Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 1
தாக்க 1
தாக்கி 1
தாகம் 1
தாகம்தீர்த்தானுடன் 1
தாங்க 1
தாங்கவே 1
தாங்காய் 1
தாங்கி 2
தாங்கு 1
தாங்குமோ 1
தாண்டவனை 1
தாதன் 1
தாதுவோ 1
தாதை 1
தாம் 4
தாமரை 1
தாமரையும் 1
தாமும் 2
தாமே 2
தாய் 1
தாய்தந்தை-தனை 1
தாயகமாகவும் 1
தாயை 1
தார் 4
தாராய் 1
தாராவும் 2
தாராளமான 1
தாரின் 1
தாரினை 1
தாரும் 1
தாரேன் 1
தாரை 1
தாலம்-தன்னில் 1
தாவிய 1
தாழை 1
தாழையில் 1
தாள் 3
தாளர் 1
தான் 7
தான 1
தானம் 1
தானவர் 1
தானிகளாகவும் 1
தானிகன் 1
தானியமோ 1
தானே 3
தானை 1
தானைத்தலைவன் 1
தானையால் 1
தானோ 1

தா (1)

வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 330/3

மேல்

தாக்க (1)

வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல் – குற்-குறவஞ்சி:2 156/3

மேல்

தாக்கி (1)

புலியொடு புலியை தாக்கி போர் மத யானை சாய்க்கும் – குற்-குறவஞ்சி:2 258/1

மேல்

தாகம் (1)

தாகம் இன்றி பூணேனே கையில் சரி வளையும் காணேனே – குற்-குறவஞ்சி:2 55/4

மேல்

தாகம்தீர்த்தானுடன் (1)

நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை – குற்-குறவஞ்சி:2 285/3

மேல்

தாங்க (1)

பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும் – குற்-குறவஞ்சி:1 2/1

மேல்

தாங்கவே (1)

தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செய படை தாங்கவே
அடல் குலாவிய தோகை வாகனத்து அரசு வேல் வலம் வாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/1,2

மேல்

தாங்காய் (1)

தாங்காய் முப்பழம் படைத்தாய் தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 208/2

மேல்

தாங்கி (2)

கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி
மாடம் மறுகு ஊடு திரிகூடமலை குறவஞ்சி வருகின்றாளே – குற்-குறவஞ்சி:2 114/3,4
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி
முலை முகத்தில் குன்றிமணி வடம் பூண்டு திரிகூடமுதல்வர் சாரல் – குற்-குறவஞ்சி:2 116/2,3

மேல்

தாங்கு (1)

தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1

மேல்

தாங்குமோ (1)

குன்றத்தை பார்த்தால் கொடி இடை தாங்குமோ சிங்கி தன் – குற்-குறவஞ்சி:2 383/1

மேல்

தாண்டவனை (1)

அனவரத தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 405/2

மேல்

தாதன் (1)

ஐயர் குற்றாலத்து நம்பியார் திருத்தும் அப்பால் ஒரு தாதன் குற்றாலப்பேரி – குற்-குறவஞ்சி:2 274/1

மேல்

தாதுவோ (1)

சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ
சலவையோ பட்டோ தவச தானியமோ – குற்-குறவஞ்சி:2 223/18,19

மேல்

தாதை (1)

தாதை இலா திருமகனை தட மலைக்கு மருமகனை – குற்-குறவஞ்சி:2 399/1

மேல்

தாம் (4)

ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும் – குற்-குறவஞ்சி:2 85/3
தம்பம் என்றே நம்பினோரை சதிபண்ணி தாம் வாழ பார்ப்பவர் செல்வங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/1
பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ – குற்-குறவஞ்சி:2 326/2
சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது – குற்-குறவஞ்சி:2 348/1

மேல்

தாமரை (1)

தானே இருந்த தலமும் நன்றே செழும் தாமரை போல் – குற்-குறவஞ்சி:2 212/3

மேல்

தாமரையும் (1)

அவிழும் நறை பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று – குற்-குறவஞ்சி:1 4/3

மேல்

தாமும் (2)

சாறாக வைத்த பின் வேத பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவ – குற்-குறவஞ்சி:2 291/3
சாறாக வைத்த பின் வேத பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவ – குற்-குறவஞ்சி:2 291/3

மேல்

தாமே (2)

பேரினால் எனது சொல்லை பெரியவர் தள்ளார் தாமே – குற்-குறவஞ்சி:1 9/4
செவ்வேளை ஈன்று அருள்வார் சிலைவேளை வென்று அருள்வார் திரும்ப தாமே
அவ் வேளை அழைத்து அருள்வார் அகங்காரம் மிகுதலால் அறவர் ஏவும் – குற்-குறவஞ்சி:2 92/1,2

மேல்

தாய் (1)

அல்லாமல் தாய் ஒரு பொல்லாத நீலி காண் மன்மதா – குற்-குறவஞ்சி:2 69/4

மேல்

தாய்தந்தை-தனை (1)

பெற்ற தாய்தந்தை-தனை உற்று நீ கேட்கில் – குற்-குறவஞ்சி:2 182/1

மேல்

தாயகமாகவும் (1)

செந்நெல் மருதூர்க்கு நாயகமாகவும் தென்காசியூருக்கு தாயகமாகவும்
தன்னை வளர்க்கின்ற குற்றாலநாதர் தலத்தை வளர்க்கின்ற தானிகளாகவும் – குற்-குறவஞ்சி:2 280/2,3

மேல்

தாயை (1)

கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/3

மேல்

தார் (4)

கொய்யும் மலர் தார் இலஞ்சி குமார குரு விளையாடும் திருவிளையாட்டத்தில் – குற்-குறவஞ்சி:2 274/4
கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 297/1
தார் ஆடும் குன்றி வடத்தை ஒதுக்கி தட மார்பு இறுக தழுவ வந்தால் அவள் – குற்-குறவஞ்சி:2 331/1
தார் வாழி திரிகூடத்தார் வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன – குற்-குறவஞ்சி:2 410/2

மேல்

தாராய் (1)

இங்கே வாராய் மலர் செம் கை தாராய் மோக – குற்-குறவஞ்சி:2 350/1

மேல்

தாராவும் (2)

குருகும் நாரையும் அன்னமும் தாராவும்
கூழைக்கடாக்களும் செங்கால்நாரையும் – குற்-குறவஞ்சி:2 265/3,4
தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 305/4

மேல்

தாராளமான (1)

தாராளமான புள்ளும் வெள் அன்னமும் தாராவும் மேயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 305/4

மேல்

தாரின் (1)

சேனை பெருக்கமும் தானை பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும் – குற்-குறவஞ்சி:2 13/1

மேல்

தாரினை (1)

தாரினை விருப்பமாக தலைதனில் முடிக்கும்தோறும் – குற்-குறவஞ்சி:1 9/1

மேல்

தாரும் (1)

தாரும் சொல்லி பேரும் சொல்லி ஊரும் சொல்லடி – குற்-குறவஞ்சி:2 238/2

மேல்

தாரேன் (1)

கூறாகிலும் ஒரு கொக்காகிலும் நரிக்கொம்பாகிலும் தாரேன் வம்புகள் பேசியே – குற்-குறவஞ்சி:2 300/4

மேல்

தாரை (1)

நீரை சேர்ந்த மழை தாரை அம்பொடு நீள கொண்டல் அம் தேர் ஏறி வெய்யவன் – குற்-குறவஞ்சி:2 155/3

மேல்

தாலம்-தன்னில் (1)

நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு – குற்-குறவஞ்சி:2 326/1

மேல்

தாவிய (1)

பொன்னின் ஒளிவில் வந்து தாவிய மின்னின் ஒளிவு போலவே – குற்-குறவஞ்சி:2 47/1

மேல்

தாழை (1)

தாழை சோறிட வாழை குருத்திடும் சந்திரசூடர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 156/4

மேல்

தாழையில் (1)

வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல் – குற்-குறவஞ்சி:2 156/3

மேல்

தாள் (3)

தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றால குறவஞ்சி தமிழ் தந்தானே – குற்-குறவஞ்சி:1 2/4
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1
மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2

மேல்

தாளர் (1)

பாவலர் மனு காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர் – குற்-குறவஞ்சி:2 110/2

மேல்

தான் (7)

உருக்கிப்போட்டார் கண்டவுடனே தான்
பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர் போலே – குற்-குறவஞ்சி:2 52/2,3
சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன் – குற்-குறவஞ்சி:2 56/3
தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து – குற்-குறவஞ்சி:2 59/2
தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/4
நான் உரைப்பது அரிது உலகம் தான் உரைக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 192/2
தான் ஆசைப்பட்டு முன் கொண்ட கொக்கு எல்லாம் தரிகொண்டுதில்லை நரி கொண்டுபோச்சுது – குற்-குறவஞ்சி:2 289/2
தான் அபிமானம் வைத்த சிவராமன் சம்பிரதி கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/4

மேல்

தான (1)

தான கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/1

மேல்

தானம் (1)

ஆன துறை அயன் உரைத்த தானம் அறியாமல் – குற்-குறவஞ்சி:2 166/1

மேல்

தானவர் (1)

வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு வானவர் தானவர் போனது போலவே – குற்-குறவஞ்சி:2 312/2

மேல்

தானிகளாகவும் (1)

தன்னை வளர்க்கின்ற குற்றாலநாதர் தலத்தை வளர்க்கின்ற தானிகளாகவும்
நல் நகர் குற்றாலத்து அந்தாதி சொன்னவன் நள்ளார் தொழும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 280/3,4

மேல்

தானிகன் (1)

தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற – குற்-குறவஞ்சி:2 285/1

மேல்

தானியமோ (1)

சலவையோ பட்டோ தவச தானியமோ
கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ – குற்-குறவஞ்சி:2 223/19,20

மேல்

தானே (3)

தானே இருந்த தலமும் நன்றே செழும் தாமரை போல் – குற்-குறவஞ்சி:2 212/3
வைபவம் ஆச்சுது தானே – குற்-குறவஞ்சி:2 324/4
ஊர் வாழி குற்றால தலத்து அடியார் வாழி நீடூழி தானே – குற்-குறவஞ்சி:2 410/4

மேல்

தானை (1)

சேனை பெருக்கமும் தானை பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும் – குற்-குறவஞ்சி:2 13/1

மேல்

தானைத்தலைவன் (1)

தானைத்தலைவன் வயித்தியப்பன் பெற்ற சைவக்கொழுந்து தருமத்துக்கு ஆலயம் – குற்-குறவஞ்சி:2 279/1

மேல்

தானையால் (1)

தானையால் தந்தை கால் எறிந்த மகனார்க்கும் – குற்-குறவஞ்சி:2 186/1

மேல்

தானோ (1)

மண்ணிலே மதி மயங்கிக்கிடக்கின்றேன் உனக்கும் மதி மயக்கம் தானோ
கண்ணிலே நெருப்பை வைத்து காந்துவாருடன் கூடி காந்திக்காந்தி – குற்-குறவஞ்சி:2 62/2,3

மேல்