Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொடி 2
நொடிக்குள் 2
நொடிப்பொழுதத்து 1
நொடிப்பொழுதினில் 1
நொடியில் 4
நொடியிலே 3
நொடியின் 1
நொடியினில் 7
நொதுமலினள் 1
நொந்த 1
நொந்தது 2
நொந்ததுவும் 1
நொந்தவர் 1
நொந்தனம் 1
நொந்தார் 2
நொந்தான் 2
நொந்து 36
நொந்துநொந்து 2
நொந்துழி 1
நொந்துளான் 2
நொந்துற்று 1
நொந்தோரை 1
நொய்தின் 2
நொய்தினில் 1
நொறுக்கினான் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நொடி (2)

நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2

மேல்


நொடிக்குள் (2)

நூறு இரு காதம் நொடிக்குள் நடப்பான் – வில்லி:14 71/2
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4

மேல்


நொடிப்பொழுதத்து (1)

அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே – வில்லி:45 215/4

மேல்


நொடிப்பொழுதினில் (1)

ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/3

மேல்


நொடியில் (4)

தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/4
அவன் விடும் அடு கணை அடையவும் நொடியில்
பவனனது எதிர் சருகு என நனி பறிய – வில்லி:13 133/1,2
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே – வில்லி:40 56/4
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4

மேல்


நொடியிலே (3)

வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/4
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/2,3
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4

மேல்


நொடியின் (1)

எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின்
நடு தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற போர் முனையில் – வில்லி:40 16/2,3

மேல்


நொடியினில் (7)

ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே – வில்லி:13 139/4
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் – வில்லி:22 40/4
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான் – வில்லி:41 24/2
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன – வில்லி:44 22/1
அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/2
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில்
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/2,3
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/4

மேல்


நொதுமலினள் (1)

நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் – வில்லி:19 29/2

மேல்


நொந்த (1)

உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் – வில்லி:38 16/2

மேல்


நொந்தது (2)

சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/3
பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள் – வில்லி:42 124/3

மேல்


நொந்ததுவும் (1)

நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி – வில்லி:46 74/2

மேல்


நொந்தவர் (1)

கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார் – வில்லி:42 56/4

மேல்


நொந்தனம் (1)

நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர் – வில்லி:38 35/1

மேல்


நொந்தார் (2)

அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார் – வில்லி:11 189/4
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் – வில்லி:39 36/4

மேல்


நொந்தான் (2)

நொந்தான் இவன் என்று நுதி கதிர் வேல் – வில்லி:32 21/1
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/4

மேல்


நொந்து (36)

பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும் – வில்லி:1 137/3
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் – வில்லி:4 39/4
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் – வில்லி:5 50/3
புரோசன பெயர் புன்மதி-தன்னை நொந்து
அரோசனத்துடன் அத்தினம் நண்ணினார் – வில்லி:5 105/3,4
அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய – வில்லி:11 86/1
விதுரன் நொந்து நீதி கூற விழி இலாமை அன்றியே – வில்லி:11 186/1
நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ – வில்லி:11 206/4
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் – வில்லி:12 164/3
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான் – வில்லி:13 119/4
பட்டு உளம் நொந்து பதைத்து அடல் வஞ்சன் – வில்லி:14 81/2
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம் – வில்லி:14 107/3
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் – வில்லி:14 130/4
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே – வில்லி:22 95/4
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/4
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே – வில்லி:27 109/2
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே – வில்லி:30 21/4
புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான் – வில்லி:38 12/2
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா – வில்லி:38 21/1
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை – வில்லி:41 16/1
இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன் – வில்லி:41 45/1
நொந்து சில கூறினனே – வில்லி:41 54/4
நொந்து பல வாளியொடு – வில்லி:41 76/3
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி – வில்லி:41 167/3
தனஞ்சயன் கை அம்பின் நொந்து தபனன் மைந்தன் மோகியா – வில்லி:42 28/1
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான் – வில்லி:42 64/3
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி – வில்லி:42 82/1
மாசுணம் தலை நொந்து சுழன்றன மாதிரங்கள் மருண்டு கலங்கின – வில்லி:42 127/1
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி – வில்லி:42 133/1,2
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா – வில்லி:43 49/2
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில – வில்லி:44 80/2
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4

மேல்


நொந்துநொந்து (2)

நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து – வில்லி:7 42/1,2
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்துநொந்து அம்ம சில கூறுவான் – வில்லி:45 229/4

மேல்


நொந்துழி (1)

வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி – வில்லி:2 49/2

மேல்


நொந்துளான் (2)

உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான்
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் – வில்லி:14 128/2,3
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர் – வில்லி:46 200/3

மேல்


நொந்துற்று (1)

நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/4

மேல்


நொந்தோரை (1)

நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் – வில்லி:23 22/4

மேல்


நொய்தின் (2)

நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி – வில்லி:41 13/1
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி – வில்லி:41 82/3

மேல்


நொய்தினில் (1)

நூறு தேர்-தனை புரக்க நொய்தினில் கழற்றினான் – வில்லி:40 43/4

மேல்


நொறுக்கினான் (1)

நூக்கினான் சிலரை தாளால் நொறுக்கினான் சிலரை வாளால் – வில்லி:14 98/3

மேல்