Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 10
வைக்க 3
வைக்கவே 1
வைக்கின் 1
வைக்கும் 2
வைக்கும்படி 1
வைக்குமாறு 1
வைக 9
வைகல்-தோறும் 1
வைகலுடன் 1
வைகவே 1
வைகாது 1
வைகி 10
வைகிய 2
வைகினன் 3
வைகினார் 9
வைகினால் 1
வைகினாள் 1
வைகினான் 5
வைகினேன் 1
வைகினோம் 1
வைகு 1
வைகுண்ட 1
வைகுதல் 1
வைகுதற்கு 2
வைகுதி 1
வைகும் 24
வைகும்வகை 1
வைகுமா 1
வைகுமால் 1
வைகுமாறு 1
வைகுவீர் 1
வைகுவோர் 1
வைகை 1
வைசியனோ 1
வைத்த 22
வைத்தது 3
வைத்தருளி 1
வைத்தருளுதலும் 1
வைத்தல் 1
வைத்தலே 1
வைத்தவனே 1
வைத்தனர் 2
வைத்தனன் 1
வைத்தனனால் 1
வைத்தனையால் 1
வைத்தாய் 1
வைத்தார் 2
வைத்தாரே 1
வைத்தாரை 1
வைத்தால் 1
வைத்தாள் 1
வைத்தான் 14
வைத்திலன் 1
வைத்து 32
வைத்தும் 2
வைத்துவைத்து 1
வைத்தோன் 1
வைத 1
வைதிக 1
வைது 1
வைதூரியம் 1
வைப்பது 1
வைப்பரோ 1
வைப்பன் 2
வைப்பன 1
வைப்பார் 1
வைப்பில் 1
வைப்பு 2
வைப்பேன் 1
வைய 1
வையக 1
வையகம் 4
வையம் 10
வையமும் 1
வையார் 1
வையினால் 1
வைரம் 1
வைனதேய 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வை (10)

நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல் – வில்லி:2 116/1
இடிம்பனை பகனை வை வேல் இகல் சராசந்தன்-தன்னை – வில்லி:11 21/1
வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி – வில்லி:13 147/3
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம் – வில்லி:14 89/1
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால் – வில்லி:31 21/3
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம் – வில்லி:31 22/1
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம் – வில்லி:33 22/1
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல் – வில்லி:44 87/2
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் – வில்லி:46 82/2

மேல்


வைக்க (3)

அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று – வில்லி:5 69/1
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட – வில்லி:11 228/1,2

மேல்


வைக்கவே (1)

சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/4

மேல்


வைக்கின் (1)

புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1

மேல்


வைக்கும் (2)

செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர – வில்லி:39 39/1
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல் – வில்லி:46 172/3

மேல்


வைக்கும்படி (1)

மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் – வில்லி:10 32/2

மேல்


வைக்குமாறு (1)

ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறு போல் – வில்லி:3 69/2

மேல்


வைக (9)

கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக
பங்கய நெடும் துறை படிந்து தன் மகாரால் – வில்லி:2 105/2,3
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல – வில்லி:5 16/1,2
பாங்கு வைக மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள் – வில்லி:7 59/4
தால துவசன் துவராபதி-தன்னில் வைக
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த – வில்லி:7 85/2,3
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் – வில்லி:10 103/2
அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக
முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான் – வில்லி:10 125/1,2
தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும் – வில்லி:11 172/2
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி – வில்லி:27 161/2,3
நாகம் காணேன் என்ன ஞானத்தோடே வைக – வில்லி:38 38/4

மேல்


வைகல்-தோறும் (1)

சூட்டிய தொடையல் மாலை தோழியர் வைகல்-தோறும்
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள – வில்லி:5 24/1,2

மேல்


வைகலுடன் (1)

வையம் முழுதுடை ஐயன் இளவலும் வைகலுடன் மனை வைகுவோர் – வில்லி:4 47/1

மேல்


வைகவே (1)

தோள் கரம் புறம்-தன்னில் அன்னையும் துணைவர் நால்வரும் தொக்கு வைகவே
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/1,2

மேல்


வைகாது (1)

இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண் – வில்லி:5 7/1

மேல்


வைகி (10)

பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான் – வில்லி:1 153/4
வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி
சனத்தில் அருளால் இல் வாழ் தருமம் தவறாவண்ணம் – வில்லி:3 40/2,3
முனி வனம் சில பகல் வைகி முந்துற – வில்லி:4 24/2
பண் உறு வேத வாழ்நர் பலரொடும் வைகி ஆங்கண் – வில்லி:6 37/3
ஐம் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/1,2
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் – வில்லி:11 274/4
காட்டிடை நீவிர் வைகி கடவ நாள் கழித்து மீண்டு – வில்லி:12 16/3
ஆரணப்படியே சூழ்ந்த அடவிகள்-தோறும் வைகி
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி – வில்லி:12 32/2,3
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற – வில்லி:22 111/2,3

மேல்


வைகிய (2)

பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை – வில்லி:5 94/1
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1

மேல்


வைகினன் (3)

ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன்
பண்டையின் எழு மடி பரிவு கூரவே – வில்லி:1 54/3,4
சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே – வில்லி:7 85/4
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே – வில்லி:23 20/4

மேல்


வைகினார் (9)

பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/4
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார்
வினைப்படுத்து யாழினோர் முறையின் வேள்வி செய் – வில்லி:4 25/2,3
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார்
அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல் – வில்லி:4 34/2,3
வந்த கண்ணனும் அன்புடன் வைகினார் – வில்லி:5 106/4
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார்
நீடு வில் திறலோர் நெடும் காலமே – வில்லி:5 109/3,4
மென் நிழல் வைகினார் விலாச வீரரே – வில்லி:11 104/4
கொத்தின சோலையும் குறுகி வைகினார் – வில்லி:11 106/4
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின் மீது வைகினார் – வில்லி:11 158/4
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார் – வில்லி:12 139/4

மேல்


வைகினால் (1)

யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால்
ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது – வில்லி:21 40/1,2

மேல்


வைகினாள் (1)

வரும்வரும் என மனம் மறுகி வைகினாள் – வில்லி:3 22/4

மேல்


வைகினான் (5)

திருமணம் புரிந்து உளம் திகழ வைகினான்
இரதியும் மதனனும் அல்லது இல்லை மற்று – வில்லி:1 52/2,3
சீயம் என்னவே திகழ வைகினான் – வில்லி:11 148/4
வெதிரனும்-கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான்
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் – வில்லி:11 186/2,3
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் – வில்லி:21 23/4
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான்
பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின் – வில்லி:27 101/2,3

மேல்


வைகினேன் (1)

நின் பெரும் கோயிலில் நீடு வைகினேன்
என் பெரு வினையினால் இன்று உன் மைத்துனன் – வில்லி:21 36/2,3

மேல்


வைகினோம் (1)

மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று – வில்லி:22 109/3

மேல்


வைகு (1)

மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் – வில்லி:7 14/2

மேல்


வைகுண்ட (1)

துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/3,4

மேல்


வைகுதல் (1)

நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/4

மேல்


வைகுதற்கு (2)

மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி – வில்லி:10 6/3
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4

மேல்


வைகுதி (1)

ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன – வில்லி:3 127/2

மேல்


வைகும் (24)

ஆம் பரிவுடனே ஆற்றி ஈற்று அளை அடைந்து வைகும்
பாம்பு என பருவம் நோக்கி இருந்தனள் பழுது இலாதாள் – வில்லி:2 73/3,4
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும்
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன அத்தினாபுரி வந்து உற்றார் – வில்லி:2 111/3,4
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும் – வில்லி:5 18/3
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும்
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/3,4
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் – வில்லி:10 59/3
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான் – வில்லி:12 18/4
புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/4
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும்
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன் – வில்லி:12 35/1,2
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் – வில்லி:13 6/3
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் – வில்லி:13 25/4
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும்
அந்த புரத்தில் விடுத்தான் மற்று அவனும் மாதோ – வில்லி:13 112/3,4
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும்
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் – வில்லி:14 12/1,2
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல் – வில்லி:16 35/2
தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே – வில்லி:20 4/4
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு – வில்லி:20 14/2
உள் பேடியாய் வைகும் வில் காளை அல்லாத ஒரு நால்வரும் – வில்லி:22 12/1
வந்து ஓகையோடும் இரு பாதம் வணங்கி வைகும்
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர் – வில்லி:23 22/1,2
தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும்
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன – வில்லி:25 6/2,3
பூதேவரும் கனக பூங்கா நிழல் வைகும்
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் – வில்லி:27 36/3,4
இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டு – வில்லி:28 16/1
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல் – வில்லி:40 84/1
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல – வில்லி:45 113/2

மேல்


வைகும்வகை (1)

வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள் – வில்லி:19 33/4

மேல்


வைகுமா (1)

தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான் – வில்லி:6 6/4

மேல்


வைகுமால் (1)

மான் இனம் பேர்கலா மருங்கு வைகுமால் – வில்லி:11 94/4

மேல்


வைகுமாறு (1)

சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3

மேல்


வைகுவீர் (1)

பண்டு போல மண் பரவ வைகுவீர் – வில்லி:11 130/4

மேல்


வைகுவோர் (1)

வையம் முழுதுடை ஐயன் இளவலும் வைகலுடன் மனை வைகுவோர்
உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா – வில்லி:4 47/1,2

மேல்


வைகை (1)

கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே – வில்லி:45 109/3,4

மேல்


வைசியனோ (1)

மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1

மேல்


வைத்த (22)

மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் – வில்லி:2 51/3
முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான் – வில்லி:2 51/4
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில் – வில்லி:6 43/1
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த
அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன் – வில்லி:10 87/2,3
ஈரம் வைத்த சிந்தை மன்னன் இசைவு என கழுத்தின் முத்து – வில்லி:11 174/1
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி – வில்லி:11 174/3
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/4
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல் – வில்லி:11 176/1
மாவலி சிறைப்பட வைத்த தாள் மலர் – வில்லி:12 137/1
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர் – வில்லி:13 109/4
மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய் – வில்லி:21 66/2
வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி – வில்லி:23 29/3
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி மிக நகைசெயா – வில்லி:27 108/2
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன – வில்லி:27 163/3
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த
நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – வில்லி:29 2/3,4
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் – வில்லி:31 1/1
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
செய்ய பங்கய பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான் – வில்லி:42 17/2
வைத்த முத்தி நாதன் அன்றி வான நாடர் முதல்வன் யார் – வில்லி:43 1/4
வைத்த சென்னியை நோக்கி வயா உறு – வில்லி:46 224/1

மேல்


வைத்தது (3)

கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் – வில்லி:1 101/2
வைத்தது முருகு அவிழ் வாச மாலையே – வில்லி:12 145/4
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4

மேல்


வைத்தருளி (1)

நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி
வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும் – வில்லி:12 81/1,2

மேல்


வைத்தருளுதலும் (1)

அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும்
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/1,2

மேல்


வைத்தல் (1)

சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் – வில்லி:27 176/4

மேல்


வைத்தலே (1)

உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2

மேல்


வைத்தவனே (1)

வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே – வில்லி:31 17/4

மேல்


வைத்தனர் (2)

வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி – வில்லி:19 9/3
மரு கமழ் தொடையலானை வைத்தனர் மருவலாரே – வில்லி:42 162/4

மேல்


வைத்தனன் (1)

மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே – வில்லி:42 87/4

மேல்


வைத்தனனால் (1)

முன்னர் வைத்தனனால் முனி_மைந்தனே – வில்லி:46 223/4

மேல்


வைத்தனையால் (1)

மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால்
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ – வில்லி:31 18/2,3

மேல்


வைத்தாய் (1)

நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3

மேல்


வைத்தார் (2)

வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் – வில்லி:5 92/4
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4

மேல்


வைத்தாரே (1)

சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4

மேல்


வைத்தாரை (1)

வைத்தாரை வடி கணை வாள் மழு வேல் – வில்லி:13 62/3

மேல்


வைத்தால் (1)

கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால்
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா – வில்லி:18 11/2,3

மேல்


வைத்தாள் (1)

கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/4

மேல்


வைத்தான் (14)

கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான் – வில்லி:2 21/4
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/4
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் – வில்லி:3 37/4
பருகும் சுவை அமுது ஆனவர் பாதம் தலை வைத்தான் – வில்லி:7 16/4
கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக – வில்லி:10 32/3
எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான் – வில்லி:10 105/4
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் – வில்லி:10 125/4
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் – வில்லி:11 250/4
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான்
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் – வில்லி:17 11/2,3
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான் – வில்லி:27 177/4
மல்லர் பப்பரவர்-தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான்
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/1,2
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான்
பல் படை வல்லோர்-தம்மை பதின்மடங்கு அதனில் வைத்தான் – வில்லி:27 178/2,3
பல் படை வல்லோர்-தம்மை பதின்மடங்கு அதனில் வைத்தான்
அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே – வில்லி:27 178/3,4
தூய நல் அறிவன்-தன்னை தோற்றம் இன்றாக்கி வைத்தான்
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த – வில்லி:29 2/2,3

மேல்


வைத்திலன் (1)

சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே – வில்லி:27 211/4

மேல்


வைத்து (32)

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் – வில்லி:1 151/1
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன் – வில்லி:10 65/1
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான் – வில்லி:11 46/4
வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து
யாயையும் பணிந்து எழில் கொள் தோளினார் – வில்லி:11 135/1,2
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் – வில்லி:11 174/2
தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து
பின்னையும் வேண்டுவோரை பிரிவுற நெறியில் போக்கி – வில்லி:12 17/2,3
கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில் – வில்லி:13 150/1,2
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4
சிரத்தினில் வைத்து இவை நின்று செப்பலுற்றான் – வில்லி:14 117/2
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென் – வில்லி:14 138/1
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/2,3
தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த – வில்லி:20 14/3
அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை – வில்லி:21 63/1,2
பாங்கினில் வைத்து அடல் பவனன் மைந்தனே – வில்லி:21 83/4
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி – வில்லி:22 107/3
பூழிகள் அடக்கி செம்பொன் பூரண கும்பம் வைத்து
வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி – வில்லி:22 117/1,2
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/2
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே – வில்லி:27 201/1
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே – வில்லி:27 209/4
மொய் வாகுவில் வைத்து எதிர் மோதுதலால் – வில்லி:32 10/2
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று – வில்லி:36 8/1
வாளின் மிசை வாள்-அதனை வைத்து அடல் அரக்கன் – வில்லி:37 16/3
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய – வில்லி:41 168/3
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/2
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/3
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் – வில்லி:45 147/3
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து – வில்லி:45 209/2
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ – வில்லி:46 6/3

மேல்


வைத்தும் (2)

அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும்
ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் – வில்லி:1 85/1,2
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும்
செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான் – வில்லி:7 9/2,3

மேல்


வைத்துவைத்து (1)

தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் – வில்லி:35 1/2

மேல்


வைத்தோன் (1)

மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன் – வில்லி:1 9/4

மேல்


வைத (1)

சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல் – வில்லி:11 169/3

மேல்


வைதிக (1)

முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/4

மேல்


வைது (1)

தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ – வில்லி:13 115/1

மேல்


வைதூரியம் (1)

மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் – வில்லி:6 11/1

மேல்


வைப்பது (1)

வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா – வில்லி:43 42/2

மேல்


வைப்பரோ (1)

மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4

மேல்


வைப்பன் (2)

மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா – வில்லி:46 134/4

மேல்


வைப்பன (1)

குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4

மேல்


வைப்பார் (1)

எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/4

மேல்


வைப்பில் (1)

வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என – வில்லி:11 163/3

மேல்


வைப்பு (2)

நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய – வில்லி:31 21/1
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் – வில்லி:45 212/1

மேல்


வைப்பேன் (1)

உன்னை ஆள வைப்பேன் உலகில் பாதி என்றான் – வில்லி:3 38/4

மேல்


வைய (1)

வைய மன்னன் வய நிலை நோக்கியே – வில்லி:1 129/3

மேல்


வையக (1)

வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல் – வில்லி:1 43/1

மேல்


வையகம் (4)

மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் – வில்லி:29 14/1
வையகம் கம்பமுற்று மாசுணம் நடுங்க மேன்மேல் – வில்லி:39 16/3
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
மாளவும் பாண்டு மைந்தர் வையகம் முழுதும் தானே – வில்லி:45 43/3

மேல்


வையம் (10)

வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி – வில்லி:3 120/3
வையம் முழுதுடை ஐயன் இளவலும் வைகலுடன் மனை வைகுவோர் – வில்லி:4 47/1
தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/4
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான் – வில்லி:10 102/3
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1
மாயவன் அற்புதன் நாதன் கண்ணன் வையம்
தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ – வில்லி:14 123/1,2
வீடுமன் கிருபன் கன்னன் வில் கை ஆசிரியன் வையம்
பாடு சீர் விகத்தசேனன் பகதத்தன் முதலா உள்ளோர் – வில்லி:28 22/1,2
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம்
தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே – வில்லி:29 13/3,4
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3

மேல்


வையமும் (1)

வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின் – வில்லி:11 31/1

மேல்


வையார் (1)

மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4

மேல்


வையினால் (1)

வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன் – வில்லி:43 21/1

மேல்


வைரம் (1)

மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் – வில்லி:6 11/1

மேல்


வைனதேய (1)

கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும் – வில்லி:44 3/2

மேல்