Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

சீகாழி (1)

திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி – குற்-குறவஞ்சி:2 320/1

மேல்

சீத (1)

சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது – குற்-குறவஞ்சி:2 348/1

மேல்

சீதரன் (1)

சீதரன் முத்துமன்னன் விசாரிப்பு சேர்ந்த புறவின் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 307/2

மேல்

சீதனமா (1)

ஆதினத்து மலைகள் எல்லாம் சீதனமா கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 151/2

மேல்

சீர் (5)

வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர்
தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/2,3
சீர் வளர் குறியின் மார்க்கம் தெரியவே செப்புவாயே – குற்-குறவஞ்சி:2 193/4
சீர் ஆரும் பேட்டை குளமுடை காங்கேயன் ஸ்ரீகிருஷ்ணன்மேடு முனிக்குருகன்பேரி – குற்-குறவஞ்சி:2 272/2
சிங்கியை காம பசுங்கிளி பேடையை சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய – குற்-குறவஞ்சி:2 328/1
சீர் பெற்ற சோழன் குமாரத்தியார் தந்த – குற்-குறவஞ்சி:2 372/1

மேல்

சீரங்கம் (1)

அரியலூர் சீரங்கம் திருவானைக்கா அடங்கலும் போய் சிங்கி-தனை தேடி சிங்கன் – குற்-குறவஞ்சி:2 320/3

மேல்

சீராடி (1)

சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/3

மேல்

சீராடும் (1)

திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 354/2

மேல்

சீராய் (1)

சீராய் இரங்க நடம்செய்தவர் குற்றால வெற்பில் – குற்-குறவஞ்சி:2 269/2

மேல்

சீராளன் (1)

சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணி செல்வ புதுக்குளமும் – குற்-குறவஞ்சி:2 305/1

மேல்

சீரான (1)

பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4

மேல்

சீரிய (1)

சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 9/3

மேல்

சீலன் (1)

சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/4

மேல்

சீவலநல்லூர் (1)

செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம் – குற்-குறவஞ்சி:2 274/2

மேல்

சீவலப்பேரி (1)

ஏரிவாய் சீவலப்பேரி வடகால் இராசகுலராமன் கண்டுகொண்டான் மேலை – குற்-குறவஞ்சி:2 272/3

மேல்

சீவனோ (1)

சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ – குற்-குறவஞ்சி:2 223/18

மேல்

சீவைகுந்தம் (1)

வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம்
நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர் நிலைதரும் சிற்றூர் குமரி திருவாங்கோடு – குற்-குறவஞ்சி:2 321/1,2

மேல்

சீன (1)

சீன சரக்கு துக்கிணி கிள்ளித்தா அம்மே – குற்-குறவஞ்சி:2 202/2

மேல்

சீனம் (1)

செஞ்சி வடகாசி நீளம் சீனம் சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம் – குற்-குறவஞ்சி:2 195/2

மேல்

சீனியாள் (1)

வீமப்பாகம் பெற்ற காம பாலுக்கு ஒத்த சீனியாள்
பிடித்த சுகந்த வல்லி கொடி போல் வசந்தவல்லி பெருக்கமே சத்தி – குற்-குறவஞ்சி:2 38/2,3

மேல்