Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுகக்காரி 2
சுகந்த 1
சுட்டிக்கு 1
சுடர் 3
சுண்டு 1
சுந்தர 1
சுந்தரத்தோழன் 1
சுந்தரர்க்கு 2
சுந்தரி 2
சுந்தரியாள் 1
சுந்தரியோ 1
சுந்தோபசுந்தர் 1
சும்மா 3
சுரண்டையூர் 1
சுருண்டு 3
சுரும்பு 1
சுருளும் 1
சுரைக்காய் 1
சுவடெடுத்து 1
சுழல 1
சுழற்றவே 1
சுழிக்கும் 1
சுழியெறியும் 1
சுளை 2
சுற்றவேண்டா 1
சுற்றாத 1
சுற்றி 4
சுற்றியே 1
சுற்று 1
சுறுக்கில் 1

சுகக்காரி (2)

கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி
பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/2,3
கறுப்பில் அழகி காம சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 334/1

மேல்

சுகந்த (1)

பிடித்த சுகந்த வல்லி கொடி போல் வசந்தவல்லி பெருக்கமே சத்தி – குற்-குறவஞ்சி:2 38/3

மேல்

சுட்டிக்கு (1)

சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல் – குற்-குறவஞ்சி:2 286/2

மேல்

சுடர் (3)

தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1
ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4
துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று – குற்-குறவஞ்சி:2 157/2

மேல்

சுண்டு (1)

சுண்டு விரலிலே குண்டல பூச்சி – குற்-குறவஞ்சி:2 367/1

மேல்

சுந்தர (1)

சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2

மேல்

சுந்தரத்தோழன் (1)

மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2

மேல்

சுந்தரர்க்கு (2)

ஆதிநாள் சுந்தரர்க்கு தூதுபோனவர் முன்னே – குற்-குறவஞ்சி:2 88/1
தொண்டாடும் சுந்தரர்க்கு தோழர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 354/1

மேல்

சுந்தரி (2)

பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே – குற்-குறவஞ்சி:2 45/1
வால சுந்தரி குழல்வாய்மொழி அருள் கண் – குற்-குறவஞ்சி:2 115/15

மேல்

சுந்தரியாள் (1)

சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல் – குற்-குறவஞ்சி:2 286/2

மேல்

சுந்தரியோ (1)

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மனம் – குற்-குறவஞ்சி:2 43/1

மேல்

சுந்தோபசுந்தர் (1)

சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில் – குற்-குறவஞ்சி:2 313/3

மேல்

சும்மா (3)

பையை விரிக்குது அம்மா பாம்பு சும்மா – குற்-குறவஞ்சி:2 51/4
தோளாசைக்காரி சிங்கி சும்மா கிடக்கமாட்டாள் – குற்-குறவஞ்சி:2 344/4
சேலை உடை-தனை சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா
நாலுபேர் முன் எனை நாணம் குலையாதே சிங்கா – குற்-குறவஞ்சி:2 388/1,2

மேல்

சுரண்டையூர் (1)

துய்ய குன்றக்குடி வாழவல்லான்குடி சுரண்டையூர் முதல் உட்கிடை சுற்றியே – குற்-குறவஞ்சி:2 274/3

மேல்

சுருண்டு (3)

இருண்ட மேகம் சுற்றி சுருண்டு சுழியெறியும் கொண்டையாள் குழை – குற்-குறவஞ்சி:2 33/1
சுருண்டு கிடப்பானேன் சிங்கி சுருண்டு கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 367/2
சுருண்டு கிடப்பானேன் சிங்கி சுருண்டு கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 367/2

மேல்

சுரும்பு (1)

ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 253/1

மேல்

சுருளும் (1)

ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

சுரைக்காய் (1)

கொடிக்கு சுரைக்காய் கனத்து கிடக்குமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 383/2

மேல்

சுவடெடுத்து (1)

ஞாளி போல் சுவடெடுத்து பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மி – குற்-குறவஞ்சி:2 253/3

மேல்

சுழல (1)

தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2

மேல்

சுழற்றவே (1)

வனிதைமார் பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி சுழற்றவே
தனதன் இந்திரன் வருணன் முதலிய சகல தேவரும் வழுத்தவே – குற்-குறவஞ்சி:2 11/3,4

மேல்

சுழிக்கும் (1)

ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில் – குற்-குறவஞ்சி:2 36/3

மேல்

சுழியெறியும் (1)

இருண்ட மேகம் சுற்றி சுருண்டு சுழியெறியும் கொண்டையாள் குழை – குற்-குறவஞ்சி:2 33/1

மேல்

சுளை (2)

சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/3
வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1

மேல்

சுற்றவேண்டா (1)

சுற்றாத ஊர்-தோறும் சுற்றவேண்டா புலவீர் – குற்-குறவஞ்சி:2 397/1

மேல்

சுற்றாத (1)

சுற்றாத ஊர்-தோறும் சுற்றவேண்டா புலவீர் – குற்-குறவஞ்சி:2 397/1

மேல்

சுற்றி (4)

இருண்ட மேகம் சுற்றி சுருண்டு சுழியெறியும் கொண்டையாள் குழை – குற்-குறவஞ்சி:2 33/1
சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றி சகிமார் சூழ – குற்-குறவஞ்சி:2 44/3
மாரிப்பற்றும் கீழை மாரிப்பற்றும் சன்னநேரிப்பற்றும் சாத்தனேரிப்பற்றும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 272/4
ஆயிர பேரியும் தென்காசியும் சுற்றி
அயிரையும் தேளியும் ஆராலும் கொத்தியே – குற்-குறவஞ்சி:2 277/3,4

மேல்

சுற்றியே (1)

துய்ய குன்றக்குடி வாழவல்லான்குடி சுரண்டையூர் முதல் உட்கிடை சுற்றியே
கொய்யும் மலர் தார் இலஞ்சி குமார குரு விளையாடும் திருவிளையாட்டத்தில் – குற்-குறவஞ்சி:2 274/3,4

மேல்

சுற்று (1)

இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில் – குற்-குறவஞ்சி:2 384/1

மேல்

சுறுக்கில் (1)

கறுப்பில் அழகி காம சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 334/1

மேல்