Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

ஈ (1)

கட்டான திரிகூட சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 262/2

மேல்

ஈசர் (9)

பூ மலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர்
கோ மலர் பாதம் போற்றி குறவஞ்சி தமிழை பாட – குற்-குறவஞ்சி:1 1/1,2
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர்
பேரினால் எனது சொல்லை பெரியவர் தள்ளார் தாமே – குற்-குறவஞ்சி:1 9/3,4
தேர் கொண்ட வசந்த வீதி செல்வர் குற்றாலத்து ஈசர்
பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற – குற்-குறவஞ்சி:2 1/1,2
வழங்கு கொடை மகராசர் குறும்பலவில் ஈசர்
வளம் பெருகும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 136/1,2
நீடு பலவு ஈசர் கயிலாசகிரி வாசர் – குற்-குறவஞ்சி:2 140/1
ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4
கொங்கு அலர் செண்பகச்சோலை குறும்பலா ஈசர்
குற்றால திரிகூட தலம் எங்கள் தலமே – குற்-குறவஞ்சி:2 175/1,2
நல் நகரில் ஈசர் உன்னை மேவ வருவார் இந்த – குற்-குறவஞ்சி:2 246/1
பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர் – குற்-குறவஞ்சி:2 290/3

மேல்

ஈசர்க்கும் (1)

ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 382/2

மேல்

ஈசருக்கு (1)

நல் நகரில் ஈசருக்கு நான்தானோ ஆசைகொண்டேன் மானே பல – குற்-குறவஞ்சி:2 80/1

மேல்

ஈசன் (1)

ஈசன் இவன் திரிகூடராசனே என்பார் – குற்-குறவஞ்சி:2 19/2

மேல்

ஈசுரர் (1)

சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணி – குற்-குறவஞ்சி:2 43/3

மேல்

ஈட்டி (2)

வக்கா மணி பூட்டிக்கொண்டு மடவார் கண் போல் ஈட்டி கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/2
கலிகளும் கதையும் பேசி கையிலே ஈட்டி வாங்கி – குற்-குறவஞ்சி:2 258/3

மேல்

ஈட்டு (1)

ஈட்டு சருவாபரணம் பூட்டினாளே – குற்-குறவஞ்சி:2 248/2

மேல்

ஈது (1)

வார் சடை ஈது அல்ல கார் குழல் பின்னல் காண் மன்மதா நெற்றி – குற்-குறவஞ்சி:2 71/1

மேல்

ஈந்தனர் (1)

பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர்
வன்ன பருந்து ஒரு கள்வன் கொடுபோனான் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே – குற்-குறவஞ்சி:2 290/3,4

மேல்

ஈந்திடும் (1)

பன்னரும் அன்னத்தை நல் நகர் ஈசர் பரிகலம் ஈந்திடும் பார்ப்பானுக்கு ஈந்தனர் – குற்-குறவஞ்சி:2 290/3

மேல்

ஈப்புலி (1)

எலிகளை துரத்தும் வீரன் ஈப்புலி நூவன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 258/4

மேல்

ஈராயிரங்கரத்தான் (1)

ஈராயிரங்கரத்தான் ஏற்ற சங்கும் நான்மறையும் – குற்-குறவஞ்சி:2 269/1

மேல்

ஈராயிரம் (1)

ஈராயிரம் மருப்பு ஏந்திய யானையான் – குற்-குறவஞ்சி:2 115/10

மேல்

ஈழம் (1)

செஞ்சி வடகாசி நீளம் சீனம் சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம் – குற்-குறவஞ்சி:2 195/2

மேல்

ஈன்ற (5)

கிளைகளாய் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம் கிளைகள் ஈன்ற
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/1,2
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற
சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/2,3
தேன் ஈன்ற மலைச்சாரல் மான் ஈன்ற கொடிக்கும் – குற்-குறவஞ்சி:2 187/2
தேன் ஈன்ற மலைச்சாரல் மான் ஈன்ற கொடிக்கும் – குற்-குறவஞ்சி:2 187/2
புள்ளிமான் ஈன்ற பூவையே குற குல – குற்-குறவஞ்சி:2 223/5

மேல்

ஈன்று (4)

அவிழும் நறை பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று – குற்-குறவஞ்சி:1 4/3
அவிழும் நறை பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று
குவலயம் பூத்து அருள் கொடியை கோதை குழல்வாய்மொழியை கூறுவோமே – குற்-குறவஞ்சி:1 4/3,4
செவ்வேளை ஈன்று அருள்வார் சிலைவேளை வென்று அருள்வார் திரும்ப தாமே – குற்-குறவஞ்சி:2 92/1
துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று
பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்ல – குற்-குறவஞ்சி:2 157/2,3

மேல்

ஈன (1)

ஆசார ஈன துலுக்கன் குதிரை அடி ஒட்டு பாறை அடி ஒட்டினால் போலும் – குற்-குறவஞ்சி:2 301/3

மேல்

ஈனம் (1)

கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3

மேல்

ஈனும் (2)

ஆடும் அரவு ஈனும் மணி கோடி வெயில் எறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/1
சங்கம் எலாம் முத்து ஈனும் சங்கர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 332/1

மேல்