கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாட்பில் 1
ஞாட்பின் 1
ஞாட்பினுள் 4
ஞாண் 7
ஞாயில் 2
ஞாயிற்று 2
ஞாயிறு 2
ஞாயிறும் 1
ஞாலத்தார் 1
ஞாலத்து 1
ஞாலம் 14
ஞாழலும் 1
ஞான்றன 1
ஞான்றால் 1
ஞான்று 2
ஞான்றே 8
ஞான 3
ஞானத்து 1
ஞானம் 4
ஞானமாய் 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஞாட்பில் (1)
நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில்
வேற்கு இடம் கொடுத்த மார்பின் வில் வலான் தோழர் மக்கள் – சிந்தா:13 2916/1,2
ஞாட்பின் (1)
எண் கொண்ட ஞாட்பின் இரும்பு எச்சில்படுத்த மார்பர் – சிந்தா:11 2353/1
ஞாட்பினுள் (4)
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற – சிந்தா:4 1133/3
மற்று அவர் மண்டிய வாள் அமர் ஞாட்பினுள்
உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன் – சிந்தா:10 2210/3,4
பறந்து இயல் தருக்கின பரவை ஞாட்பினுள்
கறங்கு என திரிவன கவரி நெற்றிய – சிந்தா:10 2215/1,2
மொய் அமர் ஞாட்பினுள் முரண் கொள் மன்னவர் – சிந்தா:13 2819/1
ஞாண் (7)
திரு நலம் மின்னு பொன் ஞாண் முகில் முலை மாரி தீம் பால் – சிந்தா:3 720/2
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல் – சிந்தா:3 797/2,3
ஒள் அழல் கொள்ளி வட்டம் போல் குலாய் சுழல பொன் ஞாண்
ஒள் அழல் நேமி நக்க மண்டலம் ஆக நின்றான் – சிந்தா:10 2203/2,3
பஞ்சி மேல் கிடந்து உடை ஞாண் பதைத்து இலங்க கிடந்தாரை – சிந்தா:10 2240/3
ஏர் பட கிடந்த பொன் ஞாண் இருள் கெட விழிப்ப வெய்ய – சிந்தா:10 2280/3
பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கி – சிந்தா:12 2443/2
காய்ந்த வாள் கலப்ப தேய்த்து பூ நிறீஇ காமர் பொன் ஞாண்
தோய்ந்த தன் குறங்கில் வைத்து துகிலினில் துடைத்து தூய்தா – சிந்தா:12 2496/2,3
ஞாயில் (2)
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடி கூந்தல் – சிந்தா:1 105/3
ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர் – சிந்தா:4 949/1
ஞாயிற்று (2)
கொங்கு விம்மு குளிர் பிண்டி குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப – சிந்தா:13 2812/1
ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே – சிந்தா:13 3004/4
ஞாயிறு (2)
எங்கு எழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம் – சிந்தா:7 1793/4
செம்பொன் புளகத்து இள ஞாயிறு செற்ற கோயில் – சிந்தா:7 1867/1
ஞாயிறும் (1)
அணியும் ஆய் அலர் ஞாயிறும் ஆயினான் – சிந்தா:13 3064/4
ஞாலத்தார் (1)
ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே – சிந்தா:10 2284/4
ஞாலத்து (1)
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இரும் கண் ஞாலத்து இருள் பருகி – சிந்தா:1 313/2
ஞாலம் (14)
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு என கமழும் கண்ணி – சிந்தா:1 202/3
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது – சிந்தா:1 236/3
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல் – சிந்தா:1 251/2
மற்று இ ஞாலம் உடையாய் நீ வளரும் ஆறும் அறியேனால் – சிந்தா:1 310/3
ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண் – சிந்தா:4 896/3
பொன் ஆர் கொடியே புகழின் புகழ் ஞாலம்
நின் வாள் நெடும் கண் விலை ஆகும் நிகர்த்தே – சிந்தா:4 1073/3,4
ஞாலம் விற்பன பைங்கிளி நல் நிறத்து – சிந்தா:7 1774/1
ஞாலம் அறி ஆண் தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார் – சிந்தா:10 2165/3
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே – சிந்தா:13 2907/4
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான் – சிந்தா:13 2908/4
ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் நறவு உண்ணா – சிந்தா:13 2928/3
நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம் – சிந்தா:13 2983/1
வேற்றுவர் என்று நில்லா விழு பொருள் பரவை ஞாலம்
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்-மின் நீரும் என்றான் – சிந்தா:13 2986/3,4
ஞாலம் முற்றிய பொன் வரை நன்று-அரோ – சிந்தா:13 3003/3
ஞாழலும் (1)
பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து – சிந்தா:3 515/1
ஞான்றன (1)
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை – சிந்தா:1 140/2
ஞான்றால் (1)
இனையன பட்ட ஞான்றால் இறையவர்கள் நினைப்பது என்றே – சிந்தா:10 2279/3
ஞான்று (2)
கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால் – சிந்தா:7 1630/2
கறந்து கூற்று உண்ணும் ஞான்று கண் புதைத்து இரங்கின் அல்லால் – சிந்தா:13 2616/3
ஞான்றே (8)
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான் – சிந்தா:1 233/3,4
கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறி – சிந்தா:2 476/1
பண்ணகத்து இனிய சொல்லாள் பாவையை பயந்த ஞான்றே
எண் இடம் இன்றி மன்னர் இ மலை இறைகொண்டு ஈண்டி – சிந்தா:3 538/2,3
வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர்-தம் முடியில் கொண்ட – சிந்தா:3 614/1
ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி – சிந்தா:3 785/1
மாசு இலாள் பிறந்த ஞான்றே மதி வலான் விதியின் எண்ணி – சிந்தா:6 1451/1
எங்கள் வினையால் இறைவன் வீடிய அ ஞான்றே
எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக – சிந்தா:7 1793/1,2
சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரை செகுத்த நம்பி – சிந்தா:12 2554/3
ஞான (3)
காட்சி நல் நிலையில் ஞான கதிர் மணி கதவு சேர்த்தி – சிந்தா:1 381/1
அலகை இலா குண கடலை அகல் ஞான வரம்பானை – சிந்தா:13 3023/3
விளிவரும்-குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான் – சிந்தா:13 3070/4
ஞானத்து (1)
கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான் – சிந்தா:3 716/4
ஞானம் (4)
குழை முக ஞானம் என்னும் குமரியை புணர்க்கல் உற்றார் – சிந்தா:1 368/4
மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மை – சிந்தா:6 1436/1
உள் பொருள் இது என உணர்தல் ஞானம் ஆம் – சிந்தா:13 2845/1
ஒளிறு தேர் ஞானம் பாய்மா இன் உயிர் ஓம்பல் ஓடை – சிந்தா:13 3074/1
ஞானமாய் (1)
தூய ஞானமாய் துறக்கம் எய்தினார் – சிந்தா:13 3121/4