மூரி (1)
மூரி களிறு முனிந்து கை ஏற்ற முழங்கு கொண்டல் – பாண்டிக்கோவை:18 327/3
மூழ்க (7)
புண் கொண்ட நீர் மூழ்க பூலந்தை வென்றான் புகார் அனைய – பாண்டிக்கோவை:3 34/2
பண்ணுற்ற தே மொழி பாவை நல்லீர் ஒர் பகழி மூழ்க
புண்ணுற்ற மான் ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 68/3,4
தெவ் மாண்பு அழிந்து செந்தீ மூழ்க சேவூர் செருவின் அன்று – பாண்டிக்கோவை:11 108/1
மருங்கு அழி நீர் மூழ்க கண்ட எம் கோன் தொண்டி கானல் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:14 168/2
திரை ஆர் குருதி புனல் மூழ்க செந்நிலத்து அன்று வென்ற – பாண்டிக்கோவை:14 174/1
சென்று செரு மலைந்தார்கள் செந்நீர் மூழ்க செந்நிலத்தை – பாண்டிக்கோவை:17 243/1
பொங்கு அயல் வேந்தர் எரி மூழ்க தோன்றின்று போதுகள் மேல் – பாண்டிக்கோவை:18 274/2
மூன்று (2)
படல் ஏறிய மதில் மூன்று உடை பஞ்சவன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:10 92/1
தழை வளர் பூம் கண்ணி மூன்று உடை வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:12 133/3