Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செங்கயல் 2
செங்கயலோடு 1
செங்கழுநீர் 1
செங்காந்தள் 2
செங்கோல் 38
செங்கோலவன் 2
செஞ்சாந்து 2
செஞ்சுடர் 1
செஞ்சுடரே 1
செந்தாமரை 2
செந்தினை 1
செந்தீ 2
செந்நிலத்து 11
செந்நிலத்தை 8
செந்நீர் 1
செப்பு 1
செம் 11
செம்பியன் 3
செம்பொன் 5
செம்மை 1
செய் 1
செய்-வாய் 1
செய்க 1
செய்கை 1
செய்த 6
செய்தமையால் 1
செய்தற்கு 1
செய்தன 1
செய்தாம் 2
செய்தாய் 2
செய்தார் 2
செய்தான் 1
செய்ய 3
செய்யாதன 1
செய்யீர் 1
செய்யும் 3
செய்வது 2
செய்வதோ 1
செயல் 1
செரு 22
செருக்கு 1
செருவின் 2
செல் 1
செல்ல 3
செல்லல் 1
செல்லாத 1
செல்லார் 2
செல்லிய 1
செல்லியவோ 1
செல்லின் 1
செல்லுப 1
செல்லும் 4
செல்வ 1
செல்வது 3
செல்வதே 1
செல்வம் 1
செல்வர் 5
செல்வீர் 2
செல 6
செலவு 2
செலினும் 1
செலுத்தி 1
செவ் 14
செவ்வேள் 2
செழு 3
செழும் 9
செற்ற 18
செற்றார் 2
செற்றான் 2
செற்று 2
செறி 4
செறித்த 2
செறிந்த 1
செறிந்தார் 1
சென்ற 8
சென்றது 2
சென்றவரே 1
சென்றனளோ 1
சென்றார் 4
சென்றால் 3
சென்றாலும் 1
சென்றாளோ 1
சென்றான் 2
சென்று 21
சென்றுகோடும் 1
சென்றே 2
சென்றோ 1
சென்னி 2

செங்கயல் (2)

திரு மா முக திங்கள் செங்கயல் உண்கண் செம்பொன் சுணங்கு ஏர் – பாண்டிக்கோவை:3 39/1
செங்கயல் தாம் வைத்த தென்னவன் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:5 72/4

மேல்

செங்கயலோடு (1)

செங்கயலோடு சிலையும் கிடந்த திரு முகமே – பாண்டிக்கோவை:18 274/4

மேல்

செங்கழுநீர் (1)

வெள்ளத்து செங்கழுநீர் வைத்த கோன் தொண்டி வண்டு மென் பூ – பாண்டிக்கோவை:18 347/2

மேல்

செங்காந்தள் (2)

சந்தணம் சாந்து செங்காந்தள் அம் பூ தழல் போல் விரியும் – பாண்டிக்கோவை:15 183/3
படுமலை போல் வண்டு பாடி செங்காந்தள் பைம் தேன் பருகும் – பாண்டிக்கோவை:17 234/3

மேல்

செங்கோல் (38)

மன்னிற்கு வானம் கொடுத்த செங்கோல் மன்னன் வஞ்சி அன்னாய் – பாண்டிக்கோவை:1 10/2
படி வண்ணம் செங்கோல் பராங்குசன் கொல்லி பனி வரை-வாய் – பாண்டிக்கோவை:3 38/3
அளி மன்னு செங்கோல் அதிசயன் ஆற்றுக்குடியுள் வென்ற – பாண்டிக்கோவை:3 47/3
அரும்பு உடை தொங்கல் செங்கோல் அரிகேசரி கூடல் அன்ன – பாண்டிக்கோவை:4 53/1
ஓங்கும் பெரும் புகழ் செங்கோல் உசிதன் உறு கலியை – பாண்டிக்கோவை:10 100/1
மண் இவர் செங்கோல் வரோதயன் வையை நல் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:11 104/2
மண் இவர் செங்கோல் வரோதயன் வல்லத்து மாற்றலர்க்கு – பாண்டிக்கோவை:12 116/1
நெறி கெழு செங்கோல் நடாம் நெடுமாறன் நெல்வேலி வென்றான் – பாண்டிக்கோவை:12 123/2
அறம் புரி செங்கோல் அரிகேசரி திருத்தாள் அடையார் – பாண்டிக்கோவை:13 143/1
மண் போய் அழிக்கும் செங்கோல் மன்னன் வையை நல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:13 147/2
ஓங்கிய வெண்குடை பைம் கழல் செங்கோல் உசிதன் வையை – பாண்டிக்கோவை:13 152/1
குறிவான் இகந்த செங்கோல் அரிகேசரி கூடல் அன்ன – பாண்டிக்கோவை:14 154/3
தென்னன் திருமால் கழல் நெடுமாறன் திருந்து செங்கோல்
மன்னன் குமரி கரும் கழி மேய்ந்த வண்டானங்களே – பாண்டிக்கோவை:14 167/3,4
உரை ஆர் பெரும் புகழ் செங்கோல் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:14 174/2
மெய் நின்ற செங்கோல் விசயசரிதன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:14 180/3
குன்று ஒத்த யானை செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:16 195/1
மின் ஆர் அயில் படை செங்கோல் விசாரிதன் வீங்கு ஒலி நீர் – பாண்டிக்கோவை:16 197/2
காணும் கழல் நெடுமாறன் செங்கோல் நின்று காக்கும் மண் மேல் – பாண்டிக்கோவை:16 200/2
அலை மன்னு பைம் கழல் செங்கோல் அரிகேசரி அளி ஆர் – பாண்டிக்கோவை:17 206/1
ஒளி முத்த வெண்குடை செங்கோல் உசிதன் உறந்தை அன்ன – பாண்டிக்கோவை:17 211/3
கழலான் ஒருவன் பின் செங்கோல் கலிமதனன் பகை போல் – பாண்டிக்கோவை:17 216/3
உருமினை நீள் கொடி மேல் கொண்ட செங்கோல் உசிதன் எம் கோன் – பாண்டிக்கோவை:17 228/1
வடு மலையாத செங்கோல் மன்னன் வஞ்சி அன்னாய் மகிழ்ந்து – பாண்டிக்கோவை:17 234/2
தேன் தோய் கமழ் கண்ணி செம்பியன் மாறன் செங்கோல் மணந்த – பாண்டிக்கோவை:17 235/3
ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல் – பாண்டிக்கோவை:17 239/1
வார் உந்து பைம் கழல் செங்கோல் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:17 240/1
அருள் தங்கு செங்கோல் அடல் மன்னன் கொல்லி அரு வரை-வாய் – பாண்டிக்கோவை:17 244/2
ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெவ் முனை போல் எரிவு ஏய் – பாண்டிக்கோவை:18 289/3
அருள் மன்னு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 295/3
சிகர களிற்று செங்கோல் நெடுமாறன் தென் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:18 296/2
ஆளே கனலும் கொல் யானை செங்கோல் அரிகேசரி-தன் – பாண்டிக்கோவை:18 303/3
தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் என சிறந்த – பாண்டிக்கோவை:18 321/3
கை ஆர் கொடும் சிலை செங்கோல் கலிமதன் காய் கலிக்கு – பாண்டிக்கோவை:18 322/3
கடாவும் நெடும் தேர் கலிமதனன் கலி தேய செங்கோல்
நடாவும் நகை முத்த வெண்குடை வேந்தன் நண்ணார் மதில் பாய்ந்து – பாண்டிக்கோவை:18 325/1,2
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனை போல் – பாண்டிக்கோவை:18 326/2
பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல்
அரு நெடும் தானை அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 334/2,3
பார் மன்னு செங்கோல் பாராங்குசன் கொல்லி பனி வரை-வாய் – பாண்டிக்கோவை:18 335/1
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 344/3

மேல்

செங்கோலவன் (2)

நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ்நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 332/4
நிலத்தில் பொலிந்த செங்கோலவன் நீள் புனல் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 337/2

மேல்

செஞ்சாந்து (2)

திருமால் அகலம் செஞ்சாந்து அணிந்து அன்ன செவ் வான் முகட்டு – பாண்டிக்கோவை:8 87/1
செஞ்சாந்து அணிந்து வந்தாள் செய்த கோலத்தின் சே_இழையே – பாண்டிக்கோவை:18 311/4

மேல்

செஞ்சுடர் (1)

செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல் – பாண்டிக்கோவை:18 316/2

மேல்

செஞ்சுடரே (1)

திரு நெடும் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே – பாண்டிக்கோவை:18 292/4

மேல்

செந்தாமரை (2)

திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து – பாண்டிக்கோவை:3 29/3
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து – பாண்டிக்கோவை:3 44/3

மேல்

செந்தினை (1)

செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/3

மேல்

செந்தீ (2)

தெவ் மாண்பு அழிந்து செந்தீ மூழ்க சேவூர் செருவின் அன்று – பாண்டிக்கோவை:11 108/1
கழலும் வரி வளை காக்க வந்தன்று கனலும் செந்தீ
தழலும் குளிர்ந்து பொடிப்பட போர்க்கின்ற தாழ் பனியே – பாண்டிக்கோவை:18 307/3,4

மேல்

செந்நிலத்து (11)

சின வேல் வலம் கொண்டு செந்நிலத்து ஏற்ற தெவ் வேந்தர்கள் போய் – பாண்டிக்கோவை:2 18/1
சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:5 67/1
செறிந்தார் கரும் கழல் தென்னவன் செந்நிலத்து செருவின் – பாண்டிக்கோவை:5 70/1
தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:8 84/1
செரு மால் அரசு உக செந்நிலத்து அட்ட தென் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:8 87/3
சேயே என நின்ற தென்னவன் செந்நிலத்து ஏற்ற தெவ்வர் – பாண்டிக்கோவை:12 121/1
செந்நிலத்து கணையால் சிலை உந்தி கறுத்து எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:13 145/1
செந்நிலத்து பட சீறிய கோன் செழும் தண் பொதியில் – பாண்டிக்கோவை:13 145/2
திரை ஆர் குருதி புனல் மூழ்க செந்நிலத்து அன்று வென்ற – பாண்டிக்கோவை:14 174/1
சென்றார் உளரோ நினக்கும் சொல்லாய் செந்நிலத்து வெம் போர் – பாண்டிக்கோவை:17 258/2
சேர்ந்தார் புறம்கண்டு செந்நிலத்து அன்று திண் தேர் மறித்து – பாண்டிக்கோவை:18 304/3

மேல்

செந்நிலத்தை (8)

தே மரு செவ் வாய் தளிரா செரு செந்நிலத்தை வென்ற – பாண்டிக்கோவை:1 1/2
தேயத்தவர் உயிரை புலன் அன்று என்பர் செந்நிலத்தை
காய கனன்று எரிந்தார் மருமத்து கடும் கணைகள் – பாண்டிக்கோவை:2 21/1,2
செற்றார் பட செந்நிலத்தை வென்றான் தென்னன் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:10 99/3
கந்து ஆர் களிறு கடாய் செந்நிலத்தை கறுத்து எதிர்ந்து – பாண்டிக்கோவை:13 146/1
சென்று செரு மலைந்தார்கள் செந்நீர் மூழ்க செந்நிலத்தை
வென்று களம்கொண்ட கோன் தமிழ்நாடு அன்ன மெல்_இயலாய் – பாண்டிக்கோவை:17 243/1,2
செய்தார் பட செந்நிலத்தை கணை மழை திண் சிலையால் – பாண்டிக்கோவை:18 263/3
சேரார் முனை மிசை சேறலுற்றார் நமர் செந்நிலத்தை
ஓராது எதிர்ந்தார் உடல் மீது உலாவி உருள் சிவந்த – பாண்டிக்கோவை:18 266/2,3
சென்றார் வருவது நன்கு அறிந்தேன் செரு செந்நிலத்தை
வென்றான் பகை போல் மெல் இயல் மடந்தை முன் வெற்பு எடுத்து – பாண்டிக்கோவை:18 341/1,2

மேல்

செந்நீர் (1)

சென்று செரு மலைந்தார்கள் செந்நீர் மூழ்க செந்நிலத்தை – பாண்டிக்கோவை:17 243/1

மேல்

செப்பு (1)

வரும் மா முலை மணி செப்பு இணை வானவன் கானம் முன்ன – பாண்டிக்கோவை:3 39/2

மேல்

செம் (11)

தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செம் துவர் வாய் – பாண்டிக்கோவை:1 4/3
கோ உண்டை கோட்டாற்று அழிவித்த கோன் கொங்க நாட்ட செம் கேழ் – பாண்டிக்கோவை:1 5/2
பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செம் கேழ் – பாண்டிக்கோவை:4 54/3
பருந்து இவர் செம் சுடர் வெல் வேல் பராங்குசன் பற்றலர் போல் – பாண்டிக்கோவை:6 80/3
செரு நெடும் செம் சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:10 93/2
கரு நெடும் பெண்ணை செம் கேழ் மடல் ஊர கருதுவரே – பாண்டிக்கோவை:10 93/4
செம் கேழ் மலர் இன் தளிர் இளம் பிண்டியின் நீள் தழையே – பாண்டிக்கோவை:12 139/4
அம் சிறை வண்டு அறை காந்தள் அம் செம் போது சென்று யான் தருவேன் – பாண்டிக்கோவை:14 164/1
கரும் கழி மேய்ந்த செம் கால் வெள்ளை அன்னம் கதிரொடும் தம் – பாண்டிக்கோவை:14 168/3
வாளையும் செம் கண் வராலும் மடல் இளம் தெங்கு உகுத்த – பாண்டிக்கோவை:17 220/3
வெய்யார் அமரிடை வீழ செம் தூவி வெள்ளம் புகைத்த – பாண்டிக்கோவை:18 328/3

மேல்

செம்பியன் (3)

தேன் தோய் கமழ் கண்ணி செம்பியன் மாறன் செங்கோல் மணந்த – பாண்டிக்கோவை:17 235/3
செறி கழல் வானவன் செம்பியன் தென் நாடு அனைய வென்றி – பாண்டிக்கோவை:18 278/1
தேன் இறவு ஆர் கண்ணி செம்பியன் மாறன் செழும் குமரி – பாண்டிக்கோவை:18 338/1

மேல்

செம்பொன் (5)

சென்றான் கரும் கயல் சூட்டிய சென்னி செம்பொன் வரை போல் – பாண்டிக்கோவை:3 35/2
திரு மா முக திங்கள் செங்கயல் உண்கண் செம்பொன் சுணங்கு ஏர் – பாண்டிக்கோவை:3 39/1
வடிவு ஆர் இலங்கு அயில் மன்னரை வென்ற வழுதி செம்பொன்
அடி நாள்_மலர் இணை சூடா மடந்தையர் போல் அயர்ந்தே – பாண்டிக்கோவை:5 73/3,4
சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன்
மலை மிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:12 114/1,2
கோடல் மலர்ந்து குருகு இலை தோன்றின கொன்றை செம்பொன்
பாடல் மணி வண்டு பாண்செய பாரித்த பாழி வென்ற – பாண்டிக்கோவை:18 343/1,2

மேல்

செம்மை (1)

செம்மை தனி கோல் திறல் மன்னன் சேவூர் செரு மலைந்தார்-தம்மை – பாண்டிக்கோவை:17 225/1

மேல்

செய் (1)

தென் நாடு எனினும் கொள்ளார் விலையாய் தமர் சீர் செய் வண்டு – பாண்டிக்கோவை:16 197/3

மேல்

செய்-வாய் (1)

செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/3

மேல்

செய்க (1)

என்னால் இது செய்க என்று என் சொல்லல் ஆம் இகல் பாழி வென்ற – பாண்டிக்கோவை:16 197/1

மேல்

செய்கை (1)

நன்றாம் இதன் செய்கை என்று என்னை நோக்கி நயந்து உருகி – பாண்டிக்கோவை:11 111/3

மேல்

செய்த (6)

தண் தாது அலர் கண்ணி அண்ணல்-தன் உள்ளம் தளர்வு செய்த
வண்டு ஆர் குழலவளே இவள் மால் நீர் மணற்றிமங்கை – பாண்டிக்கோவை:3 42/1,2
அன்னான் ஒருவன் அணைந்து எமக்கு செய்த ஆர் அருளே – பாண்டிக்கோவை:13 153/4
அலராய் விளைகின்றதால் அண்ணல் நீ செய்த ஆர் அருளே – பாண்டிக்கோவை:15 189/4
மருள் தான் என வண்டு பாடும் தண் தார் அண்ணல் வந்து செய்த
அருள் தான் அலராய் விளைகின்றதால் மற்று இவ் ஆய்_இழைக்கே – பாண்டிக்கோவை:15 190/3,4
களம் கொண்டு கார் செய்த காலை களவின் கவை முகத்த – பாண்டிக்கோவை:18 306/3
செஞ்சாந்து அணிந்து வந்தாள் செய்த கோலத்தின் சே_இழையே – பாண்டிக்கோவை:18 311/4

மேல்

செய்தமையால் (1)

விளியா வரும் துயர் செய்தமையால் விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:14 160/2

மேல்

செய்தற்கு (1)

கேளே பெருக்கும் அரும் பொருள் செய்தற்கு கேடு_இல் திங்கள் – பாண்டிக்கோவை:18 303/1

மேல்

செய்தன (1)

துயில்கொண்டில துணையோடும் என் செய்தன தோகைகளே – பாண்டிக்கோவை:15 186/4

மேல்

செய்தாம் (2)

நன்று செய்தாம் அல்லம் நல் நுதலாய் நறையாற்று வெம் போர் – பாண்டிக்கோவை:14 176/1
அன்று செய்தாம் எனில் நிற்பது அன்றோ நம் அகல் புனமே – பாண்டிக்கோவை:14 176/4

மேல்

செய்தாய் (2)

நினைப்பு அரும் புண்ணியம் செய்தாய் குரவே நெடுங்களத்து – பாண்டிக்கோவை:17 213/1
நான குழல் மங்கை நன்று செய்தாய் வென்று வாய் கனிந்த – பாண்டிக்கோவை:18 294/2

மேல்

செய்தார் (2)

நின்று செய்தார் உந்தி வந்த நெடும் கை களிற்று உடலால் – பாண்டிக்கோவை:14 176/2
செய்தார் பட செந்நிலத்தை கணை மழை திண் சிலையால் – பாண்டிக்கோவை:18 263/3

மேல்

செய்தான் (1)

குன்று செய்தான் கொல்லி வேங்கையை மெல் அரும்பாக கொய்தல் – பாண்டிக்கோவை:14 176/3

மேல்

செய்ய (3)

வேல் புரை வெம்மைய கானம் எனினும் அவ் வேந்தன் செய்ய
கோல் புரை தண்மைய ஆம் நும்மொடு ஏகின் இ கொம்பினுக்கே – பாண்டிக்கோவை:16 198/3,4
செறி கழல் வேந்தரை சேவூர் அமர் வென்ற தென்னன் செய்ய
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து – பாண்டிக்கோவை:17 218/1,2
நாடன் பகை போல் மெலிகின்றது என் செய்ய நல்_நுதலே – பாண்டிக்கோவை:18 343/4

மேல்

செய்யாதன (1)

மடல் ஏறுவர் மற்றும் செய்யாதன இல்லை மாநிலத்தே – பாண்டிக்கோவை:10 92/4

மேல்

செய்யீர் (1)

அங்கையின் சீறடி தீண்டி செய்யீர் செய்யும் ஆர் அருளே – பாண்டிக்கோவை:18 302/4

மேல்

செய்யும் (3)

சுரும்பு உடை கோதை நல்லாய் இவற்கு துயர் செய்யும் என்று உன் – பாண்டிக்கோவை:4 53/2
என் ஏந்திய புகழீர் இனி செய்யும் இரும் பொருளே – பாண்டிக்கோவை:18 291/4
அங்கையின் சீறடி தீண்டி செய்யீர் செய்யும் ஆர் அருளே – பாண்டிக்கோவை:18 302/4

மேல்

செய்வது (2)

நலம் புரி தெய்வம் அன்னாய் செய்வது என் நறையாற்று வென்ற – பாண்டிக்கோவை:16 196/1
கானம் கடந்து சென்றோ பொருள் செய்வது காதலரே – பாண்டிக்கோவை:18 289/4

மேல்

செய்வதோ (1)

ஏதலர் நோய் செய்வதோ நின் பெருமை என நெருங்கி – பாண்டிக்கோவை:17 237/3

மேல்

செயல் (1)

செயல் மன்னும் ஆவது சொல்லாய் சிலம்ப தென் பாழி வென்ற – பாண்டிக்கோவை:14 172/1

மேல்

செரு (22)

தே மரு செவ் வாய் தளிரா செரு செந்நிலத்தை வென்ற – பாண்டிக்கோவை:1 1/2
தேற்றம் இல்லாத தெவ் வேந்தரை சேவூர் செரு அழித்து – பாண்டிக்கோவை:1 9/1
சினமும் அழிந்து செரு இடை தோற்ற தெவ் வேந்தர்கள் போய் – பாண்டிக்கோவை:3 43/1
திரை உறை வார் புனல் சேவூர் செரு மன்னர் சீர் அழித்த – பாண்டிக்கோவை:4 50/1
தேர் மன்னு தானை பரப்பி தென் சேவூர் செரு மலைந்த – பாண்டிக்கோவை:5 59/1
சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:5 67/1
திருந்திய ஊசல் சென்று ஆடிக்-கொல் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:6 80/2
தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:8 84/1
செரு மால் அரசு உக செந்நிலத்து அட்ட தென் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:8 87/3
செரு நெடும் செம் சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:10 93/2
சிலை உடை வானவன் சேவூர் அழிய செரு அடர்த்த – பாண்டிக்கோவை:11 109/1
திண் தேர் வய மன்னர் சேவூர் அகத்து செரு அழிய – பாண்டிக்கோவை:12 120/1
சில் நாள் மறந்திலம் யாமும் தென் சேவூர் செரு மலைந்த – பாண்டிக்கோவை:13 153/1
தீரா விழுமம் தந்தாய் தென்னன் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:14 161/2
செம்மை தனி கோல் திறல் மன்னன் சேவூர் செரு மலைந்தார்-தம்மை – பாண்டிக்கோவை:17 225/1
செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ – பாண்டிக்கோவை:17 228/2
சென்று செரு மலைந்தார்கள் செந்நீர் மூழ்க செந்நிலத்தை – பாண்டிக்கோவை:17 243/1
தென்னவன் சேரர் பட நறையாற்று செரு அடர்த்த – பாண்டிக்கோவை:18 267/3
செரு நெடும் தானை எம் கோன் தெவ்வர் போல சென்று அத்தம் என்னும் – பாண்டிக்கோவை:18 292/2
செரு மால் கடல் படை சேரலர் கோன் நறையாற்று அழிய – பாண்டிக்கோவை:18 323/1
செரு வெம் படை மன்னர் போல் வெம் கானகம் சென்றவரே – பாண்டிக்கோவை:18 339/4
சென்றார் வருவது நன்கு அறிந்தேன் செரு செந்நிலத்தை – பாண்டிக்கோவை:18 341/1

மேல்

செருக்கு (1)

தெவ்வாய் எதிர்நின்ற சேரலர்கோனை செருக்கு அழித்து – பாண்டிக்கோவை:3 26/1

மேல்

செருவின் (2)

செறிந்தார் கரும் கழல் தென்னவன் செந்நிலத்து செருவின்
மறிந்தார் புறம்கண்டு நாணிய கோன் கொல்லி சாரல் வந்த – பாண்டிக்கோவை:5 70/1,2
தெவ் மாண்பு அழிந்து செந்தீ மூழ்க சேவூர் செருவின் அன்று – பாண்டிக்கோவை:11 108/1

மேல்

செல் (1)

சிலை மன்னு தோள் அண்ணல் சேந்தனை செல் எம் சிறுகுடிக்கே – பாண்டிக்கோவை:17 206/4

மேல்

செல்ல (3)

பை நின்ற ஆடு அரவு ஏர் அல்குலாள் செல்ல நாள் பணித்த – பாண்டிக்கோவை:14 180/1
தேன் நக்க தாரவர் காண்பர் செல்லார் அவர் செல்ல ஒட்டி – பாண்டிக்கோவை:18 294/1
செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்ல தன்-கண் – பாண்டிக்கோவை:18 324/1

மேல்

செல்லல் (1)

திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே – பாண்டிக்கோவை:18 283/4

மேல்

செல்லாத (1)

கழுதும் துணிந்து வழங்கல் செல்லாத கனை இருளே – பாண்டிக்கோவை:17 250/4

மேல்

செல்லார் (2)

தேன் நக்க தாரவர் காண்பர் செல்லார் அவர் செல்ல ஒட்டி – பாண்டிக்கோவை:18 294/1
செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்ல தன்-கண் – பாண்டிக்கோவை:18 324/1

மேல்

செல்லிய (1)

செல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தே மலரே – பாண்டிக்கோவை:18 310/4

மேல்

செல்லியவோ (1)

விண் முத்தும் நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:17 209/3

மேல்

செல்லின் (1)

விரை உறை கோதை உயிர் செல்லின் யார் பிறர் மீட்பவரே – பாண்டிக்கோவை:4 50/4

மேல்

செல்லுப (1)

வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:18 290/2

மேல்

செல்லும் (4)

செல்லும் நெறி அறியேன் உரையீர் நும் சிறுகுடிக்கே – பாண்டிக்கோவை:5 69/4
கட்புலனா செல்லும் தெய்வம் கண்டாய் கமழ் பூம் சிலம்பா – பாண்டிக்கோவை:12 130/3
கண்டார் மகிழும் தகைமையது யாம் செல்லும் கானகமே – பாண்டிக்கோவை:16 204/4
நெறிதரு கோல் செல்லும் எல்லை உள்ளேம் அல்லேம் நீர்மை இலா – பாண்டிக்கோவை:18 317/2

மேல்

செல்வ (1)

செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ
திருமனைக்கே வர நல்கும்-கொல் அன்றாய்விடில் தனது – பாண்டிக்கோவை:17 228/2,3

மேல்

செல்வது (3)

காக்கிய செல்வது காதலித்தார் அன்பர் காய்ந்து எதிரே – பாண்டிக்கோவை:18 264/2
ஆக்கிய செல்வது காதலித்தார் நமர் ஆர் அமருள் – பாண்டிக்கோவை:18 265/2
அரு மா நெறி பொருட்கோ செல்வது அன்று நெஞ்சே அவள்-தன் – பாண்டிக்கோவை:18 323/3

மேல்

செல்வதே (1)

கல் ஆர் சுரம் செல்வதே நினைந்தார் நமர் காய்ந்து எதிர்ந்த – பாண்டிக்கோவை:18 288/2

மேல்

செல்வம் (1)

விண் இவர் செல்வம் விளைவித்த வேந்தன் விண் தோய் பொதியில் – பாண்டிக்கோவை:12 116/2

மேல்

செல்வர் (5)

மன்னு செல்வர் நுமர் எமர் பாழி இகல் அழித்த – பாண்டிக்கோவை:12 131/2
உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உறு செல்வர் சொல்லின் – பாண்டிக்கோவை:12 132/1
பொய்தான் இலாத சொல்லார் செல்வர் போலும் புல்லாது அமரே – பாண்டிக்கோவை:18 263/2
வில் நவில் தோள் அன்பர் செல்வர் விசயசரிதன் எனும் – பாண்டிக்கோவை:18 267/2
மின் ஏந்திய இடையாய் நமர் செல்வர் வெம் கானம் என்ன – பாண்டிக்கோவை:18 291/2

மேல்

செல்வீர் (2)

வெம்மை சுரம் வருகின்றனள் என்று விரைந்து செல்வீர்
அம் மை தடம் கண் என் ஆயத்தவருக்கு அறி-மின்களே – பாண்டிக்கோவை:17 225/3,4
வேடர் இல் வெம் சுரம் மீண்டனள் என்று விரைந்து செல்வீர்
ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரை-மின்களே – பாண்டிக்கோவை:17 226/3,4

மேல்

செல (6)

கூடார் செல செற்ற கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:10 101/2
உள் புலம்போடு செல செற்ற வேந்தன் உறந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:12 130/2
மன் ஆள் செல செற்ற வானவன் மாறன் வையை துறை-வாய் – பாண்டிக்கோவை:13 153/2
காடரில் வேந்தர் செல செற்ற மன்னன் கை வேலின் வெய்ய – பாண்டிக்கோவை:17 226/2
தங்கள் மனைக்கே செல உய்க்குமோ மற்று என் தையலையே – பாண்டிக்கோவை:17 227/4
வியவார் படை இட்டு எண் காதம் செல சென்று மீன் திளைக்கும் – பாண்டிக்கோவை:18 273/3

மேல்

செலவு (2)

திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே – பாண்டிக்கோவை:18 283/4
துளியும் துறந்த வெம் கானம் செலவு இன்று சொல்லுதுமேல் – பாண்டிக்கோவை:18 321/1

மேல்

செலினும் (1)

திரு நெடும் கோதையும் தெய்வம் தொழாள் தெவ்வர் மேல் செலினும்
பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல் – பாண்டிக்கோவை:18 334/1,2

மேல்

செலுத்தி (1)

மதியிடம்-தன்னில் குவளை செலுத்தி ஒர் வஞ்சி நின்ற – பாண்டிக்கோவை:4 51/3

மேல்

செவ் (14)

தே மரு செவ் வாய் தளிரா செரு செந்நிலத்தை வென்ற – பாண்டிக்கோவை:1 1/2
மின்னின் பொலிந்த செவ் வேல் வலத்தான் விழிஞத்து எதிர்ந்த – பாண்டிக்கோவை:1 10/1
கொடி வண்ணம் நுண் இடை கொவ்வை செவ் வாய் கொங்கை கோங்கரும்பின் – பாண்டிக்கோவை:3 38/2
நீரின் மலிந்த செவ் வேல் நெடுமாறன் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:5 60/1
கறையின் மலிந்த செவ் வேல் வலத்தால் தென் கடையல் வென்ற – பாண்டிக்கோவை:5 63/1
கொல்லில் மலிந்த செவ் வேல் கொண்ட கோன் கொல்லி சாரலின் தேன் – பாண்டிக்கோவை:5 69/2
திருமால் அகலம் செஞ்சாந்து அணிந்து அன்ன செவ் வான் முகட்டு – பாண்டிக்கோவை:8 87/1
வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர் – பாண்டிக்கோவை:8 89/3
மின்னை மறைத்த செவ் வேல் வலத்தால் விழிஞத்துள் ஒன்னார் – பாண்டிக்கோவை:12 119/1
செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி – பாண்டிக்கோவை:13 148/3
இழுதும் மிடைந்த செவ் வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 250/3
அடலை புரிந்த செவ் வேல் அரிகேசரி தென் குமரி – பாண்டிக்கோவை:18 268/3
வென்றே களித்த செவ் வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:18 275/1
செவ் வாய் துடிப்ப கரும் கண் சிவந்தன சே_இழைக்கே – பாண்டிக்கோவை:18 297/4

மேல்

செவ்வேள் (2)

ஆர் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் அறிவிலனே – பாண்டிக்கோவை:14 156/4
மன் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் மதியிலனே – பாண்டிக்கோவை:14 157/4

மேல்

செழு (3)

திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே – பாண்டிக்கோவை:18 283/4
செற்றார் பணி திறை கொண்ட நம் அன்பர் செழு மணி தேர் – பாண்டிக்கோவை:18 284/3
தேரும் சிலம்பி புகுந்தது நங்கள் செழு நகர்க்கே – பாண்டிக்கோவை:18 285/4

மேல்

செழும் (9)

திண் தேர் கடாய் செற்ற கொற்றவன் கொல்லி செழும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 31/2
தென்னன் பொதியில் செழும் புனம் காக்கும் சிலை நுதல் பூண் – பாண்டிக்கோவை:3 40/2
செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/3
தேமா தழையொடு கண்ணியும் கொண்டு இ செழும் புனத்தில் – பாண்டிக்கோவை:11 102/2
சென்றார் ஒருவர் பின் வந்து அறியார் இ செழும் புனத்தே – பாண்டிக்கோவை:11 111/4
செந்நிலத்து பட சீறிய கோன் செழும் தண் பொதியில் – பாண்டிக்கோவை:13 145/2
சிலம்பனை நையற்க என்னும்-கொல் வேங்கை செழும் பொழிலே – பாண்டிக்கோவை:14 177/4
திரிந்த திண் கோட்ட கலைமா உகளும் செழும் புறவே – பாண்டிக்கோவை:18 277/4
தேன் இறவு ஆர் கண்ணி செம்பியன் மாறன் செழும் குமரி – பாண்டிக்கோவை:18 338/1

மேல்

செற்ற (18)

அலை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அழல் ஏற செற்ற
கொலை ஆர் அயில் படை கொற்றவன் கூடல் அன்னார் ஒருவர் – பாண்டிக்கோவை:3 28/1,2
திண் தேர் கடாய் செற்ற கொற்றவன் கொல்லி செழும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 31/2
கனவும்படி கடையல் செற்ற வேந்தன் கனம் குழலார் – பாண்டிக்கோவை:3 43/2
தேன் உறை பூம் கண்ணி சேரலன் சேவூர் அழிய செற்ற
ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல் – பாண்டிக்கோவை:3 48/1,2
கல் வளர் கானம் புக செற்ற கைதவன் கார் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:5 75/2
கூடார் செல செற்ற கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:10 101/2
திரை வளர் பூம் புனல் சேவூர் பட செற்ற தென்னன் கொல்லி – பாண்டிக்கோவை:11 113/3
போயே விசும்பு புக செற்ற கோன் அம் தண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:12 121/2
உள் புலம்போடு செல செற்ற வேந்தன் உறந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:12 130/2
மன் ஆள் செல செற்ற வானவன் மாறன் வையை துறை-வாய் – பாண்டிக்கோவை:13 153/2
நெஞ்சு உறையா செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரை-வாய் – பாண்டிக்கோவை:14 164/3
பாழி பகை செற்ற பஞ்சவன் வஞ்சி பைம் பூம் புறவில் – பாண்டிக்கோவை:15 187/2
விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 204/2
தேயும்படி செற்ற தென்னவன் தென் புனல் நாட்டு இளையோர் – பாண்டிக்கோவை:17 208/2
காடரில் வேந்தர் செல செற்ற மன்னன் கை வேலின் வெய்ய – பாண்டிக்கோவை:17 226/2
வாள் வாய் உக செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 248/3
தென்பால்பட செற்ற கோன் வையை நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:18 270/4
விண்டார் பட செற்ற கோன் கொல்லி பாங்கர் விரை மணந்த – பாண்டிக்கோவை:18 340/2

மேல்

செற்றார் (2)

செற்றார் பட செந்நிலத்தை வென்றான் தென்னன் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:10 99/3
செற்றார் பணி திறை கொண்ட நம் அன்பர் செழு மணி தேர் – பாண்டிக்கோவை:18 284/3

மேல்

செற்றான் (2)

வரை பால் அடைய செற்றான் வையை அன்னாள் திறத்து வண்டு ஆர் – பாண்டிக்கோவை:14 182/2
புண் தேர் குருதி படிய செற்றான் புனல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:18 283/2

மேல்

செற்று (2)

செற்று அமர் சேவூர் புறம்கண்ட திங்கள் திருக்குலத்து – பாண்டிக்கோவை:12 132/3
சிறிய பைம் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:16 205/1

மேல்

செறி (4)

தோழி என் ஆருயிர் என்பது காட்டும் செறி பொழில் சூழ் – பாண்டிக்கோவை:2 17/2
செறி குழலார் பலர் யார்-கண்ணதோ அண்ணல் சிந்தனையே – பாண்டிக்கோவை:12 123/4
செறி கழல் வேந்தரை சேவூர் அமர் வென்ற தென்னன் செய்ய – பாண்டிக்கோவை:17 218/1
செறி கழல் வானவன் செம்பியன் தென் நாடு அனைய வென்றி – பாண்டிக்கோவை:18 278/1

மேல்

செறித்த (2)

கண்டே கதிர் வேல் செறித்த எம் கோன் கொல்லி கார் புனத்து – பாண்டிக்கோவை:12 120/2
வய வாள் செறித்த எம் கோன் வஞ்சி அன்னாள் தன் மதி முகமே – பாண்டிக்கோவை:18 273/4

மேல்

செறிந்த (1)

ஓடிய ஆறு கண்டு ஒண் சுடர் வை வேல் உறை செறிந்த
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அழுங்கி – பாண்டிக்கோவை:3 24/2,3

மேல்

செறிந்தார் (1)

செறிந்தார் கரும் கழல் தென்னவன் செந்நிலத்து செருவின் – பாண்டிக்கோவை:5 70/1

மேல்

சென்ற (8)

சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்கு சொல்லுமே – பாண்டிக்கோவை:17 214/3
வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்ற நும் மெல்_இயல் மாட்டு – பாண்டிக்கோவை:17 223/1
வெறி கமழ் கோதை கண் வேட்கை மிகுத்தன்று வெள்ளம் சென்ற
நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண் – பாண்டிக்கோவை:18 278/2,3
அழுது சுவல் சென்ற அக்கு அரையானொடும் வந்தமையால் – பாண்டிக்கோவை:18 299/3
கட குன்றம் சென்ற நம் காதலர் பொய்யலர் நையல் பொன்னே – பாண்டிக்கோவை:18 326/3
ஆமான் அனைய மெல் நோக்கி அழுங்கல் அகன்று சென்ற
தேமா நறும் கண்ணியாரையும் காட்டும் தென் பாழி வென்ற – பாண்டிக்கோவை:18 330/1,2
தூ வை சுடர் வேலவர் சென்ற நாட்டுள்ளும் துன்னும்-கொல்லோ – பாண்டிக்கோவை:18 342/2
வள்ளத்து தேம் மகிழ் கானல் வந்தார் சென்ற தேர் வழி எம் – பாண்டிக்கோவை:18 347/3

மேல்

சென்றது (2)

கரு நெடும் கண் கண்டு மீண்டின்று சென்றது என் காதன்மையே – பாண்டிக்கோவை:3 29/4
திரு மா மணி நெடும் தேரொடும் சென்றது என் சிந்தனையே – பாண்டிக்கோவை:14 166/4

மேல்

சென்றவரே (1)

செரு வெம் படை மன்னர் போல் வெம் கானகம் சென்றவரே – பாண்டிக்கோவை:18 339/4

மேல்

சென்றனளோ (1)

இடையாள் விடலை பின் சென்றனளோ இவ் இரும் சுரத்தே – பாண்டிக்கோவை:17 217/4

மேல்

சென்றார் (4)

சென்றார் ஒருவர் பின் வந்து அறியார் இ செழும் புனத்தே – பாண்டிக்கோவை:11 111/4
சென்றார் உளரோ நினக்கும் சொல்லாய் செந்நிலத்து வெம் போர் – பாண்டிக்கோவை:17 258/2
சென்றார் வரவிற்கு தூது ஆகி வந்தது தென் புலிப்பை – பாண்டிக்கோவை:18 286/2
சென்றார் வருவது நன்கு அறிந்தேன் செரு செந்நிலத்தை – பாண்டிக்கோவை:18 341/1

மேல்

சென்றால் (3)

ஆவி சென்றால் பின்னை யாரோ பெயர்ப்பர் அகலிடத்தே – பாண்டிக்கோவை:4 49/4
சென்றால் அழிவது உண்டோ அணித்தால் எம் சிறுகுடியே – பாண்டிக்கோவை:17 207/4
சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே – பாண்டிக்கோவை:17 232/4

மேல்

சென்றாலும் (1)

தேர் மன்னன் ஏவ சென்றாலும் முனை மிசை சேந்து அறியா – பாண்டிக்கோவை:18 335/3

மேல்

சென்றாளோ (1)

குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இ குன்றிடத்தே – பாண்டிக்கோவை:17 216/4

மேல்

சென்றான் (2)

சென்றான் கரும் கயல் சூட்டிய சென்னி செம்பொன் வரை போல் – பாண்டிக்கோவை:3 35/2
நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 110/4

மேல்

சென்று (21)

மன் உயிர் வான் சென்று அடைய கடையல் உள் வென்று வையம் – பாண்டிக்கோவை:2 22/2
குயில் மொழியாள்-தனை சென்று யான் இன்னமும் கூடுதலே – பாண்டிக்கோவை:3 23/4
தூ மாண் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே – பாண்டிக்கோவை:4 55/4
சுரும்பு ஆர் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே – பாண்டிக்கோவை:4 56/4
திருந்திய ஊசல் சென்று ஆடிக்-கொல் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:6 80/2
உண்டாம் எனில் தையல் யானும் சென்று ஆடுவன் ஒண் சுனையே – பாண்டிக்கோவை:8 86/4
சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன் – பாண்டிக்கோவை:12 114/1
உரைத்தால் அழிவது உண்டோ சென்று நின்று நின் உள் மெலிவே – பாண்டிக்கோவை:12 122/4
தோடு இயல் பூம் தொங்கலாய் அறியேன் சென்று சொல்லுவதே – பாண்டிக்கோவை:12 129/4
அம் சிறை வண்டு அறை காந்தள் அம் செம் போது சென்று யான் தருவேன் – பாண்டிக்கோவை:14 164/1
தீ விரி காந்தள் சென்று யான் தருவேன் தெய்வம் அங்கு உடைத்தால் – பாண்டிக்கோவை:14 165/2
நீயும் இவளும் இன்றே சென்று சேர்திர் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:17 208/1
காளையும் காரிகையும் கடம் சென்று இன்று காண்பர் வெம் கேழ் – பாண்டிக்கோவை:17 220/2
சென்று செரு மலைந்தார்கள் செந்நீர் மூழ்க செந்நிலத்தை – பாண்டிக்கோவை:17 243/1
இன்று இவ் இரவின் இருள் சென்று இடம்கொண்டது எங்கு-கொல்லோ – பாண்டிக்கோவை:17 243/3
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஒர் வேங்கையின் கீழ் – பாண்டிக்கோவை:17 261/3
தொடலை கமழ் நறும் கண்ணியினாய் சென்று தோன்றும்-கொல்லோ – பாண்டிக்கோவை:18 268/2
தேமா நறும் கண்ணியாய் சென்று தோன்றும்-கொல் சேரலர்-தம் – பாண்டிக்கோவை:18 269/2
வியவார் படை இட்டு எண் காதம் செல சென்று மீன் திளைக்கும் – பாண்டிக்கோவை:18 273/3
படையான் பகை முனை போல் சென்று நீடிய பாசறையே – பாண்டிக்கோவை:18 287/4
செரு நெடும் தானை எம் கோன் தெவ்வர் போல சென்று அத்தம் என்னும் – பாண்டிக்கோவை:18 292/2

மேல்

சென்றுகோடும் (1)

வளைக்கு ஒன்று கை மங்கையாய் சென்றுகோடும் நின் வாயுள் வந்து – பாண்டிக்கோவை:15 188/3

மேல்

சென்றே (2)

சென்றே வினைமுற்றி மீண்டனம் காரும் சிறிது இருண்டது – பாண்டிக்கோவை:18 275/2
சென்றே ஒழிக வயல் அணி ஊரனும் தின்ன தந்த – பாண்டிக்கோவை:18 298/1

மேல்

சென்றோ (1)

கானம் கடந்து சென்றோ பொருள் செய்வது காதலரே – பாண்டிக்கோவை:18 289/4

மேல்

சென்னி (2)

சென்றான் கரும் கயல் சூட்டிய சென்னி செம்பொன் வரை போல் – பாண்டிக்கோவை:3 35/2
மல் இயல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார் சடையோன் – பாண்டிக்கோவை:18 310/2

மேல்