கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிடக்க 1
கிடக்கல் 1
கிடக்கை 1
கிடங்கில் 1
கிடங்கின் 1
கிடங்கு 11
கிடத்தப்பட்டார் 1
கிடத்தியால் 1
கிடத்தியோ 1
கிடந்த 37
கிடந்தது 4
கிடந்ததே 2
கிடந்தவாறே 1
கிடந்தவை 1
கிடந்தன 3
கிடந்தனரே 1
கிடந்தார் 1
கிடந்தாரை 1
கிடந்தாலும் 1
கிடந்தாளை 1
கிடந்தான் 1
கிடந்தானை 1
கிடந்து 20
கிடப்ப 5
கிடப்பர் 1
கிடப்பவால் 1
கிடுகின் 1
கிடுகு 3
கிடுகொடு 1
கிடை 6
கிடையவர் 1
கிண்கிணி 36
கிண்கிணியாள் 1
கிண்கிணியினார் 1
கிண்கிணியும் 9
கிண்ணத்து 1
கிண்ணம் 1
கிணினென 1
கிணை 1
கிம்புரி 3
கிரி 1
கிருமி 1
கிலுத்தம் 3
கிழங்கினோடும் 1
கிழங்கு 5
கிழங்கும் 1
கிழத்தி 1
கிழத்தி-தன்னை 1
கிழமை 11
கிழமையும் 1
கிழவன் 8
கிழவனாய் 1
கிழவுதான் 1
கிழி 9
கிழிக்கும் 1
கிழித்த 1
கிழித்து 5
கிழிந்த 3
கிழிந்து 4
கிழிப்ப 1
கிழிய 3
கிழியின் 1
கிழியும் 1
கிள்ளி 3
கிள்ளை 3
கிள்ளையோடு 1
கிளக்கல் 3
கிளந்த 2
கிளந்து 2
கிளர் 44
கிளர்ந்தது 1
கிளர்ந்தவை 1
கிளர்ந்து 4
கிளர்வுற்றதே 1
கிளவி 13
கிளவி-தன் 1
கிளவிக்கு 1
கிளவியார் 4
கிளவியார்-தம் 2
கிளவியாரும் 1
கிளவியால் 1
கிளவியாள் 1
கிளவியின் 1
கிளவியோடும் 1
கிளி 21
கிளியால் 1
கிளியும் 4
கிளியே 3
கிளியை 1
கிளியோடு 1
கிளை 13
கிளைக்கு 2
கிளைகள் 1
கிளைத்திட்டேமே 1
கிளைநரில் 1
கிளையவர் 1
கிளையின் 2
கிளையை 1
கிளையொடும் 1
கின்னரம் 1
கின்னரர் 2
கின்னரும் 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கிடக்க (1)
கீற்று பட்டு அழகிதாக கிடக்க என கொடுத்து நிற்பார் – சிந்தா:3 782/4
கிடக்கல் (1)
பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார் – சிந்தா:3 772/4
கிடக்கை (1)
இலக்கண கிடக்கை கண்டே ஏவினுக்கு அரசன் என்றான் – சிந்தா:7 1645/4
கிடங்கில் (1)
குரை மது குவளைகள் கிடங்கில் பூத்தவும் – சிந்தா:1 99/3
கிடங்கின் (1)
புள் அணி கிடங்கின் விச்சாலோக மாநகரில் போகா – சிந்தா:3 546/3
கிடங்கு (11)
கொங்கு அலர் தாமரை கிடங்கு கூறுவாம் – சிந்தா:1 94/4
மோட்டு இறா பனி கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து – சிந்தா:1 95/3
வயிர கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே – சிந்தா:1 105/4
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுற தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே – சிந்தா:1 142/3,4
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர் – சிந்தா:2 427/3
கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூம் கொடி – சிந்தா:3 529/1
நான கிடங்கு ஆடை நகர் நாகத்து-இடை நன் பொன் – சிந்தா:3 590/1
பன் மலர் கிடங்கு சூழ் பசும்பொன் பாம்புரி – சிந்தா:5 1250/2
கொண்ட பூம் கிடங்கு அணி நகரம் கூறுவாம் – சிந்தா:6 1443/4
அகழ் கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்புரி – சிந்தா:6 1444/1
மல்லன் மா கடல் அன்ன கிடங்கு அணிந்து – சிந்தா:13 3006/1
கிடத்தப்பட்டார் (1)
நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார்
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார் – சிந்தா:3 818/1,2
கிடத்தியால் (1)
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தாமணியே கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ – சிந்தா:1 311/3,4
கிடத்தியோ (1)
கொல் வினை மாக்கள் சூழ கிடத்தியோ என்று விம்மா – சிந்தா:1 319/2
கிடந்த (37)
இந்திரவில் என கிடந்த வீதியே – சிந்தா:1 86/4
பரப்புபு கிடந்து என கிடந்த நம்பியை – சிந்தா:1 322/3
கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப – சிந்தா:3 547/3
தூசு உலாய் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செ வாய் – சிந்தா:3 550/1
இரும் கயம் துறந்து திங்கள் இடம் கொண்டு கிடந்த நீலம் – சிந்தா:3 626/2
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல் – சிந்தா:3 669/2
கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான் – சிந்தா:3 716/4
நீல துகிலில் கிடந்த நிழல் ஆர் தழல் அம் மணிகள் – சிந்தா:4 931/1
நூல் புடைத்தால் போல் கிடந்த வித்தகம் சேர் நுண் வரிகள் – சிந்தா:4 1044/1
வந்ததால் நாளை என்றாள் வடு என கிடந்த கண்ணாள் – சிந்தா:4 1050/4
பட்டு உலாய் கிடந்த செம்பொன் கலை அணி பரவை அல்குல் – சிந்தா:4 1145/3
வெண் தலை புணரி வீசி கிடந்த பொன் தீவிற்று ஆகி – சிந்தா:5 1184/2
மாதரார் மனம் என கிடந்த செந்நெறி – சிந்தா:5 1208/3
போது என கிடந்த வாள் கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது – சிந்தா:5 1262/1
சிறகுற பரப்பி மஞ்ஞை செருக்குபு கிடந்த போன்றும் – சிந்தா:5 1283/2
வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல் – சிந்தா:6 1442/2
பெண் நலம் கிடந்த பேதை பெண் நலம் கனிய நின்றாள் – சிந்தா:7 1571/4
கன்னி கலிங்கம் அகில் ஆர்ந்து கவவி கிடந்த குறங்கினாள் – சிந்தா:7 1658/2
பொறி குலாய் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல் – சிந்தா:7 1706/1
வெறி குலாய் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி – சிந்தா:7 1706/2
காமன் தம்பியின் காளை கிடந்த பின் – சிந்தா:7 1715/2
தாமரை தட கை கூப்பி தாள் முதல் கிடந்த தம்பி – சிந்தா:7 1725/1
கழல் அவாய் கிடந்த நோன் தாள் காளை தன் காதலாரை – சிந்தா:7 1865/1
அழல் அவாய் கிடந்த வை வேல் அரசிளங்குமரர் சூழ – சிந்தா:7 1865/3
குழல் அவாய் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான் – சிந்தா:7 1865/4
வாசம் கொண்டு இலங்கும் முந்நூல் வலம்பட கிடந்த மார்ப – சிந்தா:9 2002/2
மா மலர் தெரியலான் மணி மிதற்று-இடை கிடந்த
சாம கீதம் மற்றும் ஒன்று சாமி நன்கு பாடினான் – சிந்தா:9 2038/3,4
பட்டு உலாய் கிடந்த செம்பொன் பவளமோடு இமைக்கும் அல்குல் – சிந்தா:9 2047/1
நடந்து ஒழுகு குருதியுள் நகா கிடந்த எரி மணி பூண் – சிந்தா:10 2244/3
ஏர் பட கிடந்த பொன் ஞாண் இருள் கெட விழிப்ப வெய்ய – சிந்தா:10 2280/3
அப்பு அணை கிடந்த மைந்தன் அரு மணி திருவில் வீசும் – சிந்தா:10 2287/2
சிங்க ஏறுகள் கிடந்த போல் சிறுவர் தேர் மிசை துஞ்சினார் – சிந்தா:10 2309/4
திருக்குலாய் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம் – சிந்தா:12 2459/3
நாண் குலாய் கிடந்த நங்கை நகை முக அமுதம் ஈந்தாள் – சிந்தா:12 2515/3
பூண் குலாய் கிடந்த மார்பின் பொன் நெடும் குன்று அனாற்கே – சிந்தா:12 2515/4
வேட்டவர் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே – சிந்தா:13 2972/4
கொல் உலை பொங்கு அழல் கிடந்த கூர் இலை – சிந்தா:13 2982/1
கிடந்தது (4)
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து – சிந்தா:1 344/2
எனக்கு உற்று கிடந்தது என்று ஆங்கு இரு கணும் புதைத்து வைக்கும் – சிந்தா:7 1578/2
நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி – சிந்தா:7 1720/2
விழு மணி மாசு மூழ்கி கிடந்தது இ உலகம் விற்ப – சிந்தா:8 1890/1
கிடந்ததே (2)
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி – சிந்தா:1 387/2
ஏழ் தரு பருதி-தன் மேல் இளம் பிறை கிடந்ததே போல் – சிந்தா:4 1155/2
கிடந்தவாறே (1)
நூல் இடை கிடந்தவாறே நுனித்தவன் கொடுப்ப கொண்டார் – சிந்தா:7 1677/4
கிடந்தவை (1)
ஏற்று இளம் சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார் – சிந்தா:10 2267/4
கிடந்தன (3)
மண் மிசை கிடந்தன மலையும் கானமும் – சிந்தா:5 1175/1
கோல நீள் கொழும் குருதி கொள வீழ்ந்து கிடந்தன
மேலை நீள் விசும்பு உறையும் வெண் மதியம் விசும்பு இழுக்கி – சிந்தா:10 2238/2,3
காமவல்லி கிடந்தன போன்றவே – சிந்தா:13 2855/4
கிடந்தனரே (1)
வீ ததைந்த வரை மார்பர் விஞ்சையர் போல் கிடந்தனரே – சிந்தா:10 2241/4
கிடந்தார் (1)
சாவா கிடந்தார் செவி சார்த்தின் அப்பொழுதே – சிந்தா:13 3036/3
கிடந்தாரை (1)
பஞ்சி மேல் கிடந்து உடை ஞாண் பதைத்து இலங்க கிடந்தாரை
அஞ்சி போந்து இன நரியோடு ஓரி நின்று அலறுமே – சிந்தா:10 2240/3,4
கிடந்தாலும் (1)
உரைத்து மின் இருள் மேல் கிடந்தாலும் ஒத்து – சிந்தா:7 1603/3
கிடந்தாளை (1)
வீழ்ந்து மயில் போல் விசயை கிடந்தாளை
தாழ்ந்து பல தட்பம் தாம் செய்ய ஏல் பெற்று – சிந்தா:7 1810/1,2
கிடந்தான் (1)
கூம்பு இற்ற துண்டம் தழுவி கிடந்தான் கொழித்து – சிந்தா:3 513/3
கிடந்தானை (1)
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான் – சிந்தா:1 294/1
கிடந்து (20)
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான் – சிந்தா:1 294/1
பரப்புபு கிடந்து என கிடந்த நம்பியை – சிந்தா:1 322/3
வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின் – சிந்தா:3 502/3
இன் நீர் எரி மா மணி பூண் கிடந்து ஈன்ற – சிந்தா:4 1073/1
கறவை கன்று இழந்த போன்றும் கிடந்து அழுகின்ற கண்ணார் – சிந்தா:5 1283/3
தூங்கு உறி கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா – சிந்தா:6 1429/1
நிலம் தின கிடந்து அன நிதி அ நீள் நகர் – சிந்தா:6 1471/1
திங்கள் அம் குளவி செ வான்-இடை கிடந்து இமைப்பதே போல் – சிந்தா:6 1501/1
கயலால் இவை என்று கவிழ்ந்து கிடந்து
அயலேன் அறியாமை உரைத்தது எலாம் – சிந்தா:6 1521/1,2
பொருப்பு எலாம் பொன் கிடந்து ஒழுகி மேல் திருவில் வீழ்ந்து – சிந்தா:8 1903/2
குலாய் தலை கிடந்து மின்னும் குவி முலை பாய வெய்தாய் – சிந்தா:8 1950/3
கெண்டையும் சிலையும் திங்கள் இளமையும் கிடந்து தேன் கொள் – சிந்தா:9 2076/1
பஞ்சி மேல் கிடந்து உடை ஞாண் பதைத்து இலங்க கிடந்தாரை – சிந்தா:10 2240/3
அவா கிடந்து அகன்ற அல்குல் அணி கிளர் திருவில் பூப்ப – சிந்தா:12 2444/1
கவாய் கிடந்து அணங்கு நாறும் கண் கொளா பட்டு உடுத்தாள் – சிந்தா:12 2444/3
விழுங்கு மேகம் விடாது தழீஇ கிடந்து
ஒழிந்த மின்னு கொடி ஒத்து ஒழிந்திட்டாள் – சிந்தா:12 2504/3,4
மதம் கமழ் கோதை அல்குல் மனா கிடந்து இமைத்து காம – சிந்தா:12 2584/2
கடித்து கிடந்து கவின் வளரும் காய் பொன் மகரம் கதிர் முலை மேல் – சிந்தா:13 2695/2
இடை கிடந்து எவ்வளவு இரும்பு காய்ந்ததுவே – சிந்தா:13 2830/4
முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய் கிடந்து மின்ன – சிந்தா:13 2950/1
கிடப்ப (5)
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின் – சிந்தா:4 923/4
வில் உறை புருவம் மாதர் வெந்தனள் கிடப்ப மின் தோய் – சிந்தா:6 1527/3
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும் – சிந்தா:7 1589/2
சிற்றடி போது புல்லி திருமகன் கிடப்ப சேந்து – சிந்தா:12 2508/2
கிடப்ப மற்று அரசன் நோக்கி கெட்டது உன் துகில் மற்று என்ன – சிந்தா:13 2666/3
கிடப்பர் (1)
வந்து உடைந்து உருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய் – சிந்தா:13 2765/3
கிடப்பவால் (1)
எட்டு எலா திசையும் சிந்தி கிடப்பவால் அடக்கம் இல்லார் – சிந்தா:13 2764/4
கிடுகின் (1)
கணி புனை பவழ திண் காழ் கம்பல கிடுகின் ஊன்றி – சிந்தா:1 113/2
கிடுகு (3)
செல்வ பொன் கிடுகு சூழ்ந்த சித்திரக்கூடம் எங்கும் – சிந்தா:10 2139/2
கிடுகு உடை காப்பின கிளர் பொன் பீடிகை – சிந்தா:10 2213/2
பெரும் கிடுகு என்னும் கோல பேர் இமை பொருந்தி மெல்ல – சிந்தா:13 2975/2
கிடுகொடு (1)
வயிர் மயிர் கிடுகொடு வள்ளி தண்டையும் – சிந்தா:10 2218/2
கிடை (6)
கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள் – சிந்தா:3 731/4
விதி கிடை காணலாம் வீதி மா நகர் – சிந்தா:9 1999/3
மதி கிடை முகத்தியோர் மடந்தை ஈண்டையாள் – சிந்தா:9 1999/4
கிடை ஆயினன் இவனே என கிளர் ஆண் அழகு உடையான் – சிந்தா:10 2263/4
கிடை இலா இன்பமும் கிளந்த அல்லவும் – சிந்தா:13 2847/2
தம் கிடை இலா திரு கேசம் தன்னையும் – சிந்தா:13 3033/1
கிடையவர் (1)
எம் கிடையவர் இனி எங்கு செல்பவே – சிந்தா:13 3033/4
கிண்கிணி (36)
தவளை கிண்கிணி தாமரை சீறடி – சிந்தா:1 243/1
சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:1 317/1
திருவ மேகலை தெள் அரி கிண்கிணி
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா – சிந்தா:3 530/1,2
தாம் பலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாக – சிந்தா:3 561/2
தெள் நிற சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி – சிந்தா:3 624/3
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார் – சிந்தா:3 637/4
கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து – சிந்தா:3 655/2,3
பரி அகம் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி – சிந்தா:3 674/3
செம் கதிர் சிலம்பு செம்பொன் கிண்கிணி சிலம்ப கோதை – சிந்தா:3 677/1
கெட்டு உலாய் சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் கோங்க – சிந்தா:3 772/2
இலங்கு பொன் கிண்கிணி இரங்கும் ஓசையும் – சிந்தா:3 832/1
செம் தளிர் கோதை சோர கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:3 840/2
மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி
ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர் – சிந்தா:4 1014/1,2
பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இடவே – சிந்தா:4 1067/4
பாடல் வண்டு யாழ் செயும் பசும்பொன் கிண்கிணி
தோடு அலர் கோதை மின் துளும்பும் மேகலை – சிந்தா:5 1207/1,2
நல் மணி சிலம்பினோடு கிண்கிணி நக நகும் – சிந்தா:8 1957/1
இன் அரி சிலம்பொடு ஏங்கி கிண்கிணி இகலி ஆர்ப்ப – சிந்தா:8 1985/1
சில் அரி கிண்கிணி சிலம்பும் சீறடி – சிந்தா:9 2008/1
சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப – சிந்தா:9 2019/1
செல்க என சிலம்பு செம்பொன் கிண்கிணி மிழற்ற ஒல்கி – சிந்தா:9 2068/3
பரியகம் சிலம்பு பைம்பொன் கிண்கிணி ஆர்ந்த பாதத்து – சிந்தா:9 2079/1
அதிர் அரி கிண்கிணி ஆர்க்கும் ஒருபால் – சிந்தா:10 2115/4
அரி பொன் கிண்கிணி அணி கிளர் சிலம்பொடு சிலம்பும் – சிந்தா:12 2385/1
ஆடல் மங்கையர் கிண்கிணி ஆர்ப்பு ஒலி – சிந்தா:12 2399/1
கடி மலர் மங்கையர் காய் பொன் கிண்கிணி
உடை மணி பொன் சிலம்பு ஒலிக்கும் கோயிலுள் – சிந்தா:12 2407/1,2
புடை சிறு பரடு புல்லி கிண்கிணி சிலம்போடு ஆர்ப்ப – சிந்தா:12 2445/2
கா-மினம் என கலை சிலம்பு கிண்கிணி
தாம் மனும் வாயினால் சாற்றுகின்றவே – சிந்தா:12 2451/3,4
தத்து நீர் தவளை குரல் கிண்கிணி
உய்த்து ஓர் பூசல் உடன் இட்டன அன்றே – சிந்தா:12 2481/3,4
வெள்ளைமை கலந்த நோக்கின் கிண்கிணி மிழற்றி ஆர்ப்ப – சிந்தா:12 2529/1
இரங்கு தீம் குழலும் ஏங்க கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப – சிந்தா:12 2596/2
செரு குரல் சிறுபறை சிலம்பு கிண்கிணி
அரி பறை மேகலை ஆகி ஆர்த்தவே – சிந்தா:13 2688/3,4
அரி பொன் கிண்கிணி அணி இழை அரிவையர் புணர்ந்து – சிந்தா:13 2758/2
அரவ மேகலைகள் அம் பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப – சிந்தா:13 2806/3
கிளி சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:13 2898/1
தவளை கிண்கிணி தாமம் சேர்த்தியும் – சிந்தா:13 3126/1
செல்வ கிண்கிணி சிலம்ப தேன் சொரி – சிந்தா:13 3129/1
கிண்கிணியாள் (1)
இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள் – சிந்தா:3 653/5
கிண்கிணியினார் (1)
படை அவிழ்ந்த கண் பனி நீர் பாய விம்மா பரு முத்த நா மழலை கிண்கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவு தோய பொழி மழையுள் மின்னு போல் புலம்பினாரே – சிந்தா:1 293/3,4
கிண்கிணியும் (9)
பசும்பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப – சிந்தா:1 177/1
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறி வேல் கண் – சிந்தா:1 340/2
அடி கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின் – சிந்தா:1 353/2
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நா சீறடி மேல் – சிந்தா:13 2694/2
காலில் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்க கதிர் வேலும் – சிந்தா:13 2698/3
பொன் அரிய கிண்கிணியும் பூம் சிலம்பும் ஏங்க – சிந்தா:13 2921/3
கண்ணார் ஒலி கவுள கிண்கிணியும் அம் சிலம்பும் கலையும் ஆரா – சிந்தா:13 2967/3
மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலை கிண்கிணியும் சிலம்பும் ஏங்க – சிந்தா:13 3136/3
விண் கனிய கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப முரி புருவ வேல் நெடும் கண் விருந்து செய்ய – சிந்தா:13 3138/3
கிண்ணத்து (1)
ஆடக செம்பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர் – சிந்தா:3 510/1
கிண்ணம் (1)
விரும்பு பொன் தட்டு-இடை வெள்ளி கிண்ணம் ஆர்ந்து – சிந்தா:13 2861/1
கிணினென (1)
எள்ளரும் இரு மணி கிணினென இசைத்தன – சிந்தா:7 1841/3
கிணை (1)
கிணை நிலை பொருநர் தம் செல்லல் கீழ் பட – சிந்தா:1 61/1
கிம்புரி (3)
சித்திர கிம்புரி வைரம் சேர்த்துநர் – சிந்தா:1 83/3
தொடுத்து அலர் மாலை சூட்டி கிம்புரி முத்தம் மென் தோள் – சிந்தா:9 2091/2
இடை செறி குறங்கு கௌவி கிம்புரி இளக மின்னும் – சிந்தா:12 2445/1
கிரி (1)
துள்ளி வீழ் உயர் அருவி வன கிரி தோன்றியது அவணே – சிந்தா:7 1565/4
கிருமி (1)
என்னை இ கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான் – சிந்தா:4 1154/4
கிலுத்தம் (3)
கிலுத்தம் கூர் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து – சிந்தா:7 1645/1
கிலுத்தம் கூர் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து – சிந்தா:7 1645/1
மானிடம் பழுத்தன கிலுத்தம் மற்று அவற்று அயல் – சிந்தா:8 1900/1
கிழங்கினோடும் (1)
தெவ்வரை கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே – சிந்தா:7 1736/2
கிழங்கு (5)
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய – சிந்தா:3 825/3
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய – சிந்தா:5 1201/3
கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழும் தடி நறவொடு ஏந்தி – சிந்தா:5 1231/1
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உண காட்டுள் இன்றே – சிந்தா:5 1236/2
அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா – சிந்தா:6 1422/3
கிழங்கும் (1)
நல்ல கொழும் பழனும் கிழங்கும் தந்து நவை தீர்த்தார்க்கு – சிந்தா:13 2602/2
கிழத்தி (1)
மனை பெரும் கிழத்தி மாசு இல் மலை மகள் தன்னை யான் சென்று – சிந்தா:5 1220/1
கிழத்தி-தன்னை (1)
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆருயிர் கிழத்தி-தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறி – சிந்தா:1 273/2,3
கிழமை (11)
கடி மண கிழமை ஓர் கடலின் மிக்கதே – சிந்தா:1 196/4
தொல் அற கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்கு – சிந்தா:1 382/2
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால் – சிந்தா:3 544/2
மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம் – சிந்தா:3 590/3
பெரு மண கிழமை யாம் பேசுகின்றதே – சிந்தா:3 822/4
கோள் உடை கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான் – சிந்தா:4 958/4
வீறு உயர் முடியும் சூடி விழு நில கிழமை பூண்டு – சிந்தா:5 1221/2
மாழை நீள் நிதியம் துஞ்சும் மா நில கிழமை எய்தும் – சிந்தா:8 1929/3
எனக்கு இனி இறைவன் தானே இரு நில கிழமை வேண்டி – சிந்தா:10 2147/2
அரும் தவ கிழமை போல இறாத வில் அறாத நாண் வாய் – சிந்தா:10 2204/1
ஏமுற்று கரும பூமி இருநிதி கிழமை வேந்தே – சிந்தா:13 2841/4
கிழமையும் (1)
திருநில கிழமையும் தேவர் தேயமும் – சிந்தா:5 1174/3
கிழவன் (8)
வீணை கிழவன் விருந்து ஆர் கதி சென்றவாறும் – சிந்தா:0 28/4
ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி – சிந்தா:4 851/3
கிழவன் மூதெயில் போல் கிளர்வுற்றதே – சிந்தா:4 856/4
மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர் நிதி கிழவன் காளை – சிந்தா:4 1048/1
விழைவு தீர் கிழவன் ஆகி விழு கதிர் உலந்து வீழ – சிந்தா:6 1503/2
வெறுக்கை கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள் – சிந்தா:7 1871/4
அல்லல் அம் கிழவன் ஓர் அந்தணாளனாய் – சிந்தா:9 2008/3
நிதியின் கிழவன் இனிதா உறையும் – சிந்தா:13 2854/3
கிழவனாய் (1)
கிழவனாய் பாடி வந்து என் கீழ் சிறை இருப்ப கண்டேன் – சிந்தா:9 2087/1
கிழவுதான் (1)
கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா – சிந்தா:1 379/3
கிழி (9)
ஒள் நறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல் – சிந்தா:1 164/2
நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார் – சிந்தா:3 818/1
கை கிழி கொடுக்கப்பட்டார் கலம் பல நல்கப்பட்டார் – சிந்தா:3 818/4
பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி – சிந்தா:3 819/3
தீட்டினான் கிழி மிசை திக வாள்_நுதல் – சிந்தா:4 1003/2
கண்டவர் கடக்கல் ஆற்றா கிழி மிசை உருவு தீட்டி – சிந்தா:4 1047/3
முகில் கிழி மின்னின் நோக்கி முரிந்து இடை குழைந்து நின்றார் – சிந்தா:12 2540/4
புண் மேல் கிழி போல் துறத்தல் பொருள் ஆமோ – சிந்தா:13 2960/4
முகில் கிழி மதியம் போலும் முனி குழாம் நோக்கினானே – சிந்தா:13 3053/4
கிழிக்கும் (1)
ஒள் இலை சூலம் தெள் நீர் உலா முகில் கிழிக்கும் மாட – சிந்தா:12 2527/1
கிழித்த (1)
பந்து அட்ட விரலினார் தம் படா முலை கிழித்த பைம் தார் – சிந்தா:13 2648/1
கிழித்து (5)
நுரை கிழித்து அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி – சிந்தா:3 699/3
உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவிய பாவை ஒத்தார் – சிந்தா:3 699/4
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட – சிந்தா:5 1321/2
ஒருக்கு அவன் கையும் வாயும் உளம் கிழித்து உடுவம் தோன்ற – சிந்தா:10 2275/2
கண்ண கழு நீர் மெல் விரலால் கிழித்து மோந்தார் கனி வாயார் – சிந்தா:13 2700/4
கிழிந்த (3)
வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திட கிழிந்த மாலை – சிந்தா:3 728/1
தட முலை முகங்கள் சாடி சாந்து அகம் கிழிந்த மார்பின் – சிந்தா:13 2708/1
பாய்ந்து துகைப்ப கிழிந்த கூழை பனி தாமரை சூழ் பகல் கோயிலே – சிந்தா:13 2860/4
கிழிந்து (4)
ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா – சிந்தா:5 1256/3
முலை வட்ட பூணும் முத்தும் முள்கலின் கிழிந்து பொல்லா – சிந்தா:10 2184/1
கிழிந்து சாந்து அழிய கிளர் மென் முலை – சிந்தா:13 2673/2
அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகி – சிந்தா:13 2805/2
கிழிப்ப (1)
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான் – சிந்தா:1 321/3
கிழிய (3)
தாள் உடை தாமரை கிழிய வண் சுமை – சிந்தா:1 57/2
சாந்து அகம் கிழிய மாலை தட முலை ஞெமுங்க புல்லி – சிந்தா:12 2552/1
சாந்தம் கிழிய முயங்கி தட மலரால் – சிந்தா:13 2990/1
கிழியின் (1)
இ உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து – சிந்தா:1 180/1
கிழியும் (1)
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு – சிந்தா:1 235/1
கிள்ளி (3)
செறிந்தது ஓர் மலரை கிள்ளி தெறித்திடா சிறிய நோக்கா – சிந்தா:7 1568/3
கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளி திலகம் திகழ பொறித்து – சிந்தா:12 2439/2
கழு மணி செம்பொன் ஆழி கை விரல் உகிரின் கிள்ளி
விழு முலை சூட்டி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார் – சிந்தா:13 2716/3,4
கிள்ளை (3)
புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா – சிந்தா:6 1498/2
வாய்விடாள் பருகி இட்டாள் மட கிள்ளை மருட்டும் சொல்லாள் – சிந்தா:7 1692/4
கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளி திலகம் திகழ பொறித்து – சிந்தா:12 2439/2
கிள்ளையோடு (1)
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே – சிந்தா:1 70/4
கிளக்கல் (3)
கிளி முக கிளவிக்கு உற்றது இற்று என கிளக்கல் உற்றேன் – சிந்தா:1 298/4
இ இயல் ஒருவற்கு உற்றது இற்றென கிளக்கல் உற்றான் – சிந்தா:1 394/4
கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான் – சிந்தா:3 716/4
கிளந்த (2)
முற்பட கிளந்த அவற்றின் நல் புடைய நாற்றியே – சிந்தா:3 567/2
கிடை இலா இன்பமும் கிளந்த அல்லவும் – சிந்தா:13 2847/2
கிளந்து (2)
கிளியை தூதுவிட்டான் கிளந்து என்பவே – சிந்தா:4 1001/4
தீட்டரும் படிவம் அன்னான் திறம் கிளந்து உரைத்தும் அன்றே – சிந்தா:5 1166/4
கிளர் (44)
அம் துகில் பற்றலின் காசு அரிந்து அணி கிளர்
சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து – சிந்தா:1 121/2,3
இழை கிளர் இள முலை எழுது நுண் இடை – சிந்தா:1 195/1
கேட்டு அள பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னை – சிந்தா:1 404/3
நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம் – சிந்தா:3 511/3
கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூம் கொடி – சிந்தா:3 529/1
திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி – சிந்தா:3 700/2
நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை – சிந்தா:3 738/1
கெழுவி பெடையை கிளர் சேவல் தழீஇ – சிந்தா:5 1187/3
நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல் – சிந்தா:5 1360/3
நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே – சிந்தா:6 1463/4
கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய – சிந்தா:6 1464/2
கேள்வனை கனவில் காணாள் கிளர் மணி பூணினாளே – சிந்தா:6 1506/4
கெந்தம் நாறு அகிலும் முத்து கிளர் ஒளி விளக்கும் ஏந்தி – சிந்தா:7 1719/2
திரு கிளர் மன்னவன் சேனை மாநகர் – சிந்தா:7 1825/1
திரு கிளர் மணி செய் பொன் தூண் தீப்பட புடைத்து செம் கண் – சிந்தா:7 1857/3
திரு கிளர் ஒளி குலாய் வானகம் செகுக்குமே – சிந்தா:8 1903/4
கெலுழனோ நந்தன் என்னா கிளர் ஒளி வனப்பினானை – சிந்தா:8 1926/1
மேனி கிளர் வெண் துகிலும் விழு பொன் இயல் நூலும் – சிந்தா:9 2024/2
நலம் கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டி – சிந்தா:9 2092/2
கிடுகு உடை காப்பின கிளர் பொன் பீடிகை – சிந்தா:10 2213/2
கீள் இரண்டு ஆக குத்தி எடுத்திட கிளர் பொன் மார்பன் – சிந்தா:10 2248/3
கிடை ஆயினன் இவனே என கிளர் ஆண் அழகு உடையான் – சிந்தா:10 2263/4
கேழ் கிளர் எரி கண் பேழ் வாய் கிளர் பெரும் பாம்பினோடும் – சிந்தா:10 2298/1
கேழ் கிளர் எரி கண் பேழ் வாய் கிளர் பெரும் பாம்பினோடும் – சிந்தா:10 2298/1
ஆடவர் ஆண்மை தோற்றும் அணி கிளர் பவழ திண் கை – சிந்தா:10 2299/1
ஆவி அம் புகை அணி கிளர் சுண்ணமோடு எழுந்த – சிந்தா:11 2367/2
அரி பொன் கிண்கிணி அணி கிளர் சிலம்பொடு சிலம்பும் – சிந்தா:12 2385/1
கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர்
இளம் கதிர் எறி மணி பூணும் ஆரமும் – சிந்தா:12 2408/2,3
நலம் கிளர் காணமும் மணியும் நன் பொனும் – சிந்தா:12 2410/1
வரை வளை முழ விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால் – சிந்தா:12 2430/3
யானையுள் அரசன் தன் அணி கிளர் வல மருப்பு ஈர்ந்து – சிந்தா:12 2436/1
நலம் கிளர் பவளம் நன் பொன் விரல் மணி ஆழி மின்ன – சிந்தா:12 2441/2
அவா கிடந்து அகன்ற அல்குல் அணி கிளர் திருவில் பூப்ப – சிந்தா:12 2444/1
அம் மலர் அடியும் கையும் அணி கிளர் பவழ வாயும் – சிந்தா:12 2446/1
கிளையை நீங்கி கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான் – சிந்தா:12 2491/4
வல மருப்பு ஈர்ந்து செய்த மணி கிளர் கட்டில் ஏறி – சிந்தா:12 2566/2
போக பூமியும் பொன் கிளர் பூமியும் – சிந்தா:12 2580/3
கிழிந்து சாந்து அழிய கிளர் மென் முலை – சிந்தா:13 2673/2
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்ன – சிந்தா:13 2836/2
பூமி மா திலகம் எனும் பொன் கிளர்
நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம் – சிந்தா:13 2855/2,3
நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும் – சிந்தா:13 2989/1
கெந்தம் நாறு அகிலும் கூட்டி கிளர் முடி உறுத்தினரே – சிந்தா:13 3115/4
கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண் – சிந்தா:13 3117/1
அரிவையை புல்லி அம் பொன் அணி கிளர் மாடத்து இன் தேன் – சிந்தா:13 3118/2
கிளர்ந்தது (1)
கடி அரங்கு அணிந்து மூதூர் கடல் கிளர்ந்தது அனையது ஒப்ப – சிந்தா:3 672/1
கிளர்ந்தவை (1)
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும் – சிந்தா:13 2857/2
கிளர்ந்து (4)
கால் அகம் புடைப்ப முந்நீர் கடல் கிளர்ந்து எழுந்ததே போல் – சிந்தா:2 434/1
நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டு ஆங்கு அவள் – சிந்தா:5 1325/2
மண்ணகம் மலிர காலாள் கடல் கிளர்ந்து எழுந்தது அன்றே – சிந்தா:7 1859/4
கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர் – சிந்தா:12 2408/2
கிளர்வுற்றதே (1)
கிழவன் மூதெயில் போல் கிளர்வுற்றதே – சிந்தா:4 856/4
கிளவி (13)
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனை தமியன் ஆக – சிந்தா:1 408/2
கனி வளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன் – சிந்தா:2 486/1
தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால் – சிந்தா:3 581/1
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சி சொன்னாள் – சிந்தா:4 1048/4
பண்ணார் கிளவி பவழம் புரை செ வாய் – சிந்தா:4 1065/4
உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும் – சிந்தா:5 1353/3
இணை மலர் கண்ணிக்கு ஒவ்வா இளி வரு கிளவி சொன்னேன் – சிந்தா:7 1746/4
யாழ் புரை கிளவி ஆற்றாள் மயங்கி வீழ்ந்து அரற்றுகின்றாள் – சிந்தா:7 1800/4
பால் நலம் கொள் தீம் கிளவி பவித்திரமும் நல்க – சிந்தா:9 2024/3
சில்லென் கிளி கிளவி அது சிந்தையிலன் என்றான் – சிந்தா:9 2027/4
நாணொடு மிடைந்த தேன் கொள் நடுக்குறு கிளவி கேட்டே – சிந்தா:9 2094/1
கற்பித்தார் பூவையார் தம் காரண கிளவி தம்மால் – சிந்தா:12 2511/4
தேன் தயங்கு செம் நாவின் சில் மென் கிளி கிளவி
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி-அரோ – சிந்தா:13 3102/2,3
கிளவி-தன் (1)
பண் உலாம் கிளவி-தன் பரவை ஏந்து அல்குல் – சிந்தா:6 1481/1
கிளவிக்கு (1)
கிளி முக கிளவிக்கு உற்றது இற்று என கிளக்கல் உற்றேன் – சிந்தா:1 298/4
கிளவியார் (4)
அம் தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறைபோய் ஆடல் அரம்பை அன்னார் – சிந்தா:1 292/3
கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின் – சிந்தா:3 553/3
குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார் – சிந்தா:6 1555/3
கனி படு கிளவியார் தம் கதிர் முலை பொருது சேந்த – சிந்தா:10 2273/3
கிளவியார்-தம் (2)
கலை வளர் கிளவியார்-தம் காமர் மென் சேக்கை நீங்கி – சிந்தா:6 1432/1
பண் நிற கிளவியார்-தம் பசையினால் பிறந்த பாவம் – சிந்தா:6 1433/3
கிளவியாரும் (1)
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி – சிந்தா:3 604/2
கிளவியால் (1)
துனிப்புறு கிளவியால் துணைவி ஏகலும் – சிந்தா:4 1020/1
கிளவியாள் (1)
யாழ் கொன்ற கிளவியாள் தன் அமிழ்து உறழ் புலவி நீக்கி – சிந்தா:9 2089/1
கிளவியின் (1)
இன் பழ கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள் – சிந்தா:1 324/4
கிளவியோடும் (1)
குழல் புரை கிளவியோடும் கொழும் புகை அமளி சேர்ந்தான் – சிந்தா:6 1503/4
கிளி (21)
கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா – சிந்தா:1 64/1
கிளி முக கிளவிக்கு உற்றது இற்று என கிளக்கல் உற்றேன் – சிந்தா:1 298/4
இன் அமுது அனைய செ வாய் இளம் கிளி மழலை அம் சொல் – சிந்தா:2 457/1
இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை – சிந்தா:3 564/1
புன் காஞ்சி தாது தன் புறம் புதைய கிளி என கண்டு – சிந்தா:3 648/1
கண்டு ஆனா மட பெடை கிளி என போய் கை அகல – சிந்தா:3 649/2
கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி – சிந்தா:3 655/2
சிந்தை செய்யும் சிறகர் கிளி தோற்கும் அம் தீம் சொலாள் – சிந்தா:4 1160/4
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா – சிந்தா:5 1232/2
தினை விளை சாரல் செ வாய் சிறு கிளி மாதர் ஓப்ப – சிந்தா:6 1498/1
புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா – சிந்தா:6 1498/2
கனை கழல் குருசில் நண்ணி கவர் கிளி ஓப்பினானே – சிந்தா:6 1498/4
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல் – சிந்தா:6 1500/2
மாது உலாம் மழலை செ வாய் மட கிளி மொழிந்தது அன்றே – சிந்தா:7 1666/4
சில்லென் கிளி கிளவி அது சிந்தையிலன் என்றான் – சிந்தா:9 2027/4
மாலுற்று மயங்க யாங்கண் மட கிளி தூதுவிட்டேம் – சிந்தா:9 2044/2
நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப – சிந்தா:12 2513/2
பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பன் மா – சிந்தா:13 2875/1
கிளி சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்க – சிந்தா:13 2898/1
தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கி – சிந்தா:13 2980/1
தேன் தயங்கு செம் நாவின் சில் மென் கிளி கிளவி – சிந்தா:13 3102/2
கிளியால் (1)
விடுந்த சிறு கிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன் – சிந்தா:4 1041/3
கிளியும் (4)
பூவையும் கிளியும் மன்னர் ஒற்று என புணர்க்கும் சாதி – சிந்தா:1 384/1
பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து – சிந்தா:4 873/3
பூவையும் கிளியும் கேட்டு புழை முகம் வைத்து நோக்கி – சிந்தா:12 2510/1
அல்லாத பைம் கிளியும் பூவையும் ஆதியா – சிந்தா:13 2788/3
கிளியே (3)
செய்ய வாய் கிளியே சிறந்தாய் என – சிந்தா:4 1000/2
நடை மாண் அனமே நலம் ஆர் கிளியே
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகா – சிந்தா:6 1526/2,3
மாலை மாரட்டத்து அகத்தன வளர் இளம் கிளியே
போலும் மேனிய பொரு கடல் கலத்தின் வந்து இழிந்த – சிந்தா:10 2161/2,3
கிளியை (1)
கிளியை தூதுவிட்டான் கிளந்து என்பவே – சிந்தா:4 1001/4
கிளியோடு (1)
நாளை உரை என்று கிளியோடு நக சொல்லும் – சிந்தா:7 1879/3
கிளை (13)
எழு கிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் – சிந்தா:1 330/2
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர் – சிந்தா:3 841/2
கிளை கழுநீர் கணும் சிவப்பில் கேழ்த்தவே – சிந்தா:4 1016/4
கிளை அழ என்னை வாள் வாய் கீண்டிடல் உற்று நின்றான் – சிந்தா:4 1115/3
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள் – சிந்தா:5 1386/3
வீங்கிய திண் தோள் வெல் புகழாய் நின் கிளை என்றாற்கு – சிந்தா:7 1639/3
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள் – சிந்தா:7 1730/3
கிளை இளம் பிடிகள் ஐஞ்நூற்று-இடை கேழ் அரக்கு – சிந்தா:7 1830/3
கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்து எழுந்து ஈன்ற காம – சிந்தா:12 2598/3
கெழீஇயினாரொடும் கிளை அழ கெடுதலும் கெடுமே – சிந்தா:13 2756/4
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏமுறு நோய் செய்பவே – சிந்தா:13 2788/4
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும் – சிந்தா:13 2857/2
கிளை பிரிவு அரும் சிறை இரண்டும் கேட்டியேல் – சிந்தா:13 2867/1
கிளைக்கு (2)
கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும் – சிந்தா:9 2078/1
கிளைக்கு எலாம் சிறப்பு செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர் – சிந்தா:12 2570/2
கிளைகள் (1)
பின்னை தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்தினானே – சிந்தா:13 2880/4
கிளைத்திட்டேமே (1)
ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேமே – சிந்தா:7 1741/4
கிளைநரில் (1)
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி – சிந்தா:5 1394/2
கிளையவர் (1)
கிளையவர் சூழ வாமான் வாணிகன் ஆகி கேடு இல் – சிந்தா:9 2101/3
கிளையின் (2)
யாவை அவை தம் கிளையின் நீங்கி அழ வாங்கி – சிந்தா:13 2875/2
காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கி – சிந்தா:13 2875/3
கிளையை (1)
கிளையை நீங்கி கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான் – சிந்தா:12 2491/4
கிளையொடும் (1)
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும் – சிந்தா:1 250/2
கின்னரம் (1)
கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம்
போதர பாடினாள் புகுந்த போயின – சிந்தா:3 660/2,3
கின்னரர் (2)
தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே – சிந்தா:3 728/4
அரிய கின்னரர் பாட அமர்ந்து தம் – சிந்தா:13 3068/3
கின்னரும் (1)
தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே – சிந்தா:3 647/4