கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோஒம் 1
தோகை 1
தோட்கப்படாத 1
தோட்கு 2
தோட்கோப்பு 2
தோட்ட 2
தோட்டம் 1
தோட்டார் 1
தோட்டியான் 1
தோணி 3
தோம் 2
தோய் 5
தோய்தல் 1
தோய்ந்த 2
தோய்ந்தாருள் 1
தோய்ந்தான் 1
தோய்வர் 1
தோய்வு 1
தோய 1
தோயாதவர் 1
தோயார் 3
தோயும் 3
தோல் 8
தோல்வி 1
தோலும் 2
தோழர் 2
தோழரின் 1
தோழி 22
தோழியர் 1
தோழியோ 1
தோள் 69
தோளாட்கு 1
தோளாய் 6
தோளால் 1
தோளாள் 1
தோளி 4
தோளும் 2
தோளேம் 1
தோற்பது 1
தோற்பன 1
தோற்பித்தல் 1
தோற்ற 2
தோற்றத்தால் 1
தோற்றத்தான் 1
தோற்றம் 10
தோற்றவர் 1
தோறு 1
தோன்ற 4
தோன்றல் 3
தோன்றலின் 1
தோன்றலும் 1
தோன்றா 8
தோன்றாதவனும் 1
தோன்றாதாம் 3
தோன்றாது 3
தோன்றாமுன் 2
தோன்றாமை 2
தோன்றார் 3
தோன்றாரால் 1
தோன்றி 20
தோன்றிட 1
தோன்றிய 1
தோன்றியக்கால் 1
தோன்றிவிடும் 2
தோன்றின் 5
தோன்றுக 1
தோன்றும் 32
தோன்றுமே 2
தோன்றுமோ 1
தோன்றுவர் 1
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தோஒம் (1)
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே – பழ:7/3
தோகை (1)
தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால் – சிறுபஞ்:103/3
தோட்கப்படாத (1)
தோட்கப்படாத செவி – குறள்:42 8/2
தோட்கு (2)
கிழமை உடையன் என் தோட்கு – திணை50:31/4
வளி தோட்கு இடுவாரோ இல் – பழ:79/4
தோட்கோப்பு (2)
தோட்கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் பீள் பிதுக்கி – நாலடி:2 10/2
இறுகிறுக தோட்கோப்பு கொள்ளார் இறுகிறுகி – நாலடி:33 8/2
தோட்ட (2)
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி தோட்ட
கய பூ போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை – நாலடி:22 5/2,3
ஆற்றல் வகைய அறம் செயல் தோட்ட
குளத்து அனைய தூம்பின் அகலங்கள் தத்தம் – நான்மணி:70/2,3
தோட்டம் (1)
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கு அற்றே – கள40:24/3
தோட்டார் (1)
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள்:111 5/2
தோட்டியான் (1)
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – குறள்:3 4/1
தோணி (3)
தோணி இயக்குவான் தொல்லை வருணத்து – நாலடி:14 6/1
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும் – குறள்:107 8/1
துறை தோணி நின்று உலாம் தூங்கு நீர் சேர்ப்ப – பழ:344/3
தோம் (2)
பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோம் இல் – நான்மணி:16/2
துணை நாடினன் தோம் இலன் – திணை150:45/4
தோய் (5)
வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட – நாலடி:1 10/3
வான் தோய் குடி பிறந்தார்க்கு இல் – நாலடி:7 9/4
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும் – நாலடி:15 2/2
மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில் – திணை150:28/1
நாகம் தோய் நாகம் என இவற்றை போக – திணை150:28/2
தோய்தல் (1)
புலை மயக்கம் வேண்டி பொருள்பெண்டிர் தோய்தல்
கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல் சொலை முனிந்து – திரி:39/1,2
தோய்ந்த (2)
நல் நுதலார் தோய்ந்த வரை மார்பன் நீராடாது – நாலடி:39 7/3
கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல் காயாவும் – கார்40:8/3
தோய்ந்தாருள் (1)
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் பாய்ந்து எழுந்து – திரி:82/2
தோய்ந்தான் (1)
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் பாய்ந்து எழுந்து – திரி:82/2
தோய்வர் (1)
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் – குறள்:92 7/1
தோய்வு (1)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – குறள்:31 8/1
தோய (1)
என்னையும் தோய வரும் – நாலடி:39 7/4
தோயாதவர் (1)
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள்:15 9/2
தோயார் (3)
பொருள்பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள் – குறள்:92 4/1
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – குறள்:92 5/1
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – குறள்:92 6/1
தோயும் (3)
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும்
மை தவழ் வெற்ப படாஅ பெரும் செல்வம் – நாலடி:15 2/2,3
ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் விண் தோயும்
குன்றக நல் நாட கூறுங்கால் இல்லையே – பழ:111/2,3
நீண்ட நீர் காடு களர் நிவந்து விண் தோயும்
மாண்ட மலை மக்கள் உள்ளிட்டு மாண்டவர் – சிறுபஞ்:47/1,2
தோல் (8)
தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும் – நாலடி:3 6/3
ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே – நாலடி:5 1/3
தோல் போர்வை மேலும் துளை பலவாய் பொய்ம் மறைக்கும் – நாலடி:5 2/1
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின் – நாலடி:33 2/3
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள்:8 10/2
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள்:28 3/2
பால் பற்றி சொல்லா விடுதலும் தோல் வற்றி – திரி:27/2
தோல் கன்று காட்டி கறவார் கறந்த பால் – சிறுபஞ்:82/1
தோல்வி (1)
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்கண்ணும் கொளல் – குறள்:99 6/1,2
தோலும் (2)
தொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே – நாலடி:5 6/2
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக – குறள்:105 3/1
தோழர் (2)
தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் – பழ:190/1
தொழீஇ அட உண்ணார் தோழர் இல் துஞ்சார் – சிறுபஞ்:36/1
தோழரின் (1)
உண்டு ஆர் அடிசிலே தோழரின் கண்டாரா – சிறுபஞ்:38/2
தோழி (22)
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி
மேனி தளிர்ப்ப வரும் – கார்40:10/3,4
கானல் அம் சேர்ப்ப தகுவதோ என் தோழி
தோள் நலம் தோற்பித்தல் நீ – ஐந்50:46/3,4
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான் என் தோழி
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல் – ஐந்70:11/3,4
குறை ஒன்று உடையேன்மன் தோழி நிறை இல்லா – ஐந்70:14/1
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கு இல்லை – ஐந்70:58/1
கண்ணினால் காண அமையும்கொல் என் தோழி
வண்ணம் தா என்கம் தொடுத்து – ஐந்70:66/3,4
தவழும் இரும் கழி சேர்ப்ப என் தோழி
படர் பசலை பாயின்று தோள் – ஐந்70:67/3,4
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி
மேனி பசப்பு கெட – திணை50:4/3,4
மணி மலை நாடன் வருவான்கொல் தோழி
கணி நிற வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும் – திணை50:9/2,3
புலவும்கொல் தோழி புணர்வு அறிந்து அன்னை – திணை50:10/3
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து – திணை50:15/2,3
நிலை அஞ்சி நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி
முலையொடு சோர்கின்ற பொன் வண்ணம் அன்னோ – திணை50:19/2,3
தொடலை சேர்த்து ஆடும் துறைவ என் தோழி
உடலும் உறு நோய் உரைத்து – திணை50:45/3,4
மருவி வரலுற வேண்டும் என் தோழி
உரு அழி உள் நோய் கெட – திணை50:46/3,4
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி
தணியும் என் மென் தோள் வளை – திணை50:47/3,4
தவழ் திரை சேர்ப்பன் வருவான்கொல் தோழி
திகழும் திரு அமர் மார்பு – திணை50:50/3,4
தொடாஅவால் என் தோழி தோள் – திணை150:14/4
ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து – குறள்:129 4/1
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என் – கைந்:2/3
இன்னே வரும் கண்டாய் தோழி இடை யாமத்து – கைந்:10/3
தொலைவு இலர்கொல் தோழி நமர் – கைந்:23/4
கலவான்கொல் தோழி நமக்கு – கைந்:53/4
தோழியர் (1)
தோழியர் சூழ துறை முன்றில் ஆடுங்கால் – ஐந்50:37/1
தோழியோ (1)
ஆழி போல் ஞாயிறு கல் சேர தோழியோ
மால் மாலை தம்முன் நிறம் போல் மதி முளைப்ப – திணை150:97/2,3
தோள் (69)
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ உம்மை – நாலடி:9 5/2
தோள் புடைக்கொள்ளா எழும் – நாலடி:32 2/4
பெறுவது கொள்பவர் தோள் போல் நெறிபட்டு – நாலடி:32 7/1
இனியார் தோள் சேரார் இசை பட வாழார் – நாலடி:34 8/3
மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர் – நாலடி:38 5/3
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும் – நாலடி:39 5/1
தோள் வைத்து அணை மேல் கிடந்து – நாலடி:40 4/4
உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா – இன்னா40:11/1
தட மென் பணை தோள் தளிர் இயலாரை – இனிய40:37/3
தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி – கார்40:6/1
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி – கார்40:19/3
திண் தோள் மறவர் எறிய திசைதோறும் – கள40:24/1
பீர் நீர்மை கொண்டன தோள் – ஐந்50:2/4
கானக நாடன் கலவான் என் தோள் என்று – ஐந்50:13/1
காரத்தின் வெய்ய என் தோள் – ஐந்50:24/4
இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா – ஐந்50:40/1
சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை – ஐந்50:45/2
தோள் நலம் தோற்பித்தல் நீ – ஐந்50:46/4
வாடல் மறந்தன தோள் – ஐந்70:2/4
வீங்கிய மென் தோள் கவினி பிணி தீர – ஐந்70:41/3
படர் பசலை பாயின்று தோள் – ஐந்70:67/4
வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம் – திணை50:8/2
பிணி நிறம் தீர்ந்து பெரும் பணை தோள் வீங்க – திணை50:9/1
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ – திணை50:17/3
வளையோடு சோரும் என் தோள் – திணை50:19/4
வந்தார் திகழ்க நின் தோள் – திணை50:21/4
தணியும் என் மென் தோள் வளை – திணை50:47/4
நெடும் பணை போல் தோள் நேராள் நின்று – திணை150:12/4
தொடாஅவால் என் தோழி தோள் – திணை150:14/4
தந்தார்க்கே ஆமால் தட மென் தோள் இன்ன நாள் – திணை150:39/1
பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள்
என் அணிந்த ஈடு இல் பசப்பு – திணை150:63/3,4
வாள் இழந்த கண் தோள் வனப்பு இழந்த மெல் விரலும் – திணை150:99/3
என் பசந்த மென் தோள் இனி – திணை150:117/4
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து – திணை150:124/3,4
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள்:15 9/2
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள்:91 6/2
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள்:92 6/2
பேணி புணர்பவர் தோள் – குறள்:92 7/2
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – குறள்:92 9/1
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல் – குறள்:111 3/1
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள்:111 5/2
அமிழ்தின் இயன்றன தோள் – குறள்:111 6/2
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள்:124 3/2
தொல் கவின் வாடிய தோள் – குறள்:124 4/2
தொல் கவின் வாடிய தோள் – குறள்:124 5/2
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை – குறள்:124 6/1
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள்:124 7/2
இலங்கிழாய் இன்று மறப்பின் என் தோள் மேல் – குறள்:127 2/1
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள்:127 5/2
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு – குறள்:128 2/1
தவறு இலர்ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள்:133 5/1,2
விழைவு இலா பெண்டிர் தோள் சேர்வும் உழந்து – திரி:5/2
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொலும் – திரி:24/1
சில் சொல் பெரும் தோள் மகளிரும் பல் வகையும் – திரி:47/1
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும் – திரி:81/1
செல்வ திருத்துளார் செம்மல் செரு அடு தோள்
நல்லாதன் என்னும் பெயரானே பல்லார் – திரி:106/1,2
கழி விழா தோள் ஏற்றுவார் – பழ:13/4
வேயின் திரண்ட தோள் வேல் கண்ணாய் விண் இயங்கும் – பழ:34/3
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும் – பழ:48/1
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில் – பழ:49/1
தொடி தோள் மடவார் துணை முலை ஆகம் – பழ:222/1
முன் கை நெடியார்க்கு தோள் – பழ:267/4
பாழி தோள் வட்டித்தார் காண்பாம் இனிது அல்லால் – பழ:338/3
கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல் – சிறுபஞ்:42/2
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன் மா நிலத்து – சிறுபஞ்:106/1
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் – ஏலாதி:74/1
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு என் தோள்
நிரையம் என கிடந்தவாறு – கைந்:5/3,4
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின் – கைந்:38/3
தோளாட்கு (1)
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு
தேர் நின்றது என்னாய் திரிந்து – திணை150:115/3,4
தோளாய் (6)
பட்டின்றே என்றி பணை தோளாய் கண்ணீரால் – திணை150:103/3
பண் கொண்ட தீம் சொல் பணை தோளாய் யார் உளரோ – பழ:16/3
காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் – பழ:349/3
பை அரவு அல்குல் பணை தோளாய் பாத்து அறிவு என் – பழ:364/3
வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும் – ஏலாதி:6/3
தண் துறை ஊரன் தட மென் பணை தோளாய்
வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து – கைந்:44/1,2
தோளால் (1)
கரும் தோளால் கண் விளக்கப்பட்டு – நாலடி:5 7/4
தோளாள் (1)
அழல் தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின் – சிறுபஞ்:96/3
தோளி (4)
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த – நாலடி:5 7/3
தட மென் பணை தோளி நீத்தாரோ வாரார் – ஐந்70:16/1
வரி வளை தோளி வருவார் நமர்கொல் – திணை50:30/3
காம்பு அன்ன தோளி கலங்க கடித்து ஓடும் – பழ:148/3
தோளும் (2)
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – குறள்:128 9/1
அருந்ததி கற்பினார் தோளும் திருந்திய – திரி:1/1
தோளேம் (1)
எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல – திணை50:37/3
தோற்பது (1)
செல உரைக்கும் ஆறு அறியார் தோற்பது அறியார் – நாலடி:32 3/3
தோற்பன (1)
வண்டு வழி படரும் வாள் கண்ணாய் தோற்பன
கொண்டு புகாஅர் அவை – பழ:4/3,4
தோற்பித்தல் (1)
தோள் நலம் தோற்பித்தல் நீ – ஐந்50:46/4
தோற்ற (2)
கோடு உயர் தோற்ற மலை மேல் இரும் கொண்மூ – ஐந்50:5/1
தோற்ற தாம் எள்ளி நலியற்க போற்றான் – பழ:252/2
தோற்றத்தால் (1)
தோற்றத்தால் பொல்லார் துணை இலார் நல்கூர்ந்தார் – பழ:166/1
தோற்றத்தான் (1)
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை – குறள்:109 4/1
தோற்றம் (10)
தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும் – நாலடி:1 7/1
குருதி பிணம் கவரும் தோற்றம் அதிர்வு இலா – கள40:20/2
இகலன் வாய் துற்றிய தோற்றம் அயலார்க்கு – கள40:28/4
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது – குறள்:13 4/1,2
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – குறள்:28 2/1
தோற்றம் நிலக்கு பொறை – குறள்:101 3/2
ஈவார்கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – குறள்:106 9/1
தோற்றம் அரிது ஆய மக்கள் பிறப்பினால் – பழ:137/1
தோற்றம் பெரிய நசையினார் அ நசை – பழ:163/1
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவா பசி தோற்றம்
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு அது – பழ:363/1,2
தோற்றவர் (1)
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் – குறள்:133 7/1
தோறு (1)
தாரா தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே – திணை150:139/3
தோன்ற (4)
தொல் வழி கேண்மையின் தோன்ற புரிந்து யாப்பர் – நாலடி:16 4/2
கார் தோன்ற காதலர் தேர் தோன்றாது ஆகவே – திணை150:100/3
கானம் தலைசெய காப்பார் குழல் தோன்ற
ஏனம் இடந்த மணி எதிரே வானம் – திணை150:122/1,2
விகிர்தம் கதம் கரத்தல் கை புடை தோன்ற
உறுப்பு செகுத்தலோடு இன்னவை எல்லாம் – ஆசாரக்:53/2,3
தோன்றல் (3)
பலர் காண தோன்றல் மதி – குறள்:112 9/2
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று – திரி:101/1,2
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று – திரி:101/2
தோன்றலின் (1)
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள்:24 6/2
தோன்றலும் (1)
அச்சம் அலை கடலின் தோன்றலும் ஆர்வு உற்ற – திரி:65/1
தோன்றா (8)
ஒன்றானும் தோன்றா கெடும் – நாலடி:19 6/4
கற்றார் முன் தோன்றா கழிவு இரக்கம் காதலித்து ஒன்று – நான்மணி:8/1
உற்றார் முன் தோன்றா உறா முதல் தெற்றென – நான்மணி:8/2
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா எல்லாம் – நான்மணி:8/3
வெகுண்டார் முன் தோன்றா கெடும் – நான்மணி:8/4
சாயினும் தோன்றா கரப்பு சொல் தீய – நான்மணி:95/2
பரப்பு சொல் சான்றோர் வாய் தோன்றா கரப்பு சொல் – நான்மணி:95/3
இல்லாகி தோன்றா கெடும் – குறள்:48 9/2
தோன்றாதவனும் (1)
விழு திணை தோன்றாதவனும் எழுத்தினை – திரி:92/1
தோன்றாதாம் (3)
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின் – நாலடி:18 7/2
சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல – நாலடி:18 7/3
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்
ஒன்றாய்விடினும் உயர்ந்தார் படும் குற்றம் – பழ:204/2,3
தோன்றாது (3)
கார் தோன்ற காதலர் தேர் தோன்றாது ஆகவே – திணை150:100/3
உரைத்தாலும் தோன்றாது உணர்வு – பழ:399/4
துறந்தார் துறவாதார் துப்பு இலார் தோன்றாது
இறந்தார் ஈடு அற்றார் இனையர் சிறந்தவர்க்கும் – ஏலாதி:35/1,2
தோன்றாமுன் (2)
இ வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன் இ வழியே – திணை150:124/2
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் தூக்கோல் – திணை150:125/2
தோன்றாமை (2)
துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமை காப்பு அச்சம் – நாலடி:9 3/2
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள்:24 6/2
தோன்றார் (3)
வெறுக்கைக்கு சென்றார் விளங்கிழாய் தோன்றார்
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ ஒறுப்ப போல் – திணை150:67/1,2
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்
இணை பிரிந்து வாழ்வர் இனி – திணை150:109/3,4
பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம் பயில் சோலை மலை நாட என்றும் – பழ:58/2,3
தோன்றாரால் (1)
நரி உளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய் – திணை150:113/3
தோன்றி (20)
கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி
மருங்கு அற கெட்டுவிடும் – நாலடி:1 8/3,4
படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம் – நாலடி:3 7/1,2
மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே – நாலடி:3 8/3
கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே – நாலடி:3 10/1,2
குழிந்து ஆழ்ந்த கண்ணவாய் தோன்றி ஒழிந்தாரை – நாலடி:5 9/2
பெருகுவது போல தோன்றி வை தீ போல் – நாலடி:24 4/1
எரி வனப்பு உற்றன தோன்றி வரி வளை – கார்40:9/2
புலம் எலாம் பூத்தன தோன்றி சிலமொழி – கார்40:26/3
கடைமணி காண்வர தோன்றி நடை மெலிந்து – கள40:19/2
நல்லார் மனம் கவர தோன்றி பணிமொழியை – ஐந்50:4/3
இடையுள் இழுது ஒப்ப தோன்றி புடை எலாம் – ஐந்50:49/2
அழி நீர ஆகி அரித்து எழுந்து தோன்றி
வழி நீர் அறுத்த சுரம் – திணை50:11/3,4
முரி பரல ஆகி முரண் அழிந்து தோன்றி
எரி பரந்த கானம் இயை பொருட்கு போவீர் – திணை50:12/1,2
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய் – திணை50:13/2
பீர் தோன்றி நீர் தோன்றும் கண் – திணை150:100/4
கார் தோன்றி பூவுற்ற காந்தள் முகை விளக்கு – திணை150:118/1
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி – திணை150:118/2
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி
தன் பருவம் செய்தது கானம் தடம்கண்ணாய் – திணை150:118/2,3
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர் – பழ:326/1
குருதி மலர் தோன்றி கூர் முகை ஈன – கைந்:26/1
தோன்றிட (1)
தான் தோன்றிட வரும் சால்பு – பழ:19/4
தோன்றிய (1)
கூடலின் தோன்றிய உப்பு – குறள்:133 8/2
தோன்றியக்கால் (1)
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு – நாலடி:1 2/1
தோன்றிவிடும் (2)
கீழ்கள் வாய் தோன்றிவிடும் – நான்மணி:95/4
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள்:126 3/2
தோன்றின் (5)
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற – நாலடி:20 7/3
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – குறள்:24 6/1
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா – குறள்:89 4/1
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான் – குறள்:89 5/1
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனை – குறள்:96 8/1
தோன்றுக (1)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – குறள்:24 6/1
தோன்றும் (32)
மலை மிசை தோன்றும் மதியம் போல் யானை – நாலடி:3 1/1
கரு நரை மேல் சூடே போல் தோன்றும் கரு நரையை – நாலடி:19 6/2
புகை வித்தா பொங்கு அழல் தோன்றும் சிறந்த – நான்மணி:30/1
நகை வித்தா தோன்றும் உவகை பகை ஒருவன் – நான்மணி:30/2
மற களி மன்னர் முன் தோன்றும் சிறந்த – நான்மணி:34/1
அற களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்
விய களி நல்கூர்ந்தார் மேற்றாம் கய களி – நான்மணி:34/2,3
வடு சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் கற்றார் வாய் – நான்மணி:95/1
எல்லியும் தோன்றும் பெயல் – கார்40:24/4
செவ்வல்அம் குன்றம் போல் தோன்றும் புனல் நாடன் – கள40:10/3
செம் வாய் உவணத்தின் தோன்றும் புனல் நாடன் – கள40:26/4
கண்ணாடி காண்பாரின் தோன்றும் புனல் நாடன் – கள40:28/5
திங்களில் தோன்றும் முயல் போலும் செம்பியன் – கள40:42/3
வலன் உயர்ந்து தோன்றும் மலை – ஐந்70:33/4
துயில் கெட தோன்றும் படையா துயில் போல் – திணை150:50/2
வெந்தால் போல் தோன்றும் நீள் வேய் அத்தம் தந்து ஆர் – திணை150:77/2
எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும்
கடுத்த மலை நாடு காண் – திணை150:79/3,4
இதடி கரையும் கல் மா போல தோன்றும்
சிதடி கரையும் திரிந்து – திணை150:83/3,4
பீர் தோன்றி நீர் தோன்றும் கண் – திணை150:100/4
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை – திணை150:128/3
ஆகுஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள் – குறள்:38 1/1
போகுஊழால் தோன்றும் மடி – குறள்:38 1/2
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி – குறள்:133 2/1
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என் – குறள்:133 4/1
தொல் அவையுள் தோன்றும் குடிமையும் தொக்கு இருந்த – திரி:8/1
குறளையுள் நட்பு அளவு தோன்றும் உறல் இனிய – திரி:37/1
சால்பினில் தோன்றும் குடிமையும் பால் போலும் – திரி:37/2
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இ மூன்றும் – திரி:37/3
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் – திரி:51/4
செறிவு அழுங்க தோன்றும் விழைவும் செறுநரின் – திரி:95/2
அமரா குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்
கவர் நிலம் செய்து அமைத்து கட்டியக்கண்ணும் – பழ:144/2,3
பட தோன்றும் நல்லாய் நெடு வேல் கெடுத்தான் – பழ:179/3
வேறாக தோன்றும் விளக்கம் உடைத்தாகும் – பழ:214/2
தோன்றுமே (2)
இங்குலிக குன்றே போல் தோன்றுமே செம் கண் – கள40:7/2
வினை படு பள்ளியின் தோன்றுமே செம் கண் – கள40:15/3
தோன்றுமோ (1)
தொடி உடையார் சேரிக்கு தோன்றுமோ சொல்லாய் – திணை150:125/3
தோன்றுவர் (1)
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார் – திணை150:109/3