Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்கும் 3
ஒசித்த 1
ஒட்டி 1
ஒடுங்க 1
ஒண் 20
ஒத்த 2
ஒத்தது 1
ஒதுக்கி 1
ஒர் 11
ஒரு 3
ஒருங்கு 1
ஒருத்தி 1
ஒருவர் 3
ஒருவற்கு 2
ஒருவன் 2
ஒருவாறு 1
ஒல்லாள் 1
ஒலி 5
ஒவ்வா 2
ஒழி 2
ஒழிக 1
ஒழிதல் 1
ஒழிந்தும் 1
ஒழிய 1
ஒழியும்-கொல்லோ 1
ஒழுகி 1
ஒழுகின் 1
ஒழுகுவதே 2
ஒளி 19
ஒளியும் 1
ஒன்ற 1
ஒன்றா 1
ஒன்றார் 1
ஒன்றினால் 1
ஒன்று 16
ஒன்றும் 5
ஒன்றே 2
ஒன்றையும் 1
ஒன்னார் 18
ஒன்னார்கட்கு 1
ஒன்னாரை 1

ஒக்கும் (3)

கொண்டான் குடை மன்னன் கொல்லி குடவரை கொம்பர் ஒக்கும்
வண்டார் குழல் மட மங்கை மதர்வை மெல் நோக்கம் என் போல் – பாண்டிக்கோவை:3 32/2,3
ஒண் தாமரை போல் முகத்தவள் நின்னொடு உருவம் ஒக்கும்
வண்டு ஆர் குழலவள் வந்தால் இயங்கு வரை அணங்கே – பாண்டிக்கோவை:8 88/3,4
இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/4

மேல்

ஒசித்த (1)

போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூம் தண் குருந்து ஒசித்த
கார் வண்ணன் போல் வண்ணன் காவிரி நாடு அன்ன காரிகையாள் – பாண்டிக்கோவை:14 170/2,3

மேல்

ஒட்டி (1)

தேன் நக்க தாரவர் காண்பர் செல்லார் அவர் செல்ல ஒட்டி
நான குழல் மங்கை நன்று செய்தாய் வென்று வாய் கனிந்த – பாண்டிக்கோவை:18 294/1,2

மேல்

ஒடுங்க (1)

இன் பார்ப்பு ஒடுங்க வலம் சிறை கோலி இடம் சிறையால் – பாண்டிக்கோவை:18 270/1

மேல்

ஒண் (20)

ஒண் தேர் உசிதன் என் கோன் கொல்லி சாரல் ஒளி மலர் தாது – பாண்டிக்கோவை:1 7/2
ஒருங்கு அழல் ஏற என்றான் கொல்லி சாரல் ஒண் போதுகள்-தம் – பாண்டிக்கோவை:1 8/2
ஓடிய ஆறு கண்டு ஒண் சுடர் வை வேல் உறை செறிந்த – பாண்டிக்கோவை:3 24/2
ஒண் துறை மேல் உள்ளம் ஓடியதோ அன்றி உற்றது உண்டோ – பாண்டிக்கோவை:3 25/3
ஒண் தார் அகலம் மெலிவித்த மாதர் உறைவிடமே – பாண்டிக்கோவை:3 37/4
உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:4 50/2
ஒண் பூம் தழையும் தரும் அறியேன் இவன் உள்ளியதே – பாண்டிக்கோவை:7 83/4
ஒண் தார் அரசர் குழாமுடனே ஒளி வான் அடைய – பாண்டிக்கோவை:8 86/2
உண்டாம் எனில் தையல் யானும் சென்று ஆடுவன் ஒண் சுனையே – பாண்டிக்கோவை:8 86/4
ஒண் தாமரை போல் முகத்தவள் நின்னொடு உருவம் ஒக்கும் – பாண்டிக்கோவை:8 88/3
உரைதரு தீம் தமிழ் கேட்டோன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:11 106/2
உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உறு செல்வர் சொல்லின் – பாண்டிக்கோவை:12 132/1
மதம் பாய் கர ஒண் கண் மா மலை ஒன்று நம் வார் புனத்துள் – பாண்டிக்கோவை:12 141/3
ஒண் தார் அகலமும் உண்ணும்-கொலோ நின் உறு பலியே – பாண்டிக்கோவை:14 155/4
உரை ஆர் பெரும் புகழ் செங்கோல் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:14 174/2
ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண் – பாண்டிக்கோவை:17 209/1
உடையான் ஒளி வேல் உசிதன் தென் கூடல் ஒண் தீம் தமிழ் போல் – பாண்டிக்கோவை:17 217/3
உரை அணங்கும் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:18 320/2
உலத்தின் பொலிந்த திண் தோள் மன்னன் ஒண் தேர் உசிதன் மற்று இ – பாண்டிக்கோவை:18 337/1
ஓடும் நிலைமை கண்டான் வையை ஒண் நுதல் மங்கையரோடு – பாண்டிக்கோவை:18 346/2

மேல்

ஒத்த (2)

குன்று ஒத்த யானை செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:16 195/1
வேய் ஒத்த தோளி நும்மொடு வரவு விரும்பவும் தன் – பாண்டிக்கோவை:16 201/3

மேல்

ஒத்தது (1)

இன்று ஒத்தது ஒன்று துணி நீ சிலம்ப அன்றாயின் எம் ஊர் – பாண்டிக்கோவை:16 195/3

மேல்

ஒதுக்கி (1)

செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி
இவ் இருள்-வாய் வர என் நீ நினைந்தனை ஏந்து_இழையே – பாண்டிக்கோவை:13 148/3,4

மேல்

ஒர் (11)

வண்டு ஏர் நறும் கண்ணியாய் அங்கு ஒர் மாதர் மதி முகம் நீ – பாண்டிக்கோவை:3 31/3
மதியிடம்-தன்னில் குவளை செலுத்தி ஒர் வஞ்சி நின்ற – பாண்டிக்கோவை:4 51/3
பிடியொடு போந்தது உண்டோ உரையீர் ஒர் பெரும் களிறே – பாண்டிக்கோவை:5 65/4
பண்ணுற்ற தே மொழி பாவை நல்லீர் ஒர் பகழி மூழ்க – பாண்டிக்கோவை:5 68/3
புலவு ஆர் குருதி அளைந்த வெம் கோட்டு ஒர் பொரு களிறே – பாண்டிக்கோவை:9 90/4
குருதி வெண் கோட்டது கண்டேன் மடந்தை ஒர் குஞ்சரமே – பாண்டிக்கோவை:9 91/4
நெடியான் சிறுவன்-கொலோ அறியேன் ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 103/4
நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 110/4
பொன் ஆர் புனல் எம்மை வாங்கும் பொழுது அங்கு ஒர் பூம் கணை வேள் – பாண்டிக்கோவை:13 153/3
எனைப்பல பாவை பயந்தும் எய்தாய் ஒர் இரும் துயரே – பாண்டிக்கோவை:17 213/4
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஒர் வேங்கையின் கீழ் – பாண்டிக்கோவை:17 261/3

மேல்

ஒரு (3)

பொதியிலின் ஆங்கு உனை நீங்கிய போது ஒரு பூம் சுனை-வாய் – பாண்டிக்கோவை:8 85/3
ஒரு நெடும் குன்றம் மறைந்து உலகு எலாம் உலாய் குண-பால் – பாண்டிக்கோவை:18 292/3
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனை போல் – பாண்டிக்கோவை:18 326/2

மேல்

ஒருங்கு (1)

ஒருங்கு அழல் ஏற என்றான் கொல்லி சாரல் ஒண் போதுகள்-தம் – பாண்டிக்கோவை:1 8/2

மேல்

ஒருத்தி (1)

குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இ குன்றிடத்தே – பாண்டிக்கோவை:17 216/4

மேல்

ஒருவர் (3)

இளையார் ஒருவர் அணங்க நைந்தால் யான் நினைகின்றதே – பாண்டிக்கோவை:3 27/4
கொலை ஆர் அயில் படை கொற்றவன் கூடல் அன்னார் ஒருவர்
முலையாய் முகிழ்த்து மென் தோளாய் பணைத்து முகத்து அனங்கன் – பாண்டிக்கோவை:3 28/2,3
சென்றார் ஒருவர் பின் வந்து அறியார் இ செழும் புனத்தே – பாண்டிக்கோவை:11 111/4

மேல்

ஒருவற்கு (2)

உலம் புரி தோள் மன்னன் தென் புனல் நாட்டு ஒருவற்கு இயைந்து – பாண்டிக்கோவை:16 196/2
அன்போடு ஒருவற்கு அறிவு அழிந்தாயோ அலை கடலே – பாண்டிக்கோவை:17 257/4

மேல்

ஒருவன் (2)

அன்னான் ஒருவன் அணைந்து எமக்கு செய்த ஆர் அருளே – பாண்டிக்கோவை:13 153/4
கழலான் ஒருவன் பின் செங்கோல் கலிமதனன் பகை போல் – பாண்டிக்கோவை:17 216/3

மேல்

ஒருவாறு (1)

வண்ணம் ஒருவாறு எழுதினும் மா மணி வார்ந்து அனைய – பாண்டிக்கோவை:10 97/2

மேல்

ஒல்லாள் (1)

ஒல்லாள் அவள் என்று அவர் இகழ்ந்தார் மற்று இவை இரண்டும் – பாண்டிக்கோவை:18 324/2

மேல்

ஒலி (5)

உய்ய நெஞ்சு எவ்வகை ஒன்றையும் காண்பன் ஒலி கடல் சூழ் – பாண்டிக்கோவை:5 76/2
உலம் மன்னு தோள் அண்ணல் ஊரக்கொளாய்-கொல் ஒலி திரை சூழ் – பாண்டிக்கோவை:10 96/2
மின் ஆர் அயில் படை செங்கோல் விசாரிதன் வீங்கு ஒலி நீர் – பாண்டிக்கோவை:16 197/2
ஒன்றார் முனை போல் கலங்கி துஞ்சாயால் ஒலி கடலே – பாண்டிக்கோவை:17 258/4
உள்ளத்தினோடு சிதைய வந்து ஊரும் ஒலி கடலே – பாண்டிக்கோவை:18 347/4

மேல்

ஒவ்வா (2)

ஒவ்வா உருவும் மொழியும் என்னோ வள்ளல் உள்ளியதே – பாண்டிக்கோவை:3 26/4
இ நிலத்து இ மலை மேல ஒவ்வா இரும் தண் சிலம்பா – பாண்டிக்கோவை:13 145/3

மேல்

ஒழி (2)

மெல் விரல் நோவ மலர் பறியாது ஒழி நீ விரை தேன் – பாண்டிக்கோவை:5 75/3
மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ – பாண்டிக்கோவை:17 251/2

மேல்

ஒழிக (1)

சென்றே ஒழிக வயல் அணி ஊரனும் தின்ன தந்த – பாண்டிக்கோவை:18 298/1

மேல்

ஒழிதல் (1)

உயிர் அனையான்-தனை கண்டு உரைசெய்தால் ஒழிதல் உண்டே – பாண்டிக்கோவை:3 23/3

மேல்

ஒழிந்தும் (1)

உடைமணியானொடு நீ வர ஊடல் சிவப்பு ஒழிந்தும்
அடை மணி நீலத்து அணி நிறம் கொண்டும் அலர்ந்தனவே – பாண்டிக்கோவை:18 301/3,4

மேல்

ஒழிய (1)

ஆடும் அலவன் புகழ்ந்து என்னை நோக்கி அறிவு ஒழிய
நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 110/3,4

மேல்

ஒழியும்-கொல்லோ (1)

மெய் ஒன்றும் இன்றி ஒழியும்-கொல்லோ இவ் வியல் இடமே – பாண்டிக்கோவை:14 181/4

மேல்

ஒழுகி (1)

தேங்கிய தெள் திரை வாங்க ஒழுகி நின் சே_இழையாள் – பாண்டிக்கோவை:13 152/3

மேல்

ஒழுகின் (1)

தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின்
ஆங்கும் வரும் அன்னதால் இன்ன நாள் அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 100/3,4

மேல்

ஒழுகுவதே (2)

உரிய மிக்கீர்க்கு இயல்பு அன்று-கொல் இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 318/4
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 344/4

மேல்

ஒளி (19)

உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் தென்னாட்டு ஒளி சேர் – பாண்டிக்கோவை:1 2/1
ஒண் தேர் உசிதன் என் கோன் கொல்லி சாரல் ஒளி மலர் தாது – பாண்டிக்கோவை:1 7/2
பொன்னின் பசந்து ஒளி வாட என்னாம்-கொல் புலம்புவதே – பாண்டிக்கோவை:1 10/4
மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:3 46/1
ஒளி மன்னு முத்தக்குடை மன்னன் கன்னி உயர் பொழிலே – பாண்டிக்கோவை:3 47/4
பெரும் படை கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு நின் பேர் ஒளி சேர் – பாண்டிக்கோவை:4 53/3
மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால் – பாண்டிக்கோவை:4 57/3
ஒண் தார் அரசர் குழாமுடனே ஒளி வான் அடைய – பாண்டிக்கோவை:8 86/2
தெளி சேர் ஒளி முத்த வெண்குடை மன்னன் தென் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:10 98/2
ஒளி ஆர் திரு நுதலாளை எளியள் என்று உன்னி வந்து – பாண்டிக்கோவை:14 160/1
ஒளி முத்த வெண்குடை செங்கோல் உசிதன் உறந்தை அன்ன – பாண்டிக்கோவை:17 211/3
உடையான் ஒளி வேல் உசிதன் தென் கூடல் ஒண் தீம் தமிழ் போல் – பாண்டிக்கோவை:17 217/3
மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண் திரை மேல் – பாண்டிக்கோவை:17 232/1
தங்கு அயல் வெள் ஒளி ஓலையதாய் தட மா மதில் மேல் – பாண்டிக்கோவை:18 274/1
ஒன்றா வயவர் தென் பாழி பட ஒளி வேல் வலத்தால் – பாண்டிக்கோவை:18 281/3
தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் என சிறந்த – பாண்டிக்கோவை:18 321/3
துடி ஆர் இடையாய் வருந்தல் பிரிந்த துளங்கு ஒளி சேர் – பாண்டிக்கோவை:18 329/3
உருவ மணி நெடும் தேர் மன்னர் வீய ஒளி தருமேல் – பாண்டிக்கோவை:18 339/2
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 344/4

மேல்

ஒளியும் (1)

ஒளியும் திரு நுதல் வாடி உய்யாள்-கொல் உசிதன் என்ற – பாண்டிக்கோவை:18 321/2

மேல்

ஒன்ற (1)

ஒன்ற கருதா வயவர் நறையாற்றுடன் அழிந்து – பாண்டிக்கோவை:2 15/1

மேல்

ஒன்றா (1)

ஒன்றா வயவர் தென் பாழி பட ஒளி வேல் வலத்தால் – பாண்டிக்கோவை:18 281/3

மேல்

ஒன்றார் (1)

ஒன்றார் முனை போல் கலங்கி துஞ்சாயால் ஒலி கடலே – பாண்டிக்கோவை:17 258/4

மேல்

ஒன்றினால் (1)

குனியார் சிலை ஒன்றினால் வென்ற கோன் கொங்க நாட்ட கொல்லை – பாண்டிக்கோவை:18 308/2

மேல்

ஒன்று (16)

காவி வென்று ஆய கண்ணாய் அல்லையேல் ஒன்று கட்டுரையாய் – பாண்டிக்கோவை:4 49/3
பொரும் மால் களிறு ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 64/4
புண்ணுற்ற மான் ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 68/4
உரையாடுப கண்ணினான் உள்ளத்து உள்ளதும் ஒன்று உளதே – பாண்டிக்கோவை:7 81/4
மதம் பாய் கர ஒண் கண் மா மலை ஒன்று நம் வார் புனத்துள் – பாண்டிக்கோவை:12 141/3
பூ மாண் கமழ் கண்ணியாய் நின்றது ஒன்று உண்டு பூழியர் கோன் – பாண்டிக்கோவை:13 144/2
நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர் இழை இ – பாண்டிக்கோவை:14 181/1
மை ஒன்று வாள் கண் மடந்தை திறத்திட்டு அறம் திரிந்து – பாண்டிக்கோவை:14 181/2
வளைக்கு ஒன்று கை மங்கையாய் சென்றுகோடும் நின் வாயுள் வந்து – பாண்டிக்கோவை:15 188/3
சோலை சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த – பாண்டிக்கோவை:16 192/2
தோயும் சிலம்ப துணிவு ஒன்று அறிந்து தொல் நூல் புலவர் – பாண்டிக்கோவை:16 194/2
இன்று ஒத்தது ஒன்று துணி நீ சிலம்ப அன்றாயின் எம் ஊர் – பாண்டிக்கோவை:16 195/3
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் வந்து ஒன்று மீண்டது உண்டே – பாண்டிக்கோவை:17 260/3
வில் ஒன்று சேர் பொறி வானவன் வாட விழிஞம் கொண்ட – பாண்டிக்கோவை:18 319/3
கொல் ஒன்று வாள் படையான் தமிழ்நாடு அன்ன கோல்_வளையே – பாண்டிக்கோவை:18 319/4
விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய் – பாண்டிக்கோவை:18 326/1

மேல்

ஒன்றும் (5)

துறை-வாய் இளம் புன்னை மேல் அன்னம் ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 158/4
தூ நின்ற மென் சிறகு அன்னம் இன்று ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 159/4
பொய் ஒன்றும் நின் கண் நிகழும் என்றால் பின்னை பூம் சிலம்பா – பாண்டிக்கோவை:14 181/3
மெய் ஒன்றும் இன்றி ஒழியும்-கொல்லோ இவ் வியல் இடமே – பாண்டிக்கோவை:14 181/4
துடி கண் இரண்டும் கங்குல்-தலை ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:17 242/4

மேல்

ஒன்றே (2)

அறிந்தேன் பல நினைந்து என்னை ஒன்றே இவர் ஆருயிரே – பாண்டிக்கோவை:5 70/4
எண்ணும் குறை என்னை ஒன்றே இருவர்க்கும் இன் உயிரே – பாண்டிக்கோவை:5 71/4

மேல்

ஒன்றையும் (1)

உய்ய நெஞ்சு எவ்வகை ஒன்றையும் காண்பன் ஒலி கடல் சூழ் – பாண்டிக்கோவை:5 76/2

மேல்

ஒன்னார் (18)

அயில் அணி வேல் அரிகேசரி ஒன்னார் என்பது – பாண்டிக்கோவை:3 23/2
நீரின் மலிந்த செவ் வேல் நெடுமாறன் நெல்வேலி ஒன்னார்
போரின் மலிந்த வெம் தானை உரம் கொண்ட கோன் பொதியில் – பாண்டிக்கோவை:5 60/1,2
நிதியின் கிழவன் நிலமகள் கேள்வன் நெல்வேலி ஒன்னார்
கதியின் மலிந்த வெம் மாவும் களிறும் கவர்ந்து கொண்டான் – பாண்டிக்கோவை:5 61/1,2
கரு மா மலர் கண்ணி கைதொழ தோன்றிற்று காண் வந்து ஒன்னார்
செரு மால் அரசு உக செந்நிலத்து அட்ட தென் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:8 87/2,3
மின்னை மறைத்த செவ் வேல் வலத்தால் விழிஞத்துள் ஒன்னார்
மன்னை மறைத்த எம் கோன் வையம் சூழ் பௌவ நீர் புலவு-தன்னை – பாண்டிக்கோவை:12 119/1,2
மின் அயர் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்து ஒன்னார்
மன் அயர்வு எய்த வை வேல் கொண்ட வேந்தன் மரந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:12 127/2,3
உறு கற்புடைமையின் உள்ளும் இ பேதை உசிதன் ஒன்னார்
மறுக திறல் உரும் ஏந்திய கோன் கொல்லி மால் வரை-வாய் – பாண்டிக்கோவை:13 149/1,2
கனம் சேர் முலை மங்கை உள்ளும் இப்போதும் கடையல் ஒன்னார்
மனம் சேர் துயர் கண்ட வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:13 150/1,2
பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த – பாண்டிக்கோவை:14 157/1
பஞ்சு உறை தேர் அல்குலாய் வரற்பாற்று அன்று பாழி ஒன்னார்
நெஞ்சு உறையா செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரை-வாய் – பாண்டிக்கோவை:14 164/2,3
நீர் வண்ணன் வெண் திரை மேல் நின்ற வேந்தன் நெல்வேலி ஒன்னார்
போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூம் தண் குருந்து ஒசித்த – பாண்டிக்கோவை:14 170/1,2
காந்தள் அம் போது எம் கரும் குழல் போது கடையல் ஒன்னார்
தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:15 184/1,2
நீர் அணி வேலி நெடுங்களத்து ஒன்னார் நிணம் அளைந்த – பாண்டிக்கோவை:16 191/1
நீயும் இவளும் இன்றே சென்று சேர்திர் நெல்வேலி ஒன்னார்
தேயும்படி செற்ற தென்னவன் தென் புனல் நாட்டு இளையோர் – பாண்டிக்கோவை:17 208/1,2
உரவும் கடல் சூழ் உலகு உடை வேந்தன் உசிதன் ஒன்னார்
பரவும் கழல் மன்னன் கன்னி அம் கானல் பகலிடம் நீ – பாண்டிக்கோவை:17 253/1,2
ஊனம் கடந்த உயர் குடை வேந்தன் உசிதன் ஒன்னார்
மானம் கடந்து வல்லத்து அமர் ஓட்டிய கோன் இ மண் மேல் – பாண்டிக்கோவை:18 289/1,2
பங்கய பூம் புனல் நாடன் பராங்குசன் பாழி ஒன்னார்
மங்கையர்க்கு அல்லல் கண்டான் மணி நீர் வையை வார் துறை-வாய் – பாண்டிக்கோவை:18 302/1,2
வரிய வண்டு ஆர் தொங்கல் மான் தேர் வரோதயன் வல்லத்து ஒன்னார்
கரிய வை வேல் கொண்ட காவலன் காக்கும் கடலிடம் போல் – பாண்டிக்கோவை:18 318/1,2

மேல்

ஒன்னார்கட்கு (1)

மன்னன் வரோதயன் வல்லத்து ஒன்னார்கட்கு வான் கொடுத்த – பாண்டிக்கோவை:12 125/1

மேல்

ஒன்னாரை (1)

மேவி ஒன்னாரை வெண்மாத்து வென்றான் கன்னி வீழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:4 49/1

மேல்