திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊசலாட 1
ஊசலிடு 1
ஊடலில் 1
ஊடிக்கொள்ள 1
ஊடு 2
ஊணும் 2
ஊத 1
ஊர் 4
ஊர்-தோறும் 1
ஊர்க்குருவிக்கு 1
ஊர்கின்ற 1
ஊருக்கு 1
ஊருணிப்பற்றும் 1
ஊரும் 2
ஊரையும் 1
ஊன்றும் 1
ஊசலாட (1)
மந்தர முலைகள் ஏசல் ஆட மகர குழைகள் ஊசலாட
சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/1,2
ஊசலிடு (1)
ஒன்றில் இரதியும் ஒன்றில் மதனனும் ஊசலிடு குழை பொங்கவே – குற்-குறவஞ்சி:2 120/3
ஊடலில் (1)
ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல் – குற்-குறவஞ்சி:2 318/2
ஊடிக்கொள்ள (1)
ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்கால் கூடிக்கொள்ள – குற்-குறவஞ்சி:2 353/3
ஊடு (2)
மாடம் மறுகு ஊடு திரிகூடமலை குறவஞ்சி வருகின்றாளே – குற்-குறவஞ்சி:2 114/4
கோடு பொரு முலை மூடு சலவையின் ஊடு பிதுங்கி மல்லாடவே – குற்-குறவஞ்சி:2 121/2
ஊணும் (2)
எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/3
ஒள்ளிய ஊணும் உறக்கமும் அற்றுவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 77/4
ஊத (1)
சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத
ஆர மா முலை மின்னார் அவரவர் அல்குல் தேர்கள் அலங்காரம் செய்ய – குற்-குறவஞ்சி:2 154/1,2
ஊர் (4)
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1
ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம் – குற்-குறவஞ்சி:2 283/2
வாடை மருந்து பொடியும் அம்மி ஊர் மரப்பாவை பின்தொடர மாய பொடியும் – குற்-குறவஞ்சி:2 339/1
ஊர் வாழி குற்றால தலத்து அடியார் வாழி நீடூழி தானே – குற்-குறவஞ்சி:2 410/4
ஊர்-தோறும் (1)
சுற்றாத ஊர்-தோறும் சுற்றவேண்டா புலவீர் – குற்-குறவஞ்சி:2 397/1
ஊர்க்குருவிக்கு (1)
ஊர்க்குருவிக்கு கண்ணியும் கொண்டு உள்ளானும் வலியானும் எண்ணிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 259/1
ஊர்கின்ற (1)
உடை கொண்ட வழக்குத்தானோ ஊர்கின்ற தேர் கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 56/4
ஊருக்கு (1)
ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே – குற்-குறவஞ்சி:2 371/1
ஊருணிப்பற்றும் (1)
ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/2
ஊரும் (2)
தாரும் சொல்லி பேரும் சொல்லி ஊரும் சொல்லடி – குற்-குறவஞ்சி:2 238/2
ஊரும் பேரும் சொல்லுவதும் குறிமுகமோ – குற்-குறவஞ்சி:2 239/2
ஊரையும் (1)
நேரிழையாரையும் ஊரையும் பாரடா மன்மதா கண்ணில் – குற்-குறவஞ்சி:2 70/1
ஊன்றும் (1)
போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு – குற்-குறவஞ்சி:2 160/3