Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

ஓங்க (1)

தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 197/2

மேல்

ஓங்கவே (1)

உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4

மேல்

ஓங்கி (1)

நத்து அணி கரங்கள் சேப்ப நால் அடி முன்னே ஓங்கி
பத்து அடி பின்னே வாங்கி பந்தடி பயில்கின்றாளே – குற்-குறவஞ்சி:2 39/3,4

மேல்

ஓங்கிய (3)

ஓராயிரம் மறை ஓங்கிய பரியான் – குற்-குறவஞ்சி:2 115/9
திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2
ஓராயிரம் முகமாய் ஓங்கிய கங்காநதி போல் – குற்-குறவஞ்சி:2 269/3

மேல்

ஓங்கும் (2)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
பேர் வாழி அரசர் செங்கோல் வாழி நல் நகர பேரால் ஓங்கும்
ஊர் வாழி குற்றால தலத்து அடியார் வாழி நீடூழி தானே – குற்-குறவஞ்சி:2 410/3,4

மேல்

ஓட்டத்தில் (1)

பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4

மேல்

ஓட (3)

மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி – குற்-குறவஞ்சி:2 41/2
ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம் – குற்-குறவஞ்சி:2 162/1
ஆற்றை நான் கடத்திவிட்டால் ஆகாசமார்க்கம் ஓட
தேற்ற நீ அறிவாய்-கொல்லோ திரிகூடமலையில் சிங்கா – குற்-குறவஞ்சி:2 341/1,2

மேல்

ஓடி (2)

மோனை கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும் ஓடி இருண்ட பின் – குற்-குறவஞ்சி:2 13/3
காடு-தொறும் ஓடி வரையாடு குதி பாயும் – குற்-குறவஞ்சி:2 139/1

மேல்

ஓடிப்போகுது (1)

வந்த குருவி கலைந்து ஓடிப்போகுது – குற்-குறவஞ்சி:2 299/4

மேல்

ஓடிப்போன (1)

கும்பமுனிக்கு சிவமான காலம் குதித்து ஓடிப்போன வயிணவர் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/3

மேல்

ஓடும் (2)

முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்றிலை கொண்டு ஓடும் – குற்-குறவஞ்சி:2 133/2
கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2

மேல்

ஓடுவார் (1)

ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார் – குற்-குறவஞ்சி:2 20/2

மேல்

ஓமலூர் (1)

வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3

மேல்

ஓர் (3)

பெண்ணிலே குழல்மொழிக்கு ஓர் பங்குகொடுத்தவர் கொடுத்த பிரமையாலே – குற்-குறவஞ்சி:2 62/1
வேடுவ கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை – குற்-குறவஞ்சி:2 318/1
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

ஓரடி (1)

வாகனத்தின் மால் விடைக்கு லோகம் ஒக்க ஓரடி காண் மானே – குற்-குறவஞ்சி:2 79/2

மேல்

ஓராயிரம் (2)

ஓராயிரம் மறை ஓங்கிய பரியான் – குற்-குறவஞ்சி:2 115/9
ஓராயிரம் முகமாய் ஓங்கிய கங்காநதி போல் – குற்-குறவஞ்சி:2 269/3

மேல்

ஓலம்செய்தே (1)

உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய் – குற்-குறவஞ்சி:2 268/3

மேல்

ஓலமிடும் (1)

கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3

மேல்

ஓவியம் (1)

ஒய்யாரமாக நடந்து வசந்தவல்லி ஓவியம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 31/2

மேல்