Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீக்கும் 1
சீத்த 1
சீத்து 2
சீயமும் 1
சீர் 37
சீர்சால் 1
சீர்சாலா 1
சீர்த்த 2
சீர்த்தக்க 1
சீர்தூக்கும் 1
சீர்ந்தது 1
சீர்மை 2
சீர்மையர்ஆயினும் 1
சீர்அல்லவர்கண் 1
சீராது 1
சீரார் 1
சீரியார் 1
சீரினால் 1
சீரினும் 1
சீரும் 1
சீரொடு 1
சீரோன்தன் 1
சீலம் 2
சீற்றம் 2
சீற 1
சீறற்க 1
சீறி 2
சீறின் 2
சீறு 1
சீறும் 1
சீறூர் 2

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சீக்கும் (1)

நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும்
வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து – திணை150:49/3,4

TOP


சீத்த (1)

கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூம் தண் பொதும்பர் – திணை150:29/3

TOP


சீத்து (2)

குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்து
உளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டு – சிறுபஞ்:64/1,2
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே – ஏலாதி:44/2

TOP


சீயமும் (1)

முழை உறை சீயமும் என்று இவை நான்கும் – ஆசாரக்:84/2

TOP


சீர் (37)

சீர் கொண்ட சான்றோர் சினம் – நாலடி:7 8/4
குன்றிய சீர்மையர்ஆயினும் சீர் பெறுவர் – நாலடி:18 6/3
துன்னா துறத்தல் தகுவதோ துன்ன அரும் சீர்
விண் குத்தும் நீள் வரை வெற்ப களைபவோ – நாலடி:23 6/2,3
சிறந்தக்கால் சீர் இலார் நட்பு – நாலடி:24 2/4
அணிகலம் ஆவது அடக்கம் பணிவு இல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும் ஊர் – நாலடி:25 2/2,3
மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்று அவரை – நாலடி:32 6/2,3
மை அறு தொல் சீர் உலகம் அறியாமை – நாலடி:34 3/3
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் அ சீர்
பெருமை உடைத்தா கொளினும் கீழ் செய்யும் – நாலடி:35 5/2,3
வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை வழும்பு இல் சீர்
நூல் கற்றக்கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார் – நாலடி:36 2/2,3
போர் அறின் வாடும் பொருநர் சீர் கீழ் வீழ்ந்த – நான்மணி:41/1
மன்னர் சீர் வாடிவிடும் – நான்மணி:41/4
இன்கண் பெருகின் இனம் பெருகும் சீர் சான்ற – நான்மணி:90/2
மாசு படினும் மணி தன் சீர் குன்றாதாம் – நான்மணி:97/1
எஞ்சா விழு சீர் இரு முது மக்களை – இனிய40:18/3
சீர் முழா பண் அமைப்பான் போன்ற புனல் நாடன் – கள40:20/3
காமர் கண் ஆக கழி துயிற்றும் காமரு சீர்
தண் பரப்ப பாய் இருள் நீ வரின் தாழ் கோதையாள் – திணை150:34/2,3
செல்பவோ தம் அடைந்தார் சீர் அழிய சிள் துவன்றி – திணை150:92/1
செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால் – திணை150:124/1
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – குறள்:12 8/1
செறினும் சீர் குன்றல் இலர் – குறள்:78 8/2
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை – குறள்:83 1/1
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் – குறள்:94 4/1
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – குறள்:97 2/1
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – குறள்:101 10/1
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் காமரு சீர்
தண் நறும் பூம் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய – திரி:0/1,2
தன் குணம் குன்றா தகைகையும் தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும் நன்கு உணர்வின் – திரி:2/1,2
மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும் மாசு இல் சீர்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் உண்ணு நீர் – திரி:16/1,2
தூண்டிலின் உள்பொதிந்த தேரையும் மாண்ட சீர்
காழ்த்த பகைவர் வணக்கமும் இ மூன்றும் – திரி:24/2,3
ஈர்வளையை இல்லத்து இருத்தலும் சீர் பயவா – திரி:63/2
தாம் அறிவர் தம் சீர் அளவு – பழ:316/4
சீர் வரைய ஆகுமாம் செய்கை சிறந்து அனைத்தும் – பழ:381/3
சீர் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும் – பழ:383/1
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற – சிறுபஞ்:44/2
தாவா குடி உயர தாங்கு அரும் சீர் கோ உயர்தல் – சிறுபஞ்:44/3
சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப – முது:2 10/1
செங்கோலான் கீழ் குடிகள் செல்வமும் சீர் இலா – ஏலாதி:10/1
மத்த மயில் அன்ன சாயலாய் மன்னிய சீர்
தத்தன் சகோடன் கிருத்திரமன் புத்திரி – ஏலாதி:31/1,2

TOP


சீர்சால் (1)

ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால்
சிறு குழல் ஓசை செறிதொடி வேல் கொண்டு – ஐந்50:7/2,3

TOP


சீர்சாலா (1)

ஓர்வமே செய்யும் உலோபமே சீர்சாலா
மானமே மாய உயிர்க்கு ஊனம் என்னுமே – ஏலாதி:61/2,3

TOP


சீர்த்த (2)

குத்து ஒக்க சீர்த்த இடத்து – குறள்:49 10/2
நேர்த்து உரைத்து எள்ளார் நிலை நோக்கி சீர்த்த
கிளை இன்றி போஒய் தனித்து ஆயக்கண்ணும் – பழ:383/2,3

TOP


சீர்த்தக்க (1)

ஈர்ம் தண் தளவம் தகைந்தன சீர்த்தக்க
செல்வ மழை மதர் கண் சில் மொழி பேதை ஊர் – கார்40:36/2,3

TOP


சீர்தூக்கும் (1)

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது – குறள்:82 3/1

TOP


சீர்ந்தது (1)

சீர்ந்தது செய்யாதார் இல் – பழ:67/4

TOP


சீர்மை (2)

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – குறள்:13 3/1
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல – குறள்:20 5/1

TOP


சீர்மையர்ஆயினும் (1)

குன்றிய சீர்மையர்ஆயினும் சீர் பெறுவர் – நாலடி:18 6/3

TOP


சீர்அல்லவர்கண் (1)

சீர்அல்லவர்கண் படின் – குறள்:98 7/2

TOP


சீராது (1)

பெய் பூச்சு சீராது எனின் – ஆசாரக்:35/4

TOP


சீரார் (1)

சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள்:90 10/2

TOP


சீரியார் (1)

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய் – நாலடி:24 2/1

TOP


சீரினால் (1)

செம் வாய் கரிய கண் சீரினால் கேளாதும் – திணை150:73/1

TOP


சீரினும் (1)

சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – குறள்:97 2/1

TOP


சீரும் (1)

சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர் – குறள்:50 9/1

TOP


சீரொடு (1)

சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர் – குறள்:97 2/1,2

TOP


சீரோன்தன் (1)

பெரும் சீரோன்தன் வெகுளி இன்மை பொய் – முது:7 2/1

TOP


சீலம் (2)

சீலம் அறியான் இளங்கிளை சால – திரி:13/1
சீலம் இனிது உடைய ஆசானும் இ மூவர் – திரி:26/3

TOP


சீற்றம் (2)

வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில் – பழ:49/1
பெருமை புகழ் அறம் பேணாமை சீற்றம்
அருமை நூல் சால்பு இல்லார் சாரின் இருமைக்கும் – ஏலாதி:60/1,2

TOP


சீற (1)

கத நாகம் புற்று அடைய கார் ஏறு சீற
மத நாகம் மாறு முழங்க புதல் நாகம் – திணை150:117/1,2

TOP


சீறற்க (1)

சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க – நான்மணி:1/3

TOP


சீறி (2)

செம் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால் – கள40:27/1
மேல் தூய்மை இல்லாத வெம் களிறும் சீறி
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இ மூன்றும் – திரி:46/2,3

TOP


சீறின் (2)

சீறின் சிறுகும் திரு – குறள்:57 8/2
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து – குறள்:90 9/1

TOP


சீறு (1)

சிதை உரையான் செற்றம் உரையான் சீறு இல்லான் – ஏலாதி:34/1

TOP


சீறும் (1)

சிறு புன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி – திணை50:15/1,2

TOP


சீறூர் (2)

அரு வரை உள்ளதாம் சீறூர் வரு வரையுள் – திணை150:13/2
தகையினால் எம் சீறூர் தங்கினிராய் நாளை – திணை150:69/3

TOP