Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கில் 1
திக்கு 4
திக்கும் 1
திக்குமே 1
திகம்பரனை 1
திகுர்தத் 1
திங்கள்கொழுந்து 1
திங்கள்கொழுந்தையும் 1
திங்களை 2
திசை 1
திசைக்கரி 1
திசைதிசை 1
திட்டி 1
திடத்தானை 1
திண்டாட 1
திண்டாடி 1
திண்ணமாக 1
தித்திச்சுக்கிடக்கும் 1
தியக்கமோ 1
தியங்கும் 1
திரகூடராசருக்கு 1
திரவியம் 2
திரள் 1
திரிகண்ணரானவர் 1
திரிகூட 23
திரிகூடச்செல்வனை 1
திரிகூடத்தார் 1
திரிகூடத்தில் 9
திரிகூடத்து 2
திரிகூடநாதர் 7
திரிகூடநாதன் 1
திரிகூடநாதா 1
திரிகூடநாயகர் 2
திரிகூடப்பெருமானார் 1
திரிகூடம் 2
திரிகூடமலை 11
திரிகூடமலைக்கே 1
திரிகூடமலையான் 1
திரிகூடமலையில் 1
திரிகூடமுதல்வர் 1
திரிகூடராசர் 1
திரிகூடராசனே 1
திரிகூடலிங்கர் 2
திரிகூடவரையானை 1
திரிந்திடும் 1
திரிந்து 5
திரிந்தேனே 1
திரியுது 1
திரியும் 2
திரிவேணிசங்கம் 1
திரு 1
திருக்காளத்தி 1
திருக்குற்றால 3
திருக்குற்றாலநாதர் 1
திருக்குற்றாலநாதலிங்கர் 1
திருக்குற்றாலர் 11
திருக்கொன்றை 1
திருகி 1
திருகு 2
திருச்செந்தூர் 1
திருச்செவி 1
திருத்தி 1
திருத்து 5
திருத்தும் 1
திருத்தொடை 1
திருந்த 1
திருந்து 1
திருநாட்டில் 1
திருநாட்டு 1
திருநாமம் 1
திருநாளும் 2
திருநீறு 2
திருப்பணி 2
திருப்பணியும் 2
திருப்பலாண்டு 1
திருப்பாட்டும் 1
திரும்ப 1
திரும்பி 1
திருமகனை 1
திருமருங்கு 1
திருமலைக்கொழுந்து-தன் 1
திருமாலும் 1
திருமிடற்றில் 1
திருமுடிக்கா 1
திருமுத்தின் 2
திருமுறைகள் 1
திருமேனி 2
திருவண்ணாமலை 1
திருவருள் 1
திருவனந்தல் 2
திருவாங்கோடு 1
திருவாசல் 2
திருவானைக்கா 1
திருவிளையாட்டத்தில் 1
திருவிளையாட்டம் 1
திருவிளையாட்டம்-தன்னில் 1
திருவுளத்தால் 1
திரை 3
திலகமிட்டு 1
திலகமும் 1
திலத 1
திலதம் 2
திறக்க 1
திறந்துவிட்டாள் 1
திறம் 1
திறலாளர் 1
தின்ன 1
தினகரன் 1
தினம் 2
தினமும் 1
தினை 2
தினைப்புனத்தில் 1

திக்கில் (1)

திக்கில் அடங்காது குறி இக்கில் அடங்காது மொழி – குற்-குறவஞ்சி:2 345/3

மேல்

திக்கு (4)

திக்கு எலாம் தென்றல் புலி வந்து பாயுதே மன்மதா குயில் – குற்-குறவஞ்சி:2 69/1
திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2
திக்கு அடங்கா குளுவ சிங்கன் குற்றால திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 250/4
திக்கு அடங்கா குளுவ சிங்கன் திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 252/4

மேல்

திக்கும் (1)

பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும்
நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி – குற்-குறவஞ்சி:1 2/1,2

மேல்

திக்குமே (1)

திக்குமே உடையர் ஆவர் செக மகராசி நீயே – குற்-குறவஞ்சி:2 222/2

மேல்

திகம்பரனை (1)

திரிகூட பரம்பரனை திகம்பரனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 406/2

மேல்

திகுர்தத் (1)

நல் நகர் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என – குற்-குறவஞ்சி:2 47/3

மேல்

திங்கள்கொழுந்து (1)

செய்ய சடையின் மேலே திங்கள்கொழுந்து இருக்க – குற்-குறவஞ்சி:2 51/3

மேல்

திங்கள்கொழுந்தையும் (1)

திங்கள்கொழுந்தையும் தீக்கொழுந்து ஆக்கிக்கொண்டேனே – குற்-குறவஞ்சி:2 74/2

மேல்

திங்களை (2)

திங்களை முடித்தார் கண்டாய் திரிகூட செல்வர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 53/1
நள்ளிய திங்களை ஞாயிறு போல கண்டேனே – குற்-குறவஞ்சி:2 77/2

மேல்

திசை (1)

மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4

மேல்

திசைக்கரி (1)

துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கையால் செவி புதைக்கவே – குற்-குறவஞ்சி:2 10/2

மேல்

திசைதிசை (1)

ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4

மேல்

திட்டி (1)

மறு இலா பெண்மையில் வரும் திட்டி தோடமோ – குற்-குறவஞ்சி:2 223/25

மேல்

திடத்தானை (1)

சித்ரசபை நடத்தானை திடத்தானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 404/2

மேல்

திண்டாட (1)

இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3

மேல்

திண்டாடி (1)

திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 354/2

மேல்

திண்ணமாக (1)

திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் பேதை – குற்-குறவஞ்சி:2 244/1

மேல்

தித்திச்சுக்கிடக்கும் (1)

கச்சு கிடக்கினும் தித்திச்சுக்கிடக்கும் இரு கொங்கையாள் – குற்-குறவஞ்சி:2 36/2

மேல்

தியக்கமோ (1)

சேலையும் வளையும் சிந்தின தியக்கமோ
மாலையும் மணமும் வரப்பெறும் குறியோ – குற்-குறவஞ்சி:2 223/29,30

மேல்

தியங்கும் (1)

தேடல் வளைக்கும் குறி போல் கூடல் வளைத்திருந்து வல்லி தியங்கும் போதில் – குற்-குறவஞ்சி:2 114/2

மேல்

திரகூடராசருக்கு (1)

திரகூடராசருக்கு திருவனந்தல் முதலாக – குற்-குறவஞ்சி:2 93/1

மேல்

திரவியம் (2)

கைப்படு திரவியம் களவுபோனதுவோ – குற்-குறவஞ்சி:2 223/24
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

திரள் (1)

மாடப்புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய் கொக்கு திரள் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 267/2

மேல்

திரிகண்ணரானவர் (1)

திரிகண்ணரானவர் செய்த கைம் மயக்கமோ – குற்-குறவஞ்சி:2 223/26

மேல்

திரிகூட (23)

கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூட செல்வர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 53/1
படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல் – குற்-குறவஞ்சி:2 72/1
வஞ்சி வந்தாள் திரிகூட ரஞ்சித மோகினி முன்னே – குற்-குறவஞ்சி:2 124/1
திரிகூட பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்க தெவிட்டாது அம்மே – குற்-குறவஞ்சி:2 163/2
நரிகூட கயிலை சென்ற திரிகூட தல மகிமை நவில கேளே – குற்-குறவஞ்சி:2 163/4
மேன்மை பெறும் திரிகூட தேனருவி துறைக்கே – குற்-குறவஞ்சி:2 165/1
குற்றால திரிகூட தலம் எங்கள் தலமே – குற்-குறவஞ்சி:2 175/2
பா மாலை திரிகூட பரமன் அருள் பெறு வசந்த பாவை கூந்தல் – குற்-குறவஞ்சி:2 249/1
திக்கு அடங்கா குளுவ சிங்கன் குற்றால திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 250/4
திக்கு அடங்கா குளுவ சிங்கன் திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 252/4
கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/4
திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2
கட்டான திரிகூட சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 262/2
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூட சாரலிலே வந்து – குற்-குறவஞ்சி:2 288/1
கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 297/1
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1
செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூட சிங்கி-தனை தேடுவானே – குற்-குறவஞ்சி:2 321/4
சங்கம் எலாம் முத்து ஈனும் சங்கர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 332/1
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1
தொண்டாடும் சுந்தரர்க்கு தோழர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 354/1
திரிகூட பரம்பரனை திகம்பரனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 406/2

மேல்

திரிகூடச்செல்வனை (1)

தேடு அரிய திரிகூடச்செல்வனை யான் வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 403/2

மேல்

திரிகூடத்தார் (1)

தார் வாழி திரிகூடத்தார் வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன – குற்-குறவஞ்சி:2 410/2

மேல்

திரிகூடத்தில் (9)

வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 39/1
பல்லியும் பலபலென்ன பகரும் திரிகூடத்தில்
கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/1,2
இ குறி பொய்யாது என்றே இறையவர் திரிகூடத்தில்
மெய் குறவஞ்சி தெய்வம் வியப்புற வணங்குவாளே – குற்-குறவஞ்சி:2 222/3,4
வலியவர் திரிகூடத்தில் மத புலி சிங்கன் முன்னே – குற்-குறவஞ்சி:2 258/2
கா அலர் திரிகூடத்தில் காமத்தால் கலங்கி வந்த – குற்-குறவஞ்சி:2 308/1
வருக்கையார் திரிகூடத்தில் மாமியாள் மகள் மேல் கண்ணும் – குற்-குறவஞ்சி:2 316/1
கடுக்கையார் திரிகூடத்தில் காமத்தால் வாம கள்ளை – குற்-குறவஞ்சி:2 317/1
தேடு நீ திரிகூடத்தில் சிங்கியை காட்டுவாயே – குற்-குறவஞ்சி:2 318/4
அங்கணர் திரிகூடத்தில் அவளை நீ அணைந்தால் என்ன – குற்-குறவஞ்சி:2 319/1

மேல்

திரிகூடத்து (2)

ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 253/1
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/3

மேல்

திரிகூடநாதர் (7)

அண்ணலார் திரிகூடநாதர் என்பது என்னளவும் அமைந்திடாரோ – குற்-குறவஞ்சி:2 67/3
வஞ்சி பாகர் திரிகூடநாதர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 159/4
ஆன் ஏறும் செல்வர் திரிகூடநாதர் அணி நகர் வாழ் – குற்-குறவஞ்சி:2 212/1
மன்னர் திரிகூடநாதர் என்னும் போதிலே முகம் – குற்-குறவஞ்சி:2 245/1
ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர் திரிகூடநாதர்
திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/1,2
சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில் – குற்-குறவஞ்சி:2 266/1
அம்பிகை பாகர் திரிகூடநாதர் அடியவர் மேல் வந்த துன்பங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/4

மேல்

திரிகூடநாதன் (1)

திரிகூடநாதன் என்று செப்பலாம் அம்மே – குற்-குறவஞ்சி:2 244/2

மேல்

திரிகூடநாதா (1)

கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2

மேல்

திரிகூடநாயகர் (2)

மெய்யர்க்கு மெய்யர் திரிகூடநாயகர் மீதில் மெத்த – குற்-குறவஞ்சி:2 73/1
வருகினும் ஐயே திரிகூடநாயகர்
வாட்டமில்லா பண்ணை பாட்டப்புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 265/1,2

மேல்

திரிகூடப்பெருமானார் (1)

பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காண – குற்-குறவஞ்சி:2 15/1

மேல்

திரிகூடம் (2)

நல் நகர் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என – குற்-குறவஞ்சி:2 47/3
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/4

மேல்

திரிகூடமலை (11)

மாடம் மறுகு ஊடு திரிகூடமலை குறவஞ்சி வருகின்றாளே – குற்-குறவஞ்சி:2 114/4
நீடு மலை மயில் ஆடு மலை மதி சூடு மலை திரிகூடமலை குற – குற்-குறவஞ்சி:2 121/4
குற்றால திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 132/2
வளம் பெருகும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 136/2
நிலை தங்கும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 140/2
துங்கர் திரிகூடமலை எங்கள் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 144/2
திரிகூடமலை எங்கள் செல்வ மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 148/2
பரமர் திரிகூடமலை பழைய மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 152/2
தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன் – குற்-குறவஞ்சி:2 153/3
செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரிகூடமலை
தெய்வம் உனக்கு உண்டு காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 206/1,2
தொக்கான நடை நடந்து திரிகூடமலை குறவன் தோன்றினானே – குற்-குறவஞ்சி:2 251/4

மேல்

திரிகூடமலைக்கே (1)

காகம் அணுகாத திரிகூடமலைக்கே உன் மேல் – குற்-குறவஞ்சி:2 235/1

மேல்

திரிகூடமலையான் (1)

தெய்வ முத்தலை சேர் திரிகூடமலையான்
வான் புனல் குதட்டும் மட குருகினுக்கு – குற்-குறவஞ்சி:2 115/2,3

மேல்

திரிகூடமலையில் (1)

தேற்ற நீ அறிவாய்-கொல்லோ திரிகூடமலையில் சிங்கா – குற்-குறவஞ்சி:2 341/2

மேல்

திரிகூடமுதல்வர் (1)

முலை முகத்தில் குன்றிமணி வடம் பூண்டு திரிகூடமுதல்வர் சாரல் – குற்-குறவஞ்சி:2 116/3

மேல்

திரிகூடராசர் (1)

பீட வாசர் திரிகூடராசர் சித்தம் உருக்குமே – குற்-குறவஞ்சி:2 38/4

மேல்

திரிகூடராசனே (1)

ஈசன் இவன் திரிகூடராசனே என்பார் – குற்-குறவஞ்சி:2 19/2

மேல்

திரிகூடலிங்கர் (2)

நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி – குற்-குறவஞ்சி:1 6/1
கோகனக வீறு அழித்தாய் வெண்ணிலாவே திரிகூடலிங்கர்
முன் போய் காய்வாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 66/3,4

மேல்

திரிகூடவரையானை (1)

சிற்றாற்றங்கரையானை திரிகூடவரையானை
குற்றாலத்து உறைவானை குருபரனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 407/1,2

மேல்

திரிந்திடும் (1)

வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/2

மேல்

திரிந்து (5)

அரும் தவத்துக்காய் தேடி திரிந்து அலையும் காலம் – குற்-குறவஞ்சி:2 166/2
பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3

மேல்

திரிந்தேனே (1)

தென்னாடு எல்லாம் உன்னை தேடி திரிந்தேனே சிங்கி அப்பால் – குற்-குறவஞ்சி:2 393/1

மேல்

திரியுது (1)

ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசார கள்ளர் போல் நாரை திரியுது
வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/1,2

மேல்

திரியும் (2)

கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3
பெண்ணரசே பெண் என்றால் திரியும் ஒக்கும் ஒரு – குற்-குறவஞ்சி:2 243/1

மேல்

திரிவேணிசங்கம் (1)

பொங்கு கடல் திரிவேணிசங்கம் என செழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/1

மேல்

திரு (1)

கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1

மேல்

திருக்காளத்தி (1)

திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி – குற்-குறவஞ்சி:2 320/1

மேல்

திருக்குற்றால (3)

கொடிதனை திருக்குற்றால குறவஞ்சிக்கு இயம்புவோமே – குற்-குறவஞ்சி:1 7/4
நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால் – குற்-குறவஞ்சி:2 82/3
தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால
மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/1,2

மேல்

திருக்குற்றாலநாதர் (1)

நல் நகர் திருக்குற்றாலநாதர் மேல் ஆசை பூண்டு – குற்-குறவஞ்சி:2 86/1

மேல்

திருக்குற்றாலநாதலிங்கர் (1)

பெத்தரிக்கம் மிகுந்த திருக்குற்றாலநாதலிங்கர்
பெரும் கொலுவில் சமயமறியாமல் சகியே – குற்-குறவஞ்சி:2 97/1,2

மேல்

திருக்குற்றாலர் (11)

தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர்
சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட – குற்-குறவஞ்சி:1 5/1,2
பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர் போலே – குற்-குறவஞ்சி:2 52/3
வானவர் திருக்குற்றாலர் மையலால் வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 59/1
ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும் – குற்-குறவஞ்சி:2 85/3
தேரின் மாரன் வசந்தன் உலாவும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 154/4
தேரை சூழ்ந்திட கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 155/4
தேட காண்பது நல் அறம் கீர்த்தி திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 162/4
சேவகர் திருக்குற்றாலர் திருவிளையாட்டம்-தன்னில் – குற்-குறவஞ்சி:2 263/2
ஆனை குத்தி சாய்த்த திறலாளர் திருக்குற்றாலர்
கூனி கொத்தி முக்கி விக்கி கொக்கு இருக்கும் பண்ணை எலாம் – குற்-குறவஞ்சி:2 292/1,2
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1
வருக்கைமூலர் வட அருவி திருக்குற்றாலர்
பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள – குற்-குறவஞ்சி:2 353/1,2

மேல்

திருக்கொன்றை (1)

செய்ய சடையும் திருக்கொன்றை மாலை அழகும் அவர் – குற்-குறவஞ்சி:2 73/3

மேல்

திருகி (1)

சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றி சகிமார் சூழ – குற்-குறவஞ்சி:2 44/3

மேல்

திருகு (2)

திருகு முருகு என்னடி சிங்கி திருகு முருகு என்னடி – குற்-குறவஞ்சி:2 361/2
திருகு முருகு என்னடி சிங்கி திருகு முருகு என்னடி – குற்-குறவஞ்சி:2 361/2

மேல்

திருச்செந்தூர் (1)

வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம் – குற்-குறவஞ்சி:2 321/1

மேல்

திருச்செவி (1)

ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/2

மேல்

திருத்தி (1)

குலைந்த கண்ணியை திருத்தி குத்தடா – குற்-குறவஞ்சி:2 296/1

மேல்

திருத்து (5)

சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/4
மானவன் குற்றாலநாதனை பெற்றவன் வள்ளல் எனும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 279/3
நல் நகர் குற்றாலத்து அந்தாதி சொன்னவன் நள்ளார் தொழும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 280/4
வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 282/4
பார் மேல் வளம்செய் அனந்தபற்பநாபன் பாலன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 283/4

மேல்

திருத்தும் (1)

ஐயர் குற்றாலத்து நம்பியார் திருத்தும் அப்பால் ஒரு தாதன் குற்றாலப்பேரி – குற்-குறவஞ்சி:2 274/1

மேல்

திருத்தொடை (1)

காராளன் சங்குமுத்து திருத்தொடை காங்கேயன் கட்டளையும் – குற்-குறவஞ்சி:2 305/2

மேல்

திருந்த (1)

தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால் – குற்-குறவஞ்சி:2 303/1

மேல்

திருந்து (1)

திருந்து பூ முருக்கின் அரும்பு போல் இருக்கும் இதழினாள் வரி – குற்-குறவஞ்சி:2 33/3

மேல்

திருநாட்டில் (1)

சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது – குற்-குறவஞ்சி:2 348/1

மேல்

திருநாட்டு (1)

திரிகூட பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்க தெவிட்டாது அம்மே – குற்-குறவஞ்சி:2 163/2

மேல்

திருநாமம் (1)

திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2

மேல்

திருநாளும் (2)

வரும் நாளில் ஒரு மூன்று திருநாளும் வசந்தனும் – குற்-குறவஞ்சி:2 95/1
தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும் – குற்-குறவஞ்சி:2 283/3

மேல்

திருநீறு (2)

கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2
திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2

மேல்

திருப்பணி (2)

ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/2
சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணி செல்வ புதுக்குளமும் – குற்-குறவஞ்சி:2 305/1

மேல்

திருப்பணியும் (2)

ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி – குற்-குறவஞ்சி:2 278/1
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/3

மேல்

திருப்பலாண்டு (1)

அடியர் முழக்கிய திருப்பலாண்டு இசை அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள் – குற்-குறவஞ்சி:2 10/3

மேல்

திருப்பாட்டும் (1)

நாலுமறை பழம் பாட்டும் மூவர் சொன்ன திருப்பாட்டும்
நாலுகவி புலவர் புதுப்பாட்டும் சகியே – குற்-குறவஞ்சி:2 103/1,2

மேல்

திரும்ப (1)

செவ்வேளை ஈன்று அருள்வார் சிலைவேளை வென்று அருள்வார் திரும்ப தாமே – குற்-குறவஞ்சி:2 92/1

மேல்

திரும்பி (1)

நகையும் முகமும் அவள் நாணைய கைவீச்சும் பகைவரும் திரும்பி பார்ப்பாரடா – குற்-குறவஞ்சி:2 336/1

மேல்

திருமகனை (1)

தாதை இலா திருமகனை தட மலைக்கு மருமகனை – குற்-குறவஞ்சி:2 399/1

மேல்

திருமருங்கு (1)

உடுத்த திருமருங்கு அசைய மலர் அயன் கொடுத்த பரிகலம் இசையவே – குற்-குறவஞ்சி:2 8/4

மேல்

திருமலைக்கொழுந்து-தன் (1)

ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/1

மேல்

திருமாலும் (1)

இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகையால் – குற்-குறவஞ்சி:2 19/1

மேல்

திருமிடற்றில் (1)

தினகரன் போல் சிவப்பழகும் அவன் திருமிடற்றில் கறுப்பழகும் – குற்-குறவஞ்சி:2 54/3

மேல்

திருமுடிக்கா (1)

தீ முகத்தில் பறிகொடுத்த திருமுடிக்கா ஒரு முடியை – குற்-குறவஞ்சி:2 401/1

மேல்

திருமுத்தின் (2)

அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/2
ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4

மேல்

திருமுறைகள் (1)

வடிசெய் தமிழ் திருமுறைகள் ஒருபுறம் மறைகள் ஒருபுறம் வழங்கவே – குற்-குறவஞ்சி:2 10/4

மேல்

திருமேனி (2)

முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியை பாடி – குற்-குறவஞ்சி:1 6/2
முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் வந்து நின்று – குற்-குறவஞ்சி:2 106/1

மேல்

திருவண்ணாமலை (1)

திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி – குற்-குறவஞ்சி:2 320/1

மேல்

திருவருள் (1)

தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி – குற்-குறவஞ்சி:2 115/18

மேல்

திருவனந்தல் (2)

திரகூடராசருக்கு திருவனந்தல் முதலாக – குற்-குறவஞ்சி:2 93/1
முயற்சிசெயும் திருவனந்தல் கூடி சகியே – குற்-குறவஞ்சி:2 106/2

மேல்

திருவாங்கோடு (1)

நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர் நிலைதரும் சிற்றூர் குமரி திருவாங்கோடு
சொல் அரிய குறுங்கை களாக்காடு தேடி தொன் மருதூர் அத்தாளநல்லூர் தேடி – குற்-குறவஞ்சி:2 321/2,3

மேல்

திருவாசல் (2)

திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 98/2
வானவர் குற்றாலர் திருவாசல் மாட நல் பத்தியமும் – குற்-குறவஞ்சி:2 306/2

மேல்

திருவானைக்கா (1)

அரியலூர் சீரங்கம் திருவானைக்கா அடங்கலும் போய் சிங்கி-தனை தேடி சிங்கன் – குற்-குறவஞ்சி:2 320/3

மேல்

திருவிளையாட்டத்தில் (1)

கொய்யும் மலர் தார் இலஞ்சி குமார குரு விளையாடும் திருவிளையாட்டத்தில் – குற்-குறவஞ்சி:2 274/4

மேல்

திருவிளையாட்டம் (1)

வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி – குற்-குறவஞ்சி:2 253/2

மேல்

திருவிளையாட்டம்-தன்னில் (1)

சேவகர் திருக்குற்றாலர் திருவிளையாட்டம்-தன்னில்
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ – குற்-குறவஞ்சி:2 263/2,3

மேல்

திருவுளத்தால் (1)

குறும்பலவர் திருவுளத்தால் பெரும் பலனாம் குறிசொல்லவா அம்மே – குற்-குறவஞ்சி:2 211/2

மேல்

திரை (3)

கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/4
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும் – குற்-குறவஞ்சி:2 131/1
முழங்கு திரை புனல் அருவி கழங்கு என முத்தாடும் – குற்-குறவஞ்சி:2 133/1

மேல்

திலகமிட்டு (1)

சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி – குற்-குறவஞ்சி:2 116/1

மேல்

திலகமும் (1)

இலகு நீறு அணிந்து திலகமும் எழுதி – குற்-குறவஞ்சி:2 115/19

மேல்

திலத (1)

திலத வசீகரம் செய்வேன் ஒருவருக்கும் தெரியாமல் போகவர சித்தும் அறிவேன் – குற்-குறவஞ்சி:2 340/3

மேல்

திலதம் (2)

பொன் அணி திலதம் தீட்டி பூ மலர் மாலை சூட்டி – குற்-குறவஞ்சி:2 28/3
வங்கார பூஷணம் பூட்டி திலதம் தீட்டி மாரனை கண்ணாலே மருட்டி – குற்-குறவஞ்சி:2 29/1

மேல்

திறக்க (1)

அடியர் முழக்கிய திருப்பலாண்டு இசை அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள் – குற்-குறவஞ்சி:2 10/3

மேல்

திறந்துவிட்டாள் (1)

பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/3

மேல்

திறம் (1)

மனையறத்தால் அறம் பெருக்கி திறம் வளர்க்கும் கையே – குற்-குறவஞ்சி:2 218/2

மேல்

திறலாளர் (1)

ஆனை குத்தி சாய்த்த திறலாளர் திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:2 292/1

மேல்

தின்ன (1)

தின்ன இலையும் பிளவும் அள்ளித்தா அம்மே கப்பல் – குற்-குறவஞ்சி:2 202/1

மேல்

தினகரன் (1)

தினகரன் போல் சிவப்பழகும் அவன் திருமிடற்றில் கறுப்பழகும் – குற்-குறவஞ்சி:2 54/3

மேல்

தினம் (2)

தென்றல் குளவி தினம் கொட்டக்கொட்ட நொந்தேனே – குற்-குறவஞ்சி:2 75/2
அரிகூட அயன்கூட மறைகூட தினம் தேட அரிதாய் நின்ற – குற்-குறவஞ்சி:2 163/1

மேல்

தினமும் (1)

தினமும் ஒன்பது காலம் கொலுவில் சகியே – குற்-குறவஞ்சி:2 93/2

மேல்

தினை (2)

கிம்புரியின் கொம்பு ஒடித்து வெம்பு தினை இடிப்போம் – குற்-குறவஞ்சி:2 134/2
வேடுவர்கள் தினை விதைக்க சாடு புனம்-தோறும் – குற்-குறவஞ்சி:2 138/1

மேல்

தினைப்புனத்தில் (1)

வெருவி வரும் தினைப்புனத்தில் பெரு மிருகம் விலக்கி – குற்-குறவஞ்சி:2 150/1

மேல்