Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 22
ஐ_ஆனனன் 1
ஐ_இரண்டு 1
ஐ_இரண்டும் 2
ஐ_இரு 3
ஐ_இரு_பதின்மர் 1
ஐ_இருபது 1
ஐஅமளி 1
ஐக்கு 1
ஐஞ்ஞூறு 1
ஐதின் 1
ஐந்தாம் 1
ஐந்தாய் 1
ஐந்தால் 1
ஐந்தில் 2
ஐந்தின் 1
ஐந்தினில் 1
ஐந்தினையும் 2
ஐந்து 45
ஐந்து_பத்து_நூறாயிரம் 1
ஐந்து_பத்தொடு 1
ஐந்தும் 4
ஐந்துமடங்கு 1
ஐந்துமே 3
ஐந்தையும் 1
ஐந்தொடு 1
ஐம் 8
ஐம்பதின்மர் 1
ஐம்பது 3
ஐம்புலத்தினனாதலாலே 1
ஐம்புலன் 1
ஐம்புலன்களும் 6
ஐம்புலனும் 2
ஐம்புலனை 1
ஐம்பொருளும் 1
ஐம்பொறி-வாய் 1
ஐய 17
ஐயம் 9
ஐயமுற்றனன் 1
ஐயன் 12
ஐயனும் 1
ஐயனே 1
ஐயனை 1
ஐயனோடு 1
ஐயா 21
ஐயாயிரம் 1
ஐயுற்று 1
ஐயுற்றே-கொல் 1
ஐயுற்றேன் 1
ஐயுற 2
ஐயுறாது 1
ஐயுறும் 1
ஐயுறுவர் 1
ஐயை 1
ஐயோ 3
ஐராவதத்தின் 1
ஐவர் 30
ஐவர்-தம் 3
ஐவர்-தம்மை 2
ஐவர்க்கு 4
ஐவர்க்கும் 2
ஐவர்களும் 1
ஐவராம் 1
ஐவராலும் 1
ஐவரில் 2
ஐவரின் 1
ஐவரினும் 2
ஐவருக்கு 2
ஐவருக்கும் 5
ஐவருடன் 2
ஐவரும் 55
ஐவருளும் 1
ஐவரே 1
ஐவரை 2
ஐவரையும் 14
ஐவரொடும் 3
ஐவரோடும் 3
ஐவிரும் 2
ஐவேமும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஐ (22)

இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் – வில்லி:1 142/2
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன் – வில்லி:1 148/1
நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே – வில்லி:1 151/4
ஐ வகை நிறங்களும் அமைத்து இயற்றிய – வில்லி:3 3/2
என் ஐ வானம் எய்தி யானே இறைவனானால் – வில்லி:3 38/3
இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால் – வில்லி:3 41/3
விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும் – வில்லி:3 132/1
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில் – வில்லி:6 1/1
ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே – வில்லி:7 17/1
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் – வில்லி:10 142/1
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை – வில்லி:11 28/1
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன – வில்லி:11 77/2
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய – வில்லி:21 51/1
ஆறு இரு நாமத்தோனும் ஐ_இரு நாமத்தோனும் – வில்லி:25 19/3
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் – வில்லி:41 6/2
ஐ என தொழுது வீரன் அந்தணன் உயிரை மீட்டு – வில்லி:41 153/1
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் – வில்லி:43 6/4
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே – வில்லி:44 58/3
ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/3

மேல்


ஐ_ஆனனன் (1)

ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே – வில்லி:7 17/1

மேல்


ஐ_இரண்டு (1)

ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3

மேல்


ஐ_இரண்டும் (2)

நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே – வில்லி:1 151/4
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் – வில்லி:43 6/4

மேல்


ஐ_இரு (3)

இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் – வில்லி:1 142/2
ஆறு இரு நாமத்தோனும் ஐ_இரு நாமத்தோனும் – வில்லி:25 19/3
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் – வில்லி:41 6/2

மேல்


ஐ_இரு_பதின்மர் (1)

அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில் – வில்லி:6 1/1

மேல்


ஐ_இருபது (1)

ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/3

மேல்


ஐஅமளி (1)

அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால் – வில்லி:7 31/2

மேல்


ஐக்கு (1)

தன் ஐக்கு மூழ்க தடம் வாய்த்தமை தந்தையோடும் – வில்லி:46 113/3

மேல்


ஐஞ்ஞூறு (1)

தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4

மேல்


ஐதின் (1)

ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3

மேல்


ஐந்தாம் (1)

பாரதம்-தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி – வில்லி:5 5/2

மேல்


ஐந்தாய் (1)

எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/3

மேல்


ஐந்தால் (1)

அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1

மேல்


ஐந்தில் (2)

பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல் – வில்லி:7 87/3
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2

மேல்


ஐந்தின் (1)

சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை – வில்லி:27 149/3

மேல்


ஐந்தினில் (1)

அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள் – வில்லி:27 217/1

மேல்


ஐந்தினையும் (2)

பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி புரிசடையுடன் புருகூதன் – வில்லி:12 56/1
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி – வில்லி:46 221/3

மேல்


ஐந்து (45)

ஐந்து ஆனனத்தோன் அருள்செய்ய அழகில் மிக்காள் – வில்லி:5 81/1
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் – வில்லி:5 81/2
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/3
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே – வில்லி:5 81/4
சொன்ன நாள் தொடங்கி ஐந்து சூரரும் தேவர் நாளுக்கு – வில்லி:6 46/1
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
துண்ணென்றிட்ட ஐந்து வகை பெரும் பேர் இயத்தின் துவனியினால் – வில்லி:10 40/4
ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/2
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – வில்லி:11 76/3
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து
பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி – வில்லி:12 64/1,2
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர – வில்லி:16 35/3
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் – வில்லி:19 14/2
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே – வில்லி:22 15/2
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க – வில்லி:23 8/2
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் – வில்லி:27 43/2
ஐந்து_பத்து_நூறாயிரம் அரசர்க்கும் எவர்க்கும் – வில்லி:27 80/3
நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் – வில்லி:27 98/3
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/3,4
நாடு அளித்திடவும் ஐந்து பேருடைய நகர் அளித்திடவும் வேண்டுமோ – வில்லி:27 114/2
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4
தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய – வில்லி:27 154/1
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல – வில்லி:27 159/1
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு – வில்லி:27 221/2
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/4
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான் – வில்லி:33 7/3
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான் – வில்லி:33 11/2
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/2
புகல் அரும் ஐந்து நாளை பூசலும் புகலலுற்றாம் – வில்லி:39 2/4
மோகரித்து ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி – வில்லி:39 15/1
இன தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்-கண் ஏவினனே – வில்லி:40 23/4
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே – வில்லி:46 79/4
அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே – வில்லி:46 197/4
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3
ஐந்து வீரர்-தம் ஆவியும் கொண்டு அரோ – வில்லி:46 222/4
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல் – வில்லி:46 243/1

மேல்


ஐந்து_பத்து_நூறாயிரம் (1)

ஐந்து_பத்து_நூறாயிரம் அரசர்க்கும் எவர்க்கும் – வில்லி:27 80/3

மேல்


ஐந்து_பத்தொடு (1)

நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் – வில்லி:27 98/3

மேல்


ஐந்தும் (4)

பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல் – வில்லி:7 87/3
ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற – வில்லி:46 104/1
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் – வில்லி:46 247/2

மேல்


ஐந்துமடங்கு (1)

காரில் ஐந்துமடங்கு புலம்பின காகளம் சுரி சங்கு முழங்கின – வில்லி:42 126/1

மேல்


ஐந்துமே (3)

ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/2
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – வில்லி:11 76/3

மேல்


ஐந்தையும் (1)

விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1

மேல்


ஐந்தொடு (1)

ஐந்தொடு ஆயிரரும் வேறோர் அம் பொன் மாளிகையும் ஈந்தான் – வில்லி:13 159/4

மேல்


ஐம் (8)

அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி – வில்லி:1 28/3
அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு – வில்லி:2 104/1
ஐம் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி – வில்லி:7 34/1
முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில் – வில்லி:11 80/4
வேதம் அடியுண்டன விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓர் ஐம்
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் – வில்லி:12 108/1,2
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி – வில்லி:16 36/1
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும் – வில்லி:29 5/3
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2

மேல்


ஐம்பதின்மர் (1)

இவ்வாறு அமைந்து ஆங்கு ஐவருடன் ஈர்_ஐம்பதின்மர் நனி வளர – வில்லி:3 93/1

மேல்


ஐம்பது (3)

இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2

மேல்


ஐம்புலத்தினனாதலாலே (1)

பொறுத்திடும் மேல் இடா ஐம்புலத்தினனாதலாலே
மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன – வில்லி:18 7/1,2

மேல்


ஐம்புலன் (1)

ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் – வில்லி:19 10/4

மேல்


ஐம்புலன்களும் (6)

மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் – வில்லி:12 58/2
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் – வில்லி:16 8/2
ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன் – வில்லி:18 21/1
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/3
பாசகாரிகள் ஆம் ஐம்புலன்களும் பரிவு கூர பரிந்து உயர்ந்தோர் புகல் – வில்லி:21 13/1
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும் – வில்லி:28 39/1

மேல்


ஐம்புலனும் (2)

நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி – வில்லி:10 2/2
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற – வில்லி:10 81/3

மேல்


ஐம்புலனை (1)

ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் – வில்லி:43 45/1

மேல்


ஐம்பொருளும் (1)

குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே – வில்லி:29 3/1

மேல்


ஐம்பொறி-வாய் (1)

குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே – வில்லி:29 3/1

மேல்


ஐய (17)

ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான் – வில்லி:3 120/4
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் – வில்லி:5 81/2
ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால் – வில்லி:11 31/3
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற – வில்லி:11 47/1
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ – வில்லி:12 22/4
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான் – வில்லி:12 142/3
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ – வில்லி:13 13/2
தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ – வில்லி:14 123/2
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி – வில்லி:15 4/2
மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன – வில்லி:18 7/2
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள் – வில்லி:26 14/4
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும் – வில்லி:36 10/1
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ – வில்லி:41 195/2
ஐய நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது நின் – வில்லி:42 17/1
அந்தரம் அடைந்தது ஐய அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 19/3
வந்தனேன் ஐய மாதவன் ஏவலால் – வில்லி:46 222/1

மேல்


ஐயம் (9)

ஐயம் உற்றனர் அன்புறு காதலார் – வில்லி:1 129/4
ஐயம் உற்று இவர் இருப்புழி மயனினும் அதிகன் – வில்லி:3 120/1
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் – வில்லி:5 64/4
ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி – வில்லி:5 68/3
நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா – வில்லி:5 71/2
கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி – வில்லி:13 25/1
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி – வில்லி:27 153/3
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் – வில்லி:41 203/4

மேல்


ஐயமுற்றனன் (1)

ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே – வில்லி:1 43/4

மேல்


ஐயன் (12)

வையம் முழுதுடை ஐயன் இளவலும் வைகலுடன் மனை வைகுவோர் – வில்லி:4 47/1
நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும் – வில்லி:7 11/1
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் – வில்லி:11 73/3
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம் – வில்லி:11 160/3
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும் – வில்லி:33 12/1
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம் – வில்லி:41 199/3
அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால் – வில்லி:41 232/2
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன் – வில்லி:42 32/1
உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப – வில்லி:42 51/2
அன்றி முழக்கான் அதிர் வளை ஐயன்
சென்று அறிகுதி நீ என்று உரைசெய்தான் – வில்லி:42 97/3,4
அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர் அகற்றுமாறு உரைப்பான் – வில்லி:42 211/4
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை – வில்லி:45 243/1

மேல்


ஐயனும் (1)

ஐயனும் அம்மையோடு அருள் புரிந்து பின் – வில்லி:12 129/1

மேல்


ஐயனே (1)

ஐயனே சேவடி அடைந்தவர்க்கு எலாம் – வில்லி:12 119/3

மேல்


ஐயனை (1)

ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை
பாங்கினால் வினவினான் பவள மேனியான் – வில்லி:41 209/1,2

மேல்


ஐயனோடு (1)

சமைவு கண்டு ஐயனோடு உவகை சாற்றினான் – வில்லி:41 215/4

மேல்


ஐயா (21)

முனி நீ ஐயா இதற்கு முன்னம் இன்று முதலா – வில்லி:3 46/1
நின்றிலையால் மனு நீதியில் ஐயா
பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே – வில்லி:3 99/2,3
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/4
அங்கு அவன் அ மொழி கூறலும் ஐயா
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே – வில்லி:14 61/1,2
வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/4
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1
அயர்த்து நீ முதுகிடாது ஒழி இமைப்பொழுது ஐயா
உயர்த்த பல் கொடி பகைஞரை தனித்தனி ஓட்டி – வில்லி:22 39/2,3
பாதகம்-தன்னில் ஒன்று உன் பதயுகம் பிழைப்பது ஐயா – வில்லி:22 87/4
அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ – வில்லி:23 10/1,2
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே – வில்லி:27 156/4
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/2,3
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும் ஐயா – வில்லி:36 13/4
அறமும் பொன்றும் நின்னோடு ஐயா அந்தோ அந்தோ – வில்லி:38 40/4
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் – வில்லி:41 144/2
பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை – வில்லி:41 151/3,4
அந்தரம் அமையும் என்று இ அகல் இடம் துறந்த ஐயா
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/2,3
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/2,3
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா – வில்லி:42 59/4
கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா
பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால் – வில்லி:45 105/2,3
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே – வில்லி:46 117/4
கூற்றின் வாய் புகுந்தேற்கு என்ன கூற்று ஐயா – வில்லி:46 228/4

மேல்


ஐயாயிரம் (1)

ஐயாயிரம் முடிமன்னவர் அகல் வானம் அடைந்தார் – வில்லி:33 22/4

மேல்


ஐயுற்று (1)

வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று – வில்லி:22 127/2,3

மேல்


ஐயுற்றே-கொல் (1)

புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/4

மேல்


ஐயுற்றேன் (1)

அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் – வில்லி:41 144/2

மேல்


ஐயுற (2)

பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் – வில்லி:2 35/4
ஐயுற அருகு வந்து அணுகி மெய்யுடன் – வில்லி:41 214/2

மேல்


ஐயுறாது (1)

ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான் – வில்லி:11 278/3

மேல்


ஐயுறும் (1)

பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை என்றும் – வில்லி:22 46/2

மேல்


ஐயுறுவர் (1)

நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3

மேல்


ஐயை (1)

உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா – வில்லி:4 47/2

மேல்


ஐயோ (3)

அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ
தடவி வாடை மெய் கொளுத்திட தனஞ்சயற்கு அணங்கின் – வில்லி:7 60/2,3
ஐயோ அந்த கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு அதி பாவம் – வில்லி:11 235/4
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான் – வில்லி:43 27/2

மேல்


ஐராவதத்தின் (1)

மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து – வில்லி:9 40/1

மேல்


ஐவர் (30)

நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல் – வில்லி:2 116/1
ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர் – வில்லி:4 44/2
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில் – வில்லி:6 1/1
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர் – வில்லி:7 87/2
ஆடுவர் சிலர் சிலர் ஐவர் வான் புகழ் – வில்லி:11 121/1
அம் தண் வல்லியும் ஐவர் மைந்தரும் – வில்லி:11 134/2
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர்
அரசரும் எனது மைந்தர் ஐவரும் யானும் மீண்டும் – வில்லி:11 277/2,3
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர்
விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு – வில்லி:16 7/1,2
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/2
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் – வில்லி:27 112/3
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ – வில்லி:27 120/1
அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம் – வில்லி:27 122/1
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனை அழிந்தது உன் – வில்லி:27 131/3
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை – வில்லி:30 3/1
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே – வில்லி:30 10/4
காண்பாள் ஐவர் கண்டிலள் பெற்ற காந்தாரி – வில்லி:32 39/2
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே – வில்லி:37 5/1
தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும் என்று துச்சாதனனொடு ஐவர் இளையோர் – வில்லி:38 23/1
அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே – வில்லி:40 10/4
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன் – வில்லி:41 12/4
ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்_ஐவர் – வில்லி:42 120/1
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர்
பின்னரும் செல நால்வரை பிறை முக கணையினால் பிளந்திட்டான் – வில்லி:42 142/3,4
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர் – வில்லி:46 80/2
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர – வில்லி:46 81/1
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர்
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார் – வில்லி:46 237/3,4
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர்
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/2,3

மேல்


ஐவர்-தம் (3)

வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3
அன்று பட்ட கலக்கம் அப்படி ஐவர்-தம் படை அமரின் மேல் – வில்லி:29 41/3

மேல்


ஐவர்-தம்மை (2)

கொற்றவர் ஐவர்-தம்மை குருகுலம் விளங்குமாறு – வில்லி:10 85/1
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ – வில்லி:11 153/1

மேல்


ஐவர்க்கு (4)

அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ – வில்லி:11 211/3
அப்பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம் – வில்லி:16 16/2
அன்று தூது கொண்டு இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா – வில்லி:27 68/1,2
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/3,4

மேல்


ஐவர்க்கும் (2)

ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று – வில்லி:5 23/1
நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு – வில்லி:27 90/3

மேல்


ஐவர்களும் (1)

செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ – வில்லி:15 26/3

மேல்


ஐவராம் (1)

ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/4

மேல்


ஐவராலும் (1)

அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும்
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் – வில்லி:2 86/3,4

மேல்


ஐவரில் (2)

அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில் அறனால் வந்த – வில்லி:16 38/1
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன – வில்லி:28 28/1

மேல்


ஐவரின் (1)

ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர் – வில்லி:7 87/2

மேல்


ஐவரினும் (2)

செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ – வில்லி:10 60/1
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் – வில்லி:46 141/1

மேல்


ஐவருக்கு (2)

ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால் – வில்லி:11 31/3
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே – வில்லி:41 160/4

மேல்


ஐவருக்கும் (5)

பழுது அறு கன்னி-தன்னை பாண்டவர் ஐவருக்கும்
எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ – வில்லி:5 72/3,4
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/2
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும்
குன்றே கவித்த குடை கோவலன் கூறினானே – வில்லி:36 38/3,4
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1

மேல்


ஐவருடன் (2)

இவ்வாறு அமைந்து ஆங்கு ஐவருடன் ஈர்_ஐம்பதின்மர் நனி வளர – வில்லி:3 93/1
அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று அரியும் அந்தன் முன்னர் – வில்லி:46 249/1

மேல்


ஐவரும் (55)

அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன் – வில்லி:2 109/1
ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும் – வில்லி:3 100/3
ஆர மார்புடை ஐவரும் குந்தியும் – வில்லி:3 114/1
மன்னர் ஐவரும் வாரணாவதம்-தனில் மருவி – வில்லி:3 117/1
வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர் – வில்லி:3 126/2
எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார் – வில்லி:3 131/4
அந்தணர் ஐவரும் யாயும் அ நகர் – வில்லி:4 32/1
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு – வில்லி:5 4/2
ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன் – வில்லி:5 70/4
அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று – வில்லி:5 85/3
அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று – வில்லி:5 87/2
அந்த மா நகர் ஐவரும் மாமனும் – வில்லி:5 106/3
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
பரிமள மதுபம் முரல் பசும் தொடையல் பாண்டவர் ஐவரும் கடவுள் – வில்லி:6 26/1
வெம் கனல் தோன்றிய மின்னை ஐவரும்
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/3,4
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு – வில்லி:11 58/1
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
ஐவரும் அமர்ந்தனர் ஆண்மை ஏறு அனார் – வில்லி:11 109/4
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்
பண் வளர் நல் இசை பல மகீபரும் – வில்லி:11 114/1,2
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர் – வில்லி:11 181/2
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன் – வில்லி:11 231/1
அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி – வில்லி:11 275/1
அரசரும் எனது மைந்தர் ஐவரும் யானும் மீண்டும் – வில்லி:11 277/3
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் – வில்லி:16 19/3
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர் என அறிந்து – வில்லி:16 21/2
தீது அற கானிடை செறிந்த ஐவரும்
பேதுற தொடர்ந்து ஒரு பிணை பின் போனதும் – வில்லி:16 69/1,2
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன் – வில்லி:18 21/1
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு – வில்லி:19 1/1
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
தத்தம படையும் கவசமும் அனைத்தும் தனித்தனி ஐவரும் தரித்த – வில்லி:19 9/1
ஐவரும் மறைந்தனர்களாய் உறையும் நாளில் – வில்லி:19 36/2
குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார் – வில்லி:21 45/1
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும் வெளிப்பட்டார் – வில்லி:24 10/2
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும்
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ – வில்லி:27 111/2,3
மின்னை ஆம் அவர்கள் ஐவரும் பரிவினொடு தனித்தனி விரும்புவார் – வில்லி:27 122/3
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட பரணி பாடவே – வில்லி:27 132/4
ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ – வில்லி:27 159/2
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் – வில்லி:27 215/2
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2
துரக்கும் வெம் பரி துரௌபதர் ஐவரும் சூழ் படையுடன் வந்தார் – வில்லி:28 5/4
பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும் பார்த்திவருடன் கூடி – வில்லி:28 13/1
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே – வில்லி:28 39/2
பயிலும் வெம் பாசறை பாண்டவர் ஐவரும்
துயில் உணர்ந்து அணி பசும் துளப மால் அடி பணிந்து – வில்லி:34 2/1,2
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ – வில்லி:41 133/2
கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும் – வில்லி:44 3/2
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை – வில்லி:45 263/1
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/2
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக – வில்லி:46 161/2
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும்
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக – வில்லி:46 183/1,2
மன்னர் ஐவரும் மாண்டனர் மற்று அவர் – வில்லி:46 223/2
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள்தொட்டு – வில்லி:46 240/1

மேல்


ஐவருளும் (1)

கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1

மேல்


ஐவரே (1)

ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும் – வில்லி:21 18/1,2

மேல்


ஐவரை (2)

ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே – வில்லி:11 17/4
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது – வில்லி:11 48/3

மேல்


ஐவரையும் (14)

தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவி தழுவி தனித்தனியே – வில்லி:11 215/1
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை – வில்லி:11 243/3
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/2
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்
நின் பார்வையால் காக்க வேண்டும் நெடுமாலே – வில்லி:27 37/3,4
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும்
பார்த்தருளி அருள் பொழியும் பங்கய கண் நெடுமாலும் – வில்லி:27 46/2,3
ஐவரையும் ஏவினன் முனைந்தனர்கள் அவரும் – வில்லி:29 61/2
ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும்
வான் நாடு ஆளும்படி விடுத்தான் வன்பால் தம்மை ஐவரையும் – வில்லி:32 28/2,3
வான் நாடு ஆளும்படி விடுத்தான் வன்பால் தம்மை ஐவரையும்
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/3,4
தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும் என்று துச்சாதனனொடு ஐவர் இளையோர் – வில்லி:38 23/1
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி – வில்லி:42 173/1
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி – வில்லி:45 136/1
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் – வில்லி:46 140/2
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4

மேல்


ஐவரொடும் (3)

ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே – வில்லி:2 106/2
சார்ந்த நிருபர் ஐவரொடும் தானும் தன் பாசறை அடைந்தான் – வில்லி:37 40/2
அப்பால் அ பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா – வில்லி:46 242/4

மேல்


ஐவரோடும் (3)

பங்கு உற வந்த அந்த பாண்டவர் ஐவரோடும்
கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் – வில்லி:10 84/3,4
வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே – வில்லி:28 14/2
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2

மேல்


ஐவிரும் (2)

திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் – வில்லி:18 15/1
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர் – வில்லி:45 16/1

மேல்


ஐவேமும் (1)

வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/4

மேல்