Select Page

கட்டுருபன்கள்


சொரி (1)

சுழலும் வரி வண்டு அலம்ப சொரி மதம் வாய் புக நின்று – பாண்டிக்கோவை:18 307/1

மேல்

சொல் (6)

மருங்கு உழல்வாய் நீ அறிதி வண்டே சொல் எனக்கு மங்கை – பாண்டிக்கோவை:1 8/3
பண் கொண்ட சொல் அம் மடந்தை முகத்து பைம் பூம் குவளை – பாண்டிக்கோவை:3 34/3
பண்ணும் புரை சொல் இவட்கும் இவற்கும் பல நினைந்து இங்கு – பாண்டிக்கோவை:5 71/3
துடி ஆர் இடை வடி வேல் கண் மடந்தை தன் சொல் அறிந்தால் – பாண்டிக்கோவை:12 138/1
சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்கு சொல்லுமே – பாண்டிக்கோவை:17 214/3
பண் குடை சொல் இவள் காரணமா பனி முத்து இலங்கும் – பாண்டிக்கோவை:17 245/1

மேல்

சொல்தான் (1)

சொல்தான் என கிள்ளையோ நீர் எழுத துணிகின்றதே – பாண்டிக்கோவை:10 99/4

மேல்

சொல்ல (1)

மெய் வான் வரோதயன் கொல்லியில் வேங்கை கணிமை சொல்ல
செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/2,3

மேல்

சொல்லல் (1)

என்னால் இது செய்க என்று என் சொல்லல் ஆம் இகல் பாழி வென்ற – பாண்டிக்கோவை:16 197/1

மேல்

சொல்லாய் (6)

செயல் மன்னும் ஆவது சொல்லாய் சிலம்ப தென் பாழி வென்ற – பாண்டிக்கோவை:14 172/1
பண் தான் அனைய சொல்லாய் பைய ஏகு பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:16 204/1
என் கண் படாத நிலைமை சொல்லாய் இளம் சேவல் தழீஇ – பாண்டிக்கோவை:17 238/3
சென்றார் உளரோ நினக்கும் சொல்லாய் செந்நிலத்து வெம் போர் – பாண்டிக்கோவை:17 258/2
பண்தான் அனைய சொல்லாய் பரி விட்டு பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:18 340/1
நீடு நிலைமையும் அல்லை சொல்லாய் என் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 346/4

மேல்

சொல்லார் (1)

பொய்தான் இலாத சொல்லார் செல்வர் போலும் புல்லாது அமரே – பாண்டிக்கோவை:18 263/2

மேல்

சொல்லி (1)

பண் இவர் சொல்லி கண்டாள் நென்னல் பாழி பகை தணித்த – பாண்டிக்கோவை:17 261/1

மேல்

சொல்லின் (2)

உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உறு செல்வர் சொல்லின்
மற்று எமராய்விடின் வானவன் தான் உடை மான் இனைய – பாண்டிக்கோவை:12 132/1,2
விரை பால் நறும் கண்ணியாய் பொய்மை நீ சொல்லின் மெய்ம்மை என்பது – பாண்டிக்கோவை:14 182/3

மேல்

சொல்லு (2)

தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செம் துவர் வாய் – பாண்டிக்கோவை:1 4/3
நங்கள் மனைக்கே வர நல்குமோ சொல்லு வேல நல்கு – பாண்டிக்கோவை:17 227/3

மேல்

சொல்லு-மின் (1)

தூ உண்டை வண்டினங்காள் வம்-மின் சொல்லு-மின் துன்னி நில்லா – பாண்டிக்கோவை:1 5/1

மேல்

சொல்லுதுமேல் (1)

துளியும் துறந்த வெம் கானம் செலவு இன்று சொல்லுதுமேல்
ஒளியும் திரு நுதல் வாடி உய்யாள்-கொல் உசிதன் என்ற – பாண்டிக்கோவை:18 321/1,2

மேல்

சொல்லும் (1)

பஞ்சு ஆர் அகல் அல்குலாள் தன்மை சொல்லும் பணை முலை மேல் – பாண்டிக்கோவை:18 311/3

மேல்

சொல்லும்-கொல் (1)

வடுத்தான் படா வணம் சொல்லும்-கொல் வானோர்க்கு அமிழ்து இயற்றி – பாண்டிக்கோவை:17 262/2

மேல்

சொல்லுமே (1)

சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்கு சொல்லுமே
பல்லவம் ஆக்கி தன் பாவை வளர்க்கின்ற பைம் குரவே – பாண்டிக்கோவை:17 214/3,4

மேல்

சொல்லுவதே (2)

சுரும்பு ஆர் கரும் குழலாய் அறியேன் இனி சொல்லுவதே – பாண்டிக்கோவை:11 107/4
தோடு இயல் பூம் தொங்கலாய் அறியேன் சென்று சொல்லுவதே – பாண்டிக்கோவை:12 129/4

மேல்

சொன்ன (2)

கண்டான் பொதியில் இதுவே அவன் சொன்ன கார் புனமே – பாண்டிக்கோவை:3 42/4
அரும்பு ஆர் தழையும் கொண்டு யான் சொன்ன பொய்யை மெய் என்று அகலான் – பாண்டிக்கோவை:11 107/2

மேல்