Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புகழ் 3
புகழ 1
புகழும் 2
புகுந்து 1
புகும் 1
புசியாதோ 1
புட்பகந்தன் 1
புட்பபாணம் 1
புடை 1
புடைக்கவே 1
புடைத்த 1
புடைத்து 1
புண்ணியம் 1
புணர் 1
புணர்பவர் 1
புணர 1
புதுக்குளம் 1
புதுக்குளமும் 2
புதுத்தெரு 1
புதுப்பாட்டும் 1
புதைக்கவே 1
புயத்தான் 1
புயத்தில் 1
புயத்தை 1
புயம் 1
புயல் 1
புரண்டு 2
புரத்து 1
புரந்திடும் 1
புரி 2
புரிந்து 1
புரிநூலின் 1
புருடன் 1
புருவ 1
புருவத்தாள் 1
புரையேறும் 1
புல்லி 1
புலம்ப 1
புலம்பொடு 1
புலவர் 1
புலவீர் 1
புலி 5
புலியனை 1
புலியூர் 1
புலியை 2
புலியொடு 1
புவனம் 3
புழுகோ 1
புள்ளிமான் 1
புள்ளும் 1
புளக 1
புளியங்குளம் 1
புற்றரவில் 1
புறப்படமாட்டேன் 1
புறப்படும் 1
புறம் 1
புறம்பாக்கி 1
புறவில் 2
புறவின் 1
புறவு 2
புறாவுக்கு 1
புறாவும் 2
புறாவே 1
புன்னை 1
புன்னைக்காவு 1
புனம்-தோறும் 1
புனல் 5
புனலா 1
புனை 1
புனைந்த 2
புனைந்தவர் 1
புனைந்தார் 1
புனைந்தாரை 2
புனைந்து 2

புகழ் (3)

ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும் – குற்-குறவஞ்சி:2 85/3
ஒல்லி வட கன டில்லி வரை புகழ் புல்லி வரு குறிசொல்லி மதுரித – குற்-குறவஞ்சி:2 119/3
நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை – குற்-குறவஞ்சி:2 285/3

மேல்

புகழ (1)

நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி – குற்-குறவஞ்சி:1 2/2

மேல்

புகழும் (2)

படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/3
சிவமதுகங்கையின் மகிமை புவனம் எங்கும் புகழும்
செண்பகாடவி துறையின் பண்பு சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 168/1,2

மேல்

புகுந்து (1)

வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி – குற்-குறவஞ்சி:2 253/2

மேல்

புகும் (1)

கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே – குற்-குறவஞ்சி:2 107/2

மேல்

புசியாதோ (1)

பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 25/2

மேல்

புட்பகந்தன் (1)

நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே – குற்-குறவஞ்சி:2 177/2

மேல்

புட்பபாணம் (1)

போடுவான் புட்பபாணம் புறப்படமாட்டேன் நூவா – குற்-குறவஞ்சி:2 318/3

மேல்

புடை (1)

கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2

மேல்

புடைக்கவே (1)

மண்டலீகரை நந்தி பிரம்படி மகுட கோடியில் புடைக்கவே – குற்-குறவஞ்சி:2 7/4

மேல்

புடைத்த (1)

மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில் – குற்-குறவஞ்சி:2 373/1

மேல்

புடைத்து (1)

பொன்னின் குடம் போல் புடைத்து எழுந்த பார முலை – குற்-குறவஞ்சி:2 122/3

மேல்

புண்ணியம் (1)

பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2

மேல்

புணர் (1)

கோடிய மதி சூடிய நாயகர் குழல்மொழி புணர் அழகிய நாயகர் – குற்-குறவஞ்சி:2 111/1

மேல்

புணர்பவர் (1)

நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்செல்வி புணர்பவர் கல்வி மலை குற – குற்-குறவஞ்சி:2 119/4

மேல்

புணர (1)

சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/4

மேல்

புதுக்குளம் (1)

கான குளத்து உள்வாய் கீழை புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும் – குற்-குறவஞ்சி:2 279/4

மேல்

புதுக்குளமும் (2)

சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணி செல்வ புதுக்குளமும்
காராளன் சங்குமுத்து திருத்தொடை காங்கேயன் கட்டளையும் – குற்-குறவஞ்சி:2 305/1,2
மாராசன் தென்குடிசை வயித்தியநாதன் புதுக்குளமும்
தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 305/3,4

மேல்

புதுத்தெரு (1)

போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4

மேல்

புதுப்பாட்டும் (1)

நாலுகவி புலவர் புதுப்பாட்டும் சகியே – குற்-குறவஞ்சி:2 103/2

மேல்

புதைக்கவே (1)

துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கையால் செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்பலாண்டு இசை அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள் – குற்-குறவஞ்சி:2 10/2,3

மேல்

புயத்தான் (1)

கொந்து ஆர் புயத்தான் இராக்கதப்பெருமாள் குற்றாலநாதன் முன் உற்ற சகோதரன் – குற்-குறவஞ்சி:2 282/3

மேல்

புயத்தில் (1)

நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி – குற்-குறவஞ்சி:2 50/1

மேல்

புயத்தை (1)

சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட – குற்-குறவஞ்சி:1 5/2

மேல்

புயம் (1)

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய் – குற்-குறவஞ்சி:1 2/3

மேல்

புயல் (1)

மத்தளம் புயல் போல் முழங்கிட மயில்_அனார் நடம் பெருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/3

மேல்

புரண்டு (2)

பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆட குழல் – குற்-குறவஞ்சி:2 41/1
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆட குழல் – குற்-குறவஞ்சி:2 41/1

மேல்

புரத்து (1)

புரத்து நெருப்பை மூவர்க்கு அவித்தவர் மையல் கொண்ட என் – குற்-குறவஞ்சி:2 83/1

மேல்

புரந்திடும் (1)

புரந்திடும் செங்கோலான் பிரம்புடையான் – குற்-குறவஞ்சி:2 2/2

மேல்

புரி (2)

நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக – குற்-குறவஞ்சி:2 1/3
தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன் – குற்-குறவஞ்சி:2 153/3

மேல்

புரிந்து (1)

பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4

மேல்

புரிநூலின் (1)

புரிநூலின் மார்பன் இவன் அயன் என்பார் அயன் ஆகில் – குற்-குறவஞ்சி:2 17/1

மேல்

புருடன் (1)

வாகனத்தில் ஏறிவரும் யோக புருடன் அவன் – குற்-குறவஞ்சி:2 233/1

மேல்

புருவ (1)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3

மேல்

புருவத்தாள் (1)

அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர் – குற்-குறவஞ்சி:2 34/1

மேல்

புரையேறும் (1)

தேன் புரையேறும் சித்திரா நதியான் – குற்-குறவஞ்சி:2 115/4

மேல்

புல்லி (1)

ஒல்லி வட கன டில்லி வரை புகழ் புல்லி வரு குறிசொல்லி மதுரித – குற்-குறவஞ்சி:2 119/3

மேல்

புலம்ப (1)

போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3

மேல்

புலம்பொடு (1)

சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2

மேல்

புலவர் (1)

நாலுகவி புலவர் புதுப்பாட்டும் சகியே – குற்-குறவஞ்சி:2 103/2

மேல்

புலவீர் (1)

சுற்றாத ஊர்-தோறும் சுற்றவேண்டா புலவீர்
குற்றாலம் என்று ஒருகால் கூறினால் வற்றா – குற்-குறவஞ்சி:2 397/1,2

மேல்

புலி (5)

அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதான சேலையும் – குற்-குறவஞ்சி:2 8/3
திக்கு எலாம் தென்றல் புலி வந்து பாயுதே மன்மதா குயில் – குற்-குறவஞ்சி:2 69/1
மன்னிய புலி போல் வரும் பன்றி மாடா – குற்-குறவஞ்சி:2 223/14
மிக்கான புலி கரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கி – குற்-குறவஞ்சி:2 251/2
வலியவர் திரிகூடத்தில் மத புலி சிங்கன் முன்னே – குற்-குறவஞ்சி:2 258/2

மேல்

புலியனை (1)

ஏகனை நாகனை கூவிக்கொண்டு எலியனை புலியனை ஏவிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 261/1

மேல்

புலியூர் (1)

செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம் – குற்-குறவஞ்சி:2 274/2

மேல்

புலியை (2)

தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2
புலியொடு புலியை தாக்கி போர் மத யானை சாய்க்கும் – குற்-குறவஞ்சி:2 258/1

மேல்

புலியொடு (1)

புலியொடு புலியை தாக்கி போர் மத யானை சாய்க்கும் – குற்-குறவஞ்சி:2 258/1

மேல்

புவனம் (3)

போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு – குற்-குறவஞ்சி:2 160/3
சிவமதுகங்கையின் மகிமை புவனம் எங்கும் புகழும் – குற்-குறவஞ்சி:2 168/1
பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4

மேல்

புழுகோ (1)

கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ – குற்-குறவஞ்சி:2 223/20

மேல்

புள்ளிமான் (1)

புள்ளிமான் ஈன்ற பூவையே குற குல – குற்-குறவஞ்சி:2 223/5

மேல்

புள்ளும் (1)

தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 305/4

மேல்

புளக (1)

பூ என்ற பாதம் வருடிவருடி புளக முலையை நெருடிநெருடி – குற்-குறவஞ்சி:2 330/1

மேல்

புளியங்குளம் (1)

ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/2

மேல்

புற்றரவில் (1)

வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவில் உறங்கும் – குற்-குறவஞ்சி:2 184/1

மேல்

புறப்படமாட்டேன் (1)

போடுவான் புட்பபாணம் புறப்படமாட்டேன் நூவா – குற்-குறவஞ்சி:2 318/3

மேல்

புறப்படும் (1)

அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல் – குற்-குறவஞ்சி:2 266/3

மேல்

புறம் (1)

கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த – குற்-குறவஞ்சி:2 22/1

மேல்

புறம்பாக்கி (1)

கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற – குற்-குறவஞ்சி:2 267/3

மேல்

புறவில் (2)

கோவிலில் புறவில் காவினில் அடங்கா குருவிகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 254/2
கிருபை புறவில் பறவை படுக்கையில் – குற்-குறவஞ்சி:2 299/2

மேல்

புறவின் (1)

சீதரன் முத்துமன்னன் விசாரிப்பு சேர்ந்த புறவின் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 307/2

மேல்

புறவு (2)

சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/4
வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்தி கூட்டம் ஐயே – குற்-குறவஞ்சி:2 304/4

மேல்

புறாவுக்கு (1)

மாட புறாவுக்கு போனேன் – குற்-குறவஞ்சி:2 322/2

மேல்

புறாவும் (2)

வெள்ளை புறாவும் சகோரமும் ஆந்தையும் மீன்கொத்திப்புள்ளும் மரங்கொத்திப்பட்சியும் – குற்-குறவஞ்சி:2 268/1
மாட புறாவும் குயிலும் படுத்தேன் – குற்-குறவஞ்சி:2 322/3

மேல்

புறாவே (1)

எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1

மேல்

புன்னை (1)

வன்ன குமிழிலே புன்னை அரும்பு ஏது சிங்கி மண்ணில் – குற்-குறவஞ்சி:2 379/1

மேல்

புன்னைக்காவு (1)

வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம் – குற்-குறவஞ்சி:2 321/1

மேல்

புனம்-தோறும் (1)

வேடுவர்கள் தினை விதைக்க சாடு புனம்-தோறும்
விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும் – குற்-குறவஞ்சி:2 138/1,2

மேல்

புனல் (5)

வான் புனல் குதட்டும் மட குருகினுக்கு – குற்-குறவஞ்சி:2 115/3
முழங்கு திரை புனல் அருவி கழங்கு என முத்தாடும் – குற்-குறவஞ்சி:2 133/1
ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம் – குற்-குறவஞ்சி:2 162/1
அறுகு புனல் விளக்கிடுவாய் அடைக்காய் வெள்ளிலை கொடுவா அம்மே வடை – குற்-குறவஞ்சி:2 209/1
சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில் – குற்-குறவஞ்சி:2 266/1

மேல்

புனலா (1)

கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா – குற்-குறவஞ்சி:2 109/3

மேல்

புனை (1)

சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை
பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு பாவனை கொண்டாட நய – குற்-குறவஞ்சி:2 42/1,2

மேல்

புனைந்த (2)

பூ மலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 1/1
அத்த கடகம் புனைந்த கையை காட்டாய் பொன்னின் – குற்-குறவஞ்சி:2 214/1

மேல்

புனைந்தவர் (1)

சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது – குற்-குறவஞ்சி:2 348/1

மேல்

புனைந்தார் (1)

விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/2

மேல்

புனைந்தாரை (2)

மன்றல் குழவி மதியம் புனைந்தாரை கண்டு சிறு – குற்-குறவஞ்சி:2 75/1
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1

மேல்

புனைந்து (2)

வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3
குல மணி பாசியும் குன்றியும் புனைந்து
சலவை சேர் மருங்கில் சாத்திய கூடையும் – குற்-குறவஞ்சி:2 115/20,21

மேல்