Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 5
மூ_அறு 1
மூ_ஐந்து 1
மூக்க 1
மூக்கின் 1
மூக்கு 3
மூக்கும் 2
மூங்கையும் 1
மூச 2
மூசி 1
மூசிய 1
மூசு 5
மூசும் 2
மூடி 5
மூடு 1
மூடுதல் 1
மூத்த 2
மூத்து 1
மூத்தேன் 1
மூதூர் 26
மூதெயில் 2
மூப்பின் 2
மூப்பினொடும் 1
மூப்பு 8
மூப்பும் 2
மூர்க்கர் 1
மூர்ச்சனை 1
மூர்த்தத்து 1
மூர்த்தி 8
மூர்த்தியர் 1
மூர்த்தியாய் 1
மூரி 17
மூரித்தாள் 1
மூலம் 1
மூலை 1
மூவகை 1
மூவர் 2
மூவா 3
மூவியல் 1
மூவில் 1
மூழ்க 14
மூழ்கலில் 1
மூழ்கலின் 3
மூழ்கி 16
மூழ்கிய 1
மூழ்கிற்று 1
மூழ்கினள் 1
மூழ்கினாரே 1
மூழ்கினானே 1
மூழ்கும் 2
மூழ்த்தத்தின் 1
மூழி 3
மூழை 1
மூள்க 1
மூள்கும் 1
மூளை 1
மூன்றின் 2
மூன்றினானும் 1
மூன்றினையும் 1
மூன்று 15
மூன்றும் 26
மூன்றுலகம் 1
மூன்றோடு 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மூ (5)

முட்டு இலா மூ_அறு பாடை மாக்களால் – சிந்தா:1 93/2
நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம் – சிந்தா:7 1645/2
முரசம் ஆர்ந்த பின் மூ இரு நாள்கள் போய் – சிந்தா:12 2393/1
எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும் – சிந்தா:13 2810/1
மூ உலகு உச்சி இன்ப கடலினுள் மூழ்கினானே – சிந்தா:13 3117/4

TOP


மூ_அறு (1)

முட்டு இலா மூ_அறு பாடை மாக்களால் – சிந்தா:1 93/2

TOP


மூ_ஐந்து (1)

எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும் – சிந்தா:13 2810/1

TOP


மூக்க (1)

ஊழி-தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று – சிந்தா:2 487/2

TOP


மூக்கின் (1)

அயிர்ப்பது என் நின்னை அல்லால் அறியலேன் அன்றி மூக்கின்
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்-கால் – சிந்தா:7 1624/2,3

TOP


மூக்கு (3)

அடுத்த மூக்கு அரு மணி வயிர தோட்டியே – சிந்தா:6 1464/4
தேடி தீம் தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்கு உயர்த்தார் – சிந்தா:13 2703/4
மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றி தாள் தவழ்ந்து வாங்கி – சிந்தா:13 2784/3

TOP


மூக்கும் (2)

ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே – சிந்தா:1 165/4
புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால் – சிந்தா:7 1585/2

TOP


மூங்கையும் (1)

மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன் – சிந்தா:4 997/2

TOP


மூச (2)

மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும் – சிந்தா:1 116/1
வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப – சிந்தா:3 622/1

TOP


மூசி (1)

மூசி வண்டு இமிரும் மொய் அலங்கல் தாழ – சிந்தா:12 2549/3

TOP


மூசிய (1)

ஊசி துன்னம் மூசிய ஆடை உடை ஆக – சிந்தா:13 2929/2

TOP


மூசு (5)

மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும் – சிந்தா:1 116/1
வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர் – சிந்தா:2 418/1
மூசு தேன் வாரி அல்குல் பட்ட பின் முலைகள் என்னும் – சிந்தா:7 1690/1
மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில மஞ்ஞை – சிந்தா:13 2712/2
வந்து தேன் மயங்கி மூசு மலய செம் சாந்தம் ஆர்ந்த – சிந்தா:13 3048/1

TOP


மூசும் (2)

மணி நிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும்
அணி நிற போர்வை ஆய அரும் பெறல் நாணும் விற்று – சிந்தா:7 1665/1,2
வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி மது துளித்து வண்டும் சுரும்பும் மூசும்
தேன் ஆர் பூங்கோதாய் நினக்கு காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலி தந்தான் – சிந்தா:9 2065/1,2

TOP


மூடி (5)

வான் உலாம் சுடர் கண் மூடி மாநகர் இரவு செய்ய – சிந்தா:1 111/2
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர் – சிந்தா:4 880/2
மூடி இ உலகம் எல்லாம் நின் அடி தருவல் இன்னே – சிந்தா:4 957/3
தூ நிற துகிலின் மூடி படலிகை கொண்டு வாழ்த்தி – சிந்தா:13 2707/3
ஈருள் தடி மூடி ஈண்டும் மல பண்ட – சிந்தா:13 2791/1

TOP


மூடு (1)

மூடு கூறையின் மூடுதல் வெண் தலை – சிந்தா:6 1427/2

TOP


மூடுதல் (1)

மூடு கூறையின் மூடுதல் வெண் தலை – சிந்தா:6 1427/2

TOP


மூத்த (2)

அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு இன்று உன் தாதை – சிந்தா:4 1046/3
எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த
தழு மலர் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி – சிந்தா:13 2905/2,3

TOP


மூத்து (1)

உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால் – சிந்தா:12 2581/3

TOP


மூத்தேன் (1)

முடிப்பது என் பெரிதும் மூத்தேன் முற்று இழை அரிவை என்ன – சிந்தா:9 2041/2

TOP


மூதூர் (26)

முந்நீர் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்
செந்நீர் கடியின் விழவாட்டினுள் தேம் கொள் சுண்ணம் – சிந்தா:0 12/1,2
திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி – சிந்தா:1 263/2
குமரி கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம் – சிந்தா:1 336/2,3
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இ மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான் – சிந்தா:1 396/3,4
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
இறை அணி கேட்க உய்த்திட்டனர் பூசல் – சிந்தா:2 427/3,4
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல் – சிந்தா:2 462/2,3
ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்து கொண்டு ஏகி மூதூர்
சாறு எங்கும் அயர புக்கு நந்தகோன் தன் கை ஏந்தி – சிந்தா:2 489/1,2
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்
கட்டு அவிழ் தாரினான் தன் கடி மனை மகிழ்ந்து புக்கான் – சிந்தா:3 583/3,4
வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர் – சிந்தா:3 615/2,3
கடி அரங்கு அணிந்து மூதூர் கடல் கிளர்ந்தது அனையது ஒப்ப – சிந்தா:3 672/1
விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே – சிந்தா:3 816/4
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர்
குழை முற்று காதின் மணி கொம்பொடு நாய்கன் ஈந்தான் – சிந்தா:4 1064/3,4
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார் – சிந்தா:4 1111/4
அரும் கடி அரண மூதூர் ஆகுலம் மயங்கிற்று அன்றே – சிந்தா:4 1112/4
ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்ல செல்வான் – சிந்தா:4 1116/3
மன்னவ அருளி கேண்மோ மடந்தை ஓர் கொடியை மூதூர்
நின் மத களிறு கொல்ல நினக்கு அது வடு என்று எண்ணி – சிந்தா:4 1118/1,2
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை – சிந்தா:5 1296/3
காளை செல்கின்ற நாளுள் கட்டியங்காரன் மூதூர்
மீளி வேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பலுற்றேன் – சிந்தா:7 1694/3,4
மன்னனை வாளினாலே வானகம் காட்டி மூதூர்
தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான் – சிந்தா:7 1734/3,4
தூவி பொன் மாட மூதூர் சுபத்திரன் என்னை கண்டே – சிந்தா:7 1756/3
ஏந்து பொன் இஞ்சி மூதூர் இராசமாபுரம் அது என்றான் – சிந்தா:7 1855/4
வான் நக்கி நின்று நுடங்கும் கொடி மாட மூதூர்
பால் நக்க தீம் சொல் பவளம் புரை பாவை அன்ன – சிந்தா:7 1866/1,2
வள்ளுவார் முரசம் மூதூர் அறைக என அருளினானே – சிந்தா:10 2149/4
கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்
கண் ஆடு யானை அவர் கை தொழ சென்று புக்கான் – சிந்தா:11 2327/3,4
குன்று கண்டு அனைய கோல கொடி நெடு மாட மூதூர்
சென்று இசை முழங்க செல்வன் திரு முரசு அறைவிக்கின்றான் – சிந்தா:11 2374/3,4
நொந்தார் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்
கந்து ஆர் கடாத்த களிறும் கொடி தேர்கள் நூறும் – சிந்தா:12 2564/2,3

TOP


மூதெயில் (2)

கிழவன் மூதெயில் போல் கிளர்வுற்றதே – சிந்தா:4 856/4
கன்னி மூதெயில் கடல் உடுத்த காரிகை – சிந்தா:5 1250/3

TOP


மூப்பின் (2)

கையின் தொழுதார் கழிய மூப்பின் செவி கேளார் – சிந்தா:9 2013/1
கள்ள மூப்பின் அந்தணன் கனிந்த கீத வீதியே – சிந்தா:9 2039/1

TOP


மூப்பினொடும் (1)

உய்வது இலன் ஊழின் முது மூப்பினொடும் வந்தான் – சிந்தா:9 2017/3

TOP


மூப்பு (8)

முருகு உலா முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும் – சிந்தா:3 769/1
முனிவரும் முயன்று வான் கண் மூப்பு இகந்து இரிய இன்ப – சிந்தா:5 1240/1
உணர்ந்து மூப்பு எழுதினது ஒப்ப தோன்றினான் – சிந்தா:9 2009/4
மூப்பு எனும் முகபடாம் புதைந்து முற்று_இழை – சிந்தா:9 2011/3
முந்தி நலிகின்ற முது மூப்பு ஒழியும் என்றான் – சிந்தா:9 2020/4
வடிவம் இது மூப்பு அளிது வார் பவள வல்லி – சிந்தா:9 2023/1
சால முது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி – சிந்தா:9 2029/2
மோட்டு எழில் இளமை நீங்க மூப்பு வந்து அடைதல் துன்பம் – சிந்தா:13 2799/2

TOP


மூப்பும் (2)

இளமையில் மூப்பும் செல்வத்து இடும்பையும் புணர்ச்சி-போழ்தில் – சிந்தா:5 1394/1
பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா – சிந்தா:13 3118/1

TOP


மூர்க்கர் (1)

தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை – சிந்தா:4 936/3

TOP


மூர்ச்சனை (1)

முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் – சிந்தா:7 1627/2

TOP


மூர்த்தத்து (1)

ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வல கவுள் உறுத்தி ஆர்ந்த – சிந்தா:12 2495/2

TOP


மூர்த்தி (8)

முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே – சிந்தா:5 1245/2
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று – சிந்தா:5 1245/3
முட்டாத இன்ப புதா திறக்கும் தாள் உடைய மூர்த்தி பாதம் – சிந்தா:6 1549/2
கனை எரி அழல் அம்பு எய்த கண்_நுதல்_மூர்த்தி ஒத்தான் – சிந்தா:10 2249/4
முத்து அணிந்த முக்குடை கீழ் மூர்த்தி திருவடியை – சிந்தா:13 2740/1
மோட்டு இரும் கொழு மலர் பிண்டி மூர்த்தி நூல் – சிந்தா:13 2844/3
மூர்த்தி ஆய் முனிவர் ஏத்தும் முனி களிறு அனைய கோமான் – சிந்தா:13 3071/4
மொய் வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம் – சிந்தா:13 3145/3

TOP


மூர்த்தியர் (1)

பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர்
ஐ என தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து – சிந்தா:5 1205/2,3

TOP


மூர்த்தியாய் (1)

இன் உயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்
பொன் உயிராய் பிறந்து உயர்ந்து போகுமே – சிந்தா:13 3107/3,4

TOP


மூரி (17)

மோடு கொள் புனல் மூரி நெடும் கடல் – சிந்தா:1 38/3
முத்து மாலை முப்புரி மூரி மா மணி கதவு – சிந்தா:1 144/1
முந்து நாம் கூறிய மூரி தானை அ – சிந்தா:1 186/1
மூரி தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கி – சிந்தா:1 214/1
முழவு என திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும் – சிந்தா:1 368/1
முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப – சிந்தா:3 543/1
முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம் – சிந்தா:3 607/3
முடி மணி அழுத்தி செய்த மூரி காழ் நெற்றி மூழ்க – சிந்தா:3 837/2
முழங்கு தெண் திரை மூரி நீள் நிதி – சிந்தா:4 987/1
முழவின் இசை மூரி முழங்கு அருவி – சிந்தா:5 1193/1
முழையுள் மூரி முழங்கு அரி ஏறு அனான் – சிந்தா:5 1338/3
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரி வில் தடக்கையாற்கு – சிந்தா:7 1644/3
முன்னுற இதனை ஓரேன் மூரி பேர் ஒக்கல் எல்லாம் – சிந்தா:7 1726/3
முந்தி பெறப்பட்ட மகன் மூரி சிலை தட கை – சிந்தா:7 1797/2
முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை – சிந்தா:7 1825/3
முழுது உலகு எழில் ஏத்தும் மூரி வேல் தானை மன்னன் – சிந்தா:13 2651/1
முடி குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும் – சிந்தா:13 3050/2

TOP


மூரித்தாள் (1)

முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானை – சிந்தா:12 2554/1

TOP


மூலம் (1)

நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம்
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான் – சிந்தா:3 511/3,4

TOP


மூலை (1)

மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான் – சிந்தா:5 1232/4

TOP


மூவகை (1)

ஈந்திடும் இறைவர் ஆதி மூவகை குலத்து உளார்க்கும் – சிந்தா:3 608/3

TOP


மூவர் (2)

ஒன்றி முன் விடுத்தவர் மூவர் ஒற்று ஆட்கள் வந்து – சிந்தா:7 1829/3
இருந்து எறிந்து எறியும் மூவர் மேல் படை இயற்றினானே – சிந்தா:13 3078/4

TOP


மூவா (3)

மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த – சிந்தா:0 1/1
முனிமை முகடு ஆய மூவா முதல்வன் – சிந்தா:7 1609/1
மூவா அமரர் ஆய் முத்து அணிந்து தோன்றுவரே – சிந்தா:13 3036/4

TOP


மூவியல் (1)

மூவியல் திரிதல் இன்றி சாதக முறையில் செய்தார் – சிந்தா:7 1686/3

TOP


மூவில் (1)

மொய் வெல்லும் குருதி வேலான் மூவில் கண் இறைஞ்சி நின்றான் – சிந்தா:7 1704/4

TOP


மூழ்க (14)

நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும் – சிந்தா:1 287/2
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் உள் அரங்கி மூழ்க காமன் – சிந்தா:1 293/2
வெதிர்ம் குதை சாபம் கான்ற வெம் நுனை பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும் – சிந்தா:2 441/1,2
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க
முலை குவட்டு இடை பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே – சிந்தா:2 490/3,4
சிலையார் திரு நுதலும் செம் பசலை மூழ்க
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும் – சிந்தா:3 732/2,3
பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும் – சிந்தா:3 733/2,3
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும் – சிந்தா:3 734/2,3
மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க
பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார் – சிந்தா:3 772/3,4
முடி மணி அழுத்தி செய்த மூரி காழ் நெற்றி மூழ்க
கடி மலர் மாலை நாற்றி கம்பல விதானம் கோலி – சிந்தா:3 837/2,3
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன் – சிந்தா:3 845/3,4
போது உக பொருது பூணும் பொரு கடல் முத்தும் மூழ்க
காதலும் களிப்பும் மிக்கு கங்குலும் பகலும் விள்ளார் – சிந்தா:6 1494/2,3
மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும் – சிந்தா:6 1540/2
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார் – சிந்தா:6 1541/3
மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல – சிந்தா:10 2287/1

TOP


மூழ்கலில் (1)

உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலில் சிங்கம் போல – சிந்தா:10 2256/3

TOP


மூழ்கலின் (3)

மாட மாலை மேல் நலார் மணி குழலின் மூழ்கலின்
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞை-தம் சிறகு – சிந்தா:1 71/2,3
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை – சிந்தா:3 780/2,3
முழுதும் மெய்ந்நலம் மூழ்கலின் நீர் சுமந்து – சிந்தா:13 2670/1

TOP


மூழ்கி (16)

எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு – சிந்தா:1 164/1
முலை தலை போகம் மூழ்கி முகிழ் நிலா முடி கொள் சென்னி – சிந்தா:1 261/2
கோன் தமர் நிகளம் மூழ்கி கோட்டத்து குரங்க தன் கீழ் – சிந்தா:1 262/1
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்கும தோளினாற்கு – சிந்தா:1 371/2,3
நீட்டிய சடையம் ஆகி நீர் மூழ்கி நிலத்தில் சேர்ந்து – சிந்தா:6 1431/1
காட்டு-இடை கரடி போகி கய மூழ்கி காட்டில் நின்று – சிந்தா:6 1431/3
போதொடு நானம் மூழ்கி பூம் புகை தவழ்ந்து முல்லை – சிந்தா:7 1583/1
எரியின் மூழ்கி இறந்துபடும்-கொலோ – சிந்தா:7 1627/4
ஒப்பு இணை தனக்கு இலாதான் உறு வரை அகலம் மூழ்கி
செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை பொருது சேப்ப – சிந்தா:7 1691/1,2
விழு மணி மாசு மூழ்கி கிடந்தது இ உலகம் விற்ப – சிந்தா:8 1890/1
கொழித்து இரை கடலுள் மூழ்கி கோதை கண் துயின்ற அன்றே – சிந்தா:8 1986/4
தென் வரை சாந்து மூழ்கி திரள் வடம் சுமந்து வீங்கி – சிந்தா:9 2081/2
பூ மலர் கோதை நெஞ்சம் மூழ்கி புக்கு ஒளித்திட்டானே – சிந்தா:10 2133/4
வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய் மறைத்திட்டு மின் தோய் – சிந்தா:10 2272/3
கோட்டு மண் கொண்ட மார்பம் கோதை வாள் குளித்து மூழ்கி
கோட்டு மண் கொள்ள நின்றான் குருசில் மண் கொள்ள நின்றான் – சிந்தா:10 2294/3,4
மேல் ஏறி மூழ்கி பிறழ்ந்து ஆழ்ந்த இறந்துபட்டாள் – சிந்தா:11 2344/4

TOP


மூழ்கிய (1)

நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய
கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம் – சிந்தா:4 988/1,2

TOP


மூழ்கிற்று (1)

போக்கினாள் வளையும் போர்த்தாள் பொன் நிற பசலை மூழ்கிற்று
ஆக்கினாள் அநங்கன் அப்பு தூணியை அமருள் ஆனாது – சிந்தா:5 1291/2,3

TOP


மூழ்கினள் (1)

புண்ணாறு வேலான் மனம் மூழ்கினள் பொன் அனாளே – சிந்தா:10 2134/4

TOP


மூழ்கினாரே (1)

செருக்கிய நெடும் கண் சேப்ப சீத நீர் மூழ்கினாரே – சிந்தா:13 2657/4

TOP


மூழ்கினானே (1)

மூ உலகு உச்சி இன்ப கடலினுள் மூழ்கினானே – சிந்தா:13 3117/4

TOP


மூழ்கும் (2)

முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற – சிந்தா:1 378/3
பழுது இன்றி மூழ்கும் பகழி தொழில் வல்ல காளை – சிந்தா:2 445/2

TOP


மூழ்த்தத்தின் (1)

ஊழ் வினை துரப்ப ஓடி ஒன்றும் மூழ்த்தத்தின் உள்ளே – சிந்தா:13 2763/1

TOP


மூழி (3)

மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும் – சிந்தா:3 833/1
நெல் பொரி நிறைய பெய்து நிழல் உமிழ் செம்பொன் மூழி
கல் புரி கடவுள் ஆன் பால் அவியொடு கலப்ப வைத்து – சிந்தா:12 2464/1,2
மூழி வாய் முல்லை மாலை முலை முகம் முரிந்து நக்க – சிந்தா:13 2974/2

TOP


மூழை (1)

மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆய்த்தியர் ஆட்டினாரே – சிந்தா:2 487/4

TOP


மூள்க (1)

தொழித்து வண்டு இமிரும் கோதை துணை முலை மூள்க பூம் பட்டு – சிந்தா:8 1986/1

TOP


மூள்கும் (1)

முற்றினாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமும் – சிந்தா:9 1998/2

TOP


மூளை (1)

ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை
கோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பிது என்றான் – சிந்தா:7 1583/3,4

TOP


மூன்றின் (2)

முரண் அவிய வென்று உலகம் மூன்றினையும் மூன்றின்
தரணி மேல் தந்து அளித்த தத்துவன்-தான் யாரே – சிந்தா:5 1246/1,2
கொடுப்பர் நால் அமிர்தம் மூன்றின் குணம் புரிந்து அடங்கினார்க்கே – சிந்தா:13 2827/4

TOP


மூன்றினானும் (1)

தரு மணல் தருப்பை ஆர்ந்த சமிதை இ மூன்றினானும்
விரி மலர் அணிந்த கோல வேதிகை இயற்றி ஆன் நெய் – சிந்தா:12 2463/1,2

TOP


மூன்றினையும் (1)

முரண் அவிய வென்று உலகம் மூன்றினையும் மூன்றின் – சிந்தா:5 1246/1

TOP


மூன்று (15)

துஞ்சும் இடை கனவு மூன்று அவை தோன்றலின் – சிந்தா:1 219/2
ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
ஈடுபட செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர் – சிந்தா:3 501/1,2
ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு – சிந்தா:3 838/1
ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு – சிந்தா:3 838/1
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முட்டினும் முருக்கும் ஆற்றல் – சிந்தா:4 1091/3
உலகம் மூன்று உடையோய் நீ ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ – சிந்தா:5 1244/1
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று
கடி மதிலும் கட்டு அழித்த காவலன் நீ அன்றே – சிந்தா:5 1245/3,4
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழுந்தி ஆழ்ந்த – சிந்தா:5 1288/2
வரை அகல் மார்பு-இடை வரியும் மூன்று உள – சிந்தா:6 1462/1
முத்து உமிழும் முந்நீர் மணி வண்ணன் மூன்று உலகும் – சிந்தா:6 1470/1
முன் உரைத்த மூன்று கனவும் புணை ஆக – சிந்தா:7 1803/2
உரிய நூற்றெண்மர் செம்பொன் ஒன்றரை கோடி மூன்று ஊர் – சிந்தா:9 2079/3
நெற்றி மேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய – சிந்தா:10 2247/1
முன் பெரியானை ஆக தருப்பையான் முடிந்து மூன்று
பொன் புரி வரையும் பொய்தீர் சமிதைகள் இரண்டும் வைத்தார் – சிந்தா:12 2464/3,4
முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள் – சிந்தா:12 2511/2

TOP


மூன்றும் (26)

மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த – சிந்தா:0 1/1
வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி – சிந்தா:4 907/1
கடி மதில் மூன்றும் எய்த கடவுளின் கனன்று சொன்னான் – சிந்தா:4 1087/4
அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த – சிந்தா:4 1125/3
வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க என – சிந்தா:5 1217/3
மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைம் தார் – சிந்தா:5 1219/2
பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும்
கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற – சிந்தா:5 1256/1,2
உய் வகை உயிரை தேயாது ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
இ வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான் – சிந்தா:6 1436/3,4
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால் – சிந்தா:6 1551/2
இடன் அறிந்து இலங்கும் வை வாள் இரும் சிலை குந்தம் மூன்றும்
உடன் அறிந்து உம்பரார்க்கு உரைப்பரும் தகையர் ஆனார் – சிந்தா:7 1678/3,4
மந்திரம் மூன்றும் தந்து வானவன் விடுப்ப செல்வேற்கு – சிந்தா:7 1753/1
உலகம் மூன்றும் உறு விலைத்து என்பவே – சிந்தா:8 1982/3
குந்தமே அயில் வாள் குனி சிலை மூன்றும் குறைவிலார் கூற்றொடும் பொருவார் – சிந்தா:10 2156/1
போர் தகல் விசும்பில் வந்து பொறித்திரி பன்றி மூன்றும்
நீர்த்தக புணர்ந்த போதில் நெடும் தகை மூன்றும் அற்று – சிந்தா:10 2200/1,2
நீர்த்தக புணர்ந்த போதில் நெடும் தகை மூன்றும் அற்று – சிந்தா:10 2200/2
எங்கணும் குளிர்ந்த இன் நீர் இளம் பசும் காயும் மூன்றும்
தம் களி செய்ய கூட்டி தையலார் கைசெய்தாரே – சிந்தா:12 2473/3,4
இலங்கு செம்பொன் எயில் மூன்றும் எரி பொன் முத்த குடை மூன்றும் – சிந்தா:13 2813/1
இலங்கு செம்பொன் எயில் மூன்றும் எரி பொன் முத்த குடை மூன்றும்
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும் – சிந்தா:13 2813/1,2
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும் – சிந்தா:13 2813/2
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும்
கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் காமர் நூல் மூன்றும் – சிந்தா:13 2813/2,3
கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் காமர் நூல் மூன்றும் – சிந்தா:13 2813/3
கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் காமர் நூல் மூன்றும்
நலம் கொள் தீம் பால் குண கடலும் உடையார் நம்மை உடையாரே – சிந்தா:13 2813/3,4
வையம் மூன்றும் உடன் ஏத்த வளரும் திங்கள் வாள் எயிற்று – சிந்தா:13 3019/1
வீதி போய் உலகம் மூன்றும் விழுங்கியிட்டு அலோகம் நுங்கி – சிந்தா:13 3082/3
காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள் – சிந்தா:13 3092/3
அழுங்கல் வினை அலற நிமிர்ந்து ஆங்கு உலகம் மூன்றும்
விழுங்கி உமிழாது குணம் வித்தி இருந்தோய் நின் – சிந்தா:13 3093/2,3

TOP


மூன்றுலகம் (1)

மூன்றுலகம் விற்கும் முலை முற்று_இழையினாரே – சிந்தா:13 2920/4

TOP


மூன்றோடு (1)

கோடி மூன்றோடு அரை செம்பொன் கோமான் நல்கும் என அறை-மின் – சிந்தா:1 307/4

TOP