Select Page

அகநானூறு – பாடல் 16. மருதத் திணை பாடியவர் – சாகலாசனார்

துறை – பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், ‘யாரையும் அறியேன்’ என்றாற்குத் தலைமகள் சொல்லியது மரபு மூலம் – நீயும் தாயை இவற்கு நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதி னல்லி யவிரிதழ் புரையு மாசி லங்கை மணிமரு ளவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும்...
அகநானூறு  பாடல்  15. பாலைத் திணை  பாடியவர் – மாமூலனார்

அகநானூறு பாடல் 15. பாலைத் திணை பாடியவர் – மாமூலனார்

துறை – மகள் போக்கிய தாய் சொல்லியது. மரபு மூலம் – அறிந்த மாக்கட்டு ஆகுக எம்வெங் காம மியைவ தாயின் மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாக லார்கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவின் றுளுநாட் டன்ன றுங்கை வம்பலர்த் தாங்கும்...

அகநானூறு பாடல் 14. முல்லைத் திணை பாடியவர் – ஒக்கூர் மாசாத்தனார்

துறை – பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. மரபு மூலம் – கண்டனென் யானே, புனை நெடும் தேரே அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி காயாஞ் செம்மற் றாஅய்ப் பலவுட னீயன் மூதாய் வரிப்பப் பவளமொடு மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய வஞ்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்...

பாடல் 13. பாலைத் திணை பாடியவர் – பெருந்தலைச் சாத்தனார்

துறை – பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்கு வித்தது; உடம்பட்டதூஉமாம் மரபு மூலம் – நோயின்று ஆக செய்பொருள் தன்கடற் பிறந்த முத்தி னாரமு முனைதிறை கொடுக்குந் துப்பின் றன்மலைத் தெறலரு மரபின் கடவுட் பேணிக் குறவர் தந்த சந்தி னாரமு மிருபே ராரமு...

பாடல் 12. குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர்

துறை – இரவுக்குறியும் மறுத்து தோழி வரைவு கடாவியது மரபு மூலம் – நீ வரின் மெல்லியல் வாழலள் யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப வெவனில குறுமக ளியங்குதி யென்னும் யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பி னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே...