Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சால் 1
பேச்சு 2
பேச 1
பேசாத 1
பேசாமல் 1
பேசி 2
பேசிடாத 1
பேசியே 1
பேசுதற்கு 1
பேசுது 1
பேட்டை 2
பேடை 4
பேடையை 1
பேணுவோமே 1
பேதம் 1
பேதமாய் 1
பேதை 1
பேதைமைக்கு 1
பேய் 2
பேயர் 1
பேயே 1
பேயோ 1
பேர் 4
பேர்க்கு 1
பேர்க்கும் 1
பேர்கள் 1
பேர்களுக்கு 1
பேராசை 1
பேராய் 1
பேரால் 1
பேரான 1
பேரி 1
பேரிக்கும் 1
பேரிகை 1
பேரிகையே 1
பேரியும் 1
பேரிலே 1
பேரினால் 1
பேரும் 2
பேரை 1
பேறா 1
பேறாக 2
பேறான 1
பேறு 3
பேறுடை 1
பேனை 1

பேச்சால் (1)

ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல் – குற்-குறவஞ்சி:2 318/2

மேல்

பேச்சு (2)

ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே – குற்-குறவஞ்சி:2 204/1

மேல்

பேச (1)

நான் அறிந்த வகை சிறிது பேச கேள் அம்மே – குற்-குறவஞ்சி:2 164/2

மேல்

பேசாத (1)

பிள்ளை மதி வாள்_நுதலாள் பேசாத வீறு அடங்க – குற்-குறவஞ்சி:2 297/2

மேல்

பேசாமல் (1)

பேறான சூளை மருந்தாகிலும் பிறர் பேசாமல் வாடை பொடியாகிலும் அரை – குற்-குறவஞ்சி:2 300/3

மேல்

பேசி (2)

வசந்த உல்லாச வல்லி வல் இக்கு வல்லி பேசி
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய் – குற்-குறவஞ்சி:2 82/1,2
கலிகளும் கதையும் பேசி கையிலே ஈட்டி வாங்கி – குற்-குறவஞ்சி:2 258/3

மேல்

பேசிடாத (1)

பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2

மேல்

பேசியே (1)

கூறாகிலும் ஒரு கொக்காகிலும் நரிக்கொம்பாகிலும் தாரேன் வம்புகள் பேசியே – குற்-குறவஞ்சி:2 300/4

மேல்

பேசுதற்கு (1)

பேசுதற்கு சமயமல்ல கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 94/2

மேல்

பேசுது (1)

பிடிக்குது கருத்து நன்றாய் பேசுது சக்கதேவி – குற்-குறவஞ்சி:2 224/2

மேல்

பேட்டை (2)

சீர் ஆரும் பேட்டை குளமுடை காங்கேயன் ஸ்ரீகிருஷ்ணன்மேடு முனிக்குருகன்பேரி – குற்-குறவஞ்சி:2 272/2
ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்ன பேட்டை
சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/3,4

மேல்

பேடை (4)

பெண்ணுக்கு பெண் மயங்கவே வசந்தவல்லி பேடை அன்னம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 30/2
பெட்டைக்குளத்தில் அன்ன பேடை நடை பார்த்திருந்தேன் – குற்-குறவஞ்சி:2 310/2
பேடை என்றே அதை சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூட தொடர்ந்தது – குற்-குறவஞ்சி:2 313/2
பேடை குயிலுக்கு கண்ணியை வைத்து நான் – குற்-குறவஞ்சி:2 322/1

மேல்

பேடையை (1)

சிங்கியை காம பசுங்கிளி பேடையை சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய – குற்-குறவஞ்சி:2 328/1

மேல்

பேணுவோமே (1)

பித்தன் அடி துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே – குற்-குறவஞ்சி:1 6/4

மேல்

பேதம் (1)

பாதம் நோமே நொந்தால் மனம் பேதம் ஆமே – குற்-குறவஞ்சி:2 351/1

மேல்

பேதமாய் (1)

உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய்
துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/3,4

மேல்

பேதை (1)

திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் பேதை
திரிகூடநாதன் என்று செப்பலாம் அம்மே – குற்-குறவஞ்சி:2 244/1,2

மேல்

பேதைமைக்கு (1)

துரைப்பெண்ணே வசந்தவல்லி சொன்ன பேதைமைக்கு என் சொல்வேன் – குற்-குறவஞ்சி:2 78/2

மேல்

பேய் (2)

அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது – குற்-குறவஞ்சி:2 317/3
ஆ என்று ஒருக்கால் இரு கால் உதைப்பள் அதுக்கு கிடந்து கொதிக்குது என் பேய் மனம் – குற்-குறவஞ்சி:2 330/4

மேல்

பேயர் (1)

பத்தியில்லா பேயர் போலே – குற்-குறவஞ்சி:2 346/2

மேல்

பேயே (1)

சிரித்தனை சிங்கா உன்னை சிரித்தது காம பேயே – குற்-குறவஞ்சி:2 316/4

மேல்

பேயோ (1)

பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2

மேல்

பேர் (4)

பெம்மானை நல் நகர் பேர் ராசவீதியில் கண்டு அவர் – குற்-குறவஞ்சி:2 76/1
தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 197/2
சிங்கியை காம பசுங்கிளி பேடையை சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய – குற்-குறவஞ்சி:2 328/1
பேர் வாழி அரசர் செங்கோல் வாழி நல் நகர பேரால் ஓங்கும் – குற்-குறவஞ்சி:2 410/3

மேல்

பேர்க்கு (1)

முலையை ஒழிக்கப்பண்ணுவேன் ஒழித்த பேர்க்கு மோகினி மந்திரம் சொல்லி வரப்பண்ணுவேன் – குற்-குறவஞ்சி:2 340/2

மேல்

பேர்க்கும் (1)

ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும்
இரங்குவார் எனக்கு இரங்கிலார் பெண்ணே – குற்-குறவஞ்சி:2 85/3,4

மேல்

பேர்கள் (1)

நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/3

மேல்

பேர்களுக்கு (1)

கூட்டுவிக்கும் பேர்களுக்கு கூலி என்ன சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 338/4

மேல்

பேராசை (1)

பிறந்தாலும் பேராசை ஆகாது அஃது அறிந்தும் – குற்-குறவஞ்சி:2 89/3

மேல்

பேராய் (1)

மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4

மேல்

பேரால் (1)

பேர் வாழி அரசர் செங்கோல் வாழி நல் நகர பேரால் ஓங்கும் – குற்-குறவஞ்சி:2 410/3

மேல்

பேரான (1)

பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4

மேல்

பேரி (1)

இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1

மேல்

பேரிக்கும் (1)

கோயில் குழல்வாய்மொழி மங்கை பேரிக்கும் குற்றாலநாயகர் சிற்றாற்று வெள்ளம் போல் – குற்-குறவஞ்சி:2 271/2

மேல்

பேரிகை (1)

ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4

மேல்

பேரிகையே (1)

பேரிகையே அன்றி பூரிகை ஏன் பிள்ளாய் மன்மதா சிறு – குற்-குறவஞ்சி:2 70/3

மேல்

பேரியும் (1)

ஆயிர பேரியும் தென்காசியும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 277/3

மேல்

பேரிலே (1)

பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே – குற்-குறவஞ்சி:2 81/4

மேல்

பேரினால் (1)

பேரினால் எனது சொல்லை பெரியவர் தள்ளார் தாமே – குற்-குறவஞ்சி:1 9/4

மேல்

பேரும் (2)

தாரும் சொல்லி பேரும் சொல்லி ஊரும் சொல்லடி – குற்-குறவஞ்சி:2 238/2
ஊரும் பேரும் சொல்லுவதும் குறிமுகமோ – குற்-குறவஞ்சி:2 239/2

மேல்

பேரை (1)

மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை
கூனை கொண்டு அமிழ்த்துவார் போல் குளிர்ச்சியால் வெதுப்புவாரே – குற்-குறவஞ்சி:2 59/3,4

மேல்

பேறா (1)

பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதை பிக்கு சொல்லாமலே கொக்கு படுக்கவே – குற்-குறவஞ்சி:2 291/4

மேல்

பேறாக (2)

பேறாக நல் நகரம் காக்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/1
நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2

மேல்

பேறான (1)

பேறான சூளை மருந்தாகிலும் பிறர் பேசாமல் வாடை பொடியாகிலும் அரை – குற்-குறவஞ்சி:2 300/3

மேல்

பேறு (3)

சன்னதியின் பேறு அல்லவோ பொன்னுலகில் தேவர் செல்வம் மானே – குற்-குறவஞ்சி:2 79/3
நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு
பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ – குற்-குறவஞ்சி:2 326/1,2
பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ – குற்-குறவஞ்சி:2 326/2

மேல்

பேறுடை (1)

பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4

மேல்

பேனை (1)

சந்தேகமோ உன் தலை பேனை கேளடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 392/2

மேல்