Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கம் 1
தெங்கின் 6
தெங்கு 11
தெங்கூர் 12
தெண் 36
தெண்ணர் 1
தெத்தென 1
தெத்தே 1
தெய்வ 2
தெய்வத்தரு 1
தெய்வம் 5
தெய்வமா 1
தெய்வமும் 2
தெய்வர் 1
தெரி 4
தெரி_இழை 1
தெரித்த 1
தெரித்தவன் 1
தெரிந்த 5
தெரிந்ததுவும் 1
தெரிந்தவர் 1
தெரிந்தவரோடு 1
தெரிந்தவன் 2
தெரிந்தார் 1
தெரிந்து 15
தெரிய 4
தெரியலன் 1
தெரியவன் 1
தெரியா 2
தெரியாதது 1
தெரியாதான் 1
தெரியான் 1
தெரியில் 1
தெரியும் 1
தெரிவினால் 1
தெரிவு 4
தெரிவை 1
தெரிவைமார் 1
தெரிவையர் 1
தெரு 1
தெருட்டல் 1
தெருண்ட 1
தெருவத்திடை 1
தெருவத்தில் 1
தெருவில் 1
தெருவினில் 1
தெருவு-தோறும் 2
தெருவே 1
தெருள் 3
தெழிக்கும் 2
தெழித்து 3
தெள் 2
தெள்ள 1
தெள்ளி 1
தெள்ளிய 1
தெள்ளியர் 1
தெள்ளியார் 1
தெளி 10
தெளி-மின் 1
தெளி-மின்கள் 1
தெளிகின்றிலர் 1
தெளிச்சேரி 1
தெளிச்சேரியீர் 10
தெளிந்தார் 1
தெளிந்து 2
தெளிப்ப 1
தெளிபடு 1
தெளிய 2
தெளியாதது 1
தெளியார் 1
தெளியேன்-மின் 1
தெளிவிக்க 1
தெளிவீர் 1
தெளிவீர்காள் 1
தெளிவு 3
தெளிவும் 1
தெற்றி 1
தெற்றியான் 1
தெற்றினார்-தங்கள் 1
தெற்று 1
தெற 1
தெறகிலா 1
தெறி 1
தெறு 1
தென் 51
தென்-பால் 2
தென்_இலங்கை 2
தென்_இலங்கை_கோமானை 1
தென்_இலங்கை_அரையன் 3
தென்_இலங்கைக்கு 2
தென்_இலங்கையர் 1
தென்_இலங்கையர்_கோன் 1
தென்_இலங்கையர்_மன்னன் 1
தென்_இலங்கையர்_வேந்தன் 1
தென்_இலங்கையவர்_கோனை 1
தென்கரை 8
தென்குடித்திட்டையே 10
தென்குடித்திட்டையை 1
தென்சொல் 1
தென்ற 1
தென்றல் 19
தென்றலார் 2
தென்றலொடு 1
தென்றி 1
தென்றில் 1
தென்ன 1
தென்னர் 2
தென்னவன் 4
தென்னவன்_தேவிக்கு 1
தென்னன் 10
தென்னென 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தெங்கம் (1)

தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை – தேவா-சம்:514/1

மேல்


தெங்கின் (6)

ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/3
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி – தேவா-சம்:1976/1
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/3
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/3,4

மேல்


தெங்கு (11)

தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் – தேவா-சம்:778/2
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1551/2
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் – தேவா-சம்:2001/1
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2019/2
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/3
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2858/1
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3434/3
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3

மேல்


தெங்கூர் (12)

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/1,2
விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2475/4
வித்தன் தாழ் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2476/4
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2477/4
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2478/4
விழித்தவர் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2479/4
வில்லினார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2480/4
வெறி கொள் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2481/4
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2482/4
வேடத்தார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2483/4
விடம் கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2484/4
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரை – தேவா-சம்:2485/1

மேல்


தெண் (36)

தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர் – தேவா-சம்:277/2
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம் – தேவா-சம்:493/2
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து – தேவா-சம்:503/2
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய – தேவா-சம்:706/3
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் – தேவா-சம்:1197/3
தெண் திரை பொருது எழு சிவபுரமே – தேவா-சம்:1216/4
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய் – தேவா-சம்:1472/2
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/2
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1776/4
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/2
பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி – தேவா-சம்:2048/3
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை – தேவா-சம்:2120/1
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் – தேவா-சம்:2356/3
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2748/3
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/3
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/3
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3154/4
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3173/4
தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3179/4
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/2
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3384/3
தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3503/4
தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை – தேவா-சம்:3513/1
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/2
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1

மேல்


தெண்ணர் (1)

தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3300/4

மேல்


தெத்தென (1)

தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் – தேவா-சம்:3714/3

மேல்


தெத்தே (1)

தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4

மேல்


தெய்வ (2)

திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/3,4
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1

மேல்


தெய்வத்தரு (1)

திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத்தரு
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/1,2

மேல்


தெய்வம் (5)

தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/2
திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி – தேவா-சம்:3413/1
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2

மேல்


தெய்வமா (1)

தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே – தேவா-சம்:1914/4

மேல்


தெய்வமும் (2)

தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும்
யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் – தேவா-சம்:2318/1,2

மேல்


தெய்வர் (1)

தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி – தேவா-சம்:715/2

மேல்


தெரி (4)

தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ – தேவா-சம்:1323/2
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/2
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4

மேல்


தெரி_இழை (1)

செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1

மேல்


தெரித்த (1)

தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3

மேல்


தெரித்தவன் (1)

தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1218/4

மேல்


தெரிந்த (5)

தெரிந்த அடியார்கள் சென்ற திசை-தோறும் – தேவா-சம்:882/3
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
தெரிந்த அடியார் சிவனே என்று திசை-தோறும் – தேவா-சம்:2160/1
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/3
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3

மேல்


தெரிந்ததுவும் (1)

தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்று உடன் – தேவா-சம்:2296/1

மேல்


தெரிந்தவர் (1)

தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் – தேவா-சம்:2362/3

மேல்


தெரிந்தவரோடு (1)

செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் – தேவா-சம்:3660/1,2

மேல்


தெரிந்தவன் (2)

தெரிந்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1176/4
தெரிந்தவன் புரம் மூன்று உடன் மாட்டிய சேவகன் – தேவா-சம்:1563/1

மேல்


தெரிந்தார் (1)

தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1441/3

மேல்


தெரிந்து (15)

தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல் – தேவா-சம்:288/1
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு – தேவா-சம்:1786/3
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/3
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/4
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/4
தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார் – தேவா-சம்:2962/2
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார் – தேவா-சம்:3158/3
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/3
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய் – தேவா-சம்:3648/1
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2

மேல்


தெரிய (4)

செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/3,4
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார் – தேவா-சம்:734/2
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில் – தேவா-சம்:784/3
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3

மேல்


தெரியலன் (1)

தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3049/4

மேல்


தெரியவன் (1)

தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1225/4

மேல்


தெரியா (2)

சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/3
இருவரும் தெரியா ஒருவன் இடம் – தேவா-சம்:3336/2

மேல்


தெரியாதது (1)

தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே – தேவா-சம்:1663/2

மேல்


தெரியாதான் (1)

தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர – தேவா-சம்:1903/3

மேல்


தெரியான் (1)

தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/2

மேல்


தெரியில் (1)

தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில்
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/1,2

மேல்


தெரியும் (1)

கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும்
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4114/3,4

மேல்


தெரிவினால் (1)

தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து – தேவா-சம்:3413/2

மேல்


தெரிவு (4)

சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி – தேவா-சம்:1088/3
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/3
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2

மேல்


தெரிவை (1)

முயல் வளாவிய திங்கள் வாள் முகத்து அரிவையில் தெரிவை
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/1,2

மேல்


தெரிவைமார் (1)

தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/2,3

மேல்


தெரிவையர் (1)

தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3

மேல்


தெரு (1)

தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4

மேல்


தெருட்டல் (1)

திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே – தேவா-சம்:2944/4

மேல்


தெருண்ட (1)

தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4

மேல்


தெருவத்திடை (1)

உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடை
திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் – தேவா-சம்:2789/1,2

மேல்


தெருவத்தில் (1)

தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4

மேல்


தெருவில் (1)

தெருவில் கொடி சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1442/3

மேல்


தெருவினில் (1)

தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4

மேல்


தெருவு-தோறும் (2)

தெருவு-தோறும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:280/2
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/3

மேல்


தெருவே (1)

சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/1,2

மேல்


தெருள் (3)

தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய் – தேவா-சம்:182/2
தெருள் செய்தவர் தீவினை தேய்வே – தேவா-சம்:379/4
தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா – தேவா-சம்:1302/3

மேல்


தெழிக்கும் (2)

தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி – தேவா-சம்:1844/2
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய் – தேவா-சம்:3307/3

மேல்


தெழித்து (3)

அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3

மேல்


தெள் (2)

தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில் – தேவா-சம்:4156/3

மேல்


தெள்ள (1)

தெள்ள தீத்திரள் ஆகிய – தேவா-சம்:631/2

மேல்


தெள்ளி (1)

தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3

மேல்


தெள்ளிய (1)

தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3844/1

மேல்


தெள்ளியர் (1)

தெள்ளியர் அல்லா தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும் – தேவா-சம்:4119/1

மேல்


தெள்ளியார் (1)

தெள்ளியார் அவர் தேவரே – தேவா-சம்:612/4

மேல்


தெளி (10)

சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:308/4
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:309/4
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:311/4
திரு கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:312/4
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி – தேவா-சம்:876/2
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி
ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1528/3,4
தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள் – தேவா-சம்:1574/1
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4

மேல்


தெளி-மின் (1)

தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர் – தேவா-சம்:281/2

மேல்


தெளி-மின்கள் (1)

செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே – தேவா-சம்:1998/4

மேல்


தெளிகின்றிலர் (1)

பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர்
தயங்கு சோதி சாமவேதா காமனை காய்ந்தவனே – தேவா-சம்:538/2,3

மேல்


தெளிச்சேரி (1)

திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை – தேவா-சம்:1501/1

மேல்


தெளிச்சேரியீர் (10)

தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/2,3
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/2,3
செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர்
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு – தேவா-சம்:1493/2,3
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர்
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு – தேவா-சம்:1494/2,3
செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர்
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/2,3
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய – தேவா-சம்:1496/2,3
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையை – தேவா-சம்:1497/2,3
சித்திர கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை – தேவா-சம்:1498/2,3
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர்
மால் அடித்தலம் மா மலரான் முடி தேடியே – தேவா-சம்:1499/2,3
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர்
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் – தேவா-சம்:1500/2,3

மேல்


தெளிந்தார் (1)

தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1439/3

மேல்


தெளிந்து (2)

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின – தேவா-சம்:3040/2
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3899/3

மேல்


தெளிப்ப (1)

வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3

மேல்


தெளிபடு (1)

தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் – தேவா-சம்:2202/2

மேல்


தெளிய (2)

அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/2
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2

மேல்


தெளியாதது (1)

தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர் – தேவா-சம்:2887/1

மேல்


தெளியார் (1)

தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/2

மேல்


தெளியேன்-மின் (1)

தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின்
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3296/2,3

மேல்


தெளிவிக்க (1)

தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2

மேல்


தெளிவீர் (1)

தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின் – தேவா-சம்:3296/2

மேல்


தெளிவீர்காள் (1)

சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரை – தேவா-சம்:981/1

மேல்


தெளிவு (3)

தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே – தேவா-சம்:1914/4
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/3

மேல்


தெளிவும் (1)

தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் – தேவா-சம்:792/3

மேல்


தெற்றி (1)

தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன் – தேவா-சம்:708/1

மேல்


தெற்றியான் (1)

தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/3

மேல்


தெற்றினார்-தங்கள் (1)

தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2

மேல்


தெற்று (1)

தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/2

மேல்


தெற (1)

கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என – தேவா-சம்:202/1

மேல்


தெறகிலா (1)

புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2

மேல்


தெறி (1)

தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2

மேல்


தெறு (1)

அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1

மேல்


தென் (51)

தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:591/3
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று – தேவா-சம்:596/3
தேசம் மல்கிய தென் திரு மாற்பேற்றின் – தேவா-சம்:599/3
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/4
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:692/4
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:694/4
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:695/4
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:698/4
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:699/4
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென் திருப்பூவணத்து – தேவா-சம்:700/1
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
தென் கரை மருவிய சிவபுரமே – தேவா-சம்:1207/4
பொருப்பு உறு மாளிகை தென் புறவத்து அணி புண்ணியரே – தேவா-சம்:1266/4
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை – தேவா-சம்:2066/1
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/3
தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் – தேவா-சம்:2362/3
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2365/3
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் – தேவா-சம்:2901/1
நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:3149/3
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/3
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/3
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3286/3
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1
குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும் – தேவா-சம்:3483/1
ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து – தேவா-சம்:3675/1
ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் – தேவா-சம்:3697/1
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3956/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3957/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3958/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3959/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3960/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3961/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3962/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3963/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3964/5,6
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3965/5,6

மேல்


தென்-பால் (2)

தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3

மேல்


தென்_இலங்கை (2)

திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை – தேவா-சம்:2066/1
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் – தேவா-சம்:2901/1

மேல்


தென்_இலங்கை_கோமானை (1)

ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1

மேல்


தென்_இலங்கை_அரையன் (3)

தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1

மேல்


தென்_இலங்கைக்கு (2)

மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1

மேல்


தென்_இலங்கையர் (1)

தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1

மேல்


தென்_இலங்கையர்_கோன் (1)

திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/1,2

மேல்


தென்_இலங்கையர்_மன்னன் (1)

தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1

மேல்


தென்_இலங்கையர்_வேந்தன் (1)

புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1

மேல்


தென்_இலங்கையவர்_கோனை (1)

ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் – தேவா-சம்:3697/1

மேல்


தென்கரை (8)

பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே – தேவா-சம்:2146/4
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/2,3
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து – தேவா-சம்:2760/2,3
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2762/2,3
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/2,3
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல் – தேவா-சம்:2768/1
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3

மேல்


தென்குடித்திட்டையே (10)

செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/4
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3171/4
திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3172/4
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3173/4
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/4
தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3175/4
தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3176/4
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/4
சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3178/4
தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3179/4

மேல்


தென்குடித்திட்டையை (1)

தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை
கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள் – தேவா-சம்:3180/1,2

மேல்


தென்சொல் (1)

தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1

மேல்


தென்ற (1)

தென்ற வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3965/3

மேல்


தென்றல் (19)

விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:88/4
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:695/4
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே – தேவா-சம்:1055/4
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி – தேவா-சம்:1111/2
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1546/1
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி – தேவா-சம்:2104/2
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/3
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே – தேவா-சம்:2917/4
பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர் – தேவா-சம்:3145/1
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல்
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3928/1,2
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/3,4

மேல்


தென்றலார் (2)

தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:651/3
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4

மேல்


தென்றலொடு (1)

துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3

மேல்


தென்றி (1)

தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3

மேல்


தென்றில் (1)

தென்றில் அரக்கனை குன்றில் சண்பை மன் – தேவா-சம்:977/1

மேல்


தென்ன (1)

தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3

மேல்


தென்னர் (2)

முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் – தேவா-சம்:690/3
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/3

மேல்


தென்னவன் (4)

வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் – தேவா-சம்:2777/3
வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு – தேவா-சம்:3349/2
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3

மேல்


தென்னவன்_தேவிக்கு (1)

மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3

மேல்


தென்னன் (10)

தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர – தேவா-சம்:2188/3
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் – தேவா-சம்:2772/3
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3344/4
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/4
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/4
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4

மேல்


தென்னென (2)

தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் – தேவா-சம்:3717/3

மேல்