Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 15
கைக்கான 1
கைக்குள் 1
கைக்குறி 1
கைக்குறியும் 1
கைகலக்கும் 1
கைகொண்டு 1
கைச்சுருள் 1
கைதப்பி 1
கைந்நரம்பு 1
கைந்நொடியில் 1
கைப்படு 1
கைப்பலனாம் 1
கைப்பிடிப்பவர்தாம் 1
கைப்பிரம்புமாக 1
கைம் 2
கைம்மலர் 1
கையத்தனை 1
கையில் 8
கையிலே 1
கையுமா 1
கையுமான 1
கையே 8
கையை 7
கைவீச்சும் 1
கைவேழம் 1

கை (15)

பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும் – குற்-குறவஞ்சி:1 2/1
படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/3
கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2
கால் ஏறும் காமனுக்கா கை ஏறு(ம் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/2
ஒரு கை வளை பூண்ட பெண்கள் ஒரு கை வளை பூண மறந்து – குற்-குறவஞ்சி:2 20/1
ஒரு கை வளை பூண்ட பெண்கள் ஒரு கை வளை பூண மறந்து – குற்-குறவஞ்சி:2 20/1
இவ் வளை கை தோள் அழுந்த இவன் மார்பில் அழுந்தாமல் – குற்-குறவஞ்சி:2 26/1
மை வளையும் குழல் சோர கை வளை கொண்டான் இது என்ன – குற்-குறவஞ்சி:2 27/1
கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா – குற்-குறவஞ்சி:2 109/3
மெய் குறி கை குறி விழி குறி மொழி குறி – குற்-குறவஞ்சி:2 115/39
கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3
வாழி கொண்ட மோக வசந்தவல்லி கை பார்த்து – குற்-குறவஞ்சி:2 217/2
இங்கே வாராய் மலர் செம் கை தாராய் மோக – குற்-குறவஞ்சி:2 350/1

மேல்

கைக்கான (1)

கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து – குற்-குறவஞ்சி:2 250/3

மேல்

கைக்குள் (1)

மைக்குள் அடங்காது விழி கைக்குள் அடங்காத கள்ளி – குற்-குறவஞ்சி:2 345/4

மேல்

கைக்குறி (1)

கைக்குறி பார்க்கில் இந்த கைப்பிடிப்பவர்தாம் எட்டு – குற்-குறவஞ்சி:2 222/1

மேல்

கைக்குறியும் (1)

கைக்குறியும் கண்டு சொல்லுவள் – குற்-குறவஞ்சி:2 345/2

மேல்

கைகலக்கும் (1)

காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2

மேல்

கைகொண்டு (1)

ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும் – குற்-குறவஞ்சி:2 48/3

மேல்

கைச்சுருள் (1)

வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 330/3

மேல்

கைதப்பி (1)

மேடையினின்று ஒரு பஞ்சவர்ணக்கிளி மின்னார் கைதப்பி என் முன்னாக வந்தது – குற்-குறவஞ்சி:2 313/1

மேல்

கைந்நரம்பு (1)

காதல் அஞ்செழுத்தார் போத நீறு அணியார் கைந்நரம்பு எடுத்து கின்னரம் தொடுத்து – குற்-குறவஞ்சி:2 255/1

மேல்

கைந்நொடியில் (1)

கைந்நொடியில் பொன் இதழி மாலை வரும் காண் இனி – குற்-குறவஞ்சி:2 247/1

மேல்

கைப்படு (1)

கைப்படு திரவியம் களவுபோனதுவோ – குற்-குறவஞ்சி:2 223/24

மேல்

கைப்பலனாம் (1)

காலம் முன் போம் குறி கைப்பலனாம் குறி – குற்-குறவஞ்சி:2 115/37

மேல்

கைப்பிடிப்பவர்தாம் (1)

கைக்குறி பார்க்கில் இந்த கைப்பிடிப்பவர்தாம் எட்டு – குற்-குறவஞ்சி:2 222/1

மேல்

கைப்பிரம்புமாக (1)

நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக
கார் கொண்ட முகில் ஏறு என்ன கட்டியக்காரன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 1/3,4

மேல்

கைம் (2)

கைம் மானை கண்டு கலையை நெகிழவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 76/2
திரிகண்ணரானவர் செய்த கைம் மயக்கமோ – குற்-குறவஞ்சி:2 223/26

மேல்

கைம்மலர் (1)

கான் ஏறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – குற்-குறவஞ்சி:2 212/4

மேல்

கையத்தனை (1)

கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1

மேல்

கையில் (8)

மெய்யில் சிவப்பழகும் கையில் மழு அழகும் – குற்-குறவஞ்சி:2 51/1
தாகம் இன்றி பூணேனே கையில் சரி வளையும் காணேனே – குற்-குறவஞ்சி:2 55/4
கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2
கையில் மழுவும் என் கண்ணைவிட்டே அகலாவே – குற்-குறவஞ்சி:2 73/4
பருத்த மலையை கையில் இணக்கினார் கொங்கையான – குற்-குறவஞ்சி:2 83/3
பருவ மலையை கையில் இணக்கிலார் – குற்-குறவஞ்சி:2 83/4
கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3
மானவர் குழு மதுரையில் பாண்டியன் மந்திரியார் கையில் முந்தி பணம்போட்டு – குற்-குறவஞ்சி:2 289/1

மேல்

கையிலே (1)

கலிகளும் கதையும் பேசி கையிலே ஈட்டி வாங்கி – குற்-குறவஞ்சி:2 258/3

மேல்

கையுமா (1)

கையுமா ஒரு கண் இட்ட மையுமாய் வருவார் – குற்-குறவஞ்சி:2 22/2

மேல்

கையுமான (1)

பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய் – குற்-குறவஞ்சி:2 316/2

மேல்

கையே (8)

மாறாமல் இரு நிலத்தில் அறம் வளர்க்கும் கையே
மனையறத்தால் அறம் பெருக்கி திறம் வளர்க்கும் கையே – குற்-குறவஞ்சி:2 218/1,2
மனையறத்தால் அறம் பெருக்கி திறம் வளர்க்கும் கையே – குற்-குறவஞ்சி:2 218/2
வீறாக நவநிதியும் விளையும் இந்த கையே
மேன்மேலும் பால் அமுதம் அளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/1,2
மேன்மேலும் பால் அமுதம் அளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/2
ஆறாத சனங்கள் பசியாற்றும் இந்த கையே
அணங்கு_அனையார் வணங்கி நித்தம் போற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/1,2
அணங்கு_அனையார் வணங்கி நித்தம் போற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/2
பேறாக நல் நகரம் காக்கும் இந்த கையே
பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/1,2
பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/2

மேல்

கையை (7)

முத்திரை மோதிரம் இட்ட கையை காட்டாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 213/1
முன்கை முதாரி இட்ட கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 213/2
அத்த கடகம் புனைந்த கையை காட்டாய் பொன்னின் – குற்-குறவஞ்சி:2 214/1
அலங்கார நெளியிட்ட கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 214/2
சித்திர சூடகம் இட்ட கையை காட்டாய் பசும் – குற்-குறவஞ்சி:2 215/1
செங்கமல சங்க ரேகை கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 215/2
சஞ்சீவியே உனது கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 216/2

மேல்

கைவீச்சும் (1)

நகையும் முகமும் அவள் நாணைய கைவீச்சும் பகைவரும் திரும்பி பார்ப்பாரடா – குற்-குறவஞ்சி:2 336/1

மேல்

கைவேழம் (1)

கைவேழம் உரித்தவர் குற்றாலர் கொலு அமரருக்கும் காணொணாதால் – குற்-குறவஞ்சி:2 92/3

மேல்