Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 16
மிக்கதனில் 1
மிக்கது 3
மிக்கதே 6
மிக்கவர்-தம் 1
மிக்கவர்களின் 1
மிக்கவே 3
மிக்கன 2
மிக்கனர் 1
மிக்கார் 10
மிக்கான் 11
மிக்கிட்டது 1
மிக்கு 13
மிக்குழி 1
மிக்கே 2
மிக்கோன் 1
மிக 5
மிக-மாதோ 1
மிகப்படு 1
மிகல் 1
மிகு 13
மிகுத்த 1
மிகுத்தன 1
மிகுத்து 3
மிகுதி 1
மிகுதியின் 1
மிகுமால் 2
மிகை 6
மிச்சில் 4
மிச்சிலின் 1
மிசை 53
மிசைய 2
மிசையின் 1
மிசையும் 2
மிஞ்சி 1
மிஞிற்று 1
மிஞிறு 2
மிடறு 4
மிடறும் 2
மிடா 1
மிடை 13
மிடைதலின் 1
மிடைந்த 13
மிடைந்தவர் 1
மிடைந்து 14
மிதந்து 2
மிதற்று-இடை 1
மிதிக்கும் 1
மிதித்த 1
மிதித்திட 1
மிதித்து 4
மிதிப்ப 1
மிதியாத 1
மிலேச்சர் 1
மிலேச்சனை 1
மிலைச்சி 3
மிழற்ற 7
மிழற்றி 2
மிழற்றினாள் 2
மிழற்று 1
மிழற்றுகின்றாள் 1
மிழற்றும் 2
மிளகு 1
மிளர் 1
மிளர்ந்தனவே 1
மிளிர் 5
மிளிர்-மின் 1
மிளிர்ந்த 1
மிளிர்ந்து 4
மிளிர்வ 1
மிளிர்வது 1
மிளிர 4
மிளிரும் 1
மிளை 1
மிறைக்கொளி 2
மின் 116
மின்-கொல் 1
மின்செய் 1
மின்மினி 1
மின்ன 33
மின்னா 1
மின்னாளோ 1
மின்னி 9
மின்னிடு 1
மின்னில் 1
மின்னின் 24
மின்னினால் 1
மின்னு 36
மின்னும் 38
மின்னுவிட்டு 1
மின்னே 1
மின்னை 1
மின்னொடு 3
மின்னோடு 1
மின 1
மினின் 5

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மிக்க (16)

திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி – சிந்தா:1 263/2
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே – சிந்தா:1 263/4
சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல் – சிந்தா:1 278/1
நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள் – சிந்தா:1 367/1
மிக்க நாளினால் வேழம் மு மதம் – சிந்தா:2 414/1
தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர்கொண்டு புக்கு – சிந்தா:2 473/1
துன்னி இனிது ஆக உறை துப்புரவின் மிக்க
நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே – சிந்தா:3 503/3,4
முனை திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார் – சிந்தா:3 707/1
காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல – சிந்தா:4 851/1
எஞ்சினன் போல நின்றான் ஏத்த அரும் தவத்தின் மிக்க
வஞ்சம் இல் கொள்கையான் சொல் அமிர்தினால் வற்புற்றானே – சிந்தா:4 1122/3,4
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி – சிந்தா:5 1222/1
வினை நலம் நுகர்ந்து செல்வார் விதியினால் மிக்க நீரார் – சிந்தா:6 1495/4
கோன் அலன் தந்தை கந்துக்கடன் என குணத்தின் மிக்க
பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற – சிந்தா:8 1915/2,3
அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும் – சிந்தா:9 2022/3
செந்தாமரை மகளே அல்லது பெண் சாராத திருவின் மிக்க
சிந்தாமணி ஏய்ந்த சித்திரமாமண்டபத்து செல்வன் புக்கான் – சிந்தா:11 2370/3,4
வான் அகத்தும் நிலத்தும் இல்லா-வண்ணம் மிக்க மணி பூணினான் – சிந்தா:12 2595/4

TOP


மிக்கதனில் (1)

பொழிலின் மிக்கதனில் புக்கான் மணமகளிர் போல் பொலிந்ததே – சிந்தா:7 1648/4

TOP


மிக்கது (3)

பெண்ணின் மிக்கது பெண் அலது இல்லையே – சிந்தா:4 998/4
வெம்மை மிக்கது வீரன் தொடுத்த விளங்கு மாலை – சிந்தா:7 1674/3
உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே – சிந்தா:13 2752/4

TOP


மிக்கதே (6)

கடி மண கிழமை ஓர் கடலின் மிக்கதே – சிந்தா:1 196/4
கல்லென் சும்மை ஓர் கடலின் மிக்கதே – சிந்தா:2 413/4
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே – சிந்தா:3 831/4
மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவி கேட்பேன் – சிந்தா:6 1544/3
செல குறைபடாதது ஓர் செல்வம் மிக்கதே – சிந்தா:8 1945/4
அழித்தனர் அயிலவர் அரவம் மிக்கதே – சிந்தா:10 2226/4

TOP


மிக்கவர்-தம் (1)

வலியின் மிக்கவர்-தம் மகள் கோடலும் – சிந்தா:8 1919/3

TOP


மிக்கவர்களின் (1)

வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா – சிந்தா:3 707/2

TOP


மிக்கவே (3)

தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே – சிந்தா:1 43/4
உலம்பு மால் உவர் கடல் ஒலியின் மிக்கவே
கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார் – சிந்தா:3 832/2,3
இடும்பை மான் குரல் விளி எங்கும் மிக்கவே – சிந்தா:5 1202/4

TOP


மிக்கன (2)

சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான் – சிந்தா:4 893/3,4
துணை அமை இளமைய தோற்றம் மிக்கன
இணை மயிர் புரவியோடு இவுளி ஏற்றவே – சிந்தா:10 2228/3,4

TOP


மிக்கனர் (1)

பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர் – சிந்தா:1 246/4

TOP


மிக்கார் (10)

பொற்பா இழைத்து கொளல்-பாலர் புலமை மிக்கார் – சிந்தா:0 4/4
கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலை கன்னி மார்பம் – சிந்தா:2 483/1
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும் – சிந்தா:3 667/3
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார் – சிந்தா:3 805/4
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம் – சிந்தா:3 815/3
மிக்கார் தம் கேட்டின் கண் மேன்மை இல்லா சிறியார் போல் – சிந்தா:5 1227/1
இடன் ஆகும் ஊனும் இவை துறத்தலே சீலம் என்று உரைத்தார் மிக்கார் – சிந்தா:6 1546/4
அரிவையர் ஆடல் மிக்கார் அரு மணி வீணை வல்லார் – சிந்தா:9 2079/2
குஞ்சரத்தின் கோட்டு இடையும் உய்வர் தவம் மிக்கார்
அஞ்சல் இலர் என்றும் அறனே களைகண் என்பார் – சிந்தா:12 2557/3,4
விழு பயன் இழக்கும் மாந்தர் வெறு விலங்கு என்று மிக்கார்
பழித்தன ஒழித்தல் சீலம் பார் மிசை அவர்கட்கு என்றான் – சிந்தா:13 2822/3,4

TOP


மிக்கான் (11)

தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான் – சிந்தா:3 517/4
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான் – சிந்தா:3 695/4
மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர் நிதி கிழவன் காளை – சிந்தா:4 1048/1
வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினை பருக இப்பால் – சிந்தா:5 1258/2
தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான் – சிந்தா:5 1302/4
அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான்
ஒன்றிய மகளிர் தாமே உற்றவர்க்கு உரியர் என்னா – சிந்தா:5 1342/2,3
காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறும் நாளை என்றான் – சிந்தா:6 1456/4
மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவி கேட்பேன் – சிந்தா:6 1544/3
ஒண் மதி சூழ்ச்சி மிக்கான் உள்ளுழி உணர்தல் செல்லான் – சிந்தா:7 1695/2
உள்ளத்தை உணர்வின் மிக்கான் ஒழித்திட பெயர்ந்ததே போல் – சிந்தா:10 2186/2
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம் பால் – சிந்தா:13 3038/3

TOP


மிக்கிட்டது (1)

வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே – சிந்தா:5 1274/4

TOP


மிக்கு (13)

அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆருயிர் கிழத்தி-தன்னை – சிந்தா:1 273/2
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறி – சிந்தா:1 273/3
வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா – சிந்தா:3 707/2
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார் – சிந்தா:3 805/2
திரு மிக்கு உடை செல்வன் திறல் சாமி நனி காண்க – சிந்தா:3 843/3
வேலை மா கடல் வேட்கை மிக்கு ஊர்தர – சிந்தா:4 999/2
செற்றம் மிக்கு உடைமையால்-கொல் சீவகன் இன்ன நாளால் – சிந்தா:4 1078/3
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர் – சிந்தா:4 1102/4
காதலும் களிப்பும் மிக்கு கங்குலும் பகலும் விள்ளார் – சிந்தா:6 1494/3
வாசம் மிக்கு உடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்ற – சிந்தா:6 1539/1
மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து – சிந்தா:8 1957/2
கல் என் ஆர்ப்பு ஒலி மிக்கு ஒளிர் வாள் மினின் – சிந்தா:10 2169/3
தாங்கும் மா வண் கை சக்கரம் மிக்கு உயர் பிறரும் – சிந்தா:13 2761/3

TOP


மிக்குழி (1)

காதல் மிக்குழி கற்றவும் கைகொடா – சிந்தா:7 1632/1

TOP


மிக்கே (2)

நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே – சிந்தா:1 363/4
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே – சிந்தா:13 3146/4

TOP


மிக்கோன் (1)

கோமாற்கு உய்ப்பன் கொள் பயன் மிக்கோன் கொலை வேலான் – சிந்தா:7 1638/2

TOP


மிக (5)

நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி – சிந்தா:3 500/3
மிக ஆயது ஒர் மீளிமை செய்தனனோ – சிந்தா:5 1382/1
காலும் மிக நோம் சிறிது கண்ணும் துயில்குற்றேன் – சிந்தா:9 2029/3
மேல் பட மிக நனி சொரிவது ஒப்பவே – சிந்தா:13 2746/2
மெய் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும் – சிந்தா:13 2938/1

TOP


மிக-மாதோ (1)

வந்தித்து இருந்தார் மகிழ்ந்து காதல் மிக-மாதோ – சிந்தா:7 1785/4

TOP


மிகப்படு (1)

மிகப்படு பொறியினாரை வெறியரா செய்யலாமோ – சிந்தா:10 2315/2

TOP


மிகல் (1)

மிகல் கொண்ட இகலை தானே விழுங்கிய சிறகர் தோற்றி – சிந்தா:3 796/3

TOP


மிகு (13)

வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன் – சிந்தா:0 7/3
தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி – சிந்தா:0 20/1
வெம் பரி மான் நெடும் தேர் மிகு தானை அ – சிந்தா:1 221/3
மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன் – சிந்தா:3 494/1
நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி – சிந்தா:4 1010/3
விடை சூழ் ஏற்றின் வெல் புகழான் தன் மிகு தாதை – சிந்தா:4 1058/1
ஊழ் திரை பாம்பு சேர்ந்த ஒளி மிகு பருதி ஒத்தான் – சிந்தா:4 1138/4
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும் – சிந்தா:6 1486/1
மின்னின் நடந்து மிகு சுரம் சென்றான் – சிந்தா:7 1612/4
இங்கு சுவை இன் அமுதம் ஏந்த மிகு சான்றோன் – சிந்தா:9 2025/3
நைவளம் மிகு சாயல் நங்கையை புனைகின்றார் – சிந்தா:12 2435/4
வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய் – சிந்தா:13 2790/4
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம் பால் – சிந்தா:13 3038/3

TOP


மிகுத்த (1)

ஊன் அமர் குறடு போல இரும்பு உண்டு மிகுத்த மார்பில் – சிந்தா:10 2281/1

TOP


மிகுத்தன (1)

பால் நிற பனி வரை மேல் நிறம் மிகுத்தன
நீல் நிற நிழல் மணி தான் நிரைத்து அகம் எலாம் – சிந்தா:3 573/1,2

TOP


மிகுத்து (3)

பூம் தொடி அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு – சிந்தா:3 608/2
மதி மிகுத்து அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான் – சிந்தா:5 1273/4
வேட்கையை மிகுத்து வித்தி பிறவி நோய் விளைத்து வீயா – சிந்தா:13 3106/2

TOP


மிகுதி (1)

சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான் – சிந்தா:4 933/3

TOP


மிகுதியின் (1)

விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான் – சிந்தா:1 322/4

TOP


மிகுமால் (2)

பரிவு ஒன்றிலிரால் படர் நோய் மிகுமால்
அரிதால் உயிர் காப்பு அமரீர் அருளீர் – சிந்தா:5 1377/3,4
நடுநாள் இரவின் நவை-தான் மிகுமால்
நெடு வெள் நிலவின் நிமிர் தேர் பரியாது – சிந்தா:6 1520/2,3

TOP


மிகை (6)

காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான் – சிந்தா:1 281/4
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான் – சிந்தா:4 1077/4
வாமான் திண் தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு எம் – சிந்தா:7 1638/1
செய்யவளின் சிறிது மிகை சேயவளை கண்டார் – சிந்தா:7 1782/4
மிகை செல் மேகத்து மின்னும் செம் நில்லலா – சிந்தா:7 1816/3
மிகை நல தேவி-தானே விலாவணை நீக்கினாளே – சிந்தா:10 2138/4

TOP


மிச்சில் (4)

நம்பன் சிலை வாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால் – சிந்தா:3 809/3
சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர் – சிந்தா:3 832/4
விளைத்து இரும்பு மேய்ந்து ஒழிந்த மிச்சில் வரை மார்பன் – சிந்தா:7 1790/3
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான் – சிந்தா:10 2261/2

TOP


மிச்சிலின் (1)

வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேக – சிந்தா:13 2897/1

TOP


மிசை (53)

பந்தொடு சிவிறியில் சிதற பார் மிசை
இந்திரவில் என கிடந்த வீதியே – சிந்தா:1 86/3,4
பொன் சிறு தேர் மிசை பைம்பொன் போதகம் – சிந்தா:1 89/1
சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து – சிந்தா:1 121/3
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையும்-மின் – சிந்தா:1 122/3
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன – சிந்தா:1 123/1
கோவை நித்தில மாட குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே – சிந்தா:1 125/3,4
அன்னவன் வழி செல்லின் இ மண் மிசை
பின்னை தன் குலம் பேர்க்குநர் இல்லையே – சிந்தா:1 245/3,4
நுணங்கு நுண் கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து – சிந்தா:1 344/1,2
பூமகள் பொலிந்த மார்பன் புவி மிசை திலகம் ஒத்தான் – சிந்தா:1 370/4
மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட – சிந்தா:3 524/1
வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால் – சிந்தா:3 563/1
நீள் நிதி வணிகர் ஈறா நில மிசை அவர்கள் எல்லாம் – சிந்தா:3 615/1
மண் மிசை தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை – சிந்தா:3 695/2
பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார் – சிந்தா:3 817/1
வண்டு இனம் மிசை கொள வாச பூ சுமை – சிந்தா:3 827/3
வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி – சிந்தா:3 850/2
பைம்பொன் நீள் உலகு அன்றி இ பார் மிசை
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள-எனில் – சிந்தா:4 877/1,2
ஒண் நுதல் மகளிர் தம்மோடு உயர் மிசை அவர்கள் ஒத்தார் – சிந்தா:4 965/4
கருதிய திசைகள் எல்லாம் கண் மிசை கரந்த மாந்தர் – சிந்தா:4 974/3
தீட்டினான் கிழி மிசை திக வாள்_நுதல் – சிந்தா:4 1003/2
மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே – சிந்தா:4 1025/4
கண்டவர் கடக்கல் ஆற்றா கிழி மிசை உருவு தீட்டி – சிந்தா:4 1047/3
மீளா துன்ப நீள் கடல் மின்னின் மிசை வீழ்ந்தாள் – சிந்தா:4 1093/4
மண் மிசை கிடந்தன மலையும் கானமும் – சிந்தா:5 1175/1
மணம் கொள் பூ மிசை மை வரை மைந்தனோ – சிந்தா:5 1311/2
கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசை கொண்டிருந்தாள் – சிந்தா:5 1397/3
பரப்பி இட்டன போல கோபங்கள் பயிர் மிசை பரவ – சிந்தா:7 1564/2
அலர் மிசை பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கி – சிந்தா:7 1625/3
ஈண்ட வளர்ந்தேம் ஏந்து தவிசின் உச்சி மிசை எய்தி – சிந்தா:7 1794/3
விண் உளு உண்டு என வீழும் மா நில மிசை
கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்தவே – சிந்தா:8 1899/3,4
ஒருங்கு குலாய் நில மிசை மிளிர்வது ஒத்து ஒளிர் மணி – சிந்தா:8 1903/3
காற்றில் பரிக்கும் கலிமான் மிசை காவல் ஓம்பி – சிந்தா:8 1933/3
சேறுபடு கோதை மிசை வண்டு திசை பாட – சிந்தா:9 2019/3
மொய்த்த மணி மாட மிசை அத்தக அடைந்தாள் – சிந்தா:9 2022/4
தான் அமர்ந்து தாங்கி அமை தவிசின் மிசை இருந்தான் – சிந்தா:9 2024/4
நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் தேர் மிசை அவரே – சிந்தா:10 2163/4
நிரை உளை அரி நல் மா நிலம் மிசை புரள்வன போல் – சிந்தா:10 2243/2
சிங்கம் போல் தொழித்து ஆர்த்து அவன் சிறுவர் தேர் மிசை தோன்றினார் – சிந்தா:10 2306/4
சிங்க ஏறுகள் கிடந்த போல் சிறுவர் தேர் மிசை துஞ்சினார் – சிந்தா:10 2309/4
மை துன நீண்ட மா மணி மாடம் மிசை ஏறி – சிந்தா:11 2333/1
செய் பூம் தவிசின் மிசை அல்லது சேறல் இல்லார் – சிந்தா:11 2338/2
பால் நிமிர் கதிர் வெள்ளி மணை மிசை பலர் வாழ்த்தி – சிந்தா:12 2429/3
வான் நிமிர் கொடி அன்னார் மணி அணை மிசை வைத்தார் – சிந்தா:12 2429/4
சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து – சிந்தா:12 2503/1
தத்து நீர் மிசை செல் மாவும் தவழ் மத களிறும் ஈந்தான் – சிந்தா:12 2571/4
பால் மிசை சொரியும் திங்கள் பனி கடல் முளைத்தது ஒத்தார் – சிந்தா:13 2658/4
அழுத்தி அன்ன அணி வளை தோள் மிசை
கழிக்கும் ஐங்கணை காமற்கும் காமனே – சிந்தா:13 2671/3,4
உடுத்த சாந்தின் மிசை செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்ப – சிந்தா:13 2695/3
கலந்த கல் மிசை கண்டு வாழ்த்தினான் – சிந்தா:13 2743/4
பழித்தன ஒழித்தல் சீலம் பார் மிசை அவர்கட்கு என்றான் – சிந்தா:13 2822/4
பட்டது பகுத்து உண்பார் இ பார் மிசை இல்லை கண்டீர் – சிந்தா:13 2925/2
செல்வ நீர் திரு கோயில் இ மண் மிசை
இல்லையேல் துறக்கம் இனிது என்பவே – சிந்தா:13 3006/3,4
சென்று எலா திசையும் சிலம்பின் மிசை
நின்றனன் இறை வம்-மினம் நீர் என – சிந்தா:13 3065/2,3

TOP


மிசைய (2)

ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான் – சிந்தா:3 692/3
உறைந்த என் சென்னி போதின் மிசைய என்று ஒப்ப ஏத்தி – சிந்தா:13 2649/2

TOP


மிசையின் (1)

திருவடி மிசையின் வைத்து சிலம்ப நொந்து அழுதிட்டானே – சிந்தா:7 1728/4

TOP


மிசையும் (2)

ஒண் தேர் மிசையும் உருவ களிற்று உச்சி மேலும் – சிந்தா:3 808/2
மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான் – சிந்தா:6 1438/4

TOP


மிஞ்சி (1)

கோள் நிலை திரிந்து நாழி குறைபட பகல்கள் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகி பசியும் நீடி – சிந்தா:1 255/1,2

TOP


மிஞிற்று (1)

உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள் – சிந்தா:4 892/4

TOP


மிஞிறு (2)

வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்ப விடுத்தாள் – சிந்தா:7 1769/4
பொன் தாழ் வரை புலி போத்து என புனை தார் மிஞிறு ஆர்ப்ப – சிந்தா:10 2262/3

TOP


மிடறு (4)

விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார் – சிந்தா:3 723/2
விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி – சிந்தா:3 735/3
யாப்பு உடை யாழ் மிடறு என்னும் தோட்டியால் – சிந்தா:9 2011/1
அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய் – சிந்தா:13 3009/3

TOP


மிடறும் (2)

அரும் கடி மிடறும் விம்மாது அணி மணி எயிறும் தோன்றா – சிந்தா:3 658/2
ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி – சிந்தா:3 728/3

TOP


மிடா (1)

தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம் – சிந்தா:3 692/1,2

TOP


மிடை (13)

முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலை – சிந்தா:2 483/2
வெம் முலை பரவை அல்குல் மிடை மணி கலாபம் வேய் தோள் – சிந்தா:3 606/3
மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில் – சிந்தா:4 1005/2
மிடை மின்னின் நிலத்தை சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான் – சிந்தா:5 1272/4
மாட்சி உள்ளத்தை மாற்றி மலர் மிடை
காட்சிக்கு இன் பொய்கை காமர் நலன் உண்டு – சிந்தா:7 1634/2,3
முருகு கொப்புளிக்கும் கண்ணி முறி மிடை படலை மாலை – சிந்தா:8 1889/1
தேன் மிடை கோதை என்று திருமகன் எழுந்து போகி – சிந்தா:9 2094/3
வாள் மிடை தோழர் சூழ தன் மனை மகிழ்ந்து புக்கான் – சிந்தா:9 2094/4
வீதியும் மேலும் மிடைந்து மிடை மலர் – சிந்தா:10 2119/3
வேல் மிடை சோலை வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்றான் – சிந்தா:10 2206/4
மிடை மயிர் கவரி நல் ஆன் கன்று உண கண்டு நிற்பார் – சிந்தா:13 2717/2
வேல் மிடை தானை தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான் – சிந்தா:13 2901/4
பால் மிடை அமிர்து போன்று பருகலாம் பயத்த ஆகி – சிந்தா:13 3113/1

TOP


மிடைதலின் (1)

முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர் – சிந்தா:1 119/3

TOP


மிடைந்த (13)

வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை – சிந்தா:1 279/1
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே – சிந்தா:1 279/4
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க – சிந்தா:2 434/2
மிடைந்த மா மணி மேகலை ஏந்து அல்குல் – சிந்தா:4 950/1
மாசு அறு மணிமுடி மிடைந்த மாலையன் – சிந்தா:4 953/3
வாளினால் மிடைந்த கண்ணாள் வரு முலை தடத்துள் வைகி – சிந்தா:7 1694/1
நாணொடு மிடைந்த தேன் கொள் நடுக்குறு கிளவி கேட்டே – சிந்தா:9 2094/1
இங்குலிக இறுவரை போன்று இன களிறு இடை மிடைந்த
குஞ்சரங்கள் பாய்ந்திடலின் குமிழிவிட்டு உமிழ் குருதி – சிந்தா:10 2239/2,3
கொந்து அழல் பிறப்ப தாக்கி கோடுகள் மிடைந்த தீயால் – சிந்தா:10 2254/1
பழியொடு மிடைந்த தேனும் சீறடி பரவினாற்கு – சிந்தா:12 2512/1
என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான் – சிந்தா:13 2725/3
விதி முலை வெய்ய ஆகி தாரொடு மிடைந்த அன்றே – சிந்தா:13 2838/4
பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம் – சிந்தா:13 2873/1

TOP


மிடைந்தவர் (1)

வேணு கோலின் மிடைந்தவர் ஒற்றலின் – சிந்தா:3 634/2

TOP


மிடைந்து (14)

மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளி குன்றம் – சிந்தா:3 526/1
தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் வேட்டோர் – சிந்தா:3 749/1
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார் – சிந்தா:3 839/2
மின் செய் வெண்குடை பிச்சம் மிடைந்து ஒளி – சிந்தா:4 860/2
திருந்து பொன் தேரும் செம்பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி – சிந்தா:4 972/1
விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து திங்கள் – சிந்தா:5 1352/1
தோளினால் மிடைந்து புல்லி தொண்டை வாய் அமுதம் மாந்தி – சிந்தா:7 1694/2
மாசொடு மிடைந்து மணி நூற்று அனைய ஐம்பால் – சிந்தா:7 1784/1
வீங்கு எழில் தோள்களும் மிடைந்து வெம் முலை – சிந்தா:8 1942/2
வீதியும் மேலும் மிடைந்து மிடை மலர் – சிந்தா:10 2119/3
வேய் நிற கரும்பின் வெண் நிற பூ போல் மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும் – சிந்தா:10 2158/1
விடு சரம் விசும்பு-இடை மிடைந்து வெய்யவன் – சிந்தா:10 2232/1
வெம் கண் வில் உமிழ் வெம் சரம் மிடைந்து வெம் கதிர் மறைந்ததே – சிந்தா:10 2307/4
எரி மிடைந்து அனைய மாலை இன மணி திருவில் வீசும் – சிந்தா:13 3044/1

TOP


மிதந்து (2)

அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று – சிந்தா:3 495/3
நீர் ஏந்தி நெய்ம் மிதந்து நிணம் வாய் பில்கி அழல் விம்மி – சிந்தா:13 2599/1

TOP


மிதற்று-இடை (1)

மா மலர் தெரியலான் மணி மிதற்று-இடை கிடந்த – சிந்தா:9 2038/3

TOP


மிதிக்கும் (1)

பஞ்சி மேல் மிதிக்கும் போதும் பனிக்கும் சீறடியினாளே – சிந்தா:6 1531/4

TOP


மிதித்த (1)

சென்னி மேல் மிதித்த அம் செம் சீறடி திருவில் வீச – சிந்தா:13 2954/1

TOP


மிதித்திட (1)

வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திட கிழிந்த மாலை – சிந்தா:3 728/1

TOP


மிதித்து (4)

மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள் – சிந்தா:5 1336/3
உலவும்-போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய் – சிந்தா:7 1588/3
ஆன்ற வெம் பாலை அழல் மிதித்து அன்ன அரும் சுரம் சுடர் மறை பொழுதின் – சிந்தா:10 2106/3
பெரும் தகை பிணையல் மன்னர் முடி மிதித்து ஏறினானே – சிந்தா:12 2522/4

TOP


மிதிப்ப (1)

குரல் சிலம்பு ஒலிப்ப சென்னி குஞ்சி மேல் மிதிப்ப நோற்றான் – சிந்தா:12 2459/2

TOP


மிதியாத (1)

வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் இலவ பூம் போது அன நின் அடி போற்றி – சிந்தா:12 2454/2,3

TOP


மிலேச்சர் (1)

மின் நிலை வாளோடு மிலேச்சர் ஏறலின் – சிந்தா:10 2216/2

TOP


மிலேச்சனை (1)

வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனை
செம் கண் தீ விழியா தெழித்தான் கையுள் – சிந்தா:2 431/2,3

TOP


மிலைச்சி (3)

வரி நிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாள் ஆர் – சிந்தா:3 696/2
மாலை நல்லன மது கமழ் தகையன மிலைச்சி
கோல மென் முலை குங்குமம் இடு கொடி எழுதி – சிந்தா:12 2383/2,3
அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லை சூட்டு மிலைச்சி
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி – சிந்தா:12 2438/2,3

TOP


மிழற்ற (7)

பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி – சிந்தா:3 561/3
பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து – சிந்தா:4 873/3
சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம் – சிந்தா:4 1012/1
ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் – சிந்தா:4 1014/2
சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல் – சிந்தா:4 1019/2
வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்ற
சேறுபடு கோதை மிசை வண்டு திசை பாட – சிந்தா:9 2019/2,3
செல்க என சிலம்பு செம்பொன் கிண்கிணி மிழற்ற ஒல்கி – சிந்தா:9 2068/3

TOP


மிழற்றி (2)

வருத்தம் மிழற்றி பசும்பொன் சிலம்பு ஓசை செய்ய – சிந்தா:11 2339/3
வெள்ளைமை கலந்த நோக்கின் கிண்கிணி மிழற்றி ஆர்ப்ப – சிந்தா:12 2529/1

TOP


மிழற்றினாள் (2)

பூவையோடும் புலம்பி மிழற்றினாள் – சிந்தா:5 1364/4
தீண்டு வந்து என தேனின் மிழற்றினாள் – சிந்தா:6 1509/4

TOP


மிழற்று (1)

மல்லல் காளையை வைது மிழற்று வாய் – சிந்தா:5 1363/2

TOP


மிழற்றுகின்றாள் (1)

மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் – சிந்தா:5 1399/4

TOP


மிழற்றும் (2)

உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும் – சிந்தா:5 1353/3
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண் – சிந்தா:7 1626/2

TOP


மிளகு (1)

மிளகு வார் கொடி ஊசல் விருப்புறூஉம் – சிந்தா:7 1778/2

TOP


மிளர் (1)

பொன் தெளித்த தாமம் புரி முத்தம் மிளர் தாமம் – சிந்தா:13 2919/3

TOP


மிளர்ந்தனவே (1)

விழி கண் மகர குண்டலமும் தோடும் காதில் மிளர்ந்தனவே – சிந்தா:13 2696/4

TOP


மிளிர் (5)

மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண் – சிந்தா:1 362/1
மின்னும் மிளிர் பூம் கொடியும் மென் மலரும் ஒப்பார் – சிந்தா:3 503/1
மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும் – சிந்தா:7 1716/1
வீதி மல்கின போல் மிளிர் வேல் கணும் – சிந்தா:11 2334/3
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்ன – சிந்தா:13 2921/2

TOP


மிளிர்-மின் (1)

மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே – சிந்தா:5 1383/4

TOP


மிளிர்ந்த (1)

வெள் வேல் மிளிர்ந்த நெடும் கண் விரை நாறு கோதை – சிந்தா:2 491/2

TOP


மிளிர்ந்து (4)

மென் தினை பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும் – சிந்தா:1 148/1
விழும் மீ நிலம் எய்தி மிளிர்ந்து உருகா – சிந்தா:5 1384/3
வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதியுள் – சிந்தா:7 1828/2
மின் இரும் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க வெம்பி – சிந்தா:8 1985/3

TOP


மிளிர்வ (1)

மஞ்சு சூழ் விசும்பு-இடை மணந்து மின் மிளிர்வ போல் – சிந்தா:7 1828/1

TOP


மிளிர்வது (1)

ஒருங்கு குலாய் நில மிசை மிளிர்வது ஒத்து ஒளிர் மணி – சிந்தா:8 1903/3

TOP


மிளிர (4)

மின் மணி மிளிர தேவி மெல்லவே ஒதுங்குகின்றாள் – சிந்தா:1 317/3
மீளா மணிமேகலை மின்னின் மிளிர
வாள் ஆர் மணி பூண் அவன் மாதர் அம் பாவை-தன்னை – சிந்தா:4 1074/2,3
மின்னு குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி – சிந்தா:7 1658/3
கொண்டு அவன் கொழும் பொன் தாரும் ஆரமும் மிளிர ஏறி – சிந்தா:10 2192/2

TOP


மிளிரும் (1)

மின் என மிளிரும் பைம் பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய – சிந்தா:7 1734/1

TOP


மிளை (1)

அறை தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகு-மின் என்றான் – சிந்தா:4 1142/4

TOP


மிறைக்கொளி (2)

விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே – சிந்தா:1 284/4
வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு – சிந்தா:10 2293/3

TOP


மின் (116)

வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன் – சிந்தா:0 15/3
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளை – சிந்தா:0 18/2
மின் நீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன் – சிந்தா:0 21/3
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து பின்னும் – சிந்தா:1 114/2
சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து – சிந்தா:1 121/3
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால் – சிந்தா:1 146/1
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே – சிந்தா:1 185/3
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப்பட்ட – சிந்தா:1 190/3
மின் நெறி பல் கலம் மேதக பெய்தது ஓர் – சிந்தா:1 237/3
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும் – சிந்தா:1 283/1
மின் மணி மிளிர தேவி மெல்லவே ஒதுங்குகின்றாள் – சிந்தா:1 317/3
மின் அடு கனை இருள் நீந்தி மேதகு – சிந்தா:1 326/1
நுணங்கு நுண் கொடி மின் ஓர் மழை மிசை – சிந்தா:1 344/1
மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண் – சிந்தா:1 362/1
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் – சிந்தா:1 371/1
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே – சிந்தா:2 437/4
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சின் ஓடும் – சிந்தா:2 442/1
மின் இவர் நுசுப்பு நோவ விடலையை காண ஓடி – சிந்தா:2 457/3
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல் – சிந்தா:2 462/3
மின் உகு செம்பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே – சிந்தா:2 471/4
மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன் – சிந்தா:3 494/1
மின் அவிர் செம்பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்கு – சிந்தா:3 536/3
வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி – சிந்தா:3 550/2
மின் செய் பசும்பொன் நிலத்து வீறு பெற நாட்டி – சிந்தா:3 593/2
வாய் அருகு வந்து ஒசித்து மறிய மழை மின் போல் – சிந்தா:3 595/2
வெண் நிற மழையின் மின் போல் வெண் துகில் கலாபம் வீக்கி – சிந்தா:3 624/1
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும் குழை கீழ் இலங்கும் ஆறும் – சிந்தா:3 644/2
பொங்க பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்ப போர்த்த – சிந்தா:3 677/2
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம் – சிந்தா:3 679/4
மின் விரித்து அனையது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா – சிந்தா:3 697/3
மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ – சிந்தா:3 737/1
மின் அவிர் இலங்கும் ஒள் வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன – சிந்தா:3 802/3
மின் இயல் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான் – சிந்தா:3 834/3
மின் செய் வெண்குடை பிச்சம் மிடைந்து ஒளி – சிந்தா:4 860/2
கார் விளையாடிய மின் அனையார் கதிர் – சிந்தா:4 915/1
மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள் – சிந்தா:4 920/1
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்-மின் – சிந்தா:4 922/4
மின் எழூஉ பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான் – சிந்தா:4 959/4
குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் விழும் மின் போல் – சிந்தா:4 979/1
மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு – சிந்தா:4 1006/1
மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர் – சிந்தா:4 1008/2
வாள் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே – சிந்தா:4 1010/4
மின் நேர் இடையாள் அடி வீழ்ந்தும் இரந்தும் – சிந்தா:4 1072/1
மின் ஆர் இள மென் முலை வேய் மருள் மென் தோள் – சிந்தா:4 1073/2
மின் அணி மதியம் கோள் வாய் விசும்பு-இடை நடப்பதே போல் – சிந்தா:4 1098/3
மின் இலங்கு எஃகினானை பெறுகலான் தந்தை மீண்டு – சிந்தா:4 1123/1
மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும் – சிந்தா:4 1147/3
வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய மெல்லவே – சிந்தா:4 1148/2
மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்து திண் தேர் – சிந்தா:4 1154/1
உடை நாண் என மின் என ஒண் மணி அம் – சிந்தா:5 1189/2
மின் உடை மணி பல வரன்றி மேதகு – சிந்தா:5 1200/1
தோடு அலர் கோதை மின் துளும்பும் மேகலை – சிந்தா:5 1207/2
விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு இளம் பிறை சூழ்ந்த மின் போல் – சிந்தா:5 1297/1
மின் விரிந்து இலங்கு பைம் பூண் வேல் கணார் வேனிலானே – சிந்தா:5 1301/4
பெயல் மழை பிறழும் கொடி மின் இடை – சிந்தா:5 1310/1
மின் ஒர் பூம் பொழில் மேதக செல்வது ஒத்து – சிந்தா:5 1336/1
மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே – சிந்தா:5 1383/4
மின் வளைத்தன மேகலை அல்குலாள் – சிந்தா:5 1402/4
மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதக – சிந்தா:5 1408/1
வில் உறை புருவம் மாதர் வெந்தனள் கிடப்ப மின் தோய் – சிந்தா:6 1527/3
குன்று-இடை குளிர்க்கும் மின் போல் குழாம் மழை முகட்டில் செல்வான் – சிந்தா:7 1579/4
உரைத்து மின் இருள் மேல் கிடந்தாலும் ஒத்து – சிந்தா:7 1603/3
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப – சிந்தா:7 1640/2
இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல் – சிந்தா:7 1680/3
மின் தவழ் மணி வரை மாலை மார்பனை – சிந்தா:7 1703/1
மின் என மிளிரும் பைம் பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய – சிந்தா:7 1734/1
மின் நிரைத்த பைம் பூண் விளங்கு இலை வேல் வேந்தன் – சிந்தா:7 1803/1
மஞ்சு சூழ் விசும்பு-இடை மணந்து மின் மிளிர்வ போல் – சிந்தா:7 1828/1
பட்டமும் பனி வரை மின் என கட்டினான் – சிந்தா:7 1835/4
கார் மின் நுடங்கும் இடை மங்கையை காண்க சென்று என்று – சிந்தா:7 1869/3
வஞ்சி வாட்டிய வாள் மின் நுசுப்பினார் – சிந்தா:8 1947/1
எழில் மணி குழை வில் வீச இன் பொன் ஓலை மின் செய – சிந்தா:8 1952/3
மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து – சிந்தா:8 1957/2
மின் மலர்ந்த வேலினான் முன் வீதி புக்கு வீழ்ந்ததே – சிந்தா:8 1957/4
மின் இரும் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க வெம்பி – சிந்தா:8 1985/3
மின் இயல் பட்டம் சேர்த்தி ஆன் நெய் பால் வெறுப்ப ஊட்டி – சிந்தா:9 2054/2
மின் அவிர் மாலை மென் பூம் குழல் வல தோளில் வீழ – சிந்தா:9 2056/2
மின் வளர் மருங்குல் செற்ற வெம் முலை மணி கண் சேப்ப – சிந்தா:9 2081/3
மின்னு குழையினர் கோதையர் மின் உயர் – சிந்தா:10 2117/1
மின் தோய் வரை கொன்ற வேலோன் புகுதக – சிந்தா:10 2122/1
மின் ஆர் குழையினர் கோதையர் வீதியுள் – சிந்தா:10 2128/3
மின் என விட்ட கோலை விழுங்க கண்டு அழுங்கி வேர்த்து – சிந்தா:10 2187/3
மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் உற்று உறாதாய் – சிந்தா:10 2188/3
மின் நிலை வாளோடு மிலேச்சர் ஏறலின் – சிந்தா:10 2216/2
கார் ஒளி மின் உமிழ் தகைய கால் இயல் – சிந்தா:10 2229/3
மேல் ஆள் மேல் நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால் – சிந்தா:10 2236/2
மின் அவிர் பருதி முந்நீர் கோளொடும் வீழ்வது ஒத்தான் – சிந்தா:10 2251/4
மின் நிற எஃகம் ஏந்தி வீங்கு நீர் மகதையார் கோன் – சிந்தா:10 2257/3
வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய் மறைத்திட்டு மின் தோய் – சிந்தா:10 2272/3
வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் மின் என வெகுண்டு விட்டான் – சிந்தா:10 2289/3
மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரி சிலம்பு சூழ்ந்து – சிந்தா:10 2300/1
மங்குல் மின் என வள்ளல் தேர் மைந்தர் தேரொடு மயங்கலின் – சிந்தா:10 2307/3
கலை முத்தம் கொள்ளும் அல்குல் கார் மழை மின் அனார்-தம் – சிந்தா:10 2312/1
மின் உமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பினானே – சிந்தா:10 2313/4
வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர் – சிந்தா:12 2389/3
விரை தலை மாலை சூட்டி மின் அனார் அம் கை சேப்ப – சிந்தா:12 2414/1
மின் உமிழ் வைர கோட்டு விளங்கு ஒளி இமயம் என்னும் – சிந்தா:12 2417/1
ஊடு மின் அனார் உரிஞ்சி ஆட்டினார் – சிந்தா:12 2418/3
மெய் அணி கலன் மாலை மின் இரும் துகில் ஏந்தி – சிந்தா:12 2434/3
இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி ஏந்து பொன் – சிந்தா:12 2449/3
தோடு மலி கோதையொடு துதைந்த வரை மின் போல் – சிந்தா:12 2483/2
வெள் உருவ மாலை வட கீழ் இருவர் மின் போல் – சிந்தா:12 2488/1
மின் அரி சிலம்பு தொட்டு விருப்பொடு விரைந்து போவான் – சிந்தா:12 2538/2
வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி எங்கும் – சிந்தா:12 2543/2
தரிக்கிலர் ஆகி தாழ்ந்து தட முகில் குளிக்கும் மின் போல் – சிந்தா:13 2657/3
கண் உரை மகளிர் சேர்ந்து கார் இருள் திவளும் மின் போல் – சிந்தா:13 2663/2
வளைந்த மின் அனார் மகிழ்ந்து சண்பகம் – சிந்தா:13 2682/3
மின் என துறக்கும் தானத்து இயற்கையும் விரித்தும் அன்றே – சிந்தா:13 2823/4
மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள் – சிந்தா:13 2890/1
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே – சிந்தா:13 2895/3
மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான் – சிந்தா:13 2914/3
மின் தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம் – சிந்தா:13 2919/4
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள் – சிந்தா:13 2996/3
நலிந்து மின் நகு மணி நன் பொன் பேர் இழை – சிந்தா:13 3029/2
மின் ஆர் மணி பூணவன் மேவி விண்-காறும் நாறும் – சிந்தா:13 3045/2
மின் அணிந்து உக திருத்தி வெம் முலை – சிந்தா:13 3127/2

TOP


மின்-கொல் (1)

அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த – சிந்தா:3 549/2

TOP


மின்செய் (1)

விண்டு அலர்ந்து ஒருபுடை தோடு மின்செய்
மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே – சிந்தா:4 1009/2,3

TOP


மின்மினி (1)

விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் – சிந்தா:3 742/2

TOP


மின்ன (33)

புடை இரு குழையும் மின்ன பூம் துகில் செறிந்த அல்குல் – சிந்தா:1 399/1
பட்டமும் குழையும் மின்ன பல் கலன் ஒலிப்ப சூழ்ந்து – சிந்தா:2 472/3
அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்து ஆடுகின்றாள் – சிந்தா:3 677/4
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே – சிந்தா:3 702/3,4
கோதையும் தோடும் மின்ன குண்டலம் திருவில் வீச – சிந்தா:3 740/1
தகை நிற குழைகள் தாழ்ந்து சாந்தின் வாய் நக்கி மின்ன
புகை நிற துகிலில் பொன் நாண் துயல் வர போந்து வேந்தன் – சிந்தா:4 1077/2,3
வாள் நுதல் பட்டம் மின்ன வார் குழை திருவில் வீச – சிந்தா:5 1257/1
குங்குமம் மார்பில் பூண்ட குளிர் கதிர் ஆரம் மின்ன
மங்கையோடு இருந்த போழ்து ஓர் மணி வண்டு கண்டு சொன்னான் – சிந்தா:6 1501/2,3
ஒண் மணி குழை வில் வீச ஒளிர்ந்து பொன் ஓலை மின்ன
வண்ண மேகலைகள் ஆர்ப்ப வான் சிலம்பு ஒலிப்ப முத்தும் – சிந்தா:7 1689/1,2
தட வரை மார்பின் மின்ன தம்பியோடு அமிர்தம் உண்டான் – சிந்தா:7 1731/3
வண் தாரார் வண் கடகம் மின்ன தம் கை மறித்து – சிந்தா:7 1809/2
இலங்கு பொன் ஓலை மின்ன இன் முகம் சிறிது கோட்டி – சிந்தா:9 2060/1
அலங்கல் தாது அவிழ்ந்து சோர அல்குல் பொன் தோரை மின்ன
சிலம்பின் மேல் பஞ்சி ஆர்ந்த சீறடி வலத்தது ஊன்றி – சிந்தா:10 2132/1,2
காய்ந்து எரி செம்பொன் தோடும் கன மணி குழையும் மின்ன
வேந்தருள் வினிதை வேந்தன் வெம் சிலை தளர வாங்கி – சிந்தா:10 2181/2,3
சுடர் நுதல் பட்டம் மின்ன சுரும்பு இமிர் கண்ணி சிந்த – சிந்தா:10 2182/2
ஒள் அழல் வைர பூணும் ஒளிர் மணி குழையும் மின்ன
ஒள் அழல் கொள்ளி வட்டம் போல் குலாய் சுழல பொன் ஞாண் – சிந்தா:10 2203/1,2
பூ முக மாலை மார்பன் பொன் அணி கவசம் மின்ன
கோமுகன் கொலைவல் யானை கூற்று என கடாயினானே – சிந்தா:10 2270/3,4
பத்திர கடிப்பு மின்ன பதுமுகன் பகடு பேர்த்தான் – சிந்தா:10 2276/4
பத்திர கடிப்பு மின்ன பங்கியை வம்பின் கட்டி – சிந்தா:10 2277/1
ஆரமும் பூணும் மின்ன அரு விலை பட்டின் அம் கண் – சிந்தா:10 2280/2
கோடி தானை கொற்றவன் காண்பான் இழை மின்ன
கோடி செம்பொன் கொம்பரின் முன்முன் தொழுவாரும் – சிந்தா:11 2331/3,4
நலம் கிளர் பவளம் நன் பொன் விரல் மணி ஆழி மின்ன
கலம் தின்று பணைத்த தோளும் கவின் வளர் கழுத்தும் ஆர்ந்த – சிந்தா:12 2441/2,3
ஆரம் மின்ன அரும் குயம் தான் களைந்து – சிந்தா:12 2500/1
தழிய பெரிய தட மென் தோள் சலாகை மின்ன தாழ்ந்து இலங்கும் – சிந்தா:13 2696/3
பொற்ற தாமரையினாளின் பூம் சிகை முத்தம் மின்ன
கொற்றவன் தொழுது சேர்ந்தார் கொம்பு அனார் வாமன் கோயில் – சிந்தா:13 2738/2,3
துதை மணி கலாபம் மின்ன தொல் மலர் காமன் அம்பு – சிந்தா:13 2803/3
கடிகை வாள் ஆரம் மின்ன கற்பக காவு கண்டும் – சிந்தா:13 2808/1
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்ன
கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பக மாலை தாழ – சிந்தா:13 2836/2,3
குண்டலம் குலவி மின்ன பொன் அரி மாலை தாழ – சிந்தா:13 2837/1
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்ன
பொன் அரிய கிண்கிணியும் பூம் சிலம்பும் ஏங்க – சிந்தா:13 2921/2,3
முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய் கிடந்து மின்ன
மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும் – சிந்தா:13 2950/1,2
முலை உலாய் நிமிர்ந்த மொய் தார் முழவு முத்து உரிஞ்சி மின்ன
சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய் – சிந்தா:13 2976/2,3
குளித்து எழு வயிர முத்த தொத்து எரி கொண்டு மின்ன
அளித்து உலகு ஓம்பும் மாலை அகன் குடை கவித்தது ஆங்கு – சிந்தா:13 3086/1,2

TOP


மின்னா (1)

பெய் ஆர் முகிலில் பிறழ் பூம் கொடி மின்னின் மின்னா
நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரி மாலை சோர – சிந்தா:11 2342/1,2

TOP


மின்னாளோ (1)

எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ – சிந்தா:13 2957/4

TOP


மின்னி (9)

பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே – சிந்தா:1 32/3,4
கார் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில் – சிந்தா:2 444/3
விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கி கூற்றும் – சிந்தா:3 507/3
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்-மின் – சிந்தா:4 922/4
மன்னர் தம் வெகுளி வெம் தீ மணி முகில் காணம் மின்னி
பொன் மழை பொழியின் நந்தும் அன்று எனின் புகைந்து பொங்கி – சிந்தா:4 1117/1,2
விரி கதிர் ஆரம் மின்னி தார் எனும் திருவில் வீசி – சிந்தா:12 2476/1
மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம் – சிந்தா:13 2954/2
மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே – சிந்தா:13 3016/4
பார் கடல் பருகி மேகம் பாம்பு இனம் பதைப்ப மின்னி
வார் பிணி முரசின் ஆர்த்து மண் பக இடித்து வானம் – சிந்தா:13 3071/1,2

TOP


மின்னிடு (1)

வீடு கண்டவர் போன்று மின்னிடு கொடி அனையார் – சிந்தா:12 2379/4

TOP


மின்னில் (1)

விண்டலர் கண்ணி சிந்த மின்னில் சென்று எய்தினானே – சிந்தா:4 979/4

TOP


மின்னின் (24)

இருள்-இடை மின்னின் இலங்கு_இழை சென்றாள் – சிந்தா:1 338/4
இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னின்
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே – சிந்தா:3 551/3,4
மழை-இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் – சிந்தா:3 816/2
கையகப்படுத்தலோடும் கார் மழை மின்னின் நொய்தா – சிந்தா:4 983/1
மீளா மணிமேகலை மின்னின் மிளிர – சிந்தா:4 1074/2
மீளா துன்ப நீள் கடல் மின்னின் மிசை வீழ்ந்தாள் – சிந்தா:4 1093/4
வெம்பி வீதி ஓடினார் மின்னின் அன்ன நுண்மையார் – சிந்தா:4 1103/4
மிடை மின்னின் நிலத்தை சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான் – சிந்தா:5 1272/4
மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதக – சிந்தா:5 1408/1
வீழ் தரு மணி செய் மாலை இவற்றிடை மின்னின் நின்று – சிந்தா:6 1452/2
மின்னின் ஒத்து இறக்கும் செல்வம் வெயில் உறு பனியின் நீங்கும் – சிந்தா:6 1537/2
நுண் துகில் போர்வை சோர நுழை மழை மின்னின் நிற்ப – சிந்தா:7 1570/3
மின்னின் நடந்து மிகு சுரம் சென்றான் – சிந்தா:7 1612/4
பட்டம் நுதல் மின்னின் நகு பவித்திரைக்கு தோன்றி – சிந்தா:7 1791/2
நீர் மலி கடாத்த கொண்மூ நெற்றி மேல் மின்னின் நொய்தா – சிந்தா:7 1862/2
மின்னின் நீள் கடம்பின் நெடுவேள்-கொலோ – சிந்தா:8 1948/1
வீழ்ந்த பந்தின் மேல் விரைந்து மின்னின் நுண் நுசுப்பினாள் – சிந்தா:8 1958/1
மின்னின் நுண் நுசுப்பும் வெய்ய முலைகளும் முகமும் தோன்ற – சிந்தா:9 2100/2
விட்டு அழல் சிந்தி வெள் வேல் விசும்பின் வீழ் மின்னின் நொய்தா – சிந்தா:10 2291/1
பெய் ஆர் முகிலில் பிறழ் பூம் கொடி மின்னின் மின்னா – சிந்தா:11 2342/1
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி – சிந்தா:12 2438/3
முகில் கிழி மின்னின் நோக்கி முரிந்து இடை குழைந்து நின்றார் – சிந்தா:12 2540/4
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்ன – சிந்தா:13 2921/2
மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடும் கண் – சிந்தா:13 2961/2

TOP


மின்னினால் (1)

மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான் – சிந்தா:4 1114/1

TOP


மின்னு (36)

புடை அவிழ்ந்த கூந்தல் புலவு தோய பொழி மழையுள் மின்னு போல் புலம்பினாரே – சிந்தா:1 293/4
முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு
கொடி பல நுடங்கி ஆங்கு தோழியர் குழாத்துள் நிற்ப – சிந்தா:3 562/2,3
தேம் தாமம் செம் பவள தாமம் செம்பொன் எரி தாமம் மின்னு திரள் தாமங்கள் – சிந்தா:3 680/1
திரு நலம் மின்னு பொன் ஞாண் முகில் முலை மாரி தீம் பால் – சிந்தா:3 720/2
மேகத்து பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல் – சிந்தா:3 738/2
முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி – சிந்தா:3 796/2
தார் கெழு மின்னு வீசி தனி வடம் திளைக்கும் மார்பன் – சிந்தா:3 820/3
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார் – சிந்தா:3 839/2
மின்னு வாள் தடம் கண்ணியர் வெம் முலை – சிந்தா:4 867/1
வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர் – சிந்தா:4 882/1
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற – சிந்தா:4 882/2
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில் – சிந்தா:4 882/3
மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள் – சிந்தா:4 976/4
வில் இலங்க மின்னு கோட்ட வீணை விட்டு வெய்து உராய் – சிந்தா:4 1100/2
மா நீர் மணி முகிலின் மின்னு கொடி நுசுப்பின் மயில் அம் சாயல் – சிந்தா:5 1354/1
கார் கெழு மின்னு வென்ற நுடங்கு இடை கமழ் தண் கோதை – சிந்தா:5 1356/3
மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள் – சிந்தா:6 1457/2
மின்னு குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி – சிந்தா:7 1658/3
ஏர் மின்னு தாரான் அருள தொழுது ஏகினாரே – சிந்தா:7 1869/4
பொங்கு கதிர் மின்னு புகழ் கலங்கள் பல பரப்பி – சிந்தா:9 2025/2
வடி கணாள் நக்கு நாணி தோழியை மறைந்து மின்னு
கொடி குழாத்து-இடை ஓர் கோல குளிர் மணி கொம்பின் நின்றாள் – சிந்தா:9 2041/3,4
பொற்பு அமை தாம கந்து பொருந்திய மின்னு போல – சிந்தா:9 2073/1
மின்னு குழையினர் கோதையர் மின் உயர் – சிந்தா:10 2117/1
மழை மின்னு குழாத்தின் மாலை மங்கையர் மயங்கி நின்றார் – சிந்தா:10 2130/4
வட திசை எழுந்த மேகம் வலன் உராய் மின்னு சூடி – சிந்தா:10 2304/1
பொம்மல் ஓதியர் பொழி மின்னு கொடி என இழிந்தார் – சிந்தா:11 2364/4
போக நீக்கி பொருவில் திருவில் உமிழ்ந்து மின்னு பொழியும் – சிந்தா:12 2440/2
நாண் சுமக்கலாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவ – சிந்தா:12 2443/1
ஒழிந்த மின்னு கொடி ஒத்து ஒழிந்திட்டாள் – சிந்தா:12 2504/4
கார் வளர் மின்னு வீசும் குண்டலம் காய் பொன் ஓலை – சிந்தா:12 2536/1
மடத்தகை நாணி புல்லி மின்னு சேர் பருதி ஒத்தான் – சிந்தா:13 2666/4
மின்னு தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகி பெண்-பால் – சிந்தா:13 2880/2
மின் தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம் – சிந்தா:13 2919/4
விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து மின்னு தார் – சிந்தா:13 3007/1
காது அணிந்த தோடு ஒருபால் மின்னு வீச கதிர் மின்னு குழை ஒருபால் திருவில் வீச – சிந்தா:13 3136/1
காது அணிந்த தோடு ஒருபால் மின்னு வீச கதிர் மின்னு குழை ஒருபால் திருவில் வீச – சிந்தா:13 3136/1

TOP


மின்னும் (38)

வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை – சிந்தா:1 352/3
மின்னும் மிளிர் பூம் கொடியும் மென் மலரும் ஒப்பார் – சிந்தா:3 503/1
எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி – சிந்தா:3 625/1
திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை – சிந்தா:3 674/1
மின்னும் இரங்கும் மழை என்கோ யான் – சிந்தா:3 724/2
மின்னும் மழையின் மெலியும் அரிவை – சிந்தா:3 724/3
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 732/3,4
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
கறை வேல் உண்கண்ணினாய் காணார்-கொல் கேள்வர் – சிந்தா:3 733/3,4
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர் – சிந்தா:3 734/3,4
இட்ட உத்தரியம் மின்னும் எரி மணி பரு முத்து ஆரம் – சிந்தா:3 835/1
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே – சிந்தா:4 882/4
விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல – சிந்தா:4 969/3
ஆரம் மின்னும் பணை வெம் முலை ஆடு அமை தோளினாள் – சிந்தா:4 1148/1
இடியும் மின்னும் முழக்கும் இவற்றான் உலகம் நிறைந்து – சிந்தா:4 1157/1
குழல் எடுத்து யாத்து மட்டார் கோதையின் பொலிந்து மின்னும்
அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி – சிந்தா:5 1254/1,2
நெருக்கி தன் முலையின் மின்னும் நிழல் மணி வடத்தை மாதர் – சிந்தா:5 1259/2
சொரி கதிர் முத்தம் மின்னும் துணை முலை தடத்தில் வீழ்ந்தான் – சிந்தா:5 1352/3
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும்
நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக்கொண்டு எழுதி நல் பொன் – சிந்தா:6 1486/1,2
அம் கதிர் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான் – சிந்தா:7 1705/2
மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும் – சிந்தா:7 1716/1
மிகை செல் மேகத்து மின்னும் செம் நில்லலா – சிந்தா:7 1816/3
பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணி கடம் ஆர்ந்த – சிந்தா:8 1910/2
குலாய் தலை கிடந்து மின்னும் குவி முலை பாய வெய்தாய் – சிந்தா:8 1950/3
பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும்
தூசு உலாம் அல்குல் தீண்ட துயில் கண்கள் விழித்த தோற்றம் – சிந்தா:8 1987/1,2
வண்ணக்கு வானும் நிலனும் எல்லாம் விலையே மழை மின்னும் நுசுப்பினாளை – சிந்தா:9 2066/2
மின்னும் மணி பூண் விரை மார்ப நனைப்ப நின்றான் – சிந்தா:10 2136/4
மங்குல் இடை மின்னும் மதியும் சுடரும் போல – சிந்தா:10 2166/3
மின்னும் கொடி தேர் விசயமும் புரவி பவன வேகமும் – சிந்தா:10 2175/2
மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை உழுது சாந்தம் – சிந்தா:10 2294/2
மின்னும் கடல் திரையின் மா மணி கை வெண் கவரி விரிந்து வீச – சிந்தா:11 2369/1
இடை செறி குறங்கு கௌவி கிம்புரி இளக மின்னும்
புடை சிறு பரடு புல்லி கிண்கிணி சிலம்போடு ஆர்ப்ப – சிந்தா:12 2445/1,2
மின்னும் மணி குடத்தின் வேந்தர் ஏந்த புனல் ஆடி – சிந்தா:12 2501/3
மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார் – சிந்தா:13 2662/4
கொய் பூ மாலை குழல் மின்னும் கொழும் பொன் தோடும் குண்டலமும் – சிந்தா:13 2706/2
முடி தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம் – சிந்தா:13 2709/1
மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும் – சிந்தா:13 2754/3
மன்றல் வீற்று இருந்து மின்னும் மணி குவடு அனைய தோளான் – சிந்தா:13 2903/3
முழுது ஆரம் மின்னும் முலை குவட்டினால் மொய் மார்பில் குங்கும சேறு இழுக்கி வீழ – சிந்தா:13 3137/1

TOP


மின்னுவிட்டு (1)

மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட்டு இலங்கு பைம் பூண் – சிந்தா:6 1505/2

TOP


மின்னே (1)

வண் காரிருள் மின்னே உமிழ் நெய் வாயது ஓர் அயில் வாள் – சிந்தா:10 2260/3

TOP


மின்னை (1)

மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா – சிந்தா:3 708/2

TOP


மின்னொடு (3)

நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர் – சிந்தா:1 320/1
பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து – சிந்தா:7 1605/3
பூண் இடை நிலவும் மேனி மின்னொடு பொலிந்த தேவர் – சிந்தா:13 2802/3

TOP


மின்னோடு (1)

மின்னோடு அவை சுழன்று ஆயிடை விளையாடுகின்றன போல் – சிந்தா:10 2264/2

TOP


மின (1)

உறை கொள் வாளினோடு ஒண் சுடர் வேல் மின
சிறை அழிந்தது ஓர் செம் புனல் போன்று அவண் – சிந்தா:7 1776/2,3

TOP


மினின் (5)

கொடி உடை மழை மினின் குலவியது ஒருபால் – சிந்தா:1 119/4
மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப – சிந்தா:3 740/2
மழை-இடை குளித்திட்டது ஓர் வாள் மினின்
தழை-இடை குளித்தான் தகை வேலினான் – சிந்தா:5 1335/1,2
கல் என் ஆர்ப்பு ஒலி மிக்கு ஒளிர் வாள் மினின்
செல்லும் மா கடல் போன்றது சேனையே – சிந்தா:10 2169/3,4
மழை மினின் நீக்கி இட்டு வன்கண்ணர் ஆபர் அன்றே – சிந்தா:10 2301/4

TOP