Select Page

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெடை 3
பெடையோடும் 1
பெண் 6
பெண்_கொடிக்கே 1
பெண்ணை 2
பெம்மான் 1
பெய் 2
பெய்த 1
பெய்தான் 1
பெய்யும் 1
பெயர்ப்பர் 1
பெயரும் 2
பெரிதாம் 1
பெரிதும் 1
பெரிய 4
பெரியர் 2
பெரியான் 1
பெரு 3
பெருக்கும் 1
பெருகின் 1
பெருகுவதாய் 1
பெருநிலம் 1
பெரும் 11
பெரும்பான்மையும் 2
பெருமான் 3
பெருமை 1
பெற்றார்க்கு 1
பெறாது 1
பெறுதற்கு 1

பெடை (3)

வென்றான் வியன் கன்னி அன்னம் தன் மென் பெடை மெய் அளிப்ப – பாண்டிக்கோவை:11 111/2
அன்பால் பெடை புல்லி அன்னம் நடுங்கும் அரும் பனி நாள் – பாண்டிக்கோவை:18 270/2
மென் பெடை புல்லி குருகு நரல்கின்ற வீழ் பனியே – பாண்டிக்கோவை:18 271/4

மேல்

பெடையோடும் (1)

மேயின தம் பெடையோடும் எம் மெல்_இயலாளை வெம் தீ – பாண்டிக்கோவை:14 169/1

மேல்

பெண் (6)

பெருநிலம் காவலன் தென் புனல் நாடு அன்ன பெண் அணங்கின் – பாண்டிக்கோவை:2 19/3
பெருமான் வரோதயன் கொல்லை அம் சாரல் அ பெண்_கொடிக்கே – பாண்டிக்கோவை:3 39/4
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/3
பெரும் கடல் ஞாலத்துள் பெண் பிறந்தார் தம் பெற்றார்க்கு உதவார் – பாண்டிக்கோவை:17 224/2
பெய்தான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன பெண் கொடியே – பாண்டிக்கோவை:18 263/4
பிடாவும் மலர்வன கண்டே மெலிவது என் பெண் அணங்கே – பாண்டிக்கோவை:18 325/4

மேல்

பெண்_கொடிக்கே (1)

பெருமான் வரோதயன் கொல்லை அம் சாரல் அ பெண்_கொடிக்கே – பாண்டிக்கோவை:3 39/4

மேல்

பெண்ணை (2)

கரு நெடும் பெண்ணை செம் கேழ் மடல் ஊர கருதுவரே – பாண்டிக்கோவை:10 93/4
குல மன்னன் கன்னி குலை வளர் பெண்ணை கொழு மடலே – பாண்டிக்கோவை:10 96/4

மேல்

பெம்மான் (1)

வில் மலி தானை நெடும் தேர் விசாரிதன் வேந்தன் பெம்மான்
கொன் மலி வேல் நெடும் கண் இணை பேதை கொடியினையே – பாண்டிக்கோவை:16 203/3,4

மேல்

பெய் (2)

பிணி நிற வார் குழல் பெய் வளை தோளி நின்னை பிரியேன் – பாண்டிக்கோவை:1 11/3
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/3

மேல்

பெய்த (1)

புல்லார் அவிய நெல்வேலி பொரு கணை மாரி பெய்த
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 288/3,4

மேல்

பெய்தான் (1)

பெய்தான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன பெண் கொடியே – பாண்டிக்கோவை:18 263/4

மேல்

பெய்யும் (1)

இடாவும் மத மா மழை பெய்யும் ஓதை என முழங்க – பாண்டிக்கோவை:18 325/3

மேல்

பெயர்ப்பர் (1)

ஆவி சென்றால் பின்னை யாரோ பெயர்ப்பர் அகலிடத்தே – பாண்டிக்கோவை:4 49/4

மேல்

பெயரும் (2)

ஊரின் பெயரும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 60/4
பதியின் பெயரும் நும் பேரும் அறிய பகர்-மின்களே – பாண்டிக்கோவை:5 61/4

மேல்

பெரிதாம் (1)

பஞ்சு ஆர் அகல் அல்குல்-பால் பகல் வந்தால் பழி பெரிதாம்
மஞ்சு ஆர் சிலம்பா வரவு என்ன ஊனம் மயங்கு இருளே – பாண்டிக்கோவை:17 255/3,4

மேல்

பெரிதும் (1)

தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே – பாண்டிக்கோவை:18 314/4

மேல்

பெரிய (4)

பெரிய நிலைமை அவரே பெரியர் பிறை எயிற்று – பாண்டிக்கோவை:3 45/1
பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு – பாண்டிக்கோவை:18 318/3
பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு – பாண்டிக்கோவை:18 318/3
பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு – பாண்டிக்கோவை:18 318/3

மேல்

பெரியர் (2)

பெரிய நிலைமை அவரே பெரியர் பிறை எயிற்று – பாண்டிக்கோவை:3 45/1
நீடிய காதலர் தாமே பெரியர் இ நீள் நிலத்தே – பாண்டிக்கோவை:18 313/4

மேல்

பெரியான் (1)

இரு நெடும் தோள் அண்ணலே பெரியான் வல்லத்து ஏற்ற தெவ்வர் – பாண்டிக்கோவை:3 44/1

மேல்

பெரு (3)

பெரு மனைக்கே உய்க்குமோ உரையாய் மற்று என் பேதையையே – பாண்டிக்கோவை:17 228/4
பெரு மா மழை கண்ணும் நித்திலம் சிந்தின பேதுறவே – பாண்டிக்கோவை:18 323/4
பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல் – பாண்டிக்கோவை:18 334/2

மேல்

பெருக்கும் (1)

கேளே பெருக்கும் அரும் பொருள் செய்தற்கு கேடு_இல் திங்கள் – பாண்டிக்கோவை:18 303/1

மேல்

பெருகின் (1)

கடல் ஏறிய கழி காமம் பெருகின் கரும் பனையின் – பாண்டிக்கோவை:10 92/3

மேல்

பெருகுவதாய் (1)

அரு நெடும் காமம் பெருகுவதாய் விடின் ஆடவர்கள் – பாண்டிக்கோவை:10 93/3

மேல்

பெருநிலம் (1)

பெருநிலம் காவலன் தென் புனல் நாடு அன்ன பெண் அணங்கின் – பாண்டிக்கோவை:2 19/3

மேல்

பெரும் (11)

பெரும் கழல் வீக்கிய பூழியன் மாறன் தென் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:1 6/2
வல்லி சிறு மருங்குல் பெரும் தோள் மடவார் வடி கண் – பாண்டிக்கோவை:3 36/1
பெரும் படை கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு நின் பேர் ஒளி சேர் – பாண்டிக்கோவை:4 53/3
பிடியொடு போந்தது உண்டோ உரையீர் ஒர் பெரும் களிறே – பாண்டிக்கோவை:5 65/4
மண் தான் நிறைந்த பெரும் புகழ் மாறன் மந்தாரம் என்னும் – பாண்டிக்கோவை:8 88/1
ஓங்கும் பெரும் புகழ் செங்கோல் உசிதன் உறு கலியை – பாண்டிக்கோவை:10 100/1
ஏனல் எம் காவலர் யாய் தந்தை இந்த பெரும் புனத்து – பாண்டிக்கோவை:12 134/3
பெரும் கழி காதன்மை நீங்கி இவனில் பிரிந்தனவே – பாண்டிக்கோவை:14 168/4
உரை ஆர் பெரும் புகழ் செங்கோல் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:14 174/2
பெரும் கண்ணியாரை பொன் வேங்கை என்றோ இன்னும் பேசுவதே – பாண்டிக்கோவை:14 179/4
பெரும் கடல் ஞாலத்துள் பெண் பிறந்தார் தம் பெற்றார்க்கு உதவார் – பாண்டிக்கோவை:17 224/2

மேல்

பெரும்பான்மையும் (2)

பெரும்பான்மையும் பெறுதற்கு அரிதாம் விதி பேணி நில்லா – பாண்டிக்கோவை:4 56/1
பெரும்பான்மையும் இன்று வாராவிடான் வரின் பேர் அமர் கண் – பாண்டிக்கோவை:11 107/3

மேல்

பெருமான் (3)

பெருமான் வரோதயன் கொல்லை அம் சாரல் அ பெண்_கொடிக்கே – பாண்டிக்கோவை:3 39/4
பெருமான் தனது குலம் முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:8 87/4
மலை மிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:12 114/2

மேல்

பெருமை (1)

ஏதலர் நோய் செய்வதோ நின் பெருமை என நெருங்கி – பாண்டிக்கோவை:17 237/3

மேல்

பெற்றார்க்கு (1)

பெரும் கடல் ஞாலத்துள் பெண் பிறந்தார் தம் பெற்றார்க்கு உதவார் – பாண்டிக்கோவை:17 224/2

மேல்

பெறாது (1)

அளியும் பெறாது நெஞ்சே நைய நின்ற இவ் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:18 321/4

மேல்

பெறுதற்கு (1)

பெரும்பான்மையும் பெறுதற்கு அரிதாம் விதி பேணி நில்லா – பாண்டிக்கோவை:4 56/1

மேல்