Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட்டி 8
சூட்டிய 3
சூட்டில் 1
சூட்டின 1
சூட்டினர் 1
சூட்டினன் 1
சூட்டினை 1
சூட்டு 12
சூட்டும் 3
சூட்டொடு 1
சூட 1
சூடக 2
சூடகத்து 2
சூடகம் 1
சூடி 1
சூடியும் 1
சூடு 2
சூடுகம் 1
சூடுதல் 1
சூடுறு 4
சூது 2
சூர் 3
சூரல் 2
சூரலும் 2
சூரவரன் 1
சூரன் 1
சூரனும் 1
சூல் 2
சூழ் 15
சூழ்_வளி 1
சூழ்க 1
சூழ்ச்சி 28
சூழ்ச்சிக்கு 1
சூழ்ச்சியது 1
சூழ்ச்சியர் 3
சூழ்ச்சியன் 6
சூழ்ச்சியில் 1
சூழ்ச்சியின் 4
சூழ்ச்சியும் 6
சூழ்ச்சியுள் 4
சூழ்ச்சியொடு 2
சூழ்ச்சியோடு 1
சூழ்ந்த 12
சூழ்ந்தது 1
சூழ்ந்து 11
சூழ்பு 1
சூழ்வது 1
சூழ்வர 3
சூழ்வனர் 2
சூழ்வனள் 1
சூழ்விடை 1
சூழ்வினை 2
சூழ 31
சூழா 1
சூழி 1
சூழியின் 1
சூழியும் 1
சூழின் 1
சூழினும் 1
சூள் 1
சூளாமணியொடு 1
சூளுறு 1
சூறை 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சூட்டி (8)

திரு நுதல் சுட்டி திகழ சூட்டி
முத்த கலன் அணி மொய்ப்புற சேர்த்து – உஞ்ஞை:34/196,197
வாகை கண்ணி வலத்தில் சூட்டி
தானை சேரி தலை பெரும் திருவன் – உஞ்ஞை:37/261,262
செம்பொன் நெல்லின் செல் கதிர் சூட்டி
வெண் துகில் இட்ட விசய முரசம் – உஞ்ஞை:39/23,24
கண்ணி சூட்டி கடை மணை பூட்டி – உஞ்ஞை:56/195
புனை மலர் பிணையல் புரவலன் சூட்டி
இன மடல் பெண்ணை ஈர்ம் தோடு திருத்தி – இலாவாண:16/1,2
தெரி மலர் கோதை திகழ சூட்டி
அரி மலர் கண்ணி நின் அகத்தனள் ஆக – இலாவாண:16/94,95
கைவினை கண்ணி கவின் பெற சூட்டி
தகை மலர் பொன் தார் வகை பெற அணிந்து – மகத:5/62,63
மதி முகம் சுடர மன்னவன் சூட்டி
திரு மணி பந்தருள் திரு கடம் கழிப்பி – மகத:22/276,277

TOP


சூட்டிய (3)

மண் ஆர் மார்பன் மாதரை சூட்டிய
காமர் பிணையல் கதுப்பு அணி கனற்ற – இலாவாண:16/13,14
பெருமகன் சூட்டிய பிணையல் அல்லது – வத்தவ:15/13
சேடுறு தாமம் சிறந்தோன் சூட்டிய
வாடுறு பிணையலொடு வகை பெற வளாஅய் – வத்தவ:16/16,17

TOP


சூட்டில் (1)

சூழ் பொன் சூட்டில் சுடர் மணி புளகத்து – உஞ்ஞை:48/19

TOP


சூட்டின (1)

வண்ணம் சூட்டின கண்ணியில் கிடந்த – உஞ்ஞை:38/307

TOP


சூட்டினர் (1)

அணிபெற கிடந்த அம் பொன் சூட்டினர்
சூடுறு பொன் வினை சுவணர் புனைந்த – இலாவாண:7/18,19

TOP


சூட்டினன் (1)

புனை மலர் பிணையல் சூட்டினன் புகன்று என் – இலாவாண:15/148

TOP


சூட்டினை (1)

பிணையல் சூட்டினை பெருந்தகை மற்று இது – வத்தவ:15/57

TOP


சூட்டு (12)

வதுவை சூட்டு அணி வண்டு வாய் திறப்பவும் – உஞ்ஞை:33/75
சுருள் முறை வகுத்து சூட்டு புரி உறீஇ – உஞ்ஞை:34/191
கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி – உஞ்ஞை:39/20
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும் – உஞ்ஞை:40/101
நெய் சூட்டு இயன்ற சிறு பல் உண்டி – உஞ்ஞை:40/130
முல்லை அம் கோதை சில் சூட்டு அணிந்து – உஞ்ஞை:42/149
மல்லிகை நறும் சூட்டு வெள்ளிதின் விளங்க அதன் – உஞ்ஞை:46/233
காட்டு_கோழி சூட்டு தலை சேவல் – உஞ்ஞை:52/62
நெய் சூட்டு அமைந்த சிற்றூண் பந்தரோடு – இலாவாண:2/81
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய – இலாவாண:15/134
சூட்டு முகம் திருத்தி வேட்டு நறு நீரின் – மகத:14/108
மங்கல நறும் சூட்டு மரபின் அணிந்து – மகத:22/211

TOP


சூட்டும் (3)

சுண்ணமும் சூட்டும் சுவை நறும் தேறலும் – உஞ்ஞை:37/268
மல்லிகை சூட்டும் நெல் வளர் கதிரும் – உஞ்ஞை:42/68
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும் – உஞ்ஞை:58/46

TOP


சூட்டொடு (1)

சூட்டொடு விரைஇ சுற்றுபு முடித்து – இலாவாண:5/175

TOP


சூட (1)

வள் இதழ் கண்ணி வளம் பெற சூட
அரும்பினும் போதினும் பெரும் தண் மலரினும் – மகத:9/21,22

TOP


சூடக (2)

சூடக முன்கை சுடர் குழை மகளிரொடு – மகத:6/91
சூடக முன்கையில் சுழன்று மாறு அடித்தும் – வத்தவ:12/60

TOP


சூடகத்து (2)

சூடகத்து ஏற்ற சுடர் ஒளி பவளமொடு – மகத:22/234
பாடகத்து அரவமும் சூடகத்து ஓசையும் – வத்தவ:12/210

TOP


சூடகம் (1)

சூடகம் ஏற்றியும் பாடகம் திருத்தியும் – வத்தவ:12/118

TOP


சூடி (1)

துணை மலர் பிணையல் தோன்ற சூடி
சுடர் மணி ஆழி படை பயின்று பலித்த – மகத:9/134,135

TOP


சூடியும் (1)

சுனை பூ குற்றும் சுள்ளி சூடியும்
சினை பூ அணிந்தும் கொடி பூ கொய்தும் – இலாவாண:12/129,130

TOP


சூடு (2)

கூற்று தொழில் இளையர் குடர் சூடு மருப்பின – இலாவாண:2/189
சூடு அமை சாந்தும் ஈடு அறிந்து புனைந்த – மகத:9/44

TOP


சூடுகம் (1)

பாவையும் யானும் பண்புளி சூடுகம்
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட – இலாவாண:15/112,113

TOP


சூடுதல் (1)

சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும் – இலாவாண:15/136

TOP


சூடுறு (4)

சூடுறு பாண்டிலில் சுருங்கிய கதிர்த்தாய் – உஞ்ஞை:33/41
சூடுறு பொன் வினை சுவணர் புனைந்த – இலாவாண:7/19
பாடகம் சுமந்த சூடுறு சேவடி – மகத:8/14
சூடுறு கிண்கிணி பாடு பெயர்ந்து அரற்ற – வத்தவ:8/18

TOP


சூது (2)

ஓது சாலையும் சூது ஆடு கழகமும் – இலாவாண:7/132
சூது பொரு கழகத்து அருகலும் தோம்_இல் – இலாவாண:8/62

TOP


சூர் (3)

வெம் சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து – உஞ்ஞை:42/230
சூர் உறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர் – உஞ்ஞை:44/22
சுனை வாய் நிறைக்கும் சூர் உடை சிலம்பின் – உஞ்ஞை:50/40

TOP


சூரல் (2)

தென்மலை பிறந்த பொன் மருள் சூரல்
கரும் கண்-தோறும் பசும்பொன் ஏற்றி – உஞ்ஞை:40/375,376
கரும் கண் சூரல் செங்கோல் பிடித்த – மகத:5/99

TOP


சூரலும் (2)

வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும்
வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் – உஞ்ஞை:46/276,277
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் – உஞ்ஞை:50/27

TOP


சூரவரன் (1)

சுருங்கா கடும் திறல் சூரவரன் எனும் – மகத:26/80

TOP


சூரன் (1)

சூரன் இவன் என சொல்லும் குறிப்பினள் – உஞ்ஞை:40/329

TOP


சூரனும் (1)

தேம் தார் சூரனும் திறல் பிரமசேனனும் – மகத:27/126

TOP


சூல் (2)

நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து – உஞ்ஞை:39/64
பெரும் சூல் பெண்டிர் பேர் அழல் நோக்கி – உஞ்ஞை:43/143

TOP


சூழ் (15)

சூழ் பொன் சூட்டில் சுடர் மணி புளகத்து – உஞ்ஞை:48/19
சுர முதல் அடைந்த சூழ் அகன் புரிசை – உஞ்ஞை:52/7
தாழின் தாழ்ந்து சூழின் சூழ் இயல் – உஞ்ஞை:53/102
கோள் இமிழ் கனலி சூழ் திசை பொத்தி – உஞ்ஞை:56/12
தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள் – இலாவாண:18/74
சூழ் வளை முன்கை சுடர் குழை மாதர் – இலாவாண:19/32
கல் சூழ் புல் அதர் மெல் அடி ஒதுங்கி – இலாவாண:20/46
சுடு கதிர் அணிந்த சூழ் கதிர் செல்வன் – மகத:3/98
சூழ் வினையாளர்க்கு தோன்றல் சொல்லும் – மகத:10/20
சூழ்ச்சியும் சூழ் பொருள் துணிவும் எல்லாம் – மகத:25/7
சூழ் வளை தோளி காம நல் கடலில் – வத்தவ:13/83
சூழ் வளி சுழற்ற ஆழ் கயத்து அழுந்தினன் – நரவாண:1/24
மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி – நரவாண:3/52
புடை சூழ் நடுவண் பொன் மலர் காவின் – நரவாண:8/44
இடை சூழ் அருவி ஏந்து வரை சென்னி – நரவாண:8/45

TOP


சூழ்_வளி (1)

தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள் – இலாவாண:18/74

TOP


சூழ்க (1)

வாழ்வோர் உளர் எனில் சூழ்க தன் வினை என – உஞ்ஞை:36/63

TOP


சூழ்ச்சி (28)

யூகி சூழ்ந்த உரைப்ப_அரும் சூழ்ச்சி
வாய் திறந்து இன்று இது கோமகற்கு உரை என – உஞ்ஞை:43/6,7
சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி எய்தி – உஞ்ஞை:43/13
திருமண சூழ்ச்சி எழுமைத்து ஆயினும் – உஞ்ஞை:47/227
சுடுதற்கு ஒவ்வா சூழ்ச்சி அண்ணலை – இலாவாண:9/258
ஏழ்ச்சி வேண்டும் சூழ்ச்சி கொடுக்க என – இலாவாண:11/180
சுள்ளி வெண் சூழ்ச்சி சுரும்பு உண தொடுத்து – இலாவாண:12/108
மறுதரவு உடைய மாய சூழ்ச்சி
உறுதியொடு ஒளித்தனர் உள்ளியது முடித்து என் – இலாவாண:17/196,197
ஆகியது அறியும் அரும் பொருள் சூழ்ச்சி
யூகியின் அல்லதை உதயணகுமரன் – இலாவாண:19/18,19
அவம்_இல் சூழ்ச்சி தவ முது_மகனொடு – இலாவாண:20/69
அவம்_இல் சூழ்ச்சி தவறு_இல் தோழன் – இலாவாண:20/104
மட_மகள் கொண்ட இடன் அறி சூழ்ச்சி
யூகி உளன் எனின் இகழாள் இவன் என – மகத:1/16,17
அகன்று பெயர்ந்து அழிக்கும் அரும் பெறல் சூழ்ச்சி
நவின்ற தோழனொடு பயம் பட வலித்து – மகத:1/31,32
போகிய பொழுதின் ஆகிய சூழ்ச்சி
அரும்_பெறல் தோழரை பொருந்தலும் பொருக்கென – மகத:7/2,3
மாண்ட சூழ்ச்சி மந்திர அமைச்சர் – மகத:7/59
மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி – மகத:7/87
அரும்_பெறல் சூழ்ச்சி அவனையும் பின்னிணை – மகத:9/124
அரும் திறல் சூழ்ச்சி அடல் வேல் தானை – மகத:17/20
வழு_இல் சூழ்ச்சி வயந்தககுமரனை – மகத:17/183
வஞ்ச சூழ்ச்சி வருடகாரன் – மகத:25/166
அகலாது ஆகிய அரும்_பெறல் சூழ்ச்சி
சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே – மகத:26/46,47
வாய்த்த சூழ்ச்சி வருடகாரனொடு – மகத:27/66
வருடகாரன் பொருள் தெரி சூழ்ச்சி
பொய்யாது முடித்தலின் மெய்யுற தழீஇ – வத்தவ:1/3,4
பயன் தெரி சூழ்ச்சி பதின்மர் இளையருள் – வத்தவ:4/35
ஆற்றல் சூழ்ச்சி அருமறை உண்டு என – வத்தவ:6/71
வாய் மொழி சூழ்ச்சி தோழற்கு உணர்த்தலின் – வத்தவ:7/153
ஊறு இல் சூழ்ச்சி யூகந்தராய – வத்தவ:7/186
ஆகிய அறிவின் அரும்_பெறல் சூழ்ச்சி
யூகியின் அன்றோ என உரைப்போரும் – நரவாண:6/133,134
அவம்_இல் சூழ்ச்சி ஆய் தார் அண்ணலும் – நரவாண:8/86

TOP


சூழ்ச்சிக்கு (1)

எண்ணிய சூழ்ச்சிக்கு இடையூறு ஆம் என – இலாவாண:19/47

TOP


சூழ்ச்சியது (1)

அரிய தோழன் சூழ்ச்சியது அமைதியும் – உஞ்ஞை:46/128

TOP


சூழ்ச்சியர் (3)

மேவனம் என்னும் சூழ்ச்சியர் ஆகி – உஞ்ஞை:35/43
தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை அறியார் – உஞ்ஞை:56/1
சுற்றம் ஆக்கும் சூழ்ச்சியர் ஆகி – மகத:4/99

TOP


சூழ்ச்சியன் (6)

செய்வது துணியும் சிந்தை சூழ்ச்சியன்
வெவ் வழி நிலம் மிசை வில்லேப்பாட்டிடை – உஞ்ஞை:53/67,68
இன் உயிர் துறக்கும் என்று எண்ண_அரும் சூழ்ச்சியன்
உற்றதை உணரும் ஒற்றாள் இளையனை – உஞ்ஞை:56/168,169
யாப்பு உள்ளுறுத்த அமைதி சூழ்ச்சியன்
செறிந்த செய்கை அறிந்து மனத்து அடக்கி – இலாவாண:8/92,93
நல் நகர் வௌவும் இன்னா சூழ்ச்சியன்
என் வகை அறிந்த நன் பொருளாளன் – மகத:1/12,13
உள் பொருள் வலிக்கும் உறுதி சூழ்ச்சியன்
மல்லல் தானை மற பெரும் சீற்றத்து – மகத:21/20,21
கடன் நமக்கு அது என இடனுறு சூழ்ச்சியன்
தாமே சென்று தம் வினை முடிக்கும் – மகத:23/19,20

TOP


சூழ்ச்சியில் (1)

செறிந்த சூழ்ச்சியில் செய்வது கூறலும் – மகத:26/2

TOP


சூழ்ச்சியின் (4)

முதிர் மதி சூழ்ச்சியின் முற்ற நாடி – உஞ்ஞை:34/85
சுற்றம் ஆக சூழ்ச்சியின் விளக்கி – உஞ்ஞை:37/59
பெண்-பால் சூழ்ச்சியின் பிழைப்பு பல எனும் – மகத:14/31
வஞ்ச சூழ்ச்சியின் வணக்கின் அல்லதை – மகத:20/161

TOP


சூழ்ச்சியும் (6)

கரும கிடக்கையும் கலங்கா சூழ்ச்சியும்
மறை புறப்படாமையும் அறையுண்ணாமையும் – உஞ்ஞை:46/117,118
அரிமான் ஏறும் நரி மான் சூழ்ச்சியும்
காட்டமொடு எனையவை பிறவும் – உஞ்ஞை:54/29,30
ஏழ்ச்சியும் இறுதியும் சூழ்ச்சியும் உணர – உஞ்ஞை:58/58
மடனும் அன்பும் மாசு_இல் சூழ்ச்சியும்
இடன் உடை அறிவும் என்று இவை பிறவும் – மகத:10/69,70
சூழ்ச்சியும் சூழ் பொருள் துணிவும் எல்லாம் – மகத:25/7
ஓலை மாற்றமும் சூழ்ச்சியும் துணிவும் – வத்தவ:8/49

TOP


சூழ்ச்சியுள் (4)

தெரிவுறு சூழ்ச்சியுள் இருவரும் எண்ணி – உஞ்ஞை:35/62
கையிகந்து பெருகிய செய்கை சூழ்ச்சியுள்
பொய் நிலம் அமைத்த பொறி அமை மாடத்து – இலாவாண:17/67,68
மந்திர சூழ்ச்சியுள் வெம் திறல் வீரன் – மகத:8/90
வரையும் வாயில் தெரியும் சூழ்ச்சியுள்
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி – மகத:21/8,9

TOP


சூழ்ச்சியொடு (2)

தேசத்து அமைதியும் மாசு_இல் சூழ்ச்சியொடு
எண் வகை நிறைந்த நன் மகற்கு அல்லது – உஞ்ஞை:36/91,92
கருத்தில் சூழ்ச்சியொடு கானத்து அக-வயின் – இலாவாண:1/50

TOP


சூழ்ச்சியோடு (1)

ஆக்கம் உண்டு எனும் சூழ்ச்சியோடு ஒருபால் – மகத:18/7

TOP


சூழ்ந்த (12)

விரி_நூல் அந்தணர் வெண்_மணை சூழ்ந்த
திரு மணி கட்டில் திறத்துளி எய்தி – உஞ்ஞை:34/23,24
முத்து வாய் சூழ்ந்த பத்திக்கோடு அசைஇ – உஞ்ஞை:34/215
கோல் வளை மகளிர் கொட்டையை சூழ்ந்த
அல்லியும் இதழும் போல நண்ணி – உஞ்ஞை:42/14,15
யூகி சூழ்ந்த உரைப்ப_அரும் சூழ்ச்சி – உஞ்ஞை:43/6
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை – உஞ்ஞை:43/22
வெண் நரை சூழ்ந்த தண்ணுமை பறை தலை – உஞ்ஞை:46/317
நிலா வெண் மாடமொடு உள் அறை சூழ்ந்த
உலாவும் மண்டபத்து உலாவுதல் இன்றி – உஞ்ஞை:47/46,47
பெரு மலை சூழ்ந்த அரிது இயல் அமைவோடு – உஞ்ஞை:58/104
இறைவன் பிரிக்கும் அறிவில் சூழ்ந்த
படிவ உருவம் பட்டாங்கு எய்தி – இலாவாண:8/21,22
தெரி மதி அமைச்சனொடு திறவிதின் சூழ்ந்த
அரு மதி திண் கோள் அறம் புரி மகள் என் – இலாவாண:9/266,267
உறுநர் சூழ்ந்த ஒருபால் ஒடுங்கி – இலாவாண:19/216
அறிய சூழ்ந்த குறியினர் ஆகி – மகத:17/212

TOP


சூழ்ந்தது (1)

நும்மின் ஆதல் எம்மில் சூழ்ந்தது
அறிய கூறினேன் யான் என அவளொடும் – இலாவாண:9/243,244

TOP


சூழ்ந்து (11)

நீதி மருங்கின் நினைவு அவன் சூழ்ந்து
யாது எனப்படினும் படுக இவன் பணி – உஞ்ஞை:34/71,72
எழு துகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கி – உஞ்ஞை:38/14
பொரு படை இளையர் புகன்றனர் சூழ்ந்து
செரு அடு செம்மலை செல்லல் ஓம்பி – உஞ்ஞை:57/1,2
பரிசனம் சூழ்ந்து பரிவு நன்கு ஓம்ப – உஞ்ஞை:57/105
சுருக்கம் இன்றி சூழ்ந்து உடன் திரியா – இலாவாண:4/7
ஒரு பொருள் ஒழியாது அவளொடும் சூழ்ந்து
மறைப்பு இடன் அமைத்து புறத்தோர் முன்னர் – இலாவாண:9/249,250
வெம் புகை சூழ்ந்து மேல் எரி ஊர – இலாவாண:19/72
யாங்கு இனிது இருத்தும் என்று அறிவினில் சூழ்ந்து
பற்றார் ஆயினும் உற்றார் ஆயினும் – இலாவாண:20/99,100
வரை தாழ் தேனொடு உகாஅய் விரை சூழ்ந்து
மணியும் முத்தும் அணி பெற வரன்றி – மகத:2/32,33
அளத்தும் நாம் என துளக்கு இலள் சூழ்ந்து
பலர் புகழ் மார்பன் பயின்ற விச்சைகள் – மகத:14/170,171
தகை கொள் வேந்தன் தமரொடு சூழ்ந்து
செம் கடை வேல் கண் வெள் வளை பணை தோள் – மகத:21/17,18

TOP


சூழ்பு (1)

ஊர்கோள் ஏய்ப்ப சூழ்பு உடன் வளைஇய – உஞ்ஞை:46/234

TOP


சூழ்வது (1)

தோழனும் தானும் சூழ்வது துணியா – இலாவாண:9/33

TOP


சூழ்வர (3)

வைகு புலர் விடியல் வயவர் சூழ்வர
பெரு நல தானை பிரச்சோதனன் தமர் – உஞ்ஞை:56/149,150
கூறை கீறி சூழ்வர உடீஇ – வத்தவ:14/66
ஏழை மாதரை சூழ்வர நின்ற – வத்தவ:14/73

TOP


சூழ்வனர் (2)

தோழனும் தமரும் சூழ்வனர் குழீஇ – இலாவாண:9/255
தோழியர் எல்லாம் சூழ்வனர் ஏந்த – வத்தவ:8/17

TOP


சூழ்வனள் (1)

வாழ்வது வலியாள் சூழ்வனள் இருப்ப – மகத:21/43

TOP


சூழ்விடை (1)

தாழ்விடை தாங்கி சூழ்விடை துளங்கா – மகத:1/43

TOP


சூழ்வினை (2)

சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் – உஞ்ஞை:33/202
தோழற்கு உணர்த்தும் சூழ்வினை தொடங்கி – இலாவாண:10/84

TOP


சூழ (31)

தரும தருக்கர் தற்புறம் சூழ
பரிபு மெலிந்த படிவ பண்டிதன் – உஞ்ஞை:36/229,230
சுற்றுபு சூழ முற்றத்து ஏறி – உஞ்ஞை:38/134
தோழியர் சூழ ஊழூழ் ஒல்கி – உஞ்ஞை:42/121
பெரு மூதாட்டியர் பேணுவனர் சூழ
திருமாதேவி அரு நகர் உற்ற – உஞ்ஞை:47/183,184
முள் அரை இலவம் ஒள் எரி சூழ
பொங்கு புகை கழுமிய பூம் பொழில் படாஅன் – உஞ்ஞை:56/214,215
பல் மாண் படைஞர் பரந்தனர் சூழ
மலிந்து அவண் ஏறி வத்தவர் பெருமகன் – உஞ்ஞை:56/280,281
விறல் படை சூழ விளங்கு மணி பைம் பூண் – உஞ்ஞை:58/1
பணை எருத்து ஏற்றி பல்லவர் சூழ
தேர் திரி மறுகு-தோறு ஊர் முழுது அறிய – இலாவாண:2/38,39
கன்னி மகளிர் துன்னுவனர் சூழ
நான்முக கடவுளொடு தாள் முதல் தானம் – இலாவாண:3/57,58
மன்ன குமரன் தன்னோர் சூழ
உருத்த மன்னர் ஊர்ச்சி வேழத்து – இலாவாண:4/106,107
நிழல் திகழ் தெள் நீர் நீலம் சூழ
பறவை தொழுதி பக்கம் நீக்கி – இலாவாண:5/44,45
பொலிவு உடை உரிமையொடு பரிசனம் சூழ
புலி முக மாடம் மலிர ஏறி – இலாவாண:9/67,68
மை வரை மருங்கின் மட பிடி சூழ
தெய்வ யானை நின்றது நோக்கி – இலாவாண:11/110,111
துகள் அணி இரும் பிடி துன்னுபு சூழ
அம் தண் மராஅத்த பைம் தளிர் வாங்கி – இலாவாண:12/140,141
யாவதும் கொடாஅள் அறிவில் சூழ
விம்முறு நிலைமை நோக்கி துன்னிய – இலாவாண:17/155,156
அழல் புகை சூழ அஞ்சுவனள் நடுங்கி – இலாவாண:19/34
பல் குடி தொல்லூர் புல்லுபு சூழ
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன் – மகத:3/11,12
கன்னி ஆயம் துன்னுபு சூழ
மதில் புறம் கவைஇய புது பூம் காவில் – மகத:5/28,29
பொலம் தொடி மகளிர் பொலிவொடு சூழ
வந்த பொழுதில் கதுமென நோக்கிய – மகத:6/131,132
ஆயம் சூழ அமளியுள் ஏறி – மகத:7/76
தோழர் சூழ வேழ மேல்கொண்டு – மகத:18/80
உதயணகுமரன் உற்றோர் சூழ
விசய முரசொடு வியல் நகர் அறிய – மகத:20/126,127
பெரும் படை தலைவரும் பிறரும் சூழ
பூரண குண்டலன் என்னும் அமைச்சனொடு – மகத:26/83,84
நால் பெரும் படையும் நம் புறம் சூழ
மேல் படை நெருங்கு-காலை மாற்றவன் – மகத:27/28,29
தாங்க_அரும் காதல் தம்பியர் சூழ
பூம் கழல் தோழர் புடைபுடை ஆர்தர – மகத:27/140,141
நல் நாள் கொண்டு துன்னினர் சூழ
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப – வத்தவ:1/14,15
ஆயம் சூழ அரசனை வணங்கி – வத்தவ:5/38
தானையும் சூழ தானே அணிந்து தன் – வத்தவ:9/8
கிளை அல் மன்னர் கேளிர் சூழ
தளை அகப்பட்ட-காலையும் தளை அவிழ் – நரவாண:3/5,6
தெரி மாணாளர் திறவதின் சூழ
அரிமா சுமந்த ஆசனத்து இருந்து – நரவாண:7/75,76
நன்னர் அமைந்த நால்வரும் சூழ
தளர் நடை காலத்து இளமை இகந்து – நரவாண:8/37,38

TOP


சூழா (1)

துணை நல தோழர் துன்னினர் சூழா
மண்ணு நீராட்டின் மலைந்தனர் ஆகி – இலாவாண:5/52,53

TOP


சூழி (1)

ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல் – உஞ்ஞை:48/24

TOP


சூழியின் (1)

சூழியின் பொலிந்தன பாழியில் பயின்றன – மகத:26/71

TOP


சூழியும் (1)

சூழியும் ஓடையும் சுடர் மணி கோவையும் – இலாவாண:2/200

TOP


சூழின் (1)

தாழின் தாழ்ந்து சூழின் சூழ் இயல் – உஞ்ஞை:53/102

TOP


சூழினும் (1)

மழைத்துளி படினும் வான் துகள் சூழினும்
விலக்கி தவிர்க்கும் வில் தொழில் உள்ளிட்டு – உஞ்ஞை:37/49,50

TOP


சூள் (1)

கடும் சூள் அறைஇ காவலன் கேட்ப – நரவாண:1/227

TOP


சூளாமணியொடு (1)

சூளாமணியொடு துளங்கு கடை துயல்வரும் – இலாவாண:3/71

TOP


சூளுறு (1)

சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப – மகத:14/185

TOP


சூறை (2)

சூறை கடு வளி பாற பறந்து என – மகத:27/74
சூறை வளியிடை சுழல் இலை போல – வத்தவ:12/200

TOP