கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சுட்ட 1
சுடர் 21
சுடரும் 1
சுடரோன் 1
சுணங்கு 1
சுரத்து 2
சுரத்தூடு 1
சுரத்தே 1
சுரம் 11
சுரமே 1
சுரும்பு 6
சுருள் 1
சுவடு 1
சுவல் 1
சுவலின் 1
சுழலும் 1
சுழன்றது 1
சுனை 3
சுனை-வாய் 1
சுனையே 2
சுட்ட (1)
வில் இயல் காமனை சுட்ட வெம் தீ சுடர் விண்டு அவன் மேல் – பாண்டிக்கோவை:18 310/3
சுடர் (21)
தூ வண மாட சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர் – பாண்டிக்கோவை:2 13/3
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர் – பாண்டிக்கோவை:2 14/3
குன்றத்திடை புனம் காவல் இட்ட குரூஉ சுடர் எம் – பாண்டிக்கோவை:2 15/3
ஓடிய ஆறு கண்டு ஒண் சுடர் வை வேல் உறை செறிந்த – பாண்டிக்கோவை:3 24/2
துளி மன்னு வெண் மணல் பாய் இனிதே சுடர் ஓர் மருமான் – பாண்டிக்கோவை:3 47/2
மன்னும் சுடர் மணி போந்துகுமோ நுங்கள் வாயகத்தே – பாண்டிக்கோவை:4 57/4
சுடர் திரி வானிடம் போதா வகை தொல் உலகில் வந்த – பாண்டிக்கோவை:5 74/1
பருந்து இவர் செம் சுடர் வெல் வேல் பராங்குசன் பற்றலர் போல் – பாண்டிக்கோவை:6 80/3
செரு நெடும் செம் சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:10 93/2
துணி நிற வேல் மன்னன் தென்னர் பிரான் சுடர் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:11 112/3
மின்னும் சுடர் பவளத்து அருகே விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:12 125/3
சோழன் சுடர் முடி வானவன் தென்னன் துன்னாத மன்னர் – பாண்டிக்கோவை:12 135/3
துணி கொண்டு பேய் துள்ள வேல் கொண்ட கோன் சுடர் தோய் பொதியின் – பாண்டிக்கோவை:17 252/2
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அம் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 264/3
விழித்தார் பட விழிஞக்கடல்கோடி தன் வெண் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 305/3
வில் இயல் காமனை சுட்ட வெம் தீ சுடர் விண்டு அவன் மேல் – பாண்டிக்கோவை:18 310/3
வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல் – பாண்டிக்கோவை:18 316/1
அம் சுடர் வேல் அரிகேசரி கோன் அளநாட்டு உடைந்தார்-தம் – பாண்டிக்கோவை:18 316/3
சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே – பாண்டிக்கோவை:18 316/4
தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் என சிறந்த – பாண்டிக்கோவை:18 321/3
தூ வை சுடர் வேலவர் சென்ற நாட்டுள்ளும் துன்னும்-கொல்லோ – பாண்டிக்கோவை:18 342/2
சுடரும் (1)
சோலை சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த – பாண்டிக்கோவை:16 192/2
சுடரோன் (1)
குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கி – பாண்டிக்கோவை:17 207/3
சுணங்கு (1)
திரு மா முக திங்கள் செங்கயல் உண்கண் செம்பொன் சுணங்கு ஏர் – பாண்டிக்கோவை:3 39/1
சுரத்து (2)
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து
வெறி கமழ் கோதை இங்கே நின்றது இஃதாம் விடலை தன் கை – பாண்டிக்கோவை:17 218/2,3
ஊனப்பட நினைந்து ஊடல் பொன்னே உறு வெம் சுரத்து
நான குழல் மிசை நான் கொய்து கொண்டு நயந்து அணிந்த – பாண்டிக்கோவை:18 345/2,3
சுரத்தூடு (1)
அழல் ஆர் அரும் சுரத்தூடு வருகின்ற அந்தணிர்காள் – பாண்டிக்கோவை:17 216/2
சுரத்தே (1)
இடையாள் விடலை பின் சென்றனளோ இவ் இரும் சுரத்தே – பாண்டிக்கோவை:17 217/4
சுரம் (11)
விண் முத்தும் நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:17 209/3
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள் – பாண்டிக்கோவை:17 214/2
புல்லாதவர் என யார்-கொல் அரும் சுரம் போந்தவரே – பாண்டிக்கோவை:17 215/4
வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்ற நும் மெல்_இயல் மாட்டு – பாண்டிக்கோவை:17 223/1
வெம்மை சுரம் வருகின்றனள் என்று விரைந்து செல்வீர் – பாண்டிக்கோவை:17 225/3
வேடர் இல் வெம் சுரம் மீண்டனள் என்று விரைந்து செல்வீர் – பாண்டிக்கோவை:17 226/3
வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர் – பாண்டிக்கோவை:17 227/2
செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ – பாண்டிக்கோவை:17 228/2
கொன்று ஆறலைக்கும் சுரம் அன்பர் நீங்க என் கோல் வளைகள் – பாண்டிக்கோவை:17 232/3
கல் ஆர் சுரம் செல்வதே நினைந்தார் நமர் காய்ந்து எதிர்ந்த – பாண்டிக்கோவை:18 288/2
செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்ல தன்-கண் – பாண்டிக்கோவை:18 324/1
சுரமே (1)
வெய்யான் பகை என நீங்குதுமோ நெஞ்சம் வெம் சுரமே – பாண்டிக்கோவை:18 322/4
சுரும்பு (6)
தூ வடி வேல் மன்னன் கன்னி துறை சுரும்பு ஆர் குவளை – பாண்டிக்கோவை:1 3/2
சுரும்பு உடை கோதை நல்லாய் இவற்கு துயர் செய்யும் என்று உன் – பாண்டிக்கோவை:4 53/2
சுரும்பு ஆர் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே – பாண்டிக்கோவை:4 56/4
வண் பூம் சிலம்பின் வரை புனம் நீங்கான் வரும் சுரும்பு ஆர் – பாண்டிக்கோவை:7 83/3
சுரும்பு ஆர் கரும் குழலாய் அறியேன் இனி சொல்லுவதே – பாண்டிக்கோவை:11 107/4
வேல் நக நீண்ட கண்ணாளும் விரும்பும் சுரும்பு அரற்றும் – பாண்டிக்கோவை:12 137/1
சுருள் (1)
இரிந்த வகை கண்ட வாள் மன்னன் தென் நாட்டு இரும் சுருள் போய் – பாண்டிக்கோவை:18 277/2
சுவடு (1)
கைம்மா புறவின் சுவடு தொடர்ந்து கனல் விழிக்கும் – பாண்டிக்கோவை:18 280/1
சுவல் (1)
அழுது சுவல் சென்ற அக்கு அரையானொடும் வந்தமையால் – பாண்டிக்கோவை:18 299/3
சுவலின் (1)
பேரான் சுவலின் இருப்ப வந்தான் பிழைப்பு எண்ணப்பெறாய் – பாண்டிக்கோவை:18 300/2
சுழலும் (1)
சுழலும் வரி வண்டு அலம்ப சொரி மதம் வாய் புக நின்று – பாண்டிக்கோவை:18 307/1
சுழன்றது (1)
சிலையாய் குனித்து குழலாய் சுழன்றது என் சிந்தையே – பாண்டிக்கோவை:3 28/4
சுனை (3)
நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேர்_இழையே – பாண்டிக்கோவை:8 84/4
தண் தாரவன் கொல்லி தாழ் சுனை ஆடிய தான் அகன்றாள் – பாண்டிக்கோவை:8 88/2
தொகு வாயன சுனை சேர் குன்றம் நீங்கலும் துன்னுவர் போய் – பாண்டிக்கோவை:17 221/3
சுனை-வாய் (1)
பொதியிலின் ஆங்கு உனை நீங்கிய போது ஒரு பூம் சுனை-வாய்
விதியது தான் கொடுபோய் புனலாட்டு விளைவித்ததே – பாண்டிக்கோவை:8 85/3,4
சுனையே (2)
உண்டாம் எனில் தையல் யானும் சென்று ஆடுவன் ஒண் சுனையே – பாண்டிக்கோவை:8 86/4
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அ தடம் சுனையே – பாண்டிக்கோவை:8 89/4