கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தே 3
தேசத்து 1
தேசு 3
தேசும் 2
தேம் 8
தேம்பல் 1
தேம்பும் 1
தேமொழீஇ 1
தேய்க்கும் 3
தேய்த்த 1
தேய்ந்தால் 1
தேய்வர் 1
தேய்விடத்து 1
தேய்வே 1
தேய 1
தேயத்தான் 1
தேயத்து 1
தேயாது 1
தேயார் 1
தேயும் 3
தேயுமே 1
தேர் 31
தேர்க்கு 1
தேர்கிற்கும் 1
தேர்ச்சி 1
தேர்ச்சியில் 1
தேர்தற்பொருள 1
தேர்ந்த 1
தேர்ந்தக்கால் 1
தேர்ந்தவர்க்கு 1
தேர்ந்து 10
தேர்வார் 1
தேர்வு 2
தேராது 3
தேராமல் 1
தேரான் 4
தேரான்தான் 1
தேரின் 7
தேரினும் 2
தேருங்கால் 2
தேரும் 5
தேரை 5
தேரையும் 1
தேரொடு 1
தேரோன் 2
தேவ 1
தேவகுலத்தும் 1
தேவகுலம் 1
தேவர் 9
தேவர்க்கு 2
தேவர்க்கும் 1
தேவரும் 1
தேவரே 3
தேவரேஆயினும் 1
தேவரை 1
தேவனா 1
தேவாதி 1
தேற்ற 1
தேற்றம் 6
தேற்றா 2
தேற்றாத 2
தேற்றாதவர் 4
தேற்றாதார் 3
தேற்றாதான் 2
தேற்றாது 1
தேற்றார் 3
தேற்றாரால் 1
தேற்றான் 1
தேற்றானேல் 1
தேற்றுதல் 1
தேற்றும் 1
தேற 2
தேறப்படும் 3
தேறல் 1
தேறற்க 1
தேறற்பாற்று 1
தேறாத 1
தேறாதாய் 1
தேறார் 3
தேறாவிடினும் 1
தேறான் 6
தேறி 2
தேறியக்கண்ணும் 1
தேறியாக்கு 1
தேறினால் 1
தேறினும் 1
தேறு 2
தேறுக 1
தேறுதல் 2
தேறும் 2
தேறுமால் 1
தேன் 18
தேனார் 1
தேனீ 1
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தே (3)
பன்றி கூழ் பத்தரில் தே மா வடித்து அற்றால் – நாலடி:26 7/1
கறி வளர் தே மா நறும் கனி வீழும் – ஐந்70:8/2
தே மலர் நீலம் பிணையல் செறி மலர் – திணை50:40/3
தேசத்து (1)
அறியாத தேசத்து ஆசாரம் பழியார் – முது:3 8/1
தேசு (3)
தினை துணையர் ஆகி தம் தேசு உள் அடக்கி – நாலடி:11 5/1
தம் சார்பு இலாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ – பழ:254/2
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள் – பழ:284/3
தேசும் (2)
இறைவர் முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலம் உடையார் கூறார் பகைவர் போல் – ஆசாரக்:71/1,2
வளமையும் தேசும் வலியும் வனப்பும் – பழ:183/1
தேம் (8)
தேம் கமழ் நாற்றம் இழந்த ஆங்கு ஓங்கும் – நாலடி:20 9/2
வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு – நாலடி:24 9/2
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு – நாலடி:38 5/2
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர் – ஐந்50:17/3
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட – ஐந்70:7/3
தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனை – ஐந்70:47/1
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன் – திணை150:106/3
தேம் கலந்த சொல்லின் தெளித்து – கைந்:4/4
தேம்பல் (1)
அற்றதன்பால் தேம்பல் நன்று – பழ:373/4
தேம்பும் (1)
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு – கைந்:3/4
தேமொழீஇ (1)
தேரும் திறம் அரிதால் தேமொழீஇ ஆரும் – பழ:340/2
தேய்க்கும் (3)
செல்வத்தை தேய்க்கும் படை – குறள்:56 5/2
அடு முரண் தேய்க்கும் அரம் – குறள்:57 7/2
அம் மனை தேய்க்கும் மனையாளும் இ மூவர் – திரி:49/3
தேய்த்த (1)
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள்:127 1/2
தேய்ந்தால் (1)
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை – பழ:83/3
தேய்வர் (1)
தேய்வர் ஒரு மாசு உறின் – நாலடி:16 1/4
தேய்விடத்து (1)
தேய்விடத்து சென்று இருள் பாய்ந்த ஆங்கு நல் வினை – நாலடி:6 1/3
தேய்வே (1)
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று – திரி:101/2
தேய (1)
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை – குறள்:10 6/1
தேயத்தான் (1)
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான் – ஆசாரக்:100/1
தேயத்து (1)
எண்ணிய தேயத்து சென்று – குறள்:76 3/2
தேயாது (1)
கல் தேயும் தேயாது சொல் – பழ:394/4
தேயார் (1)
கண் எச்சில் கண் ஊட்டார் காலொடு கால் தேயார்
புண்ணியம் ஆய தலையோடு உறுப்பு உறுத்த – ஆசாரக்:41/1,2
தேயும் (3)
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது – குறள்:89 8/1
கல் தேயும் தேயாது சொல் – பழ:394/4
அறம் தேயும் பின்னும் அலர்மகளை நீக்கும் – சிறுபஞ்:105/3
தேயுமே (1)
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு – நாலடி:13 5/3,4
தேர் (31)
தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம் – நான்மணி:24/3
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி – கார்40:10/3
பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே – கார்40:21/1
கடாஅவுக பாக தேர் கார் ஓட கண்டே – கார்40:32/1
உருவ கடும் தேர் முருக்கி மற்று அ தேர் – கள40:4/1
உருவ கடும் தேர் முருக்கி மற்று அ தேர்
பருதி சுமந்து எழுந்த யானை இரு விசும்பில் – கள40:4/1,2
ஏந்து எழில் மார்பின் இயல் திண் தேர் செம்பியன் – கள40:6/5
கொற்ற வேல் தானை கொடி திண் தேர் செம்பியன் – கள40:23/4
கொய் சுவல் மாவின் கொடி திண் தேர் செம்பியன் – கள40:33/4
நூல் நவின்ற பாக தேர் நொவ்விதா சென்றீக – ஐந்50:10/1
கை புனை தேர் ஏறி செல்வானை சென்று இவன் – ஐந்50:26/3
நோக்கான் தேர் ஊர்ந்தது கண்டு – ஐந்50:28/4
ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர்
கடந்த வழியை எம் கண் ஆர காண – ஐந்50:42/2,3
அணி கடல் தண் சேர்ப்பன் தேர் பரிமா பூண்ட – ஐந்50:50/1
புன்னை அம் பூம் கானல் சேர்ப்பனை தக்க தேர்
நின் அல்லது இல் என்று உரை – ஐந்70:58/3,4
பண் அமை தேர் மேல் வரும் – ஐந்70:63/4
பாய் திரை சேர்ப்பன் பரி தேர் வர கண்டு – ஐந்70:71/3
கறங்கு மணி நெடும் தேர் கண் வாள் அறுப்ப – திணை50:48/1
கண் பரப்ப காணாய் கடும் பனி கால் வல் தேர்
மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு மண் பரக்கு – திணை150:55/1,2
உருவ வேல் கண்ணாய் ஒரு கால் தேர் செல்வன் – திணை150:80/1
கார் தோன்ற காதலர் தேர் தோன்றாது ஆகவே – திணை150:100/3
விரி உளை மான் தேர் மேல் கொண்டார் – திணை150:113/4
தேர் நின்றது என்னாய் திரிந்து – திணை150:115/4
செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால் – திணை150:124/1
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும் – குறள்:50 6/1
இடு குடை தேர் மன்னர் எமக்கு அமையும் என்று – பழ:309/1
கொடி திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார் – பழ:331/1
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ – பழ:341/2
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா – கைந்:24/1
பெய்த புறவில் கடுமான் தேர்
ஒல்லை கடாவார் இவர் காணின் காதலர் – கைந்:28/1,2
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ – கைந்:60/3
தேர்க்கு (1)
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – குறள்:67 7/1,2
தேர்கிற்கும் (1)
தேர்கிற்கும் பெற்றி அரிது – நாலடி:36 2/4
தேர்ச்சி (1)
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள்:64 5/2
தேர்ச்சியில் (1)
தேர்ச்சியில் தேர்வு இனியது இல் – இனிய40:28/4
தேர்தற்பொருள (1)
தேர்தற்பொருள பொருள் – நான்மணி:50/4
தேர்ந்த (1)
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – குறள்:51 9/1
தேர்ந்தக்கால் (1)
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் – திரி:51/4
தேர்ந்தவர்க்கு (1)
தீர்ந்தாரா கொண்டு தெளியினும் தேர்ந்தவர்க்கு
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம் – பழ:213/2,3
தேர்ந்து (10)
திகழ கான்றிட்டன தேர்ந்து – திணை150:66/4
திணைமாலை கைவர தேர்ந்து – திணை150:154/4
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள்:45 1/2
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – குறள்:47 2/1
தேர்ந்து செய்வஃதே முறை – குறள்:55 1/2
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா – குறள்:64 4/1
தேர்ந்து கண்ணோடாது தீ வினையும் அஞ்சலராய் – பழ:27/1
தெய்வமா தேறுமால் தேர்ந்து – சிறுபஞ்:90/4
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய் ஈத்து உண்பான் – ஏலாதி:32/3
தீர்க்கும் வாய் தேர்ந்து பசி உண்டி நீக்குவான் – ஏலாதி:40/3
தேர்வார் (1)
தேர்வார் போல் நிற்க திரிந்து – ஆசாரக்:78/3
தேர்வு (2)
தேன் கலந்த தேற்ற சொல் தேர்வு – நாலடி:26 9/4
தேர்ச்சியில் தேர்வு இனியது இல் – இனிய40:28/4
தேராது (3)
திங்களுள் வில் எழுதி தேராது வேல் விலக்கி – திணை150:30/1
தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது
யான் இறுத்தேன் ஆவி இதற்கு – திணை150:102/3,4
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – குறள்:51 9/1
தேராமல் (1)
தேராமல் கற்றது கல்வி அன்று – முது:5 6/1
தேரான் (4)
ஊரா தேரான் தந்தை ஊர் – திணை150:139/4
தேரான் பிறன் இல் புகல் – குறள்:15 4/2
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – குறள்:51 8/1
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் – குறள்:51 10/1
தேரான்தான் (1)
ஆராத பூம் தார் அணி தேரான்தான் போத – திணை150:101/3
தேரின் (7)
யாங்கணும் தேரின் பிறிது இல்லை ஆங்கு தாம் – நாலடி:12 10/2
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல – நாலடி:18 7/2,3
யாரும் அறிவர் பகை நுட்பம் தேரின்
நிரப்பு இடும்பையாளன் புகுமே புகையும் – நாலடி:29 2/2,3
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப தேரின்
அரிய அரியவற்றால் கொள்ப பெரிய – நான்மணி:33/2,3
தேரின் கோள் நட்பு திசைக்கு – இனிய40:3/4
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர் – திணை150:54/2
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் – குறள்:25 9/1,2
தேரினும் (2)
தேரினும் அஃதே துணை – குறள்:14 2/2
தேரினும் அஃதே துணை – குறள்:25 2/2
தேருங்கால் (2)
யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார் யாஅர் – நாலடி:12 9/1,2
தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன் பொருள் செய்யாதார் ஆதரே – சிறுபஞ்:18/1,2
தேரும் (5)
தேரும் துணைமை உடையவர் சாரல் – நாலடி:13 7/2
தெரிவார் யார் தேரும் இடத்து – திணை50:12/4
பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென – திரி:22/2
தேரும் திறம் அரிதால் தேமொழீஇ ஆரும் – பழ:340/2
முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும் – பழ:361/1
தேரை (5)
சிறு தேரை பற்றியும் தின்னும் அறிவினால் – நாலடி:20 3/2
வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை வழும்பு இல் சீர் – நாலடி:36 2/2
தேரை தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப – ஐந்70:23/1
தேரை வழி சென்றார் இல் – பழ:23/4
கிணற்று அகத்து தேரை போல் ஆகார் கணக்கினை – பழ:61/2
தேரையும் (1)
தூண்டிலின் உள்பொதிந்த தேரையும் மாண்ட சீர் – திரி:24/2
தேரொடு (1)
தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல் – ஐந்70:35/3
தேரோன் (2)
தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை – ஐந்50:7/1
தேரோன் மலை மறைய தீம் குழல் வெய்து ஆக – திணை150:112/1
தேவ (1)
பாழ் மனையும் தேவ குலனும் சுடுகாடும் – ஆசாரக்:57/1
தேவகுலத்தும் (1)
பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு – ஆசாரக்:72/1,2
தேவகுலம் (1)
தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று – ஆசாரக்:32/2
தேவர் (9)
தேவர் அனையர் புலவரும் தேவர் – நான்மணி:73/1
தேவர் அனையர் புலவரும் தேவர்
தமர் அனையர் ஓர் ஊர் உறைவார் தமருள்ளும் – நான்மணி:73/1,2
வான் தேவர் கொட்கும் வழி – திணை150:10/4
தேவர் அனையர் கயவர் அவரும் தாம் – குறள்:108 3/1
எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீ தேவர்
உச்சம் தலையோடு இவை என்ப யாவரும் – ஆசாரக்:5/1,2
தேவர் வழிபாடு தீ கனா வாலாமை – ஆசாரக்:10/1
இரு தேவர் பார்ப்பார் இடை போகார் தும்மினும் – ஆசாரக்:31/1
மிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள் – ஆசாரக்:43/2
கலியாணம் தேவர் பிதிர் விழா வேள்வி என்று – ஆசாரக்:48/1
தேவர்க்கு (2)
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ – திணை150:10/3
தேவர்க்கு மக்கட்கு என வேண்டா தீங்கு உரைக்கும் – பழ:152/3
தேவர்க்கும் (1)
தேவர்க்கும் கைகூடா திண் அன்பினார்க்கேயும் – பழ:335/3
தேவரும் (1)
தேவரும் மாற்றல் இலர் – பழ:350/4
தேவரே (3)
தேவரே தின்னினும் வேம்பு – நாலடி:12 2/4
தேவரே தின்னினும் வேம்பு – பழ:114/4
தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால் – சிறுபஞ்:18/1
தேவரேஆயினும் (1)
தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை – பழ:179/2
தேவரை (1)
தேவரை போல தொழுது எழுக என்பதே – ஆசாரக்:16/3
தேவனா (1)
தேவாதி தேவனா தேறு – ஏலாதி:32/4
தேவாதி (1)
தேவாதி தேவனா தேறு – ஏலாதி:32/4
தேற்ற (1)
தேன் கலந்த தேற்ற சொல் தேர்வு – நாலடி:26 9/4
தேற்றம் (6)
நா அன்றோ நட்பு அறுக்கும் தேற்றம் இல் பேதை – நான்மணி:78/1
தேற்றம் இலாதான் துணிவு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:7/3
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் – குறள்:52 3/1
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு – குறள்:77 6/1,2
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் – குறள்:116 3/1
உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணை பயிரும் மா மலை நாட – பழ:228/2,3
தேற்றா (2)
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் – நாலடி:8 5/2
கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை – நாலடி:28 4/1
தேற்றாத (2)
பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத
மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/1,2
செவ்வி கொளல் தேற்றாத ஆங்கு – நாலடி:33 2/4
தேற்றாதவர் (4)
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள்:19 7/2
மற்றைய தேற்றாதவர் – குறள்:29 9/2
ஓம்புதல் தேற்றாதவர் – குறள்:63 6/2
சில சொல்லல் தேற்றாதவர் – குறள்:65 9/2
தேற்றாதார் (3)
நல் அறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார்
புல்லறிவு தாம் அறிவது இல் – நாலடி:32 10/3,4
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள்:106 4/2
மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி – சிறுபஞ்:21/2
தேற்றாதான் (2)
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் – திரி:80/3
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற – பழ:151/1
தேற்றாது (1)
தீர்ந்தேம் என கருதி தேற்றாது ஒழுகி தாம் – பழ:386/1
தேற்றார் (3)
சேடியர் போல செயல் தேற்றார் கூடி – நாலடி:36 4/2
சிறந்தார் தமர் என்று தேற்றார் கை வையார் – பழ:43/2
தேற்றார் சிறியர் எனல் வேண்டா நோற்றார்க்கு – பழ:150/3
தேற்றாரால் (1)
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல் – பழ:174/2
தேற்றான் (1)
சேவகமும் செந்தமிழ் தேற்றான் கவி செயலும் – சிறுபஞ்:10/3
தேற்றானேல் (1)
தேற்றானேல் தேறும் அமைச்சு – ஏலாதி:17/4
தேற்றுதல் (1)
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள்:70 3/2
தேற்றும் (1)
தேற்றும் புலவரும் வேறு – நாலடி:32 8/4
தேற (2)
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி – நாலடி:38 9/2
தேற எமக்கு உரைப்பாய் நீ – ஐந்50:21/4
தேறப்படும் (3)
திறம் தெரிந்து தேறப்படும் – குறள்:51 1/2
சொல் தொக்க தேறப்படும் – குறள்:59 9/2
தேறப்படும் குணத்தினான் – சிறுபஞ்:57/4
தேறல் (1)
தெளியானை தேறல் அரிது – பழ:385/4
தேறற்க (1)
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – குறள்:51 9/1
தேறற்பாற்று (1)
சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள்:83 5/2
தேறாத (1)
தேறு திரை பறையா புள் படையா தேறாத
மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப மற்று எமர் – திணை150:53/2,3
தேறாதாய் (1)
நின்றார் சொல் தேறாதாய் நீடு இன்றி வென்றார் – திணை150:79/2
தேறார் (3)
கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார் சுற்ற – நாலடி:32 3/2
மிக்காரால் என்று சிறியாரை தாம் தேறார்
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ – பழ:18/2,3
அற்றத்தால் தேறார் அறிவுடையார் கொற்ற புள் – பழ:67/2
தேறாவிடினும் (1)
தேறினும் தேறாவிடினும் அழிவின்கண் – குறள்:88 6/1
தேறான் (6)
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர் – குறள்:85 8/1
தேறான் பகாஅன் விடல் – குறள்:88 6/2
போலும் இழையார் சொல் தேறான் களியானேல் – ஏலாதி:5/3
மின் நேர் இடையார் சொல் தேறான் விழைவு ஓரான் – ஏலாதி:20/1
வாது உவவான் மாதரார் சொல் தேறான் காது தாழ் – ஏலாதி:43/2
தேறான் இயையான் தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் – ஏலாதி:47/3
தேறி (2)
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி
எமர் என்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும் – நாலடி:38 9/2,3
நன்று என்று தேறி தெளிந்தேன் தலையளி – ஐந்70:9/3
தேறியக்கண்ணும் (1)
எனை வகையான் தேறியக்கண்ணும் வினை வகையான் – குறள்:52 4/1
தேறியாக்கு (1)
தேறியாக்கு உண்டோ தவறு – குறள்:116 4/2
தேறினால் (1)
வேறலும் நஞ்சு மாறு அல்லானை தேறினால்
நீடு ஆங்கு செய்தலும் நஞ்சால் இளங்கிளையை – சிறுபஞ்:11/2,3
தேறினும் (1)
தேறினும் தேறாவிடினும் அழிவின்கண் – குறள்:88 6/1
தேறு (2)
தேறு திரை பறையா புள் படையா தேறாத – திணை150:53/2
தேவாதி தேவனா தேறு – ஏலாதி:32/4
தேறுக (1)
தேறுக தேறும் பொருள் – குறள்:51 9/2
தேறுதல் (2)
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் – குறள்:51 6/1
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் – குறள்:51 7/1,2
தேறும் (2)
தேறுக தேறும் பொருள் – குறள்:51 9/2
தேற்றானேல் தேறும் அமைச்சு – ஏலாதி:17/4
தேறுமால் (1)
தெய்வமா தேறுமால் தேர்ந்து – சிறுபஞ்:90/4
தேன் (18)
தேன் கலந்த தேற்ற சொல் தேர்வு – நாலடி:26 9/4
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:22/3
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி தான் நவின்ற – ஐந்50:10/2
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல் – ஐந்70:10/1
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ – திணை150:10/3
பெரு மலை தாம் நாடி தேன் துய்த்து பேணாது – திணை150:23/1
பண்ணாது பண் மேல் தேன் பாடும் கழி கானல் – திணை150:47/1
தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது – திணை150:102/3
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன்
கந்தாரம் பாடும் களித்து – திணை150:106/3,4
அத்தம் கதிரோன் மறைவதன் முன் வண்டொடு தேன்
துத்தம் அறையும் தொடர்ந்து – திணை150:120/3,4
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று – திணை150:140/1
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி – குறள்:113 1/1
குன்றொடு தேன் கலாம் வெற்ப அது பெரிதும் – பழ:65/3
இன கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப – பழ:68/3
காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்று அறிந்தார் தீம் தேன்
முசு குத்தி நக்கும் மலை நாட தம்மை – பழ:268/2,3
முள்ளி தேன் உண்ணுமவர் – பழ:274/4
தேன் புரிந்தது யார்க்கும் செயல் ஆகா தாம் புரீஇ – சிறுபஞ்:25/2
இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலை – கைந்:5/1
தேனார் (1)
தீம் சொல் மழலையாய் தேனார் பலா குறைத்து – பழ:371/3
தேனீ (1)
உய்த்து ஈட்டும் தேனீ கரி – நாலடி:1 10/4