Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிடவே 1
பிடாவும் 1
பிடி 1
பிடியொடு 2
பிண்டி 2
பிண்டியின் 2
பிணி 1
பிணித்த 1
பிணை 2
பிதிர் 1
பிதிர்ந்தால் 1
பிரான் 2
பிரிது 1
பிரிந்த 1
பிரிந்தனவே 1
பிரிந்து 2
பிரியல் 1
பிரியலுற்றார் 1
பிரியாத 1
பிரியினும் 2
பிரியேன் 3
பிழைப்பு 2
பிறந்தார் 1
பிறர் 3
பிறரும் 2
பிறவி 1
பிறழ்வு 1
பிறழ்வு_இல் 1
பிறழ 1
பிறழும் 1
பிறை 4
பிறையின் 1
பின் 10
பின்னை 3

பிடவே (1)

கட்டு ஆர் கமழ் கண்ணி போல் மலர்கின்றன கார் பிடவே – பாண்டிக்கோவை:18 276/4

மேல்

பிடாவும் (1)

பிடாவும் மலர்வன கண்டே மெலிவது என் பெண் அணங்கே – பாண்டிக்கோவை:18 325/4

மேல்

பிடி (1)

கானத்திடை பிடி கையகலாத கரும் களிறே – பாண்டிக்கோவை:18 294/4

மேல்

பிடியொடு (2)

பிடியொடு போந்தது உண்டோ உரையீர் ஒர் பெரும் களிறே – பாண்டிக்கோவை:5 65/4
கண் இவர் காதல் பிடியொடு நின்ற கரும் களிறே – பாண்டிக்கோவை:17 261/4

மேல்

பிண்டி (2)

கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே – பாண்டிக்கோவை:15 183/4
பூந்தளம் பிண்டி எரி போல் விரியும் பொழில் அகமே – பாண்டிக்கோவை:15 184/4

மேல்

பிண்டியின் (2)

செம் கேழ் மலர் இன் தளிர் இளம் பிண்டியின் நீள் தழையே – பாண்டிக்கோவை:12 139/4
செல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தே மலரே – பாண்டிக்கோவை:18 310/4

மேல்

பிணி (1)

பிணி நிற வார் குழல் பெய் வளை தோளி நின்னை பிரியேன் – பாண்டிக்கோவை:1 11/3

மேல்

பிணித்த (1)

நிறையாம் வகை வைத்து நீத்தவர் தேரொடு நீ பிணித்த
இறை ஆர் வரி வளை சேர வந்து ஆர்த்தன ஏர் முகிலே – பாண்டிக்கோவை:18 333/3,4

மேல்

பிணை (2)

கொடி ஆர் இடை மட மான் பிணை நோக்கி குழை முகமே – பாண்டிக்கோவை:18 272/4
விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது – பாண்டிக்கோவை:18 277/3

மேல்

பிதிர் (1)

இன் பிதிர் வாங்கி எண்கு ஏறு கிளைத்து உண்ணும் ஈண்டு இருளே – பாண்டிக்கோவை:17 246/4

மேல்

பிதிர்ந்தால் (1)

பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று – பாண்டிக்கோவை:17 246/3

மேல்

பிரான் (2)

முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி – பாண்டிக்கோவை:1 12/3
துணி நிற வேல் மன்னன் தென்னர் பிரான் சுடர் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:11 112/3

மேல்

பிரிது (1)

சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே – பாண்டிக்கோவை:17 232/4

மேல்

பிரிந்த (1)

துடி ஆர் இடையாய் வருந்தல் பிரிந்த துளங்கு ஒளி சேர் – பாண்டிக்கோவை:18 329/3

மேல்

பிரிந்தனவே (1)

பெரும் கழி காதன்மை நீங்கி இவனில் பிரிந்தனவே – பாண்டிக்கோவை:14 168/4

மேல்

பிரிந்து (2)

புல்லி பிரிந்து அறியாத மந்தாரத்து எம் கோன் புனல் நாட்டு – பாண்டிக்கோவை:3 36/2
இலை மாண் பகழியின் ஏவுண்டு தன் இனத்துள் பிரிந்து ஓர் – பாண்டிக்கோவை:5 67/3

மேல்

பிரியல் (1)

நுழையும் பிரியல் உறான் அறியேன் இவன் உள்ளியதே – பாண்டிக்கோவை:7 82/4

மேல்

பிரியலுற்றார் (1)

நாளே குறித்து பிரியலுற்றார் நமர் தீ விழியால் – பாண்டிக்கோவை:18 303/2

மேல்

பிரியாத (1)

தெய்வம் எல்லாம் மருவி பிரியாத சிறு நெறியே – பாண்டிக்கோவை:17 247/4

மேல்

பிரியினும் (2)

நின்னின் பிரியேன் பிரியினும் ஆற்றேன் நெடும் பணை தோள் – பாண்டிக்கோவை:1 10/3
அன்னாய் பிரியேன் பிரியினும் ஆற்றேன் அழுங்கற்கவே – பாண்டிக்கோவை:1 12/4

மேல்

பிரியேன் (3)

நின்னின் பிரியேன் பிரியினும் ஆற்றேன் நெடும் பணை தோள் – பாண்டிக்கோவை:1 10/3
பிணி நிற வார் குழல் பெய் வளை தோளி நின்னை பிரியேன்
மணி நிறம் பொன் நிறம் ஆக என் ஆவி வருந்துவதே – பாண்டிக்கோவை:1 11/3,4
அன்னாய் பிரியேன் பிரியினும் ஆற்றேன் அழுங்கற்கவே – பாண்டிக்கோவை:1 12/4

மேல்

பிழைப்பு (2)

தொழுது வழிபடற்பாலை பிழைப்பு எண்ணல் தோன்றலையே – பாண்டிக்கோவை:18 299/4
பேரான் சுவலின் இருப்ப வந்தான் பிழைப்பு எண்ணப்பெறாய் – பாண்டிக்கோவை:18 300/2

மேல்

பிறந்தார் (1)

பெரும் கடல் ஞாலத்துள் பெண் பிறந்தார் தம் பெற்றார்க்கு உதவார் – பாண்டிக்கோவை:17 224/2

மேல்

பிறர் (3)

விரை உறை கோதை உயிர் செல்லின் யார் பிறர் மீட்பவரே – பாண்டிக்கோவை:4 50/4
உரைப்பார் பிறர் இனி யாவர்-கொல்லோ இவ் உலகினுள்ளே – பாண்டிக்கோவை:14 182/4
முந்நீர் பயந்தால் அணிவார் பிறர் என்ப முத்தங்களே – பாண்டிக்கோவை:17 223/4

மேல்

பிறரும் (2)

கார் அணி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 191/3
கார் மலி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 193/3

மேல்

பிறவி (1)

கண்டார் உளரோ உரையார் பிறவி அன்ன கட்டுரையே – பாண்டிக்கோவை:3 32/4

மேல்

பிறழ்வு (1)

பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல் – பாண்டிக்கோவை:18 334/2

மேல்

பிறழ்வு_இல் (1)

பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல் – பாண்டிக்கோவை:18 334/2

மேல்

பிறழ (1)

கய-வாய் மலர் போல் கரும் கண் பிறழ வெண் தோடு இலங்க – பாண்டிக்கோவை:18 273/1

மேல்

பிறழும் (1)

பாயும் கயல் அவர் கண் போல் பிறழும் பழனங்களே – பாண்டிக்கோவை:17 208/4

மேல்

பிறை (4)

பெரிய நிலைமை அவரே பெரியர் பிறை எயிற்று – பாண்டிக்கோவை:3 45/1
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/3
பெருமான் தனது குலம் முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:8 87/4
பேர்ந்தான்-தனது குல முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:18 304/4

மேல்

பிறையின் (1)

பிறையின் மலிந்த சிறு நுதல் பேர் அமர் கண் மடவீர் – பாண்டிக்கோவை:5 63/3

மேல்

பின் (10)

கண் கண்ட பின் உரையீர் உரைத்த இ கட்டுரையே – பாண்டிக்கோவை:3 34/4
எளிதே எழுத எழுதி பின் ஊர்க எழில் மடலே – பாண்டிக்கோவை:10 98/4
சென்றார் ஒருவர் பின் வந்து அறியார் இ செழும் புனத்தே – பாண்டிக்கோவை:11 111/4
வேடு அகம் சேர்ந்த வெம் கானம் விடலையின் பின் மெல் அடி மேல் – பாண்டிக்கோவை:17 210/1
நளி முத்த வெண் மணல் மேலும் பனிப்பன நண்பன் பின் போய் – பாண்டிக்கோவை:17 211/1
சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்கு சொல்லுமே – பாண்டிக்கோவை:17 214/3
கழலான் ஒருவன் பின் செங்கோல் கலிமதனன் பகை போல் – பாண்டிக்கோவை:17 216/3
இடையாள் விடலை பின் சென்றனளோ இவ் இரும் சுரத்தே – பாண்டிக்கோவை:17 217/4
வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்ற நும் மெல்_இயல் மாட்டு – பாண்டிக்கோவை:17 223/1
மெய் மா மத களி வேழங்கள் பின் வர முன்னுக தேர் – பாண்டிக்கோவை:18 280/2

மேல்

பின்னை (3)

ஆவி சென்றால் பின்னை யாரோ பெயர்ப்பர் அகலிடத்தே – பாண்டிக்கோவை:4 49/4
பொய் ஒன்றும் நின் கண் நிகழும் என்றால் பின்னை பூம் சிலம்பா – பாண்டிக்கோவை:14 181/3
கடந்தால் அதன் பின்னை அன்றே வருவது காய் கதிரே – பாண்டிக்கோவை:18 293/4

மேல்