Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 1
சக்கரத்தானை 1
சக்கரத்து 1
சக்கரம் 1
சகடக்கால் 1
சகடம் 1
சகோடன் 1
சங்கு 2
சத்தம் 1
சத்தமும் 1
சத்தியான் 1
சந்தன 2
சந்தனம் 1
சந்தனமும் 1
சபையில் 1
சம்பிரதம் 1
சமத்தனாய் 1
சமத்து 4
சமயத்தார்க்கு 1
சமயம் 1
சமழ்த்தனர் 1
சமழ்மையா 1
சமன் 1
சமையமே 1
சல 1
சலத்தால் 1
சலம் 2
சலமே 1
சலவர் 1
சலவருள் 1
சலவரே 1
சலவரை 1
சலித்திலா 1
சலித்து 2
சவட்டி 1
சவையின் 1
சனங்கள் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சக்கர (1)

சக்கர செல்வம் பெறினும் விழுமியோர் – நாலடி:35 6/1

TOP


சக்கரத்தானை (1)

சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:0/3

TOP


சக்கரத்து (1)

வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையாது – ஐந்70:56/2

TOP


சக்கரம் (1)

கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் – நான்மணி:0/2

TOP


சகடக்கால் (1)

சகடக்கால் போல வரும் – நாலடி:1 2/4

TOP


சகடம் (1)

மாய சகடம் உதைத்ததூஉம் இ மூன்றும் – திரி:0/3

TOP


சகோடன் (1)

தத்தன் சகோடன் கிருத்திரமன் புத்திரி – ஏலாதி:31/2

TOP


சங்கு (2)

பெரும் கடல் வெண் சங்கு காரணமா பேணாது – திணை150:33/1
பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு
நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும் – திணை150:49/2,3

TOP


சத்தம் (1)

சத்தம் மெய்ஞ்ஞானம் தருக்கம் சமையமே – சிறுபஞ்:91/1

TOP


சத்தமும் (1)

சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும் – நாலடி:6 2/3

TOP


சத்தியான் (1)

சத்தியான் தாள் தொழாதார்க்கு – இன்னா40:0/4

TOP


சந்தன (2)

சந்தன நீள் சோலை சாரல் மலை நாட – நாலடி:24 4/3
சார்தற்கு சந்தன சாந்து ஆயினேம் இ பருவம் – ஐந்50:24/3

TOP


சந்தனம் (1)

சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம் – கைந்:2/2

TOP


சந்தனமும் (1)

வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே – நாலடி:18 10/3

TOP


சபையில் (1)

நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே – இனிய40:1/2

TOP


சம்பிரதம் (1)

வித்து இன்றி சம்பிரதம் இல் – பழ:400/4

TOP


சமத்தனாய் (1)

சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே – பழ:95/3

TOP


சமத்து (4)

தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே – இனிய40:8/2,3
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் இ மூன்றும் – திரி:8/2,3
வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெம் சமத்து
வாள் ஆண்மையானும் வலியராய் தாளாண்மை – பழ:175/1,2
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃது அன்றி – பழ:296/1,2

TOP


சமயத்தார்க்கு (1)

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் – பழ:127/1

TOP


சமயம் (1)

கால்வாய் தொழுவு சமயம் எழுந்திருப்பு – ஆசாரக்:62/1

TOP


சமழ்த்தனர் (1)

சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்று அவரை – நாலடி:32 6/3

TOP


சமழ்மையா (1)

சமழ்மையா கொண்டுவிடும் – நாலடி:8 2/4

TOP


சமன் (1)

சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – குறள்:12 8/1

TOP


சமையமே (1)

சத்தம் மெய்ஞ்ஞானம் தருக்கம் சமையமே
வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு ஆங்கு அ தக – சிறுபஞ்:91/1,2

TOP


சல (1)

உள் பொருள் சொல்லா சல மொழி மாந்தரும் – திரி:50/2

TOP


சலத்தால் (1)

சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் – குறள்:66 10/1

TOP


சலம் (2)

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற – குறள்:96 6/1
தம்மை உடையார் அவற்றை சலம் ஒழுகல் – பழ:346/2

TOP


சலமே (1)

சலவருள் சால சலமே நலவருள் – நாலடி:19 8/3

TOP


சலவர் (1)

சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே – திரி:51/2

TOP


சலவருள் (1)

சலவருள் சால சலமே நலவருள் – நாலடி:19 8/3

TOP


சலவரே (1)

சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே
ஈர்ந்த கல் இன்னார் கயவர் இவர் மூவர் – திரி:51/2,3

TOP


சலவரை (1)

சலவரை சாரா விடுதல் இனிதே – இனிய40:20/1

TOP


சலித்திலா (1)

சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளை – திணை150:47/3

TOP


சலித்து (2)

சாரார் பகை போல் சலித்து – சிறுபஞ்:40/4
சாபம் போல் சாரும் சலித்து – ஏலாதி:60/4

TOP


சவட்டி (1)

அறை கல் இறுவரை மேல் பாம்பு சவட்டி
பறை குரல் ஏறொடு பெளவம் பருகி – கார்40:17/1,2

TOP


சவையின் (1)

செல்வ குடியுள் பிறத்தலும் பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும் இ மூன்றும் – திரி:7/2,3

TOP


சனங்கள் (1)

சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க – பழ:230/3

TOP