Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 10
வைக்க 1
வைக்கப்பெறீர் 1
வைக்கும் 3
வைகல் 7
வைகல்-தொறும் 1
வைகல்-தோறும் 3
வைகலர் 1
வைகலும் 3
வைகறை 5
வைகறைக்கு 1
வைகா 1
வைகிய 2
வைகியது 1
வைகு 2
வைகும் 1
வைத்த 18
வைத்தது 3
வைத்ததை 1
வைத்தலின் 3
வைத்தலும் 1
வைத்தவும் 1
வைத்தனள் 1
வைத்தனளாய் 1
வைத்தனளால் 1
வைத்தனன் 2
வைத்து 14
வைத்தும் 1
வைத்துழி 1
வைது 1
வைந்நுதி 1
வைப்ப 1
வைப்பது 1
வைப்பில் 1
வைய 7
வையக 4
வையகத்து 4
வையகம் 4
வையத்தின் 1
வையத்து 15
வையம் 29
வையமும் 7
வையாக்கிரம் 1
வையாது 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வை (10)

நலம் மிகு சிறப்பொடு நல் வை புகழ – உஞ்ஞை:37/117
கோல வை வேல் ஏனைய குமரர்க்கு – உஞ்ஞை:40/361
வளை ஆர் முன்கை வை எயிற்று இன் நகை – உஞ்ஞை:41/24
கையொடு துமித்த வை வாள் வாய் மிதித்து – உஞ்ஞை:46/40
வை எயிற்று துவர் வாய் வாசவதத்தை தன் – உஞ்ஞை:54/21
வடி இலை கதிர் வாள் வை நுனை குந்தமொடு – இலாவாண:18/23
வை மருப்பு அணி பெற வண்ணம் கொளீஇ – மகத:5/61
வை வாள் போலும் வகையிற்று ஆகி – மகத:7/106
பொய் வகை பூவும் வை எயிற்று அகல் வாய் – மகத:14/71
வயிரத்து அன்ன வை நுனை மருப்பின் – வத்தவ:5/72

TOP


வைக்க (1)

வாயில் சேர்வுற வையம் வைக்க என – மகத:13/16

TOP


வைக்கப்பெறீர் (1)

வள் இதழ் கோதையை வைக்கப்பெறீர் என – மகத:13/56

TOP


வைக்கும் (3)

கடம் தலை வைக்கும் காலம் இது என – உஞ்ஞை:34/107
அவன்-தலை வைக்கும் ஆணை ஏவலும் – உஞ்ஞை:34/108
ஒடுக்கி வைக்கும் உழவன் போல – வத்தவ:15/35

TOP


வைகல் (7)

அன்றைய வைகல் சென்றோர் பேணி – உஞ்ஞை:35/89
அன்றை வைகல் சென்ற பின்னர் – உஞ்ஞை:37/4
வைகல் ஊதா வந்த கடைத்தும் – இலாவாண:16/34
வந்தது-மாதோ வைகல் இன்று என் – மகத:7/110
வைகல் ஆயிரம் கை-வயின் கொடுத்து – வத்தவ:9/36
அற்றை வைகல் கழிந்த பின் அவளை – வத்தவ:13/145
ஏம வைகல் இயல்வது ஆம் எனின் என – நரவாண:8/144

TOP


வைகல்-தொறும் (1)

வளரும்-மாதோ வைகல்-தொறும் பொலிந்து என் – நரவாண:6/147

TOP


வைகல்-தோறும் (3)

வைகல்-தோறும் வத்தவன் காட்ட – உஞ்ஞை:35/2
வைகல்-தோறும் வான் மதி மெலிவின் – இலாவாண:11/3
வைகல்-தோறும் மெய் வகை தெரிவார் – மகத:15/69

TOP


வைகலர் (1)

செவ்வி பெறாஅ வைகலர் ஆகி – உஞ்ஞை:37/272

TOP


வைகலும் (3)

செல்வ பெரும் புனல் மருங்கு_அற வைகலும்
நல்கூர் கட்டு அழல் நலிந்து கையறுப்ப – வத்தவ:2/20,21
பொய்யா மாரித்து ஆகி வைகலும்
தண்டா இன்பம் தலைத்தலை சிறப்ப – வத்தவ:2/59,60
வழுவுதல் இன்றி வைகலும் ஈங்கே – வத்தவ:13/179

TOP


வைகறை (5)

மம்மர் வைகறை மருங்கு துயில் ஏற்ற – மகத:4/51
வாய்ந்த வைகறை வையக வரைப்பின் – வத்தவ:5/65
இடையிருள் யாமம் நீங்கிய வைகறை
இன்று யான் கண்டது இன்னது மற்றதை – வத்தவ:5/88,89
இன்ப யாமம் இயைந்த வைகறை
நல் பெரும் கனவின் நடுங்குவனள் ஏற்று – நரவாண:1/141,142
வால் இதழ் நறு மலர் வைகறை யாமத்து – நரவாண:3/195

TOP


வைகறைக்கு (1)

வைகறைக்கு அமைய கை புனைந்து இயற்றிய – மகத:14/84

TOP


வைகா (1)

இளையோர் வைகா இழுக்கு_அரு வாழ்க்கையன் – உஞ்ஞை:35/121

TOP


வைகிய (2)

புரிதார் நெடுந்தகை பூ அணை வைகிய
திரு வீழ் கட்டில் திறத்துளி காத்த – உஞ்ஞை:34/5,6
வைகிய காலை வத்தவர் இறைவனும் – மகத:8/1

TOP


வைகியது (1)

கையறு குருசிலை வைகியது எழு என – உஞ்ஞை:33/97

TOP


வைகு (2)

அ இருள் அடக்கி வைகு இருள் போக்கி – உஞ்ஞை:35/249
வைகு புலர் விடியல் வயவர் சூழ்வர – உஞ்ஞை:56/149

TOP


வைகும் (1)

செரு அடு தோள் மிசை சேர்ந்தனள் வைகும்
திரு இலளாதலின் தீப்பட்டாள் என – மகத:20/166,167

TOP


வைத்த (18)

அருப்பு இள முலையவர் அடைகரை வைத்த
மருப்பு இயல் செப்பை மதித்தது ஆகி – உஞ்ஞை:40/258,259
வைத்த தலையிற்று ஆக வலி சிறந்து – உஞ்ஞை:48/64
உருப்ப நீள் அதர்க்கு அமைத்து முன் வைத்த
தருப்பணம் செருமி தன் உயிர் வைத்தனன் – இலாவாண:9/238,239
தாழா தோழர் தன் மேல் வைத்த பின் – இலாவாண:11/14
தன் உயிர் வைத்த மின் உறழ் சாயல் – இலாவாண:19/39
விம்முறு துயரமொடு விளிந்து உயிர் வைத்த
குய்ம் மனத்தாளர் குறை பிணம் காட்டி – இலாவாண:19/55,56
வெம் கனல் மீமிசை வைத்த வெண்ணெயின் – மகத:7/69
ஆசு_இல் அணி இழை தீ அயல் வைத்த
மெழுகு செய் பாவையின் உருகும் நெஞ்சினள் – மகத:7/88,89
மன்னவன் வைத்த சில் மென் போதுடன் – மகத:9/75
அருகு சிறை மருங்கின் ஒரு மகள் வைத்த
புது மலர் பிணையலும் புனை நறும் சாந்தமும் – மகத:9/119,120
பதுமாபதி-வயின் பசைந்து அவள் வைத்த
கோதையும் சாந்தும் கொண்டு அணிந்தனை என – மகத:9/171,172
மற்று இவள் வைத்த மாலையும் சாந்தமும் – மகத:10/6
தள்ளா வென்றி தம் இறை வைத்த
விள்ளா விழு பொருள் உள் வழி உணரா – மகத:12/40,41
வாயிலுள் வைத்த வண்ண சிவிகை – மகத:13/42
வருத்தமானன் மனை-வயின் வைத்த பின் – வத்தவ:4/72
நல் நுதல் மாதரை தாயொடு வைத்த
பொன் அணி கோயில் கொண்டனர் புகவே – வத்தவ:7/200,201
ஆணை வைத்த அன்னோர் பிறரும் – வத்தவ:10/83
வைத்த காட்சியும் வல்லிதின் கூறி – நரவாண:3/172

TOP


வைத்தது (3)

காட்டி வைத்தது ஓர் கட்டளை போல – உஞ்ஞை:33/113
ஊர் அங்காடி உய்த்து வைத்தது போல் – உஞ்ஞை:38/56
செல்வ அல்குல் தீட்டி வைத்தது போல் – வத்தவ:16/37

TOP


வைத்ததை (1)

வைத்ததை இகழ்ந்து மறப்பது பொருள் என – வத்தவ:13/123

TOP


வைத்தலின் (3)

கடனா வைத்தலின் கை புனைந்து இயற்றி – மகத:9/129
ஏறல் நன்று என கூறி வைத்தலின்
மணம் கமழ் மார்பன் மாட பேர் அறை – மகத:13/43,44
கன்னிமாடத்து முன் அறை வைத்தலின்
பகலே ஆயினும் பயிலாதோர்கள் – மகத:13/74,75

TOP


வைத்தலும் (1)

பறந்து செல் சிம்புள் பையென வைத்தலும்
கயல் ஏர் கண்ணி துயில் ஏற்று எழவே – இலாவாண:11/65,66

TOP


வைத்தவும் (1)

பற்றா மன்னன் படைத்தவும் வைத்தவும்
உற்று அவள் அறியும் உழையரின் தெளிந்தேன் – வத்தவ:13/22,23

TOP


வைத்தனள் (1)

வழுக்கு_இல் சேக்கையுள் வைத்தனள் வணங்கி – வத்தவ:7/80

TOP


வைத்தனளாய் (1)

மானனீகையை காவல் வைத்தனளாய்
மாம் தளிர் மேனியும் காஞ்சனமாலையொடு – வத்தவ:13/218,219

TOP


வைத்தனளால் (1)

கை வைத்தனளால் கனம்_குழை யாழ் என் – உஞ்ஞை:34/247

TOP


வைத்தனன் (2)

தருப்பணம் செருமி தன் உயிர் வைத்தனன்
யூகி என்பது உணர கூறி – இலாவாண:9/239,240
தான் வைத்தனன் போல் காட்டலின் தருசகன் – மகத:12/45

TOP


வைத்து (14)

மாண் மொழி குருசில் ஆணை வைத்து அகம் புக – உஞ்ஞை:37/224
காமர் பலகை கதழ வைத்து இயற்றி – உஞ்ஞை:42/33
படு கரை மருங்கில் பாங்குற வைத்து
வரு திரை புகூஉம் வருணன் போல – உஞ்ஞை:53/83,84
ஒழுக்க முறை அறிந்து வழக்கு இலள் வைத்து
முடி கலம் முதலா முறைமுறை தோன்றும் – இலாவாண:5/178,179
மாண வைத்து மகிழ்ந்தனன் கூடி – இலாவாண:9/29
ஆணை வைத்து அகன்றனள் யாணர் அமைத்த இஃது – மகத:6/144
தன்-பால் வைத்து தானும் தன்னுடை – மகத:8/95
ஒளி பெற வைத்து அவண் ஒளித்த பின்னர் – மகத:9/10
செறி விரல் அங்கையின் மறைவு கொள வைத்து
கழுநீர் நறும் போது உளர்த்துபு பிடித்து – மகத:9/136,137
மொய்த்து அலர் தாரோன் வைத்து நனி நோக்கி – மகத:14/98
ஒடுங்கி நீர் இருக்க என ஒளித்தனன் வைத்து
தாரகாரியை தரீஇ நீ சென்று – மகத:26/4,5
நெய்த்தோர் பட்டிகை ஆக வைத்து
பத்து ஊர் கொள்க என பட்டிகை கொடுத்து – வத்தவ:1/12,13
கை வைத்து ஒழிய கடந்து சென்று உப்பால் – நரவாண:1/190
மாசு_இல் பந்து அறிவு பட மேல் வைத்து ஆண்டு – நரவாண:8/124

TOP


வைத்தும் (1)

கோங்கம் தட்டம் வாங்கினர் வைத்தும்
செப்பு அடர் அன்ன செம் குழை பிண்டி – இலாவாண:14/24,25

TOP


வைத்துழி (1)

வைத்துழி காட்டும் வாய் மொழி விச்சை – மகத:12/20

TOP


வைது (1)

எய்த சென்று வைது அவண் விலக்கி – உஞ்ஞை:40/94

TOP


வைந்நுதி (1)

வைந்நுதி அமைந்த வயிர வாயில் – இலாவாண:6/103

TOP


வைப்ப (1)

அழல் நிலை அத்தத்து அசைந்து உயிர் வைப்ப
தடம் பெரும் கண்ணியொடு நடந்தனர் போந்து – இலாவாண:9/129,130

TOP


வைப்பது (1)

அவி இடப்படின் என் ஆர் உயிர் வைப்பது
கடிவோர் இல்லை முடிகுவென் இன்று என – உஞ்ஞை:40/287,288

TOP


வைப்பில் (1)

பழன வைப்பில் பாஞ்சாலராயன் – வத்தவ:8/42

TOP


வைய (7)

வைய நிரையும் வய பிடி ஒழுக்கும் – உஞ்ஞை:38/42
வைய புறத்தொடு கை புனைந்து இயற்றி – உஞ்ஞை:42/31
மாண் வினை வைய மனத்தின் ஒய்ப்ப – இலாவாண:8/178
வைய வலவன் வந்தனன் குறுகி – மகத:6/3
மஞ்சு விரித்து அன்ன வைய வாயில் – மகத:6/5
வைய கஞ்சிகை வளி முகந்து எடுக்க அ – மகத:9/15
நயந்து வந்து இறைஞ்சிய வைய தலைவனை – நரவாண:5/5

TOP


வையக (4)

வான் உறை உலகினும் வையக வரைப்பினும் – உஞ்ஞை:38/263
வையக வரைப்பின் வத்தவர் இறைவற்கு – உஞ்ஞை:46/130
வையக விழவில் தானும் செய்கையின் – மகத:22/187
வாய்ந்த வைகறை வையக வரைப்பின் – வத்தவ:5/65

TOP


வையகத்து (4)

கையகம் புக்கது அன்றி இ வையகத்து
அறத்தோடு புணர்ந்த துறை புனல் ஆட்டத்து – உஞ்ஞை:47/116,117
வையகத்து இயங்கும் வெய்யவன் ஊரும் – இலாவாண:8/172
வையகத்து உயர்ந்தோர் வாய் மொழி ஆதலின் – இலாவாண:17/41
இரும் கண் வையகத்து ஏந்தலும் உரியன் – நரவாண:8/141

TOP


வையகம் (4)

வையகம் அறிய கையகம் புக்கு – உஞ்ஞை:36/105
முற்று நீர் வையகம் முழுதும் உவப்ப – உஞ்ஞை:49/78
வனப்பு எடுத்து உரைஇ வையகம் புகழினும் – வத்தவ:12/162
வாழ்க நம் கோமான் வையகம் எல்லாம் – நரவாண:7/45

TOP


வையத்தின் (1)

மேதகு வையத்தின் மெல்லென இழிந்து – மகத:6/89

TOP


வையத்து (15)

வையத்து அவளொடும் வயந்தகன் கேட்ப – உஞ்ஞை:35/175
எவ்வம் மறைத்தல் வேண்டி வையத்து
வலிதின் தந்த வால் வளை பணை தோள் – உஞ்ஞை:35/241,242
ஏறிய வையத்து எடுத்த கஞ்சிகை – உஞ்ஞை:38/185
வையத்து ஏனோர் வல்லர் அல்லா – உஞ்ஞை:48/103
கோடித்து அன்ன கோடு சால் வையத்து
மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ – இலாவாண:8/185,186
அரும் பொறி வையத்து கரந்து அகத்து ஒடுங்கி – இலாவாண:10/31
பெரும் பொறி வையத்து இருந்து யாப்புறீஇ – மகத:5/49
தெய்வ தானம் புல்லென வையத்து
இலங்கு இழை மாதர் ஏற்ற ஏறி – மகத:6/129,130
வையத்து இருப்ப மருங்குல் நொந்தது-கொல் – மகத:8/12
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர் – மகத:21/50
அறை கடல் வையத்து ஆன்றோர் புகழ – வத்தவ:8/118
வையத்து உயர்ந்தோர் வழக்கால் வத்தவ – வத்தவ:15/70
ஏம வையத்து இயல்பு அன்று ஆயினும் – வத்தவ:15/72
இமிழ் திரை வையத்து ஏயர் பெருமகன் – வத்தவ:17/66
வசை தீர் வையத்து நகையது ஆதலின் – நரவாண:1/234

TOP


வையம் (29)

பேர் இயல் வையம் பின் செல அருளி – உஞ்ஞை:32/91
கடிது இயல் வையம் கவ்வையின் ஏற்றி – உஞ்ஞை:35/151
மரத்தின் இயலா திரு தகு வையம்
முத்த மாலை முகம் மிசை அணிந்து – உஞ்ஞை:36/30,31
தார் அணி வையம் தலைக்கடை நிறீஇ – உஞ்ஞை:38/208
வதுவை வையம் ஏறினள் போல – உஞ்ஞை:38/213
தாயொடு வந்த தலை பெரு வையம்
வாயின் முற்றத்து வயங்கு_இழை ஏற – உஞ்ஞை:38/239,240
பண்ணிய வையம் பள்ளி புகுக என – உஞ்ஞை:38/245
வையம் தரூஉம் வயவர் அரவமும் – உஞ்ஞை:41/108
செய்யான் ஆயின் வையம் இழக்கும் – உஞ்ஞை:43/80
வையம் பூட்டி வழிவரல் விரைந்து என் – உஞ்ஞை:54/127
கண்ணிய செலவின் கஞ்சிகை வையம்
கண்ணி சூட்டி கடை மணை பூட்டி – உஞ்ஞை:56/194,195
வண்ண மகளிரொடு வையம் முந்துறீஇ – உஞ்ஞை:57/19
வாசவதத்தை வையம் ஏற – உஞ்ஞை:58/75
ஆணி வையம் ஆர் இருள் மறைய – இலாவாண:9/14
ஆணி வையம் அரும் பொறி கலக்கி – இலாவாண:9/28
பாண்டில் வையம் பண்ணி பாகன் – மகத:5/65
வையம் வந்து வாயில் நின்றமை – மகத:5/67
வாயில் போந்து வையம் ஏறின் – மகத:5/94
வாயில் புக்க பின் வையம் நிறீஇ – மகத:6/1
வனப்பு அமை வையம் தனக்கு மறை ஆகிய – மகத:7/47
வேறுபடு வனப்பின் விளங்கு_இழை வையம்
ஏறினம் ஆகி இள மர காவினுள் – மகத:8/21,22
புனை மாண் வையம் பொருக்கென தருக என – மகத:8/28
காப்பு உடை வையம் பண்ணி யாப்பு உடை – மகத:8/31
வாயில் நாடி வையம் நீக்கி – மகத:13/8
வாயில் சேர்வுற வையம் வைக்க என – மகத:13/16
வையம் காவலன் வத்தவர் பெருமகன் – மகத:22/94
அலை கடல் வையம் அறிய எங்கும் – மகத:27/218
வையம் போக்கி நவை_அறு நெஞ்சினன் – நரவாண:1/56
வையம் இயற்றிய கைவினையாளன் – நரவாண:5/3

TOP


வையமும் (7)

செண்ண சிவிகையும் தேரும் வையமும்
கண் ஆர் பிடிகையும் கட்டு அமை ஊர்தியும் – உஞ்ஞை:37/269,270
பிடியும் வையமும் வடிவு அமை பிடிகையும் – உஞ்ஞை:38/135
வையமும் தேரும் வகை வெண் மாடமும் – உஞ்ஞை:42/18
வையமும் சிவிகையும் கை புனை ஊர்தியும் – உஞ்ஞை:44/115
தேரும் வையமும் சிவிகையும் பண்டியும் – இலாவாண:12/35
படை கூழ் பண்டியும் பள்ளி வையமும்
நடை தேர் ஒழுக்கும் நல் கோட்டு ஊர்தியும் – மகத:24/36,37
ஐ_ஐந்து இரட்டி யவன வையமும்
ஒள் இழை தோழியர் ஓர் ஆயிரவரும் – வத்தவ:10/41,42

TOP


வையாக்கிரம் (1)

வனப்பொடு புணர்ந்த வையாக்கிரம் எனும் – வத்தவ:11/57

TOP


வையாது (1)

அடைத்தனிர் வையாது அகற்று-மின் கதவு என – மகத:27/198

TOP