Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூஉம் 2
கூஉய் 11
கூகை 2
கூசினள் 1
கூசுவென் 1
கூட்ட 2
கூட்டத்து 6
கூட்டத்துள்ளே 1
கூட்டம் 6
கூட்டமும் 2
கூட்டமொடு 2
கூட்டாளன் 1
கூட்டி 14
கூட்டிடம் 1
கூட்டிடை 1
கூட்டிய 3
கூட்டினளாகி 1
கூட்டினேன் 1
கூட்டு 23
கூட்டுநர் 2
கூட்டுபு 3
கூட்டும் 1
கூட்டுவனர் 1
கூட்டுள் 1
கூட்டொடு 1
கூட 5
கூடத்து 4
கூடம் 2
கூடமும் 2
கூடாது 2
கூடி 22
கூடிய 15
கூடியாங்கு 2
கூடியும் 2
கூடின் 1
கூடின 1
கூடினர் 1
கூடினர்க்கு 1
கூடினும் 1
கூடு 4
கூடுதல் 4
கூடுதற்கு 1
கூடுபு 1
கூடும் 3
கூடுமோ 1
கூடுவ 1
கூடுவது 1
கூடை 1
கூத்த 2
கூத்தரின் 1
கூத்தன் 1
கூத்தாடு 1
கூத்தி 1
கூத்தியர் 2
கூத்து 1
கூத்தும் 2
கூதாளத்து 1
கூதாளமும் 1
கூந்தல் 43
கூந்தலர் 7
கூந்தலும் 3
கூந்தலுள் 4
கூந்தலை 5
கூந்தலொடு 2
கூந்தற்கு 2
கூப்ப 1
கூப்பி 23
கூப்பிடு 1
கூப்பிய 6
கூப்பினும் 1
கூப்புதலானும் 1
கூப்புபு 3
கூப்பும் 1
கூப்புவனன் 1
கூம்-மின் 1
கூம்ப 1
கூம்பல் 1
கூம்பிய 1
கூம்பின் 1
கூம்பு 4
கூய் 1
கூர் 17
கூர்ந்த 2
கூர்ந்து 2
கூர்ப்பு 1
கூர்மையும் 1
கூர 8
கூரா 3
கூரி 1
கூரிய 1
கூரும் 2
கூல 4
கூலத்து 1
கூலம் 2
கூவ 1
கூவலும் 2
கூவி 2
கூவினள் 1
கூவினன் 1
கூவை 1
கூழ் 3
கூழினும் 1
கூழை 4
கூழையர் 2
கூழையும் 1
கூற்ற 3
கூற்றத்து 1
கூற்றத்தை 1
கூற்றம் 3
கூற்றமும் 1
கூற்றாக 1
கூற்றாய் 1
கூற்றாளனை 1
கூற்றிடம் 1
கூற்றினர் 1
கூற்றினையும் 1
கூற்று 19
கூற்றும் 2
கூற்றுவன் 1
கூற்றொடு 1
கூற்றோர் 1
கூற 34
கூறப்படாத 1
கூறலின் 2
கூறலும் 8
கூறவும் 1
கூறன்-மின் 1
கூறாக்கி 1
கூறாது 4
கூறாய் 1
கூறாயாயின் 1
கூறாள் 1
கூறி 99
கூறிப 1
கூறிய 31
கூறியது 1
கூறியாங்கு 1
கூறின் 2
கூறினள் 1
கூறினன் 4
கூறினும் 2
கூறினேன் 2
கூறினை 3
கூறு 22
கூறு-மதி 1
கூறு-மின் 2
கூறுகூறு 3
கூறுதல் 5
கூறுதற்கு 1
கூறுபட்டு 1
கூறுபட 2
கூறுபடல் 1
கூறும் 23
கூறும்-காலை 1
கூறுவர் 2
கூறுவன் 2
கூறுவனன் 1
கூறுவென் 7
கூறுவேன் 3
கூறை 2
கூன் 13
கூன்_மகட்கு 1
கூன்_மகள் 5
கூனல் 1
கூனி 1
கூனியை 2
கூனும் 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கூஉம் (2)

பைம் கிளி காணாது பயிர்ந்து நின் கூஉம்
அம் சொல் பேதாய் அருள் என்போரும் – உஞ்ஞை:33/170,171
நகரம் கூஉம் நாற்றம் நந்தி – உஞ்ஞை:49/122

TOP


கூஉய் (11)

அவன்-வயின் நீங்கி ஆயம் கூஉய்
மகள்-வயின் புக்கு மம்மர் நோய் நீக்கி – உஞ்ஞை:36/348,349
வத்தவர் இறைவனை வருக என கூஉய்
பொன் கோட்டு அம்பலம் பொலிய ஏறி – உஞ்ஞை:37/184,185
பயில் நூலாளரை பயிர்வனர் கூஉய்
கவர்வனர் போல காதலின் உய்த்து – உஞ்ஞை:39/53,54
துன்ன கூஉய் மின்_இழை பக்கம் – உஞ்ஞை:47/58
பைம் கழல் மறவர் பதின்மரை கூஉய்
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர் – மகத:26/17,18
குன்ற சாரல் குறும்பரை கூஉய்
அடவியுள் வீழ்ந்த கடு நடை இரும் பிடி – வத்தவ:3/9,10
சத்தியகாயன் மக்களை கூஉய்
தம் நிலைக்கு எல்லாம் தலைமை இயற்றி – வத்தவ:9/56,57
பதுமாபதியை வருக என கூஉய்
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர் – வத்தவ:14/82,83
ஏவல் சிலதியை ஆவயின் கூஉய்
தேவி-கண் போக்க திறத்து முன் கொண்டு – வத்தவ:14/113,114
மா தவன் கேட்டு தன் காதலி-தனை கூஉய்
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் பெருமாற்கு – வத்தவ:17/3,4
கொய்ம் மலர் படலை கோமுகன் கூஉய்
கை புனை வனப்பில் கணிகையர் சேரியில் – நரவாண:8/90,91

TOP


கூகை (2)

கொம்பர் மீமிசை கூகை வந்து உலாஅய் – மகத:14/152
வெருவ குழறிய விழி கண் கூகை
கடும் குரல் அறியாள் கதுமென நடுங்கினள் – மகத:22/151,152

TOP


கூசினள் (1)

வாசகம் உணரா கூசினள் ஆகி – வத்தவ:13/97

TOP


கூசுவென் (1)

யான் உரை செய்ய கூசுவென் தவ்வை – வத்தவ:14/89

TOP


கூட்ட (2)

கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும் – மகத:17/206
கூடிய கூட்ட குணம்-தனை நாடி – வத்தவ:8/99

TOP


கூட்டத்து (6)

மு குழி கூட்டத்து உட்பட ஓக்கி – இலாவாண:3/15
வல்லோர் வகுத்த செல்வ கூட்டத்து
ஆய் நல கம்மத்து அழகொடு புணர்ந்து – மகத:3/28,29
உரைக்கல் ஆகா உறு பொறி கூட்டத்து
புதவு அணி கதவின் பொன் நிரை மாலை – மகத:13/95,96
யாணர் கூட்டத்து யவன கைவினை – மகத:15/22
வல்லோன் வகுத்த நல் வினை கூட்டத்து
யவன பேழையுள் அடைந்தோர் ஏந்திய – மகத:22/212,213
தம் பொறி ஒற்றிய தச்சு வினை கூட்டத்து
செம்பொன் அணிகலம் செய்த செப்பும் – வத்தவ:10/45,46

TOP


கூட்டத்துள்ளே (1)

கூட்டத்துள்ளே கூறுபட போக்கி – மகத:25/124

TOP


கூட்டம் (6)

வேட்டுவர் அகல கூட்டம் எய்தி – இலாவாண:9/180
இலக்கண கூட்டம் இயல்பட தெரியா – இலாவாண:15/123
கூட்டம் பெருக்கி மீட்டு வந்தனரெனின் – மகத:19/50
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர் – வத்தவ:8/2
கூட்டம் எய்தும் நாளும் இது என – வத்தவ:10/165
தாழ் துணை தலை பொறி கூட்டம் போல – வத்தவ:10/172

TOP


கூட்டமும் (2)

உசிர் பெரும் தோழன் உண்மையும் கூட்டமும்
கண் அகன்று உறைந்த கடி நாள் அமையத்து – இலாவாண:13/51,52
கண்ணின் கூட்டமும் அன்றி நம்முள் – மகத:9/142

TOP


கூட்டமொடு (2)

சந்தன பலகை சதுர கூட்டமொடு
மந்திர சாலை மருங்கு அணி பெற்ற – இலாவாண:15/7,8
இனைய கூட்டமொடு எண்ணாது அகம் புக்கு – மகத:18/84

TOP


கூட்டாளன் (1)

மண்_கூட்டாளன் மனை-வயின் மறையவும் – உஞ்ஞை:46/332

TOP


கூட்டி (14)

கருப்பு கட்டியொடு தருப்பணம் கூட்டி
நெய் சூட்டு இயன்ற சிறு பல் உண்டி – உஞ்ஞை:40/129,130
தண் நறும் காழ் அகில் நுண் அயிர் கூட்டி
அம் புகை தவழ்ந்த அரக்கு வினை மாடமும் – உஞ்ஞை:43/178,179
ஆத்திரை தருப்பணம் மாத்திரை கூட்டி
உண்புழி விக்கி கண் புக செருமி – இலாவாண:9/251,252
வேண்டிய அளவில் காண் தக கூட்டி
கரந்து நிறம் எய்தும் அரும்_பெறல் யோகம் – இலாவாண:20/40,41
வண்ண படாஅம் கண்ணுற கூட்டி
பைம் கருங்காலி செம் களி அளைஇ – மகத:14/80,81
அடல் தகை மன்னர் படை தொகை கூட்டி
சங்கம் ஆகி வெம் கணை வீக்கமொடு – மகத:17/37,38
வத்தவர் பெருமகன் வண்ணம் கூட்டி
சித்திர கிழி மிசை வித்தகமாக – மகத:22/143,144
ஆசான் முன் நின்று அமைய கூட்டி
தீ மாண்புற்ற திரு தகு பொழுதில் – மகத:22/264,265
தட கை கூட்டி தாங்கா உவகையொடு – மகத:24/68
சங்க மன்னர்க்கு தம் படை கூட்டி
விரைந்தனர் வருக என நினைந்து விட்டதுவும் – மகத:25/41,42
செம் தீ ஈமம் செறிய கூட்டி
அகணி ஆகிய ஆய் பொருள் கேள்வி – மகத:26/28,29
பதுமாபதியொடு வதுவை கூட்டி
படை துணை அவனா பதி-வயின் பெயர்ந்த பின் – வத்தவ:8/61,62
வயங்கு இழை மாதரொடு வதுவை கூட்டி
பெரும் கடி சிறப்பும் பெயர்த்து ஒருங்கு அருளி – வத்தவ:9/18,19
பூம் தாதோடு சாந்துற கூட்டி
ஒடியா விழு சீர் உதயணன் ஓலை – வத்தவ:13/62,63

TOP


கூட்டிடம் (1)

மீட்டிடம் பெற்று கூட்டிடம் கூடி – உஞ்ஞை:57/75

TOP


கூட்டிடை (1)

கூட்டிடை பட்ட கோள் புலி போல – நரவாண:3/10

TOP


கூட்டிய (3)

தன்னில் கூட்டிய தானை செல்வமொடு – உஞ்ஞை:51/37
கோமாற்கு உணர்த்தி கூட்டிய வந்தேம் – மகத:10/16
தோட்டமும் வாவியும் கூட்டிய நல் வினை – வத்தவ:2/14

TOP


கூட்டினளாகி (1)

கூட்டினளாகி மீட்டு அவண் மொழிவோள் – வத்தவ:13/35

TOP


கூட்டினேன் (1)

கொடை தகு குமரரை கூட்டினேன் இசைய – வத்தவ:8/63

TOP


கூட்டு (23)

கொக்கு வாய் அன்ன கூட்டு அமை விரலினன் – உஞ்ஞை:42/248
அரக்கு ஊட்டு அம் புகர் மர கூட்டு யானையை – உஞ்ஞை:55/30
புர கூட்டு அமைந்த அரக்கு ஊட்டு அரத்தம் – உஞ்ஞை:55/99
பசும் காய் தெவிட்டும் பல்_கூட்டு_அரத்தமும் – இலாவாண:2/100
அமைதிக்கு ஒப்ப அளந்து கூட்டு அமைத்த – இலாவாண:3/80
முக்கூட்டு அமிர்தும் அ கூட்டு அமைத்து – இலாவாண:4/91
பின் கூட்டு அமைவும் பிறவும் கூறி – இலாவாண:17/16
கல் கூட்டு எய்தி கரந்தனன் இருப்ப – இலாவாண:17/17
கடும் கூட்டு அமைத்து கை-வயின் கொண்ட – இலாவாண:18/107
கொள்கை கூட்டு அழல் உள்ளுற மூட்டி – இலாவாண:19/61
உளர்ந்தும் ஊறியும் அளந்து கூட்டு அமைத்த – இலாவாண:19/70
கோலம் ஆக கொண்டு கூட்டு அமைத்து – மகத:1/98
உள் கூட்டு அமைந்த சில் கூட்டு அல்குலர் – மகத:1/106
உள் கூட்டு அமைந்த சில் கூட்டு அல்குலர் – மகத:1/106
சாந்து வினை கம்மியன் கூட்டு வினை அமைத்து – மகத:1/196
குயில் புணர் மகிழ்ச்சி அயில் கூட்டு அமைத்த – மகத:6/15
கூட்டு அமை நறும் புகை ஊட்டு அமைத்து இயற்றி – மகத:9/60
கூட்டு விரல் அகற்றி கொழும் கயல் மழை கண் – மகத:22/91
கூட்டு அமை வனப்பின் கோடபதி குரல் – வத்தவ:3/125
தோட்டு வினை வட்டித்து கூட்டு அரக்கு உருக்கி – வத்தவ:10/94
கூட்டு அமை தீ முதல் குறையா நெறிமையின் – வத்தவ:17/113
மு_கூட்டு_அரத்த ஒண் பசை விலங்கி – நரவாண:1/205
நெய் கூட்டு இலங்கு நித்திலம் நிகர்த்து – நரவாண:1/206

TOP


கூட்டுநர் (2)

கோலொடு தளர்ந்து கூட்டுநர் இன்றி – உஞ்ஞை:43/159
காட்டு என கமர்ந்து கூட்டுநர் அமைத்த – இலாவாண:2/102

TOP


கூட்டுபு (3)

கொழு மலர் தட கையில் கூட்டுபு கொண்டு – உஞ்ஞை:55/3
தோட்டி கொளீஇ கூட்டுபு நிரைத்த – மகத:19/175
குரவர் போல கூட்டுபு கொடுப்ப – வத்தவ:17/112

TOP


கூட்டும் (1)

சீரின் கூட்டும் சிறப்பு முந்துறீஇ – வத்தவ:15/93

TOP


கூட்டுவனர் (1)

கொங்கு அணி மலரின் கூட்டுவனர் உய்த்து – மகத:12/87

TOP


கூட்டுள் (1)

கோல குறுக்கை வாள் கூட்டுள் கழீஇ – உஞ்ஞை:46/262

TOP


கூட்டொடு (1)

தீட்டு அமை கூர் வாள் கூட்டொடு பொலிந்த – உஞ்ஞை:42/22

TOP


கூட (5)

கூட கூம்பின் நீள் திரள் ஏறி – உஞ்ஞை:40/72
குங்கும கொழும் சேறு கூட குழைத்திட்டு – உஞ்ஞை:40/223
கூப்புபு பிணித்த கூட பரப்பில் – இலாவாண:6/67
தம்பியர் கூட வெம்பிய வெகுட்சியின் – மகத:1/28
கொண்ட ஆர்ப்பொடு கூட எலிச்செவி – மகத:17/237

TOP


கூடத்து (4)

தமனிய கூடத்து தலை அளவு இயன்ற – உஞ்ஞை:33/102
முத்து காழ் தொடர்ந்த சித்திர கூடத்து
பவழ கொடும் காழ் பத்தி முகத்து அழுத்தி – உஞ்ஞை:34/136,137
துறை அமைத்து இயற்றிய குறைவு_இல் கூடத்து
அம் புகை மருங்கில் செம் சுடர் மழுங்க – உஞ்ஞை:42/83,84
நூல் இட்டு அமைத்த கோல கூடத்து
நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும் – உஞ்ஞை:58/55,56

TOP


கூடம் (2)

கூடம் குத்திய கொழும் காழ்க்கு ஏற்ப – உஞ்ஞை:38/249
கொடும் காழ் சோரினும் கூடம் ஊன்றிய – இலாவாண:10/162

TOP


கூடமும் (2)

ஒல்கா கூடமும் ஒருங்கு தலை பிணங்கி – இலாவாண:12/45
அறத்து இயல் கொட்டிலும் அம்பல கூடமும்
மற போர் கோழி மரபின் பொருத்தும் – மகத:4/18,19

TOP


கூடாது (2)

நீடிய பின்றை கூடாது தாங்கும் – இலாவாண:7/35
குறை கண்டருளுதல் கூடாது அன்றியும் – வத்தவ:14/101

TOP


கூடி (22)

தோழ மாக்கள் தொழுதியில் கூடி
பால குமரன் பணியின் ஒரு நாள் – உஞ்ஞை:35/25,26
செரு மிகும் தாமமொடு சேனையின் கூடி
மன்னவன் இருந்த தண் பொழில் காவில் – உஞ்ஞை:38/352,353
குரவை ஆயம் கூடி தூங்கினும் – உஞ்ஞை:46/182
கோப்பெருந்தேவியொடு கூடி முன் நின்று – உஞ்ஞை:48/86
மீட்டிடம் பெற்று கூட்டிடம் கூடி
கடிது செல் இயற்கை பிடி மிசை இருந்த – உஞ்ஞை:57/75,76
வாசவதத்தையொடு வதுவை கூடி
கோல நீள் மதில் கொடி கோசம்பி – இலாவாண:2/49,50
ஒவ்வா அணியினர் ஒப்ப கூடி
மண்ணக கிழவற்கு மண்ணு நீர் சுமக்கும் – இலாவாண:2/226,227
ஏந்திய சென்னி மாந்தர் கூடி
அறுகை புல்லினும் வாகை தளிரினும் – இலாவாண:5/68,69
மாண வைத்து மகிழ்ந்தனன் கூடி
மாண் முடி மன்னன் தோள் முதல் வினவி – இலாவாண:9/29,30
கோல கோயிலொடு குரம்பை கூடி
பலவும் மாவும் நல மா நாகமும் – இலாவாண:12/10,11
குழல் வாய் தும்பியும் குயிலும் கூடி
மழலை அம் பாடலின் மனம் பிணியுறீஇ – இலாவாண:13/24,25
குறிப்பு-வயின் வாராள் ஆயினும் கூடி
பொறி பூண் ஆகத்து புல்லுவனன் ஒடுக்கி – இலாவாண:16/65,66
செம்மலாளர் தம்முள் கூடி
ஒன்னா மன்னரை ஒட்டினமாதலின் – மகத:18/4,5
இருவரும் கூடி எலிச்செவி அரசன் – மகத:20/100
மிலைச்ச மன்னரும் கூடி தலைத்தலை – மகத:25/54
என்னொடு கூடி ஒருவன் ஆகி – மகத:25/154
கார் கடல் ஒலி என கலந்து உடன் கூடி
திமிரம் பாய்ந்த அமர் மயங்கு அமயத்து – மகத:27/105,106
எதிர்வரு தூதனொடு அதிர கூடி
சத்தியூதி முதலா சண்பையுள் – வத்தவ:4/93,94
அரும் திறல் வேந்தன் அமைவர கூடி
இருந்த பின்றை நிகழ்ந்தது கூறு என – வத்தவ:6/2,3
ஊடியும் உணர்ந்தும் கூடி விளையாடியும் – வத்தவ:13/196
தலைப்பெருந்தேவியும் தந்தையும் கூடி
குல பெரும் தேவியா கோடி விழு நிதி – நரவாண:8/148,149
கூடி காணா மாடத்து ஓங்கிய – நரவாண:8/33

TOP


கூடிய (15)

குலத்தினும் குணத்தினும் கூடிய அன்பினும் – உஞ்ஞை:32/45
நம்பியர் கூடிய நாளவை மருங்கில் – உஞ்ஞை:39/1
புரை மீன் கூடிய பொழுது இயல் கூற – உஞ்ஞை:39/7
குன்று கண் கூடிய குழாஅம் ஏய்ப்ப – இலாவாண:7/4
பல் வழி கூடிய படிய ஆகி – மகத:3/40
ஒளி கண் கூடிய நளி மதி போல – மகத:3/82
கூடிய குருசில் பாடலின் மகிழ்ந்து – மகத:15/61
கூடிய கிளைமை குணம் பல கூறி – மகத:24/11
கூடிய வந்தனர் கொணர்-மின் சென்று என – மகத:26/20
குளிர் புனல் பேரியாறு கூடிய எல்லையுள் – மகத:27/11
வந்து கண் கூடிய வருடகாரன் – மகத:27/15
கூடிய கூட்ட குணம்-தனை நாடி – வத்தவ:8/99
கூடிய வேட்கையின் ஒருவர்க்கொருவர் – வத்தவ:13/174
தீ வலம் செய்து கூடிய பின்றை – வத்தவ:14/181
கூடிய கொழுநன் கொழும் குடர் மிசைகுற – நரவாண:1/220

TOP


கூடியாங்கு (2)

கோல பெரும் கடல் கூடியாங்கு
இசைந்த வனப்பின் ஏயர் மகற்கும் – மகத:6/60,61
தம்முள் தாமே கூடியாங்கு
வனப்பிற்கு ஒத்த இனத்தினள் ஆகலின் – வத்தவ:17/90,91

TOP


கூடியும் (2)

ஆடியும் பாடியும் கூடியும் பிரிந்தும் – இலாவாண:12/152
ஊடியும் கூடியும் நீடு விளையாடியும் – வத்தவ:13/175

TOP


கூடின் (1)

புணர கூடின் போகமும் இனிது என – இலாவாண:7/91

TOP


கூடின (1)

ஓடின தடம் கண் கூடின புருவம் – வத்தவ:12/228

TOP


கூடினர் (1)

குறிப்பு அறிந்து அணிந்து கூடினர் ஒருசார் – இலாவாண:12/110

TOP


கூடினர்க்கு (1)

குறை வினை கோலம் கூடினர்க்கு அணங்காய் – இலாவாண:7/44

TOP


கூடினும் (1)

துறக்கம் கூடினும் துறந்து இவண் நீங்கும் – உஞ்ஞை:40/88

TOP


கூடு (4)

கூடு மதி அன்ன சேடு அணி திரு முகத்து – இலாவாண:15/79
கூடு குலை கமுகின் கொழு நிழல் அசைந்து – மகத:2/24
குறும் புழை எல்லாம் கூடு எழு கொளீஇ – மகத:25/12
கூடு மதி முகத்திடை புருவமும் கண்ணும் – வத்தவ:12/187

TOP


கூடுதல் (4)

ஆற்ற வெவ் அழல் அவிப்ப கூடுதல்
வயிர தோட்டி அன்றியும் பயிரின் – உஞ்ஞை:42/239,240
கூடுதல் வலித்த கொள்கைய போல – இலாவாண:3/98
வாயில் கூடுதல் வராது இவண் வந்து என – இலாவாண:3/105
கூடுதல் ஆனா குறிப்பு முந்துறீஇ – இலாவாண:13/77

TOP


கூடுதற்கு (1)

நாடும் நகரமும் கூடுதற்கு அருளி – இலாவாண:3/103

TOP


கூடுபு (1)

குறும் தார் அக-வயின் கூடுபு முயங்கி – மகத:9/78

TOP


கூடும் (3)

கையும் கூடும் காலம் இது என – உஞ்ஞை:33/11
பந்தும் பாவையும் பைம் கிளி கூடும்
யாழும் குழலும் அரி சிறுபறையும் – உஞ்ஞை:38/173,174
அரசியல் ஆக்கம் கூடும் ஆயினும் – இலாவாண:10/171

TOP


கூடுமோ (1)

கொண்டனை போகின் கூடுமோ நினக்கு என – உஞ்ஞை:40/291

TOP


கூடுவ (1)

ஒன்றி நின்று இயங்கா சென்று இடை கூடுவ
மாயம் காட்டுநர் மறைய புணர்த்த – உஞ்ஞை:38/341,342

TOP


கூடுவது (1)

பெரு வலி கிளையில் கூடுவது போல – உஞ்ஞை:43/97

TOP


கூடை (1)

கல் இடு கூடை பல் இடத்து இயற்றி – மகத:25/22

TOP


கூத்த (2)

கூத்த பள்ளி குச்சர குடிகையுள் – வத்தவ:13/147
கொற்றவன்-தன்னொடு கூத்த பள்ளியுள் – வத்தவ:14/4

TOP


கூத்தரின் (1)

மரக்கால் கூத்தரின் மறிந்தனர் விழவும் – உஞ்ஞை:46/44

TOP


கூத்தன் (1)

குசை தொழில் கூத்தன் விசைத்து நனி விட்ட – உஞ்ஞை:46/27

TOP


கூத்தாடு (1)

கூத்தாடு இடமும் கொழும் சுதை குன்றமும் – வத்தவ:15/109

TOP


கூத்தி (1)

கூத்தி மருங்கில் குணம் பழிப்போரும் – உஞ்ஞை:35/164

TOP


கூத்தியர் (2)

கூத்தியர் இருக்கையும் சுற்றியதாக – வத்தவ:3/42
ஏத்தியலாளரும் கூத்தியர் குழுவும் – நரவாண:6/88

TOP


கூத்து (1)

நீர் துறை கரையினும் கூத்து உறை சேரியும் – இலாவாண:8/69

TOP


கூத்தும் (2)

கோயில் கூத்தும் கொடும்_குழை ஒழிக என – உஞ்ஞை:36/39
வாயில் கூத்தும் சேரி பாடலும் – உஞ்ஞை:37/88

TOP


கூதாளத்து (1)

நறும் கூதாளத்து நாள்_மலர் அளைஇ – மகத:1/191

TOP


கூதாளமும் (1)

பைம் கூதாளமும் வெண் பூம் சுள்ளியும் – இலாவாண:12/22

TOP


கூந்தல் (43)

கொடும் பூண் மார்பில் கூந்தல் பரப்பி – உஞ்ஞை:37/244
குடையும் கொடியும் கூந்தல் பிச்சமும் – உஞ்ஞை:38/26
அவிழ்ந்த கூந்தல் அங்கையின் அடைச்சி – உஞ்ஞை:38/35
கூந்தல் நறு மண் சாந்தொடு கொண்டு – உஞ்ஞை:40/28
கொழுநன் கூந்தல் கொண்டு என கருதி – உஞ்ஞை:40/42
அவிழ் குரல் கூந்தல் அங்கை அடைச்சி – உஞ்ஞை:40/172
கார் இரும் கூந்தல் கையின் ஏந்தி – உஞ்ஞை:40/195
மின் இரும் கூந்தல் மேதக புனைந்த – உஞ்ஞை:40/349
கார் இரும் கூந்தல் நீர் அற வாரி – உஞ்ஞை:42/146
நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி – உஞ்ஞை:42/201
கட்டு அணி கூந்தல் கள்ள மங்கையர் – உஞ்ஞை:43/116
கூந்தல் பிச்சமும் கோணா வட்டமும் – உஞ்ஞை:46/62
கூந்தலும் கூந்தல் வேய்த்த கோதையும் – உஞ்ஞை:48/77
தாழ் இரும் கூந்தல் தளிர் இயல் நடுங்கி – உஞ்ஞை:56/64
அம் மென் கூந்தல் அரிவையர் கம்பலும் – இலாவாண:2/173
கூந்தல் சோர பூம் துகில் அசைஇ – இலாவாண:5/118
நெட்டு இரும் கூந்தல் நீர் அற வாரி – இலாவாண:5/172
பூ இரும் கூந்தல் புல்லென விரிய – இலாவாண:10/114
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற – இலாவாண:12/109
கட்டு அழல் கதிய நெட்டு இரும் கூந்தல்
புதை எரி பற்ற புன்சொல் கேட்ட – இலாவாண:18/70,71
மழை கால் அன்ன மணி இரும் கூந்தல்
அழல் புகை சூழ அஞ்சுவனள் நடுங்கி – இலாவாண:19/33,34
நல் நுதல் மாதர் பின் இரும் கூந்தல்
பொன் அரி மாலாய் பொருள் இலை என்றும் – இலாவாண:19/74,75
போது அணி கூந்தல் பொன் பூம் பாவை – இலாவாண:19/97
சிதர் மலர் கூந்தல் செம் தீ கவர – மகத:1/156
கூந்தல் அணிந்த ஏந்து நுதல் சென்னி – மகத:3/37
புது மலர் கோதை புனை இரும் கூந்தல்
பதுமாபதி எனும் பைம் தொடி கோமகள் – மகத:5/26,27
கார் இரும் கூந்தல் நீர் அற புலர்த்தி – மகத:9/63
மணி இரும் கூந்தல் மாசு கண் புதைப்ப – மகத:9/153
தாழ் இரும் கூந்தல் தோழியை சேர்ந்து இவன் – மகத:14/240
நலம் கிளர் நறு நுதல் நாறு இரும் கூந்தல்
மாசு_இல் கற்பின் வாசவதத்தை – வத்தவ:5/96,97
வடு வாழ் கூந்தல் வாசவதத்தையொடு – வத்தவ:6/55
கூந்தல் முதலா பூம் புறம் நீவி – வத்தவ:7/47
பிரிவிடை கொண்ட பின் அணி கூந்தல்
செரு அடு குருசில் தாள் முதல் திவள – வத்தவ:7/211,212
யாற்று அறல் அன்ன கூந்தல் யாற்று – வத்தவ:11/64
மணம் கமழ் கூந்தல் வகை பெற முடித்தும் – வத்தவ:12/117
வரு முலை துளும்பவும் கூந்தல் அவிழவும் – வத்தவ:12/126
வரி குழல் கூந்தல் வசுந்தரி-தன் மகள் – வத்தவ:12/146
சுழன்றன தாமம் குழன்றது கூந்தல்
அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை – வத்தவ:12/225,226
பூண் திகழ் கொங்கை புயல் ஏர் கூந்தல்
மாண் குழை புது நலம் காண் தக சென்ற – வத்தவ:12/265,266
தேன் தேர் கூந்தல் தேவியர் பலருளும் – வத்தவ:13/43
தேன் தேர் கூந்தல் தான் அது நோக்கி – வத்தவ:14/77
தண்ணென் கூந்தல் தன் கையின் ஆற்றி – வத்தவ:14/158
பூ விரி கூந்தல் பொங்கு இள வன முலை – வத்தவ:17/108

TOP


கூந்தலர் (7)

நரை இடை படர்ந்த நறு மென் கூந்தலர்
திரை உடை கலுழி திறவதின் ஆடி – உஞ்ஞை:41/99,100
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர் – உஞ்ஞை:42/193
தாது கொண்டிருந்த தாழ் இரும் கூந்தலர்
கரும் கேழ் உண்கண் கலக்கமொடு அலமர – உஞ்ஞை:43/141,142
குறைந்த கூந்தலர் கோசிகம் போல – உஞ்ஞை:43/154
சூர் உறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர்
புதல்வரை ஒழிந்து யாம் போந்தனமே என – உஞ்ஞை:44/22,23
சோரும் கூந்தலர் வாரும் கண்ணினர் – உஞ்ஞை:44/38
குவளை கோதை கொண்ட கூந்தலர்
தவளை கிண்கிணி ததும்பு சீறடியர் – உஞ்ஞை:46/245,246

TOP


கூந்தலும் (3)

கூந்தலும் கூந்தல் வேய்த்த கோதையும் – உஞ்ஞை:48/77
மணம் கமழ் கூந்தலும் பிறவும் திருத்தி – வத்தவ:12/40
சேடு அமை செவியும் சில் இரும் கூந்தலும்
ஒல்கு மயிர் ஒழுக்கும் அல்குல் பரப்பும் – நரவாண:8/107,108

TOP


கூந்தலுள் (4)

நானம் தோய்த்த நறு மென் கூந்தலுள்
ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி – உஞ்ஞை:40/265,266
குறு நெறி கொண்ட கூழை கூந்தலுள்
நறு மலர் கோதை நான்றுவந்து அசைஇ – உஞ்ஞை:46/221,222
அவிழ் பூம் கூந்தலுள் மகிழ் துயில்வு எய்தி – மகத:1/179
குடுமி கூந்தலுள் நறு நெய் நீவி – வத்தவ:2/31

TOP


கூந்தலை (5)

சில்_இரும்_கூந்தலை மெல்லென நடாஅய் – உஞ்ஞை:56/46
தாழ் இரும் கூந்தலை தணப்ப நின்றது ஓர் – இலாவாண:17/46
நீலத்து அன்ன நெறி இரும் கூந்தலை
பால் வகை புணர்க்கும் படிமை-கொல் என – மகத:21/79,80
நாறு இரும் கூந்தலை மாறி பிறந்துழி – வத்தவ:7/187
சில்லென் கூந்தலை மெல்லென வாரி – வத்தவ:16/11

TOP


கூந்தலொடு (2)

கோலம் கொண்ட கூந்தலொடு குளித்து – உஞ்ஞை:42/129
பின் இரும் கூந்தலொடு பிறழ் கலம் திருத்தி – உஞ்ஞை:46/198

TOP


கூந்தற்கு (2)

நகை பூம் கோதையொடு நான்ற கூந்தற்கு
மிகை கை காணாது புகை தீ எறிப்ப – உஞ்ஞை:43/148,149
புணர் வெம் காதலர் புனை இரும் கூந்தற்கு
இணர் இவை அணி-மின் என்று இரந்தனர் நீட்ட – இலாவாண:12/84,85

TOP


கூப்ப (1)

நகை நய குறிப்பொடு தகை விரல் கூப்ப
முற்று_இழை பயிற்றிய முன் பெரு நல் யாழ் – வத்தவ:5/18,19

TOP


கூப்பி (23)

திரு முகை மெல் விரல் கூப்பி நுந்தை – உஞ்ஞை:33/166
காந்தள் அழித்த கை முகிழ் கூப்பி
கஞ்சிகை திறந்த பொழுதின் அன்று தன் – உஞ்ஞை:34/239,240
குவி பூம் கை_இணை கூப்பி திரு குழல் – உஞ்ஞை:35/206
அணங்கு உறை மெல் விரல் வணங்கினள் கூப்பி
இறைஞ்சிய மாதரை எடுத்தனன் தழீஇ – உஞ்ஞை:37/161,162
படை ஏர் கண்ணியர் பணிந்து கை கூப்பி
புடை வீங்கு இள முலை பூண் பொறை ஆற்றாது – உஞ்ஞை:42/125,126
தொகு விரல் கூப்பி தொழுவனள் ஆகி – உஞ்ஞை:46/173
தட கை கூப்பி நின் அடி திசைக்கு இறைஞ்ச – உஞ்ஞை:47/96
செவ்விதின் தேர்ந்து கைவிரல் கூப்பி
தோழி காஞ்சனை தோன்ற கூறி – உஞ்ஞை:53/126,127
அந்தி கூப்பி தென்_புலக்கு இறைஞ்சி – உஞ்ஞை:55/8
கொழு முகை செம் விரல் போது என கூப்பி
எழு முறை இறைஞ்சுக என்று ஏத்துவனர் காட்ட – இலாவாண:3/65,66
பொன்_தொடி நுதல் மிசை புனை விரல் கூப்பி
மன்னிய உலகினுள் நின் இயல்பு ஆக – இலாவாண:3/127,128
கட்டிய கச்சையள் கைவிரல் கூப்பி
நெட்டு இரும் கூந்தல் நீர் அற வாரி – இலாவாண:5/171,172
தெய்வதை அமர்ந்து என கைம்முதல் கூப்பி
விரவு மலர் போதொடு வேண்டுவ வீசி – இலாவாண:6/168,169
வகை இல இவை என தகை விரல் கூப்பி
அவற்றது குற்றம் அறிய கூறினை – மகத:15/34,35
காவலற்கு இசைத்து கண்டு கை கூப்பி
வேக மன்னர் மீட்டும் வந்து இறுத்த – மகத:19/45,46
காவல் வேந்தனை கண்டு கை கூப்பி
வானோர் பெரும் படை வந்ததாயினும் – மகத:19/126,127
பைம் தார் வேந்தனை கண்டு கை கூப்பி
அகலாது ஆகிய அரும்_பெறல் சூழ்ச்சி – மகத:26/45,46
பாற்படல் பரப்பி பணிந்து கை கூப்பி
வழிபாடு ஆற்றி வழி செல்வோர்கட்கு – வத்தவ:3/18,19
கணவனை நோக்கி இணை விரல் கூப்பி
மழுகிய ஒளியினள் ஆகி பையென – வத்தவ:7/36,37
பூண் கலம் இன்மையின் புல்லென கூப்பி
பிரிவிடை கொண்ட பின் அணி கூந்தல் – வத்தவ:7/210,211
முகிழ் விரல் கூப்பி இகழ்வு_இலள் இறைஞ்சி – வத்தவ:10/91
முகிழ் விரல் கூப்பி முற்று_இழை உரைக்கும் – வத்தவ:10/149
கவிழ்ந்த சென்னியள் கை விரல் கூப்பி
வன்கண் உள்ளத்து மன்னர்க்கு ஒவ்வா – நரவாண:3/152,153

TOP


கூப்பிடு (1)

கூப்பிடு குரல் இசை சேண் புலத்து இசைப்பவும் – உஞ்ஞை:52/50

TOP


கூப்பிய (6)

காப்பு நேரிய கூப்பிய கையினர் – உஞ்ஞை:38/38
கொடும் சிலை கொடுத்து கூப்பிய கையன் – உஞ்ஞை:45/65
கோலொடும் வாளொடும் கூப்பிய கையன் – உஞ்ஞை:47/23
கூப்பிய கையினர் காப்பொடு புரிய – உஞ்ஞை:57/3
கூப்பிய கையர் காப்பொடு பொலிந்த – இலாவாண:4/156
கூப்பிய கையினள் கோயிலுள் பட்டதும் – மகத:17/76

TOP


கூப்பினும் (1)

நோக்கு அமை கடவுள் கூப்பினும் கதுமென – இலாவாண:7/84

TOP


கூப்புதலானும் (1)

குல பெரும் தெய்வம் கூப்புதலானும்
அரி மலர் கண்ணியொடு அக நாட்டு பெயரும் – இலாவாண:6/31,32

TOP


கூப்புபு (3)

கூப்புபு பிணித்த கூட பரப்பில் – இலாவாண:6/67
வாக்கமைவாளன் கூப்புபு வணங்கி – இலாவாண:18/28
கூப்புபு பணிந்த கொடும் பூண் குருசிலை – மகத:16/34

TOP


கூப்பும் (1)

தூய்மை உள்ளமொடு கோமகன் கூப்பும்
குறும் தொடி மகளிர் குவி விரல் கடுப்ப – உஞ்ஞை:48/52,53

TOP


கூப்புவனன் (1)

கோல் உடை கையில் கூப்புவனன் இறைஞ்சி – மகத:5/66

TOP


கூம்-மின் (1)

யாமும் காண்கம் கூம்-மின் சென்று என – உஞ்ஞை:36/170

TOP


கூம்ப (1)

செழு நீர் பொய்கையுள் கொழு மலர் கூம்ப
புள் இனம் குடம்பை சேர புல்லென – உஞ்ஞை:54/44,45

TOP


கூம்பல் (1)

ஆம்பல் அகல் இலை முருக்கி கூம்பல்
குவளை பல் மலர் குழைத்து தவளை – மகத:2/20,21

TOP


கூம்பிய (1)

வண்டொடு கூம்பிய மரை மலர் போல – மகத:13/48

TOP


கூம்பின் (1)

கூட கூம்பின் நீள் திரள் ஏறி – உஞ்ஞை:40/72

TOP


கூம்பு (4)

காம்பும் கதிரும் கூம்பு மணி குமுதமும் – இலாவாண:6/87
தேம் புடை விரிய கூம்பு இடம் காட்டி நும் – இலாவாண:12/59
கூம்பு முகிழ் அன்ன வீங்கு இள வன முலை – வத்தவ:11/75
கோல தாமரை கூம்பு அவிழ்ந்தாங்கு – வத்தவ:15/66

TOP


கூய் (1)

ஏயது மறுக்கலும் இருந்தோன் கூய் நின் – உஞ்ஞை:35/149

TOP


கூர் (17)

பன்றி எறியுற்ற புண் கூர் ஞமலி – உஞ்ஞை:37/252
மதுகை ஓரா மறம் கூர் மனத்தர் – உஞ்ஞை:40/298
தீட்டு அமை கூர் வாள் கூட்டொடு பொலிந்த – உஞ்ஞை:42/22
கொலை பெரும் கூர் வாள் கோடுற அழுத்தலின் – உஞ்ஞை:46/34
படர் கூர் எவ்வமொடு பதைத்தனர் பனிப்பவும் – உஞ்ஞை:46/54
கொலை அமை வில்லும் கூர் வாய் சுரிகையும் – உஞ்ஞை:46/56
கொல் புனைந்து இயற்றிய கொலை அமை கூர் வாள் – உஞ்ஞை:46/89
ஊரக மருங்கில் கூர் எரி கொளுவ – உஞ்ஞை:46/337
கூர் இலை கொலை வாள் வார் மயிர் வட்டத்து – உஞ்ஞை:49/15
கொள்ளி கூர் எரி வெள்ளி விளக்கில் – உஞ்ஞை:50/19
அரண கூர் வாள் அசைத்த தானையன் – உஞ்ஞை:53/60
குடுமி நெற்றி கூர் உளி அன்ன – உஞ்ஞை:55/20
பணை பெரும் திரள் தோள் பகு வாய் கூர் எயிற்று – இலாவாண:8/103
கோல கோயில் கூர் எரி கொளீஇ – இலாவாண:9/233
கூர் எரி படுத்து குறை வினை நீக்கி – மகத:20/145
கூர் கெழு வச்சிரம் கொண்டு வானவன் – மகத:27/167
கூர் எரி கொளுவ ஆர் அஞர் எய்தி – வத்தவ:7/58

TOP


கூர்ந்த (2)

பெருநல் கூர்ந்த பெரு வரை அகலத்து – உஞ்ஞை:35/240
அந்தி கூர்ந்த அம் தண் மாலை – மகத:26/27

TOP


கூர்ந்து (2)

சுவை சோர்ந்து அழிய நவை கூர்ந்து நடுங்கி – உஞ்ஞை:44/49
கோவத்து அன்ன கொப்புளம் கூர்ந்து
நோவ ஒல்கி நொசிந்த மருங்குலள் – உஞ்ஞை:54/59,60

TOP


கூர்ப்பு (1)

தார் பொலி மேனி கூர்ப்பு அணங்கு ஒடுக்கிய – உஞ்ஞை:34/128

TOP


கூர்மையும் (1)

நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும் – வத்தவ:14/49

TOP


கூர (8)

விருப்பு உள் கூர விம்மி வெய்து உயிர்த்து – உஞ்ஞை:35/188
அல்லல் கூர அலமருவோரும் – உஞ்ஞை:44/13
பருகும் வேட்கையள் பையுள் கூர
நிறையும் நாணும் நிரந்து முன் விலங்க – உஞ்ஞை:44/145,146
வெய்துறு விழுமமொடு விம்மம் கூர
செய்வதை அறியார் திரிவரால் பலர் என் – உஞ்ஞை:46/346,347
மலிந்து அகம் புக்க பின் மண் பொறை கூர
பெறல்_அரும் பெரும் கிளை இறைகொண்டு ஈண்டி – இலாவாண:2/2,3
பொன் தொடி மாதர் பொறை நோய் கூர
எல்லா கோளும் நல் வழி நோக்க – இலாவாண:11/69,70
பொய்கையில் தீர்ந்து புன்கண் கூர
எவ்வ மாந்தர் எரிவாய் உறீஇய – இலாவாண:19/99,100
புன்கண் கூர புலம்பு கொண்டு ஆற்றான் – மகத:20/174

TOP


கூரா (3)

கனல் கதிர் கான்று கடுமை கூரா
தனி கால் தேரோன் தனிமை எய்த – உஞ்ஞை:53/160,161
எச்சம் இன்மையின் எவ்வம் கூரா
துப்புரவு எல்லாம் துறப்பென் யான் என – இலாவாண:11/123,124
கவலை கூரா கலங்கினன் எழவும் – மகத:24/166

TOP


கூரி (1)

காவல் இன்று தன் கடன் என கூரி
மத்த வன் மான் தேர் வத்தவற்கு உரைம் என – உஞ்ஞை:44/101,102

TOP


கூரிய (1)

கூரிய ஆகிய நேர் இயல் முறுவல் – நரவாண:1/207

TOP


கூரும் (2)

மிக்கு வாய் கூரும் மீட்சி வேட்கையன் – உஞ்ஞை:42/247
அரத்தம் கூரும் திரு கிளர் சேவடி – வத்தவ:17/97

TOP


கூல (4)

கூல வாழ்நர் கோல் முறை குத்திய – உஞ்ஞை:38/58
சாந்து அரை கூல பெரும் கடை – உஞ்ஞை:40/24
கூல பொய்கையுள் நீலமொடு மலர்ந்த – உஞ்ஞை:48/47
காலத்தின் நடக்கும் கூல கொழும் கடை – இலாவாண:18/44

TOP


கூலத்து (1)

விளக்கு ஒளி பரந்த வெறி கமழ் கூலத்து
கல கதவு அடைத்து மலர் கடை திறப்பவும் – உஞ்ஞை:33/82,83

TOP


கூலம் (2)

கொடி அணி கூலம் கொண்டனன் போவுழி – உஞ்ஞை:35/152
குருதி வெள்ளம் கூலம் பரப்பி – உஞ்ஞை:37/230

TOP


கூவ (1)

அலந்த மஞ்ஞை யாமம் கூவ
புலர்ந்தது மாதோ புரவலற்கு இரவு என் – உஞ்ஞை:54/144,145

TOP


கூவலும் (2)

குளமும் பொய்கையும் கூவலும் வாவியும் – உஞ்ஞை:49/69
கூவலும் பொய்கையும் கோயில் வட்டத்து – மகத:12/15

TOP


கூவி (2)

அந்த கேணியும் வந்து பெயர் கூவி
தவ்வை மகளிரும் தாய் கெழு பெண்டிரும் – உஞ்ஞை:34/118,119
ஒரு துணை தோழியை ஒன்றுவனள் கூவி
திருவிற்கு அமைந்த தேம் தார் மார்பன் – மகத:14/167,168

TOP


கூவினள் (1)

மா பெரும் தேவி கூவினள் சீறி – வத்தவ:14/2

TOP


கூவினன் (1)

யூகியை வருக என கூவினன் கொண்டு – வத்தவ:14/58

TOP


கூவை (1)

பாவை இஞ்சியும் கூவை சுண்ணமும் – உஞ்ஞை:51/23

TOP


கூழ் (3)

குன்றகம் அடுத்து கூழ் அவண் ஒடுக்கி – இலாவாண:19/224
படை கூழ் பண்டியும் பள்ளி வையமும் – மகத:24/36
கூழ் பட அறுப்ப பாழ் பட பாய்ந்து – மகத:27/31

TOP


கூழினும் (1)

கூழினும் உடையினும் குறிப்பினர் ஆகி – உஞ்ஞை:43/53

TOP


கூழை (4)

கரும் குழல் கட்டி கன்னி கூழை
பொன்னின் நாணின் புடையெடுத்து யாத்து – உஞ்ஞை:34/192,193
குறு நெறி கொண்ட கூழை கூந்தலுள் – உஞ்ஞை:46/221
கொடி படை கோமகன் ஆக கூழை
வடு தீர் வயந்தகன் வாள் வலம் பிடித்து – உஞ்ஞை:53/138,139
கோலம் கொண்ட குறு நெறி கூழை
ஒரு சிகை முடித்த உறுப்பு அமை கோலத்து – இலாவாண:15/91,92

TOP


கூழையர் (2)

அணி அறல் அன்ன ஐம்பால் கூழையர்
மணி உமிழ்ந்து இமைக்கும் வயங்கு கொடி பைம் பூண் – உஞ்ஞை:41/52,53
சுவல் பொதி கூழையர் சுடர் பொன் தோட்டினர் – இலாவாண:7/95

TOP


கூழையும் (1)

மடக்கா கூழையும் மருங்குலும் பற்றி – உஞ்ஞை:34/132

TOP


கூற்ற (3)

கூற்ற வேழம் குணம் சிதைந்தது-கொல் என்று – உஞ்ஞை:43/135
கூற்ற ஆணை எம் கொற்றவன் தலைத்தாள் – உஞ்ஞை:45/79
கூற்ற வேழம் அடக்கிய குமரற்கு – இலாவாண:8/80

TOP


கூற்றத்து (1)

கூற்றத்து அன்ன ஆற்றலர் ஆகி – மகத:17/209

TOP


கூற்றத்தை (1)

குறியா கூற்றத்தை கோள்விடும்-கொல் என – இலாவாண:9/74

TOP


கூற்றம் (3)

நளகிரி கூற்றம் நகரம் உழக்க – உஞ்ஞை:44/91
கூற்றம் போல வேற்றவர் முருக்கி – உஞ்ஞை:46/100
இன் உயிர் உண்ணும் கூற்றம் இது என – நரவாண:8/61

TOP


கூற்றமும் (1)

கூற்றமும் விழைய கோல் இனிது ஓச்சி – நரவாண:8/19

TOP


கூற்றாக (1)

என் கூற்றாக இயைய கூறி – மகத:22/27

TOP


கூற்றாய் (1)

கூற்றாய் எடுத்த கோல வில் படை – மகத:27/97

TOP


கூற்றாளனை (1)

புள் கூற்றாளனை உள் கூற்று ஆகி – உஞ்ஞை:55/150

TOP


கூற்றிடம் (1)

கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன் – மகத:24/203

TOP


கூற்றினர் (1)

நோற்றும் என்னும் கூற்றினர் ஆகி – இலாவாண:7/125

TOP


கூற்றினையும் (1)

என் கூற்றினையும் நும் கூற்று ஆக – இலாவாண:11/172

TOP


கூற்று (19)

கூற்று ஒலி கேளா கொள்கைத்து ஆகி – உஞ்ஞை:41/125
கொல்வாள் வீசி கூற்று தலை பனிப்ப – உஞ்ஞை:43/76
ஏற்றோர் தாக்கி கூற்று உறை உலகினுள் – உஞ்ஞை:46/14
கூற்று திறை கொடுக்கும் கொற்ற தானை – உஞ்ஞை:46/142
கூற்று என தொடர வேற்று முன் விலங்கி – உஞ்ஞை:47/89
கூற்று உறழ் மொய்ம்பின் ஏற்று பெயர் அண்ணல் – உஞ்ஞை:54/66
புள் கூற்றாளனை உள் கூற்று ஆகி – உஞ்ஞை:55/150
கோள் உலாய் எழும் எனின் கூற்று என பரந்த – உஞ்ஞை:56/251
கூற்று தொழில் இளையர் குடர் சூடு மருப்பின – இலாவாண:2/189
கூற்று உறழ் வேழம் குணம் சிதைந்து அழிய – இலாவாண:9/43
என் கூற்றினையும் நும் கூற்று ஆக – இலாவாண:11/172
தக்கது-மன்ற மிக்கோன் கூற்று என – இலாவாண:13/72
கூற்று எதிர்கொள்ளா கொள்கைத்து ஆக – மகத:16/14
மாற்றோர் தொலைத்த கூற்று உறழ் கொடும் தொழில் – மகத:17/22
கூற்று உலகு இன்று கொள்ளா தாம் என – மகத:19/218
முன் கூற்று அமைத்து முடித்தல் நின் கடன் என – மகத:22/28
கூற்று இயல் தகையர் கொற்றம் ஆக என – மகத:23/63
கூற்று ஆர்ப்பு இசைப்பு இது என் என்றனள் வெரீஇ – மகத:24/174
கூற்று உயிர் கோடலும் ஆற்றாதாக – வத்தவ:2/55

TOP


கூற்றும் (2)

கூற்றும் அஞ்சும் நின் ஆற்றல் ஆணை – உஞ்ஞை:47/76
கோமான் குறித்ததும் தோழி கூற்றும்
தான் ஒருப்பட்ட தன்மையள் ஆகி – மகத:22/180,181

TOP


கூற்றுவன் (1)

கூறிய கிளவி கூற்றுவன் இமிழ்த்த – உஞ்ஞை:47/247

TOP


கூற்றொடு (1)

ஒருதலை கூற்றொடு திரிவிலன் இருப்ப – வத்தவ:7/119

TOP


கூற்றோர் (1)

மருவிய கதியின் கருவி கூற்றோர்
இரு பதம் பெயர்க்கும் இயல் கொண்டாடவும் – வத்தவ:12/191,192

TOP


கூற (34)

தெய்வ மாதர் திட்பம் கூற
அண்ணல் மருங்கின் ஆவது வேண்டும் – உஞ்ஞை:36/116,117
அம்_சில்_ஓதி அணங்கு வாய் கூற
பன்றி எறியுற்ற புண் கூர் ஞமலி – உஞ்ஞை:37/251,252
நூற்றுவர் தோழியர் போற்று இயல் கூற
தெய்வ சுற்றத்து திரு நடந்தது போல் – உஞ்ஞை:38/229,230
புரை மீன் கூடிய பொழுது இயல் கூற
இருபது யானையும் எண்பது புரவியும் – உஞ்ஞை:39/7,8
வெம் திறல் வேந்தன் விட்டு இவை கூற
கண்டு ஒரு பாணியில் கடல் கிளர்ந்தது போல் – உஞ்ஞை:39/27,28
அடு திறல் ஆற்றல் அறிய கூற
பிடி வழி படர்ந்து பெயர்ந்தவன் நிற்ப – உஞ்ஞை:46/152,153
தொன்நூலாளன் தோன்ற கூற
இன்னா இன்பத்து இயற்கை என் என – உஞ்ஞை:47/15,16
பாட்டின் கூற கேட்டனன் ஆகி – உஞ்ஞை:55/23
உள் அழிந்தவர்கட்கு உறுதி கூற
கணையொடு பிடித்த கை கோல் அரணி – உஞ்ஞை:56/17,18
தெளிய கூற புளிஞர் தேறி – உஞ்ஞை:56/107
முந்து புள் உரைத்த முது_மகன் கூற
வெம் திறல் வேட்டுவர் விரைந்தனர் ஆகி – உஞ்ஞை:56/234,235
அந்தணாளர் ஆசிடை கூற
வெம் திறல் வேந்தன் பைம்_தொடியோடும் – இலாவாண:3/119,120
மங்கல மரபினர் மரபில் கூற
காவல குமரனும் கடி நகர் வலஞ்செய – இலாவாண:6/9,10
தேச மன்னன் திறத்துளி கூற
கன்று காண் கறவையின் சென்று அவள் பொருந்தி – இலாவாண:10/40,41
அழி பொருள் அன்றி ஆகு பயம் கூற
தக்கது-மன்ற மிக்கோன் கூற்று என – இலாவாண:13/71,72
ஓதிய உண்டு என உணர கூற
இன்னே போதும் ஏகு-மின் விரைந்து என – மகத:1/87,88
போற்று பல கூற ஏற்றுவனள் இருப்ப – மகத:5/96
தொன்று இயல் மகளிர் தொழுதனர் கூற
செய்வதை அறியலள் வெய்துயிர்ப்பு அளைஇ – மகத:6/127,128
நமக்கு வேண்டு என நல தகை கூற
கண்ணினும் கையினும் கண்ணியது உணர்த்தி – மகத:8/81,82
காம வேட்கையள்-தான் என கூற
ஈங்கு இது கேட்க என இசைச்சன் உரைக்கும் – மகத:8/98,99
மன்னவன் கூற மற்று அது நன்று என – மகத:9/1
அறிய கூற அங்கை மலர்த்தி – மகத:9/112
குற்றம் படுவ கூற கேள்-மதி – மகத:10/44
மறுத்த வாயிலொடு வலிப்பனர் கூற
நிறுக்கல் ஆற்றா நெஞ்சினன் ஆகி – மகத:10/53,54
வல்லவை எல்லாம் வலிதின் கூற
கற்றோர் காண்டல் ஆகும் காவலின் – மகத:12/27,28
வாழ்த்து பலர் கூற போற்று பலர் உரைப்ப – மகத:13/62
கோல் தொடி மாதர் கொள்கையும் கூற
உகவை உள்ளமொடு பகை இவண் இயைதல் – மகத:17/77,78
இறைவன் மாற்றமும் குறையும் கூற
மகதவர் இறைவனும் தமர்களை தரீஇ நமக்கு – மகத:19/105,106
வயந்தககுமரன் வந்து கூற
தோழர் எல்லாம் தோழிச்சியாக – மகத:22/38,39
திரு விழை தெரியாள் திட்பம் கூற
பின்னரும் காண்பாம் அன்னன் ஆகுதல் – மகத:22/138,139
ஆம்பால் கருமம் மாண்புற கூற
அரும் சிறை தானை ஆருணி அரசனின் – மகத:26/103,104
கொற்றவன் கூற மற்று அவன் உரைக்கும் – வத்தவ:8/38
ஆற்றுளி கூற அத்துணையாயினும் – வத்தவ:8/82
தேவியர் இருவர்க்கும் மாறு துயில் கூற
கயில் பூண் கோதை அயிர்த்தனள் இருப்ப – வத்தவ:13/165,166

TOP


கூறப்படாத (1)

தீயவை கூறப்படாத திண்மையும் – நரவாண:7/110

TOP


கூறலின் (2)

பொருளொடு புணர்ந்தவை பொருந்த கூறலின்
அமைப்ப_அரும் கருமம் அமைத்தனன் யான் என – மகத:21/109,110
பட்டது கூறலின் ஒட்டிய உவகையள் – நரவாண:8/126

TOP


கூறலும் (8)

அடையாண் கிளவியொடு அறிய கூறலும்
கடி தார் மார்பனும் கலிழ்ச்சி நோக்கி – உஞ்ஞை:36/201,202
கொள்ள கூறலும் வள்ளலும் விரும்பி – இலாவாண:11/184
குறிப்பு எமக்கு உடைமை கூறலும் உண்டோ – இலாவாண:17/180
வெம் கண் செய் தொழில் தன்-கண் கூறலும்
மறு நோய் மக்களின் ஆழ்ந்த மனத்தன் – மகத:19/47,48
செறிந்த சூழ்ச்சியில் செய்வது கூறலும்
உவந்த மனத்தன் ஊன்-பால் படு வளை – மகத:26/2,3
வாராது ஒழிதல் கூறு என கூறலும்
ஒழிந்த மாதர்க்கு உரைப்பதை உண்டெனின் – வத்தவ:13/17,18
கொண்டு ஒளித்தருள கூறலும் உண்டோ – வத்தவ:14/17
அறிவேன் யான் என் குறை என கூறலும்
மற்று அதற்கு ஏற்ற வகை பல உண்டு அவை – வத்தவ:14/30,31

TOP


கூறவும் (1)

கொள்கை அறிந்து யான் கூறவும் வேண்டா – உஞ்ஞை:36/296

TOP


கூறன்-மின் (1)

நாறு இரும் குழல் பிற கூறன்-மின் என்மரும் – வத்தவ:17/65

TOP


கூறாக்கி (1)

சேடிமாரையும் இரு கூறாக்கி
கொள்க என அருளி குறைபாடு இன்றி – வத்தவ:9/69,70

TOP


கூறாது (4)

தேறா தெளிவொடு கூறாது அடக்கி – உஞ்ஞை:36/291
ஆணை கூறாது அருள் மொழி விரவாது – இலாவாண:9/70
கூறாது நாணிய குறிப்பு நனி நோக்கி – மகத:9/101
குடை கெழு வேந்தன் கூறாது நிற்ப – வத்தவ:10/156

TOP


கூறாய் (1)

குறுக செல்கம் கூறாய் எனவும் – மகத:1/151

TOP


கூறாயாயின் (1)

உணர கூறாயாயின் பெடையொடு – மகத:1/167

TOP


கூறாள் (1)

கூறாள் மறைப்ப ஊறு அவண் நாடி – நரவாண:3/35

TOP


கூறி (99)

நெஞ்சு தம் கூறி
அம் சொல் ஆயத்து அன்று யான் கண்ட – உஞ்ஞை:34/74,75
காரண கிளவி நீர கூறி
தன் பெயர் பெயர்ப்ப மனத்தகை கரந்து – உஞ்ஞை:35/112,113
உவகை நெஞ்சமொடு உவப்பன கூறி
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து – உஞ்ஞை:36/123,124
கோசிகன் என்றவன் குறி பெயர் கூறி
அடையாண் கிளவியொடு அறிய கூறலும் – உஞ்ஞை:36/200,201
ஆப்பு உறு பாடமொடு அருத்தம் கூறி
நா கொள் கேள்வி நவிற்றி காட்டி – உஞ்ஞை:37/22,23
பிறப்போ வேண்டேன் யான் என கூறி
ஆர்த்த வாயன் ஊர் களி மூர்க்கன் – உஞ்ஞை:40/89,90
பெரும் பொறி பேழை இவை என கூறி
கறை வாய் முரசம் கண் அதிர்ந்து இயம்ப – உஞ்ஞை:40/239,240
நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி
நேர் இழை மகளிரை நீராட்டு அயரும் – உஞ்ஞை:41/104,105
காத்தல் ஓம்பு என ஆற்றுளி கூறி
பத்தி குயின்ற பல் வினை கம்மத்து – உஞ்ஞை:46/93,94
திறத்தொடு கொடுத்து செய் பொருள் கூறி
புற கொடுத்து ஒழியும் போழ்தில் திறப்பட – உஞ்ஞை:46/114,115
விடுதற்கு அருமை முடிய கூறி
வடிவும் வண்ணமும் படிவமும் பிறவும் – உஞ்ஞை:46/121,122
கண்கூடு எய்தும் காலம் கூறி
மண்_கூட்டாளன் மனை-வயின் மறையவும் – உஞ்ஞை:46/331,332
துன்னார் கடந்தோன் தோன்ற கூறி
பறந்து செல்வது போல் சிறந்து அவன் கடாவலின் – உஞ்ஞை:52/100,101
மெய்யின் கூறி கை வரை நில்லாது – உஞ்ஞை:52/125
துன்னிய தோழற்கு தோன்ற கூறி
வத்தவர் இறைவன் மத்தகம் பொருந்தி – உஞ்ஞை:53/37,38
தோழி காஞ்சனை தோன்ற கூறி
காழ்_இல் பஞ்சி ஊழ் அறிந்து ஆற்றி – உஞ்ஞை:53/127,128
பெரும் பொருள் இது என பொருந்த கூறி
அரும்_பெறல் யூகியும் உருமண்ணுவாவும் – உஞ்ஞை:54/92,93
இருக்க தான் என நெறிப்பட கூறி
குறிப்பு_எழுத்து ஓலை பொறி புனைந்து ஒற்றிய – உஞ்ஞை:54/95,96
வருவோர்க்கு அறிய கூறி மற்று என் – உஞ்ஞை:54/98
வாய்ப்ப கூறி வாள் படை தொகுத்து – உஞ்ஞை:54/126
நோவ கூறி சாவது அல்லது – உஞ்ஞை:56/23
தெருள கூறி தீது_இல் காலத்து – உஞ்ஞை:56/181
விண்ணக கிழவனின் விழுப்பம் கூறி
தம்மின் பெற்ற தவம் புரி தருக்கத்து – இலாவாண:2/22,23
ஒப்ப கூறி செப்புவனர் அளிப்ப – இலாவாண:3/56
ஆகு பொருள் கூறி அம்மி முதல் உறீஇ – இலாவாண:3/88
நிகழ்ந்ததை எல்லாம் நெறியில் கூறி
புகழ்ந்த வண்ணம் போகுதல் பொருள் என – இலாவாண:8/161,162
வருமொழி கட்டுரை முகமன் கூறி நம் – இலாவாண:9/51
உரை முதல் காட்டி உளமை கூறி
நின்ற பொழுதில் சென்று யாம் தலைப்பெய – இலாவாண:9/174,175
கண் என தருதல் கடன் என கூறி
இன்பம் துடைத்து அவற்கு இறைக்கடம் பூட்டுதல் – இலாவாண:9/235,236
யூகி என்பது உணர கூறி
நிலம் குறைப்பட்ட மன்னனை நிறுவுதல் – இலாவாண:9/240,241
ஏற்ற செவ்வி மாற்றம் கூறி
சேடுபட புனைந்த சித்திர கம்மத்து – இலாவாண:10/8,9
முகமன் கிளவி தகுவ கூறி
ஆடு இயல் யானை அவந்தியன் நகர்-வயின் – இலாவாண:10/14,15
உகப்ப கூறி மிக பல வருட்டி – இலாவாண:10/74
மாற்றம் பற்பல மரபின் கூறி
அடநடுதரூதடங்கண் தபுத்த – இலாவாண:10/166,167
குறி கோள் உறு தவன் உண்மை கூறி
இன்றே அன்றியும் தொன்று வழி வந்த – இலாவாண:11/45,46
பின் கூட்டு அமைவும் பிறவும் கூறி
கல் கூட்டு எய்தி கரந்தனன் இருப்ப – இலாவாண:17/16,17
வஞ்சம் இது என வலிப்ப கூறி
அரும் திறல் அமைச்சனொடு ஒருங்கு தலைப்பெய்த பின் – இலாவாண:17/100,101
முகிழ் நகை கிளவி முகமன் கூறி
அண்ணல் அரசற்கு ஆகு பொருள் வேண்டும் – இலாவாண:17/185,186
அறிய கூறி அகல்வது பொருள் என – இலாவாண:20/38
கருமம் கூறி கண்ணுற்று பிரியார் – இலாவாண:20/70
தீவினையாளரை தெளிய கூறி
வாய் மொழி ஆக வலித்தனள் வழங்கி – இலாவாண:20/84,85
ஆப்புடை ஒழுக்கம் அறிய கூறி
காப்பொடு புணரில் காணலும் எளிது என – மகத:4/82,83
வாயில் கூறி வழிவழி-தோறும் – மகத:5/104
தலைத்தாள் முதியர்க்கு தானே கூறி
நோன்பு முதல் தொடங்கி தேம் கமழ் கோதை – மகத:6/106,107
சே இழை கூன்_மகள் செவ்வனம் கூறி
போகிய பொழுதின் ஆகிய சூழ்ச்சி – மகத:7/1,2
கோல கூன்_மகட்கு அறிய கூறி
செவிலித்தாயும் தவ்வையும் ஆயமும் – மகத:9/47,48
இன்னவும் பிறவும் கூறி மற்று என் – மகத:9/178
ஏறல் நன்று என கூறி வைத்தலின் – மகத:13/43
யாப்புற கூறி காப்போர் பின் செல – மகத:13/57
என்றனன் என்பதை சென்றனை கூறி
கவற்சி நீக்கு என பெயர்த்து அவள் போக்கி – மகத:17/83,84
கிளைமை கூறி உளமை கொளீஇ – மகத:17/95
குழுவினோர்கட்கு தலை என கூறி
வெம் முரண் வென்றியொடு மேல்வந்து இறுத்த – மகத:17/184,185
பொக்கம் உடையவை பொருந்த கூறி
பகை கொள் மன்னன் அக நகர் வரைப்பின் – மகத:17/193,194
யாப்புற கூறி அடங்கிய பொழுதில் – மகத:17/219
அடையும் தானம் அறிய கூறி
நாற்பால் வகுத்து மேற்பால் அமைத்து – மகத:17/222,223
இருவரும் தம்முள் ஏற்பவை கூறி
திரு அமர் கோயில் சென்று புக்கு அவ்வழி – மகத:18/95,96
போக நூக்கல் பொருள் என கூறி
மீட்டு அவன் போக்க வேட்பனன் விரும்பி அவன் – மகத:19/154,155
ஓம்படை கூறி ஆங்கு அவண் ஒழிய – மகத:19/200
நன்னர் பெற்றேம் நாம் என கூறி
அம் கண் மாதிரத்து அதிர்ச்சி எய்த – மகத:19/214,215
திறப்பட கூறி மற படை நூற – மகத:20/119
என்பது கூறி அன்பு நெகிழ்ந்து உருகி – மகத:20/143
என் கூற்றாக இயைய கூறி
முன் கூற்று அமைத்து முடித்தல் நின் கடன் என – மகத:22/27,28
தெருள கூறி அருள் வகை அறிந்து – மகத:22/47
கூடிய கிளைமை குணம் பல கூறி
ஓடு கால் இளையரை ஓலையொடு போக்கின் – மகத:24/11,12
துன்னிய நமர்கட்கு தோன்ற கூறி
அவற்கு பாங்கு ஆகிய ஆர்வலர் உளரெனின் – மகத:25/61,62
எழுச்சி கூறி இகல் அடு பெரும் படை – மகத:25/122
கொடி தேர் தானை கோமான் கூறி
இருக்க என இருந்த பின்றை விருப்பொடு – மகத:26/89,90
செல் படைக்கு உபாயம் செறிய கூறி
மறு கரை மருங்கில் செறிய போக்கி – மகத:26/100,101
கூறுபடல் இன்றி கொடுத்தனன் கூறி
அறை போம் இவன் என ஆருணி உரைத்த – வத்தவ:1/6,7
குடிகட்கு எல்லாம் குளிர்ப்ப கூறி
திருந்திய சிறப்பின் தேவ தானமும் – வத்தவ:2/10,11
அசைவு_இலாளர்க்கு அறிய கூறி
என்பும் தோலும் உள்ளவை எல்லாம் – வத்தவ:3/4,5
இறந்தவை கூறி இரங்குவது ஒப்ப – வத்தவ:3/117
மாற்றம் எல்லாம் ஆற்றுளி கூறி
அவனுழை பாட்டகத்து அதிபதி ஆகிய – வத்தவ:4/86,87
தெரிய எல்லாம் விரிய கூறி
அ நிலை கழிந்த பின் நிலை பொழுதின் – வத்தவ:6/7,8
வாய்ப்பறை அறைந்து வாழ்த்து பல கூறி
ஒருதலை கூற்றொடு திரிவிலன் இருப்ப – வத்தவ:7/118,119
சலம்_இல் அருள் மொழி சால கூறி
இரவிடை கண்ட வண்ணமொடு இலங்கு_இழை – வத்தவ:7/226,227
தவ முது மகட்கு தாழ்ந்து அருள் கூறி
பயன் உணர் கேள்வி பதுமாபதியை – வத்தவ:8/9,10
உயிர் ஒன்று ஆதல் செயிர்_அற கூறி
இருவரும் அவ்வழி தழீஇயினர் எழுந்து வந்து – வத்தவ:8/84,85
உவக்கும் வாயில் நயத்தக கூறி
தெருட்டியும் தெளித்தும் மருட்டியும் மகிழ்ந்தும் – வத்தவ:8/112,113
நிகழ்ந்ததும் கூறி நின் நீதியும் விளக்கி – வத்தவ:10/186
நன் பல கூறி அ பகல் கழிந்த பின் – வத்தவ:13/101
கூறி அ பகல் போய் ஏறிய பின்றை – வத்தவ:13/161
குறி என கூறி சிறு விரல் மோதிரம் – வத்தவ:13/180
மாறுமாறு எழுதிய வாசகம் கூறி
மாதரும் நீயும் மயல் உரைத்து எழுந்து – வத்தவ:13/198,199
புதுமை கூறி இவள் முகம் பெறுகேன் என – வத்தவ:13/233
பதுமையும் தானும் இனியன கூறி
பொரு_இல் பக்கத்து பொன் கலம் ஏற்றி – வத்தவ:14/161,162
வருக என தழீஇ முகமன் கூறி
ஒரு புள் பெற்றேன் நெருநல் இனிது என – வத்தவ:14/168,169
காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி
அடுத்த காதல் தாயர் தவ்வையர் – வத்தவ:16/45,46
ஈது இயல் மந்திரம் என்று கூறி
என் பெயர் நினைந்தால் எவ்விடத்தாயினும் – நரவாண:2/55,56
தகுவன நாடி முகமன் கூறி
அம் சொல் மழலை அவந்திகை என்னும் நின் – நரவாண:3/29,30
வைத்த காட்சியும் வல்லிதின் கூறி
சிதைவு_இல் செம் நெறி சேர்ந்து பின் திரியா – நரவாண:3/172,173
ஊழி இது என உணர கூறி
ஆய வெள்ளத்து அவனை அழைத்தே – நரவாண:3/188,189
மனத்தின் உள்ளி மந்திரம் கூறி
நினைத்த பொழுதின் நின் முனர் தோன்றும் – நரவாண:3/213,214
குறி கொள் மாற்றம் கொள்ள கூறி
சென்று யான் வருவல் செம்மல் போற்று என – நரவாண:3/221,222
தோடு அலர் தாரோன் தோன்ற கூறி
ஏறும் இடமும் இழியும் வகையும் – நரவாண:4/76,77
வேறலம் என்று விளங்க கூறி
அன்று தான் கொண்ட உருவும் நீக்கி – நரவாண:5/39,40
இவையும் பிறவும் இயைவன கூறி
நகரத்தாளரொடு நாடு புகழ்ந்து ஏத்த – நரவாண:6/140,141
வள்ளல் தனமும் வகுத்தனன் கூறி
அவந்தி நாடும் அணி உஞ்சேனையும் – நரவாண:8/6,7
தலைக்கோல் மகளிர் தன்மை கூறி
கல் கெழு கானவன் கை கோல் உமிழ்ந்த – நரவாண:8/133,134

TOP


கூறிப (1)

அடையாள் அருள் மொழி அறிய கூறிப
படை ஆள் கடும் தொழில் பற்றா மன்னன் – உஞ்ஞை:54/105,106

TOP


கூறிய (31)

கதிர் வினை நுனித்த நின் கணி எனை கூறிய
எதிர்_வினை எல்லாம் எஞ்சாது எய்தி – உஞ்ஞை:36/210,211
தோன்ற கூறிய மூன்றினுள்ளும் – உஞ்ஞை:43/33
அறிய கூறிய குறியிற்று ஆக – உஞ்ஞை:43/108
எட்டு என கூறிய திசைதிசை-தொறூஉம் – உஞ்ஞை:43/118
அறிய கூறிய அன்பினன் அல்லதை – உஞ்ஞை:44/98
வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன் – உஞ்ஞை:45/50
முன்னிய பொழுதில் முன் நாம் கூறிய
வணங்கு சிலை கொடுத்த வலி கெழு வராகன் – உஞ்ஞை:46/134,135
தெரிவனன் கூறிய தெளி மொழி கேட்டே – உஞ்ஞை:46/195
கூறிய கிளவி கூற்றுவன் இமிழ்த்த – உஞ்ஞை:47/247
அறிய கூறிய செலவிற்று ஆகி – உஞ்ஞை:48/74
நல்லோர் கூறிய நாள் அமை அமயத்து – உஞ்ஞை:48/89
பின் நிலை வலித்து முன் நிலை கூறிய
இன்னா போகுதற்கு ஆகும் பொழுது என – உஞ்ஞை:52/98,99
துணிய பெறாய் என துணிந்து யான் கூறிய
பணி வகை உண்டது பண்டை காலத்து – உஞ்ஞை:54/101,102
அறிய கூறிய அடையாண் கிளவியும் – உஞ்ஞை:56/184
விதியில் கூறிய விளங்கு_இழை வேட்கும் – இலாவாண:3/94
அறிய கூறிய செறிவு உடை செய்கை – இலாவாண:17/62
யூகி கூறிய ஒளி நில மருங்கில் – இலாவாண:17/90
ஒழுக்கும் புள் குரல் உட்பட கூறிய
நிமித்தமும் சகுனமும் நய குணம் இன்மையும் – இலாவாண:18/38,39
துடி தோம் கூறிய இடுகிய நடுவிற்கு – மகத:5/18
இன்னினி கெடுத்தேன் அன்னவள் கூறிய
துன்ன_அரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி – மகத:9/98,99
கூறிய கிளவிக்கு ஒத்தது இன்று என – மகத:9/110
அரு வினை இல் என அறிந்தோர் கூறிய
பெரு மொழி மெய் என பிரியா காதலொடு – மகத:14/253,254
சென்ற குமரன் முந்தை கூறிய
மாற்றமும் மனத்தே ஆற்றுளி புடைபெயர்ந்து – மகத:19/133,134
கூறிய மாற்றம் கோமான் தன்னொடு – மகத:19/156
கூறிய முழுத்தம் குன்றுதல் இன்றி – மகத:22/245
அறிய கூறிய குறி-வயின் திரியார் – மகத:24/75
கூனும் குறளும் மேல் நாம் கூறிய
நருமதை முதலாம் நாடக மகளிரும் – வத்தவ:10/71,72
முற்பால் கூறிய வெற்பினுள் பிறந்த – வத்தவ:11/51
நக்கனள் ஆகி மிக்கோய் கூறிய
மானும் தேனும் மானனீகையும் – வத்தவ:13/248,249
உரையினும் ஓத்தினும் உவப்ப கூறிய
சாங்கிய மட மகள் தலையா சென்ற – வத்தவ:16/43,44
குறி கோள் கூறிய நெறி புகழ்வோரும் – நரவாண:6/135

TOP


கூறியது (1)

இயக்கன் கூறியது இவளும் கூறினள் – நரவாண:5/31

TOP


கூறியாங்கு (1)

வாயின் கூறியாங்கு மற்று தன் – உஞ்ஞை:52/119

TOP


கூறின் (2)

கொடுத்திலன் என்பது கூறின் அல்லதை – உஞ்ஞை:48/101
கூறின் குற்றம் உண்டோ எனவும் – மகத:1/159

TOP


கூறினள் (1)

இயக்கன் கூறியது இவளும் கூறினள்
உள்ளம் உருக்கும் ஒள் அமர் கிளவி – நரவாண:5/31,32

TOP


கூறினன் (4)

கூறினன் அருளி குறிப்பில் கேள்-மதி – உஞ்ஞை:43/8
கோல் தொழிலவற்கு கூறினன் நிற்ப – உஞ்ஞை:47/10
வெற்ற வேலான் மற்றும் கூறினன்
தனக்கு நிகர் இன்றி தான் மேம்பட்ட – மகத:10/61,62
கூறினன் மற்று எம் கோமகன் என்று அவன் – மகத:19/98

TOP


கூறினும் (2)

வழுக்கி கூறினும் வடு என நாணி – உஞ்ஞை:36/280
பொய் பொருள் பொருந்த கூறினும் அ பொருள் – வத்தவ:8/66

TOP


கூறினேன் (2)

அறிய கூறினேன் யான் என அவளொடும் – இலாவாண:9/244
குறை போம் என்றலின் கூறினேன் அன்றியும் – வத்தவ:13/210

TOP


கூறினை (3)

கூறினை சென்ம் என தேற காட்டி – உஞ்ஞை:46/149
கூறினை செல்லின் குற்றம் இல் என – மகத:6/164
அவற்றது குற்றம் அறிய கூறினை
இவற்றது குற்றமும் எம் மனம் தெளிய – மகத:15/35,36

TOP


கூறு (22)

தந்ததும் உண்டோ பைம்_தொடி கூறு என – உஞ்ஞை:38/200
வந்தது கூறு என வணங்கி வாய்புதைத்து – உஞ்ஞை:47/26
நெஞ்சின் அஞ்சாது நிகழ்ந்தது கூறு என்று – உஞ்ஞை:47/65
விடுக்க போந்தனென் மீண்டு இது கூறு என – உஞ்ஞை:47/95
யாரை நீ எமக்கு அறிய கூறு என – உஞ்ஞை:55/137
யாரே நீர் எமக்கு அறிய கூறு என – உஞ்ஞை:56/88
கூறு ஆடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி – இலாவாண:11/34
மாணகன் கண்டு இ நிலைமை கூறு என – மகத:17/73
என்பது கூறு என மன் பெரும் சீர்த்தி – மகத:18/29
வேறுபட காட்டி கூறு பட அறுப்ப – மகத:19/9
கூறு பட போக்கி வேறு பட பரப்பி – மகத:19/207
இருந்த பின்றை நிகழ்ந்தது கூறு என – வத்தவ:6/3
இன்புறு செவ்வியுள் இன்னது கூறு என – வத்தவ:6/9
ஆற்றியவாறு எனக்கு அறிய கூறு என் – வத்தவ:7/51
தெரியேன் எனக்கு இது தெரிய கூறு என – வத்தவ:7/63
ஆய காரணம் அறிய கூறு என – வத்தவ:8/37
கூறு நனி செய்து வீறு உயர் நெடுந்தகை – வத்தவ:12/10
வாராது ஒழிதல் கூறு என கூறலும் – வத்தவ:13/17
அவட்கும் கூறு இட்டு அளிப்ப தன்-பால் – வத்தவ:14/127
யார் அவன் கூறு என அவ்வழி இறைஞ்சி – நரவாண:1/80
நிவந்த அன்பின் உவந்தது கூறு என – நரவாண:3/151
அச்சின் அமைதி அறிய கூறு என – நரவாண:4/70

TOP


கூறு-மதி (1)

இற்று இது கூறு-மதி இளையோன் பொருட்டா – மகத:19/149

TOP


கூறு-மின் (2)

குற்றம் உண்டு எனில் கூறு-மின் எமக்கு என – உஞ்ஞை:37/238
கொளப்படும் முறைமை கூறு-மின் எமக்கு என – மகத:24/134

TOP


கூறுகூறு (3)

வேறுவேறாக கூறுகூறு உணர்த்தி – இலாவாண:9/210
வேறுவேறாக கூறுகூறு அமைத்து – வத்தவ:10/81
வேறுவேறு இயற்கைய கூறுகூறு அமைத்த – வத்தவ:12/50

TOP


கூறுதல் (5)

கூறுதல் புரிந்த குறிப்பினன் ஆகி – இலாவாண:9/212
அறிய கூறுதல் அமர்ந்தன போல – மகத:6/81
குறுக வந்தனன் கூறுதல் குணம் என – மகத:8/112
குறித்தது கூறுதல் செல்லா கொள்கையன் – வத்தவ:10/26
யாம் மகள் தருதும் கொள்க என கூறுதல்
ஏம வையத்து இயல்பு அன்று ஆயினும் – வத்தவ:15/71,72

TOP


கூறுதற்கு (1)

கூறுதற்கு ஆகா குறைவு_இல் இன்பமொடு – வத்தவ:7/244

TOP


கூறுபட்டு (1)

வேறுபட்டு ஏகினும் கூறுபட்டு இயலா – இலாவாண:8/13

TOP


கூறுபட (2)

கூறுபட நிறீஇ குளித்தனள் எழுவோள் – உஞ்ஞை:40/348
கூட்டத்துள்ளே கூறுபட போக்கி – மகத:25/124

TOP


கூறுபடல் (1)

கூறுபடல் இன்றி கொடுத்தனன் கூறி – வத்தவ:1/6

TOP


கூறும் (23)

சேய் உயர் உலகம் செம்மையின் கூறும்
தீது_அறு நோன்பின் தெய்வம் தேற்றிய – உஞ்ஞை:36/79,80
தகுவன கூறும் தலைமகன் மகள் என – உஞ்ஞை:36/122
மறை மூதாட்டி மற்றும் கூறும்
கதிர் வினை நுனித்த நின் கணி எனை கூறிய – உஞ்ஞை:36/209,210
பழித்து கூறும் நின் பார்ப்பன கணம் அது – உஞ்ஞை:40/96
நயம் தெரி நாட்டத்து வயந்தகன் கூறும்
பாகு இயல் உள்ளத்து படிமம் தாங்கிய – உஞ்ஞை:43/4,5
உற்றது கூறும் கொற்ற வாயிலன் – உஞ்ஞை:47/22
இரங்குவது நோக்கி இறை_மகன் கூறும்
வருந்துதல் தவிர யாம் வழியிடை புதைத்த – உஞ்ஞை:56/124,125
மான் தோம் கூறும் மம்மர் நோக்கினர் – இலாவாண:2/223
பள்ளிக்கு உய்ப்ப நள்ளிருள் கூறும்
பாகர் ஏறினும் தோல் கயிறு இடினும் – இலாவாண:11/117,118
துனிவு கொள் மன்னற்கு முனிவன் கூறும்
பசு மரம் சார்ந்தனை ஆதலின் மற்று நின் – இலாவாண:13/49,50
மதி புரை முகத்திக்கு மற்று இது கூறும்
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் ஞாலத்து – இலாவாண:17/104,105
அரு மதி அண்ணற்கு அவன் இது கூறும்
இரு மதி எல்லை இயைந்த விரதமொடு – மகத:4/71,72
வயந்தககுமரற்கு இயைந்தது கூறும்
மயங்கு இதழ் படலை மகதவன் கண்டு – மகத:19/69,70
விளங்க கூறும் விருப்பும் நாணும் – மகத:22/114
வருடகாரன் வணங்கினன் கூறும்
இருள் இடை மருங்கின் விரைவனர் ஓடி – மகத:24/135,136
அருளி கேண்ம் என தெருள கூறும்
மாரி பெரும் புனல் வருவாய் அடைப்பின் – மகத:27/16,17
கொள்ளார் அழிவினை கூறும் இவை என – மகத:27/87
அந்தர மருங்கின் அமரர் கூறும்
மந்திரம் கேட்கும் செவிய போல – வத்தவ:3/88,89
வாயின் உரைக்க என சாதகன் கூறும்
அற்பு அழல் ஊர்தர அடல் வேல் உதயணன் – வத்தவ:4/54,55
வயந்தககுமரன் வந்து கூறும்
வால் இழை பணை தோள் வாசவதத்தைக்கும் – வத்தவ:5/41,42
மானம் குன்றா வயந்தகன் கூறும்
நயந்து நீ அரற்றும் நல் நுதல் அரிவையும் – வத்தவ:6/16,17
மதுகம் மதிரம் முதலா கூறும்
பதனுறு நறும் கள் பட்டாங்கு மடுப்ப – வத்தவ:11/87,88
தானே கூறும் நீ அது தாங்கி என் – வத்தவ:14/90

TOP


கூறும்-காலை (1)

கோல் நெறி வேந்தே கூறும்-காலை
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது – வத்தவ:8/77,78

TOP


கூறுவர் (2)

இசைத்தனர் புக்கு நின்று ஏத்தினர் கூறுவர்
தாழ்ச்சி இன்றி தருசகன் தமரோடு – மகத:25/4,5
நகரத்தாளர் புகர் அற கூறுவர்
தொல் வழி வந்த எம் பெருமகன் எழுதிய – மகத:27/199,200

TOP


கூறுவன் (2)

இசைச்சன் கூறுவன் ஈங்கு இது கேட்க என – மகத:1/58
மேவர காட்டலும் மீட்டும் கூறுவன்
அறியான் இவன் எனல் நெறியில் கேள்-மதி – வத்தவ:6/61,62

TOP


கூறுவனன் (1)

கூறுவனன் நோக்கி குறிக்கொளற்கு அமைந்த – நரவாண:4/79

TOP


கூறுவென் (7)

நறு நீர் விழவின் நாள் அணி கூறுவென்
பனையும் வெதிரும் பாசிலை கமுகும் – உஞ்ஞை:40/4,5
அறிய கூறுவென் அஞ்சுவை ஆயின் – உஞ்ஞை:40/362
வதுவை செல்வம் விதியின் கூறுவென்
எண் தரும் பெரும் கலை ஒண் துறைபோகி – இலாவாண:2/9,10
யூகிக்கு இப்பால் உற்றது கூறுவென்
கண் அகன் கிடக்கை கலி கெழும் ஊழியுள் – இலாவாண:8/5,6
அற்று அது ஆதலின் இற்றும் கூறுவென்
கற்றதும் கேட்டதும் கண்ணா மாந்தர்க்கு – மகத:1/61,62
உருமண்ணுவாவிற்கு உற்றது கூறுவென்
சங்க மன்னர் தம்தம் உரிமை – வத்தவ:4/13,14
அற்றே ஆயினும் இற்றும் கூறுவென்
நயக்கும் காதல் நல் வளை தோளியை – வத்தவ:6/38,39

TOP


கூறுவேன் (3)

நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவேன்
சேரா மன்னன் உஞ்சேனை அம் பெரும் பதிக்கு – உஞ்ஞை:48/38,39
வழிநாள் நிகழ்வின் வண்ணம் கூறுவேன்
கலக்கம்_இல் தானை காசியர் கோமான் – மகத:16/2,3
ஒழுகும்-காலை நிகழ் பொருள் கூறுவேன்
தம்முறு கருமம் தாம் சேர்ந்தது என – மகத:23/11,12

TOP


கூறை (2)

கூறை வெள் உறி குண்டிகை காவினர் – உஞ்ஞை:36/228
கூறை கீறி சூழ்வர உடீஇ – வத்தவ:14/66

TOP


கூன் (13)

நான செப்பொடு கூன் பின் துளங்க – உஞ்ஞை:40/29
பைம் கூன் பாதிரி போது பிரித்து அன்ன – உஞ்ஞை:42/204
குங்குமம் கொண்ட கூன் வழுக்குறவும் – உஞ்ஞை:46/256
குழிப்படு வேழ கூன் மருப்பு இரட்டையும் – உஞ்ஞை:58/83
கூன் புறம் பழித்த கோல புற அடி – இலாவாண:15/58
பாகனை ஒழித்து கூன்_மகள் கோல் கொள – மகத:5/97
கூன் மட_மகள்-தனை கோமகன் குறுகி – மகத:6/160
சே இழை கூன்_மகள் சென்றனள் விரைந்து என் – மகத:6/200
சே இழை கூன்_மகள் செவ்வனம் கூறி – மகத:7/1
கூன்_மகள் குறிப்பு தான் மனத்து அடக்கி – மகத:8/87
கோல கூன்_மகட்கு அறிய கூறி – மகத:9/47
கூன்_மகள் வீச ஆனா அகத்தே – மகத:13/84
கூன் மேல் புரட்டியும் குயநடு ஒட்டியும் – வத்தவ:12/85

TOP


கூன்_மகட்கு (1)

கோல கூன்_மகட்கு அறிய கூறி – மகத:9/47

TOP


கூன்_மகள் (5)

பாகனை ஒழித்து கூன்_மகள் கோல் கொள – மகத:5/97
சே இழை கூன்_மகள் சென்றனள் விரைந்து என் – மகத:6/200
சே இழை கூன்_மகள் செவ்வனம் கூறி – மகத:7/1
கூன்_மகள் குறிப்பு தான் மனத்து அடக்கி – மகத:8/87
கூன்_மகள் வீச ஆனா அகத்தே – மகத:13/84

TOP


கூனல் (1)

யானையும் புலியும் கூனல் கரடியும் – உஞ்ஞை:54/28

TOP


கூனி (1)

மான் நேர் நோக்கின் கூனி மற்று அவள் – வத்தவ:12/78

TOP


கூனியை (2)

அயிராபதி எனும் செயிர் தீர் கூனியை
தடம் தோள் மாதர் கொடும் கழுத்து அசைஇ – மகத:8/55,56
யான் இவண் நிற்ப கூனியை புகழ்தல் – வத்தவ:12/96

TOP


கூனும் (2)

கூனும் குறளும் மாண் இழை மகளிரும் – உஞ்ஞை:38/178
கூனும் குறளும் மேல் நாம் கூறிய – வத்தவ:10/71

TOP