Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாக்கை 6
யாக்கையது 1
யாக்கையர் 1
யாக்கையன் 1
யாக்கையான் 1
யாக்கையும் 1
யாங்கண் 1
யாங்கணார் 1
யாங்கள் 5
யாங்கு 1
யாங்கும் 1
யாண்டு 3
யாண்டைக்கு 1
யாண்டையாய் 1
யாண்டையேன் 1
யாணர் 3
யாத்த 3
யாத்தாய் 1
யாத்திட்டாள் 1
யாத்து 4
யாதாம்-கொல் 1
யாதாம்-கொல்லோ 1
யாதினால் 1
யாது 12
யாதும் 13
யாப்ப 2
யாப்பன் 1
யாப்பில் 1
யாப்பின் 1
யாப்பினர் 1
யாப்பு 4
யாப்புற 1
யாப்புறுத்தி 1
யாம் 21
யாம 1
யாமத்து 1
யாமம் 1
யாமமும் 1
யாமும் 8
யாமை 2
யாமையின் 2
யாயும் 1
யார் 16
யார்-கண்ணும் 1
யார்-கொல் 4
யார்-கொலோ 2
யார்க்கு 1
யார்க்கும் 6
யாரும் 14
யாரே 12
யாரை 3
யாரையும் 1
யாரொடும் 1
யாவதும் 6
யாவர் 6
யாவர்-ஆயினும் 1
யாவர்க்கும் 3
யாவரும் 8
யாவள் 2
யாவளே-ஆயினும் 1
யாவன் 1
யாவன்-ஆம்-கொல் 1
யாவனே 2
யாவும் 4
யாவை 1
யாவையும் 10
யாழ் 48
யாழின் 4
யாழினோடு 1
யாழும் 5
யாழே 1
யாழொடு 1
யாளி 1
யாற்று 5
யாற்றுள் 1
யாறு 5
யாறும் 2
யான் 81
யானாக 1
யானும் 11
யானே 1
யானை 90
யானை_தீ 1
யானையாய் 1
யானையால் 1
யானையாலும் 1
யானையின் 7
யானையும் 2
யானையுள் 1
யானையே 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யாக்கை (6)

நின்றவன் நெடும் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை
அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி – சிந்தா:4 954/2,3
ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கை செறு உழுது – சிந்தா:4 962/1
யாக்கை நாடி அயர்வது போலவும் – சிந்தா:5 1362/2
மான் சென்ற நோக்கின் மாதே மாய்ந்து போம் மக்கள் யாக்கை
ஊன் சென்று தேய சிந்தித்து உகுவதோ தகுவது என்றாள் – சிந்தா:5 1390/3,4
காய் முதிர் கனியின் ஊழ்த்து வீழும் இ யாக்கை இன்னே – சிந்தா:6 1435/2
யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான் – சிந்தா:13 2811/4

TOP


யாக்கையது (1)

அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும் – சிந்தா:13 2748/1

TOP


யாக்கையர் (1)

பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர் – சிந்தா:5 1205/2

TOP


யாக்கையன் (1)

வணங்கு நோன் சிலை என வளைந்த யாக்கையன்
பிணங்கும் நூல் மார்பினன் பெரிது ஓர் பொத்தகம் – சிந்தா:9 2009/2,3

TOP


யாக்கையான் (1)

மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான் – சிந்தா:6 1438/4

TOP


யாக்கையும் (1)

அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும் – சிந்தா:13 2748/1

TOP


யாங்கண் (1)

மாலுற்று மயங்க யாங்கண் மட கிளி தூதுவிட்டேம் – சிந்தா:9 2044/2

TOP


யாங்கணார் (1)

யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய் – சிந்தா:13 2761/4

TOP


யாங்கள் (5)

என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம் – சிந்தா:4 1162/2
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னின் – சிந்தா:6 1431/2
எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக – சிந்தா:7 1793/2
திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள்
எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர் – சிந்தா:8 1930/2,3
ஏதிலம் யாங்கள் எல்லாம் இனி கொளும் உடம்பினானும் – சிந்தா:13 2885/2

TOP


யாங்கு (1)

முளைத்து எழு மதியம் முத்து அரும்பி யாங்கு என – சிந்தா:4 1016/1

TOP


யாங்கும் (1)

மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா – சிந்தா:1 116/1,2

TOP


யாண்டு (3)

யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை – சிந்தா:1 393/3
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே – சிந்தா:5 1315/4
யாண்டு நிறைந்து ஏகிய பின் நந்தன் அவற்கு இளையார் – சிந்தா:7 1794/1

TOP


யாண்டைக்கு (1)

ஒன்றுடை பதினை யாண்டைக்கு உறுகடன் இறைவன் விட்டான் – சிந்தா:11 2375/1

TOP


யாண்டையாய் (1)

யாண்டையாய் ஐய அஞ்சினென் ஆருயிர் – சிந்தா:6 1509/1

TOP


யாண்டையேன் (1)

இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையேன் என்று – சிந்தா:9 2095/2

TOP


யாணர் (3)

ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்ல செல்வான் – சிந்தா:4 1116/3
தட மலர் குவளை பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு – சிந்தா:5 1185/2
யாணர் ஊர் அமராபதி போன்றதே – சிந்தா:11 2335/4

TOP


யாத்த (3)

தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூம் கச்சு நீக்கி பொறி மாண் கலம் நல்ல சேர்த்தி – சிந்தா:0 16/1,2
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆருயிர் கிழத்தி-தன்னை – சிந்தா:1 273/1,2
கச்சு விசித்து யாத்த கதிர் முலையர் மணி அயில் வாள் – சிந்தா:9 2015/1

TOP


யாத்தாய் (1)

நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலையாலே – சிந்தா:3 714/3

TOP


யாத்திட்டாள் (1)

சுற்றி வள்ளலை சோர்வு இன்றி யாத்திட்டாள்
அற்றம் இல் அமிர்து ஆகிய அம் சொலாள் – சிந்தா:5 1295/3,4

TOP


யாத்து (4)

குழல் எடுத்து யாத்து மட்டார் கோதையின் பொலிந்து மின்னும் – சிந்தா:5 1254/1
தொடிகள் தவழ் வீங்கு திரள் தோள் இறுக யாத்து
கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரிய – சிந்தா:7 1798/1,2
தொங்கலான் முன்கை யாத்து சொல்லு நீ வந்தது என்ன – சிந்தா:8 1988/2
யாத்து வைத்து அலைக்கும் இ அருள் இலாள் நலம் – சிந்தா:9 2007/3

TOP


யாதாம்-கொல் (1)

அன்றே வந்தது இ மாலை அளியேன் ஆவி யாதாம்-கொல் – சிந்தா:7 1660/4

TOP


யாதாம்-கொல்லோ (1)

பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ – சிந்தா:8 1969/4

TOP


யாதினால் (1)

நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும் – சிந்தா:13 2887/2

TOP


யாது (12)

ஆண் தகை குரவீர் கொண்ம்-மின் யாது நீர் கருதிற்று என்ன – சிந்தா:1 393/2
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான் – சிந்தா:2 481/4
ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில் – சிந்தா:3 535/2
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில் – சிந்தா:4 902/2
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர் – சிந்தா:4 1102/4
இன்னதே குற்றம் ஆயின் குணம் இனி யாது வேந்தே – சிந்தா:4 1118/4
யாது இவள் கண்டது என்று ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி – சிந்தா:5 1262/2
யாது நான் அறியேன் அணங்கு அன்னவள் – சிந்தா:5 1308/3
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார் – சிந்தா:5 1316/4
இங்கு வரவு என்னை குலம் யாது அடிகட்கு என்ன – சிந்தா:7 1787/2
யாது நாம் அடை திறம் உரை-மின் நீர் என – சிந்தா:7 1824/3
யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்ன சொன்னாள் – சிந்தா:13 2615/4

TOP


யாதும் (13)

புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள் – சிந்தா:0 13/3
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல் – சிந்தா:3 591/3
யாதும் நீ கவல வேண்டா ஆர் அழகு உடைய நம்பி – சிந்தா:6 1456/3
யாதும் கூறன்-மின் யாரையும் தேறன்-மின் – சிந்தா:7 1815/2
நிறை யாதும் இல்லை நெருப்பின் சுடும் காமம் உண்டேல் – சிந்தா:8 1963/1
தூம்பு யாதும் இல்லா குளம் போன்றது என் தோம் இல் பண்டம் – சிந்தா:8 1976/3
தான் யாதும் இன்றி மயங்கி தடம் கண் பெய் மாரி – சிந்தா:10 2137/2
கட்டு அழல் நெடும் கண் யாதும் இமைத்திலன் மகளிர் ஓச்சும் – சிந்தா:10 2291/2
அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல் – சிந்தா:13 2622/3
குன்று போல் யாதும் இன்றி குழைந்து மெய்ம்மறந்து நின்றான் – சிந்தா:13 2627/4
அடிகளோ துறக்க ஒன்றும் உற்றவர் யாதும் அல்லர் – சிந்தா:13 2646/1
பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே – சிந்தா:13 2872/4
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே – சிந்தா:13 3054/4

TOP


யாப்ப (2)

நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப
மான்ற அவள் மருண்டு நக்காள் வாழிய வரம் பெற்றேன் என்று – சிந்தா:12 2513/2,3
செப்பட முன்கை யாப்ப திருமகன் தொலைந்து நின்றான் – சிந்தா:13 2665/3

TOP


யாப்பன் (1)

தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான் – சிந்தா:3 714/4

TOP


யாப்பில் (1)

பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல் தோள் யாப்பில் பொலிந்த ஆறும் – சிந்தா:3 644/1

TOP


யாப்பின் (1)

நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் – சிந்தா:3 544/2

TOP


யாப்பினர் (1)

அற்க செய்த யாப்பினர் ஆகி அவண் வந்தார் – சிந்தா:4 1060/2

TOP


யாப்பு (4)

பாத கமலம் தொழுவேங்கள் பசை யாப்பு அவிழ பணியாயே – சிந்தா:5 1242/4
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்ன – சிந்தா:5 1343/2
அச்சுறு கொழும் தொடர் யாப்பு அழித்து அடி இணை – சிந்தா:7 1836/2
யாப்பு உடை யாழ் மிடறு என்னும் தோட்டியால் – சிந்தா:9 2011/1

TOP


யாப்புற (1)

ஆற்றல் அம் கந்து சேர்த்தி யாப்புற வீக்கும்-போழ்தில் – சிந்தா:10 2146/3

TOP


யாப்புறுத்தி (1)

புலி யாப்புறுத்தி கொண்டேன் போக்கி விட்ட பிழைப்பும் – சிந்தா:10 2197/1

TOP


யாம் (21)

காவி அம் கண்ணினாய் யாம் மறைவது கருமம் என்றாள் – சிந்தா:1 316/4
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார் – சிந்தா:2 466/2
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார் – சிந்தா:3 643/4
பெரு மண கிழமை யாம் பேசுகின்றதே – சிந்தா:3 822/4
யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்-மின் என யாரும் – சிந்தா:4 1056/1
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார் – சிந்தா:4 1056/4
தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான் – சிந்தா:5 1233/4
யாம் தலைப்படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார் – சிந்தா:5 1410/4
இன்று கண்விடுக்கப்பட்டேம் யாம் என எழுந்து போகி – சிந்தா:6 1437/2
இருதலை பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே – சிந்தா:6 1536/4
ஐயனை யாம் அவண் எய்துவம் ஆய்_இழை – சிந்தா:7 1767/1
குணத்தொடு மலிந்த பாதம் குறுக யாம் கொணர்ந்த பின்றை – சிந்தா:7 1817/2
அடி நிழல் உறைய வந்தேம் அடியம் யாம் என்ன எய்த – சிந்தா:7 1863/2
யாம் எலாம் அநங்கமாதிலகன் என்றுமே – சிந்தா:9 2001/4
கண்ணீர் கவுள் அலைப்ப கையற்று யாம் இனைய – சிந்தா:9 2050/3
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே – சிந்தா:10 2176/4
சாவம் யாம் உருகி ஒன்றும் தவறு இலன் அருளும் நங்கை – சிந்தா:12 2510/3
இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என – சிந்தா:13 3034/3
சீவகன் திருவினம் ஆக யாம் என – சிந்தா:13 3061/1
கோல மலர் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம் – சிந்தா:13 3092/4
இழுங்கு இல் குண சேவடிகள் ஏத்தி தொழுதும் யாம் – சிந்தா:13 3093/4

TOP


யாம (1)

யாம கடலை நீந்துவேன் யாரும் இல்லா தமியேனே – சிந்தா:7 1663/4

TOP


யாமத்து (1)

யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே – சிந்தா:5 1315/4

TOP


யாமம் (1)

நாவாய் இழந்து நடு யாரும் இல் யாமம் நீந்தி – சிந்தா:3 514/1

TOP


யாமமும் (1)

யாமமும் பகலும் அறியாமையால் – சிந்தா:1 135/3

TOP


யாமும் (8)

எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார் – சிந்தா:2 465/2
வெம்பிய வீணை போருள் செல்குவம் யாமும் முன்னே – சிந்தா:3 666/2
கரும் கணின் யாமும் கண்டாம் காமனை என்று சொல்லி – சிந்தா:5 1298/3
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம் – சிந்தா:6 1428/2
கற்றனங்கள் யாமும் உடன் கற்பனகள் எல்லாம் – சிந்தா:7 1795/4
பொன் தொட்டேம் யாமும் நும்மை போகொட்டோம் பாடல் கேளாது – சிந்தா:9 2045/3
பெண் பெற்ற பொலிசை பெற்றார் பிணை அனார் பெரிய யாமும்
கண் பெற்ற பொலிசை பெற்றாம் இன்று என கரைந்து முந்நீர் – சிந்தா:12 2546/1,2
காதலன் அல்லை நீயும் காவல நினக்கு யாமும்
ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை என்ன – சிந்தா:13 2643/1,2

TOP


யாமை (2)

வெண்ணெய் ஆயது வீங்குபு கூன் புற யாமை
வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் அது வழுக்காது – சிந்தா:13 2755/1,2
நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர் – சிந்தா:13 2878/1

TOP


யாமையின் (2)

அடி இணை யாமையின் வடிவு கொண்டன – சிந்தா:6 1460/2
ஐவகை பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின் – சிந்தா:13 2824/1

TOP


யாயும் (1)

எந்தையும் யாயும் நேராராய்விடின் இறத்தல் ஒன்றோ – சிந்தா:4 1050/2

TOP


யார் (16)

அ நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார் – சிந்தா:0 5/2
வரை விளையாடு மார்பன் யார் அவன் வாழி என்ன – சிந்தா:1 397/2
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர் – சிந்தா:3 530/3
பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார் – சிந்தா:3 554/4
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா – சிந்தா:4 908/3
யார் அரவ கழல் ஆடவரோடும் – சிந்தா:4 914/2
ஏகுமால் ஆவி என நினைப்ப பைங்கிளி யார்
மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தாள் – சிந்தா:4 1038/2,3
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன – சிந்தா:6 1544/2
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன – சிந்தா:6 1544/2
விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை – சிந்தா:7 1584/3
கொழுநனை குறிப்பினாலே குமரன் யார் என்று நோக்க – சிந்தா:7 1730/1
பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ – சிந்தா:8 1969/4
நாடி யார் பேயை காண்பார் நங்கைகாள் இதுவும் ஆமே – சிந்தா:9 2046/3
அஞ்சி இட்டு ஓடி போகின் ஆண்மை யார் கண்ணது அம்மா – சிந்தா:10 2300/4
பரிவு உற்று கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார் – சிந்தா:10 2316/4
நட்பு விட்டு ஒழியும்-ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா – சிந்தா:13 2950/4

TOP


யார்-கண்ணும் (1)

ஒழிக யார்-கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே – சிந்தா:8 1891/4

TOP


யார்-கொல் (4)

அரும் தவம் செய்து வந்த ஆய் இழை மகளிர் யார்-கொல்
பெருந்தகை மார்பில் துஞ்சி பெண்மையால் பிணிக்கும் நீரார் – சிந்தா:5 1298/1,2
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ – சிந்தா:5 1326/3
ஆண்தகை அழகன் யார்-கொல் அறியலன் அவனை என்றான் – சிந்தா:7 1722/4
அழுந்தும் இ நரகம் தன்னுள் செல்பவர் யார்-கொல் என்னின் – சிந்தா:13 2775/3

TOP


யார்-கொலோ (2)

அண்ணலை தவத்தில் தந்தார் யார்-கொலோ அளியர் என்பார் – சிந்தா:2 467/4
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்-கொலோ பெறுவார் என்பார் – சிந்தா:3 645/4

TOP


யார்க்கு (1)

பண்டு யான் செய்த பாவ பயத்தை யார்க்கு உரைப்பென் தேன்காள் – சிந்தா:12 2509/3

TOP


யார்க்கும் (6)

கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பக சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமாபுரம் அதாமே – சிந்தா:1 140/3,4
ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்கொண்ணா – சிந்தா:3 848/1
உற்று அடுத்து அயா உயிர்த்து ஒழிதல் யார்க்கும் ஒக்குமே – சிந்தா:9 1998/4
கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும்
வேட்பன அடிசில் ஆடை விழு கலன் மாலை சாந்தம் – சிந்தா:9 2078/1,2
இன் பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும்
துன்புற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும் – சிந்தா:13 2828/2,3
முற்று உயிர் ஓம்பி தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும்
மற்று உரை இல்லை மண்ணும் விண்ணும் நும் அடிய அன்றே – சிந்தா:13 2927/3,4

TOP


யாரும் (14)

ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள் – சிந்தா:1 307/2
செய்க பொருள் யாரும் செறுவாரை செறுகிற்கும் – சிந்தா:3 497/1
நாவாய் இழந்து நடு யாரும் இல் யாமம் நீந்தி – சிந்தா:3 514/1
அவம் புரிந்து உடம்பு நீங்காது அரும் தவம் முயல்-மின் யாரும்
சிவம்புரி நெறியை சேர செப்பும் இ பொருளும் கேள்-மின் – சிந்தா:3 605/3,4
யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்-மின் என யாரும்
தாம் மகள் நேரார்-ஆயினும் தண் என் வரை மார்பில் – சிந்தா:4 1056/1,2
உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் என யாரும் ஒட்ட – சிந்தா:4 1062/2
அலகை இல்லா குண கடலே யாரும் அறியப்படாய் ஆதி – சிந்தா:5 1244/3
யாம கடலை நீந்துவேன் யாரும் இல்லா தமியேனே – சிந்தா:7 1663/4
வந்தவனை யாரும் அறியாமல் மறையாக – சிந்தா:7 1875/1
முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ – சிந்தா:9 2042/3
எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும்
அந்தம் இல் உவகை-தன்னால் அகம் குளிர்ப்பு எய்தினாரே – சிந்தா:9 2097/3,4
கள்ளத்தால் உயிரை உண்ண கருதினேம் இதனை யாரும்
உள்ளத்தால் உமிழ வேண்டா உறு படை வந்து கூட – சிந்தா:10 2149/2,3
விளை தவ பெருமை ஓரார் வில் திறல் மயங்கி யாரும்
களைகலார் பொறியை ஆங்கு ஓர் ஆறு நாள் கழிந்து அன்றே – சிந்தா:10 2193/3,4
ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர்பிறராய் – சிந்தா:13 2980/3

TOP


யாரே (12)

என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் – சிந்தா:1 259/1
உன் அலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார் – சிந்தா:1 259/2
ஒருவர் இ உலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார் – சிந்தா:4 1165/3
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று – சிந்தா:5 1245/2,3
தரணி மேல் தந்து அளித்த தத்துவன்-தான் யாரே
தரணி மேல் தந்து அளித்தான் தண் மதி போல் நேமி – சிந்தா:5 1246/2,3
வாரா கதி உரைத்த வாமன்-தான் யாரே
வாரா கதி உரைத்த வாமன் மலர் ததைந்த – சிந்தா:5 1247/2,3
ஆதலால் நங்கை யாரே அருள் பெரிது உடையர் என்றார் – சிந்தா:7 1799/4
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே – சிந்தா:10 2144/4
அடி மலர் சூடியவர் உலகில் யாரே
அடி மலர் சூடியவர் உலகம் ஏத்த – சிந்தா:13 2739/2,3
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின் – சிந்தா:13 2740/2,3
எரி மலர் சேவடியை ஏத்துவார் யாரே
எரி மலர் சேவடியை ஏத்துவார் வான் தோய் – சிந்தா:13 2741/2,3
தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே
ஒண் தார் இளங்கோ என்று உழையவர் கூற வல்லே – சிந்தா:13 2864/2,3

TOP


யாரை (3)

நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான் – சிந்தா:4 954/4
ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாதுவிட்டான் – சிந்தா:7 1718/2
பால்கடல் கேள்வி யாரை பழிப்பு அற நாட்டினானே – சிந்தா:13 2916/4

TOP


யாரையும் (1)

யாதும் கூறன்-மின் யாரையும் தேறன்-மின் – சிந்தா:7 1815/2

TOP


யாரொடும் (1)

பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்-மின் – சிந்தா:7 1815/4

TOP


யாவதும் (6)

இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மண கிழமை ஓர் கடலின் மிக்கதே – சிந்தா:1 196/3,4
இன்னணம் இறைமகன் புலம்ப யாவதும்
தன் அணங்குறு மொழி தத்தை தத்தையை – சிந்தா:4 1006/2,3
என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா – சிந்தா:4 1123/3
யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும்
மான மா கவரி வெண் மயிரின் வேய்ந்தன – சிந்தா:5 1201/1,2
ஏம வெண்குடை இறைவ மற்று யாவதும் அரிதே – சிந்தா:13 2753/4
யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான் – சிந்தா:13 2811/4

TOP


யாவர் (6)

வடு_உரை யாவர் பேர்ப்பார் வாய் பறை அறைந்து தூற்றி – சிந்தா:1 211/2
இடுக்கணை அரியும் எஃகாம் இருந்து அழுது யாவர் உய்ந்தார் – சிந்தா:3 509/3
அகப்படு பொறியினாரை ஆக்குவார் யாவர் அம்மா – சிந்தா:10 2315/1
இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று என பெயர்க்கலாமோ – சிந்தா:13 2616/4
வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய் கொள்வார் யாவர் சொல்லாய் – சிந்தா:13 2722/4
ஐம் தலை அரவினை யாவர் தீண்டுவார் – சிந்தா:13 2936/2

TOP


யாவர்-ஆயினும் (1)

யாவர்-ஆயினும் நால்வரை பின்னிடின் – சிந்தா:1 249/1

TOP


யாவர்க்கும் (3)

விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் மு பழ சுனை – சிந்தா:1 75/1
வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது – சிந்தா:3 750/3
உண்பதம் யாவர்க்கும் ஊனம் இல்லது – சிந்தா:6 1441/3

TOP


யாவரும் (8)

மற்று இ மாநகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை – சிந்தா:4 885/1,2
துட்கென யாவரும் நடுங்க தூய்மை இல் – சிந்தா:4 937/3
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின் – சிந்தா:4 1111/3
அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி – சிந்தா:5 1264/2
வசை இலான் புரவி சேன் என்று யாவரும் புகழப்பட்டார் – சிந்தா:7 1681/4
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின் – சிந்தா:12 2389/1
ஏனை யாவரும் அமுது என பருகுவ புகல்வ – சிந்தா:13 2747/3
பிறந்த அ குழவிகள் பிறர்கள் யாவரும்
புறந்தரல் இன்றியே வளர்ந்து செல்லும் நாள் – சிந்தா:13 2834/1,2

TOP


யாவள் (2)

இலங்கு அரி தடம் கணாள் யாவள் ஆம்-கொலோ – சிந்தா:4 1012/4
பட்டம் அணிந்தாள் இவர் தங்களுள் யாவள் என்ன – சிந்தா:11 2343/2

TOP


யாவளே-ஆயினும் (1)

யாவளே-ஆயினும் ஆக மற்று இவள் – சிந்தா:4 1013/1

TOP


யாவன் (1)

பெரியவன் யாவன் என்ன நீ என பேசலோடும் – சிந்தா:1 389/2

TOP


யாவன்-ஆம்-கொல் (1)

எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல் – சிந்தா:3 713/3

TOP


யாவனே (2)

இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக – சிந்தா:3 552/2
யாவனே யானும் ஆக அரு நிறை கதவம் நீக்கி – சிந்தா:3 714/1

TOP


யாவும் (4)

வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே – சிந்தா:1 67/4
ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள் – சிந்தா:1 307/2
மலை யாற்று அயல் யாவும் மடுத்து உளவே – சிந்தா:5 1191/4
பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின் – சிந்தா:6 1535/1

TOP


யாவை (1)

யாவை அவை தம் கிளையின் நீங்கி அழ வாங்கி – சிந்தா:13 2875/2

TOP


யாவையும் (10)

இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே – சிந்தா:1 34/3,4
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர் பிண்டி நீழல் – சிந்தா:1 384/2
வெறுத்து யாவையும் மேவலள் ஆயினாள் – சிந்தா:4 993/4
அன்றி தீர்ப்பன யாவையும் இல்லையே – சிந்தா:5 1332/3
உய்யுமேல் தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும்
எய்தினார்களும் உய்ப என்று ஓதினான் – சிந்தா:6 1426/3,4
மங்குலாய் திசை யாவையும் அல்கின்றே – சிந்தா:7 1607/4
நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும் – சிந்தா:7 1760/2
கடுத்த ஒட்டகம் கால் செல்வ யாவையும்
நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ – சிந்தா:7 1773/2,3
பரணி நாள் பிறந்தான் பகை யாவையும்
அரண் இலான் என்-கண் தங்கிய அன்பினால் – சிந்தா:7 1813/2,3
எய்தி யாவையும் உணர்க என்ப போல் – சிந்தா:13 3128/2

TOP


யாழ் (48)

கூடு கோல தீம் சுவை கோல யாழ் அரவமும் – சிந்தா:1 156/3
செம் தீ கரும் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும் – சிந்தா:1 292/1
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல் – சிந்தா:1 368/3
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா – சிந்தா:3 530/2
காசு இல் யாழ் கணம் கொள் தெய்வ காந்தர்வதத்தை என்பாள் – சிந்தா:3 550/4
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான் – சிந்தா:3 559/4
கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனை கனிக்கும் நீராள் – சிந்தா:3 607/4
பண் கனிந்து உருகு நல் யாழ் படை பொருது உடைக்கல் உற்றே – சிந்தா:3 628/4
ஒன்றிய மணி செய் நல் யாழ் போந்தன உருவம் மாலை – சிந்தா:3 630/3
இட்டு இளையர் ஏத்த இமையார் மட மகள் போல் இருந்து நல் யாழ்
தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே – சிந்தா:3 647/3,4
கண்டு அறிகிலா இடை காமவல்லி யாழ்
கொண்டவர் குழாத்து-இடை கொடியின் ஒல்கினாள் – சிந்தா:3 654/3,4
இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலை – சிந்தா:3 656/3
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ – சிந்தா:3 659/2
மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கை – சிந்தா:3 660/1
தோற்றனள் மடந்தை நல் யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார் – சிந்தா:3 702/1
எழில் தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்து கொடுமோ என்றாள் – சிந்தா:3 715/4
பரந்த கேள்வி துறைபோய பைம் தார் மார்பன் பசும்பொன் யாழ்
நரம்பு தேன் ஆர்த்து என தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை – சிந்தா:3 717/2,3
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான் – சிந்தா:3 719/4
அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ்
கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கலுற்றான் – சிந்தா:3 722/3,4
அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும் – சிந்தா:3 727/1
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான் – சிந்தா:3 730/3
மையார் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து – சிந்தா:3 736/1
தும்பி வண்டொடு தூ வழி யாழ் செய – சிந்தா:4 854/2
அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி – சிந்தா:4 1012/2
யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான் – சிந்தா:4 1021/4
யாழ் எழீஇ பாட கேட்டு ஓர் அரம்பையை சேர்ந்து இருந்தான் – சிந்தா:4 1155/4
அரவ வண்டொடு தேன் இனம் யாழ் செயும் – சிந்தா:5 1196/3
பாடல் வண்டு யாழ் செயும் பசும்பொன் கிண்கிணி – சிந்தா:5 1207/1
மாது யாழ் மழலை மொழி மாதராள் – சிந்தா:5 1316/1
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள் – சிந்தா:5 1386/3
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல் – சிந்தா:6 1500/2
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே – சிந்தா:6 1526/4
இன் இசை இரங்கும் நல் யாழ் இளியினும் இனிய சொல்லாய் – சிந்தா:6 1537/3
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கி – சிந்தா:7 1701/3
யாழ் புரை கிளவி ஆற்றாள் மயங்கி வீழ்ந்து அரற்றுகின்றாள் – சிந்தா:7 1800/4
திருந்தி யாழ் முரல்வது ஓர் தெய்வ பூம் பொழில் – சிந்தா:8 1936/3
மங்கையர் பண்ணிய மருத யாழ் குழல் – சிந்தா:8 1991/1
யாப்பு உடை யாழ் மிடறு என்னும் தோட்டியால் – சிந்தா:9 2011/1
பாலை மணி யாழ் மழலை பசும்பொன் நிலத்து இழிவாள் – சிந்தா:9 2018/3
யாழ் கொன்ற கிளவியாள் தன் அமிழ்து உறழ் புலவி நீக்கி – சிந்தா:9 2089/1
புரை இல் பொன் மணி யாழ் குழல் தண்ணுமை – சிந்தா:12 2393/3
பாடல் இன் ஒலி பண் அமை யாழ் ஒலி – சிந்தா:12 2399/2
பள்ளி செம்பொன் படை அமளி மேல் மழலை மணி யாழ் தான் வெளவி – சிந்தா:12 2591/2
இளி வாய் பிரசம் யாழ் ஆக இரும் கண் தும்பி குழல் ஆக – சிந்தா:13 2691/1
பாலை யாழ் மழலை வேறாய் பல் மணி கொம்பின் நின்றாள் – சிந்தா:13 2835/4
அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன் – சிந்தா:13 2952/1
பண்ணார் பணை முழவம் பாடு அவிந்து பல் மணி யாழ் மழலை நீங்கி – சிந்தா:13 2967/1
மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம மா மணி யாழ் தீம் குழல்கள் இரங்க பாண்டில் – சிந்தா:13 3138/1

TOP


யாழின் (4)

தங்கு தேன் அரவ யாழின் தான் இருந்து ஆந்தை பாடும் – சிந்தா:5 1281/3
செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம் – சிந்தா:5 1407/1
யாழின் பாடலும் ஆடலும் அரங்கு-தோறும் இயற்றி – சிந்தா:12 2391/3
யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன் – சிந்தா:13 2974/3

TOP


யாழினோடு (1)

அணி தகை யாழினோடு அமுதம் விட்டு ஒரீஇ – சிந்தா:4 1026/3

TOP


யாழும் (5)

எழுவார் யாழும் ஏத்து ஒலியும் இறைவன் கேளா துயில் ஏற்றான் – சிந்தா:11 2355/4
புள்ளும் யாழும் குழலும் ஏங்க புனைந்து வல்லான் நினைந்து இயற்றிய – சிந்தா:12 2591/1
நரம்பு மீது இறத்தல் செல்லா நல் இசை முழவும் யாழும்
இரங்கு தீம் குழலும் ஏங்க கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப – சிந்தா:12 2596/1,2
யாழும் குழலும் அணி முழவும் அரங்கம் எல்லாம் பரந்து இசைப்ப – சிந்தா:13 2704/1
படு கண் முழவும் பசும்பொன் மணி யாழும் ஏங்க – சிந்தா:13 2865/1

TOP


யாழே (1)

கரும்பே தேனே அமிர்தே காமர் மணி யாழே
அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமே – சிந்தா:12 2453/1,2

TOP


யாழொடு (1)

இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை – சிந்தா:3 564/1

TOP


யாளி (1)

ஊன் உடை பொன் முழை யாளி நின்று உலம்புமே – சிந்தா:8 1900/4

TOP


யாற்று (5)

அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம் – சிந்தா:1 335/4
மாகம் நந்து மணம் கமழ் யாற்று அயல் – சிந்தா:4 855/3
மலை யாற்று அயல் யாவும் மடுத்து உளவே – சிந்தா:5 1191/4
கான யாற்று அடைகரை கதிர் கண் போழ்கலா – சிந்தா:7 1822/2
நிரம்பாத நீர் யாற்று இடுமணலுள் ஆழ்ந்து – சிந்தா:13 2784/1

TOP


யாற்றுள் (1)

இழந்தார் பலரால் இடும்பை நீர் யாற்றுள்
அழுந்துமால் அ பண்டி அச்சு இறா முன்னே – சிந்தா:13 2621/2,3

TOP


யாறு (5)

வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே – சிந்தா:3 848/4
அது தெள் அறல் யாறு உவை தே மர மா – சிந்தா:5 1194/2
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே – சிந்தா:5 1199/4
தெள் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி – சிந்தா:5 1387/1
பூ உந்தி அமுத யாறு பூம் கொடி நுடங்க போந்து – சிந்தா:12 2460/3

TOP


யாறும் (2)

திசையும் யாறும் தெரிந்துகொண்டு ஏகினான் – சிந்தா:6 1438/3
குன்றும் குளிர் நீர் தடம் சூழ்ந்தன கோல யாறும்
சென்று அ பழனம் படப்பை புனல் நாடு சேர்ந்தான் – சிந்தா:8 1934/3,4

TOP


யான் (81)

தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும் – சிந்தா:1 205/3
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான் – சிந்தா:1 214/4
என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே – சிந்தா:1 241/4
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன் – சிந்தா:1 246/3
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான் – சிந்தா:1 259/4
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில் – சிந்தா:1 314/2
செம் மலர் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள் – சிந்தா:1 315/4
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப்பொருள் என்று சொல்ல – சிந்தா:1 393/1
விரை விளையாடும் தாரோய் யான் என விரும்பி தீம் பால் – சிந்தா:1 397/3
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன் – சிந்தா:1 400/4
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கி – சிந்தா:1 403/2
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான் – சிந்தா:1 405/4
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான் – சிந்தா:2 443/4
அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே – சிந்தா:3 544/3
அன்ப மற்று யான் நினை துன்பத்தால் தொடக்கினேன் – சிந்தா:3 579/2
மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
மின்னும் மழையின் மெலியும் அரிவை – சிந்தா:3 724/2,3
பொன் நாண் பொருத முலை என்கோ யான் – சிந்தா:3 724/4
அருவி அரற்றும் மலை என்கோ யான்
அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும் – சிந்தா:3 725/2,3
மருவார் சாயல் மனம் என்கோ யான் – சிந்தா:3 725/4
கானம் பூத்த கார் என்கோ யான்
கானம் பூத்த கார் கண்டு அழுங்கும் – சிந்தா:3 726/2,3
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான் – சிந்தா:3 726/4
இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன் – சிந்தா:3 748/2
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள் – சிந்தா:4 890/4
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான் – சிந்தா:4 955/4
தரும் மாலை அல்லது யான் தலையின் தாழ்ந்து பணிவேனோ – சிந்தா:4 961/4
மன்னும் யான் உணரலேன் மாதர் உற்ற நோய் – சிந்தா:4 1028/3
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான்
கல் குன்று ஏந்திய தோள் இணை கண் உறீஇ – சிந்தா:4 1031/2,3
ஆகும் யான் சேர்வல் என சென்று அடைந்ததே – சிந்தா:4 1038/4
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான் – சிந்தா:4 1070/4
இது மகவு அழியின் வாழேன் இறப்பல் யான் என்னும் ஆங்கண் – சிந்தா:4 1124/3
இல்லை-ஆயின் அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே – சிந்தா:4 1150/2
எல்லை ஆகும் பொது பெண் அவள் யான் குல மங்கையே – சிந்தா:4 1150/4
போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு – சிந்தா:5 1176/4
மனை பெரும் கிழத்தி மாசு இல் மலை மகள் தன்னை யான் சென்று – சிந்தா:5 1220/1
எழில் மாலை என் உயிரை யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகி – சிந்தா:5 1353/1
யான் பிறன் அளியன் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே – சிந்தா:6 1487/4
நீண்ட தோளவனே நிறை யான் இலேன் – சிந்தா:6 1509/3
பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான்
தனியள் ஆவது தக்கதுவோ சொலாய் – சிந்தா:6 1510/3,4
திருந்தும் மல்லிகை தேம் கமழ் மாலை யான்
புரிந்து சூடினும் பூம் கொடி நுண் இடை – சிந்தா:6 1512/1,2
கரிந்து யான் நைய காண்டலும் வல்லையோ – சிந்தா:6 1512/4
துன யான் பெறுகோ தொழுதேன் உரையீர் – சிந்தா:6 1519/4
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும் – சிந்தா:7 1589/2
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான் – சிந்தா:7 1594/4
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு – சிந்தா:7 1599/3
தன்னை யான் முகத்தை நோக்கின் தான் முலை முகத்தை நோக்கும் – சிந்தா:7 1626/1
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண் – சிந்தா:7 1626/2
ஒரு பெண்பாலேன் யான் ஆக உலகம் எல்லாம் பகை ஆகி – சிந்தா:7 1662/3
ஆவது அன்று இன்ன மாட்சி அவனை யான் நிகளம் பெய்து – சிந்தா:7 1682/3
நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி – சிந்தா:7 1720/2
இம்பர் இ உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான் – சிந்தா:7 1737/4
அணி நகர் யான் சென்று எய்தி மாலை-தன் மனையை சேர்ந்தேன் – சிந்தா:7 1742/2
பிணை மலர் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று – சிந்தா:7 1746/3
புல்ல யான் புணர்ப்பல் என்று பொழுது போய் பட்ட பின்றை – சிந்தா:7 1747/2
மேவி யான் காணலுற்று சார்தலும் இப்பர் உள்ளான் – சிந்தா:7 1756/2
பண் அமை தேரின் ஏறி அவனொடு யான் இருந்து போகி – சிந்தா:7 1757/1
தன் மகனென் யான் அடிகள் தேவதத்தன் என்பேன் – சிந்தா:7 1792/4
விம்மாந்து யான் வீழ வீழ்ந்தேன் துணை ஆகி – சிந்தா:7 1801/3
பசையினால் துஞ்சி யான் பட்ட தீது எலாம் – சிந்தா:7 1814/2
அண்ணல் குருகுலத்தான் என்றால் யான் முன் கருதியது என் – சிந்தா:7 1886/1
எங்கணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னா – சிந்தா:8 1910/1
யான் அலன் ஔவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும் – சிந்தா:8 1915/1
நங்கை யான் பசித்து வந்தேன் எ பொருள் நயப்பது என்றாட்கு – சிந்தா:8 1988/3
ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் யான் அணைவல் என்றான் – சிந்தா:9 2002/4
செல்லல் யான் தெளிதகவு உடைத்து என்று எண்ணினான் – சிந்தா:9 2008/4
வல்லது எனை என்ன மறை வல்லன் மடவாய் யான்
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும் – சிந்தா:9 2027/1,2
ஒட்டி யான் நோக்கிற்று என்றான் ஒரு பிடி நுசுப்பினாட்கே – சிந்தா:9 2085/4
காவி அம் கண்ணி ஒன்றும் கவலல் யான் உய்ந்தது எல்லாம் – சிந்தா:9 2099/3
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான் – சிந்தா:9 2100/4
தனக்கு யான் உயிரும் ஈவேன் தான் வர பழியும் நீங்கும் – சிந்தா:10 2147/1
முன் யான் விட்ட இன களிற்றின் இரட்டி விடுத்தான் என புகழ்ந்தான் – சிந்தா:10 2175/4
கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும் – சிந்தா:10 2314/3
தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா – சிந்தா:12 2405/2
பண்டு யான் செய்த பாவ பயத்தை யார்க்கு உரைப்பென் தேன்காள் – சிந்தா:12 2509/3
நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப – சிந்தா:12 2513/2
கடி செய் பைம் தார் கமழ் மாலை வேல் கந்துகற்கு சிறுவ யான் இ – சிந்தா:12 2587/3
அன்னம் துஞ்சும் அடி குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினை – சிந்தா:12 2588/2
புறன் நிழலின் அயலேனோ யான் புல்லா மன்னர் நிணம் பொழியும் வேல் – சிந்தா:12 2590/2
மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங்கணை – சிந்தா:12 2593/3
இன்று இவள் துறப்ப யான் நின் அரசு உவந்து இருப்பேன்-ஆயின் – சிந்தா:13 2647/2
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான் – சிந்தா:13 2902/4
அஞ்சினேன் துறப்பல் யான் ஆர்வம் இல்லையே – சிந்தா:13 2941/4

TOP


யானாக (1)

அறம் தலை நீங்க காக்கும் அரசன் யானாக நாளை – சிந்தா:9 2067/3

TOP


யானும் (11)

பெய் பெய் என்று உரைப்ப யானும் பெரும் கடல் வெள்ளி குன்றம் – சிந்தா:1 400/2
இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக – சிந்தா:3 552/2
நூல் படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்து யானும்
வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் – சிந்தா:3 554/1,2
யாவனே யானும் ஆக அரு நிறை கதவம் நீக்கி – சிந்தா:3 714/1
குற்றேல் செய்தும் காளையும் யானும் கொடியாளை – சிந்தா:4 1057/2
உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும் – சிந்தா:5 1340/2
தன்னை யானும் பிணிப்பேன் என தன் மணி செப்பினுள் – சிந்தா:7 1667/2
கணை கடி கண்ணி சொல்ல காணிய யானும் சென்றேன் – சிந்தா:7 1721/1
ஈன்ற தாய் யானும் ஆக இதனை கண்டு உயிரை வாழேன் – சிந்தா:12 2513/1
நன்றும் அஃது ஆக அன்றே-ஆயினும் ஆக யானும்
ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய் – சிந்தா:13 2627/2,3
தின்று அலால் சிறுவரை யானும் சொல் சில – சிந்தா:13 2937/2

TOP


யானே (1)

உள்பட உணர்ந்த யானே உள் குழைந்து உருகல் செல்லேன் – சிந்தா:4 1097/3

TOP


யானை (90)

ஓடாத தானை உருமு குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன் – சிந்தா:0 7/2,3
ஐதுபட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய் – சிந்தா:1 117/2
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல் – சிந்தா:1 141/1
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால் – சிந்தா:1 146/1
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன் – சிந்தா:1 148/3
ஊற்று இருந்த மு மதத்து ஓடை யானை பீடுசால் – சிந்தா:1 152/3
மொய் அறா களி யானை முழங்கி தேன் இமிர் தாரான் – சிந்தா:1 181/4
கந்து கொல் கடா களி யானை மன்னவன் – சிந்தா:1 186/2
மை முகம் அணிந்த மத யானை தவ நூறி – சிந்தா:1 282/3
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம – சிந்தா:1 284/3
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி – சிந்தா:1 285/1
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் எரியின் வாய் பெய்து அவன் பெயர்ந்து போய் – சிந்தா:1 297/2
ஐயனை கண்ணில் காண யானை_தீ அதகம் கண்ட – சிந்தா:1 403/1
கண் அயல் களிப்பன அண்ணல் யானை ஆயிரம் – சிந்தா:3 566/1
மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனா – சிந்தா:3 589/1
பதைப்பு அரும் பரும யானை பாலமாகுமரன் வந்தான் – சிந்தா:3 611/4
பண்ணியல் யானை மேலான் பதுமுகன் பரவை தானை – சிந்தா:3 747/1
கூற்றம் போல் கொடிய யானை கோடு உழுது அகன்ற மார்பம் – சிந்தா:3 782/3
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர் – சிந்தா:3 786/3
பைம்பொன் புளக பரும களி யானை ஈட்டம் – சிந்தா:3 809/1
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார் – சிந்தா:3 810/4
அள்ளலாய் அடி யானை இழுக்கின – சிந்தா:4 857/3
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும் – சிந்தா:4 865/3
கம்பு ஆர் களி யானை கலக்க மலங்கி – சிந்தா:4 1068/1
நீர் அகம் பொதிந்த மேகம் நீல் நிற நெடு நல் யானை
போர் முகத்து அழலும் வாள் கை பொன் நெடும் குன்றம் அன்னான் – சிந்தா:4 1116/1,2
சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான் – சிந்தா:4 1139/2
குச்சென நிரைத்த யானை குழாம் இரித்திடுவல் என்றான் – சிந்தா:4 1153/4
மலை தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான் – சிந்தா:4 1161/1
யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும் – சிந்தா:5 1201/1
சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும் – சிந்தா:5 1293/3
மலை தொகை மதம் தவழ் யானை மன்னவன் – சிந்தா:6 1489/3
யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த – சிந்தா:7 1562/1
நயப்ப எல்லாம் தருவல் என தொழுது நல் யானை தன் – சிந்தா:7 1590/3
அழி கவுள் யானை வேந்தற்கு அவன் திறம் அறிய சொன்னான் – சிந்தா:7 1644/2
அசைவு இலான் யானை தேர் போர்க்கு அலசனே அசல கீர்த்தி – சிந்தா:7 1681/3
அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழி கார் என்று எண்ணி – சிந்தா:7 1740/3
பொரு களி யானை மன்னன் புனை இழை அவளை தந்தான் – சிந்தா:7 1755/3
மட்டு மலர் மார்பின் மத யானை எயிறு உழுது ஆங்கு – சிந்தா:7 1791/3
கந்தார் களி யானை காவலனார் கான் முளையை – சிந்தா:7 1806/1
யானை குழாத்தின் இழிந்தார் அரிமானொடு ஒப்பார் – சிந்தா:7 1866/4
பொன் வரை பொருத யானை புணர் மருப்பு அனைய ஆகி – சிந்தா:9 2081/1
பொரு மத யானை புணர் மருப்பு ஏய்ப்ப பொன் சுமந்து ஏந்திய முலையார் – சிந்தா:10 2111/1
சின களி யானை மன்னன் வருக என செப்பினானே – சிந்தா:10 2147/4
அந்தரம் ஆறா யானை கொண்டு ஏற பறக்க எனில் பறந்திடும் திறலார் – சிந்தா:10 2156/2
அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார் – சிந்தா:10 2164/4
மல்லல் யானை கறங்கும் மணி ஒலி – சிந்தா:10 2169/1
பனை கை யானை மன்னர் பணிய பைம்பொன் முடியில் – சிந்தா:10 2194/1
நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான் – சிந்தா:10 2195/4
அழல் திகழ் கதத்த யானை ஐந்தரை கச்சம் ஆகும் – சிந்தா:10 2220/2
மலை கோட்ட எழில் வேழம் தவ நூறி மத யானை
கொலை கோட்டால் உழப்பட்டு குருதியுள் குளித்தனரே – சிந்தா:10 2234/3,4
மாலை வாய் நெடும் குடை மேல் மத யானை கை துணிந்து – சிந்தா:10 2238/1
நீள் அமர் உழக்கி யானை நெற்றி மேல் தத்தி வெய்ய – சிந்தா:10 2245/3
பாங்கு அமை பரும யானை பல்லவ தேச மன்னன் – சிந்தா:10 2253/2
கோமுகன் கொலைவல் யானை கூற்று என கடாயினானே – சிந்தா:10 2270/4
சாரிகை திரியும் யானை உழக்கலின் தரணி தன் மேல் – சிந்தா:10 2271/1
மத்தக யானை வீழ்ந்து வயிரம் கொண்டு ஒழிந்தது ஆங்கு – சிந்தா:10 2276/3
மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது அன்றே – சிந்தா:10 2277/4
அஞ்சி மற்ற அரசர் யானை குழாத்தொடும் இரிந்திட்டாரே – சிந்தா:10 2293/4
அற்று வீழ் தலைகள் யானை உடலின் மேல் அழுந்தி நின்ற – சிந்தா:10 2305/1
கொல் யானை உந்தி குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான் – சிந்தா:10 2319/4
கண் ஆடு யானை அவர் கை தொழ சென்று புக்கான் – சிந்தா:11 2327/4
தாள் வல் புரவி பண் அவிழ்த்த யானை ஆவித்தாங்கு அன்ன – சிந்தா:11 2354/3
குழுவாய் சங்கின் குரல் ஒலியும் கொலை வல் யானை செவி புடையும் – சிந்தா:11 2355/3
வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றி பைம்பொன் – சிந்தா:11 2374/2
வெள் அணி மத யானை விழு மணி குடம் ஏற்றி – சிந்தா:12 2431/2
மை அணி மத யானை மத்தக அகல் அல்குல் – சிந்தா:12 2434/1
முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மத யானை
மத்தகமும் திருமகள் தன் வடிவும்பட மாதோ – சிந்தா:12 2485/1,2
அநந்தன் அன்ன கை யானை ஏறினான் – சிந்தா:12 2521/3
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை
பெரும் தகை பிணையல் மன்னர் முடி மிதித்து ஏறினானே – சிந்தா:12 2522/3,4
முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானை
தலை நிலம் புரள வெண் கோடு உண்டதே போன்று தன் கை – சிந்தா:12 2554/1,2
உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை
வல மருப்பு ஈர்ந்து செய்த மணி கிளர் கட்டில் ஏறி – சிந்தா:12 2566/1,2
இன களி யானை மன்னர் இள உடையான் என்று ஏத்த – சிந்தா:12 2568/1
சின களி யானை மன்னர் மகளிரை சேர்த்தி நம்பன் – சிந்தா:12 2568/3
கதம் கனல் யானை நெற்றி கட்டிய பட்டமே போல் – சிந்தா:12 2584/1
நால் மருப்பின் மத யானை நறிய பைம் தாமரை மடந்தையை – சிந்தா:12 2595/1
அலை மணி கவரி மான் தேர் அடு களி யானை பாய்மா – சிந்தா:13 2641/1
முத்தார் மருப்பின் இடை வளைத்த முரண் கொள் யானை தட கையின் – சிந்தா:13 2693/1
ஆ தகாது என்ன புல்லி அலறுமால் யானை வேந்தே – சிந்தா:13 2769/4
ஆழ்த்த கந்து இளக யானை அலம் வருமே – சிந்தா:13 2785/4
குஞ்சி களி யானை கோட்டால் உழப்பட்டும் – சிந்தா:13 2792/3
ஆளியால் பாயப்பட்ட அடு களி யானை போல – சிந்தா:13 2882/1
சென்று மொய்த்து இமிரும் யானை சீவகற்கு இளைய நம்பி – சிந்தா:13 2903/2
கொல் யானை சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே – சிந்தா:13 2978/4
நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானை
தேர் முழங்கு தானை திருமாலின் முன் துறப்பான் – சிந்தா:13 2981/1,2
கொல் சின யானை பார்க்கும் கூர் உகிர் தறுகண் ஆளி – சிந்தா:13 2985/1
இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய் – சிந்தா:13 3043/1
சுந்தரம் பெய்த யானை தூ மருப்பு இயன்ற வெண் செப்பு – சிந்தா:13 3048/3
கொய் சுவல் புரவி மான் தேர் குழு மணி ஓடை யானை
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரை பலி சுமந்த அன்றே – சிந்தா:13 3049/3,4
யானை குங்குமம் ஆடி அரு வரை – சிந்தா:13 3067/1
உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவ திண் தேர் – சிந்தா:13 3075/1

TOP


யானை_தீ (1)

ஐயனை கண்ணில் காண யானை_தீ அதகம் கண்ட – சிந்தா:1 403/1

TOP


யானையாய் (1)

மறன் நிழல் மத யானையாய் வந்த என் தோழி வாமலேகை – சிந்தா:12 2590/3

TOP


யானையால் (1)

இசையினில் இவட்கு தோற்றாம் யானையால் வேறும் என்னின் – சிந்தா:3 748/1

TOP


யானையாலும் (1)

தன் இரு கையினாலும் தட கை மால் யானையாலும்
இன்னுயிர் பருகி சேனை எடுத்து கொண்டு இரிய ஓட்டி – சிந்தா:10 2274/2,3

TOP


யானையின் (7)

மையல் யானையின் மு மதம் ஆர்ந்து தேன் – சிந்தா:1 37/1
மரம் கொல் யானையின் மதம் நாறு அரும் சுரம் அவன் செலற்கு எழுந்தான் – சிந்தா:7 1557/4
பொருவில் யானையின் பழு போல் பொங்கு காய் குலை அவரை – சிந்தா:7 1561/2
புணர் மருப்பு யானையின் புயல் கொள் மும்மதம் – சிந்தா:7 1621/1
சிறு கண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள – சிந்தா:8 1897/1
கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே – சிந்தா:8 1898/4
மையல் யானையின் படு மதம் கெட பகட்டு அரசன் – சிந்தா:11 2365/1

TOP


யானையும் (2)

பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம்பொன் நீள் கொடி தேரும் வாசியும் – சிந்தா:2 410/2,3
சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான் – சிந்தா:12 2386/3

TOP


யானையுள் (1)

யானையுள் அரசன் தன் அணி கிளர் வல மருப்பு ஈர்ந்து – சிந்தா:12 2436/1

TOP


யானையே (1)

பத்தியில் பண்ணின பரும யானையே – சிந்தா:10 2211/4

TOP