கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பீடம் 1
பீடிகை 1
பீடின் 1
பீடினால் 2
பீடு 8
பீடுசால் 1
பீர் 2
பீலி 6
பீழை 1
பீழைதான் 1
பீளை 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பீடம் (1)
தேன் விளையாடும் மாலை அணிந்து பொன் பீடம் சேர்த்தி – சிந்தா:12 2574/3
பீடிகை (1)
கிடுகு உடை காப்பின கிளர் பொன் பீடிகை
அடி தொடைக்கு அமைந்தன அரவ தேர் தொகை – சிந்தா:10 2213/2,3
பீடின் (1)
பெண் வலை படாதவர் பீடின் ஓங்கிய – சிந்தா:1 78/3
பீடினால் (2)
பெரும் பெயர் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான் – சிந்தா:1 207/1
பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காம – சிந்தா:3 688/1
பீடு (8)
பீடு உடையவரும் உட்க பிணம் பல பிறங்கி எங்கும் – சிந்தா:1 300/2
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை – சிந்தா:1 331/2
பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல் – சிந்தா:5 1229/2
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன் – சிந்தா:5 1348/2
பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையார் இல்லை என்றாள் – சிந்தா:5 1388/4
பீடு இலா பிறவிக்கு வித்து என்பவே – சிந்தா:6 1427/4
பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா – சிந்தா:7 1597/1
பீடு ஆர் பெரும் சிறுவர் பயந்தீர் வம்-மின் என புல்லி – சிந்தா:13 2605/2
பீடுசால் (1)
ஊற்று இருந்த மு மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே – சிந்தா:1 152/3,4
பீர் (2)
தேர் செல செல்லும் வீதி பீர் செல செல்லும் அன்றே – சிந்தா:2 469/4
பீர் தங்கி பெய்யா மலரின் பிறிது ஆயினாளே – சிந்தா:8 1960/4
பீலி (6)
பீலி நல் மா மயிலும் பிறிது ஆக்கிய – சிந்தா:1 236/1
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார் – சிந்தா:3 839/2
பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி – சிந்தா:4 919/2
கதிர்த்த தண் பூணி கம்புள் தாழ் பீலி கனை குரல் நாரை வண்டானம் – சிந்தா:10 2108/3
பீலி மா மயில் எருத்து என பெரு வனப்பு உடைய – சிந்தா:10 2161/1
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும் – சிந்தா:10 2222/3
பீழை (1)
பீழை செய்து பெற்றனன் வாழி என்று மா கடல் – சிந்தா:3 580/1
பீழைதான் (1)
பீழைதான் பொறுக்க என்ன பிறங்கிணர் அலங்கல் மாலை – சிந்தா:4 1120/2
பீளை (1)
விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் உமிழ் கண் பீளை
புழு பயில் குரம்பை பொல்லா தடி தடி கீழ்ந்த-போழ்தில் – சிந்தா:7 1584/1,2