#3128
நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என
பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே
மேல்
31. திருமயேந்திரப்பள்ளி : பண் – கொல்லி
#3129
திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும்
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள்
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே
மேல்
#3130
கொண்டல் சேர் கோபுரம் கோலம் ஆர் மாளிகை
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே
மேல்
#3131
கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும்
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும்
மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே
மேல்
#3132
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள்
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே
மேல்
#3133
நித்தில தொகை பல நிரை தரு மலர் என
சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன்
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள்
கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே
மேல்
#3134
சந்திரன் கதிரவன் தகு புகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே
மேல்
#3135
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே
மேல்
#3136
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன்
மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே
மேல்
#3137
நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன்
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்
மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே
மேல்
#3138
உடை துறந்தவர்களும் உடை துவர் உடையரும்
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள்
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே
மேல்
#3139
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்
நம் பரம் இது என நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே
மேல்
32. திருஏடகம் : பண் – கொல்லி
#3140
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே
மேல்
#3141
கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால்
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே
மேல்
#3142
குண்டலம் திகழ்தரு காது உடை குழகனை
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம்
கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே
மேல்
#3143
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடை குழகனார் உறைவிடம்
சால மாதவிகளும் சந்தனம் சண்பகம்
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே
மேல்
#3144
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே
மேல்
#3145
பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும்
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே
மேல்
#3146
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர்
பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே
மேல்
#3147
பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற
அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே
மேல்
#3148
குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள்
பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே
மேல்
#3149
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர்
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை
நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே
மேல்
33. திருவுசாத்தானம் : பண் – கொல்லி
#3150
நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்
போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம்
சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே
மேல்
#3151
கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன்
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்
தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே
மேல்
#3152
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல்
சேமமா உறைவிடம் திரு உசாத்தானமே
மேல்
#3153
மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான்
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே
மேல்
#3154
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள்
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே
மேல்
#3155
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர
அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான்
திடம் என உறைவிடம் திரு உசாத்தானமே
மேல்
#3156
ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும்
காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம்
சேண் உலாம் மாளிகை திரு உசாத்தானமே
மேல்
#3157
கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல்
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில்
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில்
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே
மேல்
#3158
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன்
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே
மேல்
34. திருமுதுகுன்றம் : பண் – கொல்லி
#3159
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே
மேல்
#3160
வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன்
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம்
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே
மேல்
#3161
ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல்
நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே
மேல்
#3162
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான் உமையொடும்
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்
திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே
மேல்
#3163
கடிய ஆயின குரல் களிற்றினை பிளிற ஓர்
இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம்
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே
மேல்
#3164
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர்
வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம்
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும்
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே
மேல்
#3165
மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட
வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே
அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே
மேல்
#3166
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே
மேல்
#3167
ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள்
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும்
தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே
மேல்
#3168
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின்
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே
மேல்
#3169
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே
மேல்
35. திருத்தென்குடித்திட்டை : பண் – கொல்லி
#3170
முன்னை நான்மறை அவை முறைமுறை குறையொடும்
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல்
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே
மேல்
#3171
மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம்
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும்
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே
மேல்
#3172
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம்
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே
மேல்
#3173
உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே
மேல்
#3174
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான்
அருந்தி ஆரமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும் ஊர்
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம்
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே
மேல்
#3175
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால்
கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே
மேல்
#3176
கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள்
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம்
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை
தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே
மேல்
#3177
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால்
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே
மேல்
#3178
நாரணன்-தன்னொடு நான்முகன்தானுமாய்
காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ
சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே
மேல்
#3179
குண்டிகை கை உடை குண்டரும் புத்தரும்
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும்
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர்
தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே
மேல்
#3180
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை
கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள்
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே
மேல்
36. திருக்காளத்தி : பண் – கொல்லி
#3181
சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம்
உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே
மேல்
#3182
ஆலம் மா மரவமோடு அமைந்த சீர் சந்தனம்
சாலம் மா பீலியும் சண்பகம் உந்தியே
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே
மேல்
#3183
கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில்
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே
மேல்
#3184
கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும்
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி
ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே
மேல்
#3185
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே
திரை தரு முகலியின் கரையினில் தே மலர்
விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே
மேல்
#3186
முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும்
எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற
கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய
அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே
மேல்
#3187
மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி
நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர்
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே
மேல்
#3188
வீங்கிய உடலினர் விரிதரு துவர் உடை
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின்
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே
மேல்
#3189
அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான்
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல்
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே
மேல்
37. திருப்பிரமம் : பண் – கொல்லி
#3190
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின்
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில்
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர்
பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே
மேல்
#3191
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள்
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே
மேல்
#3192
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும்
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே
மேல்
#3193
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும்
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்
தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே
மேல்
#3194
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய்
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான்
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்
தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே
மேல்
#3195
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான்
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன்
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே
மேல்
#3196
செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான்
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே
மேல்
#3197
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும்
சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய்
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார்
பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே
மேல்
#3198
உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின்
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே
மேல்
#3199
பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே
மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள்
பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே
மேல்
38. திருக்கண்டியூர்வீரட்டம் : பண் – கொல்லி
#3200
வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன்
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே
மேல்
#3201
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான்
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி
வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே
மேல்
#3202
அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான்
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே
மேல்
#3203
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன்
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற
புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே
மேல்
#3204
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின்
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன்
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய்
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே
மேல்
#3205
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம்
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே
மேல்
#3206
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம்
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார்
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே
மேல்
#3207
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின்
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல்
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே
மேல்
#3208
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின்
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே
மேல்
#3209
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன்
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன்
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது
அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே
மேல்
#3210
கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே
மேல்
39. திருஆலவாய் : பண் – கொல்லி
#3211
மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3212
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3213
அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய்
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3214
சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3215
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில்
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3216
கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமண மா
சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3217
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம்
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே
அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3218
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ
போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3219
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3220
தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம்
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
மேல்
#3221
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய்
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே
மேல்
40. பொது : பண் – கொல்லி – தனித்திருவிருக்குக்குறள்
#3222
கல்லால் நீழல் அல்லா தேவை
நல்லார் பேணார் அல்லோம் நாமே
மேல்
#3223
கொன்றை சூடி நின்ற தேவை
அன்றி ஒன்றும் நன்று இலோமே
மேல்
#3224
கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்
சொல்லாதாரோடு அல்லோம் நாமே
மேல்
#3225
கூற்று உதைத்த நீற்றினானை
போற்றுவார்கள் தோற்றினாரே
மேல்
#3226
காட்டுள் ஆடும் பாட்டுளானை
நாட்டுளாரும் தேட்டுளாரே
மேல்
#3227
தக்கன் வேள்வி பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் பக்கத்தோமே
மேல்
#3228
பெண்ஆண் ஆய விண்ணோர்_கோவை
நண்ணாதாரை எண்ணோம் நாமே
மேல்
#3229
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை
ஆத்தம் ஆக ஏத்தினோமே
மேல்
#3230
பூவினானும் தாவினானும்
நாவினாலும் ஓவினாரே
மேல்
#3231
மொட்டு அமணர் கட்டர் தேரர்
பிட்டர் சொல்லை விட்டு உளோமே
மேல்
#3232
அம் தண் காழி பந்தன் சொல்லை
சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே
மேல்
41. திருக்கச்சியேகம்பம் : பண் – கொல்லி – திருவிருக்குக்குறள்
#3233
கரு ஆர் கச்சி திரு ஏகம்பத்து
ஒருவா என்ன மருவா வினையே
மேல்
#3234
மதி ஆர் கச்சி நதி ஏகம்பம்
விதியால் ஏத்த பதி ஆவாரே
மேல்
#3235
கலி ஆர் கச்சி மலி ஏகம்பம்
பலியால் போற்ற நலியா வினையே
மேல்
#3236
வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம்
பரவா ஏத்த விரவா வினையே
மேல்
#3237
படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து
உடையாய் என்ன அடையா வினையே
மேல்
#3238
நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த கலவா வினையே
மேல்
#3239
கரியின் உரியன் திரு ஏகம்பன்
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே
மேல்
#3240
இலங்கை அரசை துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே
மேல்
#3241
மறையோன் அரியும் அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே
மேல்
#3242
பறியா தேரர் நெறி இல் கச்சி
செறி கொள் கம்பன் குறுகுவோமே
மேல்
#3243
கொச்சை வேந்தன் கச்சி கம்பம்
மெச்சும் சொல்லை நச்சும் புகழே
மேல்
42. திருசிற்றேமம் : பண் – கொல்லிக்கௌவாணம்
#3244
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே
மேல்
#3245
மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன்
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே
மேல்
#3246
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்
கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே
மேல்
#3247
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல்
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன்
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே
மேல்
#3248
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே
மேல்
#3249
பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான்
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே
மேல்
#3250
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன்
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே
மேல்
#3251
சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன்
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே
மேல்
#3252
தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான்
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும்
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே
மேல்
#3253
வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன்
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே
மேல்
#3254
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான்
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன்
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால்
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே
மேல்
43. சீகாழி : பண் – கௌசிகம்
#3255
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள்
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே
மேல்
#3256
மான் இடம் உடையார் வளர் செம் சடை
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார்
கான் இடம் கொளும் தண் வயல் காழியார்
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே
மேல்
#3257
மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர்
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார்
கை கொள் மான் மறியார் கடல் காழியுள்
ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே
மேல்
#3258
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள்
பொற்றொடியோடு இருந்தவர் பொன் கழல்
உற்றபோது உடன் ஏத்தி உணருமே
மேல்
#3259
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய
கலி கடிந்த கையார் கடல் காழியுள்
அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே
மேல்
#3260
பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர்
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள்
அண்ணல் ஆய அடிகள் சரிதையே
மேல்
#3261
பற்றும் மானும் மழுவும் அழகுற
முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர்
கற்ற மா நல் மறையவர் காழியுள்
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே
மேல்
#3262
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற
அடர்த்து உகந்து அருள்செய்தவர் காழியுள்
கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே
மேல்
#3263
காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி
மாலும் நான்முகன்தானும் வனப்புற
ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே
மேல்
#3264
உருவம் நீத்தவர்தாமும் உறு துவர்
தரு வல் ஆடையினாரும் தகவு இலர்
கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள்
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே
மேல்
#3265
கானல் வந்து உலவும் கடல் காழியுள்
ஈனமில்லி இணையடி ஏத்திடும்
ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ்
மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே
மேல்
44. திருக்கழிப்பாலை : பண் – கௌசிகம்
#3266
வெந்த குங்கிலிய புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும் அளவும் அறியாதது ஓர்
சந்தமால் அவர் மேவிய சந்தமே
மேல்
#3267
வான் இலங்க விளங்கும் இளம் பிறை
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மட நோக்கு உடையாளொடே
மேல்
#3268
கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்
கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள்
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே
மேல்
#3269
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள்
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே
மேல்
#3270
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே
மேல்
#3271
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர்
கொள்வனார் இடு வெண் தலையில் பலி
கள்வனார் உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே
மேல்
#3272
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும்
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார் உறையும் கழிப்பாலையே
மேல்
#3273
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள்
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே
மேல்
#3274
ஆட்சியால் அலரானொடு மாலுமாய்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே
மேல்
#3275
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா
கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே
மேல்
#3276
அம் தண் காழி அரு மறை ஞானசம்
பந்தன் பாய் புனல் சூழ் கழிப்பாலையை
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே
மேல்
45. திருஆரூர் : பண் – கௌசிகம்
#3277
அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான்
வெந்த வெண்பொடி பூசிய வேதியன்
சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம்
எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ
மேல்
#3278
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த
ஒருத்தனே உமையாள் ஒருகூறனே
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண
அருத்த என் எனை அஞ்சல் என்னாததே
மேல்
#3279
மறையன் மா முனிவன் மருவார் புரம்
இறையின் மாத்திரையில் எரியூட்டினான்
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ
மேல்
#3280
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான்
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான்
அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ
மேல்
#3281
குருந்தம் ஏறி கொடிவிடு மாதவி
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ
மேல்
#3282
வார் கொள் மென்முலையாள் ஒருபாகமா
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
ஆர் கணா எனை அஞ்சல் எனாததே
மேல்
#3283
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா
துளை கை யானை துயர் பட போர்த்தவன்
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்
இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ
மேல்
#3284
இலங்கை_மன்னன் இருபது தோள் இற
கலங்க கால்விரலால் கடை கண்டவன்
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்
அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ
மேல்
#3285
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா
படியவன் பனி மா மதி சென்னியான்
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ
மேல்
#3286
மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள்
காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல்
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ
மேல்
#3287
வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே
மேல்
46. திருக்கருகாவூர் : பண் – கௌசிகம்
#3288
முத்து இலங்கு முறுவல் உமை அஞ்சவே
மத்த யானை மறுக உரி வாங்கி அ
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
மேல்
#3289
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம்
கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
மேல்
#3290
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை
குழகர் என்று குழையா அழையா வரும்
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
மேல்
#3291
பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன்
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
மேல்
#3292
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம்
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
மேல்
#3293
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர்
காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே
மேல்
#3294
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே
மேல்
#3295
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார்
மண்ணு கோலம் உடைய மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
மேல்
#3296
போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல்
தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின்
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
மேல்
#3297
கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர்
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல்
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே
மேல்
47. திருஆலவாய் : பண் – கௌசிகம்
#3298
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல்
நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான்
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை
ஓட்டி வாதுசெய திருவுள்ளமே
மேல்
#3299
மத்த யானையின் ஈர் உரி மூடிய
அத்தனே அணி ஆலவாயாய் பணி
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண்
சித்தரை அழிக்க திருவுள்ளமே
மேல்
#3300
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணக திரு ஆலவாயாய் அருள்
பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண்
தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே
மேல்
#3301
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே
மேல்
#3302
வையம் ஆர் புகழாய் அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண் கையரை
பைய வாதுசெய திருவுள்ளமே
மேல்
#3303
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய
தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை
சீறி வாதுசெய திருவுள்ளமே
மேல்
#3304
பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும்
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய்
அண்டனே அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து உளற திருவுள்ளமே
மேல்
#3305
அரக்கன்தான் கிரி ஏற்றவன்-தன் முடி
செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை
கரக்க வாதுசெய திருவுள்ளமே
மேல்
#3306
மாலும் நான்முகனும் அறியா நெறி
ஆலவாய் உறையும் அண்ணலே பணி
மேலை_வீடு உணரா வெற்று அரையரை
சால வாதுசெய திருவுள்ளமே
மேல்
#3307
கழி கரை படு மீன் கவர்வார் அமண்
அழிப்பரை அழிக்க திருவுள்ளமே
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய்
மழு படை உடை மைந்தனே நல்கிடே
மேல்
#3308
செந்து எனா முரலும் திரு ஆலவாய்
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்
பந்தன் சொல் பகரும் பழி நீங்கவே
மேல்
48. திருமழபாடி : பண் – கௌசிகம்
#3309
அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை
கங்கையான் கடவுள் இடம் மேவிய
மங்கையான் உறையும் மழபாடியை
தம் கையால் தொழுவார் தகவாளரே
மேல்
#3310
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம்
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள்
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே
மேல்
#3311
முழவினான் முதுகாடு உறை பேய் கண
குழுவினான் குலவும் கையில் ஏந்திய
மழுவினான் உறையும் மழபாடியை
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே
மேல்
#3312
கலையினான் மறையான் கதி ஆகிய
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான் சேர் திரு மழபாடியை
தலையினால் வணங்க தவம் ஆகுமே
மேல்
#3313
நல்வினை பயன் நான்மறையின் பொருள்
கல்வி ஆய கருத்தன் உருத்திரன்
செல்வன் மேய திரு மழபாடியை
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே
மேல்
#3314
நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான்
ஆடினான் எரிகானிடை மா நடம்
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே
மேல்
#3315
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய்
மன்னினான் உறை மா மழபாடியை
பன்னினார் இசையால் வழிபாடுசெய்து
உன்னினார் வினை ஆயின ஓயுமே
மேல்
#3316
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை
தன்னில் அங்க அடர்த்து அருள்செய்தவன்
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில் அங்க உறு பிணி இல்லையே
மேல்
#3317
திருவின் நாயகனும் செழும் தாமரை
மருவினானும் தொழ தழல் மாண்பு அமர்
உருவினான் உறையும் மழபாடியை
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே
மேல்
#3318
நலியும் நன்று அறியா சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மா மழபாடியுள்
ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே
மேல்
#3319
மந்தம் உந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை பாவமே
மேல்
49. பொது : பண் – கௌசிகம் – நமச்சிவாயத் திருப்பதிகம்
#3320
காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3321
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3322
நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவரா தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3323
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3324
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவராயிடின்
எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லான் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3325
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே
மேல்
#3326
நரகம் ஏழ் புக நாடினராயினும்
உரைசெய் வாயினராயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3327
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3328
போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன்
பாதம்தான் முடி நேடிய பண்பராய்
ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே
மேல்
#3329
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே
மேல்
#3330
நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே
மேல்
50. திருத்தண்டலைநீணெறி : பண் – கௌசிகம்
#3331
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே
மேல்
#3332
இகழும் காலன் இதயத்தும் என்னுளும்
திகழும் சேவடியான் திருந்தும் இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே
மேல்
#3333
பரந்த நீல படர் எரி வல் விடம்
கரந்த கண்டத்தினான் கருதும் இடம்
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே
மேல்
#3334
தவந்த என்பும் தவள பொடியுமே
உவந்த மேனியினான் உறையும் இடம்
சிவந்த பொன்னும் செழும் தரளங்களும்
நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே
மேல்
#3335
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம்
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே
மேல்
#3336
கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று
இருவரும் தெரியா ஒருவன் இடம்
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே
மேல்
#3337
கலவு சீவரத்தார் கையில் உண்பவர்
குலவமாட்டா குழகன் உறைவிடம்
சுலவு மா மதிலும் சுதை மாடமும்
நிலவு தண்டலைநீணெறி காண்-மினே
மேல்
#3338
நீற்றர் தண்டலைநீணெறி நாதனை
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார்
மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே
மேல்
51. திருஆலவாய் : பண் – கௌசிகம்
#3339
செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே
மேல்
#3340
சித்தனே திரு ஆலவாய் மேவிய
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3341
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்
சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே
மேல்
#3342
சிட்டனே திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3343
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3344
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3345
செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய்
அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை
கங்குலார் அமண் கையர் இடும் கனல்
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3346
தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய்
ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3347
தாவினான் அயன்தான் அறியா வகை
மேவினாய் திரு ஆலவாயாய் அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3348
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
மேல்
#3349
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு
ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும்
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே
மேல்
52. திருஆலவாய் – திருவிராகம் : பண் – கௌசிகம்
#3350
வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல்
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில்
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே
மேல்
#3351
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய்
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே
மேல்
#3352
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய்
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே
மேல்
#3353
முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே
மேல்
#3354
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய்
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே
மேல்
#3355
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய்
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே
மேல்
#3356
ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய்
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே
மேல்
#3357
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல்
துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய்
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய்
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே
மேல்
#3358
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும்
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய்
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின்
தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே
மேல்
#3359
தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும்
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார்
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய்
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே
மேல்
#3360
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால்
ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே
மேல்
53. திருஆனைக்கா : திருவிராகம் : பண் – கௌசிகம்
#3361
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை
தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர்
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே
மேல்
#3362
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே
மேல்
#3363
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான்
ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான்
ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே
மேல்
#3364
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான்
அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே
மேல்
#3365
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர்
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான்
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே
மேல்
#3366
நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும்
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான்
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே
மேல்
#3367
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே
மேல்
#3368
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம்
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர்
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே
மேல்
#3369
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே
மேல்
#3370
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்
மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே
மேல்
#3371
ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே
மேல்
54. பொது : பண் – கௌசிகம் – திருப்பாசுரம்
#3372
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே
மேல்
#3373
அரிய காட்சியராய் தமது அங்கை சேர்
எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும்
கரியர் காடு உறை வாழ்க்கையராயினும்
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே
மேல்
#3374
வெந்த சாம்பல் விரை என பூசியே
தந்தையாரொடு தாய் இலர் தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ
மேல்
#3375
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா
கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார்
மேல்
#3376
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு
சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி
மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே
மேல்
#3377
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில்
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே
மேல்
#3378
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே
மேல்
#3379
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம்
ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய
பூத_முதல்வன் முதலே முதலா பொலிந்த
சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே
மேல்
#3380
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே
மேல்
#3381
மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே
மேல்
#3382
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும்
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே
மேல்
#3383
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே
மேல்
55. திருவான்மியூர் : பண் – கௌசிகம்
#3384
விரை ஆர் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய்
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3385
இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய்
கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய்
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3386
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3387
பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில்
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3388
கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல்
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ்
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும்
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3389
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன்
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும்
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3390
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய்
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3391
பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும்
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3392
குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
மேல்
#3393
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே
மேல்
56. திருப்பிரமபுரம் : பண் – பஞ்சமம்
#3394
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே
மேல்
#3395
சடையினன் சாமவேதன் சரி கோவணவன் மழுவாள்
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல்
உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும்
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே
மேல்
#3396
மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே
மேல்
#3397
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும்
ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே
மேல்
#3398
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே
மேல்
#3399
பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால்
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு
ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே
பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே
மேல்
#3400
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான்
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே
மேல்
#3401
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே
மேல்
#3402
ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடு முடி
காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி
ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய்
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே
மேல்
#3403
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர்
அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர்
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே
மேல்
#3404
உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும்
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே
மேல்
57. திருவொற்றியூர் : பண் – பஞ்சமம்
#3405
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள்
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3406
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3407
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3408
அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார்
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3409
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3410
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3411
நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3412
பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல்
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ்
ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3413
திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி
தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3414
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார்
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும்
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே
மேல்
#3415
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே
மேல்
58. திருச்சாத்தமங்கை : பண் – பஞ்சமம்
#3416
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3417
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3418
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி
மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3419
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி
புற்று அரவு அல்குலாளோடு உடன்ஆவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3420
வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன்
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3421
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3422
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
அமைய வேறு ஓங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3423
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3424
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம்
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3425
கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும்
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை
அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே
மேல்
#3426
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே
மேல்
59. திருக்குடமூக்கு : பண் – பஞ்சமம்
#3427
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும்
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3428
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே
பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3429
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும்
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய்
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3430
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3431
வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான்
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3432
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3433
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய
சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும்
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3434
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான்
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3435
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3436
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான்
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே
மேல்
#3437
வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே
மேல்
60. திருவக்கரை : பண் – பஞ்சமம்
#3438
கறை அணி மா மிடற்றான் கரி காடு அரங்கா உடையான்
பிறை அணி கொன்றையினான் ஒருபாகமும் பெண் அமர்ந்தான்
மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே
மேல்
#3439
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே
மேல்
#3440
சந்திரசேகரனே அருளாய் என்று தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால்
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே
மேல்
#3441
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும்
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான்
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல்
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே
மேல்
#3442
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல
மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே
மேல்
#3443
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும்
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன்
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே
மேல்
#3444
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள்
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான்
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே
மேல்
#3445
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே
மேல்
#3446
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப
சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான்
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே
மேல்
#3447
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள்
தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும்
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே
மேல்
#3448
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே
மேல்
61. திருவெண்டுறை : பண் – பஞ்சமம்
#3449
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன்
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3450
காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான்
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான்
வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3451
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான்
கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான்
உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய
விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3452
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம்
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான்
பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான்
விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3453
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான்
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3454
ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான்
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான்
யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3455
கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி
பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான்
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள்
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3456
கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான்
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3457
கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும்
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான்
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான்
வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3458
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம்
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன்
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம்
மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே
மேல்
#3459
திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன்
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே
மேல்
62. திருப்பனந்தாள் : பண் – பஞ்சமம்
#3460
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான்
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான்
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3461
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3462
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன்
தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3463
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும்
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த
தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3464
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம்
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும்
தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3465
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான்
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த
சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3466
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான்
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3467
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து
முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான்
புற்று அரவம் புலியின் உரி தோலொடு கோவணமும்
தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3468
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால்
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன்
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3469
ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும்
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய்
தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
மேல்
#3470
தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து
கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன்
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே
மேல்
63. திருச்செங்காட்டங்குடி : பண் – பஞ்சமம்
#3471
பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே
மேல்
#3472
பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும்
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள்
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே
மேல்
#3473
குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும்
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய்
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே
மேல்
#3474
கான் அருகும் வயல் அருகும் கழி அருகும் கடல் அருகும்
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய்
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே
மேல்
#3475
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும்
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய்
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே
மேல்
#3476
குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய்
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே
மேல்
#3477
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய்
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே
மேல்
#3478
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும்
தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே
மேல்
#3479
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம்
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே
மேல்
#3480
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும்
சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே
மேல்
64. திருப்பெருவேளூர் : பண் – பஞ்சமம்
#3481
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார்
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3482
கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார்
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர்
பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3483
குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும்
கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும்
பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3484
இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர்
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல்
பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3485
விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி
அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3486
விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம்
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால்
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச
பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3487
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம்
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால்
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார்
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3488
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ
முரி ஆர்ந்த தடம் தோள்கள் அடர்த்து உகந்த முதலாளர்
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3489
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ்
நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3490
புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார்
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம்
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
மேல்
#3491
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே
மேல்
65. திருக்கச்சிநெறிக்காரைக்காடு : பண் – பஞ்சமம்
#3492
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி
நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3493
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு
ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர்
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய்
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3494
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில்
நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3495
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும்
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3496
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர்
குன்றாத வெம் சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3497
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில்
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த
நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3498
புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம்
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை
பெற்று உடையார் ஒருபாகம் பெண் உடையார் கண் அமரும்
நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3499
ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய்
தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார்
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும்
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3500
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர்
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய்
நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3501
குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து
மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
மேல்
#3502
கண் ஆரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி
தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே
மேல்
66. திருவேட்டக்குடி : பண் – பஞ்சமம்
#3503
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம்
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம்
தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3504
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல்
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர்
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3505
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3506
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய்
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே
மேல்
#3507
பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3508
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல்
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3509
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல்
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார்
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே
மேல்
#3510
துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய்
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும்
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள்
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3511
அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும்
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான்
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3512
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும்
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே
மேல்
#3513
தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய்
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே
மேல்
67. திருப்பிரமபுரம் : வழிமொழித்திருவிராகம் : பண் – சாதாரி
#3514
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்
புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால்
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே
மேல்
#3515
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில்
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன்
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே
மேல்
#3516
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர்
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே
மேல்
#3517
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர்
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே
மேல்
#3518
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர்
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன்
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே
மேல்
#3519
நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம்
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வா
தராயனை விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே
மேல்
#3520
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே
மேல்
#3521
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே
மேல்
#3522
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால்
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே
மேல்
#3523
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே
மேல்
#3524
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால்
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே
மேல்
#3525
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே
மேல்
68. திருக்கயிலாயம் : திருவிராகம்: பண் – சாதாரி
#3526
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல்
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன்
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே
மேல்
#3527
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன்
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான்
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே
மேல்
#3528
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய்
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய்
திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே
மேல்
#3529
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில்
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே
மேல்
#3530
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம்
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய்
தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால்
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே
மேல்
#3531
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான்
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே
மேல்
#3532
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே
மேல்
#3533
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால்
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே
மேல்
#3534
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன்
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான்
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால்
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே
மேல்
#3535
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே
மேல்
#3536
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும்
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல்
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே
மேல்
69. திருக்காளத்தி : திருவிராகம்: பண் – சாதாரி
#3537
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில்
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால்
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே
மேல்
#3538
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய்
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில்
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே
மேல்
#3539
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய்
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே
மேல்
#3540
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல்
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில்
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே
மேல்
#3541
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே
மேல்
#3542
பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே
மேல்
#3543
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில்
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே
மேல்
#3544
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால்
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே
மேல்
#3545
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில்
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள்
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே
மேல்
#3546
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும்
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே
மேல்
#3547
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே
மேல்
70. திருமயிலாடுதுறை : திருவிராகம்: பண் – சாதாரி
#3548
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர்
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே
மேல்
#3549
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம்
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே
மேல்
#3550
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய்
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம்
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே
மேல்
#3551
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே
மேல்
#3552
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர்
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம்
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே
மேல்
#3553
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய்
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம்
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய்
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே
மேல்
#3554
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல்
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே
மேல்
#3555
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால்
விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல்
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே
மேல்
#3556
ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம்
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர்
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே
மேல்
#3557
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன்
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர்
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே
மேல்
#3558
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால்
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே
மேல்
71. திருவைகாவூர் : திருவிராகம்: பண் – சாதாரி
#3559
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால்
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே
மேல்
#3560
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர்
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம்
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம்
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே
மேல்
#3561
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார்
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர்
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே
மேல்
#3562
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்
முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே
மேல்
#3563
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம்
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால்
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே
மேல்
#3564
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன்
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம்
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய்
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே
மேல்
#3565
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால்
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே
மேல்
#3566
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன்
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம்
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே
மேல்
#3567
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே
மேல்
#3568
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம்
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன்
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே
மேல்
#3569
முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய்
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என
பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே
மேல்
72. திருமாகறல் : திருவிராகம்: பண் – சாதாரி
#3570
விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான்
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான்
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே
மேல்
#3571
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர்
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே
மேல்
#3572
காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே
மேல்
#3573
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான்
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே
மேல்
#3574
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய்
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே
மேல்
#3575
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான்
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே
மேல்
#3576
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர்
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர்
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே
மேல்
#3577
தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர்
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே
மேல்
#3578
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண்
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே
மேல்
#3579
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான்
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய்
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே
மேல்
#3580
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன்
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால்
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே
மேல்
73. திருப்பட்டீச்சரம் : திருவிராகம்: பண் – சாதாரி
#3581
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே
மேல்
#3582
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர்
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல்
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான்
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே
மேல்
#3583
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே
மேல்
#3584
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான்
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே
மேல்
#3585
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர்
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான்
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே
மேல்
#3586
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர்
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம்
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே
மேல்
#3587
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர்
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே
மேல்
#3588
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும்
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான்
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே
மேல்
#3589
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே
மேல்
#3590
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர்
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே
மேல்
#3591
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே
மேல்
74. திருத்தேவூர் : திருவிராகம்: பண் – சாதாரி
#3592
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல்
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே
மேல்
#3593
கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும்
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர்
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே
மேல்
#3594
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன்
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர்
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே
மேல்
#3595
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர்
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான்
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும்
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே
மேல்
#3596
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன்
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர்
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார்
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே
மேல்
#3597
ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே
மேல்
#3598
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய்
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான்
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள்
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே
மேல்
#3599
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம்
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே
மேல்
#3600
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல்
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான்
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே
மேல்
#3601
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம்
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான்
மை சில் முகில் வைச்ச பொழில்
மேல்
#3602
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர்
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல்
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய்
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே
மேல்
75. திருச்சண்பைநகர் : திருவிராகம்: பண் – சாதாரி
#3603
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே
மேல்
#3604
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன்
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான்
பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே
மேல்
#3605
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன்
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான்
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர்
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே
மேல்
#3606
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும்
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான்
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே
மேல்
#3607
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம்
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே
மேல்
#3608
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே
மேல்
#3609
விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான்
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே
மேல்
#3610
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை
அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே
மேல்
#3611
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம்
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே
மேல்
#3612
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய்
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான்
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே
மேல்
#3613
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல்
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே
மேல்
76. திருவேதனம் : திருவிராகம்: பண் – சாதாரி
#3614
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார்
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல்
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே
மேல்
#3615
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே
மேல்
#3616
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால்
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே
மேல்
#3617
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர்
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே
மேல்
#3618
கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம்
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில்
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே
மேல்
#3619
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே
மேல்
#3620
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம்
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில
விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே
மேல்
#3621
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால்
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர்
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே
மேல்
#3622
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர்
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே
மேல்
#3623
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால்
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில்
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே
மேல்
77. திருமாணிகுழி : திருவிராகம்: பண் – சாதாரி
#3624
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல்
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம்
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய்
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே
மேல்
#3625
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம்
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே
மேல்
#3626
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர்
உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே
மேல்
#3627
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும்
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே
மேல்
#3628
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன்
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர்
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே
மேல்
#3629
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே
மேல்
#3630
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய்
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய்
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே
மேல்
#3631
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர்
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர்
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே
மேல்
#3632
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல்
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம்
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின்
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே
மேல்
#3633
மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும்
முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம்
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில்
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே
மேல்
#3634
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல்
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே
மேல்
78. திருவேதிகுடி : திருவிராகம்: பண் – சாதாரி
#3635
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே
மேல்
#3636
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே
மேல்
#3637
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர்
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல்
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே
மேல்
#3638
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே
மேல்
#3639
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே
மேல்
#3640
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே
மேல்
#3641
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே
மேல்
#3642
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே
மேல்
#3643
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய்
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே
மேல்
#3644
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால்
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே
மேல்
#3645
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்
பந்தன் மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே
மேல்
79. திருக்கோகரணம் : திருவிராகம்: பண் – சாதாரி
#3646
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே
மேல்
#3647
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர்
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய்
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே
மேல்
#3648
முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய்
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம்
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே
மேல்
#3649
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல்
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம்
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே
மேல்
#3650
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின்
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம்
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே
மேல்
#3651
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே
மேல்
#3652
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக
கொல்ல விட நோய் அகல்தர புகல் கொடுத்து அருளு கோகரணமே
மேல்
#3653
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல்
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே
மேல்
#3654
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன்
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர்
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே
மேல்
#3655
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து
ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம்
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே
மேல்
#3656
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான்
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள்
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே
மேல்
80. திருவீழிமிழலை : திருவிராகம்: பண் – சாதாரி
#3657
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான்
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே
கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே
மேல்
#3658
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே
மேல்
#3659
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே
மேல்
#3660
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே
மேல்
#3661
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே
மேல்
#3662
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே
மேல்
#3663
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய்
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய்
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே
மேல்
#3664
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால்
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே
மேல்
#3665
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம்
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய்
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே
மேல்
#3666
குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம்
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர்
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே
மேல்
#3667
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி
அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே
மேல்
81. திருத்தோணிபுரம் : திருவிராகம்: பண் – சாதாரி
#3668
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும்
எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம்
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே
மேல்
#3669
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப
கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே
மேல்
#3670
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர்
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே
மேல்
#3671
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன் நா அணவும் மாலை
ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே
மேல்
#3672
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே
மேல்
#3673
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை
குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில்
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே
மேல்
#3674
பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில்
பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர்
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே
மேல்
#3675
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே
மேல்
#3676
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே
மேல்
#3677
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில்
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே
மேல்
#3678
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம்
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே
மேல்
82. திருஅவளிவணல்லூர் : திருவிராகம்: பண் – சாதாரி
#3679
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3680
ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே
மேல்
#3681
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும்
ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3682
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து
துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3683
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3684
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3685
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும்
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3686
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட
கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3687
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும்
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும்
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3688
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே
மேல்
#3689
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல்
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்
ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே
மேல்
83. திருநல்லூர் : திருவிராகம்: பண் – சாதாரி
#3690
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம்
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே
மேல்
#3691
பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம்
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம்
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே
மேல்
#3692
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால்
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே
மேல்
#3693
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில்
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே
மேல்
#3694
பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும்
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே
மேல்
#3695
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம்
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே
மேல்
#3696
பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர்
கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில்
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே
மேல்
#3697
ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில்
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே
மேல்
#3698
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும்
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும்
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே
மேல்
#3699
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர்
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல்
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர்
தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே
மேல்
#3700
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல்
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய்
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே
மேல்
84. திருப்புறவம் : திருவிராகம்: பண் – சாதாரி
#3701
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே
மேல்
#3702
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர் சடைமுடியினர்
அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில்
திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே
மேல்
#3703
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி
பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே
மேல்
#3704
மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே
மேல்
#3705
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு
பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே
மேல்
#3706
சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே
மேல்
#3707
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர்
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர்
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே
மேல்
#3708
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி
பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே
மேல்
#3709
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும்
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே
மேல்
#3710
கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர்
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே
மேல்
#3711
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே
மேல்
85. திருவீழிமிழலை : திருவிராகம்: பண் – சாதாரி
#3712
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடி மிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே
மேல்
#3713
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை
பெண் உறும் உடலினர் பெருகிய கடல் விடம் மிடறினர்
கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே
மேல்
#3714
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே
மேல்
#3715
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில்
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே
மேல்
#3716
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா
வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே
மேல்
#3717
பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில்
மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே
மேல்
#3718
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்
கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே
மேல்
#3719
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்
ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே
மேல்
#3720
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில்
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ்
வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே
மேல்
#3721
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர்
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்
மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர்
விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே
மேல்
#3722
உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ்
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே
மேல்
86. திருச்சேறை : திருவிராகம்: பண் – சாதாரி
#3723
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன்
வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர்
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை
செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே
மேல்
#3724
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர்
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர்
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே
மேல்
#3725
புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும்
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே
மேல்
#3726
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா
இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர்
பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர்
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே
மேல்
#3727
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால்
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர்
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே
மேல்
#3728
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால்
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே
மேல்
#3729
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம்
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும்
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே
மேல்
#3730
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார்
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும்
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே
மேல்
#3731
பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார்
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே
மேல்
#3732
துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல்
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே
மேல்
#3733
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல்
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே
மேல்
87. திருநள்ளாறு : திருவிராகம்: பண் – சாதாரி
#3734
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3735
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின்
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3736
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின்
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3737
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின்
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3738
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3739
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின்
தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3740
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3741
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின்
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3742
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3743
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
மேல்
#3744
சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும்
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே
மேல்
88. திருவிளமர் : திருவிராகம்: பண் – சாதாரி
#3745
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம்
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர்
அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே
மேல்
#3746
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர்
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர்
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே
மேல்
#3747
அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர்
சங்கு அதிர் பறை குழல் முழவினொடு இசைதரு சரிதையர்
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே
மேல்
#3748
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர்
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே
மேல்
#3749
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர்
விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே
மேல்
#3750
மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர்
கனை கடல் அடு விடம் அமுதுசெய் கறை அணி மிடறினர்
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார்
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே
மேல்
#3751
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல்
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர்
பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை
வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே
மேல்
#3752
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர்
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார்
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே
மேல்
#3753
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார்
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம்
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே
மேல்
#3754
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல
கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார்
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே
மேல்
#3755
வெந்த வெண்பொடி அணி அடிகளை விளமருள் விகிர்தரை
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்
பந்தன மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே
மேல்
89. திருக்கொச்சைவயம் : பண் – சாதாரி
#3756
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே
மேல்
#3757
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி
கோல மா மிளகொடு கொழும் கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே
மேல்
#3758
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே
மேல்
#3759
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட
கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே
மேல்
#3760
மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால்
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே
மேல்
#3761
சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர்
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே
மேல்
#3762
கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம்
உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே
மேல்
#3763
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள்
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி
மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே
மேல்
#3764
அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே
மேல்
#3765
கடு மலி உடல் உடை அமணரும் கஞ்சி உண் சாக்கியரும்
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர்
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம்
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே
மேல்
#3766
காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே
மேல்
90. திருத்துருத்தியும், திருவேள்விக்குடியும் : பண் – சாதாரி
#3767
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல்
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ்
வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3768
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார்
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3769
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல்
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம்
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3770
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார்
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3771
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும்
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம்
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3772
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார்
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3773
புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3774
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3775
கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும்
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான்
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3776
அயம் முகம் வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும்
நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
மேல்
#3777
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும்
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே
மேல்
91. திருவடகுரங்காடுதுறை : பண் – சாதாரி
#3778
கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே
மேல்
#3779
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே
மேல்
#3780
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே
மேல்
#3781
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே
மேல்
#3782
கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர்
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே
மேல்
#3783
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே
மேல்
#3784
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே
மேல்
#3785
பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும்
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே
மேல்
#3786
கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே
மேல்
#3787
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே
மேல்
92. திருநெல்வேலி : பண் – சாதாரி
#3788
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம்
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம்
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3789
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3790
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும்
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும்
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3791
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும்
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3792
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும்
கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார்
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள்
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3793
வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர்
பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர்
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார்
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3794
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3795
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3796
பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3797
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும்
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம்
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
மேல்
#3798
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே
மேல்
93. திருஅம்பர்மாகாளம் : பண் – சாதாரி
#3799
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர்
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர்
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3800
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர்
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார்
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும்
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3801
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால்
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும்
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும்
அரவினர் அரிவையோடு இருப்பிஇடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3802
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை
ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை
ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3803
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற
மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3804
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும்
அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3805
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே
எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார்
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3806
பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில்
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும்
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3807
வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும்
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும்
அரியராய் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
மேல்
#3808
சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல்
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம்
ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே
மேல்
#3809
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த
அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே
மேல்
94. திருவெங்குரு : திருமுக்கால் : பண் – சாதாரி
#3810
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல்
எண்ண வல்லார் இடர் இலரே
மேல்
#3811
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆதிய அரு மறையீரே
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு
ஓதியர் உணர்வு உடையோரே
மேல்
#3812
விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய
இளம் பிறை அணி சடையீரே
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி
உளம் கொள உறு பிணி இலரே
மேல்
#3813
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய
வண்டு அமர் வளர் சடையீரே
வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ
தொண்டர்கள் துயர் பிணி இலரே
மேல்
#3814
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே
அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடி இணை
தக்கவர் உறுவது தவமே
மேல்
#3815
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய
அந்தம் இல் பெருமையினீரே
அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு
சிந்தைசெய்வோர் வினை சிதைவே
மேல்
#3816
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அழல் மல்கும் அங்கையினீரே
அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு
தொழ அல்லல் கெடுவது துணிவே
மேல்
#3817
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்த நல் மலர் புனைவீரே
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும்
சித்தம் அது உடையவர் திருவே
மேல்
#3818
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆல நல் மணி மிடற்றீரே
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும்
சீலம் அது உடையவர் திருவே
மேல்
#3819
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலிஅதளீரே
அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை
உரை மல்கு புகழவர் உயர்வே
மேல்
95. திருஇன்னம்பர் : திருமுக்கால் : பண் – சாதாரி
#3820
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே
வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே
மேல்
#3821
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே
தாழ்தரு சடைமுடியீர் உமை சார்பவர்
ஆழ் துயர் அருவினை இலரே
மேல்
#3822
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே
மேல்
#3823
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே
கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே
மேல்
#3824
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒருகூறு உடையீரே
உமை ஒருகூறு உடையீர் உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர் அன்பே
மேல்
#3825
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அரும் சடைமுடியீரே
தண் அரும் சடைமுடியீர் உமை சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே
மேல்
#3826
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே
மேல்
#3827
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனை தொலைவு செய்தீரே
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே
மேல்
#3828
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே
அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே
மேல்
#3829
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர்
ஆர் துயர் அருவினை இலரே
மேல்
#3830
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ்
பாட வல்லார் பழி இலரே
மேல்
94. திருநெல்வெண்ணெய் : திருமுக்கால் : பண் – சாதாரி
#3831
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே
மேல்
#3832
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்
கச்சு இள அரவு அசைத்தீரே
கச்சு இள அரவு அசைத்தீர் உமை காண்பவர்
அச்சமொடு அருவினை இலரே
மேல்
#3833
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
அரை விரி கோவணத்தீரே
அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு
உரை விரிப்போர் உயர்ந்தோரே
மேல்
#3834
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல்
பார் மல்கு புகழவர் பண்பே
மேல்
#3835
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே
மேல்
#3836
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய
பெற்றி கொள் பிறைநுதலீரே
பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல்
கற்று அறிவோர்கள்-தம் கடனே
மேல்
#3837
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
கறை அணி மிடறு உடையீரே
கறை அணி மிடறு உடையீர் உமை காண்பவர்
உறைவதும் உம் அடி கீழே
மேல்
#3838
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று
அரக்கனை அசைவு செய்தீரே
அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து
இருக்க வல்லார் இடர் இலரே
மேல்
#3839
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று
இருவரை இடர்கள் செய்தீரே
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு
பரவ வல்லார் பழி இலரே
மேல்
#3840
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கிய சமண் கெடுத்தீரே
சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே
மேல்
#3841
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொல மல்குவார் துயர் இலரே
மேல்
97. திருச்சிறுகுடி : திருமுக்கால் : பண் – சாதாரி
#3842
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர்
அடைவதும் அமருலகு அதுவே
மேல்
#3843
சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே
சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல்
உற்றவர் உறு பிணி இலரே
மேல்
#3844
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய
துள்ளிய மான் உடையீரே
துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல்
உள்ளுதல்செய நலம் உறுமே
மேல்
#3845
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம் எரித்தீரே
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார்
சொல் நலம் உடையவர் தொண்டே
மேல்
#3846
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய
பெற்றி கொள் பிறை முடியீரே
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு
அற்றவர் அரு வினை இலரே
மேல்
#3847
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம் உடையீரே
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர் நலர் தவமே
மேல்
#3848
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடைமுடியீரே
வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்
நெறி உணர்வோர் உயர்ந்தோரே
மேல்
#3849
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரம் நெரித்தீரே
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர்
வசை அறுமது வழிபாடே
மேல்
#3850
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவு செய்தீரே
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார்
அருவினையொடு துயர் இலரே
மேல்
#3851
செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண் புறத்தீரே
புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல்
பத்தர்கள்-தம்முடை பரிசே
மேல்
#3852
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே
மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே
மேல்
98. திருவீழிமிழலை : திருமுக்கால் : பண் – சாதாரி
#3853
வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை
ஒண் மதி அணி உடையீரே
ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே
மேல்
#3854
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை
அதி குணர் புகழ்வதும் அழகே
மேல்
#3855
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு
வரை மிசை உறைவதும் வலதே
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை
உரைசெயும் அவை மறை ஒலியே
மேல்
#3856
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில்
இட்டு எழில் பெறுகிறது எரியே
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம்
அட்டது வரை சிலையாலே
மேல்
#3857
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல
பால் நிகர் உரு உடையீரே
பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை
தான் மிக உறைவது தவமே
மேல்
#3858
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது
அரையுற அணிவன அரவே
மேல்
#3859
விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு
அசைவுற அணிவு உடையீரே
அசைவுற அணிவு உடையீர் உமை அறிபவர்
நசையுறும் நாவினர்தாமே
மேல்
#3860
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று
இலங்கை மன் இடர் கெடுத்தீரே
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார்
புலன்களை முனிவது பொருளே
மேல்
#3861
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர் உமை
அற்புதன் அயன் அறியானே
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
நல் பதம் அறிவது நயமே
மேல்
#3862
வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே
புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார்
பத்திசெய் மனம் உடையவரே
மேல்
#3863
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே
மேல்
99. திருமுதுகுன்றம் : திருமுக்கால் : பண் – சாதாரி
#3864
முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே
மேல்
#3865
மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பை அரவம் அசைத்தீரே
பை அரவம் அசைத்தீர் உமை பாடுவார்
நைவு இலர் நாள்-தொறும் நலமே
மேல்
#3866
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
மழ விடை அது உடையீரே
மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார்
பழியொடு பகை இலர்தாமே
மேல்
#3867
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
உரு அமர் சடைமுடியீரே
உரு அமர் சடைமுடியீர் உமை ஓதுவார்
திருவொடு தேசினர்தாமே
மேல்
#3868
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடி அடர்த்தீரே
பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார்
சித்தம் நல்ல அடியாரே
மேல்
#3869
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று
இயன்றவர் அறிவு அரியீரே
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார்
பயன்தலை நிற்பவர்தாமே
மேல்
#3870
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
கட்டு அமண் தேரை காய்ந்தீரே
கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே
மேல்
#3871
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே
மேல்
100. திருத்தோணிபுரம் : பண் – பழம்பஞ்சுரம்
#3872
கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால்
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே
மேல்
#3873
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள்
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர்
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே
மேல்
#3874
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும்
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும்
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே
மேல்
#3875
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும்
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே
மேல்
#3876
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும்
பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும்
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும்
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே
மேல்
#3877
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம்
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே
மேல்
#3878
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால்
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே
மேல்
101. திருஇராமேச்சுரம் : பண் – பழம்பஞ்சுரம்
#3879
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய்
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே
மேல்
#3880
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே
மேல்
#3881
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம்
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே
மேல்
#3882
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே
மேல்
#3883
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார்
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே
மேல்
#3884
கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம்
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார்
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே
மேல்
#3885
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார்
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே
மேல்
#3886
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே
மேல்
#3887
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே
மேல்
#3888
பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும்
பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே
மேல்
#3889
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே
மேல்
102. திருநாரையூர் : பண் – பழம்பஞ்சுரம்
#3890
காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே
மேல்
#3891
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான்
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம்
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே
மேல்
#3892
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மை மிடற்றன்
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம்
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில்
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே
மேல்
#3893
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண்
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே
மேல்
#3894
பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர்
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே
மேல்
#3895
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரை
யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே
மேல்
#3896
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார்
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே
மேல்
#3897
நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில்
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே
மேல்
#3898
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர்
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே
மேல்
#3899
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில்
பூசு பொடி தலைவர் அடியார் அடியே பொருத்தமே
மேல்
#3900
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல்
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே
மேல்
103. திருவலம்புரம் : பண் – பழம்பஞ்சுரம்
#3901
கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே
மேல்
#3902
கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கை
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே
மேல்
#3903
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே
மேல்
#3904
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும்
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே
மேல்
#3905
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல்
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும்
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே
மேல்
#3906
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும்
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே
மேல்
#3907
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள்
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும்
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே
மேல்
#3908
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே
மேல்
#3909
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும்
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும்
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே
மேல்
#3910
காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும்
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும்
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே
மேல்
#3911
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன்
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய்
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே
மேல்
100. திருப்பரிதிநியமம் : பண் – பழம்பஞ்சுரம்
#3912
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும்
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே
மேல்
#3913
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும்
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே
மேல்
#3914
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும்
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே
மேல்
#3915
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே
மேல்
#3916
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார்
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே
மேல்
#3917
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார்
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும்
பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே
மேல்
#3918
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார்
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே
மேல்
#3919
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார்
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்
பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே
மேல்
#3920
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார்
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே
மேல்
#3921
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும்
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே
மேல்
#3922
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே
மேல்
105. திருக்கலிக்காமூர் : பண் – பழம்பஞ்சுரம்
#3923
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும்
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே
மேல்
#3924
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம்
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும்
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே
மேல்
#3925
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே
மேல்
#3926
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர்
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே
மேல்
#3927
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம்
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே
மேல்
#3928
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல்
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே
மேல்
#3929
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே
மேல்
#3930
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே
மேல்
#3931
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே
மேல்
#3932
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே
மேல்
#3933
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண
ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே
மேல்
106. திருவலஞ்சுழி : பண் – பழம்பஞ்சுரம்
#3934
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே
மேல்
#3935
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல்
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே
மேல்
#3936
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே
மேல்
#3937
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர்
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர்
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே
மேல்
#3938
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி
மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும்
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே
மேல்
#3939
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம்
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர்
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே
மேல்
#3940
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார்
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே
மேல்
#3941
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே
மேல்
#3942
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார்
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான்
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே
மேல்
#3943
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான்
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே
மேல்
#3944
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல்
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே
மேல்
107. திருநாரையூர் : பண் – பழம்பஞ்சுரம்
#3945
கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி
உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன்
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல்
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே
மேல்
#3946
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே
மேல்
#3947
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும்
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே
மேல்
#3948
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி
பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே
மேல்
#3949
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும்
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை
கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே
மேல்
#3950
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி
புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே
மேல்
#3951
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே
மேல்
#3952
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள்
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார்
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும்
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே
மேல்
#3953
பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும்
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும்
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே
மேல்
#3954
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள்
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே
மேல்
#3955
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன்
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல்
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே
மேல்
108. திருஆலவாய் : பண் – பழம்பஞ்சுரம் – நாலடி மேல்வைப்பு
#3956
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே
பாதி மாது உடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3957
வைதிகத்தின் வழி ஒழுகாத அ
கைதவம் உடை கார் அமண் தேரரை
எய்தி வாதுசெய திருவுள்ளமே
மை திகழ்தரு மா மணி கண்டனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3958
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை
முறிய வாதுசெய திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3959
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை
கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும்
செறுத்து வாதுசெய திருவுள்ளமே
முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3960
அந்தணாளர் புரியும் அரு மறை
சிந்தை செய்யா அருகர் திறங்களை
சிந்த வாதுசெய திருவுள்ளமே
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3961
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாதுசெய திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3962
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல வாதுசெய திருவுள்ளமே
தழல் இலங்கு திரு உரு சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3963
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்று கொள்ளவும் நில்லா அமணரை
தேற்றி வாதுசெய திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3964
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாதுசெய திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3965
அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொன் கழல் பேணா அருகரை
தென்ற வாதுசெய திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணா தலைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மேல்
#3966
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாட காழி சம்பந்தன் மதித்த இ
பாடல் வல்லவர் பாக்கியவாளரே
மேல்
109. திருக்கயிலாயம், திருவானைக்கா, திருமயேந்திரம், திருவாரூர் :
பண் – பழம்பஞ்சுரம் – கூடற்சதுக்கம்
#3967
மண் அது உண்ட அரி மலரோன் காணா
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3968
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்
கந்த வார் சடை உடை கயிலையாரும்
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3969
மால் அயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3970
கருடனை ஏறு அரி அயனார் காணார்
வெருள் விடை ஏறிய மயேந்திரரும்
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3971
மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார்
மதி அது சொல்லிய மயேந்திரரும்
கதிர் முலை புல்கிய கயிலையாரும்
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3972
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனை தலை அரி தழல் உருவர்
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3973
கண்ணனும் நான்முகன் காண்பு அரியார்
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள்
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3974
கடல்_வண்ணன் நான்முகன் காண்பு அரியார்
தட வரை அரக்கனை தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே
மேல்
#3975
ஆதி மால் அயன் அவர் காண்பு அரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
காதில் ஒர் குழை உடை கயிலையாரும்
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே
மேல்
#3976
அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல்
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
மறி கடலோன் அயன் தேட தானும்
அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே
மேல்
#3977
ஏனம் மால் அயன் அவர் காண்பு அரியார்
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்
ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே
மேல்
110. திருப்பிரமபுரம் : பண் – பழம்பஞ்சுரம் – ஈரடி
#3978
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே
மேல்
#3979
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே
மேல்
#3980
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர்
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே
மேல்
#3981
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ்
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே
மேல்
#3982
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல்
தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே
மேல்
#3983
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே
மேல்
#3984
சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும்
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே
மேல்
#3985
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர்
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே
மேல்
#3986
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே
மேல்
#3987
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன்
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே
மேல்
#3988
விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே
மேல்
#3989
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே
மேல்
111. திருவீழிமிழலை : பண் – பழம்பஞ்சுரம் – ஈரடி
#3990
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே
மேல்
#3991
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே
மேல்
#3992
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே
மேல்
#3993
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும்
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே
மேல்
#3994
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே
மேல்
#3995
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே
மேல்
#3996
போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர்
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே
மேல்
#3997
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே
மேல்
#3998
துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே
மேல்
#3999
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர்
சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே
மேல்
#4000
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே
மேல்
112. திருப்பல்லவனீச்சரம் : பண் – பழம்பஞ்சுரம் – ஈரடி
#4001
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4002
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4003
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4004
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4005
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4006
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4007
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4008
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4009
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4010
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
மேல்
#4011
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே
மேல்
113. திருக்கழுமலம் : திருவியமகம் : பண் – பழம்பஞ்சுரம்
#4012
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே
மேல்
#4013
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே
அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால்
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே
மேல்
#4014
காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே
தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே
போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே
மேல்
#4015
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே
மேல்
#4016
உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே
படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே
மேல்
#4017
திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே
தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே
மேல்
#4018
ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே
சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே
மேல்
#4019
ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே
தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே
பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே
மேல்
#4020
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே
கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே
மேல்
#4021
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே
புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே
கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே
மேல்
#4022
கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே
மேல்
#4023
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே
மேல்
114. திருக்கச்சியேகம்பம் : திருவியமகம் : பண் – பழம்பஞ்சுரம்
#4024
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே
மேல்
#4025
சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே
மேல்
#4026
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே
அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே
மேல்
#4027
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே
மேல்
#4028
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே
மேல்
#4029
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே
மேல்
#4030
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே
மேல்
#4031
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே
கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே
உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே
மேல்
#4032
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே
மேல்
#4033
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே
தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே
மேல்
#4034
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே
புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே
மேல்
115. திருஆலவாய் : திருவியமகம் : பண் – பழம்பஞ்சுரம்
#4035
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே
மேல்
#4036
பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே
மேல்
#4037
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே
மேல்
#4038
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே
அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே
மேல்
#4039
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால்
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே
மேல்
#4040
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே
மேல்
#4041
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெம் கண் மாசுணம் கையது குட்டியே
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே
மேல்
#4042
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ
மேல்
#4043
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே
அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே
மேல்
#4044
தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே
கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே
மேல்
#4045
ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே
மேல்
116. திருவீழிமிழலை : திருவியமகம் : பண் – பழம்பஞ்சுரம்
#4046
துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே
கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே
என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே
மேல்
#4047
ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே
காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே
வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா
மேல்
#4048
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே
சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே
மேல்
#4049
கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே
கொட்டுவான் முழவம் வாணனே குலாய சீர் மிழலைவாணனே
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே
மேல்
#4050
ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே
மேல்
#4051
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே
போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே
ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே
மேல்
#4052
அப்பு இயன்ற கண் அயனுமே அமரர்_கோமகனும் அயனுமே
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே
மேல்
#4053
தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே
மேல்
#4054
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே
மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா
மேல்
#4055
கஞ்சியை குலவு கையரே கலக்கம் ஆர் அமணர் கையரே
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா
மேல்
#4056
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே
காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே
மேல்
117. சீகாழி : திருமாலைமாற்று : பண் – கௌசிகம்
#4057
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா
மேல்
#4058
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய்
ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா
மேல்
#4059
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா
மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா
மேல்
#4060
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ
மேல்
#4061
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா
மேல்
#4062
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே
மேல்
#4063
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே
நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ
மேல்
#4064
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா
காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே
மேல்
#4065
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா
மேல்
#4066
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே
மேல்
#4067
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே
மேல்
118. திருக்கழுமலம் : பண் – புறநீர்மை
#4068
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில்
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4069
மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம்
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள்
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4070
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம்
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4071
மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும்
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4072
சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம்
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4073
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம்
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4074
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும்
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும்
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4075
ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில்
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4076
அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும்
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4077
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும்
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம்
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே
மேல்
#4078
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல்
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே
மேல்
119. திருவீழிமிழலை : பண் – புறநீர்மை
#4079
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன்
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4080
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4081
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_
ஒருத்தன் மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன்
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4082
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம்
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர்
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4083
கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம்
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன்
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4084
பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர்
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4085
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன்
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4086
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள்
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4087
அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே
மேல்
#4088
கஞ்சி போது உடையார் கையில் கோசார கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே
மேல்
#4089
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன்
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே
மேல்
120. திருஆலவாய் : பண் – புறநீர்மை
#4090
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ
பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4091
வெற்றவே அடியார் அடி மிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறு அணியும்
கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4092
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும்
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே
மேல்
#4093
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால்
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில்
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4094
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4095
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன்
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4096
முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே
மேல்
#4097
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4098
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4099
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த
குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே
மேல்
#4100
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும்
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே
மேல்
121. திருப்பந்தணைநல்லூர் : பண் – புறநீர்மை
#4101
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4102
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும்
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும்
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4103
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால்
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல்
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4104
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4105
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4106
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும்
அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும்
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4107
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான்
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4108
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன்
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில்
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4109
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா
தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில்
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
மேல்
#4110
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில்
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன்
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே
மேல்
122. திருவோமாம்புலியூர் : பண் – புறநீர்மை
#4111
பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4112
சம்பரற்கு அருளி சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4113
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை
தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4114
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர்
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில்
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும்
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4115
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால்
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4116
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4117
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும்
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4118
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4119
தெள்ளியர் அல்லா தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
மேல்
#4120
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை
களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன்
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே
மேல்
123. திருக்கோணமலை : பண் – புறநீர்மை
#4121
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி
குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4122
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய
கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து
குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4123
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார்
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல்
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா
குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4124
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர்
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4125
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர்
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4126
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார்
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4127
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4128
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும்
குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4129
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே
மேல்
#4130
குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன்
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே
மேல்
120. திருக்குருகாவூர்வெள்ளடை : பண் – அந்தாளிக்குறிஞ்சி
#4131
சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர்
விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே
மேல்
#4132
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே
மேல்
#4133
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண் பிறை சங்கனீரே
மேல்
#4134
வளம் கிளர் கங்கை மடவரலோடு
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக
விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே
மேல்
#4135
சுரி குழல் நல்ல துடி_இடையோடு
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க
விரிதரு பைம் பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தை பிரானே
மேல்
#4136
காவி அம் கண் மடவாளொடும் காட்டிடை
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர்
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே
மேல்
125. திருநல்லூர்ப்பெருமணம் : பண் – அந்தாளிக்குறிஞ்சி
#4137
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே
மேல்
#4138
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம்
பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள்
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர்
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே
மேல்
#4139
அன்புறு சிந்தையராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே
மேல்
#4140
வல்லியம் தோல் உடை ஆர்ப்பது போர்ப்பது
கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம்
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே
மேல்
#4141
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண்
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே
மேல்
#4142
சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே
மேல்
#4143
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_
பாகத்தன் பாய் புலி தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப்பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே
மேல்
#4144
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம்
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே
மேல்
#4145
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர் மா மறை
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம்
போலும் தம் கோயில் புரி சடையார்க்கே
மேல்
#4146
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின்
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே
மேல்
#4147
நறும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன்
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம் அவலம் இலரே
மேல்
126. (இப்பதிகம் கல்வெட்டினின்றும் எடுக்கப்பட்டது)
#4148
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர்
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே
மேல்
#4149
ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர்
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே
மேல்
#4150
கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கை
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர்
குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே
மேல்
#4151
கூச தழல் போல் விழியா வரு கூற்றை
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம்
வாச கதிர் சாலி வெண் சாமரையே போல்
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே
மேல்
#4152
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர்
கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல்
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே
மேல்
#4153
கிள்ளை_மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ
தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய்
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே
மேல்
#4154
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய்
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர்
கீதத்து ஒலியும் கெழுமும் முழவோடு
வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே
மேல்
#4155
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம்
கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும்
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே
மேல்
#4156
புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம்
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம்
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில்
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே
மேல்
#4157
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்
அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள்செய்த
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே
மேல்
#4158
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம்
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே
மேல்
127. பண் — கௌசிகம்
(சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எழுதப்பட்டது)
#4159
தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை
ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே
மேல்
#4160
வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே
நன்மை உற்ற கிளியன்னவூரனே
மேல்
#4161
பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்னவூரனே
மேல்
#4162
அன்பர் வேண்டுமவை அளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல்
துன்பம் தீர்த்து சுகம் கொடு கண்நுதல்
இன்பம் தேக்கும் கிளியன்னவூரனே
மேல்
#4163
செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை
பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர்
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட
மெய்யும் வண்ண கிளியன்னவூரனே
மேல்
#4164
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள்
நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி
மண் பொறா முழு செல்வமும் மல்குமால்
புண் பொறாத கிளியன்னவூரனே
மேல்
#4165
மூவராயினும் முக்கண்ண நின் அருள்
மேவுறாது விலக்கிடல்-பாலரோ
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட
தேவர் ஆக்கும் கிளியன்னவூரனே
மேல்
#4166
திரம் மிகுத்த சடைமுடியான் வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால்
வரம் மிகத்த கிளியன்னவூரனே
மேல்
#4167
நீதி உற்றிடும் நான்முகன் நாரணன்
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர்
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு
கீதம் ஏற்ற கிளியன்னவூரனே
மேல்
#4168
மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன்
சங்கை மாற்றி சமணரை தாழ்த்தவும்
இங்கு உரைத்த கிளியன்னவூரனே
மேல்
#4169
நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே
குறை இலாது கொடுமை தவிர்வரே