திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேக்கு 1
மேக்கே 1
மேகம் 3
மேடையினின்று 1
மேதி 1
மேய்ந்த 2
மேயினும் 3
மேயுது 2
மேயும் 1
மேரு 2
மேல் 39
மேல்புறத்தில் 1
மேலகரம் 1
மேலப்பாட்டப்பற்று 1
மேலிட 1
மேலும் 1
மேலே 4
மேலை 2
மேவ 1
மேவிக்கொண்டு 1
மேவினாரே 1
மேவும் 2
மேழையும் 1
மேற்குலத்தான் 1
மேன்மேலும் 1
மேன்மை 2
மேனாள் 2
மேனி 4
மேனி-தன்னில் 1
மேனியாள் 1
மேக்கு (1)
மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/4
மேக்கே (1)
ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே – குற்-குறவஞ்சி:2 371/1
மேகம் (3)
இருண்ட மேகம் சுற்றி சுருண்டு சுழியெறியும் கொண்டையாள் குழை – குற்-குறவஞ்சி:2 33/1
காகம் அணுகா மலையில் மேகம் நிரை சாயும் – குற்-குறவஞ்சி:2 139/2
காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம்
வாரை சேர்ந்த முலைக்கு இணையாகும் மலையை சேர்ந்து சிலை ஒன்று வாங்கி – குற்-குறவஞ்சி:2 155/1,2
மேடையினின்று (1)
மேடையினின்று ஒரு பஞ்சவர்ணக்கிளி மின்னார் கைதப்பி என் முன்னாக வந்தது – குற்-குறவஞ்சி:2 313/1
மேதி (1)
சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலை பருகிய வாளை – குற்-குறவஞ்சி:2 156/1
மேய்ந்த (2)
பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த
தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/2,3
தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த
முன் நாளிலே குறிசொல்லி பெற்ற மோகனமாலை பார் மோகனவல்லி – குற்-குறவஞ்சி:2 196/3,4
மேயினும் (3)
மேயினும் ஐயே பறவைகள் மேயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 276/1
மேயினும் ஐயே பறவைகள் மேயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 276/1
மேயினும் ஐயே குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 277/1
மேயுது (2)
பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2
தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 305/4
மேயும் (1)
சங்க வீதியில் பரந்து சங்கு இனங்கள் மேயும்
தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும் – குற்-குறவஞ்சி:2 174/1,2
மேரு (2)
மா மேரு சிலையாளர் வரதர் குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 3/1
கனக மகா மேரு என நிற்கும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/2
மேல் (39)
இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல்
விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் – குற்-குறவஞ்சி:2 18/1,2
விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் – குற்-குறவஞ்சி:2 18/2
வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/4
பெண்பிள்ளை மேல் பொருது ஆண்பிள்ளை ஆவையோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/4
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய் – குற்-குறவஞ்சி:2 82/2
நல் நகர் திருக்குற்றாலநாதர் மேல் ஆசை பூண்டு – குற்-குறவஞ்சி:2 86/1
தெள் நீர் வட அருவி தீர்த்தத்தார் செஞ்சடை மேல்
விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/1,2
சைவமுத்திரையை வானின் மேல் தரிக்கும் – குற்-குறவஞ்சி:2 115/1
மேல் இனி வரும் குறி வேண்டுவார் மனக்குறி – குற்-குறவஞ்சி:2 115/38
மன்று-தனில் தெய்வமுரசு என்றும் மேல் முழங்கும் – குற்-குறவஞ்சி:2 176/1
கான மலர் மேல் இருக்கும் மோன அயனார்க்கும் – குற்-குறவஞ்சி:2 188/1
கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2
செப்பரு மலை மேல் தெய்வகன்னியர்காள் – குற்-குறவஞ்சி:2 223/8
மன்னர்-தாம் இவள் மேல் மயல் சொல்லிவிட்டதோ – குற்-குறவஞ்சி:2 223/27
கன்னி-தான் ஒருவர் மேல் காமித்த குறியோ – குற்-குறவஞ்சி:2 223/28
இன்று வரை மேல் குளிரும் காய்ச்சலும் உண்டோ பின்னை – குற்-குறவஞ்சி:2 232/1
காகம் அணுகாத திரிகூடமலைக்கே உன் மேல்
காய்ச்சல் அல்ல காய்ச்சல் அல்ல காம காய்ச்சல் காண் – குற்-குறவஞ்சி:2 235/1,2
கொட்டகை தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்க – குற்-குறவஞ்சி:2 262/1
மாவின் மேல் ஏறி சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே – குற்-குறவஞ்சி:2 263/4
பாரைக்குளம் தெற்கு மேல் வழுதிக்குளம் பாட்ட பெருங்குளம் செங்குறிஞ்சிக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/1
நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி – குற்-குறவஞ்சி:2 275/2
ஆர் மேல் வருகின்ற துன்பமும் நீக்கி அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி – குற்-குறவஞ்சி:2 283/1
ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம் – குற்-குறவஞ்சி:2 283/2
தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும் – குற்-குறவஞ்சி:2 283/3
பார் மேல் வளம்செய் அனந்தபற்பநாபன் பாலன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 283/4
சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல்
முட்டி கிடந்து கொஞ்சி முத்தாடி கூடி நன்றாய் – குற்-குறவஞ்சி:2 286/2,3
மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4
குற்றாலமலை மேல் குளுவா குற்றாலமலை மேல் – குற்-குறவஞ்சி:2 296/2
குற்றாலமலை மேல் குளுவா குற்றாலமலை மேல் – குற்-குறவஞ்சி:2 296/2
துள்ளி மடி மேல் இருந்து தோளின் மேல் ஏறியவள் – குற்-குறவஞ்சி:2 297/3
துள்ளி மடி மேல் இருந்து தோளின் மேல் ஏறியவள் – குற்-குறவஞ்சி:2 297/3
சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/4
அம்பிகை பாகர் திரிகூடநாதர் அடியவர் மேல் வந்த துன்பங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/4
வருக்கையார் திரிகூடத்தில் மாமியாள் மகள் மேல் கண்ணும் – குற்-குறவஞ்சி:2 316/1
பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய் – குற்-குறவஞ்சி:2 316/2
ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல்
போடுவான் புட்பபாணம் புறப்படமாட்டேன் நூவா – குற்-குறவஞ்சி:2 318/2,3
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1
மேல்புறத்தில் (1)
மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சு நன்று அம்மே – குற்-குறவஞ்சி:2 204/2
மேலகரம் (1)
செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம் – குற்-குறவஞ்சி:2 274/2
மேலப்பாட்டப்பற்று (1)
கார் ஆரும் செங்குள மேலப்பாட்டப்பற்று காடுவெட்டிப்பற்று நீடுசுண்டைப்பற்று – குற்-குறவஞ்சி:2 272/1
மேலிட (1)
சைவர் மேலிட சமணர் கீழிட சகல சமயமும் ஏற்கவே – குற்-குறவஞ்சி:2 12/1
மேலும் (1)
வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/2
மேலே (4)
செய்ய சடையின் மேலே திங்கள்கொழுந்து இருக்க – குற்-குறவஞ்சி:2 51/3
காலுக்கு மேலே பெரிய விரியன் – குற்-குறவஞ்சி:2 359/1
சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே
திருகு முருகு என்னடி சிங்கி திருகு முருகு என்னடி – குற்-குறவஞ்சி:2 361/1,2
மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில் – குற்-குறவஞ்சி:2 373/1
மேலை (2)
அப்பனே மேலை வாசலில் அரசே – குற்-குறவஞ்சி:2 223/7
ஏரிவாய் சீவலப்பேரி வடகால் இராசகுலராமன் கண்டுகொண்டான் மேலை
மாரிப்பற்றும் கீழை மாரிப்பற்றும் சன்னநேரிப்பற்றும் சாத்தனேரிப்பற்றும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 272/3,4
மேவ (1)
நல் நகரில் ஈசர் உன்னை மேவ வருவார் இந்த – குற்-குறவஞ்சி:2 246/1
மேவிக்கொண்டு (1)
வாகான சிங்கனை மேவிக்கொண்டு வங்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 261/2
மேவினாரே (1)
மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/4
மேவும் (2)
பூ மேவும் மனு வேந்தர் தேவேந்தர் முதலோரை – குற்-குறவஞ்சி:2 2/1
மேவும் ஒரு சிவலிங்கம் தேவ ரகசியமாய் – குற்-குறவஞ்சி:2 165/2
மேழையும் (1)
ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/2
மேற்குலத்தான் (1)
நல்ல மேற்குலத்தான் இந்த நல் நகர் தலத்தான் ஆக – குற்-குறவஞ்சி:2 207/3
மேன்மேலும் (1)
மேன்மேலும் பால் அமுதம் அளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/2
மேன்மை (2)
மேன்மை பெறும் திரிகூட தேனருவி துறைக்கே – குற்-குறவஞ்சி:2 165/1
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2
மேனாள் (2)
சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேத செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள்
கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே – குற்-குறவஞ்சி:1 8/1,2
மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4
மேனி (4)
மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனி
கா மலி தரு போல் ஐந்துகைவலான் காவலனே – குற்-குறவஞ்சி:1 1/3,4
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/3
அம்மா என் மேனி அடங்கலுமே கறுத்தேனே – குற்-குறவஞ்சி:2 76/4
நீர் வளர் பவள மேனி நிமலர் குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 193/1
மேனி-தன்னில் (1)
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
மேனியாள் (1)
வெடித்த கடல் அமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் ஒரு – குற்-குறவஞ்சி:2 38/1