Select Page

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தைத்த (1)

விடம் தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு அவன் மெய்ம்மகிழ்ந்தான் – சிந்தா:4 1061/2

TOP


தையல் (4)

சாந்து கொண்டு இள முலை எழுதி தையல் தன் – சிந்தா:8 1992/2
தாள் இரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார் – சிந்தா:9 1995/4
தன் இரு கையும் கூப்பி தையல் ஈது உரைக்கும் அன்றே – சிந்தா:9 2056/4
சார்ந்த சாயல் தட மா முலை தையல் வல்லே வருக என்றான் – சிந்தா:12 2585/3

TOP


தையலாட்கும் (1)

தங்கு தாம மார்பினாற்கும் தையலாட்கும் கொண்டு ஏந்தினாரே – சிந்தா:12 2592/4

TOP


தையலாய் (2)

தையலாய் சமழாது உரை என்றதே – சிந்தா:4 1000/4
தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள் – சிந்தா:13 2632/4

TOP


தையலார் (6)

சந்தன நீரோடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியில் சிதற பார் மிசை – சிந்தா:1 86/2,3
தாழி வாய் குவளை வாள் கண் தையலார் பரவ சார்ந்தார் – சிந்தா:3 833/4
தம் களி செய்ய கூட்டி தையலார் கைசெய்தாரே – சிந்தா:12 2473/4
தானக மாடம் ஏறி தையலார் ததும்ப பாய்வார் – சிந்தா:13 2658/1
தங்கிய கேள்வியாற்கு தையலார் சேர்த்தினாரே – சிந்தா:13 2856/4
தாம வார் குழல் தையலார் முலை – சிந்தா:13 3122/3

TOP


தையலாள் (2)

தையலாள் நெடும் தடம் கண் வலைப்பட்டு சச்சந்தன் – சிந்தா:1 181/2
தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி-தானே – சிந்தா:7 1567/2

TOP


தையலீர் (1)

தான் நிறம் கரக்கும் காலம் தையலீர் மெய்யது அன்றே – சிந்தா:13 2940/4

TOP


தையலுக்கு (1)

தன் உடை மதி சுட தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான் – சிந்தா:1 326/3,4

TOP


தையலும் (2)

தன் அமர் காதலானும் தையலும் மணந்த-போழ்தில் – சிந்தா:1 190/1
தாம மார்பனும் தையலும் மெய் உணர்வு – சிந்தா:12 2505/1

TOP


தையலை (1)

தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான் – சிந்தா:3 745/4

TOP


தையலோடு (2)

தடம் கண்கள் குவளை பூப்ப தையலோடு ஆடும் அன்றே – சிந்தா:3 839/4
தாழ்கின்ற தாம மார்பன் தையலோடு ஆடி விள்ளான் – சிந்தா:9 2089/3

TOP


தையா (1)

கோடு தையா குழிசியோடு ஆரம் கொள குயிற்றிய – சிந்தா:7 1650/1

TOP


தைவந்தான் (1)

தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான் – சிந்தா:5 1294/4

TOP


தைவந்திட்டாள் (1)

மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதி முகம் தைவந்திட்டாள்
நீண்டது பெரிதும் அன்றி நினைத்துழி விளக்கிற்று அன்றே – சிந்தா:7 1709/3,4

TOP


தைவந்து (3)

வேல் தைவந்து அன்ன நுதி வெம் பரல் கானம் முன்னி – சிந்தா:8 1933/1
குங்குமம் குயின்ற கும்மை குவி முலை குளிர்ப்ப தைவந்து
அம் கலுள் மேனி அல்குல் காசு உடன் திருத்தி அம் பொன் – சிந்தா:9 2064/1,2
உடுத்த பொன் கலாபம் தைவந்து ஒளி வளை திருத்தினானே – சிந்தா:9 2091/4

TOP


தைவர (6)

இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின் – சிந்தா:1 48/1,2
நெடும் கொடி நிழல் மதி நெற்றி தைவர
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின் – சிந்தா:1 88/1,2
கையினால் அடி தைவர கண் மலர்ந்து – சிந்தா:1 345/2
தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து வெம் முலைகள் தைவர
போழ்ந்து அகன்ற கண்ணி வந்து பூம் கொடியின் நோக்கினாள் – சிந்தா:8 1958/3,4
மண் கொண்ட வேலான் அடி தைவர வைகினானே – சிந்தா:11 2353/4
பொன் அணிந்து பூஞ்சுண்ணம் தைவர
நல் மணி குழை இரண்டும் நக்கவே – சிந்தா:13 3127/3,4

TOP


தைவரும் (1)

முகிழ்ந்து வீங்கு இள முலை முத்தம் தைவரும்
புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே – சிந்தா:4 1004/3,4

TOP


தைவருவாய் (1)

தலை வைத்து நிலத்து அடி தைவருவாய்
சிலை வித்தகனே தெருளேன் அருளாய் – சிந்தா:6 1514/2,3

TOP