Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெஞ்சம் 1
நெஞ்சின் 1
நெஞ்சு 2
நெஞ்சே 3
நெடியான் 1
நெடு 13
நெடுங்களத்து 8
நெடுந்தகை 1
நெடுந்தகையே 6
நெடுந்துறைவா 1
நெடும் 55
நெடுமாறன் 42
நெடுமாறன்-தன் 1
நெய் 11
நெய்யில் 1
நெருங்கி 1
நெருங்கு 1
நெருஞ்சியில் 1
நெருநல் 1
நெல் 1
நெல்வேலி 9
நெறி 7
நெறிதரு 1
நெறிந்து 1
நெறிப்பட 1
நெறியே 2
நென்னல் 2

நெஞ்சம் (1)

வெய்யான் பகை என நீங்குதுமோ நெஞ்சம் வெம் சுரமே – பாண்டிக்கோவை:18 322/4

மேல்

நெஞ்சின் (1)

காளையை ஈன்ற கடன் அறி நல் நெஞ்சின் காரிகையே – பாண்டிக்கோவை:17 229/4

மேல்

நெஞ்சு (2)

உய்ய நெஞ்சு எவ்வகை ஒன்றையும் காண்பன் ஒலி கடல் சூழ் – பாண்டிக்கோவை:5 76/2
நெஞ்சு உறையா செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரை-வாய் – பாண்டிக்கோவை:14 164/3

மேல்

நெஞ்சே (3)

புல்லென்று வாடி புலம்பல் நெஞ்சே நமக்கு யார் பொருந்தார் – பாண்டிக்கோவை:18 319/2
அளியும் பெறாது நெஞ்சே நைய நின்ற இவ் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:18 321/4
அரு மா நெறி பொருட்கோ செல்வது அன்று நெஞ்சே அவள்-தன் – பாண்டிக்கோவை:18 323/3

மேல்

நெடியான் (1)

நெடியான் சிறுவன்-கொலோ அறியேன் ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 103/4

மேல்

நெடு (13)

குரு மா நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட தென்னன் கன்னி – பாண்டிக்கோவை:3 39/3
திண் பூ முக நெடு வேல் மன்னர் சேவூர் பட முடி மேல் – பாண்டிக்கோவை:7 83/1
பரிதி நெடு வேல் பராங்குசன் கொல்லி பைம் பூம் புனத்து – பாண்டிக்கோவை:9 91/3
நீங்கும்படி நின்ற கோன் வையை-வாய் நெடு நீரிடை யான் – பாண்டிக்கோவை:10 100/2
கொடி ஆர் நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட கோன் பொதியில் – பாண்டிக்கோவை:11 103/1
இழுதுபடு நெடு வேல் மன்னன் ஈர்ம் புனல் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:12 115/2
நீர் அணி வெண் முத்தினால் இ நெடு மணல் மேல் இழைத்த – பாண்டிக்கோவை:12 126/3
நெஞ்சு உறையா செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரை-வாய் – பாண்டிக்கோவை:14 164/3
நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தென் நேரி முன்னால் – பாண்டிக்கோவை:17 219/2
நெடு மலை நாடனை நீங்கும் என்றோ நீ நினைக்கின்றதே – பாண்டிக்கோவை:17 234/4
நீக்கிய கோன் நெடு நீர் வையை நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 265/4
நின்றே வணங்கும் நுடங்கு இடை ஏழை நெடு நகர்க்கே – பாண்டிக்கோவை:18 275/4
மகர கொடியவன் தன் நெடு வேல் நின் மலர் விலைக்கு – பாண்டிக்கோவை:18 296/3

மேல்

நெடுங்களத்து (8)

நில மன்னன் நேரியன் மாறன் நெடுங்களத்து அட்ட திங்கள் – பாண்டிக்கோவை:10 96/3
நீர் அணி வேலி நெடுங்களத்து ஒன்னார் நிணம் அளைந்த – பாண்டிக்கோவை:16 191/1
நின்று ஆங்கு எதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து
வென்றான் விசாரிதன் கூடல் அன்னாளும் மிக மெலிந்தாள் – பாண்டிக்கோவை:17 207/1,2
நினைப்பு அரும் புண்ணியம் செய்தாய் குரவே நெடுங்களத்து
வினை பொலி மால் களிறு உந்தி வென்றான் வியல் நாட்டகத்து ஓர் – பாண்டிக்கோவை:17 213/1,2
நெல் ஆர் கழனி நெடுங்களத்து அன்று நிகர் மலைந்த – பாண்டிக்கோவை:17 215/3
நெருங்கு அடல் வேல் நெடுமாறன் நெடுங்களத்து அன்று வென்றான் – பாண்டிக்கோவை:17 224/1
நேரா வயவர் நெடுங்களத்து ஓட நெய் வேல் நினைந்த – பாண்டிக்கோவை:18 300/3
நெய் ஆர் அயிலவர் காண பொழிந்த நெடுங்களத்து
வெய்யார் அமரிடை வீழ செம் தூவி வெள்ளம் புகைத்த – பாண்டிக்கோவை:18 328/2,3

மேல்

நெடுந்தகை (1)

நிரை தார் அரசரை நெல்வேலி வென்ற நெடுந்தகை சீர் – பாண்டிக்கோவை:5 77/3

மேல்

நெடுந்தகையே (6)

நெடியான் சிறுவன்-கொலோ அறியேன் ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 103/4
நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 110/4
நீயே உரையாய் விரை ஆர் அலங்கல் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:12 121/4
நீங்கிய போது அருள்செய்தனன் வந்து ஓர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:13 152/4
நேரார் முனை என்றும் தங்கி அறியான் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 336/4
நீடு நிலைமையும் அல்லை சொல்லாய் என் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 346/4

மேல்

நெடுந்துறைவா (1)

நிரைத்து ஆர் கரு மென் குழலிக்கு நீயே நெடுந்துறைவா
உரைத்தால் அழிவது உண்டோ சென்று நின்று நின் உள் மெலிவே – பாண்டிக்கோவை:12 122/3,4

மேல்

நெடும் (55)

பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல் – பாண்டிக்கோவை:1 3/3
நின்னின் பிரியேன் பிரியினும் ஆற்றேன் நெடும் பணை தோள் – பாண்டிக்கோவை:1 10/3
தூ வண மாட சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர் – பாண்டிக்கோவை:2 13/3
நெய் ஏர் அயில் கொண்ட நேரியன் கொல்லி நெடும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 20/2
துளை ஆர் நெடும் கை களிறு நடுங்கி துயர்வது போல் – பாண்டிக்கோவை:3 27/2
பொரு நெடும் தானை புல்லார்-தமை பூலந்தை பூ அழித்த – பாண்டிக்கோவை:3 29/1
பரு நெடும் திண் தோள் பராங்குசன் கொல்லி பனி வரை-வாய் – பாண்டிக்கோவை:3 29/2
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து – பாண்டிக்கோவை:3 29/3
கரு நெடும் கண் கண்டு மீண்டின்று சென்றது என் காதன்மையே – பாண்டிக்கோவை:3 29/4
இரு நெடும் தோள் அண்ணலே பெரியான் வல்லத்து ஏற்ற தெவ்வர் – பாண்டிக்கோவை:3 44/1
வரு நெடும் தானையை வாட்டிய கோன் கொல்லி மால் வரை-வாய் – பாண்டிக்கோவை:3 44/2
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து – பாண்டிக்கோவை:3 44/3
கரு நெடும் கண் கண்டும் மற்று வந்தாம் எம்மை கண்ணுற்றதே – பாண்டிக்கோவை:3 44/4
அரிய மலர் நெடும் கண் கண்டு மால் அண்ணல் ஆற்றியதே – பாண்டிக்கோவை:3 45/4
வடி உடை வேல் நெடும் கண் மடவீர் நுங்கள் வார் புனத்தில் – பாண்டிக்கோவை:5 65/3
வழையும் கமழும் மணி நெடும் கோட்டு வண் சந்தனத்தின் – பாண்டிக்கோவை:7 82/2
நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேர்_இழையே – பாண்டிக்கோவை:8 84/4
ஆள் நெடும் தானையை ஆற்றுக்குடி வென்ற கோன் பொதியில் – பாண்டிக்கோவை:8 89/1
சேண் நெடும் குன்றத்து அருவி நின் சேவடி தோய்ந்தது இல்லை – பாண்டிக்கோவை:8 89/2
வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர் – பாண்டிக்கோவை:8 89/3
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அ தடம் சுனையே – பாண்டிக்கோவை:8 89/4
பொரு நெடும் தானை புல்லார்-தம்மை பூலந்தை போர் தொலைத்த – பாண்டிக்கோவை:10 93/1
செரு நெடும் செம் சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:10 93/2
அரு நெடும் காமம் பெருகுவதாய் விடின் ஆடவர்கள் – பாண்டிக்கோவை:10 93/3
கரு நெடும் பெண்ணை செம் கேழ் மடல் ஊர கருதுவரே – பாண்டிக்கோவை:10 93/4
அண்ணல் நெடும் தேர் அரிகேசரி அகல் ஞாலம் அன்னாள் – பாண்டிக்கோவை:10 97/1
வளையார் வன முலையார் வண்டல் ஆடும் வரி நெடும் கண் – பாண்டிக்கோவை:12 124/3
பூட்டிய மா நெடும் தேர் மன்னர் பூலந்தை பூ அழிய – பாண்டிக்கோவை:12 128/1
ஆடு இயல் மா நெடும் தேர் மன்னர் ஆற்றுக்குடி அழிய – பாண்டிக்கோவை:12 129/1
திரு மா மணி நெடும் தேரொடும் சென்றது என் சிந்தனையே – பாண்டிக்கோவை:14 166/4
நின்று செய்தார் உந்தி வந்த நெடும் கை களிற்று உடலால் – பாண்டிக்கோவை:14 176/2
வில் மலி தானை நெடும் தேர் விசாரிதன் வேந்தன் பெம்மான் – பாண்டிக்கோவை:16 203/3
கொன் மலி வேல் நெடும் கண் இணை பேதை கொடியினையே – பாண்டிக்கோவை:16 203/4
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து – பாண்டிக்கோவை:17 218/2
கட வரை காதலனோடு கடந்த கயல் நெடும் கண் – பாண்டிக்கோவை:17 222/1
வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர் – பாண்டிக்கோவை:17 227/2
தாயும் துயிலலுறாள் இன்ன நாள் தனி தாள் நெடும் தேர் – பாண்டிக்கோவை:17 239/3
மாவும் களிறும் மணி நெடும் தேரும் வல்லத்து புல்லா – பாண்டிக்கோவை:17 241/1
உருள் தங்கு மா நெடும் திண் தேர் உசிதன் உலகு அளிக்கும் – பாண்டிக்கோவை:17 244/1
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் வந்து ஒன்று மீண்டது உண்டே – பாண்டிக்கோவை:17 260/3
வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:18 269/1
மடை ஆர் குவளை நெடும் கண் பனி மல்க வந்து வஞ்சி – பாண்டிக்கோவை:18 287/1
வரு நெடும் கங்குல் எவ்வாறு இனி நீந்தும் வல்லத்து வென்ற – பாண்டிக்கோவை:18 292/1
செரு நெடும் தானை எம் கோன் தெவ்வர் போல சென்று அத்தம் என்னும் – பாண்டிக்கோவை:18 292/2
ஒரு நெடும் குன்றம் மறைந்து உலகு எலாம் உலாய் குண-பால் – பாண்டிக்கோவை:18 292/3
திரு நெடும் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே – பாண்டிக்கோவை:18 292/4
கடாவும் நெடும் தேர் கலிமதனன் கலி தேய செங்கோல் – பாண்டிக்கோவை:18 325/1
வாமா நெடும் தேர் மணிவண்ணன் மாறன் வண் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:18 330/3
திரு நெடும் கோதையும் தெய்வம் தொழாள் தெவ்வர் மேல் செலினும் – பாண்டிக்கோவை:18 334/1
பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல் – பாண்டிக்கோவை:18 334/2
அரு நெடும் தானை அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 334/3
கரு நெடும் கண் மடவாய் அன்னதால் அவர் காதன்மையே – பாண்டிக்கோவை:18 334/4
போர் மன்னு வேல் அண்ணல் பொன் நெடும் தேர் பூண் புரவிகளே – பாண்டிக்கோவை:18 335/4
உருவ மணி நெடும் தேர் மன்னர் வீய ஒளி தருமேல் – பாண்டிக்கோவை:18 339/2
ஆடல் நெடும் கொடி அரிகேசரி அம் தண் பொன்னி – பாண்டிக்கோவை:18 343/3

மேல்

நெடுமாறன் (42)

நெய் வாய் அயில் நெடுமாறன் பகை போல் நினைந்து பண்டை – பாண்டிக்கோவை:3 26/3
கோமான் குல மன்னர் கோன் நெடுமாறன் கொல்லி சிலம்பில் – பாண்டிக்கோவை:4 55/2
நீரின் மலிந்த செவ் வேல் நெடுமாறன் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:5 60/1
கந்து ஆர் அடு களி யானை கழல் நெடுமாறன் கன்னி – பாண்டிக்கோவை:6 79/1
கொலை ஆர் சிலை மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:9 90/2
செரு நெடும் செம் சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:10 93/2
களி சேர் களிற்று கழல் நெடுமாறன் கடையல் வென்ற – பாண்டிக்கோவை:10 98/1
கூடார் செல செற்ற கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:10 101/2
இலை உடை வேல் நெடுமாறன் கழல் இறைஞ்சாதவர் போல் – பாண்டிக்கோவை:11 109/2
நெறி கெழு செங்கோல் நடாம் நெடுமாறன் நெல்வேலி வென்றான் – பாண்டிக்கோவை:12 123/2
கோடிய திண் சிலை கோன் நெடுமாறன் தென் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:12 129/2
களி ஆர் களிற்று கழல் நெடுமாறன் கடி முனை மேல் – பாண்டிக்கோவை:14 160/3
கார் ஆர் களிற்று கழல் நெடுமாறன் கழல் பணிந்து – பாண்டிக்கோவை:14 161/3
குரு மா மணிவண்ணன் கோன் நெடுமாறன் குமரி முந்நீர் – பாண்டிக்கோவை:14 166/2
தென்னன் திருமால் கழல் நெடுமாறன் திருந்து செங்கோல் – பாண்டிக்கோவை:14 167/3
நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர் இழை இ – பாண்டிக்கோவை:14 181/1
மாலை குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:16 192/3
குன்று ஒத்த யானை செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:16 195/1
காணும் கழல் நெடுமாறன் செங்கோல் நின்று காக்கும் மண் மேல் – பாண்டிக்கோவை:16 200/2
கோடக நீள் முடி கோன் நெடுமாறன் தென் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:17 210/3
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து – பாண்டிக்கோவை:17 218/2
நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தென் நேரி முன்னால் – பாண்டிக்கோவை:17 219/2
நெருங்கு அடல் வேல் நெடுமாறன் நெடுங்களத்து அன்று வென்றான் – பாண்டிக்கோவை:17 224/1
மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:17 238/1
இழுதும் மிடைந்த செவ் வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 250/3
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 251/3
முடி மேல் வளை உடைத்தோன் நெடுமாறன் முன் நாள் உயர்த்த – பாண்டிக்கோவை:17 254/2
நெய் நின்ற வேல் நெடுமாறன் எம் கோன் அம் தண் நேரி என்னும் – பாண்டிக்கோவை:17 259/1
பொன் ஆர் கழல் நெடுமாறன் குமரி அம் பூம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:17 260/2
மண் இவர் சீர் மன்னன் வாள் நெடுமாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 261/2
வடி ஆர் அயில் நெடுமாறன் எம் கோன் கொல்லி வண்டு இமிர் பூம் – பாண்டிக்கோவை:18 272/3
வென்றே களித்த செவ் வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:18 275/1
நெய் மாண் அயில் நெடுமாறன் நிறை புனல் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 280/3
கொல் தாங்கு அயில் மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 284/1
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல் – பாண்டிக்கோவை:18 286/3
குடையான் குல மன்னன் கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 287/3
சிகர களிற்று செங்கோல் நெடுமாறன் தென் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:18 296/2
நெய் வாய் அயில் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர்_இழையாய் – பாண்டிக்கோவை:18 297/2
குளம் கொண்டு தோற்பித்த கோன் நெடுமாறன் கை போலும் கொண்டல் – பாண்டிக்கோவை:18 306/2
கொல் ஆர் அயில் படை கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 324/3
இரும் தண் குடை நெடுமாறன் இகல் முனை போல் நினைந்து – பாண்டிக்கோவை:18 331/2
கோவை குளிர் பூத்த வெண்குடை கோன் நெடுமாறன் முந்நீர் – பாண்டிக்கோவை:18 342/1

மேல்

நெடுமாறன்-தன் (1)

மன் ஏந்திய புகழ் வாள் நெடுமாறன்-தன் மரந்தை அன்ன – பாண்டிக்கோவை:18 291/1

மேல்

நெய் (11)

நெய் ஏர் அயில் கொண்ட நேரியன் கொல்லி நெடும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 20/2
நெய் வாய் அயில் நெடுமாறன் பகை போல் நினைந்து பண்டை – பாண்டிக்கோவை:3 26/3
நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர் இழை இ – பாண்டிக்கோவை:14 181/1
நெய் ஏர் குழலி வதுவை அயர்தர நேரும்-கொல்லோ – பாண்டிக்கோவை:17 231/3
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 251/3
நெய் நின்ற வேல் நெடுமாறன் எம் கோன் அம் தண் நேரி என்னும் – பாண்டிக்கோவை:17 259/1
நெய் மாண் அயில் நெடுமாறன் நிறை புனல் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 280/3
நெய் வாய் அயில் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர்_இழையாய் – பாண்டிக்கோவை:18 297/2
நேரா வயவர் நெடுங்களத்து ஓட நெய் வேல் நினைந்த – பாண்டிக்கோவை:18 300/3
நெய் ஆர் குழலாள் இனைய நறையாற்று நின்று வென்ற – பாண்டிக்கோவை:18 322/2
நெய் ஆர் அயிலவர் காண பொழிந்த நெடுங்களத்து – பாண்டிக்கோவை:18 328/2

மேல்

நெய்யில் (1)

நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண் – பாண்டிக்கோவை:18 278/3

மேல்

நெருங்கி (1)

ஏதலர் நோய் செய்வதோ நின் பெருமை என நெருங்கி
காதலர்-தம்மை கழறின் என் ஊனம் கரும் கடலே – பாண்டிக்கோவை:17 237/3,4

மேல்

நெருங்கு (1)

நெருங்கு அடல் வேல் நெடுமாறன் நெடுங்களத்து அன்று வென்றான் – பாண்டிக்கோவை:17 224/1

மேல்

நெருஞ்சியில் (1)

வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல் – பாண்டிக்கோவை:18 316/1

மேல்

நெருநல் (1)

அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேள் அயல் வேந்து இறைஞ்சும் – பாண்டிக்கோவை:17 260/1

மேல்

நெல் (1)

நெல் ஆர் கழனி நெடுங்களத்து அன்று நிகர் மலைந்த – பாண்டிக்கோவை:17 215/3

மேல்

நெல்வேலி (9)

நீடிய பூம் தண் கழனி நெல்வேலி நகர் மலைந்தார் – பாண்டிக்கோவை:3 24/1
நீரின் மலிந்த செவ் வேல் நெடுமாறன் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:5 60/1
நிதியின் கிழவன் நிலமகள் கேள்வன் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:5 61/1
நிரை தார் அரசரை நெல்வேலி வென்ற நெடுந்தகை சீர் – பாண்டிக்கோவை:5 77/3
நெறி கெழு செங்கோல் நடாம் நெடுமாறன் நெல்வேலி வென்றான் – பாண்டிக்கோவை:12 123/2
நீர் வண்ணன் வெண் திரை மேல் நின்ற வேந்தன் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:14 170/1
நீயும் இவளும் இன்றே சென்று சேர்திர் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:17 208/1
புல்லார் அவிய நெல்வேலி பொரு கணை மாரி பெய்த – பாண்டிக்கோவை:18 288/3
நிரந்து ஆங்கு எதிர்ந்தார் அவிய நெல்வேலி தன் நீள் சிலை-வாய் – பாண்டிக்கோவை:18 315/1

மேல்

நெறி (7)

செல்லும் நெறி அறியேன் உரையீர் நும் சிறுகுடிக்கே – பாண்டிக்கோவை:5 69/4
நெறி கெழு செங்கோல் நடாம் நெடுமாறன் நெல்வேலி வென்றான் – பாண்டிக்கோவை:12 123/2
நீ போது இவை கொய்து நிற்பது சால நெறி உடைத்தே – பாண்டிக்கோவை:12 142/4
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து – பாண்டிக்கோவை:17 218/2
இருள் தங்கு நீள் நெறி எம்-பொருட்டால் வந்து இயங்கல்-மினே – பாண்டிக்கோவை:17 244/4
நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண் – பாண்டிக்கோவை:18 278/3
அரு மா நெறி பொருட்கோ செல்வது அன்று நெஞ்சே அவள்-தன் – பாண்டிக்கோவை:18 323/3

மேல்

நெறிதரு (1)

நெறிதரு கோல் செல்லும் எல்லை உள்ளேம் அல்லேம் நீர்மை இலா – பாண்டிக்கோவை:18 317/2

மேல்

நெறிந்து (1)

நெறிந்து ஆர் கமழ் குஞ்சியானோடு இவளிடை நின்றது எல்லாம் – பாண்டிக்கோவை:5 70/3

மேல்

நெறிப்பட (1)

நிழல் ஆர் குடையொடு தண்ணீர் கரகம் நெறிப்பட கொண்டு – பாண்டிக்கோவை:17 216/1

மேல்

நெறியே (2)

தெய்வம் எல்லாம் மருவி பிரியாத சிறு நெறியே – பாண்டிக்கோவை:17 247/4
தேம் தண் சிலம்பின் அரிமா திரிதரும் தீ நெறியே – பாண்டிக்கோவை:17 249/4

மேல்

நென்னல் (2)

நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 110/4
பண் இவர் சொல்லி கண்டாள் நென்னல் பாழி பகை தணித்த – பாண்டிக்கோவை:17 261/1

மேல்