Select Page

20. கால்கழுவு

அந்தத் தமிழ்ப்பேராசிரியைக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து ஓடியாடத் தொடங்கியதும் அவனுக்கு அவள் வைத்த பெயர் ‘வாலு’ – அவ்வளவு சுட்டி. இப்பொழுது இரண்டாவதும் மகன் பிறந்து அவனும் வளரத்தொடங்கி, ‘மூத்தது மோழை, இளையது காளை” என்றாற்போல படுசுட்டியாக வளரத் தொடங்கியதும், இப்போது...

19. செத்தை

மாலையில் வீட்டுக்குள் நுழைந்தவன் திடுக்கிட்டான். அறையைச் சுற்றிப் பார்வையைப் பரப்பினான். முகத்தைச்  சுருக்கிக்கொண்டான். எதிரில் சிரிப்போடு வந்த மனைவியைக் கேட்டான், “என்ன இந்தப் பயலுக இப்படிக் காகிதத்தக் கிழிச்சுப்போட்டிருக்கானுக, இப்படி வீடெல்லாம் குப்பையாக் கெடக்கு,...

18 – எத்து

எந்தவித அரவமும் இல்லாமல் இருந்த வீட்டில், திடீரென்று அமைதியைக் கிழித்துக்கொண்டு சின்னவனின் கீச்சுக்குரல் ஓங்கி ஒலித்தது. “அம்மா, அண்ணன் என்ன எத்துராம்’மா” அடுப்படியில் இருந்தவாறே அம்மாக்காரி கத்தினாள். “டே, பெரியவனே! சின்னவன் ஒனக்கு என்ன பந்தாடா? அவன எதுக்குடா எத்துற?...

17 – சும்மாடு

“கீர, கீர, கீரேய், அரைக்கீர, தண்டங்கீர, மொளகுதக்காளி, பொன்னாங்கண்ணீ”. அந்தக் கீரைக்கூடைக்காரி, அந்த நீண்ட தெருவுக்குள் நுழைந்ததும் உரத்த குரலில் கூவினாள். இருப்பினும் அந்தத் தெருவில் வேறு யாரும் கீரை வாங்கமாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும் – ஒரே ஒரு வீட்டைத் தவிர....

16 – கூப்பிடு தூரம்

வீட்டுக்குள் வேகமாக நுழைந்த அவர், தன் மூத்த மகனின் பெயரைச் சொல்லிக்கொண்டே உரத்த குரலில் அவனை அழைத்தார். ஒவ்வோர் அறையாகச் சென்று தேடியும் பார்த்தார். அடுப்படியிலிருந்து முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டே வந்த அவரது மனைவி, “என்ன தேடுறீங்க?” என்று நிதானமாகக் கேட்டாள்....