கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வை 5
வைக்கப்படும் 5
வைக்கற்பாற்று 1
வைக்கும் 2
வைக்கோல் 1
வைகல் 4
வைகலும் 15
வைகலை 2
வைகறை 1
வைகிய 1
வைகு 1
வைகுதல் 1
வைகும் 1
வைசிரவண்ணன் 1
வைத்த 6
வைத்தக்கால் 1
வைத்ததனை 1
வைத்தல் 3
வைத்தார் 4
வைத்தாரின் 1
வைத்தால் 2
வைத்தாற்கு 1
வைத்தான்வாய் 1
வைத்தீர் 1
வைத்து 20
வைத்தூறு 1
வைததனால் 1
வைததனான் 1
வைததனை 1
வைததை 1
வைதல் 1
வைதலே 1
வைதாரா 1
வைதாரின் 1
வைதால் 1
வைதான் 3
வைது 2
வைப்பது 1
வைப்பர் 1
வைப்பாம் 1
வைப்பார் 1
வைப்பார்க்கும் 1
வைப்பானும் 1
வைப்பானே 1
வைப்பில் 1
வைப்பிற்கு 1
வைப்பின் 1
வைப்பு 5
வைப்புழி 1
வைப்போடு 1
வைய 1
வையக்கு 1
வையகத்து 3
வையகத்தோர் 1
வையகம் 2
வையகமும் 1
வையத்தார்க்கு 1
வையத்தின் 1
வையத்து 6
வையத்துள் 2
வையம் 5
வையமும் 1
வையற்க 1
வையாது 2
வையாமை 1
வையார் 6
வையாரே 1
வையான் 3
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வை (5)
பெருகுவது போல தோன்றி வை தீ போல் – நாலடி:24 4/1
வலி முன்னர் வை பாரம் இல் – பழ:234/4
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று – பழ:398/1
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று – சிறுபஞ்:16/1
நன் புலத்து வை அடக்கி நாளும் நாள் ஏர் போற்றி – சிறுபஞ்:58/1
வைக்கப்படும் (5)
தலை நிலத்து வைக்கப்படும் – நாலடி:14 3/4
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள்:5 10/2
செத்தாருள் வைக்கப்படும் – குறள்:22 4/2
இறை என்று வைக்கப்படும் – குறள்:39 8/2
அலகையா வைக்கப்படும் – குறள்:85 10/2
வைக்கற்பாற்று (1)
உண்டாக வைக்கற்பாற்று அன்று – நாலடி:1 1/4
வைக்கும் (2)
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா – இன்னா40:16/1
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள்:78 6/2
வைக்கோல் (1)
எருத்திடை வைக்கோல் தினல் – பழ:187/4
வைகல் (4)
வைகலும் வைகல் வர கண்டும் அஃது உணரார் – நாலடி:4 9/1
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் – நாலடி:4 9/3
எவ்வம் எனினும் எழுந்தீக வைகல்
மறு இல் பொலம் தொடி வீசும் அலற்றும் – ஐந்70:55/2,3
இராஇருக்கை ஏலாத வைகல் பனி மூழ்கல் – சிறுபஞ்:90/1
வைகலும் (15)
தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற – நாலடி:1 7/1,2
வைகலும் வைகல் வர கண்டும் அஃது உணரார் – நாலடி:4 9/1
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் – நாலடி:4 9/2
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் – நாலடி:4 9/3
இம்மி அரிசி துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்து உண்மின் நும்மை – நாலடி:10 4/1,2
பனை துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் – நாலடி:11 5/2
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே – நாலடி:13 5/3
செல்லாது வைகிய வைகலும் ஒல்வ – நாலடி:17 9/2
முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டி உண்பாரும் குறடு போல் கைவிடுவர் – நாலடி:21 8/1,2
வைகலும் ஏரும் வலம் – கார்40:12/4
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – குறள்:9 3/1
எய்துவது எய்தாமை முன் காத்தல் வைகலும்
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும் – திரி:61/2,3
நல் விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும்
இல் புறஞ்செய்தலின் ஈன்ற தாய் தொல் குடியின் – திரி:64/1,2
வருவாய் சிறிதுஎனினும் வைகலும் ஈண்டின் – பழ:160/1
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும்
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற – சிறுபஞ்:44/1,2
வைகலை (2)
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் – நாலடி:4 9/2
வைகலை வைத்து உணராதார் – நாலடி:4 9/4
வைகறை (1)
வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் – ஆசாரக்:4/1
வைகிய (1)
செல்லாது வைகிய வைகலும் ஒல்வ – நாலடி:17 9/2
வைகு (1)
வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ் மக்கள் – ஆசாரக்:10/3
வைகுதல் (1)
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார் – நாலடி:4 9/3,4
வைகும் (1)
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் – நாலடி:4 9/2
வைசிரவண்ணன் (1)
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன்
ஆய் வாழ்வான் வகுத்து – ஏலாதி:49/3,4
வைத்த (6)
வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்று இவற்றுள் – நாலடி:5 6/3
வைத்து கழியும் மடவோனை வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து – நாலடி:28 3/2,3
வைத்த அறப்புறம் கொண்டானும் இ மூவர் – திரி:25/3
வைத்த அடைக்கலம் கொள்வானும் இ மூவர் – திரி:62/3
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும் – ஆசாரக்:95/2
கரப்புடையார் வைத்த கடையும் உதவா – பழ:169/1
வைத்தக்கால் (1)
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்க தாம் கொள்ளார் – பழ:17/1,2
வைத்ததனை (1)
வைத்ததனை வைப்பு என்று உணரற்க தாம் அதனை – பழ:37/1
வைத்தல் (3)
ஒள்ளியன் அல்லான் மேல் வைத்தல் குரங்கின் கை – பழ:200/3
குடிமகன் அல்லான் கை வைத்தல் கடி நெய்தல் – பழ:396/2
அழிந்தாளை இல் வைத்தல் பேர் அறமா ஆற்ற – சிறுபஞ்:70/3
வைத்தார் (4)
புனம் காக்க வைத்தார் போல் பூங்குழலை போந்து என் – திணை150:30/3
மனம் காக்க வைத்தார் மருண்டு – திணை150:30/4
கொல்லி மேல் கொட்டு வைத்தார் – பழ:99/4
மென் புடையார் வைத்தார் விரித்து – ஏலாதி:68/4
வைத்தாரின் (1)
வைத்தாரின் நல்லர் வறியவர் பைத்து எழுந்து – நான்மணி:67/2
வைத்தால் (2)
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்
இமையாது காப்பினும் ஆகா இமையாரும் – பழ:336/1,2
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான் இவர் செம்மை – சிறுபஞ்:101/3
வைத்தாற்கு (1)
கடும் புனலின் நீந்தி கரை வைத்தாற்கு அல்லால் – திணை150:12/3
வைத்தான்வாய் (1)
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் – குறள்:101 1/1
வைத்தீர் (1)
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை – நாலடி:1 6/3
வைத்து (20)
வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட – நாலடி:1 10/3
வைகலை வைத்து உணராதார் – நாலடி:4 9/4
வைத்து கழியும் மடவோனை வைத்த – நாலடி:28 3/2
வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து
கொல்ல சுரப்பதாம் கீழ் – நாலடி:28 9/3,4
புறம் கடை வைத்து ஈவர் சோறும் அதனால் – நாலடி:30 3/3
நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் – நாலடி:40 4/3
தோள் வைத்து அணை மேல் கிடந்து – நாலடி:40 4/4
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள்:23 8/2
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் – குறள்:84 10/1
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள்:127 9/2
எ துணையும் அஞ்சா எயில் அரணும் வைத்து அமைந்த – திரி:100/2
பஞ்சி வைத்து எஃகிவிட்டு அற்று – பழ:91/4
காட்டி கருமம் கயவர் மேல் வைத்து அவர் – பழ:128/1
தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல் – பழ:149/3
கடை அடைத்து வைத்து புடைத்தக்கால் நாயும் – பழ:252/3
வைத்து மயில் கொள்ளுமாறு – பழ:325/4
கடைப்பிடி இல்லார் பால் வைத்து கடைப்பிடி – பழ:377/2
தொடரும் தம் பற்றினால் வைத்து இறப்பாரே – பழ:379/2
வைத்து வழங்கி வாழ்வார் – ஏலாதி:78/4
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி – கைந்:9/2
வைத்தூறு (1)
வைத்தூறு போல கெடும் – குறள்:44 5/2
வைததனால் (1)
வைததனால் ஆகும் வசையே வணக்கமது – நான்மணி:103/1
வைததனான் (1)
வைததனான் ஆகும் வசை வணக்கம் நன்று ஆக – சிறுபஞ்:33/1
வைததனை (1)
வைததனை இன் சொலா கொள்வானும் நெய் பெய்த – திரி:48/1
வைததை (1)
வைததை உள்ளிவிடும் – நாலடி:36 6/4
வைதல் (1)
உடை நடை சொற்செலவு வைதல் இ நான்கும் – ஆசாரக்:49/1
வைதலே (1)
புகழ்தலின் வைதலே நன்று – நாலடி:22 9/4
வைதாரா (1)
வைதாரா கொண்டு விடுவர்மன் அஃதால் – பழ:189/2
வைதாரின் (1)
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின் – நான்மணி:67/3
வைதால் (1)
நாவின் ஒருவரை வைதால் வயவு உரை – பழ:45/2
வைதான் (3)
வைதான் ஒருவன் ஒருவனை வைய – நாலடி:33 5/2
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான்
விய தக்கான் வாழும் எனின் – நாலடி:33 5/3,4
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது – சிறுபஞ்:84/1
வைது (2)
வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர் – நாலடி:16 6/3
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி – திரி:49/2
வைப்பது (1)
பண்டத்துள் வைப்பது இலர் – நாலடி:5 10/4
வைப்பர் (1)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள்:16 5/1,2
வைப்பாம் (1)
எய்ப்புழி வைப்பாம் என போற்றப்பட்டவர் – பழ:291/1
வைப்பார் (1)
கூட்டுள் ஆய் கொண்டு வைப்பார் – நாலடி:13 2/4
வைப்பார்க்கும் (1)
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண் பொருள் – நான்மணி:7/2
வைப்பானும் (1)
பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும்
இறந்து இன்னா சொல்லகிற்பானும் இ மூவர் – திரி:89/2,3
வைப்பானே (1)
வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன் – சிறுபஞ்:32/1
வைப்பில் (1)
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள்:15 9/1,2
வைப்பிற்கு (1)
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள்:3 4/2
வைப்பின் (1)
கட்டு உடைத்தாக கருமம் செய வைப்பின்
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க – பழ:118/1,2
வைப்பு (5)
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா – இன்னா40:16/1
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள்:23 6/2
வைத்ததனை வைப்பு என்று உணரற்க தாம் அதனை – பழ:37/1
எய்ப்பினில் வைப்பு என்பது – பழ:37/4
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு – பழ:215/4
வைப்புழி (1)
வைப்புழி கோள்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை – நாலடி:14 4/1
வைப்போடு (1)
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் – பழ:312/2,3
வைய (1)
வைதான் ஒருவன் ஒருவனை வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் – நாலடி:33 5/2,3
வையக்கு (1)
மாறா நீர் வையக்கு அணி – குறள்:71 1/2
வையகத்து (3)
வசை அன்று வையகத்து இயற்கை நசை அழுங்க – நாலடி:12 1/2
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள்:8 5/1,2
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று – குறள்:106 5/1
வையகத்தோர் (1)
மண் கிடந்த வையகத்தோர் மற்று பெரியராய் – திணை150:146/1
வையகம் (2)
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க – நாலடி:8 10/3
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை – குறள்:55 7/1
வையகமும் (1)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – குறள்:11 1/1,2
வையத்தார்க்கு (1)
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – குறள்:24 8/1
வையத்தின் (1)
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள்:36 3/1,2
வையத்து (6)
கொடாஅதவர் என்பர் குண்டு நீர் வையத்து
அடாஅ அடுப்பினவர் – நாலடி:10 4/3,4
வடு இலா வையத்து மன்னிய மூன்றில் – நாலடி:12 4/1
புணர் கடல் சூழ் வையத்து புண்ணியமோ வேறே – நாலடி:27 4/1
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள்:3 2/1,2
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – குறள்:85 10/1,2
வசை அன்று வையத்து இயற்கை அஃது அன்றி – பழ:24/2
வையத்துள் (2)
ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும் – நாலடி:11 9/1
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் – குறள்:5 10/1
வையம் (5)
அறை கடல் சூழ் வையம் நக – நாலடி:23 10/4
நெடுமொழி வையம் நக – நாலடி:24 8/4
பாய் திரை சூழ் வையம் பயப்பினும் இன்னாதே – நாலடி:34 9/3
வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள் – நாலடி:35 10/2
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கி – குறள்:19 9/1
வையமும் (1)
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான் வையமும்
வானும் வரிசையால்தான் ஆளும் நாளுமே – ஏலாதி:70/2,3
வையற்க (1)
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டா பொருள் இல்லை இல்லையே – பழ:118/2,3
வையாது (2)
கெடுவாக வையாது உலகம் நடுவாக – குறள்:12 7/1
இன்மையா வையாது உலகு – குறள்:85 1/2
வையாமை (1)
வையாமை வார்குழலார் நச்சினும் நையாமை – சிறுபஞ்:17/2
வையார் (6)
வையார் வடித்த நூலார் – நாலடி:17 3/4
முதியவரை பக்கத்து வையார் விதி முறையால் – ஆசாரக்:26/1
வடக்கொடு கோணம் தலை வையார் மீக்கோள் – ஆசாரக்:30/2
சிறந்தார் தமர் என்று தேற்றார் கை வையார்
கறங்கு நீர் கல் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப – பழ:43/2,3
முற்றலை நாடி கருமம் செய வையார்
கற்று ஒன்று அறிந்து கசடு அற்ற காலையும் – பழ:373/2,3
வரைவு இல்லா பெண் வையார் மண்ணை புற்று ஏறார் – சிறுபஞ்:78/1
வையாரே (1)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் – குறள்:16 5/1
வையான் (3)
செய்யான் சிறியார் இனம் சேரான் வையான்
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால் என்றும் – ஏலாதி:14/2,3
பொய் உரையான் வையான் புறங்கூறான் யாவரையும் – ஏலாதி:33/1
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே – ஏலாதி:44/2