Select Page

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யூகந்தராய (1)

ஊறு இல் சூழ்ச்சி யூகந்தராய
நாறு இரும் கூந்தலை மாறி பிறந்துழி – வத்தவ:7/186,187

TOP


யூகந்தராயணன் (1)

யூகந்தராயணன் ஒழிவு_இலன் கேட்டு – இலாவாண:9/202

TOP


யூகந்தராயற்கு (1)

ஒரு நல தோழன் யூகந்தராயற்கு
அருளறம் படாஅன் அகத்தே அடக்கி – வத்தவ:8/4,5

TOP


யூகந்தராயன் (1)

யூகந்தராயன் உண்க என உண்ணாய் – இலாவாண:10/147

TOP


யூகமும் (2)

பூவையும் கிளியும் யூகமும் மந்தியும் – இலாவாண:15/30
சிறு மான் பிணையும் மறு நீங்கு யூகமும்
காப்பொடு பேணி போற்றுவனள் உவப்பில் – வத்தவ:17/14,15

TOP


யூகி (25)

யூகி சூழ்ந்த உரைப்ப_அரும் சூழ்ச்சி – உஞ்ஞை:43/6
யூகி என்னும் உரை பரந்து ஓட – உஞ்ஞை:43/74
வெம்முறு படிவம் நீக்கி யூகி
பிணம் படு பெரும் காட்டு பேயும் உட்கும் – உஞ்ஞை:46/82,83
யூகி உள் வழி ஒற்றுநள் எய்தி – உஞ்ஞை:46/329
உலைவு_இல் பெரும் புகழ் யூகி ஒட்டார் – உஞ்ஞை:54/64
எண்ணிய கருமத்து அன்றியும் யூகி
சிறை வினை நீக்கி இறை வினை இரீஇ – இலாவாண:8/182,183
ஓங்கிய பெரும் புகழ் யூகி மேல்நாள் – இலாவாண:9/116
உரை பெயர்த்து கொடாஅன் யூகி மாழ்க – இலாவாண:9/153
யூகி என்பது உணர கூறி – இலாவாண:9/240
யூகி நும்மொடு போந்திலனோ என – இலாவாண:10/19
ஒழிந்தனன் உதயண யூகி பின் என – இலாவாண:10/37
யூகி தன்-வயின் உறுகண் வெம் தொழில் – இலாவாண:10/106
யூகி நினக்கு இங்கு அடைக்கலம் என்பதும் – இலாவாண:11/105
யூகி கூறிய ஒளி நில மருங்கில் – இலாவாண:17/90
எதிர் எழுந்து விரும்பி யூகி இறைஞ்சி – இலாவாண:17/103
ஒலிக்கும் கழல் கால் யூகி இரப்ப – இலாவாண:17/147
யூகி முடிந்தனன் உருமண்ணுவாவொடு – இலாவாண:17/151
உறுதி வேண்டும் யூகி மற்று இவன் – இலாவாண:17/157
உதயணகுமரன் யூகி என்பதை – இலாவாண:17/163
யூகி நீதியில் பேதை பிணிப்புண்டு – இலாவாண:20/54
யூகி உளன் எனின் இகழாள் இவன் என – மகத:1/17
எழுச்சி வேண்டி யூகி விட்ட – மகத:24/48
யூகி மற்று இவன் ஒளி அலது எல்லாம் – வத்தவ:7/178
யூகி தன்னோடு ஒழிய ஏனை – வத்தவ:9/61
இகழ்ந்து பிழைப்பு இல்லா யூகி சென்று இவண் – வத்தவ:10/185

TOP


யூகி-தன்னொடு (1)

ஏற்ற சிறப்பின் யூகி-தன்னொடு
மாற்றம் கொடுத்தல் வலித்தனன் ஆகி – நரவாண:7/85,86

TOP


யூகிக்கு (5)

வாகு இயல் அமைச்சன் யூகிக்கு உள்ளவை – உஞ்ஞை:45/27
யூகிக்கு இப்பால் உற்றது கூறுவென் – இலாவாண:8/5
யூகிக்கு ஆக என ஓலை போக்கி – வத்தவ:9/27
யூகிக்கு ஈத்து பாகுபடல் இன்றி – நரவாண:7/132
யூகிக்கு உரையா ஒருங்கு உடன் நிழற்றி – நரவாண:7/140

TOP


யூகியின் (3)

உத்தம மந்திரி யூகியின் பின்னர் – இலாவாண:11/11
யூகியின் அல்லதை உதயணகுமரன் – இலாவாண:19/19
யூகியின் அன்றோ என உரைப்போரும் – நரவாண:6/134

TOP


யூகியும் (11)

உவந்த மனத்தின் விரைந்து எழுந்து யூகியும்
மறைய திரிதரு மாந்தர்க்கு எல்லாம் – உஞ்ஞை:43/106,107
உதையணகுமரனும் யூகியும் வாழ்க என – உஞ்ஞை:43/113
அரும்_பெறல் யூகியும் உருமண்ணுவாவும் – உஞ்ஞை:54/93
யூகியும் மன்னுக உலகினுள் என்மரும் – இலாவாண:1/56
உள்ளியது முடித்த யூகியும் செவிலியும் – இலாவாண:18/1
ஓங்கிய பெரும் புகழ் யூகியும் உகவா – இலாவாண:20/132
உள்ள ஆற்றல் உறு புகழ் யூகியும்
அள்ளல் தாமரை அக இதழ் அன்ன – மகத:1/44,45
உருமண்ணுவாவும் யூகியும் தறியா – வத்தவ:4/37
உவகை போக்கி யூகியும் வருக என – நரவாண:6/100
உத்தர வாக்கியம் யூகியும் நிறீஇ – நரவாண:7/100
யூகியும் உணர ஏயினன் ஆகி – நரவாண:7/124

TOP


யூகியை (5)

ஈனா தாயோடு யூகியை எய்த – வத்தவ:7/83
ஒன்னார் கடந்த யூகியை நோக்கி – வத்தவ:8/31
யூகியை எமரொடும் உடனே விடுக்க – வத்தவ:10/137
யூகியை வருக என கூவினன் கொண்டு – வத்தவ:14/58
ஒன்றார் அட்ட யூகியை தரீஇ – நரவாண:7/78

TOP


யூகியொடு (1)

ஒழுக்கு இயல் திரியா யூகியொடு உடனே – வத்தவ:7/69

TOP


யூகியோடு (1)

இயைந்த நண்பின் யூகியோடு இருந்த – வத்தவ:4/34

TOP