கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூட்ட 2
சூட்டி 21
சூட்டிக்கொண்டவன் 1
சூட்டிய 4
சூட்டின் 2
சூட்டின 1
சூட்டினார் 1
சூட்டினானே 1
சூட்டு 10
சூட்டும் 4
சூட்டுவான் 1
சூட்டொடு 3
சூடக 2
சூடகம் 2
சூடாதார் 1
சூடார் 1
சூடி 21
சூடிய 10
சூடியவர் 2
சூடின் 1
சூடினார் 1
சூடினாள் 1
சூடினான் 1
சூடினான்-அரோ 1
சூடினும் 1
சூடு 2
சூடுறு 3
சூத்திரன்-பாலது 1
சூது 1
சூது-அரோ 1
சூதே 1
சூர் 1
சூர்த்துடன் 1
சூரியகாந்தம் 1
சூரியன் 1
சூரையர் 1
சூல் 9
சூலத்து 1
சூலம் 3
சூலு 1
சூழ் 91
சூழ்-மின்களே 1
சூழ்க 1
சூழ்ச்சி 6
சூழ்ச்சியில் 1
சூழ்ச்சியின் 2
சூழ்ந்த 29
சூழ்ந்த-வண்ணம் 1
சூழ்ந்ததே 1
சூழ்ந்தவே 2
சூழ்ந்தன 2
சூழ்ந்தார் 9
சூழ்ந்தால் 1
சூழ்ந்தாள் 1
சூழ்ந்தான் 1
சூழ்ந்து 44
சூழ்ந்து-அரோ 1
சூழ்வதனை 2
சூழ்வார் 1
சூழ்வினையாளர் 1
சூழ 33
சூழி 7
சூழும் 4
சூள் 1
சூளாமணி 3
சூளாமணியாய் 1
சூன்றிடப்பட்டும் 1
சூன்று 1
சூன்றும் 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சூட்ட (2)
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம் – சிந்தா:3 679/3,4
கலந்தனன் காம மாலை கலையினது இயல்பில் சூட்ட
புலம்பு போய் சாயல் என்னும் புது தளிர் ஈன்றது அன்றே – சிந்தா:5 1357/3,4
சூட்டி (21)
கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி
அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று – சிந்தா:3 495/2,3
இளம் கதிர பருதி சூட்டி இயற்றியது என்னல் ஆமே – சிந்தா:3 527/4
நல் நுதல் பட்டம் கட்டி நகை முடி கோதை சூட்டி
அலர் முலை குருதி சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி – சிந்தா:3 673/2,3
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர் – சிந்தா:3 678/4
கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் கொல்வானே குங்கும சேறு ஆட்டினார்கள் – சிந்தா:3 681/1
பேர் இசை வீணையில் சூட்டி பெண் கொடி – சிந்தா:6 1466/3
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும் – சிந்தா:6 1486/1
சுனை மலர் குவளை குற்று சூழ் மலர் கண்ணி சூட்டி
வினை நலம் நுகர்ந்து செல்வார் விதியினால் மிக்க நீரார் – சிந்தா:6 1495/3,4
மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி
குழல் புரை கிளவியோடும் கொழும் புகை அமளி சேர்ந்தான் – சிந்தா:6 1503/3,4
நன் பகல் சூட்டி விள்ளாது ஒழுகினும் நங்கைமார்க்கு – சிந்தா:7 1596/3
கொங்கு அலர் கோதை சூட்டி குழல் நலம் திருத்தினானே – சிந்தா:9 2064/4
தொடுத்து அலர் மாலை சூட்டி கிம்புரி முத்தம் மென் தோள் – சிந்தா:9 2091/2
கற்பக மாலை சூட்டி கடி அர மகளிர் தோய்வர் – சிந்தா:10 2302/2
பொற்ற சொல் மாலை சூட்டி புலவர்கள் புகழ கல் மேல் – சிந்தா:10 2302/3
விரை தலை மாலை சூட்டி மின் அனார் அம் கை சேப்ப – சிந்தா:12 2414/1
தவா கதிர் காசு கண்டார் ஆவியை தளர சூட்டி
கவாய் கிடந்து அணங்கு நாறும் கண் கொளா பட்டு உடுத்தாள் – சிந்தா:12 2444/2,3
ஆய்ந்து சூட்டி அவன் அஞ்சலி செய்தான் – சிந்தா:12 2479/4
விழு முலை சூட்டி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார் – சிந்தா:13 2716/4
உடை மது ஒழுக சூட்டி உருவ தார் குழைய வைகி – சிந்தா:13 2719/3
மண் ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டி
கண் ஆர் மறி அறுத்து கையால் உதிரம் தூய் – சிந்தா:13 2780/1,2
மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான் – சிந்தா:13 2914/3
சூட்டிக்கொண்டவன் (1)
குழல் சிகை கோதை சூட்டிக்கொண்டவன் இருப்ப மற்று ஓர் – சிந்தா:1 252/1
சூட்டிய (4)
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன் – சிந்தா:1 144/3
சூட்டிய ஓடை பொங்க நாண் எனும் தோட்டி மாற்றி – சிந்தா:7 1688/2
குஞ்சி சூட்டிய மைந்தர் குழாம் அலால் – சிந்தா:8 1947/3
நல் எழில் மங்கையர் நல் நுதல் சூட்டிய
வெல் கதிர் பட்டம் விளங்கிற்று ஒருபால் – சிந்தா:10 2113/3,4
சூட்டின் (2)
அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி – சிந்தா:3 745/1
ஊன் தலை பொடித்த ஆங்கு அனைய செம் சூட்டின் ஒளி மயிர் வாரணம் ஒருங்கே – சிந்தா:10 2106/1
சூட்டின (1)
ஆர் ஒளி அமைந்தன ஆய் பொன் சூட்டின
கார் ஒளி மின் உமிழ் தகைய கால் இயல் – சிந்தா:10 2229/2,3
சூட்டினார் (1)
தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார்
எழுது கொம்பு அனையார் இளையாளையே – சிந்தா:5 1317/3,4
சூட்டினானே (1)
தேனீர் மலர் மாலை தேன் துளித்து மட்டு உயிர்ப்ப சூட்டினானே – சிந்தா:5 1354/4
சூட்டு (10)
சூட்டு உடைய சேவலும் தோணி கோழி ஆதியா – சிந்தா:1 73/2
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை – சிந்தா:2 481/3
பண் நிற சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார் – சிந்தா:3 624/4
ஒருமேல் ஒண் மணி சூட்டு வைக்கிய – சிந்தா:3 790/3
ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன் – சிந்தா:3 828/1
சூட்டு வைத்து அனையது அ சுடர் பொன் இஞ்சியே – சிந்தா:6 1445/4
வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர் – சிந்தா:12 2389/3
அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லை சூட்டு மிலைச்சி – சிந்தா:12 2438/2
சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கு என்றான் – சிந்தா:13 2799/4
முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் – சிந்தா:13 3119/3
சூட்டும் (4)
துறு மலர் பிணையலும் சூட்டும் சுண்ணமும் – சிந்தா:1 193/1
மட பிடிக்கு உய்தல் உண்டோ வால் அடி குஞ்சி சூட்டும்
கொடைக்கையான் பிரிந்த பின்றை கோதையாட்கு உய்தல் உண்டோ – சிந்தா:6 1529/3,4
சுண்ணமும் சூட்டும் சொரிந்து வார் குழல் – சிந்தா:10 2114/1
சூட்டும் சுண்ணமும் அணிந்து சுந்தரம் – சிந்தா:12 2519/1
சூட்டுவான் (1)
நுரை எனும் மாலையை நுகர சூட்டுவான்
சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை – சிந்தா:1 39/2,3
சூட்டொடு (3)
சூட்டொடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி – சிந்தா:2 484/3
சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி திரியும் அன்றே – சிந்தா:3 786/4
சூழ் மணி ஆழி செம்பொன் சூட்டொடு கண்ணி காதல் – சிந்தா:12 2569/2
சூடக (2)
சூடக திரள் தோள் அணி வாட்டினாள் – சிந்தா:5 1370/4
சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை ஒத்தார் – சிந்தா:9 2052/2
சூடகம் (2)
சூடகம் அணிந்த முன்கை சுடர் மணி பூணினாளை – சிந்தா:2 479/2
சூடகம் அணிந்த முன் கைத்தொகு விரல் சேப்ப எற்றி – சிந்தா:7 1697/3
சூடாதார் (1)
சூடாதார் தாள் சூடார் மாலை சுடர் மணி நெடு முடியே – சிந்தா:13 3018/4
சூடார் (1)
சூடாதார் தாள் சூடார் மாலை சுடர் மணி நெடு முடியே – சிந்தா:13 3018/4
சூடி (21)
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள் – சிந்தா:1 55/2
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே – சிந்தா:1 168/4
ஏமுற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடியிருந்து அம் சுணங்கு பரந்தனவே – சிந்தா:1 171/3,4
அரக்கு இயல் செங்கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடி
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அற திரண்டு நீண்டு – சிந்தா:1 178/1,2
வால் அருவி வாமன் அடி தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி – சிந்தா:1 291/3
தேன் கொள் பூ மாலை சூடி தாமம் ஆய் திரண்டு நிற்ப – சிந்தா:3 764/3
சூழ் குடர் கண்ணி சூடி நிண துகில் உடுத்து வெள் என்பு – சிந்தா:3 803/3
வீறு உயர் முடியும் சூடி விழு நில கிழமை பூண்டு – சிந்தா:5 1221/2
மாலை வெள் அருவி சூடி மற்று இதா தோன்றுகின்ற – சிந்தா:5 1232/1
கடி மாலை சூடி கருப்பூரம் முக்கி – சிந்தா:7 1574/1
நிண மாலை குடர் சூடி நெருப்பு இமையா நெய்த்தோரில் – சிந்தா:10 2235/3
சுற்றுபு மாலை போல தோன்றல் தன் நுதலில் சூடி
பொற்றது ஓர் பவழம் தன் மேல் புனை மணி அழுத்தி ஆங்கு – சிந்தா:10 2247/2,3
கொத்து அலர் தும்பை சூடி கோவிந்தன் வாழ்க என்னா – சிந்தா:10 2277/2
வட திசை எழுந்த மேகம் வலன் உராய் மின்னு சூடி
குட திசை சேர்ந்து மாரி குளிறுபு சொரிவதே போல் – சிந்தா:10 2304/1,2
வார் மீது ஆடி வடம் சூடி பொற்பு ஆர்ந்து இருந்த வன முலையார் – சிந்தா:11 2359/1
வளம் கொள் மாலைகள் சூடி முத்து அணிந்து வண் முரசம் – சிந்தா:12 2388/3
வான் மலர் நுரை சூடி மணி அணி கலன் சிந்தா – சிந்தா:12 2432/1
மை திரண்ட வார் குழல் மேல் வண்டு ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடி
கை திரண்ட வேல் ஏந்தி காமன் போல் காரிகையார் மருள சென்றார் – சிந்தா:13 2626/1,2
பணி ஆர் பண்ணு பிடி ஊர்ந்து பரூஉ கால் செம் நெல் கதிர் சூடி
தணியார் கழனி விளையாடி தகை பாராட்ட தங்கினார் – சிந்தா:13 2699/3,4
போர்வை புழு மொய்ப்ப பொல்லா குடர் சூடி
சார்தற்கு அரிது ஆகி தான் நின்று அறா அள்ளல் – சிந்தா:13 2791/2,3
நுதி முகம் முத்தம் சூடி நோக்குநர் ஆவி வாட்ட – சிந்தா:13 2838/3
சூடிய (10)
தங்கு ஒளி நித்தில தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார் – சிந்தா:1 94/1,2
தூமம் சூடிய தூ துகில் ஏந்து அல்குல் – சிந்தா:4 875/1
தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள் – சிந்தா:4 875/2
நாமம் சூடிய நல்_நுதல் நீட்டினாள் – சிந்தா:4 875/3
காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே – சிந்தா:4 875/4
ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர் – சிந்தா:4 949/1
கடம்பு சூடிய கன்னி மாலை போல் – சிந்தா:4 990/1
சூடிய கலை புறம் சூழ்ந்த பூம் துகில் – சிந்தா:4 1007/2
ஆரம் சூடிய அம் முலை பூம் தடம் – சிந்தா:9 2005/2
அன்று சூடிய மாலையர் ஆடிய சாந்தர் – சிந்தா:12 2380/1
சூடியவர் (2)
அடி மலர் சூடியவர் உலகில் யாரே – சிந்தா:13 2739/2
அடி மலர் சூடியவர் உலகம் ஏத்த – சிந்தா:13 2739/3
சூடின் (1)
பூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் – சிந்தா:7 1699/1
சூடினார் (1)
உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார் – சிந்தா:13 2682/4
சூடினாள் (1)
கொண்டாள் தினை குரல் தான் சூடினாள் தாழ் குழல் மேல் – சிந்தா:4 1039/2
சூடினான் (1)
அம்_சில்_ஓதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான் – சிந்தா:3 691/4
சூடினான்-அரோ (1)
சூடினான்-அரோ சுரும்பு உண் கண்ணியே – சிந்தா:12 2423/4
சூடினும் (1)
புரிந்து சூடினும் பூம் கொடி நுண் இடை – சிந்தா:6 1512/2
சூடு (2)
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என – சிந்தா:6 1511/2
சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி – சிந்தா:9 2055/3
சூடுறு (3)
சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனை சொன்னான் – சிந்தா:4 957/1
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன் – சிந்தா:4 1054/3
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழலாற்கு – சிந்தா:4 1057/1
சூத்திரன்-பாலது (1)
பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான் – சிந்தா:5 1287/4
சூது (1)
வெல்வது சூது என வேண்டி விடுத்தார் – சிந்தா:4 879/4
சூது-அரோ (1)
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது-அரோ
கொற்றம் கொள் குறி கொற்றவற்கு என்பவே – சிந்தா:8 1921/3,4
சூதே (1)
களவு கடன் ஆக கடிந்திடுதல் சூதே – சிந்தா:13 2870/4
சூர் (1)
முந்து சூர் தடிந்த முருகன் நம்பி என்பார் – சிந்தா:12 2548/1
சூர்த்துடன் (1)
சூர்த்துடன் வீழ நோக்கி சுடு சரம் சிதற வல்லான் – சிந்தா:10 2200/3
சூரியகாந்தம் (1)
சூரியன் காண்டலும் சூரியகாந்தம் அஃது – சிந்தா:10 2208/1
சூரியன் (1)
சூரியன் காண்டலும் சூரியகாந்தம் அஃது – சிந்தா:10 2208/1
சூரையர் (1)
வட்ட சூரையர் வார் முலை கச்சினர் – சிந்தா:3 632/1
சூல் (9)
சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் – சிந்தா:1 53/1
பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே – சிந்தா:1 231/4
சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல் – சிந்தா:3 717/1
நீல் நிற பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம் – சிந்தா:3 789/1
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான் – சிந்தா:3 803/4
தடித்து இறை திரண்டு தம் அளவிற்கு ஏற்ற சூல்
கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய – சிந்தா:6 1464/1,2
புள்ளி வாழ் அலவன் பொறி வரி கமம் சூல் ஞெண்டினுக்கு உய்த்து நோய் தணிப்பான் – சிந்தா:10 2109/2
முரல் வாய சூல் சங்கம் முட முள் தாழை முகை விம்மும் – சிந்தா:12 2558/1
மங்கை மனா அனைய மென் சூல் மட உடும்பு – சிந்தா:13 2781/1
சூலத்து (1)
அழல் அவிர் சூலத்து அண்ணலே போல அருவி நீர் மருப்பினின் எறிய – சிந்தா:10 2105/2
சூலம் (3)
நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி – சிந்தா:4 1136/2
ஒள் இலை சூலம் தெள் நீர் உலா முகில் கிழிக்கும் மாட – சிந்தா:12 2527/1
சூலம் நெற்றிய கோபுர தோற்றமும் – சிந்தா:13 3003/2
சூலு (1)
சூழ் குலை பசும் கமுகு சூலு பாளை வெண்பொனால் – சிந்தா:1 147/3
சூழ் (91)
கோணை களிற்று கொடி தேர் இவுளி கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன்மாரும் – சிந்தா:0 28/1,2
துளியொடு மது துளி அறாத சோலை சூழ்
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே – சிந்தா:1 64/3,4
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த – சிந்தா:1 109/1
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம் – சிந்தா:1 109/2
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர் – சிந்தா:1 127/3
சூழ் குலை பசும் கமுகு சூலு பாளை வெண்பொனால் – சிந்தா:1 147/3
கோதை நித்திலம் சூழ் குளிர் வெண்குடை – சிந்தா:1 159/1
கலை ஆர் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலை ஆர் தடமும் முனியாது படிந்து – சிந்தா:1 216/1,2
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே – சிந்தா:1 268/4
பற்றா மன்னன் நகர் புறமால் பாயல் பிணம் சூழ் சுடுகாடால் – சிந்தா:1 310/1
அஞ்ச சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள் – சிந்தா:1 351/4
சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணி பூணினானும் – சிந்தா:1 380/1
பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும் – சிந்தா:2 410/2
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் – சிந்தா:2 427/3
சூழ் துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கி சேக்கை – சிந்தா:2 449/3
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலை பந்தர் – சிந்தா:2 485/3
கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூம் கொடி – சிந்தா:3 529/1
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார் – சிந்தா:3 672/4
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர் – சிந்தா:3 678/4
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து – சிந்தா:3 691/3
சூழ் மணி கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி – சிந்தா:3 728/2
சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு – சிந்தா:3 757/2
சூழ் குடர் கண்ணி சூடி நிண துகில் உடுத்து வெள் என்பு – சிந்தா:3 803/3
பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க – சிந்தா:3 840/1
சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள் – சிந்தா:4 862/1
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே – சிந்தா:4 882/4
கன்னி மாநகர் கன்னியர் சூழ் தர – சிந்தா:4 900/1
கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல் – சிந்தா:4 949/2
சோலை வேய் மருள் சூழ் வளை தோளி தன் – சிந்தா:4 999/1
சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில் இட – சிந்தா:4 1021/3
பொன் குன்று-ஆயினும் பூம் பழனங்கள் சூழ்
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான் – சிந்தா:4 1031/1,2
ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ம் குவளை பைம் தடம் சூழ்
மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து – சிந்தா:4 1042/1,2
விடை சூழ் ஏற்றின் வெல் புகழான் தன் மிகு தாதை – சிந்தா:4 1058/1
கடல் சூழ் வையம் கை படுத்தான் போன்று இது கூற – சிந்தா:4 1058/2
குடர் சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் அ – சிந்தா:4 1058/3
படர் சூழ் நெஞ்சின் பாவை-தன் பண்பும் அவர் சொன்னார் – சிந்தா:4 1058/4
சூழ் கதிர் ஆரம் வீழ் நூல் பரிந்து அற நிமிர்ந்து திண் தோள் – சிந்தா:4 1120/3
சூழ் கழல் மள்ளர் பாற சூழ்ச்சியின் தந்தை புல்லி – சிந்தா:4 1138/1
மதி தள்ளி இடும் வழை சூழ் பொழிலே – சிந்தா:5 1194/4
ஏங்கு கம்பலத்து இன் இசை சூழ் வயல் – சிந்தா:5 1197/3
கானவர் குரம்பை சூழ் காடு தோன்றுமே – சிந்தா:5 1201/4
அலைத்து வீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ்
வலத்தது வனகிரி மதியின் தோன்றுமே – சிந்தா:5 1210/3,4
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை – சிந்தா:5 1213/1
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா – சிந்தா:5 1232/2
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா – சிந்தா:5 1232/2
பன் மலர் கிடங்கு சூழ் பசும்பொன் பாம்புரி – சிந்தா:5 1250/2
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை – சிந்தா:5 1296/3
நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையை கொடுக்கும் என்பார் – சிந்தா:5 1296/4
சோலை வேய் மருள் சூழ் வளை தோளியே – சிந்தா:5 1327/4
மஞ்சு சூழ் வரை மார்பனை காணிய – சிந்தா:5 1373/1
பனி வெண் திரை சூழ் கடல் போல் பழுவம் தோன்றிற்று அவணே – சிந்தா:6 1414/4
சுரும்பு சூழ் இலம்பக தோற்றம் ஒத்ததே – சிந்தா:6 1442/4
சூழ் வளை தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும் – சிந்தா:6 1452/3
சுனை மலர் குவளை குற்று சூழ் மலர் கண்ணி சூட்டி – சிந்தா:6 1495/3
இன மா மணி சூழ் எரி பூணவனை – சிந்தா:6 1519/3
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார் – சிந்தா:6 1541/3
கருவி தேன் என தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ்
பொருவில் யானையின் பழு போல் பொங்கு காய் குலை அவரை – சிந்தா:7 1561/1,2
சுனைய நீலமும் சுள்ளியும் சூழ் மலர் – சிந்தா:7 1608/1
சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும் – சிந்தா:7 1652/1
தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான் – சிந்தா:7 1679/4
தோய் பிழி துளிக்கும் கண்ணி சுரும்பு சூழ் கொம்பு அனாளே – சிந்தா:7 1707/4
மணி பொதி துகிலின் தோன்றும் மஞ்சு சூழ் வரைகள் நாடி – சிந்தா:7 1742/1
மஞ்சு சூழ் விசும்பு-இடை மணந்து மின் மிளிர்வ போல் – சிந்தா:7 1828/1
ஆர் பொன் அடி சூழ் மணி அம் கழல் ஆனை வேந்தன் – சிந்தா:7 1869/2
தாழ் முகில் சூழ் பொழில் சந்தன காற்று அசைந்து – சிந்தா:8 1904/3
சொரி மது சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் நந்தன் என்றான் – சிந்தா:8 1925/4
சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான் – சிந்தா:8 1978/4
எதிர்த்த தண் புனல் சூழ் இன் நதி கரை மேல் இளையவர் அயா உயிர்த்து எழுந்தார் – சிந்தா:10 2108/4
பொங்கு வெண் மயிர் சூழ் பொன் படை பொலிந்த அறுபதின் ஆயிரம் புரவி – சிந்தா:10 2157/2
சூழ் கதிர் குழவி திங்கள் துறுவரை வீழ்வதே போல் – சிந்தா:10 2298/2
பஞ்சு சூழ் மணி மேகலை பரிந்து அவை சொரிய – சிந்தா:12 2384/3
விளங்கு வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலை சூழ்
வளம் கொள் மா மணி கூடம் சேர்த்தினார் – சிந்தா:12 2420/2,3
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை – சிந்தா:12 2522/3
சூழ் மணி ஆழி செம்பொன் சூட்டொடு கண்ணி காதல் – சிந்தா:12 2569/2
பஞ்சி சூழ் அல்குல் பல் வளை வீங்கு தோள் – சிந்தா:12 2576/1
நெடு நீர் கழனி சூழ் நியமம் சேர்த்தி விழவு அயர்ந்து – சிந்தா:13 2601/3
சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து – சிந்தா:13 2763/2
பாய்ந்து துகைப்ப கிழிந்த கூழை பனி தாமரை சூழ் பகல் கோயிலே – சிந்தா:13 2860/4
தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே – சிந்தா:13 2864/2
அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையா – சிந்தா:13 2866/3
தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும் – சிந்தா:13 2888/1
கரும்பு அலால் காடு ஒன்று இல்லா கழனி சூழ் பழன நாடும் – சிந்தா:13 2902/1
சோலை மஞ்ஞை சூழ் வளையார் தோள் விளையாடி – சிந்தா:13 2928/2
சுந்தர சுரும்பு சூழ் மாலை இல்லையேல் – சிந்தா:13 2936/3
வண்டு சூழ் பூ பலி சுமந்து தான் வலம் – சிந்தா:13 3052/1
வெண் திரை புணரி சூழ் வேலி வேந்தனே – சிந்தா:13 3052/4
முல்லை சூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயும் – சிந்தா:13 3062/1
கொல்லை சூழ் குன்றத்து உச்சி குருசில் நோற்று உயர்ந்தவாறும் – சிந்தா:13 3062/2
மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ – சிந்தா:13 3072/3
அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம் – சிந்தா:13 3088/3
சூழ் பொன் பாவையை சூழ்ந்து புல்லிய – சிந்தா:13 3120/1
சூழ்-மின்களே (1)
எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணி சூழ்-மின்களே – சிந்தா:7 1828/4
சூழ்க (1)
சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான் – சிந்தா:8 1978/4
சூழ்ச்சி (6)
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான் – சிந்தா:3 693/2
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி – சிந்தா:5 1222/1
இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி என்னோடு அங்கு இருந்த நம்பி – சிந்தா:5 1282/3
ஒண் மதி சூழ்ச்சி மிக்கான் உள்ளுழி உணர்தல் செல்லான் – சிந்தா:7 1695/2
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி நல் துணையொடு என் ஆம் – சிந்தா:8 1925/2
நூல்வலீர் இவனை கொல்லும் நுண் மதி சூழ்ச்சி ஈதே – சிந்தா:10 2148/3
சூழ்ச்சியில் (1)
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்றவாறும் – சிந்தா:0 9/2
சூழ்ச்சியின் (2)
அரு மதி சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய – சிந்தா:1 187/2
சூழ் கழல் மள்ளர் பாற சூழ்ச்சியின் தந்தை புல்லி – சிந்தா:4 1138/1
சூழ்ந்த (29)
கொடு மர எயினர் ஈண்டி கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
படு மணி நிரையை வாரி பைம் துகில் அருவி நெற்றி – சிந்தா:2 428/1,2
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியை சூழ – சிந்தா:2 468/2
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை – சிந்தா:2 475/1,2
பாடகம் போல சூழ்ந்த பழவினை பயத்தின் என்றான் – சிந்தா:3 510/4
திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி – சிந்தா:3 700/2
சூடிய கலை புறம் சூழ்ந்த பூம் துகில் – சிந்தா:4 1007/2
மாண்டது இல் செய்கை சூழ்ந்த வாணிகன் மகனை வல்லே – சிந்தா:4 1079/3
சிங்க ஏறு எள்ளி சூழ்ந்த சிறு நரி குழாத்தின் சூழ்ந்தார் – சிந்தா:4 1083/3
காலனை சூழ்ந்த நோய் போல் நபுல மா விபுலர் சூழ – சிந்தா:4 1144/1
மன்னுடன் ஏந்தி தெய்வ மாதரை சூழ்ந்த அன்றே – சிந்தா:4 1147/4
விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு இளம் பிறை சூழ்ந்த மின் போல் – சிந்தா:5 1297/1
திங்கள் சூழ்ந்த பல் மீன் என செல் நெறி – சிந்தா:5 1337/1
சில் அரி சிலம்பு சூழ்ந்த சீறடி திருவின் நற்றாய் – சிந்தா:5 1399/1
சுனைகள் கண்கள் ஆக சூழ்ந்த குவளை விழியா – சிந்தா:6 1417/1
வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் வெய்ய – சிந்தா:7 1739/2
இந்திர திருவில் சூழ்ந்த இன மழை குழாத்தின் வேழம் – சிந்தா:7 1753/2
வெண்ணிலா முத்தம் சூழ்ந்த வெம் முலை தடம் கணாளை – சிந்தா:7 1757/3
ஏந்து பூம் காவு சூழ்ந்த இரும் புனல் ஆறும் நீந்தி – சிந்தா:7 1820/3
சூழ்ந்த காசு தோன்ற அம் துகில் நெகிழ்ந்து பூம் குழல் – சிந்தா:8 1958/2
திங்கள் நலம் சூழ்ந்த திரு மீன்கள் என செம்பொன் – சிந்தா:9 2025/1
கலை புறம் சூழ்ந்த அல்குல் கார் மயில் சாயலாளும் – சிந்தா:9 2063/1
செல்வ பொன் கிடுகு சூழ்ந்த சித்திரக்கூடம் எங்கும் – சிந்தா:10 2139/2
காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார் – சிந்தா:10 2165/1
காய் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார் – சிந்தா:11 2348/3
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி – சிந்தா:12 2438/3
உரை வாய நகர் பரவ போகி ஒண் பொன் எயில் சூழ்ந்த
விரை வாய பூம் பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தானே – சிந்தா:12 2558/3,4
கொடி பல பூத்து சூழ்ந்த குங்கும குன்றம் ஒத்தான் – சிந்தா:13 2731/4
ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணி தேரை வல்லான் – சிந்தா:13 2909/1
மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல் – சிந்தா:13 3011/1
சூழ்ந்த-வண்ணம் (1)
வாங்கிக்கொண்டு உயிரை உண்பான் வஞ்சத்தால் சூழ்ந்த-வண்ணம்
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே – சிந்தா:10 2176/3,4
சூழ்ந்ததே (1)
நங்கை வாள் படை நங்கையை சூழ்ந்ததே – சிந்தா:3 763/4
சூழ்ந்தவே (2)
கண் சிறைப்படு நிழல் காவு சூழ்ந்தவே – சிந்தா:1 79/4
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே – சிந்தா:1 81/4
சூழ்ந்தன (2)
குன்றும் குளிர் நீர் தடம் சூழ்ந்தன கோல யாறும் – சிந்தா:8 1934/3
வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தனவே – சிந்தா:13 2852/4
சூழ்ந்தார் (9)
போது உலாம் கண்ணி மைந்தர் போர் புலி குழாத்தின் சூழ்ந்தார் – சிந்தா:3 694/4
சிங்க ஏறு எள்ளி சூழ்ந்த சிறு நரி குழாத்தின் சூழ்ந்தார்
அங்கு அது கண்ட தாதி ஐயனுக்கு இன்னது என்றாள் – சிந்தா:4 1083/3,4
பாலவர் பிறரும் ஈண்டி பாய் புலி இனத்தின் சூழ்ந்தார் – சிந்தா:4 1144/4
வெச்சென்றிட சொல்லி விரி கோதையவர் சூழ்ந்தார் – சிந்தா:9 2015/4
கோட்டு மீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினர் மன்னர் சூழ்ந்தார்
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம் – சிந்தா:10 2325/1,2
போர் மீது ஆடி புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார் – சிந்தா:11 2359/4
கை அணி குழல் மாலை கதிரி முலையவர் சூழ்ந்தார் – சிந்தா:12 2434/4
செப்பிய சீலம் என்னும் திரு மணி மாலை சூழ்ந்தார்
கப்பத்துள் அமரர் ஆவர் காட்சி இன் அமிர்தம் உண்டார் – சிந்தா:13 2843/1,2
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார்
கழுமிய துகிலின் காமன் கண் புடைத்து இரங்க மாதோ – சிந்தா:13 2993/3,4
சூழ்ந்தால் (1)
கொழும் கயல் கண்ணினாளை சீவககுமரன் சூழ்ந்தால்
அழுங்க சென்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ – சிந்தா:3 752/3,4
சூழ்ந்தாள் (1)
மையல்கொண்டிருப்ப அப்பால் குமரி தன் மதியின் சூழ்ந்தாள் – சிந்தா:9 2072/4
சூழ்ந்தான் (1)
குலத்தொடும் கோறல் எண்ணி கொடியவன் கடிய சூழ்ந்தான் – சிந்தா:1 261/4
சூழ்ந்து (44)
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும் – சிந்தா:1 143/2
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும் – சிந்தா:1 153/1
மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு – சிந்தா:1 170/1
உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆயிடை – சிந்தா:1 357/1
கூற்றுவன் கொடியன் ஆகி கொலை தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும் – சிந்தா:1 376/1,2
கோட்டு இளம் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல – சிந்தா:1 404/1
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய் – சிந்தா:1 404/2
பட்டமும் குழையும் மின்ன பல் கலன் ஒலிப்ப சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனை கொண்டு புக்கார் – சிந்தா:2 472/3,4
கதிர் முடி மன்னர் சூழ்ந்து கைதொழுது இறைஞ்சி மாலை – சிந்தா:3 613/1
தம்பியும் தோழன்மாரும் தானும் மற்று எண்ணி சூழ்ந்து
வெம்பிய வீணை போருள் செல்குவம் யாமும் முன்னே – சிந்தா:3 666/1,2
கான் உடை மாலை தன்னை கட்டியங்காரன் சூழ்ந்து
தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே – சிந்தா:3 686/3,4
கட்டளை புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி – சிந்தா:3 767/3
கடைந்து பெய் மணி கை செம்பொன் காசு அறு தட்டின் சூழ்ந்து
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார் – சிந்தா:3 839/1,2
சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு – சிந்தா:4 884/1
பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே – சிந்தா:4 971/4
அணி இரும் குஞ்சி ஏற கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து
தணி அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச – சிந்தா:4 977/2,3
வளை கடல் வலையின் சூழ்ந்து மால் வரை வேலி கோலி – சிந்தா:4 1115/1
துன்னுபு சூழ்ந்து தோன்ற சொல்லு-மின் செய்வது என்றான் – சிந்தா:4 1162/4
சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை – சிந்தா:5 1253/1
வளம் கெழு வடத்தை சூழ்ந்து வான் பொன் நாண் திளைப்ப சேந்த – சிந்தா:5 1297/2
காஞ்சன கமுகு காய் பொன் கனி குலை வாழை சூழ்ந்து
பூம் சினை நாகம் தீம் பூ மரம் கருப்பூர சோலை – சிந்தா:6 1497/1,2
பஞ்சு இறைகொண்ட பைம்பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து – சிந்தா:6 1538/1
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து
கை அரிக்கொண்டும் காணாள் காளையும் காலின் சென்றான் – சிந்தா:6 1540/3,4
சூழ்ந்து மா மயில் ஆடி நாடகம் துளக்குறுத்தனவே – சிந்தா:7 1560/4
சுள்ளி வேலியின் நீங்கி துறக்கம் புக்கிடும் என சூழ்ந்து
வெள்ளி வெண் திரள் விசித்து நிலத்தொடு தறி புடைத்தவை போல் – சிந்தா:7 1565/2,3
ஒழுகும் வெள் அருவி திரள் ஓடை சூழ்ந்து
இழுகு பொன் மதத்தின் வரை குஞ்சரம் – சிந்தா:7 1602/2,3
மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கி – சிந்தா:7 1680/1
சூழ்ந்து தொழுது இறைஞ்சி சொன்னார் அவன் திறமே – சிந்தா:7 1810/4
தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து
கொலை வைத்த குருதி வேலான் தோழரை குறுகினானே – சிந்தா:7 1881/3,4
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது-அரோ – சிந்தா:8 1921/3
காம கடு நோய் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இ – சிந்தா:8 1966/1
குற்றம் மற்றும் ஆகும் என்று கோதை சூழ்ந்து கூறினார்க்கு – சிந்தா:9 1998/3
பைம் கதிர் கொட்டை கவரி சூழ்ந்து அணிந்த பகரின் அ தொகையன பாய்மா – சிந்தா:10 2157/4
மை படை நெடும் கண் மாலை மகளிர் தம் வனப்பின் சூழ்ந்து
கை படு பொருள் இலாதான் காமம் போல் காளை மீண்டான் – சிந்தா:10 2259/3,4
மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரி சிலம்பு சூழ்ந்து
பஞ்சி கொண்டு எழுதப்பட்ட சீறடி பாய்தல் உண்ட – சிந்தா:10 2300/1,2
மந்திர விதியின் மாண்ட சிறு விரல் தருப்பை சூழ்ந்து
முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால் – சிந்தா:12 2465/1,2
சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து – சிந்தா:12 2503/1
மடல் பனை குழாத்தின் பிச்சம் நிரைத்தன மன்னர் சூழ்ந்து
புடை களிறு ஏறி திங்கள் பொழி கதிர் குப்பை அன்ன – சிந்தா:12 2524/1,2
புகை ஆர் வண்ண பட்டு உடுத்து பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நா சீறடி மேல் – சிந்தா:13 2694/1,2
பகை கொண்டார் போல் சுமாஅய் கண்பின் பரூஉ காம்பு அனைய கணை கால் சூழ்ந்து
அகை ஆர்ந்து இலங்கும் பரியகம் தாமே கவின சேர்த்தினார் – சிந்தா:13 2694/3,4
புல்லி கொண்டு உயிரை சூழ்ந்து புக்குழி புக்கு பின்னின்று – சிந்தா:13 2876/3
கொண்டு சூழ்ந்து எழு முறை இறைஞ்சி கோன் அடி – சிந்தா:13 3052/2
சூழ் பொன் பாவையை சூழ்ந்து புல்லிய – சிந்தா:13 3120/1
முகடு மணி அழுத்தி முள் வயிரம் உள் வேய்ந்து முத்தம் வாய் சூழ்ந்து
அகடு பசு மணி ஆர்ந்து அங்காந்து இருள் பருகி அடு பால் விம்மி – சிந்தா:13 3142/1,2
சூழ்ந்து-அரோ (1)
தான் உலாய் தட முலை முற்றம் சூழ்ந்து-அரோ
வேனிலான் வரு நெறி வெண் முள் வித்தினார் – சிந்தா:13 2635/3,4
சூழ்வதனை (2)
மஞ்சு சூழ்வதனை ஒத்து பிண புகை மலிந்து பேயும் – சிந்தா:1 301/1
குனி திரை முளைத்த வெய்யோன் குன்று சூழ்வதனை ஒத்தான் – சிந்தா:5 1240/4
சூழ்வார் (1)
உன் அலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக – சிந்தா:1 259/2,3
சூழ்வினையாளர் (1)
சூழ்வினையாளர் ஆங்கண் ஒருவனை தொடர்ந்து பற்றி – சிந்தா:4 1163/2
சூழ (33)
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான் – சிந்தா:1 294/1
கொல் வினை மாக்கள் சூழ கிடத்தியோ என்று விம்மா – சிந்தா:1 319/2
வானத்தின் வழுக்கி திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழ
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி – சிந்தா:1 387/1,2
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியை சூழ
அட்ட அரக்கு அனைய செ வாய் அணி நலம் கருகி காம – சிந்தா:2 468/2,3
தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள் – சிந்தா:3 564/4
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர் – சிந்தா:3 583/2,3
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
அடு திரை சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே – சிந்தா:3 701/3,4
வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால் – சிந்தா:3 790/1
சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல் – சிந்தா:3 817/3
இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே – சிந்தா:3 837/4
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற – சிந்தா:4 882/2
தணி அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச – சிந்தா:4 977/3
காலனை சூழ்ந்த நோய் போல் நபுல மா விபுலர் சூழ
வேலினை ஏந்தி நந்தன் வெருவர தோன்றலோடும் – சிந்தா:4 1144/1,2
அழல் அவாய் கிடந்த வை வேல் அரசிளங்குமரர் சூழ
குழல் அவாய் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான் – சிந்தா:7 1865/3,4
ஆடவர் இரிய ஏகி அம் சொல்லார் சூழ காமன் – சிந்தா:9 2055/1
வாள் மிடை தோழர் சூழ தன் மனை மகிழ்ந்து புக்கான் – சிந்தா:9 2094/4
கிளையவர் சூழ வாமான் வாணிகன் ஆகி கேடு இல் – சிந்தா:9 2101/3
மைத்துன மன்னர் மால் களிறு ஏறி புடை சூழ
மை துன நீண்ட மா மணி வண்ண அவன் ஒத்தான் – சிந்தா:11 2333/3,4
பட்டார் அமருள் பசும்பொன் முடி சூழ என்றார் – சிந்தா:11 2343/4
சிங்க ஆசனத்தின் மேல் சிங்கம் போல் தேர் மன்னர் முடிகள் சூழ
மங்குல் மணி நிற வண்ணன் போல் வார் குழைகள் திருவில் வீச – சிந்தா:11 2371/2,3
இரும் பிடி நூறு சூழ இறுவரை நின்றதே போல் – சிந்தா:12 2522/1
கடல் படை வெள்ளம் சூழ காவலன் வீதி சேர்ந்தான் – சிந்தா:12 2524/4
தொழு தகு சிவிகைகள் சூழ போய பின் – சிந்தா:13 2630/2
அரும் தவ கொடி குழாம் சூழ அல்லி போல் – சிந்தா:13 2631/1
பொடித்து பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ
கடுத்த வாள் கனல ஏந்தி கன்னியர் காவல் ஓம்ப – சிந்தா:13 2709/2,3
இலங்கு பொன் ஆரம் மார்பின் இந்திரன் உரிமை சூழ
கலந்த பொன் காவு காண்பான் காமுற புக்கதே போல் – சிந்தா:13 2710/1,2
தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன் – சிந்தா:13 2808/2
இல் பொறி இன்பம் நீக்கி இராயிரர் சூழ சென்றான் – சிந்தா:13 2886/4
கார் அணி மயில் அனார் சூழ காவலன் – சிந்தா:13 2892/2
தொழுதி பன் மீன் குழாம் சூழ துளும்பாது இருந்த திங்கள் போல் – சிந்தா:13 3020/1
தொக்காலே போலும் தன் தேவி குழாம் சூழ
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம் பால் – சிந்தா:13 3038/2,3
அரு முடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன் – சிந்தா:13 3044/3
கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழ பட்டார் – சிந்தா:13 3081/4
சூழி (7)
சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான் – சிந்தா:4 1139/2
சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும் – சிந்தா:5 1293/3
படு மணி பைம்பொன் சூழி பகட்டு இனம் இரிய பாய்ந்து – சிந்தா:10 2145/1
பத்தி பூண் அணிந்த மார்பின் பதுமுகன் பைம்பொன் சூழி
மொய்த்து எறி ஓடை நெற்றி மும்மத களிற்றின் மேலான் – சிந்தா:10 2266/2,3
சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான் – சிந்தா:12 2386/3
சுநந்தை தன் மகன் சுடர் பொன் சூழி தேன் – சிந்தா:12 2521/1
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை – சிந்தா:12 2522/3
சூழும் (4)
பண் நிற சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார் – சிந்தா:3 624/4
மடப்படல் இன்றி சூழும் மதி வல்லார்க்கு அரியது உண்டோ – சிந்தா:8 1927/2
மங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன் – சிந்தா:8 1953/2
வரி வளை சூழும் வலம்புரி இனத்துள் சலஞ்சலம் மேய்வன நோக்கி – சிந்தா:10 2103/2
சூள் (1)
அயிராவணத்தொடு சூள் உறும் ஐயன் – சிந்தா:10 2126/3
சூளாமணி (3)
சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி திரியும் அன்றே – சிந்தா:3 786/4
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை – சிந்தா:12 2522/3
மன்றல் நாறும் அணி முடி மேல் மலிந்த சூளாமணி போலும் – சிந்தா:13 2814/1
சூளாமணியாய் (1)
சூளாமணியாய் சுடர இருந்தானை – சிந்தா:13 3037/2
சூன்றிடப்பட்டும் (1)
கண் சூன்றிடப்பட்டும் கால் கை களைந்து ஆங்கே – சிந்தா:13 2795/1
சூன்று (1)
சுரந்த வெண் மதியை சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும் – சிந்தா:3 629/3
சூன்றும் (1)
நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும்
ஆடக கலத்துள் ஆன் பால் அமிர்தினை நயந்து உண்பாரை – சிந்தா:13 2989/1,2