Select Page

கட்டுருபன்கள்


ஊசல் (1)

திருந்திய ஊசல் சென்று ஆடிக்-கொல் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:6 80/2

மேல்

ஊசலும் (1)

ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4

மேல்

ஊட்டி (1)

விண்டார் உடலின் மறி அறுத்து ஊட்டி வெறியயர்ந்து – பாண்டிக்கோவை:14 155/2

மேல்

ஊடல் (2)

உடைமணியானொடு நீ வர ஊடல் சிவப்பு ஒழிந்தும் – பாண்டிக்கோவை:18 301/3
ஊனப்பட நினைந்து ஊடல் பொன்னே உறு வெம் சுரத்து – பாண்டிக்கோவை:18 345/2

மேல்

ஊர் (7)

வேவணை வெம் சிலையான் வஞ்சி அன்ன இனையல் எம் ஊர்
தூ வண மாட சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர் – பாண்டிக்கோவை:2 13/2,3
தூ வண மாட சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர்
ஆவண வீதி எல்லாம் நிழல் பாய நின்று அணவருமே – பாண்டிக்கோவை:2 13/3,4
துணி நிற வேல் கொண்ட கோன் தொண்டி அன்னாய் துயரல் எம் ஊர்
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர் – பாண்டிக்கோவை:2 14/2,3
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர்
அணி நிற மாளிகை மேல் பகல் பாரித்து அணவருமே – பாண்டிக்கோவை:2 14/3,4
ஏலம் கமழ் குழல் ஏழை எம் ஊர் எழில் மாடத்து உச்சி – பாண்டிக்கோவை:2 16/3
சூலம் துடைக்கும் நும் ஊர் மணி மாட துகில் கொடியே தலைவன் – பாண்டிக்கோவை:2 16/4
இன்று ஒத்தது ஒன்று துணி நீ சிலம்ப அன்றாயின் எம் ஊர்
மன்றத்து நின்று முழங்கும்-கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 195/3,4

மேல்

ஊர்க (2)

எளிதே எழுத எழுதி பின் ஊர்க எழில் மடலே – பாண்டிக்கோவை:10 98/4
இன்றே புகும் வண்ணம் ஊர்க திண் தேர் இள வஞ்சி என்ன – பாண்டிக்கோவை:18 275/3

மேல்

ஊர்ந்து (1)

சிறிய பைம் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:16 205/1

மேல்

ஊர (2)

கரு நெடும் பெண்ணை செம் கேழ் மடல் ஊர கருதுவரே – பாண்டிக்கோவை:10 93/4
எறி புனல் ஊர எவ்வாறு அமையும் நின் இன் அருளே – பாண்டிக்கோவை:18 317/4

மேல்

ஊரக்கொளாய்-கொல் (1)

உலம் மன்னு தோள் அண்ணல் ஊரக்கொளாய்-கொல் ஒலி திரை சூழ் – பாண்டிக்கோவை:10 96/2

மேல்

ஊரவர் (1)

சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே – பாண்டிக்கோவை:17 232/4

மேல்

ஊரன் (2)

பொன் ஆர் புனல் அணி ஊரன் வந்து உன் இல் புறங்கடையான் – பாண்டிக்கோவை:18 312/1
தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே – பாண்டிக்கோவை:18 314/4

மேல்

ஊரன்-தன் (1)

பரந்து ஆர் வரு புனல் ஊரன்-தன் பண்பின்மை எங்களையும் – பாண்டிக்கோவை:18 315/3

மேல்

ஊரனும் (1)

சென்றே ஒழிக வயல் அணி ஊரனும் தின்ன தந்த – பாண்டிக்கோவை:18 298/1

மேல்

ஊரனை (1)

வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல் – பாண்டிக்கோவை:18 316/1

மேல்

ஊரில் (1)

பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு – பாண்டிக்கோவை:18 318/3

மேல்

ஊரின் (1)

ஊரின் பெயரும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 60/4

மேல்

ஊரும் (2)

ஊரும் துயின்று இடம் காவலரோடு அன்னை உள்ளுறுத்து எல்லாரும் – பாண்டிக்கோவை:17 240/3
உள்ளத்தினோடு சிதைய வந்து ஊரும் ஒலி கடலே – பாண்டிக்கோவை:18 347/4

மேல்

ஊழி (1)

நடந்தால் இடை இருள் போய் கடையாம நல் ஊழி மெல்ல – பாண்டிக்கோவை:18 293/3

மேல்

ஊறா (1)

ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண் – பாண்டிக்கோவை:17 209/1

மேல்

ஊன் (1)

ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல் – பாண்டிக்கோவை:3 48/2

மேல்

ஊனப்பட (1)

ஊனப்பட நினைந்து ஊடல் பொன்னே உறு வெம் சுரத்து – பாண்டிக்கோவை:18 345/2

மேல்

ஊனம் (4)

காதலர்-தம்மை கழறின் என் ஊனம் கரும் கடலே – பாண்டிக்கோவை:17 237/4
இரவும் வரவு என்ன ஊனம் என்று ஆயினது இன் அருளே – பாண்டிக்கோவை:17 253/4
மஞ்சு ஆர் சிலம்பா வரவு என்ன ஊனம் மயங்கு இருளே – பாண்டிக்கோவை:17 255/4
ஊனம் கடந்த உயர் குடை வேந்தன் உசிதன் ஒன்னார் – பாண்டிக்கோவை:18 289/1

மேல்