Select Page

கட்டுருபன்கள்


யாங்கள் (1)

கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே – பாண்டிக்கோவை:15 183/4

மேல்

யாண்டு (1)

கன்றே அமையும் கல் வேண்டா பல் யாண்டு கறுத்தவரை – பாண்டிக்கோவை:18 298/2

மேல்

யாது-கொல்லோ (1)

எண்ணியது யாது-கொல்லோ அகலான் இவ் இரும் புனமே – பாண்டிக்கோவை:11 104/4

மேல்

யாம் (1)

கண்டார் மகிழும் தகைமையது யாம் செல்லும் கானகமே – பாண்டிக்கோவை:16 204/4

மேல்

யாமும் (1)

சில் நாள் மறந்திலம் யாமும் தென் சேவூர் செரு மலைந்த – பாண்டிக்கோவை:13 153/1

மேல்

யாய் (1)

ஏனல் எம் காவலர் யாய் தந்தை இந்த பெரும் புனத்து – பாண்டிக்கோவை:12 134/3

மேல்

யார் (5)

கண்டு ஏர் தளரின் நல்லார் இனி யார் இ கடலிடத்தே – பாண்டிக்கோவை:3 31/4
என்றால் தெருட்ட வல்லார் இனி யார் இவ் இரு நிலத்தே – பாண்டிக்கோவை:3 35/4
விரை உறை கோதை உயிர் செல்லின் யார் பிறர் மீட்பவரே – பாண்டிக்கோவை:4 50/4
புல்லென்று வாடி புலம்பல் நெஞ்சே நமக்கு யார் பொருந்தார் – பாண்டிக்கோவை:18 319/2
பால் நிற வெண் சங்கம் யார் நின்னின் படிமையரே – பாண்டிக்கோவை:18 338/4

மேல்

யார்-கண்ணதோ (2)

செறி குழலார் பலர் யார்-கண்ணதோ அண்ணல் சிந்தனையே – பாண்டிக்கோவை:12 123/4
இளையார் பலர் உளர் யார்-கண்ணதோ அண்ணல் இன் அருளே – பாண்டிக்கோவை:12 124/4

மேல்

யார்-கொல் (1)

புல்லாதவர் என யார்-கொல் அரும் சுரம் போந்தவரே – பாண்டிக்கோவை:17 215/4

மேல்

யாரோ (2)

ஆவி சென்றால் பின்னை யாரோ பெயர்ப்பர் அகலிடத்தே – பாண்டிக்கோவை:4 49/4
ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:4 55/1

மேல்

யாவர்-கொல்லோ (1)

உரைப்பார் பிறர் இனி யாவர்-கொல்லோ இவ் உலகினுள்ளே – பாண்டிக்கோவை:14 182/4

மேல்

யாவன்-கொல்லோ (1)

இ மா தழையன் அலங்கல் அம் கண்ணியன் யாவன்-கொல்லோ
கைம்மா வினாய் வந்து அகலான் நமது கடி புனமே – பாண்டிக்கோவை:11 108/3,4

மேல்

யாவன்-கொலோ (1)

விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே – பாண்டிக்கோவை:11 106/4

மேல்

யாழ் (1)

யாழ் இயல் மென் மொழியார் தம்முள் வைத்து எனக்கு எவ்விடத்தும் – பாண்டிக்கோவை:2 17/1

மேல்

யாறும் (1)

வண்டு ஆர் பொழிலும் மணி அறல் யாறும் மருங்கு அணைந்து – பாண்டிக்கோவை:16 204/3

மேல்

யான் (15)

குயில் மொழியாள்-தனை சென்று யான் இன்னமும் கூடுதலே – பாண்டிக்கோவை:3 23/4
இளையார் ஒருவர் அணங்க நைந்தால் யான் நினைகின்றதே – பாண்டிக்கோவை:3 27/4
தன் நேர் இலாத தகைத்து இன்றி யான் கண்ட தாழ் பொழிலே – பாண்டிக்கோவை:3 46/4
தேவி என்றாம் நின்னை யான் நினைக்கின்றது சேய் அரி பாய் – பாண்டிக்கோவை:4 49/2
தூ மாண் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே – பாண்டிக்கோவை:4 55/4
சுரும்பு ஆர் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே – பாண்டிக்கோவை:4 56/4
கடவுளர் தாம் என யான் நினைந்தேன் எழு காசினி காத்து – பாண்டிக்கோவை:5 74/2
நல் வளர் கூந்தற்கு யான் கொணர்ந்தேன் மலர் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:5 75/4
நீங்கும்படி நின்ற கோன் வையை-வாய் நெடு நீரிடை யான்
தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின் – பாண்டிக்கோவை:10 100/2,3
அரும்பு ஆர் தழையும் கொண்டு யான் சொன்ன பொய்யை மெய் என்று அகலான் – பாண்டிக்கோவை:11 107/2
கடி ஆர் கமழ் கண்ணியாய் கொள்வல் யான் களத்தூரில் வென்ற – பாண்டிக்கோவை:12 138/2
அம் சிறை வண்டு அறை காந்தள் அம் செம் போது சென்று யான் தருவேன் – பாண்டிக்கோவை:14 164/1
தீ விரி காந்தள் சென்று யான் தருவேன் தெய்வம் அங்கு உடைத்தால் – பாண்டிக்கோவை:14 165/2
வரை அணங்கோ அல்லளோ என்ன யான் மம்மர் எய்த உண்கண் – பாண்டிக்கோவை:18 320/3
செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்ல தன்-கண் – பாண்டிக்கோவை:18 324/1

மேல்

யானும் (2)

ஏர் மன்னு காரிகை எய்தல் உண்டாம் எனின் யானும் நின் போல் – பாண்டிக்கோவை:8 84/3
உண்டாம் எனில் தையல் யானும் சென்று ஆடுவன் ஒண் சுனையே – பாண்டிக்கோவை:8 86/4

மேல்

யானே (1)

உரையாதவர் என யானே புலம்புதல் உற்றனனே – பாண்டிக்கோவை:5 77/4

மேல்

யானை (12)

பா அடி யானை பராங்குசன் பாழி பகை தணித்த – பாண்டிக்கோவை:1 3/1
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அழுங்கி – பாண்டிக்கோவை:3 24/3
கந்து ஆர் அடு களி யானை கழல் நெடுமாறன் கன்னி – பாண்டிக்கோவை:6 79/1
அதிசய பாண்டியனாம் அரிகேசரி யானை தங்கும் – பாண்டிக்கோவை:8 85/2
கந்து அணங்கு ஆம் மத யானை கழல் மன்னன் கார் பொதியில் – பாண்டிக்கோவை:15 183/2
குன்று ஒத்த யானை செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:16 195/1
மால் புரை யானை மணி முடி மாறன் மண் பாய் நிழற்றும் – பாண்டிக்கோவை:16 198/1
அடும் மலை போல் களி யானை அரிகேசரி உலகின் – பாண்டிக்கோவை:17 234/1
அட்டான் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன் நாள் – பாண்டிக்கோவை:18 276/2
படம் தாழ் பணை முக யானை பராங்குசன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:18 293/1
ஆளே கனலும் கொல் யானை செங்கோல் அரிகேசரி-தன் – பாண்டிக்கோவை:18 303/3
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அகன்று – பாண்டிக்கோவை:18 313/3

மேல்

யானையினான் (2)

புடை மணி யானையினான் கன்னி அன்னாள் பொரு கயல் கண் – பாண்டிக்கோவை:18 301/2
அஞ்சா அடு களி யானையினான் அகல் ஞாலம் அன்ன – பாண்டிக்கோவை:18 311/2

மேல்

யானையும் (1)

முடி உடை வேந்தரும் மும்மத யானையும் மொய் அமருள் – பாண்டிக்கோவை:5 65/1

மேல்