Select Page

கட்டுருபன்கள்


கை (24)

கை ஏர் சிலை மன்னர் ஓட கடையல் தன் கண் சிவந்த – பாண்டிக்கோவை:2 20/1
கை வான் நிதியம் எல்லாம் உடனே கடையல் கவர்ந்த – பாண்டிக்கோவை:3 26/2
துளை ஆர் நெடும் கை களிறு நடுங்கி துயர்வது போல் – பாண்டிக்கோவை:3 27/2
வரும் மால் புயல் வண் கை மான் தேர் வரோதயன் மண் அளந்த – பாண்டிக்கோவை:5 64/1
கரு மால் வரை அன்ன தோற்ற கரும் கை வெண் கோட்டு பைம் கண் – பாண்டிக்கோவை:5 64/3
கன மாண் வன முலை கை ஆர் வரி வளை காரிகையீர் – பாண்டிக்கோவை:5 66/3
மழையும் புரை வண் கை வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:7 82/1
துளை ஆர் கரும் கை களிறு உந்தினான் தொண்டி சூழ் துறை-வாய் – பாண்டிக்கோவை:12 124/2
மா உற்ற புண்ணிற்கு இடு மருந்தோ நின் கை வார் தழையே – பாண்டிக்கோவை:12 136/4
நின்று செய்தார் உந்தி வந்த நெடும் கை களிற்று உடலால் – பாண்டிக்கோவை:14 176/2
வளைக்கு ஒன்று கை மங்கையாய் சென்றுகோடும் நின் வாயுள் வந்து – பாண்டிக்கோவை:15 188/3
மழை கெழு கார் வண் கை வானவன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:17 212/1
வெறி கமழ் கோதை இங்கே நின்றது இஃதாம் விடலை தன் கை
பொறி கெழு திண் சிலை வாளியின் எய்த பொரு களிறே – பாண்டிக்கோவை:17 218/3,4
காடரில் வேந்தர் செல செற்ற மன்னன் கை வேலின் வெய்ய – பாண்டிக்கோவை:17 226/2
கை அமை வேல் விளக்காக கனை இருள் நள்ளிரவின் – பாண்டிக்கோவை:17 247/1
கை தலை வைத்து கழுது கண் சோரும் கனை இருளே – பாண்டிக்கோவை:17 251/4
கை நின்று கூப்பி வரை உறை தெய்வம் என்னாது கண்டோர் – பாண்டிக்கோவை:17 259/3
குளம் கொண்டு தோற்பித்த கோன் நெடுமாறன் கை போலும் கொண்டல் – பாண்டிக்கோவை:18 306/2
விண்டு உறை தெவ்வர் விழிஞத்து அவிய வெல் வேல் வலம் கை
கொண்டு உறை நீக்கிய கோன் வையை நாடு அன்ன கோல் வளை இவ் – பாண்டிக்கோவை:18 314/1,2
கை ஆர் கொடும் சிலை செங்கோல் கலிமதன் காய் கலிக்கு – பாண்டிக்கோவை:18 322/3
மூரி களிறு முனிந்து கை ஏற்ற முழங்கு கொண்டல் – பாண்டிக்கோவை:18 327/3
கை ஆர் சிலை மன்னன் கன்னி நல் நீர் கொடை கார் முகிலே – பாண்டிக்கோவை:18 328/4
கரும் தண் புயல் வண் கை தென்னவன் கை முத்து அணிந்து இலங்கும் – பாண்டிக்கோவை:18 331/1
கரும் தண் புயல் வண் கை தென்னவன் கை முத்து அணிந்து இலங்கும் – பாண்டிக்கோவை:18 331/1

மேல்

கைத்தலமே (1)

கான குரவின் அம் போதே கமழும் என் கைத்தலமே – பாண்டிக்கோவை:18 345/4

மேல்

கைதந்து (1)

ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண் – பாண்டிக்கோவை:17 209/1

மேல்

கைதவன் (2)

கல் வளர் கானம் புக செற்ற கைதவன் கார் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:5 75/2
கதம் சார்தரும் படை கைதவன் காவிரி நாட்டு அரசன் – பாண்டிக்கோவை:12 141/1

மேல்

கைதை (1)

களி மன்னு வண்டு உளர் கைதை வளாய் கண்டல் விண்டு தண் தேன் – பாண்டிக்கோவை:3 47/1

மேல்

கைதொழ (1)

கரு மா மலர் கண்ணி கைதொழ தோன்றிற்று காண் வந்து ஒன்னார் – பாண்டிக்கோவை:8 87/2

மேல்

கைப்படுத்தான் (1)

கொடுத்தான் குட மன்னன் கோட்டாற்று அழித்து தென் நாடு தன் கைப்படுத்தான்
பராங்குசன் கன்னி அம் கானல் பறவைகளே – பாண்டிக்கோவை:17 262/3,4

மேல்

கைம்மா (2)

கைம்மா வினாய் வந்து அகலான் நமது கடி புனமே – பாண்டிக்கோவை:11 108/4
கைம்மா புறவின் சுவடு தொடர்ந்து கனல் விழிக்கும் – பாண்டிக்கோவை:18 280/1

மேல்

கையகலாத (1)

கானத்திடை பிடி கையகலாத கரும் களிறே – பாண்டிக்கோவை:18 294/4

மேல்

கையகலாது (1)

விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது
திரிந்த திண் கோட்ட கலைமா உகளும் செழும் புறவே – பாண்டிக்கோவை:18 277/3,4

மேல்

கையகலான் (2)

வரை தரு வார் புனம் கையகலான் வந்து மா வினவும் – பாண்டிக்கோவை:11 106/3
நிலை இடு சிந்தை வெம் நோயொடு இ நீள் புனம் கையகலான்
முலை இடை நோபவர் நேரும் இடம் இது மொய்_குழலே – பாண்டிக்கோவை:11 109/3,4

மேல்

கையான் (1)

வான் நலம் கொண்ட கையான் மன்னன் மாறன்-தன் மரந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:18 309/1

மேல்