Select Page

கே – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேசம் 1
கேட்க 4
கேட்கலார் 1
கேட்கும் 2
கேட்குமே 1
கேட்ட 3
கேட்டது 1
கேட்டதே 1
கேட்டல் 7
கேட்டலே 1
கேட்டார் 2
கேட்டால் 3
கேட்டானும் 1
கேட்டி 1
கேட்டினும் 1
கேட்டீக 1
கேட்டு 18
கேட்டும் 3
கேட்டே 1
கேட்ப 2
கேட்பது 1
கேட்பர் 3
கேட்பரே 1
கேட்பவன் 1
கேட்பாரை 1
கேட்பின் 1
கேட்பினும் 3
கேட்பும் 1
கேடகத்தோடு 1
கேடன் 1
கேடு 38
கேடும் 5
கேண்மை 40
கேண்மையவர் 1
கேண்மையார் 1
கேண்மையின் 1
கேண்மையும் 1
கேண்மையே 1
கேணி 2
கேத்திரசன் 1
கேழ் 2
கேழல் 2
கேள் 15
கேள்வி 9
கேள்வியர் 1
கேள்வியர்ஆயினும் 1
கேள்வியவர் 2
கேள்வியார் 1
கேள்வியால் 1
கேள்வியுள் 3
கேளா 3
கேளாதவர் 1
கேளாது 3
கேளாதும் 2
கேளாதே 1
கேளாய் 1
கேளார் 2
கேளாரும் 1
கேளான் 3
கேளிர் 11
கேளிர்க்கு 1
கேளிராய் 1
கேளிரான் 1
கேளிரை 2
கேளீர் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கேசம் (1)

கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக – கைந்:12/2

TOP


கேட்க (4)

கற்றிலன்ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு – குறள்:42 4/1
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் – குறள்:42 6/1
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – குறள்:59 7/1
விட்டக்கால் கேட்க மறை – குறள்:70 5/2

TOP


கேட்கலார் (1)

செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார்
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின் – நாலடி:33 2/2,3

TOP


கேட்கும் (2)

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது – குறள்:65 8/1
கிழவன் உரை கேட்கும் கேளான் எனினும் – பழ:38/3

TOP


கேட்குமே (1)

அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர் – நாலடி:10 10/3

TOP


கேட்ட (3)

செறிவு இலான் கேட்ட மறை – இன்னா40:29/4
சான்றோன் என கேட்ட தாய் – குறள்:7 9/2
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள்:108 6/1,2

TOP


கேட்டது (1)

நயவர நட்டு ஒழுகுவாரும் தாம் கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை – பழ:229/1,2

TOP


கேட்டதே (1)

கேட்டதே செய்ப புலன் ஆள்வார் வேட்ட – நான்மணி:38/2

TOP


கேட்டல் (7)

பேதுறார் கேட்டல் இனிது – இனிய40:8/5
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே – இனிய40:14/2
மத முழக்கம் கேட்டல் இனிது – இனிய40:15/4
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே – இனிய40:37/2
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள்:7 5/2
அடைய பயின்றவர் சொல் ஆற்றுவரா கேட்டல்
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின் படை வென்று – பழ:314/1,2
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர் – சிறுபஞ்:28/3

TOP


கேட்டலே (1)

கற்றலின் கேட்டலே நன்று – பழ:61/4

TOP


கேட்டார் (2)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும் – குறள்:65 3/1
கேட்டார் நன்று என்றல் கிளர் வேந்தன் தன் நாடு – சிறுபஞ்:7/3

TOP


கேட்டால் (3)

கெழி இன்மை கேட்டால் அறிக பொருளின் – நான்மணி:61/2
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள்:74 2/1,2
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க பரிவு இல்லா – பழ:135/1,2

TOP


கேட்டானும் (1)

கற்றானும் கற்றார் வாய் கேட்டானும் அல்லாதான் – பழ:138/1

TOP


கேட்டி (1)

என் கேட்டி ஏழாய் இரு நிலத்தும் வானத்தும் – திணை150:135/1

TOP


கேட்டினும் (1)

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – குறள்:80 6/1

TOP


கேட்டீக (1)

சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும் – ஆசாரக்:74/3

TOP


கேட்டு (18)

பல்லார் அறிய பறை அறைந்து நாள் கேட்டு
கல்யாணம் செய்து கடி புக்க மெல் இயல் – நாலடி:9 6/1,2
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி – நாலடி:38 9/2
நாட்டு ஆக்கம் நல்லன் இ வேந்து என்றல் கேட்டு ஆக்கம் – நான்மணி:18/3
வம்ப மழை உரற கேட்டு – ஐந்50:9/4
புள் அரவம் கேட்டு பெயர்ந்தேன் ஒளியிழாய் – ஐந்50:50/3
புள் அரவம் கேட்டு பெயர்ந்தாள் சிறு குடியர் – ஐந்70:59/3
கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன் – திணை50:31/2,3
தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது – திணை150:46/1
கேட்டு உற்ற கீழ் நாள் கிளர்ந்து – திணை150:131/4
முன் கேட்டும் கண்டும் முடிவு அறியேன் பின் கேட்டு
அணி இகவா நிற்க அவன் அணங்கு மாதர் – திணை150:135/2,3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – குறள்:111 1/1
கேட்டு மறவாத கூர்மையும் முட்டு இன்றி – திரி:85/2
புலையர்வாய் நாள் கேட்டு செய்யார் தொலைவு இல்லா – ஆசாரக்:92/2
அந்தணர்வாய் நாள் கேட்டு செய்க அவர் வாய்ச்சொல் – ஆசாரக்:92/3
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்தது போல் – பழ:256/2
தொல்லை அளித்தாரை கேட்டு அறிதும் சொல்லின் – பழ:361/2
கேட்டு தலைநிற்க கேடு இல் உயர் கதிக்கே – சிறுபஞ்:99/3
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் – ஏலாதி:63/3

TOP


கேட்டும் (3)

கடி என கேட்டும் கடியான் வெடிபட – நாலடி:37 4/1
ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர் – நாலடி:37 4/2
முன் கேட்டும் கண்டும் முடிவு அறியேன் பின் கேட்டு – திணை150:135/2

TOP


கேட்டே (1)

நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே
வடுவிடை மெல்கின கண் – கைந்:13/3,4

TOP


கேட்ப (2)

உள்ளத்தான் உள்ளி உரைத்து உராய் ஊர் கேட்ப
துள்ளி தூண் முட்டுமாம் கீழ் – நாலடி:7 4/3,4
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே – கள40:41/3

TOP


கேட்பது (1)

கிளைகள் வாய் கேட்பது நன்றே விளை வயலுள் – பழ:299/2

TOP


கேட்பர் (3)

கடிப்பு இகு கண் முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் – நாலடி:10 10/1,2
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர் – நாலடி:10 10/2,3
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – குறள்:61 7/1

TOP


கேட்பரே (1)

நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன் – நாலடி:16 5/3

TOP


கேட்பவன் (1)

கேட்பவன் கேடு இல் பெரும் புலவன் பாட்டு அவன் – சிறுபஞ்:31/2

TOP


கேட்பாரை (1)

கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண் – பழ:4/1

TOP


கேட்பின் (1)

நல்லார்கள் கேட்பின் நகை – சிறுபஞ்:3/4

TOP


கேட்பினும் (3)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – குறள்:42 8/1
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் – குறள்:43 3/1
கேட்பினும் சொல்லா விடல் – குறள்:70 7/2

TOP


கேட்பும் (1)

பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும் – திரி:53/3

TOP


கேடகத்தோடு (1)

கேடகத்தோடு அற்ற தட கை கொண்டு ஓடி – கள40:28/3

TOP


கேடன் (1)

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – குறள்:21 10/1

TOP


கேடு (38)

தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின் – நாலடி:8 10/1
தம்மை விளக்குமால் தாம் உளரா கேடு இன்றால் – நாலடி:14 2/2
வைப்புழி கோள்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை – நாலடி:14 4/1
மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/2
அல்லார் உவப்பது கேடு – நான்மணி:53/4
கேடு இன்றி சென்றாரும் இல் – நான்மணி:76/4
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல் – நான்மணி:84/3
கிழமை பெரியோர்க்கு கேடு இன்மைகொல்லோ – திணை150:134/1
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள்:4 2/2
வழுக்கியும் கேடு என்பது – குறள்:17 5/2
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – குறள்:21 4/1
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள்:21 4/2
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – குறள்:22 10/1
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள்:31 7/1,2
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – குறள்:40 10/1
ஆகுஆறு அளவு இட்டிதுஆயினும் கேடு இல்லை – குறள்:48 8/1
கெழு தகைமை கேடு தரும் – குறள்:70 10/2
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – குறள்:74 6/1
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – குறள்:80 1/1
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள்:86 8/2
மிகல் காணும் கேடு தரற்கு – குறள்:86 9/2
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள்:89 9/2
அறியாமையால் வரும் கேடு – திரி:3/4
கேடு பிறரொடு சூழ்தல் கிளர் மணி – பழ:81/2
முற்பகல் கண்டான் பிறன் கேடு தன் கேடு – பழ:130/3
முற்பகல் கண்டான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும் – பழ:130/3,4
கேட்பவன் கேடு இல் பெரும் புலவன் பாட்டு அவன் – சிறுபஞ்:31/2
பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு – சிறுபஞ்:48/1
பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற – சிறுபஞ்:48/1,2
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற – சிறுபஞ்:48/2
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற – சிறுபஞ்:48/2
உழுமகற்கு கேடு என்று உரை – சிறுபஞ்:48/4
கேட்டு தலைநிற்க கேடு இல் உயர் கதிக்கே – சிறுபஞ்:99/3
போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லா கள் – ஏலாதி:18/1
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய் – ஏலாதி:48/3
பாவம் பழி பகை சாக்காடே கேடு அச்சம் – ஏலாதி:60/3
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/2
சாக்காடு கேடு பகை துன்பம் இன்பமே – ஏலாதி:79/1

TOP


கேடும் (5)

அடைந்தார் பிரிவும் அரும் பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் தொடங்கி – நாலடி:18 3/1,2
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து – குறள்:12 5/1
கேடும் நினைக்கப்படும் – குறள்:17 9/2
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – குறள்:24 5/1
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்:65 2/1

TOP


கேண்மை (40)

அறம் புகழ் கேண்மை பெருமை இ நான்கும் – நாலடி:9 2/1
பெரியவர் கேண்மை பிறை போல நாளும் – நாலடி:13 5/1
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை தெள்ளி – நாலடி:13 8/2
கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி – நாலடி:14 8/1,2
விளியும் சிறியவர் கேண்மை விளிவு இன்றி – நாலடி:17 6/2
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் – நாலடி:18 2/3
குன்று அன்னார் கேண்மை கொளின் – நாலடி:18 6/4
சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை நிலை திரியா – நாலடி:21 4/2
கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் – நாலடி:22 1/1
கேண்மை கெழீஇ கொளல் வேண்டும் யானை – நாலடி:22 3/2
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய் – நாலடி:24 2/1
பெரு நீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார் – நாலடி:24 6/3
இனம் தீது எனினும் இயல்பு உடையார் கேண்மை
மனம் தீது ஆம் பக்கம் அரிது – நாலடி:25 4/3,4
எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை
நல் தளிர் புன்னை மலரும் கடல் சேர்ப்ப – நாலடி:34 6/2,3
விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை தழங்குரல் – நாலடி:34 9/2
புல்லி கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது – இனிய40:34/3,4
மா மலை நாட மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்து கொண்டு – ஐந்50:18/3,4
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று – ஐந்50:23/3,4
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி – ஐந்70:5/1
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு – ஐந்70:5/3,4
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து – ஐந்70:12/3,4
மருவி ஆம் மாலை மலை நாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி – திணை150:18/3,4
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை
நயந்து அகன்று ஆற்றாமை நன்று – திணை150:128/3,4
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – குறள்:11 6/1
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள்:45 1/1,2
வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – குறள்:52 9/1
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி – குறள்:79 2/1
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள்:80 2/1
கேண்மை ஒரீஇ விடல் – குறள்:80 7/2
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை – குறள்:80 9/1
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – குறள்:80 10/1
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள்:81 9/1,2
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள்:82 1/1,2
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள்:82 2/1,2
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள்:82 5/1,2
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள்:82 8/1,2
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – குறள்:83 2/1
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் – குறள்:84 9/1
கரும் குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்கு உணர்ந்து – சிறுபஞ்:24/2
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை
சொல்ல சொரியும் வளை – கைந்:7/3,4

TOP


கேண்மையவர் (1)

வழிவந்த கேண்மையவர் – குறள்:81 7/2

TOP


கேண்மையார் (1)

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை – குறள்:81 9/1

TOP


கேண்மையின் (1)

தொல் வழி கேண்மையின் தோன்ற புரிந்து யாப்பர் – நாலடி:16 4/2

TOP


கேண்மையும் (1)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் – குறள்:71 9/1

TOP


கேண்மையே (1)

நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும் – ஐந்70:13/2,3

TOP


கேணி (2)

உறைப்பு அரும் காலத்தும் ஊற்று நீர் கேணி
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக்கடனும் – நாலடி:19 4/1,2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – குறள்:40 6/1

TOP


கேத்திரசன் (1)

ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன் – ஏலாதி:30/3

TOP


கேழ் (2)

மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் – நாலடி:5 1/1
நல் புடை கொண்டமை அல்லது பொன் கேழ்
புனல் ஒழுக புள் இரியும் பூம் குன்ற நாட – நாலடி:22 2/2,3

TOP


கேழல் (2)

கேழல் உழுத கரி புன கொல்லையுள் – ஐந்70:11/1
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி – கைந்:11/1

TOP


கேள் (15)

நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலற – நாலடி:3 9/3
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள்
சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன் – நாலடி:13 6/2,3
கன மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள் – நாலடி:13 7/3
கேள் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப – நாலடி:20 1/2
வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள்
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 10/2,3
பல் காலும் வந்து பயின்று உரையல் பாண கேள்
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் – திணை50:37/1,2
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் – திணை150:6/2
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – குறள்:81 8/1
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள்:89 2/2
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – குறள்:123 2/1
கேள் ஆக வாழ்தல் இனிது – திரி:12/4
செய்வது செய்யாது கேள் – பழ:134/4
பாய்வதே போலும் துறைவ கேள் தீயன – பழ:173/3
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள்
ஏமாரார் கோங்கு ஏறினார் – பழ:341/3,4
தடம் தாள் மட நாராய் கேள் – கைந்:50/4

TOP


கேள்வி (9)

ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் – நாலடி:7 3/3
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் வீயவும் – நாலடி:11 6/1
தவல் அரும் தொல் கேள்வி தன்மை உடையார் – நாலடி:14 7/1
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் பாடு அழிந்து – நாலடி:26 2/1
கற்றார் உரைக்கும் கசடு அறு நுண் கேள்வி
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் மற்றும் ஓர் – நாலடி:26 10/1,2
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – குறள்:42 3/1
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் – திரி:35/2
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும் – பழ:195/3
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் – ஏலாதி:17/3

TOP


கேள்வியர் (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய – குறள்:42 9/1

TOP


கேள்வியர்ஆயினும் (1)

சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து – இனிய40:31/3

TOP


கேள்வியவர் (2)

ஈண்டிய கேள்வியவர் – குறள்:42 7/2
தாங்க அரும் கேள்வியவர் – ஆசாரக்:50/4

TOP


கேள்வியார் (1)

அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இ மூன்றும் – திரி:1/3

TOP


கேள்வியால் (1)

கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள்:42 8/1,2

TOP


கேள்வியுள் (3)

கேள்வியுள் எல்லாம் தலை – திரி:31/4
கேள்வியுள் எல்லாம் தலை – திரி:41/4
கேள்வியுள் இன்னாதன – திரி:57/4

TOP


கேளா (3)

குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா
அடி நாயேன் பெற்ற அருள் – திணை150:134/3,4
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – குறள்:42 8/1
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – குறள்:81 8/1

TOP


கேளாதவர் (1)

மழலை சொல் கேளாதவர் – குறள்:7 6/2

TOP


கேளாது (3)

கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி – நாலடி:3 10/1
கேளாது நட்டார் செயின் – குறள்:81 4/2
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – குறள்:90 3/1

TOP


கேளாதும் (2)

செம் வாய் கரிய கண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் அ ஆயம் – திணை150:73/1,2
கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண் – பழ:350/1

TOP


கேளாதே (1)

நாடுக தான் செய்த நுட்பத்தை கேளாதே
ஓடுக ஊர் ஓடுமாறு – பழ:392/3,4

TOP


கேளாய் (1)

வேளாண்மை வெம் கருனை வேம்பு ஆகும் கேளாய்
அபரான போழ்தின் அடகு இடுவரேனும் – நாலடி:21 7/2,3

TOP


கேளார் (2)

உண்டது கேளார் குரவரை மிக்காரை – ஆசாரக்:86/1
உண்டது கேளார் விடல் – ஆசாரக்:86/3

TOP


கேளாரும் (1)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள்:65 3/1,2

TOP


கேளான் (3)

கிழவன் உரை கேட்கும் கேளான் எனினும் – பழ:38/3
அழ போகான் அஞ்சான் அலறினால் கேளான்
எழ போகான் ஈடு அற்றார் என்றும் தொழ போகான் – ஏலாதி:37/1,2
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய் – ஏலாதி:48/3

TOP


கேளிர் (11)

துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே – நாலடி:1 9/2
கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும் – நாலடி:39 2/2
கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:18/4
துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின் – நான்மணி:54/2
கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:84/4
கேளிர் இழந்தார் அலமருப செம் கண் – கள40:29/3
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – குறள்:19 7/1
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள்:62 5/1,2
கண் அன்ன கேளிர் வரின் – குறள்:127 7/2
கேளிர் உவப்ப தழுவுதல் கேளிராய் – திரி:58/2
செயத்தக்க நல் கேளிர் செய்யாமை பழியார் – முது:3 7/1

TOP


கேளிர்க்கு (1)

கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/2

TOP


கேளிராய் (1)

கேளிர் உவப்ப தழுவுதல் கேளிராய்
துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும் – திரி:58/2,3

TOP


கேளிரான் (1)

கேளிரான் ஆய பயன் – நான்மணி:3/4

TOP


கேளிரை (2)

கேளிரை காண கெடும் – நாலடி:21 1/4
பெரும் தண் தளவொடு தம் கேளிரை போல் காணாய் – திணை150:105/3

TOP


கேளீர் (1)

பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும் – திணை50:49/2

TOP