கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோர் 12
சோர்தர 1
சோர்தரும் 1
சோர்தலால் 1
சோர்ந்தன 1
சோர்ந்தனளே 1
சோர்ந்தார் 2
சோர்ந்தாள் 2
சோர்ந்து 9
சோர்வார் 2
சோர்வு 3
சோர 20
சோரவும் 1
சோரா 1
சோரும் 4
சோருமால் 2
சோலை 37
சோலை-வாய் 1
சோலையின் 1
சோலையும் 1
சோற்றின் 2
சோற்று 2
சோறு 4
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சோர் (12)
சோர் புயல் முகில் தலை விலங்கி தூ நிலம் – சிந்தா:1 58/1
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள் – சிந்தா:1 302/4
வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலை தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழும் கயல் தடம் கண் போலும் – சிந்தா:2 439/1,2
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர்
வள மலர் கோதை தன்னை வாய்விடான் குழைய புல்லி – சிந்தா:3 841/2,3
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல் – சிந்தா:4 876/1
நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே – சிந்தா:4 1004/1
சோர் புயல் தொலைத்த வண் கை சுபத்திரன் மனைவி பெற்ற – சிந்தா:6 1450/2
சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர் குழல் – சிந்தா:6 1474/3
பைம் துகில் மகளிர் தேன் சோர் பவள வாய் திகழ நாணி – சிந்தா:7 1819/1
சொல்லு-மினும் நீவிர் கற்ற காலம் என தேன் சோர்
சில்லென் கிளி கிளவி அது சிந்தையிலன் என்றான் – சிந்தா:9 2027/3,4
தூ மலர் மாலை வாளா சுரும்பு எழ புடைத்தும் தேன் சோர்
தாமரை சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும் – சிந்தா:13 2656/1,2
ஐ படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல் – சிந்தா:13 2938/3
சோர்தர (1)
ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
வீரம் பட கையை மெய்-வழி வீசி – சிந்தா:3 631/1,2
சோர்தரும் (1)
சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன் – சிந்தா:4 939/2
சோர்தலால் (1)
புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால்
மது விரி கோதை அம் மாலை நின் மனம் – சிந்தா:4 1015/2,3
சோர்ந்தன (1)
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும் – சிந்தா:3 723/3
சோர்ந்தனளே (1)
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே – சிந்தா:6 1526/4
சோர்ந்தார் (2)
தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே – சிந்தா:3 647/4
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார் – சிந்தா:3 727/3,4
சோர்ந்தாள் (2)
அற்றது ஓர் கோதையின் பொன்_தொடி சோர்ந்தாள் – சிந்தா:1 226/4
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள் – சிந்தா:1 299/4
சோர்ந்து (9)
சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி – சிந்தா:0 13/1
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனை தமியன் ஆக – சிந்தா:1 408/2
கை சோர்ந்து அணல் ஊன்றி கண்ணீர் கவுள் அலைப்ப – சிந்தா:9 2050/2
சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை ஒத்தார் – சிந்தா:9 2052/2
அரிதினில் திகிரி ஏறி திரிந்து கண் கழன்று சோர்ந்து
விரி கதிர் கடவுள் போல வெறு நிலத்து ஒலிப்ப வீழ்ந்தான் – சிந்தா:10 2189/3,4
இலையார் கடக தட கை புடைத்து மெய் சோர்ந்து இருந்தான் – சிந்தா:10 2197/4
சொல் பொறி சோர எல்லா பொறிகளும் சோர்ந்து நம்பன் – சிந்தா:13 2886/3
சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே – சிந்தா:13 2979/4
முந்நீர் வலம் புரி சோர்ந்து அசைந்து வாய் முரன்று முழங்கி ஈன்ற – சிந்தா:13 3143/1
சோர்வார் (2)
எற்றுவார் இனைந்து சோர்வார் நம்பியோ நம்பி என்னா – சிந்தா:9 2096/3
கண்ணி கொண்டு எறிய அஞ்சி கால் தளர்ந்து அசைந்து சோர்வார்
சுண்ணமும் சாந்தும் வீழ தொழுதனர் இரந்து நிற்பார் – சிந்தா:13 2659/1,2
சோர்வு (3)
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான் – சிந்தா:2 409/4
சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் – சிந்தா:4 933/3
சுற்றி வள்ளலை சோர்வு இன்றி யாத்திட்டாள் – சிந்தா:5 1295/3
சோர (20)
விண்டு கண் அருவி சோர விம்மு உயிர்த்து இனையை ஆதல் – சிந்தா:1 271/3
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த – சிந்தா:1 273/1
களி முக சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளி முக சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால் – சிந்தா:1 298/1,2
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய – சிந்தா:1 324/1
சொரி மலர் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோர
திரு மலர் கண்ணி சிந்த தெருமந்து மயங்கி வீழ்ந்தான் – சிந்தா:1 389/3,4
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம்மறந்து சோர
அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம் – சிந்தா:3 729/2,3
செம் தளிர் கோதை சோர கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:3 840/2
தூமம் கமழ் பூம் துகில் சோர அசையா – சிந்தா:4 1071/1
மல்லிகை மலிந்த மாலை சோர ஆர்ந்த குண்டலம் – சிந்தா:4 1100/1
நுண் துகில் போர்வை சோர நுழை மழை மின்னின் நிற்ப – சிந்தா:7 1570/3
சிறு நுதல் புருவம் ஏற்றா சேர் துகில் தானை சோர
அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள் – சிந்தா:7 1572/3,4
தொழுத தம் கையினுள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரினுள்ளும் அணிகலத்து அகத்தும் ஆய்ந்து – சிந்தா:8 1891/1,2
பொன் அரி மாலை தாழ பூ சிகை அவிழ்ந்து சோர
மின் இரும் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க வெம்பி – சிந்தா:8 1985/2,3
குண்டலம் இலங்க கோதை கூந்தலோடு அவிழ்ந்து சோர
ஒண்_தொடி ஊடி நின்றாள் ஒளி மணி பூம் கொம்பு ஒப்பாள் – சிந்தா:9 2086/3,4
அலங்கல் தாது அவிழ்ந்து சோர அல்குல் பொன் தோரை மின்ன – சிந்தா:10 2132/1
நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரி மாலை சோர
கையார் வளையார் புலி கண்ணுற கண்டு சோரா – சிந்தா:11 2342/2,3
அவிர் இழை சுடர முல்லை அலங்கல் அம் கூந்தல் சோர
தவிர் வெய்ய காமம் தாங்கி தட முலை கால்கள் சாய – சிந்தா:12 2542/1,2
போதொடு கலங்கள் சோர எழுந்து பொன் ஆர மார்பன் – சிந்தா:13 2615/3
சொல் பொறி சோர எல்லா பொறிகளும் சோர்ந்து நம்பன் – சிந்தா:13 2886/3
தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோர தாமரை கண் தாம் இரங்க புருவம் ஆட – சிந்தா:13 3136/2
சோரவும் (1)
அம் பொன் மாலையோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும்
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர் – சிந்தா:4 1103/2,3
சோரா (1)
கையார் வளையார் புலி கண்ணுற கண்டு சோரா
நையா துயரா நடுங்கும் பிணை மான்கள் ஒத்தார் – சிந்தா:11 2342/3,4
சோரும் (4)
சோரும் செம் குருதியுள் மைந்தர் தோன்றுவார் – சிந்தா:3 790/2
சோரும் காரிகையாள் சுரமஞ்சரி – சிந்தா:9 2005/1
சோரும் வார் புயல் துளங்க விண் புகுவன துரகம் – சிந்தா:10 2160/4
வழிந்து தேன் வார்ந்து சோரும் வருக்கையின் நீழல் சேர்ந்தான் – சிந்தா:13 2720/3
சோருமால் (2)
கண்ணும் வாள் அற்ற கை வளை சோருமால்
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு-அரோ – சிந்தா:4 998/1,2
கழலும் நெஞ்சொடு கை வளை சோருமால்
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என – சிந்தா:6 1511/1,2
சோலை (37)
கொய் நாக சோலை கொடி அ நகர் புக்கவாறும் – சிந்தா:0 17/4
துளியொடு மது துளி அறாத சோலை சூழ் – சிந்தா:1 64/3
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பக சோலை யார்க்கும் – சிந்தா:1 140/3
சோலை மயிலார்கள் துணை வெம் முலைகள் துஞ்சும் – சிந்தா:1 283/3
தேன் ஆர் மலர் சோலை செ வரையின் மேல் சிறு பிடிகள் போல துயர் உழந்து தாம் – சிந்தா:1 296/2
நயந்தனர் போகி நறு மலர் சோலை
அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார் – சிந்தா:3 522/3,4
மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட – சிந்தா:3 524/1
சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள் – சிந்தா:4 862/1
சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும் – சிந்தா:4 893/1
சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல்-தன்னை – சிந்தா:4 897/1
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்-மின் – சிந்தா:4 919/4
சோலை வேய் மருள் சூழ் வளை தோளி தன் – சிந்தா:4 999/1
அலைத்து வீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ் – சிந்தா:5 1210/3
விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை
மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என புல்லி – சிந்தா:5 1225/2,3
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா – சிந்தா:5 1232/2
சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை
வந்து வீழ் மாலை நாற்றி மணி அரங்கு அணிந்து வானத்து – சிந்தா:5 1253/1,2
கொய்தகை பொதியில் சோலை குழவிய முல்லை மௌவல் – சிந்தா:5 1267/1
நற விரி சோலை ஆடி நாள்மலர் குரவம் பாவை – சிந்தா:5 1270/1
சோலை வேய் மருள் சூழ் வளை தோளியே – சிந்தா:5 1327/4
பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான் – சிந்தா:5 1328/4
பூம் சினை நாகம் தீம் பூ மரம் கருப்பூர சோலை
மா சினை மயில்கள் ஆட சண்பக மலர்கள் சிந்தும் – சிந்தா:6 1497/2,3
வண்டு ஆர் சோலை வார் மணம் நாற புகுகின்றான் – சிந்தா:7 1636/3
திருந்து சோலை கரும் குயிலே சிலம்ப இருந்து கூவுதியால் – சிந்தா:7 1661/4
வெறி கமழ் சோலை நண்ணி வேண்டிய அடிசில் கை தொட்டு – சிந்தா:7 1818/3
சோலை வரை மேல் இழியும் தோகை மயில் ஒத்தாள் – சிந்தா:9 2018/4
சோலை ஆய் சொரி மும்மதத்தால் நிலம் – சிந்தா:10 2170/3
வேல் மிடை சோலை வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்றான் – சிந்தா:10 2206/4
சோலை வேய் மருள் தோள் முத்தும் தொழுதக அணிந்தார் – சிந்தா:12 2383/4
சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும் – சிந்தா:12 2453/3
குள நெல் முன்றில் கனி தேன் சொரி சோலை குளிர் மணி – சிந்தா:12 2491/1
சோலை மஞ்ஞை தொழுதி போல் தோகை செம்பொன் நிலம் திவள – சிந்தா:13 2698/2
நெடு வரை அருவி ஆடி சந்தனம் நிவந்த சோலை
படு மதம் கவரும் வண்டு பைம் தளிர் கவரி ஏந்தி – சிந்தா:13 2715/1,2
சோலை மயில் அன்னார் தோள் சேர்விலர்-ஆயின் – சிந்தா:13 2796/3
ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மர சோலை
தான் சேர் பிணி என்னும் செம் தீ கொடி தங்கி – சிந்தா:13 2797/1,2
சோலை மீன் அரும்பி திங்கள் சுடரொடு பூத்ததே போல் – சிந்தா:13 2835/1
சோலை மஞ்ஞை சூழ் வளையார் தோள் விளையாடி – சிந்தா:13 2928/2
முழுதும் முந்திரிகை பழ சோலை தேன் – சிந்தா:13 3063/1
சோலை-வாய் (1)
சோலை-வாய் சுரும்பு இனம் தொழுது சொன்னவே – சிந்தா:13 3032/4
சோலையின் (1)
தழை தவழ் சந்தன சோலையின் நோக்கி – சிந்தா:3 524/3
சோலையும் (1)
புள் உடை கனியின் பொலி சோலையும்
உள் உடை பொலிவிற்று ஒருபால் எல்லாம் – சிந்தா:4 868/3,4
சோற்றின் (2)
சுமை தயிர் வேய்ந்த சோற்றின் துய்த்து இனிது ஆக நம்மை – சிந்தா:13 2617/1
பெரும் பலி சோற்றின் ஈதல் பெரிது அரிது ஆகுமேனும் – சிந்தா:13 2926/2
சோற்று (2)
கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார் – சிந்தா:3 805/1,2
அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை – சிந்தா:4 934/1
சோறு (4)
தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா – சிந்தா:3 692/1
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி – சிந்தா:3 757/3
துன்புற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும் – சிந்தா:13 2828/3
மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு
ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவை தயிரொடு ஏந்தி – சிந்தா:13 2972/2,3