Select Page

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கீண்டு (1)

வழையும் வாழையும் கழையும் கால் கீண்டு
ஆலும் அரசும் காலொடு துளக்கி – உஞ்ஞை:51/48,49

TOP


கீத (6)

கீத சாலை வேதி நிறைய – உஞ்ஞை:34/224
கீத சாலை வேதிகை காக்கும் – உஞ்ஞை:36/136
கேள்வி நுனித்த கீத வித்தகத்து – உஞ்ஞை:37/151
சாம கீத ஓசையில் தணிக்கும் – உஞ்ஞை:44/63
கீத சாலையும் கேள்வி பந்தரும் – இலாவாண:7/131
நாரத கீத கேள்வி நுனித்து – வத்தவ:3/59

TOP


கீதத்து (2)

ஒலி பெறு கீதத்து ஓதை போகிய – உஞ்ஞை:37/106
கின்னர கீதத்து கேள்வி மாந்தர் – உஞ்ஞை:37/108

TOP


கீதம் (3)

செவ்வழி கீதம் சிதைய பாடி – உஞ்ஞை:40/91
பண்ணுமை நிறீஇ ஓர் பாணி கீதம்
பாடல் வேண்டும் என்று ஆடு அமை தோளி – மகத:14/245,246
பரத கீதம் பாடுவித்து எடுத்த – வத்தவ:10/57

TOP


கீதமொடு (1)

தேவ கீதமொடு தேசிகம் தொடர்ந்த – உஞ்ஞை:37/129

TOP


கீழ் (8)

நாம் இவன் குடை கீழ் காமுற கலந்து இவன் – உஞ்ஞை:37/67
அமிழ்ந்து கீழ் ஆழ அரும் கலம் சுமந்து – உஞ்ஞை:41/36
கீழ் எழு செம் தீ கிளை பிரித்து அழற்ற – உஞ்ஞை:43/192
மன்னிய தோற்றமொடு வட கீழ் பெரும் திசை – உஞ்ஞை:46/133
காழ்த்த-காலை கீழ் திசை முற்பகல் – உஞ்ஞை:55/33
கீழ் திசை முதலா வாழ்த்துபு வணங்கி – இலாவாண:4/73
ஆழி காலின் கீழ் மேல் வருதல் – மகத:6/35
சீர்மைய ஆகி சிறந்து கீழ் எழுந்த – நரவாண:6/69

TOP


கீழ்ப்பட்டு (1)

ஏழ்ச்சி இன்றி கீழ்ப்பட்டு ஒழுகினும் – வத்தவ:11/15

TOP


கீழா (1)

வினை தீர் உயிரின் மிதந்தது கீழா
பண் அமை நெடும் புணை திண்ணிதின் தழீஇ – உஞ்ஞை:40/186,187

TOP


கீழும் (2)

கீழும் மேலும் கேட்புழி எல்லாம் – மகத:20/154
மேலும் கீழும் மேவர நோக்கி – நரவாண:1/86

TOP


கீறி (1)

கூறை கீறி சூழ்வர உடீஇ – வத்தவ:14/66

TOP